Home News Tamil அழிவின் பாதைக்குப் பதிலாக தீர்வின் பாதையில் ஒன்றுசேர்வோம்.

அழிவின் பாதைக்குப் பதிலாக தீர்வின் பாதையில் ஒன்றுசேர்வோம்.

by Ravinath Wijesekara

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க

இந்த சபையில்; தங்கியிருக்கின்றவர்கள் மத்தியில் இதற்கு முன்னர் எமக்காக வாக்குகளைப் பாவித்தவர்களைப் போன்றே  வேறு அரசியல் கட்சிகளுக்கு வாக்குகளை அளித்த பலர் இருக்கிறார்கள். அந்த அனைவரையும் சகோதரத்துவத்துடன் வரவேற்பதோடு,  இந்த அழிவுமிக்க அரசியல் பயணப்பாதையை மாற்றியமைப்பதற்காக அணிதிரண்டமை தொடர்பாக பாராட்டுக்கு இலக்காகின்றீர்கள். பல தசாப்தங்களாக கடைப்பிடிக்கப்பட்ட செயற்பாடுகளால் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய அனைத்துவிதமான  அழிவுகளையும் பெற்றுக்கொடுத்து விட்டார்கள். மிகவும் அழிவுமிக்க அந்தத்தை நோக்கி பொருளாதாரம் பயணித்து பாரிய பண்டத் தட்டுப்பாடு,  விலைகள் அதிகளவில் உயர்வடைந்தமை போன்றே அத்தியாவசிய பண்டங்களைக்கொண்ட ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் இறுகிப்போயுள்ள நிலைமை உருவாகியுள்ளது. செலுத்தவேண்டியுள்ள கடன் தவணைகளை செலுத்துதல் பற்றிய ஐயப்பாட்டு நிலை தோன்றியுள்ளது.  சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை ஆழமான நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இற்றைவரை நிலவிய மரபுரீதியான அரசியல் பயணப்பாதையால் இந்த ஆழமான நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்க இயலுமா? அனுபவங்கள் வாயிலாகவும் தமது வாழ்க்கை ஊடாகவும் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது யாதெனில் பண்டைய மரபுரீதியான அரசியல் பயணப்பாதையால் எமது நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல இயலாது என்பதாகும்.

இது இயற்கை அனர்த்தம் காரணமாக நேர்ந்ததொன்றல்ல. கடைப்பிடிக்கப்பட்ட தவறான பொருளாதார, அரசியல் பயணப்பாதையின் பாதகவிளைவுகள் இவ்வாறு ஏற்பட்டுள்ளன. கினற்றில் விழுந்தது கிணற்று வாயில் வழியாகவெனில் வெளியே வரவேண்டியதும் கிணற்று வாயில் வழியாகவே.  இந்த அழிவுமிக்க நிலைமைக்கு எமது நாட்டை தள்ளிவிட்டது தவறான பொருளாதார, அரசியல் கொள்கையெனில் சரியான பொருளாதார, அரசியல்  கொள்கையொன்றை தாய்மண்ணில் நிலைநாட்டுவதன் மூலமாகவே தீர்வு  கிடைக்கும். உயிர் வாழ்வதற்கு ஏற்ற வருமான வழிவகையொன்று உள்ள தாம் புரிகின்ற தொழில் பற்றிய கௌரவத்தை எதிர்பார்க்கின்ற பலர் நாட்டை விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் நாட்டை விட்டுச் செல்வது தொழில் தேடுவதற்காக மாத்திரமல்ல, சமூகப் பாதுகாப்பினை தேடியே ஆகும். ஆனால் தனித்தனியாக எவ்வளவுதான் மல்லுக்கட்டினாலும் இதிலிருந்து மீட்புப்பெற இயலாது. கூட்டுப் பிரயத்தனமொன்று அவசியமாகும். அத்தகைய கூட்டுப் பிரயத்தனமொன்றுக்கான மனிதநேயமிக்க அர்ப்பணப்பு மற்றும் தியாகம் செய்கின்ற மனிதர்களைக்கொண்டே தேசிய மக்கள் சக்தியின் இந்த மேடை உருவாக்கப்பட்டுள்ளது.  இதற்கு அப்பால் உங்களுடன் ஒன்றுசேர்ந்து அனைத்து மக்களையும் அணிதிரளச் செய்விக்கக்கூடிய மக்கள் இயக்கமொன்றாக தேசிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பவதாக உத்தரவாதமளித்து பிரகடனஞ் செய்கிறோம்.

