Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
“தேசிய மக்கள் சக்தி இன்று இலங்கையின் மிகப்பெரிய அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகி வருகின்றது” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க- “இலட்சக்கணக்கான மக்கள் ஏகோபித்த குரலில் இந்த கொடிய ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றே கூறுகிறார்கள்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி- தேசிய மக்கள் சக்தியின் மே தினச் செய்தி நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில்திசைகாட்டியின் மே தினக் கூட்டங்கள் “மே தினத்தை மக்களின் ஆட்சிக்காக மக்களை அணிதிரட்டுகின்ற நாளாக மாற்றிடுவோம்” -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா-
X

தேசிய மக்கள் சக்தியின் மே தினச் செய்தி

(-Sri Lanka, May 01, 2024-)

May-Day-Ta

2024 சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்ற இத்தருணத்தில் உலகம் பூராவிலும் உழைக்கும் மக்களை உள்ளிட்ட பொது மக்களுடன் தேசிய மக்கள் சக்தியும் தோழமையுடன் கைகோர்த்துக் கொள்கின்றது.

சர்வதேச தொழிலாளர் தினமானது 1886 இல் சிக்காகோ நகரத் தொழிலாளர்கள் 8 மணித்தியால வேலை நாளைக் கோரி புரிந்த பேராட்டத்தையும் அந்த போராட்டத்தை ஆளும் வர்க்கத்தினர் அடக்கும்போது தொழிலாளர் உரிமைகளுக்காக உயிர்த்தியாகம்செய்த தொழிலாளர் தலைவர்களின் ஞாபகார்த்தமாகவும் உழைக்கும் மக்களின் சக்தி, போராட்டக்குணம் மற்றும் எதிர்கால நோக்கங்களை உரத்;த குரலில் எடுத்துக்கூறுகின்ற ஒன்றாகும்.

உலகம் பூராவிலும் உழைக்கும் மக்களை உள்ளிட்ட பொது மக்கள் இத்தடவை சர்வதேச தொழிலாளர் தினத்தை வரலாற்றின் மிகப்பெரிய நெருக்கடிகள் மற்றும் அழுத்தங்களின் மத்தியிலேயே கொண்டாடுகிறார்கள். ஏகாதிபத்திய ஆட்சியும் அவர்களால் உலகம்மீது சுமத்தப்பட்டுள்ள வங்குரோத்து, அநீதியான நவ லிபரல் ஆட்சி முறைமையும் உழைக்கும் மக்களை உள்ளிட்ட பொதுமக்களுக்கு மிகவும் துன்பங்களும் அனர்த்தமும் நிறைந்த நிலைமையையே மரபுரிமையாகத் தந்துள்ளன.

21 வது நூற்றாண்டில் உலகம் பயணித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் உலக சனத்தொகையில் பெரும்பான்மையினர் வறியவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். உலகம் பூராவிலும் வயிற்றுப் பசியால் வாடுகின்ற அதனால் உயிரிழக்கின்ற மக்களின் எண்ணிக்கை எண்ணற்றதாகும். உலகம் பூராவிலும் பிள்ளைகள் கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இளைஞர்களுக்கு தொழில்கள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. உழைக்கும் மக்கள் தமது வரலாற்றில் போராடி உரித்தாக்கிக்கொண்ட உரிமைகளும் மீண்டும் பறித்தெடுக்கப்பட்டு வருகின்றன. 8 மணித்தியால வேலைநாளொன்றைக் கோரி போராடி அதனை வென்றெடுத்த போதிலும் மீண்டும் 8 மணித்தியாலங்களை விஞ்சியதாக வேலைசெய்ய நிலவுகின்ற நெருக்கடி உழைக்கும் மக்களை நிர்ப்பந்தித்துள்ளது. உயிர்வாழ்வதற்கு ஏற்ற சம்பளமென்பது இன்னமும் கனவாக மாத்திரமே அமைந்துள்ளது. சிறிய அளவிலான, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளும் கைத்தொழில்களும் நாளுக்குநாள் சீரழிந்து வருகின்றன. சம்;பள உழைப்பாளிகளாக உழைக்கின்ற பெண்கள் மற்றும் வீட்டுவாசலை பாதுகாக்கின்ற பொருளாதாரத்திற்காக பிரயத்தனம் செய்கின்ற பெண்கள்மீது சுமத்தப்படுகின்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. அவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு இலக்காக்கப்பட்டுள்ளார்கள்.

அதைப்போலவே சுற்றாடலை நாசமாக்குதல், மோதல்கள், யுத்தம், பெருந்தொற்றுகள், போதைப்பொருள் போன்ற சமூகப் பேரழிவுகள் நடப்பு வழிமுறையின் உற்பத்திகளாக அமைவதோடு மனிதனால் உயிர்வாழ முடியாத அளவுக்கு உலகம் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காக போராடுமாறு எம் அனைவருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது.

பல்வேறு நெருக்கடிகள், சவால்களுக்கு மத்தியிலேயே இலங்கையின் உழைக்கும் மக்களை முதன்மையாகக்கொண்ட பொது மக்கள் இத்தடவை மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இன்றளவில் இலங்கை பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலையுறச் செய்வித்து வீழ்த்தப்பட்ட ஒரு நாடாகும். பல தலைமுறையினரால் செலுத்தித் தீர்க்கமுடியாத கடன் சுமை நாடு மீது சுமத்தப்பட்டுள்ளது. வரிச்சுமையைத் தாங்க முடியாதுள்ளது. நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற பொருட்களின் விலை, வீழ்ச்சியடைகின்ற வாழ்க்கைத் தரம் மக்களை நெருக்கடிக்குமேல் நெருக்கடிக்குள் வீழ்த்த காரணமாக அமைந்துள்ளது.

