Home News Tamil ஆண்டிறுதியளவில் 30,000 இறப்புக்கள் இடம்பெறக்கூடும்…..

ஆண்டிறுதியளவில் 30,000 இறப்புக்கள் இடம்பெறக்கூடும்…..

by Ravinath Wijesekara

நாட்டை முடக்காவிட்டால் சுகாதார முறைமை சிதைந்துவிடுமென அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம்….

தொற்றுநோயியல் நிபுணர், நிபுணத்துவ மருத்துவர் நிஹால் அபேசிங்க

நாடு ஒரு தீர்வுக்கட்டமான தருணத்தில் இருக்கையிலேயே நாங்கள் இந்த ஊடக கலந்துரையாடலை நடாத்துகிறோம். இன்றளவில் 345,000  தொற்றாளர்களும் 5,620 இறப்புகளும் பதிவாகி உள்ளன. வைத்தியசாலைகளில் 37,199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரத்திற்குள் 115 சராசரி எண்ணிக்கை கொண்டதாக இறப்புகள் இடம்பெற்றன. கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு மருத்துவ சங்கங்கள், நிபுணத்துவ மருத்துவர்கள், உலக சுகாதார தாபனம்  இந்த அபாயகரமான நிலைமை உருவாகுமென அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தார்கள். அதனால் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கினார்கள்.  எனினும் எமது நாடும்  ஏப்பிறல் மாதத்தில் இருந்து மியன்மார், இந்தோனேசியா. மலேசியா, இந்தியா போன்ற பாரதூரமான பெருந்தொற்று நிலைமையை அடைந்து வருகின்றது. இன்றளவில் பதிவாகின்ற இறப்புக்களின் எண்ணிக்கை தொடர்பில் பாரதூரமானவகையில் கவனஞ்செலுத்தவேண்டி உள்ளது.

நாளொன்றுக்கு குறைந்தபட்சம் நூறுபேர் என எடுத்துக்கொண்டால் மாதமொன்றில் 3000 பேர் இறக்கின்றார்கள். எனினும் இது 4500 வரை அதிகரிக்கக்கூடும். இதில் ஏறக்குறைய 75 சதவீதமானவ முதியோர்கள் இறக்கக்கூடும். இந்த நிலைமை பொருட்படுத்தாமல் விடக்கூடிய ஒன்றல்ல. மொத்த சனத்தொகையில் 60 வயதிற்கு மேற்பட்ட சனத்தொகை 13 சதவீதம் மாத்திரமே.  உலக சுகாதார தாபனத்தின் இலங்கை அலுவலகத்துடன் நாங்கள் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டோம். உலக சுகாதார தாபனத்தில் பல வருடங்கள் செயலாற்றிய நிபுணர்கள் அனைவரும் அதில் இணைந்துகொண்டார்கள். நாங்கள் தயாரித்த அறிக்கையை சுகாதார அமைச்சருக்கும் அரசாங்கத்திற்கும் கையளித்தோம். எதிர்காலத்தில் தோன்றக்கூடிய பாரதூரமான நிலைமை பற்றிக் குறிப்பிடப்பட்ட அவ்வறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்களில் இந்த ஆண்டு நிறைவடைகையில் 30,000 இறப்புகள் நேரிடக்கூடுமென எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தற்போது ஒரு மாதத்தில் இடம்பெறுகின்ற ஏறக்குறைய 3000 இறப்புகள் ஒற்றோபர் மாதமளவில் 6000 ஆக அமையக்கூடும். திட்டவட்டமான முடிவுகளையும் தீர்மானங்களையும் அமுலாக்காவிட்டால் இவ்விதமான பாரதூரமான பேரழிவு எற்படக்கூடும்.