 இந்த அழிவுமிக்க அரசியல் பயணப்பாதையில் இருந்து எமது நாடு மாற்றியமைக்கப்படல் வேண்டுமென அனைவரும் உணர்ந்துள்ளார்கள். தனித்தனியாக எவ்வளவுதான் மல்லுக்கட்டினாலும் பயனில்லை.  வேடனின் வலையில் சிக்கிய காடைக்குருவிகள்  தனித்தனியாக எவ்வளவுதான் முயற்சிசெய்தாலும் பயனில்லை.  ஆனால் இறுதியில் அங்கே இருந்த போதிசத்துவ காடைக்குருவியானவர் கூட்டாக மல்லுக்கட்ட வேண்டுமென தெளிவுபடுத்திக் கொடுக்கிறார். இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையும் அதுவேதான். நாங்கள் இந்த நாட்டை பொறுப்பேற்கத் தயார்.  அது சம்பந்தமான நேர்மையும் நல்லெண்ணமும்கொண்ட தேவை எங்களிடம் நிலவுகின்றது. இந்த மேடையில் இருக்கின்ற எவருமே அல்லது இங்கு கலந்துகொண்டுள்ள உங்களில் எவருமே தனிப்பட்ட தேவைகளின்பேரில் பங்கேற்கவில்லை.  எம்மனைவரையும் ஒன்றாக இணைத்துக் கட்டுகின்ற நூலொன்று இருக்கின்றது.  அந்த நூல் தான் இந்த நாட்டைப் பொறுப்பேற்கத் தயார்,   இந்த நாட்டை மீட்டெடுக்க தயார் என்கின்ற என்கின்ற நிலையாகும். இந்த நாடு சீரழிவிற்கு இலக்காகவேண்டிய ஒரு நாடல்ல. 

 இந்த நாட்டை அனர்த்தத்திற்கு இலக்காக்குகின்ற பிரதான காரணி  ஊழல் மிகுந்த அரசியலாகும்.  கொவிட் பெருந்தொற்றினால் மரணத்தின் விளிம்பில் உள்ள மக்களின்  அன்டிஜன் தொகுதியிலிருந்து ஆட்சியாளர்கள் திருடுகிறார்கள். வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களிடமிருந்து தொற்றுநோய்த்தடை செயற்பாங்கிலிருந்து திருடுகின்ற ஆட்சியாளர்கள் நாட்டை உருப்படியாக்கப் போவதில்லை. பல தலைமுறைகளாக சிறுபோகம், பெரும்போகம்  பயிர்செய்த விவசாயம் அவசியமான உள்ளீடுகள் இன்றி இருக்கின்ற நிலையில் சீனப் பசளையிலிருந்து சூறையாடுகின்ற ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அதனால் முதலில் இந்த ஊழல்மிக்க ஆட்சியை நிறுத்தவேண்டும்.   அந்த ஊழில்மிக்க கருத்திட்டங்கள் எமது நாட்டுக்கு யானைக்கால் போல சுமையானது. ஊழல்நிலை என்பது அந்த நேரத்தில் புரிகின்ற இலஞ்சம் மாத்திரமல்ல. ஊழல் நிலைமையால் புரியப்படுகின்ற  தாக்கம் அளப்பரியது. நாட்டின் கடன் அளவு பதினொரு ரில்லியனாக அமைகின்றவேளையில் சொத்துக்களின் அளவு ஒன்று தசம் எட்டு ரில்லியன் என  முன்னாள் கணக்காய்வாளர் தலைமை அதிபதி ஒருதடவை கூறியிருந்தார். இதனால்தான் எமது நாட்டு பிரமாண்டமான கடன் மேட்டில் சிக்கியுள்ளது.  ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதில்  நூறு கோடி ரூபாவாக அமைந்த கடன் பங்கு கடந்த ஏப்பிறல் 30 ஆந் திகதியளவில் பதினாறு இலட்சம் கோடி முப்பதாயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது. எடுத்த கடன்களைக்கொண்டு என்ன செய்தார்கள் என்பது எந்தவோர் அட்சியாளராலும் கூறுமுடியுமா? எனவே முதலில் இந்த நாட்டை கட்டியெழுப்ப ஊழலற்ற அரசியல் அவசியம். இந்த நாட்டில்; ஊழலே அற்ற தேசிய மக்கள் சக்தியாலேயே அதனை சாதிக்க முடியும். இந்த ஊழல்பேர்வழிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஊழல் மூலமாக ஈட்டிக்கொண்ட ஆதனங்களை மீளக் கையேற்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் மாத்திரமே அதனை உறுதியாக சாதிக்க இயலும். நாங்கள் அதனைச் செய்வோம்.

