
அரசாங்கத்தின் இராணுவத்தை ஈடுபடுத்தி இன்று அதிகாலை காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் கண்டிக்கிறார்கள். சனாதிபதி அலுவலகம் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்று மாலை 2.00 மணிக்கு கையளிப்பதாக கூறியிருந்தவேளையில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டது. போராட்டத்திற்காக ஆரம்பத்தில் இருந்து தோற்றிய சட்டத்தரணி நுவன் போபகே கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி சாமிக்க ஜயசிங்க மீது வான் படை, இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகிய சிப்பாய்கள் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். நாற்பதற்கு கிட்டிய போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டிருந்தாலும் பிணியாளர் வண்டி மூலமாக அகற்றிக்கொள்ளக்கூட தடையேற்படுத்தப்பட்டது. மக்கள் அதிவாரமற்ற பாராளுமன்றத்தின் மண்டைகளை மாற்றுவதால் புதிதாக நியமிக்கப்பட்ட ரனில் விக்கிரமசிங்க எனப்படுகின்ற ஆட்சியாளனால் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டு மிகவும் மனிதாபிமானமற்றவகையில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. மிகவும் அமைதியான சூழ்நிலை நிலவுகையில் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஏனைய இடங்கள் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதைப்போலவே அமைதியைப் பாதுகாப்பதற்காக பொலீஸாரிம் ஒப்படைக்கப்படவேண்டி இருந்தநிலையில் சனாதிபதியால் திடீரென வெளியிடப்பட்ட வர்த்தமானி பத்திரிகையின்படி இராணுவம் அழைக்கப்பட்டு குறைந்தபட்ச பலம் பிரயோகிக்கப்படாமல்கூட சர்வதேச ஊடகவியலாளர்களுக்கும் இந்நாட்டு ஊடகவியலாளர்களுக்கும் தாக்குதல் நடாத்துகின்ற நிலைக்குச் சென்றுள்ளார்கள். அமைதியானவகையில் சனநாயகரீதியாக எதிர்ப்பினைக் காட்டுவதற்கான உரிமைக்கு எதிராக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மிரிஹானையில் தொடங்கிய இந்த மக்கள் எழுச்சிக்காக ஆரம்பத் தருணத்தில் இருந்து இற்றைவரை நீதிமன்றத்திற்குள்ளேயும் அதற்கு வெளியிலும் சட்டத்தரணிகள் என்றவகையில் நாங்கள் செய்த இடையீட்டினை இந்த போராட்டம் வெற்றிபெறும்வரை தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என்பதை வலியுறுத்துகிறோம்.
தாக்குதலை மேற்கொள்ளவந்த இராணுவ உத்தியோகத்தர்கள் மதுபோதையில் இருந்திருக்கிறார்கள்

நாடு இன்று மிகவும் பாரதூரமான அராஜகநிலையை அடைந்துள்ளது. நாட்டைப் பராமரித்து வருவதற்கு அவசியமான பணம் நாட்டில் கிடையாது. அதனால் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்களுக்கு கடன்வழங்குகின்ற அமைப்புகளும் நாடுகளும் எமது நாட்டு ஆட்சியாளர்களிடம் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்த விடயம் சட்டத்தின் ஆட்சியை முறைப்படி பேணிவரப்பட வேண்டுமென்பதாகும். அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்பதாகும். நாட்டில் உறுதியான ஆட்சியை நிலைநிறுத்துமாறே ஆகும். காலிமுகத்திடல் தாக்குதல் மூலமாக இன்னமும் நாகரிகமடையாத ஒரு நாடு எனும் செய்தியே உலகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்காவும், கணடாவும் இந்த தாக்குதல் சம்பந்தமாக கவலையைத் தெரிவித்துள்ளன. நாங்கள் இந்த நாடுகளின் பிரதிநிதிகளுடனேயே கடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவேண்டும். அவ்வாறு இருக்கையில் நாட்டின் நிதி அமைச்சர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுனர் உலகின் முன்னிலையில் எமது நாட்டின் மனித உரிமைகள் பற்றி, சட்டத்தின் ஆட்சி பற்றி பேச முடியுமா? போராட்டக் களம் பற்றி சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தூதுவர்கள் இந்த அமைதிவழிப் போராட்டத்தை பாதுகாக்குமாறு முன்னாள் சனாதிபதிக்கும் இந்த சனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் அறிவித்திருந்தார்கள். அவையனைத்தும் இருக்கையில் தாக்குதலுக்கு இலக்காகிய பலியானவர்கள் சார்பாக செயலாற்றிய சட்டத்தரணிகள் விடயங்களை எடுத்துரைத்தும் தாக்குதல் நடாத்திய இராணுவத்தினர் மிகையான மதுபோதையில் இருந்ததாக அறிவித்துள்ளார்கள்.
