Home News Tamil அதிகாரத்தை நோக்கமாகக்கொண்ட அரசியல் வேலைத்திட்டமொன்றுக்கு நாங்கள் தயார்

அதிகாரத்தை நோக்கமாகக்கொண்ட அரசியல் வேலைத்திட்டமொன்றுக்கு நாங்கள் தயார்

by Ravinath Wijesekara

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

நிகழ்கால சனாதிபதியை தெரிவுசெய்து கொண்டமை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் 2/3 கிட்டிய அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தமையின் மறைவில் காணப்பட்ட விடயம் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் கட்டியெழுப்பப்பட்டிருந்த நம்பிக்கையும் 2015 – 2019 அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்பட்டமை என்பவையாகும். இந்த இரண்டு விடயங்களும் நிகழ்கால அரசாங்கத்திற்கு கிடைத்த தேர்தல் பெறுபேற்றில் அடங்கியுள்ளன. எனினும் அதிகாரத்தைப் பெற்று 1 1/2 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கழிந்துவிட்டது. நாட்டைக் கட்டியெழுப்புவார்கள் என்ற எதி்ர்பார்ப்புடன் வாக்களித்த பெரும்பாலானவர்கள் இன்று விரக்திக்கும் ஏமாற்றத்திற்கும் இலக்காகியமையால் எதிர்ப்பு தோன்றியுள்ளது. அண்மையில் மிகவும் குறுகிய காலத்தில் மக்களின் விருப்பமின்மைக்கும் எதிர்ப்பிற்கும் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி இலக்காகி உள்ளது.

அவரது பல தனிப்பட்ட பலவீனங்கள் இருந்தாலும் அது வெறுமனே அவரது பலவீனம் மாத்திரமல்ல. நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதார அரசியல் கொள்கையின் பெறுபேறாகும். சனாதிபதியவர்களின் காலத்தில் அது தீவிரப்படுத்தப்படுவது மாத்திரமேயாகும். இவ்விதமாக மேலும் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்காலமொன்று கிடையாது. எமது நாட்டின் மிக ஆழமான பொருளாதார நெருக்கடி கடனை மையமாகக்கொண்டு உருவாகி இருக்கின்றது. திறைசேரிக்கு கிடைக்கின்ற வருமானம் கடன்தவணைகளையும் வட்டியையும் செலுத்தக்கூட போதுமானதாக இல்லை. ஒரு வருடத்திற்குள் ஈட்டுகின்ற டொலர்கள் கடன் வட்டித் தவணைகளை செலுத்தக்கூடபோதுமானதாக அமையாத நிலைமை உருவாகி இருக்கின்றது. இதனால் அரசாங்கம் அதிகமாக பணத்தை அச்சிடுகின்றது. நிகழ்கால அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபின்னர் ஒரு ரில்லியன் பணம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் ஒரு நாளில் 200 பில்லியனை விஞ்சிய பணம் அச்சிடப்பட்டது.