இரண்டாவதாக, இந்த நாட்டைக் கட்டிழுப்ப கூட்டு முயற்சியொன்று அவசியம். மக்கள் தனித்தனி ஆட்களின் பின்னால்  தியசென் குமாரமார்களை தேடிக்கொண்டு எவ்வளவுதான் சென்றார்கள்? நாட்டைக் கட்டியெழுப்புவது ஒரு தனிமனிதனின்; மாயாஜால வித்தையாக அமையமாட்டாதென்பதை நாங்கள் எப்போதுமே கூறிவருகிறோம்.  இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல் பற்றிய பாரிய எதிர்பார்ப்புடன்  வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள் வாடகைக்காக  வாங்கிய விமானங்கள் மூலமாக வாக்களிக்க வந்தார்கள்;. ‘மனிதனை ஒரு நல்ல ஆளாக மாற்ற முடிவது, அவரது இயல்புநிலையை  விளங்கப்படுத்துவதன் மூலமாகவே’  என அன்ரன் செக்கோஃப் கூறியுள்ளார். மனிதன் இயல்பாகவே திருடனாக, ஊழல் பேர்வழியாக, அழுத்தம் கொடுப்பவராக அமைவதில்லை.  அந்த மனிதன் இயல்பாகவே    உயர்வானவன். அந்த மனிதனை இந்த அனர்த்தத்திற்கு இழுத்துப்போட்டவர் யார்?  தனித்தனியாக தனக்காக ஓடுகின்ற சமூகமொன்றை உருவாக்கியதன் மூலமாகவே.  அந்த சமூகத்திற்குள் மனிதன் மோசடிப் பேர்வழியாகவும் ஊழல் பேர்வழியாகவும் அமைந்தமையாலாகும். எனவே கூட்டானவனாக மாற்றுவதன் மூலமாகவே அவனை அதிலிருந்து மீட்டெடுக்க இயலும்.  அரசியல் மேல் மாடியிலிருந்து கீழ் நோக்கி இறங்குவதன் மூலமாகவே அதனை சாதிக்க முடியும்.  இன்று நிலவுகின்ற அரசியலானது சிறப்புரிமைகள் நிறைந்த ஒரு பதவியாகும். சட்டத்திற்கு கட்டுப்படாத மனிதனொருவன் உருவாக்கப்பட்;டுள்ளான். இந்த அரசியல்வாதியை மிகுந்த சிறப்புரிமைகளை அனுபவிக்கின்ற, சட்டத்திற்கு மேலாக இருக்கின்ற அரசியல் மேல் மாடியிலிருந்து கீழிறக்க வேண்டும். அதன் பின்னர் பொதுமக்களுடன் தோளோடு தோள்நின்று சமபங்காளிகளாக சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற செயற்பாட்டாளராக மாற்றிடவேண்டும்.  அரசியல்வாதி மேல்மாடியில் இருந்துகொண்டு கூட்டாக செயற்படுவோமென  பிரசைகளுக்கு கூறமுடியாது. ஓர் அரசியல்வாதி என்றவகையில் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள செயற்பொறுப்பு, ஒரு தொழில்வாண்மையாளர் என்றவகையில் என்னிடம் கைளிக்கப்பட்டுள்ள செயற்பொறுப்பு, ஒரு தொழில் முயற்சியாளர் என்றவகையில்  உங்களிடம் அதைப்போலவே கமக்காரனுக்கு, மீனவனுக்கு கையளிக்கப்பட்டுள்ள  செயற்பொறுப்புகளில்  கூட்டாக ஈடுபடுத்தப்படுவதன் மூலமாகவே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.   