அரசாங்கம் மிகவும் பலவீனமான, மிகவும் மெதுவாக, விஞ்ஞானரீதியான தகவல்களை பாவிக்காமல் செயலாற்றி வருவது புலனாகின்றது. நாட்டில் ஊரடங்குச் சட்டம்போன்ற நிலைமையை பிரகடனஞ் செய்யப்போவதில்லையென அரசாங்கம் திட்டவட்டமாக கூறியுள்ளது. நிலவுகின்ற செயலணிக்கு  வைரஸ் தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு கிடையாது. எல்லாவற்றையும் அறிந்தவர்கள் எவருமே இல்லையென நாங்கள் வலியுறுத்துகிறோம். எனவே நாங்கள் புத்திஜீவிகள் அனைவருக்கும் அழைப்புவிடுத்து அவர்களின் அறிவையும் அனுபவத்தையும் பாவித்து அறிக்கையொன்றை தயாரித்தோம். உலக சுகாதார தாபன அலுவலகத்தில் கூடி நாங்கள் தயாரித்த அறிக்கையை ஒப்படைத்து எமது பொறுப்பினை ஈடேற்றினோம்.  உலகம் ஏற்றுக்கொண்ட வைரஸ் நிபுணர் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மலிக் பீரிஸ் அவர்கள் மத்தியில் இருக்கிறார். அவர் சார்ஸ் வைரஸ் பற்றி கற்கையினை மேற்கொண்ட முதன்மை வகிக்கின்ற பேராசிரியராவார். மலேரியா கட்டுப்பாட்டு இயக்கத்தில் முதன்மைப் பங்கினை ஆற்றிய நிபுணத்துவ மருத்துவர் திருமதி காமினீ மென்டிஸ் அவர்களும் இருக்கிறார். இத்தகைய ஒன்றுசேர்க்கக்கூடிய மிகச்சிறந்த அணியை ஒன்றுசேர்த்து தயாரித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.  அரசாங்கம் இந்நாட்டின் 21 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொடர்பிலேயே முடிவுகளை எடுக்கின்றது.  அதனால் ஏற்புடைய நிபுணர்களை அழைப்பித்து அறிக்கைகளை பெற்றுக்கொள்ளவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஆனால் அரசாங்கம் அந்த பொறுப்பினை தவறவிட்டுள்ளமை தெளிவாகின்றது.

புள்ளிவபரத் தரவுகளை திரிபுபடுத்தவது பாரதூரமான ஒரு நிலைமையாக வளர்ச்சியடைந்து வருகின்றது. பிசீஆர் பரிசோதனைகளில் பொசிடிவ் ஆனவர்கள் 4,171 பேர் இருப்பதோடு ரெப்பிட் என்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 1,239 பேர் தொற்றாளர்கள் என இனங்காணப்பட்டுள்ளது.  அதன் கருத்து யாதெனில் ஒரு நாளில் 5,500 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டமையாகும். சுகாதார அமைச்சின் தொழிற்பாட்டுக் கருமபீடம் இதனை அறிவித்தது. அறிக்கை செய்யப்படுகின்ற புள்ளிவிபரங்கள் பற்றி நாங்கள் தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தினோம்.  தொற்றுநோயியல் பிரிவினால்  வெளியிடப்படுகின்ற தரவுகளுக்கும் உத்தியோகபூர்வரீதியாக வழங்கப்படுகின்ற தரவுகளுக்கும் இடையிலான வித்தியாசத்திற்கான காரணத்தைக் கேட்டோம். ஆரம்பத் தருணத்தில்  பிசீஆர் பரிசோதனை மற்றும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை ஆகிய இரண்டையும் ஒரே ஆள் செய்துகொள்வதால் தொற்றாளர்கள் பற்றிய அறிக்கைகளில் இருவராக பதியப்படலாமென பதில் கிடைத்தது.  மறுபுறத்தில் தொற்றுநோயியல் பிரிவு முற்பகல் 10.00 மணிக்கு தரவுகளை வெளியிட்டாலும் ஏனைய அறிக்கை முந்திய தினத்தன்று இரவு 10.00 மணிக்கே வெளியிடப்படுவதாக எமக்கு கூறுகிறார்கள். ஆனால் 1,500 வரையான வித்தியாசம் இருக்கின்றமை  சம்பந்தமாக நிலவுகின்ற பாரதூரமான சிக்கல் தொடர்பில் வழங்கிய பதிலை நாங்கள் நம்பப்போவதில்லை.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவுடன் நாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடலில் இவ்வாண்டில் இறுதியளவில் ஏறக்குறைய 30,000 வரையான இறப்புகள் இடம்பெறக்கூடுமென எதிர்வு கூறப்பட்டது.  எமக்கு அறிந்துகொள்வதற்காக உள்ள மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளையும் தகவல்களையும் வரையறுப்பதானால் சரியான எதிர்வுகூறலை செய்யஇயலாது. நாளொன்றுக்கு 120 இறப்புகள் பதிவாகின்றவேளையில் எதிர்வுகூறலைச் செய்தாலும் தற்போது 150 இறப்புகளை கடந்துள்ளமையால் எதிர்வுகூறலும் மாற்றமடையவேண்டும். 