இந்த பயங்கரமான நெருக்கடிக்குள் உழைக்கின்ற ஒட்டுமொத்த மக்களும், இளைஞர்களும், பிள்ளைகளும், பெண்களும், கலைஞர்களும், தொழில்வாண்மையாளர்களும், சிறிய அளவிலான கைத்தொழிலதிபர்களும், தொழில் முயற்சியாளர்களும், உற்;பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிலவுகின்ற ஆட்சியின்கீழ் அவர்கள் கடைப்பிடிக்கின்ற மோசடி ஊழல் நிறைந்த கொள்ளைக்கார பொருளாதாரத்தின்கீழ் நாட்டுக்கு எதிர்காலப் பயணமே கிடையாது. நாடு அராஜகநிலை அடைந்துள்ளது. அதனால் இந்த கொடிய ஆட்சியையும், தவறான சமூக பொருளாதார முறைமையையும் உடனடியாக தோற்கடித்திட வேண்டும். நாங்கள் தேசிய மக்கள் சக்தி என்றவகையில் இத்தடவை சர்வதேச தொழிலாளர் தினத்தை மேற்படி சவாலைத் தாங்கிக்கொண்டே கொண்டாடுகிறோம்.

அதிகாரத்தைக் கைமாற்றக்கூடிய ஜனாதிபதி தேர்தலொன்றுக்கு அருகில் இருந்துகொண்டே நாங்கள் இத்தடவை மே தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த வருடம் வெறுமனே தேர்தல் வருடம் மாத்திரமன்றி எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் திடசங்கற்பத்துடன் கூட்டாக, வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற வருடமாகவும் மாறியுள்ளது. 76 வருடகால தவறான ஊழல்மிக்க ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டைப் புதிய பொருளாதார முறைமையொன்றை நோக்கி, தேசிய மறுமலர்ச்சியை நோக்;கி கொண்டு செல்கின்ற உண்மையான தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கின்ற வருடமாகவும் மாறியுள்ளது. இத்தடவை மே தினத்தின் தேசிய மக்கள் சக்தியின் நோக்கமும் திடசங்கற்பமும் அதுவாகும்.

எமது நாட்டின் உழைக்கும் மக்களை முதன்மையாகக்கொண்ட பொது மக்கள் சக்தியை நோக்கிய ஒரேயொரு பாதை மாத்திரமே தற்போது இருக்கின்றது. இனிமேலும் நிலவுகின்ற ஆட்சியிடமிருந்து உரிமைகளைக் கோருவதில் பலனில்லை. இந்த ஆளுங் கும்பல் மக்களுக்கு உரிமைகளைக் கொடுக்காதிருப்பது மாத்திரமன்றி உழைக்கும் மக்;கள் வென்றெடுத்த உரிமைகளைக்கூட தினந்தோறும் அபகரித்து வருகின்றது. அதனால் உழைக்கும் மக்களை உள்ளிட்ட இந்நாட்டின் முற்போக்கான, இடதுசாரி மக்கள் சக்திகளின் பொறுப்பாக அமைவது இந்த கொடிய ஆட்சியை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து அதற்குப் பதிலாக புதிய மக்கள்நேயமுள்ள ஆட்;சியொன்றை நிறுவுவதாகும்.

நிகழ்கால ஆட்சிக்கு நாட்டைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையோ இயலுமையோ கிடையாது. அவர்கள் தொடர்ந்தும் நாட்;டையும் பொருளாதாரத்தையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடன் சுமையை அதிகரித்து வருகிறார்கள். நாட்டின் பெறுமதிமிக்க வளங்களை விற்றொழித்து பொதுப்பணத்தை மோசடி செய்து, திருடி விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமையை தோற்கடித்து நாட்டைப் புதிய அரசியல் பாதையில் இட்டுச் செல்வதற்காகவே நாங்கள் புதிய மக்கள்நேயமுள்ள ஆட்சியை நிறுவவேண்டும்.

உற்பத்தியை அடிப்படையாகக்கொண்ட உறுதியான, பலம்பொருந்திய பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அனைத்து மக்களை பங்கேற்கச் செய்விப்பதும், பொருளாதார உற்பத்திகளின் நன்மைகள் அனைவருக்கும் நியாயமானவகையில் பகிர்ந்துசெல்கின்ற திட்டத்தை தயாரிப்பதும் புதிய ஆட்சியொன்றின் அடிப்படை நடவடிக்கைகளாகும். அதைப்போலவே மோசடி, ஊழல், திருட்டுகளை நிறுத்தி புதிய அரசியல் கலாசாரமொன்றை கட்டியெழுப்புவதும் ஒழுக்கம், கூட்டுமனப்பான்மை, மனிதம்நிறைந்த சமூகமொன்றை உருவாக்கவேண்டியதும் எமது பொறுப்பாகும். அதற்காக மக்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தடவை மே தினத்திற்கான எமது திடசங்கற்பமும் அதுவே.

அதனால் இத்தடவை உழைக்கும் மக்கள் அனைவரும் உள்ளிட்ட பொதுமக்களும் இடதுசாரி, முற்போக்கான, ஜனநாயகரீதியான, தேசப்பற்றுடைய அனைத்துச் சக்திகளும் மேற்படி நோக்கங்களுக்காக ஒழுங்கமைய வேண்டுமெனவும், கூட்டாக கைகோர்த்துக்கொள்ள வேண்டுமெனவும், திடமாக நம்புகின்ற நாங்கள் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் ஆழமான ஆக்கமுறையான மாற்றமொன்றுக்காக முன்வருமாறு சர்வதேச தொழிலாளர் தினத்தில் கேட்டுக்கொள்கிறோம்.

2024 மே 01