ஓய்வூதியம், அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லம், முன்னாள் சனாதிபதிகளை பராமரித்தல், அவர்களுக்கு மாளிகைகளை வழங்குதல் அனைத்தையும் இல்லாதொழித்திட வேண்டும். இல்லாதொழித்து பிரசைகளுடன் தோளோடு தோள்நின்று  இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியாக அரசியலை மாற்றவேண்டும். தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அதனைச் சாதிக்க இயலும். பழைய மரபுரீதியான பாசறைக்கு ஒன்றுமே செய்ய இயலாதென  அவர்கள் நிரூபித்துள்ளார்கள். ஊழலற்ற அரசியலும் சமூகத்தின் கூட்டான இடையீடும்  என்கின்ற அடிப்படை விடயங்கள் இரண்டும் நாட்டைக் கட்டியெழுப்ப அவசியமாகும். அதன் பேரில் கட்டியெழுப்பப்படுகின்ற பொருளாதார வேலைத்திட்டத்தை அமுலாக்கவேண்டும். எமக்கு ஒரு தூரநோக்கும் வேலைத்திட்டமும் இருக்கின்றது. ஆனால் அது பரிபூரணமானதென நான் கூறப்போவதில்லை.  புதிய கருத்துக்கள், முன்மொழிவுகள் சேர்க்கப்பட்டு அதனைப் பூரணப்படுத்த வேண்டும்.  எமக்கு ஒரு தூரநோக்கும் வேலைத்திட்டமும் இருக்கின்றது. குறிப்பாக பொருளாதாரக் கட்டமைப்பு சம்பந்தமாக நாங்கள்  ஏற்படுத்துகின்ற மாற்றம் மூன்று அடிப்படை  அத்திவாரங்களைக் கொண்டதாக மேற்கொள்ளப்படல் வேண்டும். தேசிய உற்பத்தியை உயர்த்துதையும், உலகச் சந்தையில் பண்டங்களுக்கும் சேவைகளுக்காகவும் நியாயமான பங்கினை கையகப்படுத்திக் கொள்தையும,;  மக்களை அந்த பொருளாதாரத்தில் பங்காளிகளாக்கி  அவர்களுக்கிடையில் நன்மைகள் நியாயமாக பகிர்ந்து செல்லவைப்பதையும் மேற்கொள்ள வேண்டும். இன்று மக்களில் பெரும்பகுதியினர் இந்த பொருளாதாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அவர்கள் மனிதப் புழுதிகளாக வாழ்க்கையில் மாற்றப்பட்டுள்ளார்கள். இன்றும் மொத்த தேசிய உற்பத்தியில்  நூற்றுக்கு 38 வீதம் மேல் மாகாணத்தில் இருந்தே வழங்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில் இருந்து நூற்றுக்கு ஐந்து தசம் ஐந்து. பொருளாதாரம் விரிவடைந்து மக்கள் பொருளாதாரத்துடன் சமமாக  இணையவில்லை என்பதே அதன் மூலமாக கூறப்படுகின்றது.  எனவே மக்கள் பொருளாதாரத்தின் முனைப்பான பங்காளிகளாக மாற்றப்படல் வேண்டும்.   