தாக்குதல்தாரிகள் மண்வெட்டிப் பிடிகளை ஒத்த தடிகளால் தாக்குதல் நடாத்தியதாக கூறப்பட்டுள்ளது. மே 09 ஆந் திகதி தாக்குதலுக்கு இலக்காகிய அநுரங்க எனப்படுகின்ற போராட்டக்காரரையும் தாக்கியவேளையில் சட்டத்தரணி நுவன் போபகே அவரைக் காப்பாற்ற இடையீடு செய்துள்ளார். இத்தருணத்திலேயே நுவன் போபகே தாக்கப்பட்டுள்ளார். ஒரு பெண்ணையும் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கியவிதம் புகைப்படங்கள் மூலமாக வெளியாகின்றது. நாட்டிலுள்ள சாதாரண பொதுமக்கள்மீது தாக்குதல் நடாத்த இராணுவத்திற்கு எங்கிருந்து அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது? திருவாளர் ரனில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் 1988 – 1989 இன் அடக்குமுறையை நான் தனிப்பட்டமுறையில் கண்டிருக்கிறேன். நீண்டகாலமாக ரனில் விக்கிரமசிங்க முதிர்ச்சியடைந்த, சட்டத்துடன் செயலாற்றுகின்ற, பாராளுமன்ற சனநாயகத்தை பாதுகாக்கின்ற ஒருவர் எனும் மாயை நிலவியது. மனிதர்கள் அந்த மாயையை நம்பினார்கள். சனாதிபதி பதவியில் பதவிப்பிரமாணம்செய்து 24 மணித்தியாலங்கள் கழிவதற்கு முன்னராக இருந்த இடத்தை விட்டகல தயாராகி இருந்த போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தியமைக்கான காரணம் என்ன? எதற்காக இராணுவம் அனுப்பப்பட்டது? படைத் தளபதிகளையும் பாதுகாப்புச் செயலாளரையும் சந்திக்க சனாதிபதி நேற்று மாலை சென்றதாக செய்தி வெளியாகியது. அரச தலைவர் “ இதனை அடித்து நொறுக்குங்கள்” எனக் கூறியுள்ளாரா? நிராயுதபாணிகளான மக்கள் மீது தாக்குதல் நடாத்துமாறு கட்டளையிட அரச தலைவருக்கு முடியுமா? இராணுவம் என்பது ஒழுக்கக்கட்டுப்பாட்டுடன் நிறைவேற்றுத்துறையின் ஒரு பகுதியாக நிருவகிக்கப்படுகின்ற நிறுவனமாகும். நாட்டு மக்களை பொல்லுகளால் தாக்க, துப்பாக்கியால் அல்லது வேறு ஆயுதங்களால் அடிக்க, அவர்களின் அதனங்களை அழிக்க இராணுவத்தால் முடியாது.