மறுபுறத்தில் தொடர்ந்தும் சீனா, இந்தியா, பங்களாதேஷிடம் இருந்தும் கடன் கோரப்பட்டு வருகின்றது. இந்த நெருக்கடியை எற்படுத்திய கடன் பாதையிலேயே தொடர்ந்தும் பயணித்துக்கொண்டு இருக்கின்றது. அதற்கு மேலதிகமாக தேசிய ஆதனங்களை விற்றல் அரசாங்கத்தின் மூன்றாவது தீர்வாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கெரவலபிட்டிய மின்நிலையம், துறைமுக நிலப்பரப்பின் 13 ஏக்கருக்கு கிட்டிய அளவினை சீனக் கம்பெனிக்கு வழங்குதல், செலென்திவா நிறுவனத்தை உருவாக்கி எமது நாட்டின் வணிக மற்றும் புராதன பெறுமதியில் உயர் மட்டத்தில் திகழ்கின்ற கட்டிடங்களையும் காணிகளையும் விற்கத் தயாராகி வருகிறார்கள். கடனெடுத்தல், விற்பனை செய்தல் மற்றும் பணத்தை அச்சடித்தல் என்பவற்றையே அவர்கள் நெருக்கடிக்கான பாதையாக தெரிவுசெய்துள்ளார்கள். அந்தப் பாதை மிகவும் குறுகிய காலத்திற்குள் மீண்டும் நெருக்கடியை தீவிரப்படுத்தும். மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கல்களுக்கான சரியான உபாயமார்க்கங்கள் அவர்களிடம் கிடையாதென்பதோடு பழைய, காலங்கடந்த தோல்விகண்ட பாதையிலேயே அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் பல சமூக நெருக்கடிகள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன. சட்டத்தினதும் கட்டளையினதும் ஆட்சி சிதைவடைதல், நீதிமன்றம் மீதிருந்த நம்பிக்கை சிதைவடைதல் காரணமாக பல சமூக நெருக்கடிகள் நிலவுகின்றன. எமது நாட்டில் பெருந்தொகையான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் இந்த யுகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்விதமாக தொடர்ந்தும் பயணிக்கவேண்டுமா என நாங்கள் இந்நாட்டுப் பிரசைகளிடம் கேட்கிறோம். நாங்கள் அனுபவித்து வருகின்ற இந்த அழிவின் பெறுபேறுகளை எமது பிள்ளைகளுக்கு உரித்தாக்கி கொடுக்கவேண்டுமா? தேசிய மக்கள் சக்தி என்றவகையில் இதனை மாற்றியமைக்க ஒன்றுசேருமாறு நாங்கள் இந்த நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்பத் தயார். அதற்கான நோக்கு, வேலைத்திட்டம், அர்ப்பணிப்பு எம்மிடம் இருக்கின்றது. படுகுழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற நாட்டைக் கட்டியெழுப்ப எமக்கு ஆற்றல் உள்ளதென்ற தீவிர நம்பிக்கை இருக்கின்றது. அதனைக் கட்டியெழுப்ப முடியும்.

அதற்காக அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும். இந்நாட்டுப் பிரசைகள் பல தசாப்தங்களாக பலவிதமான ஆட்சிகளைக் கட்டியெழுப்பி இருக்கிறார்கள். அதன் இறுதி விளைவு மக்கள் எதிர்பார்ப்பு சிதைந்த நிலையில் உள்ளமையாகும்: மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் முழுமையாகவே சுக்குநூறாக்கப்படுதலாகும். மக்களை அரசியலை வெறுக்கின்ற அளவுக்கு எதிர்பார்ப்பு சிதைக்கப்பட்ட நிலைக்கு மாற்றியுள்ளார்கள். ‘நீங்கள் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒன்றுசேருங்கள்’ என்றே நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். எமது நாட்டின் முற்போக்கு இயக்கங்களுடனும் அமைப்புக்களுடனும் கலந்துரையாடி இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பிரதானமான மக்கள் இயக்கமாக தேசிய மக்கள் சக்தி மாற்றப்பட்டு வருகின்றது. கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டின் ஒவ்வொரு நகரத்திற்கும் சென்று தொழில்வாண்மையாளர்கள், தொழில்முயற்சியாளர்களை உள்ளிட்ட பிரசைகளுடன் நிலவுகின்ற சிக்கல்பற்றிக் கலந்துரையாட திட்டமிட்டுள்ளோம். இலக்கியவாதிகள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கான சக்தியாக கட்டியெழுப்புகின்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நாடு கட்டியெழுப்பப்படல் வேண்டும். ஆக்கமுறைாயன இராச்சியமாக மாற்றப்படல் வேண்டும். அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயார். நாங்கள் இனிமேலும் அழுத்தம் கொடுக்கின்ற ஒரு குழுவாக மாத்திரமன்றி அதிகாரத்தைப் பரிமாற்றிக்கொள்கின்ற குழுவாக மாறத் தயார். அதிகாரத்தை நோக்கமாகக்கொண்ட அரசியல் வேலைத்திட்டமொன்றை அமுலாக்க நாங்கள் தயார். அதற்காக தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒன்றுசேருமாறு இந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

தேசிய மக்கள் சக்திபிற்றகோட்டே சோலீஸ் வைபவ மண்டபத்தில் ….. 2021.08.01

You may also like

Leave a Comment