மக்களுக்கிடையில் பொருளாதாரத்தின் பங்கு மிகவும் அநீதியான வகையிலேயே பிரிந்து செல்கின்றது.  மேல் மட்டத்தில் இருக்கின்ற நூற்றுக்கு பத்து வீதமானோர்  தேசிய செல்வத்தின்  நூற்றுக்கு முப்பத்தெட்டு தசம் நான்கினை அனுபவித்து வருகிறார்கள். இது நியாயமானதா?  நாங்கள் அனைவரும் ஒன்சேர்ந்து ஒரு பாண் தயாரித்து அதன் பங்குகளில் நூற்றுக்கு முப்பத்தெட்டு தசம் நான்கினை பத்துப்பேர்  அனுபவிக்கையில்  மேலும் பத்து பேருக்கு கிடைப்பது ஒரு துண்டுக்கு (சிலைஸ்) சற்று அதிகமானதே.  நாட்டில் பொருளாதார விரிவாக்கத்தை அடைவதைப் போலவே நன்மைகளும் நியாயமாக பகிர்ந்து செல்லவேண்டும். பொருளாதார நன்மைகள் நியாயமாக பகிர்ந்து செல்லாமல் சமூகமொன்று சாதகமானதாக அமையமாட்டாது. உலகின் எந்தவொரு நாட்டுக்கும் பிறிதொரு நாட்டின் பொருளாதார முறையை சீராக்கிக்கொள்ள இயலாது. ஒருசில பிரதான காரணிகளை அடிப்படையாயகக்கொண்டே  தமது நாட்டின் பொருளாதார  உபாய மார்க்கம் வகுக்கப்படுகின்றது. அவற்றில் இடஅமைவு முதன்மை இடம் வகிக்கின்றது. எமது நாடு மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. ஐரோப்பா, இந்தியா. அவுஸ்திரேலியா மற்றும் தூரக்கிழக்கு  ஆகிய நான்கு பிரதான கப்பற் பாதையிலேலேயே எமது நாடு இடஅமைவு பெற்றுள்ளது. ஆண்டொன்றுக்கு முப்பத்தாறாயிரம் கப்பல்கள் இந்த பாதையினூடாக பயணிக்கின்றன.  இந்த நான்கு கப்பற் பாதைகள் ஊடாக உலக வர்த்தகத்தில் நூற்றுக்கு முப்பது வீதமான போக்குவரத்து இடம்பெறுகின்றது. எமது நாட்டின் அபிவிருத்தியி;ன்போது  இந்த இடஅமைவிளை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  அதேபோல் எமது நாட்டில் இருக்கின்ற இயற்கை வளங்கள்  பற்றிய சரியான மதிப்பீடொன்று அவசியமாகும். தங்கம், செம்பு, எரிவாயு போன்ற அதிக விலைகொண்ட வளங்கள் படிவுகள் எம்மிடம் இல்லை. ஆனால் நாட்டைப்போல் எட்டுமடங்கு கடல் வளம் எமக்குச் சொந்தமாக இருக்கின்றது.   கண்கவர் கடற்கரை, கனிய வளங்கள், இரண்டு பருவக்காற்று மழை, மத்தியகோட்டுக்கு அருகில் உள்ளமை மற்றும் முனைப்பான நிலம் என்பவை எம்மிடமுள்ள அதிருஷ்டவசமான  வளங்களாகும். இந்த வளங்களைப் பாவித்தல் எமது அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படை அத்திவாரமாக அமைகின்றது. 

