மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க
நாட்டுமக்கள் தமது சுயாதீனமான அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதையும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான உரிமையையும் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை. இது அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். அது இந்த உரிமை உயர்நீதிமன்றத்தினால் பல்வேறு வழக்குத் தீர்ப்புகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொட்டுக்கட்சியில் இருப்பவர்களும் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் அனுபவித்த உரிமையாகும். குறிப்பாக ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களை தலேபான் தலைவர்களைப்போல காட்ட முனைகிறார்கள். எனினும் பொலிஸ் அமைச்சர் பொலீசார் தவறு புரிந்தாலும் அவர் தலையிட்டு காப்பாற்றிக் கொள்வதற்காக செயலாற்றுவார். கொழும்புத் துறைமுகத்தின் முனையத்தை விற்பனை செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உரிமையைப் பாதுகாப்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் தாய்நாட்டின் வளங்களை பாதுகாப்பதற்காக செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக பொலீசாரை ஈடுபடுத்துவதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார். அரசாங்கத்தின் பிரதானிகளால் துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னராக வார்த்தைகளால் சுடுகிறார்கள். அதன் பின்னர்தான் துப்பாக்கிகளைக் கொண்டு வருகிறார்கள். இதற்காக அமைச்சர் சரத் வீரசேகர யுத்த உன்மத்தநிலையினால் பீடிக்கப்பட்டுள்ளவகையிலான கூற்றுக்களை வெளியிட்டு வருகிறார்.
இன்றளவில சனநாயக விரோத நிலைமையொன்று அரசாங்கத்தினால் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. அதற்காக ஒரு பிரபாகரன், ஒரு சஹரான் தேவைப்படுகிறார். அதற்கு எதிராக மறுபுறத்தில் சிறில் மத்தியு ஒருவர் தேவைப்படுகிறார். அதனால் சிறில் மத்தியுவின் வகிபாகங்களால் இந்த நாடு வெற்றிகொள்ளப்படவில்லை என்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம். இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிராக அபிப்பிராயம் தெரிவிப்பவர்களுக்கு களங்கம் கற்பிக்க இவர்கள் செயலாற்றி வருகிறார்கள். அதேவேளையில் அவசரகாலச் சட்டத்தை விதித்து அத்தியாவசிய பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவதாக கூறினார்கள். ஆனால் அவசரகாலச் சட்டத்தினால் அரசியின் விலை குறைக்கப்படவில்லை. அவர்களின் தோல்விகண்ட செயற்பாடுகள் நிலவுவதோடு ஜீ்.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குதல் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வருகைதந்தது. அதனால் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை, அதேவேளையில் அமைச்சர் ஜீ். எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் ஆங்கிலமொழியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவசியமான அபிப்பிராயங்களை தெரிவிக்கிறார். ஆனால் அதேவேளையில் அமைச்சர் சரத் வீரசேகர சிங்கள மொழியில் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் இலங்கையில் அனைத்து தூதரகங்கிளிலும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வேலை செய்கிறார்கள் என்பதை அமைச்சர் ஜீ்எல்.பீரிஸ் அறிவார். ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற வரிச்சலுகைகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிசெய்தபோதிலும் அவர்களின் உண்மையான தேவை இனவாதத்தையும் மதவாததத்தையும் முன்னெடுத்துச் செல்வதாகும். இன்றளவில் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் தமது நியாயமான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசத்திற்குச் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதனால் எமது நாட்டில் தலையிட வெளிநாடுகளுக்கு தானாகவே வழிசமைக்கப்படுகின்றது.