தடுப்பூசி எற்றல் சம்பந்தமாக அரசாங்கம் தொடர்ச்சியாக கூறுகின்ற வெளிப்பாடுகளின் யதார்த்தநிலை பற்றி கேள்விக்குட்படுத்த வேண்டியது பிரதான விடயமொன்றாகும்.    முதலாவது தடுப்பூசி 98 சதவீதமானோருக்கு வழங்கியுள்ளதாக கூறுகிறார்கள். எந்தவிடயத்தின் நிமித்தமோ முதலாவது தடுப்பூசியை வழங்குவதில் இலங்கை முன்வரிசையில் இருப்பது தெளிவாகின்றது. ஆனால் இரண்டாவது தடுப்பூசி 28 சதவீதத்திற்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா திரிபுரு செல்வந்த நாடுகளில்கூட வேகமாக பரவிவருவதோடு லெம்டா எனப்படுகின்ற புதிய திரிபுரு இனங்காணப்பட்டதும் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் உலக சுகாதார தாபனம் இரண்டு தடுப்பூசிகளும் அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றது. அதன் மூலமாக நோயினைத் தவிர்த்துக்கொள்வதற்கான ஆற்றல் குறைவடைது கிடைப்பதில்லை. இறப்புகளும் சிக்கலான நிலைமை உருவாகுதலும் குறைக்கப்படுதலே இடம்பெறுகின்றது. 98 சதவீதத்திற்கு தடுப்பூசி வழங்கப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரம் காரணமாக மக்கள் தவறாக வழிநடாத்தப்படலாம். ஒரு தடுப்பூசி போதுமானதாக அமையமாட்டாது.  இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டவர்களை எடுத்துக்கொண்டால்  கொழும்பில் 30 வயதிற்கு மேற்பட்ட சனத்தொகையில் 58 சதவீதமும் கம்பஹாவில் 48 சதவீதமும் கழுத்துறையில் 44 சதவீதமும் மாத்தளையில் 34 சதவீதமுமாக அமைகின்றவேளையில்  ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் மிகவும் குறைவானதாகும். அம்பாந்தோட்டை 21 சதவீதம், காலி 12 சதவீதம், மாத்தறை 16 சதவீதம், இரத்தினபுரி 9 சதவீதம், குருநாகல் 15 சதவீதம், பதுளை 15 சதவீதம் மற்றும் கண்டி 2.5 சதவீதம் மாத்திரமே இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.   

எனவே தடுப்பூசி ஏற்றல் சம்பந்தமாக தவறான கருத்தியலுக்கு செல்லவேண்டாமென மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். ஒரு தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போதுமானதாக அமையமாட்டாது. இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டாலும் சுகாதார வழிகாட்டல்களுக்கிணங்க செயலாற்றவேண்டியதை கட்டாயமானதாக்க வேண்டும்.  தடுப்பூசிகளிலிருந்து மாத்திரம் தப்பித்துக்கொள்ள இயலாத அபாயங்கள் இருக்கின்றன. புதிய திரிபுருக்கள் உருவாகி வருகின்றன. அரசாங்கத்தின் தடுப்பூசி பகிர்ந்தளித்தலில் பாரதூரமான சிக்கல்கள் நிலவுகின்றன. இந்த விடயங்களையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.   வீடுகளில்  நோயாளிகளை பேணிப்பாதுகாப்பதைப் போலவே வைத்தியசாலை முறைமையைப் பேணிவருவதும் பாரிய சவாலாகும். நோயாளிகள் முதலில் அனுமதிக்கப்படுகின்ற  இரண்டாம்நிலை முகாம்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு தனித்தனியாக இடவசதிகள் இருக்கவேண்டும். சுகாதாரப் பணியாளர்களும் நோய்க்கு இரையாகி வருகின்றமையால் மக்கள் கவனமாக இருக்கவேண்டியது அத்தியாவசியமானதாகும்.  வைத்தியசாலைகள் செயலிழந்து வருகின்ற நிலைமையில் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களேனும்  நடமாட்ட மட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் சுகாதார முறைமை சீரழிந்து விடுவதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.  

ஏனைய நோய்களால் இறக்கின்ற மட்டத்திற்கு  வைத்தியசாலைத் தொகுதி செயலிழக்க இடமுண்டு. எமது நாடு தீர்வுக்கட்டமான நிலைமையிலேயே இருக்கின்றது. எனவே நாங்களும் தப்பித்துக்கொண்டு பிறரையும் பாதுகாத்துக்கொண்டு செயலாற்றவேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் உண்டு. அதேவேளையில் அரசாங்கம் மக்களின் வாக்குகளால் நிமிக்கப்பட்டு அதிகாரத்தில் உள்ளதால் மக்களை மரணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான விசேட பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. மக்களை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள உடனடியாக  நடவடிக்கை எடுக்குமாறு கடினமான கோரிக்கையை முன்வைக்கிறோம்.

You may also like

Leave a Comment