படைத்தளபதிகள் மூவரும் பொலீஸ் மா அதிபரும் நேற்று நடாத்திய தாக்குதல் சம்பந்தமாக, அதன் மிலேச்சத்தனம் சம்பந்தமாக, காணாமல்போன ஆதனங்கள் சம்பந்தமாக புலன்விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். போராட்டக்களம் ஒரு கட்டத்தில் இந்த நாட்டின் கலாசாரக் களமாக மாறியிருந்தது. அந்த இடத்தில் கெமரா இருந்தது. திரையரங்குகள் இருந்தன. கலையகமொன்று இருந்தது. நூலகமொன்று இருந்தது. புரொஜெக்டர், கம்பியூட்டர், வீடீயோ கெமரா, அவர்களின் தொலைபேசிகள் ஆகிய எல்லாவற்றையும் அள்ளிச்சென்றுவிட்டார்கள். குற்றச்செயலொன்று சம்பந்தமானதெனில் வழக்குப் பொருட்கள் என்றவகையில் கைப்பற்றுவதற்கான வழிமுறை இருக்கின்றது. இந்த இடத்தில் கொள்ளையடித்தலே இடம்பெற்றது. முப்படைத் தளபதிகளுக்கும் பொலீஸ் மா அதிபருக்கும் தாக்குதல் ஏன் நடாத்தப்பட்டது? ஆதனங்கள் எந்த விடயத்தின்பேரில் நாசமாக்கப்பட்டன? எக்காரணத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டார்கள்? பண்டங்களும் பொருட்களும் எக்காரணத்தின்பேரில் எடுத்துச் செல்லப்பட்டன? என்பதை தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அது சம்பந்தமான புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்? இன்றளவில் சனாதிபதி மீதும் இந்த பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. உடனடியாக இது சம்பந்தமான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கோட் அணிந்து, ஆங்கிலம் பேசிவிட்டால் மாத்திரம் மனிதர்கள் நாகரிகமுடையவர்களாக மாற மாட்டார்கள்

குடியரசு என்பது மக்களாவர். மக்களால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் மேலே இருக்கின்ற ஆட்களின் கட்டளைப்படி மக்கள்மீது தாக்குதல் நடாத்துவது அரசியலமைப்பினை மீறுவதாகும். அது சம்பந்தமாக குற்றவியல் சட்டம் அமுலாக்கப்படவேண்டும். ஒருசில தலைவர்கள் தம்மை ரஷ்யாவின் லூயி மன்னர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தற்காலிகமாக இருக்கின்ற ஆட்சியாளர்கள் மாத்திரமே. இந்நாட்டின் எட்டாவது நிறைவேற்று சனாதிபதி சனநாயகரீதியான அரசியலமைப்பினை அறிந்த பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை அறிந்த ஏனைய ஒன்றுமே அறியாதவர் என நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நாட்டில் பாசிஸவாதத்தை மேலோங்கச் செய்விக்க இடமளிக்க மாட்டேன் என அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். மக்களின் விருப்பத்தைப் பெற்று அதிகாரத்திற்கு வர முடியாமல் வேறுவிதமான கேம் விளையாடி மக்கள் அபிப்பிராயம் அல்லாதவகையில் அதிகாரத்திற்கு வந்தவர் பாசிஸவாதம் எனக் கூறுவதில் இவையும் அடங்கும் என நாங்கள் கூறுகிறோம். அவரது நடத்தைகள் மூலமாக பாசிஸவாதத்தை மேலோங்கச் செய்விக்க வேண்டாமென நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அவரது மாமா 1906 இலேயே பிறந்துள்ளார். 1977 இல் அதிகாரத்திற்கு வந்து நாட்டின் முதலாவது நிறைவேற்று சனாதிபதியாகும்போது வயது 72 ஆகும். 