இன்றளவில் அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் பிரபல்யமான செயற்பாட்டாளர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு சீ.ஐ.டீ. குழுக்களை அனுப்பிவைத்துக் கொண்டிருக்கின்றது. அதைப்போலவே பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது. முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பல பிரதிநிதிகளை 60 நாட்களுக்கு மேலாக சிறைவைத்துள்ளார்கள். சிறையில் இருக்கும்போது அவர்களுக்கு கொவிட்கூட தொற்றி உள்ளது. பொது ஆதனங்கள் சட்டத்தின்கீழ் அவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தாலும் நிரூபமா ராஜபக்ஷ சம்பந்தமாக சனாதிபதி மேற்கொள்ளப்போகின்ற நடவடிக்கை என்னவென நாங்கள் கேட்க விரும்புகிறோம். நிரூபமா ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்துகையில் அவருடைய கம்பெனிகள் பற்றி வெளிப்படுத்தினாரா என பென்டோரா குழு கேட்கின்றது. அதைப்போலவே அமைச்சராக இருந்தவேளையில் நிரூபமா ராஜபக்ஷ பணிப்பாளர் பதவிவகித்த கம்பெனிகளில் அரசாங்கத்தின் ஒப்பந்தவேலைகளை பெற்றுக்கொண்டமை பற்றி அறிவித்தாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பல அமைச்சர்கள் கள்ளத்தனமாக பிஸ்னஸ் பண்ணுகிறார்கள் என்பது எமக்குத் தெரியும். 3500 கோடி ரூபாவுக்கு அண்மித்த வெளிப்படுத்தப்பட்டிராத சொத்துக்கள் எங்கிருந்து ஈட்டப்பட்டன எனும் கேள்வியும் நிலவுகின்றது. ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ சனாதிபதி அது சம்பந்தமாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி நாங்கள் கேள்வி கேட்கிறோம். இந்த நாட்டில் பொதுப்பணத்தைக் கொள்ளையடித்தல், ஒழுக்கமீறல் செயல்களைப்புரிதல் சம்பந்தமாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் பிரமுகர்களுக்கு எதிராக எந்தவிதமான சட்டமும் அமுலாக்கப்படுவதில்லை.
கடந்த நாட்களில் நிறைவேற்றப்பட்ட கறுப்புப் பணத்தை வெளிளையாக்குகின்ற சட்டம் சம்பந்தமாக எங்களுக்கு பாரிய சந்தேகம் தோன்றுகின்றது. பென்டோரா ஆவணங்கள் பற்றி மூன்றாந் திகதியே வெளிப்படுத்தப்பட்டாலும் அது சம்பந்தமாக செயலாற்றுவது பாரிய செயற்பாங்காகும். இதனோடு சம்பந்தப்பட்ட ஆட்களிடமிருந்து இற்றைக்கு இரண்டு – மூன்று மாதங்களுக்கு முன்னர் ஊழல் – மோசடிகள் பற்றிய வினாத்தாளொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. அதனால் வெகுவிரைவில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்படுமென்பதை இந்த ஆட்கள் அறிந்திருந்தார்கள். அதற்கு முன்னராக கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குகின்ற சட்டம் அங்கீகரிக்கப்பட்டதா எனும் நியாயமான சந்தேகம் எம்மிடம் நிலவுகின்றது. இதனால் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக செயலாற்றுகின்றவர்கள், தமது தொழில்சார் உரிமைகளை பாதுகாப்பற்காக போராடுகின்றவர்கள் சம்பந்தமாக மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டுமென நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இவர்களுடன் ஒன்றுசேர்ந்து தேசிய வளங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அணிதிரளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில்…..