மூன்றாவதாக, எமது நாட்டின் மனித வளம் மிகவும் முக்கியமான வளமாகும்.  உலகின் சனத்தொகை அடர்த்தியின்படி  எமது நாடு இருபத்தி நான்காம் இடத்தை வகிக்கின்றது. ஒரு சதுர கிலோமீற்றரில் அண்ணளவாக முந்நூற்றி நாற்பது பேர்வரை வசிக்கிறார்கள். இந்த மனித வளத்தை விருத்திசெய்தல் எமது பொருளாதார உபாயமார்க்த்தின் முக்கியமான அம்சமாகும். அதற்காக கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை ஈடுபடுத்தப்படல் வேண்டும். இந்த மூன்று துறைகளும் இன்று எந்த இடத்தில்  இருக்கின்றன?  முதலாம் ஆண்டில் சேர்கின்ற பிள்ளைகளில் நூற்றுக்கு முப்பத்தேழு வீதம்  சாதாரண தரம் எழுத முன்னராக  பாடசாலையை விட்டு விலகிச் செல்கிறார்கள்.  போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் நூற்றுக்கு எழுபது வீதத்திற்கு மேற்பட்ட பகுதியினர் சாதாரணதரம் வரை  கற்றவர்களல்ல’  சிறைவாசம் அனுபவிப்பவர்களில் நூற்றுக்கு எழுபது வீதத்திற்கு மேற்பட்ட பகுதியினர் சாதாரணதரம் வரை  கற்றவர்களல்ல. வறுமை மற்றும் கல்வியறிவின்மை அத்துடன் சமூக குற்றச்செயல்களுக்கிடையில் தொடர்பு நிலவுகின்றது. இதனால் எமது கல்வியின் அடிப்படை நோக்கம் அறிவுமிக்க மனிதனை உருவாக்குவதாகும். சுகாதாரத்தின் ஊடாக ஆரோக்கியமான  மனிதன் உருவாக்கப்படுவதுபோல  விளையாட்டுத்துறை மூலமாக விடாமுயற்சியுள்ள மனிதன் உருவாக்கப்படுகிறான். இலங்கைப் பிரசை அறிவு படைத்த, ஆரோக்கியமான, செயலூக்கமுள்ள மனிதனாக கட்டிவளர்க்கப்படுவான். உலகின் மிகவும் முன்னேற்றமடைந்த மனிதவளத்தை இலங்கையிலிருந்து கட்டியெழுப்புவது  எமது எதிர்பார்ப்பாகும்.  அதனைச் சாதிக்க இயலுமென்ற திடமான நம்பிக்கை எம்மிடம் நிலவுகின்றது.      