1981 ஆகும்போது ரனில் விக்கிரமசிங்கவின் இன்றைய வயதாகும். அவரது மாமாவும் மக்களுக்கு எதிராக பாசிஸவாதத்தை இந்த வயதில்தான் நடைமுறைப்படுத்தினார். அதற்கிணங்க பரம்பரைப் பிரச்சினையொன்று உள்ளதா என நினைக்கிறோம். அரசாங்கத்திற்கு அடக்குமுறை என்பது ஆயுதமாகும். மக்களை பேதமடையச் செய்வித்து அடக்குமுறையைப் பிரயோகிக்கவே இந்த தயார்நிலை. முப்படையினருடன் பேதமடையச் செய்வித்து 1983 இன் நிலைமையை உருவாக்கவே இந்த முயற்சி செய்யப்படுகின்றது. ஆனால் இத்தருணத்தில் மக்கள் முற்றாகவே நிராயுதபாணிகளாவர். போராட்டக்காரர்களிடம் போன் மாத்திரமே இருக்கின்றது. அந்தக்காலத்திலும் இலத்திரனியல் ஊடகம் உலகிற்கு திறந்துவிடப்பட்டிருந்தால் அன்றைய போராட்டமும் இவ்விதமே தெளிவாகியிருக்கும். இவை அநாகரிகமான சமூகத்தில் புரியப்படுகின்ற மிலேச்சத்தனமான செயல்கள் என்பதை வலியுறுத்துகிறோம். கோட் அணிந்து ஆங்கிலம் பேசிவிட்டால் மாத்திரம் மனிதர்களாக நாகரிகமடைய மாட்டார்கள். அவருடைய கல்வி, வாசிப்பு பற்றி நாங்கள் பாராட்டுகிறோம். ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டதும் எல்லாநேரத்திலும் தம்ம பதத்தை ஞாபகப்படுத்துகிறார். செயல்களால் தாம் வெளியுலகிற்கு புலனாவதென்பதே புத்தசமயத்தில் கூறப்பட்டுள்ளது. தம்ம பதத்தில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.
நூறு நாட்களுக்கு மேலாக நிலவிய போராட்டத்தை அடக்க அதிகாலை வேளையில் முப்படையினரை ஈடுபடுத்தியதன் மூலமாக அங்கிருந்த குழப்பநிலை தெளிவாகின்றது. நீங்கிச்செல்லவேண்டி இருந்தவர்களுக்கு மக்களுடன் முப்படையினரின் குழப்ப நிலைமையை உருவாக்க வேண்டுமா? அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிப்பதற்காக மக்களுக்கும் முப்படையினர் மற்றும் பொலீஸாருக்கும் இடையில் முரண்பாட்டினை உருவாக்குகிறார்கள் என்பதை மக்கள் விளங்கிகொள்ள வேண்டும். மோதல் எனப்படுகின்ற கருவிக்காக அரசாங்கம் ஒத்தாசை புரியுமானால் போராட்டக்காரர்களும் மக்களும் அந்த கருவியை பாவிக்காதிருக்க திடசங்கற்பம் பூணவேண்டும். வன்முறையற்றதன்மை ஒரு கோழைத்தனம் என நினைத்துவிடலாகாது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இந்த வெற்றியை மென்மேலும் நிலையானதாக்கிக்கொள்ள அமைதியான போராட்டமென்றவகையில் வரலாற்றில் சேர்ந்துகொள்ளவேண்டும். சட்டத்தரணிகள் சமுதாயம் என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் இந்த நிந்திக்கத்தக்க தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு மிரிஹானை தொடக்கம் மக்கள் போராட்டதுடன் இணைந்திருந்த சட்டத்தரணிகள் தொடர்ந்தும் தோற்றுவார்கள் என்பதை வலியுறுத்துகிறோம். அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள வெளிப்படுத்தல்கள் மற்றும் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முறைப்படி அமுலாக்குவதற்காகவே சட்டத்தரணிகள் சமுதாயம் அவ்விதமாக செயலாற்றி வருகின்றது. சட்டத்தரணிகள்மீதும் அரசாங்கத்தின் அடக்குமுறை வருமாயின் மக்களும் சட்டத்தரணிகளுடன் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். மக்களைப் பாதுகாத்து அதியுயர் சட்டத்திற்காக மக்களுடன் அரண் அமைத்துக்கொள்ள ஒன்றுசேர்ந்தோம். தற்போது அந்த மக்கள் அரணை அமைத்துக்கொண்டு முன்நோக்கி வருகிறார்கள் என்பதை நாமறிவோம். நாங்கள் அதனை மக்களுக்கு வலியுறுத்துகிறோம்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள்
கேள்வி:- இது சம்பந்தமாக எதிர்காலத்தில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வீர்களா?