திருமதி நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் சம்பந்தமாக 12 மில்லியன் டொலர் மோசடி பற்றி இலங்கை பொலீசார் மேற்கொண்ட விசாரணைகளுக்கு நேர்ந்த கதி என்னவென பென்டோரா கேள்வி எழுப்பி உள்ளது. சனாதிபதி நியமிக்கப்பட்ட பின்னர் அரசாங்த்திற்கு ஒரு வருடத்திற்கு சற்று மேலாக காலம் கழிந்துள்ளது. இந்த காலப்பகுதியில் ஊழல் – மோசடி சம்பந்தமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த அனைவர் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டுவந்த வழக்குகள் வாபஸ்பெறப்பட்டன. அவர்கள் நீதிமன்றத்தினால் குற்றமற்றவர்களென விடுதலை செய்யப்படவில்லை. சட்டத்துறை தலைமை அதிபதி இடையீடுசெய்தே வாபஸ்பெற்றுள்ளார். சனாதிபதியும் அப்படித்தான். றுவண்வெலிசேயவிற்கு அருகில் உறுதிமொழி பகன்றபின்னர் அவரது சட்டத்தரணியாக செயலாற்றிய அலி சப்றி அவர்கள் – அப்போது அவர் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை – கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுப்பண முறைகேடான பாவனை தொட்ர்பாக நிதிமன்றத்தில் நிலவிய குற்றச்சாட்டுகளை அகற்றிக்கொண்டார். அப்படிப்பட்ட ஒருவர் பென்டோரா வெளிக்கொணர்வுகள் பற்றி இலஞ்ச ஆணைக்குழுவின் புலனாய்வுகளுக்கு ஆற்றுப்படுத்துவாரா? அதைப்போலவே யானைக் குட்டிகளின் சம்பவத்தை எடுத்துக்கொண்டாலும் அது தெளிவாகின்றது. 14 யானைகளை விடுதலைசெய்கின்ற வேளையில் என்.ஜீ. ராஜபக்ஷவின் யானையொன்றையும் தொடர்புபடுத்திக்கொண்டு விடுதலை செய்துள்ளார்கள். இவர்கள் ஊழல் – மோசடிகள் பற்றி விசாரணைகளை மேற்கொள்வார்களா?
ஒன்லயின் வழிமுறை எப்படியும் வெற்றிகரமானதல்ல. எனவே முறையான ஏற்பாடுகளுக்கு கட்டுப்பட்டதாக பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயலாற்ற வேண்டும். இலங்கையில் எந்தவொரு ஆசிரியர் சங்கமும் வேலைநிறுத்தத்தில் இல்லை. தன்னிச்சையாக ஒன்லயின் கற்பித்தலில் ஈடபட்ட ஆசிரியர்கள் அதிலிருந்து நீங்கினார்கள். அதைப்போலவே மேலுமொரு குழுவினர் தன்னிச்சையாகவே முன்வந்து ஒப்படைகளைத் தயாரித்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்கள். ஆசிரியத் தொழிலின் பெறுமதியை அறியாத ஆசிரியர்களை அவமதித்து ஒன்லயின் கற்பித்தலை நிறுத்தினார்கள். ஆசிரியர்களின் பிரச்சினை கட்சிகளுடன் தொடர்புடையதல்ல. நியாயமான போராட்டமாகும். இன்றும் அவர்கள் நாடு பூராவிலும் கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு காட்டுகிறார்கள். பாடசாலைகளை தொடங்கினாலும் அவர்கள் கற்பித்தலை மேற்கொண்டு வருகின்ற அதேவேளையில் தொழில்சார் போராட்டத்தில் ஈடுபட்டு வருவார்களென நினைக்கிறோம். தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது எமது உரிமையாகும். அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு நாங்கள் இயலுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் ஒருசிலர் அதனை ஏற்றிக்கொள்ள எவ்விதத்திலும் விரும்பவில்லை. அரசாங்கமும் ஊடக நிறுவனங்களும் ஒன்றுசேர்ந்து அமுலாக்கிய புனைகதைகள் மற்றும் எமது நாட்டின் தீவிர வலதுசாரி அரசியல் கருத்துக்களை வகிப்பவர்கள் பரப்பிய அபிப்பிராயம் காரணமாக தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாத பிரிவினர் இருக்கிறார்கள். மக்கள் விஞ்ஞானரீதியான கல்வியின்றி இருக்கின்றமை சம்பந்தமாக எங்களுக்கு காணக்கிடைக்கின்ற மற்றுமொரு பெறுபேறுதான் இது.