 இன்றைய உலகம் பலவிதமாக முடிச்சுப் போடப்பட்டுள்ளது. தொடர்பாடல், போக்குவரத்து, உலகச் சந்தை, போக்குவரத்து என்பவை ஒன்றுடனொன்று முடிச்சுப் போடப்பட்டுள்ளது. உலகில் இருந்து விலகிய தேசமொன்றை உருவாக்க எவரேனும் முயற்சி செய்வாரெனில்,  அவர்கள் ஆயிரத்து எண்ணூறுகளுக்கு  முற்பட்ட காலத்திற்குச் சொந்தமானவர்களே. உலக சந்தையில், பொருளாதாரத்தில் பல்வேறு அதிகாரப் பாசறைகள் உருவாகி மோதல்களும் போட்டியும் நிலவுகின்றன.  அதற்குள்ளே இலங்கையின் இடஅமைவு  எந்த இடத்தில்? பல தசாப்தங்களாக கடைப்பிடித்த தவறான வெளியுறவுக் கொள்கை காரணமாக ஒவ்வொரு நாட்டினதும் பொந்துக்குள் புகுந்து இருக்கிறோம். சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கொடுக்கும்போது  இந்தியா அந்த துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைக் கேட்கின்றது. அமெரிக்கா கெரவலபிட்டிய மின்நிலையத்தைக்  கேட்கின்றது.  இதனால் நாங்கள் மிகவும் விரிவான நோக்கும் வேலைத்திட்டமும் கொண்டதாக பொந்தில் இருந்து வெளியில் வரக்கூடிய புதிய, அணிசேரா, ஒவ்வொரு நாட்டுடனும் ஆளுமைமிக்கதாக செயலாற்றக்கூடிய வெளியுறவுக் கொள்கையொன்றை  அமுலாக்க வேண்டும்.  நாட்டின் உள்ளகத்தில் எமது நீர்ப்பாசனத் தொழிற்றுறை, குளங்களின் தொகுதி என்பவை நாகரிகத்தின்  விரிவாக்கத்தின் பேரிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.  இன்றும் எமது உழைப்புப்படையில் நூற்றுக்கு இருபத்திரண்டு வீதம் விவசாயத்திலேயே தங்கியுள்ளது. ஏற்றுமதி வருமானத்தில் நூற்றுக்கு இருபத்தி இரண்டு வீதம் விவசாயத்திலிருந்தே பெறப்;படுகின்றது. எமது நாட்டின் கைத்தொழிலில் நூற்றுக்கு இருபத்தைந்து வீதம் விவசாயத்தைச் சார்ந்ததாகும்.  எமது நாட்டின் விவசாயம் உணவுப் பாதுகாப்புப் பக்கத்திலும் கிராமிய மக்களின் வருமான வழிவகைகளை உயர்த்துவதிலும் மிகவும் முக்கியமானதாகும். எமது நாட்டின் நாகரிகம், மனித வளம், உலக அரசியல் மற்றும் எமது நாட்டின் வளங்களின்பேரில் கட்டியெழுப்பப்பட்ட புதிய  பொருளாதார வழிமுறைக்குள் நாங்கள் செல்லவேண்டும்.  அது சம்பந்தமாக எம்மிடம் தூரநோக்கும் வேலைத்திட்டமொன்றும் இருக்கின்றது.  இதனை செயற்படுத்துபவர்கள் தொழில் முயற்சியாளர்களே. அரசாங்கம் இலக்குகளை வகுக்கின்றது. தொழில் முயற்சியாளன் அந்த இலக்காகக் கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தை அமுலாக்குகின்றான். இன்று நடைபெறுவது தொழில் முயற்சியாளன் புதிய துறைகளில்  கைவைக்காதிருப்பதே. அரசாங்கம் பொருளாதார நோக்கிற்கிணங்க வேலைத்திட்டமொன்றை அறிமுகஞ் செய்யும்வரை தொழில்முயற்சியாளர்கள் ஞானா அக்காவை  சந்திக்கச் செல்வார்கள்.  நாங்கள் கமக்காரர், தொழிலாளர், தொழில் முயற்சியாளர், அரச ஊழியர்  அனைவரையும் ஒரு தூரநோக்கு கொண்டதாக நெறிப்படுத்துவோம். ஐந்து ஆறு வருடங்களுக்குள் அதனூடக எமது நாட்டை விருத்தியடைந்த நாடாக மாற்ற இயலும். பிரசைகளுக்கு சதாகாலமும் சாதகமான எதி;ர்பார்ப்புகளே இருந்தன. வாக்குச் சாவடியில் எந்தவொரு வாக்காளரும்   வாக்களிக்கையில்  நாட்டைச் சீரழிக்கின்ற நோக்கத்துடன்,  தேசிய வளங்களை விற்கின்ற நோக்கத்துடன்,  எமது நாட்டை இந்தளவுக்கு அழிவுப்பாதையில் இழுத்துச் சொல்கின்ற நோக்கத்துடன் புள்ளடி இடவில்லை. சாதகமான எதிர்பார்ப்புடனேயே ஒவ்வொரு வாக்காளனும் புள்ளடியிட்டான்.  ஆனால் வாக்காளனின் சாதகமான  நல்ல கனவுக்குப் பதிலாக வாக்குகளைப் பெற்றவர்களின் நல்ல கனவாக விளங்கியது தனது குடும்பம் பற்றிய எதிர்பார்ப்பாகும். தேசிய வளங்களை விற்கின்ற, மிகவும் கீழ்த்தரமான, பேராசைகொண்ட வாழ்க்கையே ஆட்சியாளனிடம் இருந்தது.  பிரசைகளின் எதிர்பார்ப்புகளை இந்த நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்புகின்ற ஆட்சியின் ஊடாக  நாட்டை முன்நோக்கி எடுத்துச்செல்வதையே நாங்கள் கட்டியெழுப்புவோம். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவைக்கு  அனைத்துத் துறையையும் பிரதிநிதித்துவம் செய்து  தெரிவுசெய்யப்பட்ட குழுவினர் இருக்கிறார்கள். நாங்கள் ஊருக்குச் சென்று  இந்த நாட்டைப் புதிய பாதையில் திருப்புவதற்கான அரசியலில் பிரவேசிப்போம். எழுபத்தி மூன்று வருடங்களாக பயணித்துக் கொண்டிருக்கின்ற அழிவின் பாதைக்குப் பதிலாக தீர்வின் பாதையைத் தெரிவுசெய்வோம். இது தான் தீர்வின் பாதை.  அந்தப் பாதையில் அனைவரும் ஊக்கத்துடன் ஒன்றுசேர்வோமென அழைப்பு விடுக்கிறோம்.

You may also like

1 comment

Ms.MiLan LinRodrigo December 24, 2021 - 10:28 am

Good translation

Reply

Leave a Comment