பதில்:-
நிச்சயமாக மேற்கொள்வோம். தாக்குதலுக்கு மேலதிகமாக இங்கிருந்த பொருட்கள் காணாமல் போயுள்ளது. கொள்ளையடித்தல் போன்றது. அவையனைத்தும் சம்பந்தமாக ஏற்கெனவே சட்டத்தரணிகள் செயலாற்றி வருகிறார்கள். மூர்க்கத்தனமாகவும் மனிதபிமானமற்ற வகையிலும் சரியாக அரச பயங்கரவாதம் போன்று செயலாற்றுதல் சம்பந்தமாக தாக்குதலுக்கு கட்டளை பிறப்பித்த அனைவருக்கும் எதிராக அடிப்படை உரிமைகள் மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகளின்கீழ் செயலாற்றுவோம்.
கேள்வி:- மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கவேண்டிய ஆட்சியாளர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றன?
பதில்:-
பிரச்சினைகளுக்கு பதிலளிக்காத தலைவர்கள்தான் அடக்குமுறையாளர்களாக அமைவார்கள். சனாதிபதி அலுவலகத்திலிருந்து நீங்கிச்செல்ல போராட்டக் களத்தில் இருந்தவர்களே தீர்மானித்திருந்தார்கள். இன்றைய தினத்தில் நீங்கிச்செல்ல சம்பந்தப்பட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தவேளையில் போராட்டக்காரர்களின் விடைபெறுதல் கௌரவமான வகையில் இடம்பெற்றால் எதிர்காலத்தில் வருகின்ற பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களுக்கு நல்ல பதிலாக அமையமாட்டாது. மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்திற்கு வருவதாக போராட்டக்காரர்கள் கூறினாலும் அரசாங்கத்தின் எதிரில் நிலவுகின்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான ஆற்றல் இல்லாமல் போகும். இதனால்த்தான் அடக்குமுறை எனும் கருவி கொண்டுவரப்பட்டது. அதைப்போலவே பொலீஸாரையும் இராணுவத்தையும் மக்களையும் மோதவிடுவதற்காகவே இந்த வேலையை செய்தார்கள். இன்றளவில் சாதாரண மக்களும் இராணுவத்திற்கு ஆதரவான குழுக்களும் முகநூலில் பிரசுரித்துள்ள கூற்றுக்கள் மூலமாக இது தெளிவாகத் தெரிகின்றது. ஆட்சியாளர்களுக்கு அவசியமானவை ஓரளவுக்கு இடம்பெற்றுள்ளது. 1988 காலத்தில் இதுதான் இடம்பெற்றது. அதனால் மக்கள் விவேகமுள்ளவர்களாக நடந்துகொள்ளவேண்டும். மக்கள் பார்க்கவேண்டியது இராணுவத்துடன் உள்ள பிரச்சினை என்றல்ல. அரசாங்கத்துடனான பிரச்சினை என்ற வகையிலாகும். அதனால் மிகவும் புத்திசாதுரியமாக நடந்துகொள்ளுமாறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாக வேண்டாமெனவும் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். யூலை 09 ஆந் திகதி மக்களும் படையினரும் ஒன்றுசேர்வதை நாங்கள் கண்டோம். இதனை ஒரு பிரிவினையாக மாற்றவேண்டியதே அரசாங்கத்தின் தேவையாகும். பாதுகாப்பு பிரிவுகளுடன் எந்தவிதமான மோதலுக்கும் செல்லாமல் செயலாற்றவேண்டிய விசேட பொறுப்பு மக்களுக்கு இருக்கின்றது. பாதுகாப்புப் பிரிவுகளுக்கு கட்டளை பிறப்பிப்பது ஆட்சியாளர்களே. அவர்களுக்கு அவசியமாவது பிரிவினையை ஏற்படுத்துவதே. அதற்கு இடமளிக்காதிருக்கவேண்டிய பொறுப்பு இந்த நாட்டின் அனைத்துப் பிரசைகளுக்கு உண்டு.