சட்டத்தரணி உபுல் குமரப்பெரும
சுகாதார பணி்ப்பாளர் நாயகம் வழங்கிய விதப்புரைகளுக்கிணங்கவே என குறிப்பிடப்பட்ட பொலிஸ் அறிவித்தல் அரசியலமைப்புடன் எவ்வாறு முரண்படுகின்றது என திருவாளர் வட்டகல தெளிவுபடுத்தினார். அதற்கு அப்பால்சென்று மேலும் சில விடயங்களை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன். தனிமைப்படுத்தல் கட்டளைச்சட்டம் அறிமுகப்படத்தப்பட்டது 1897 இல் ஆகும். அக்காலப்பகுதியில் இலங்கை ஐந்தாவது ஜோர்ஜ் மன்னின் குடியேற்றநாடாகும். அவரது பெயரும் இந்த கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்படுகின்றது. சட்டத்திற்கு அமைவாக வெளியிடப்பட்ட வர்த்தமானிப் பத்திரிகை 1950 தசாப்தம் வரை அமுலில் இருந்தது. அதன் பின்னர் 1972 அரசியலமைப்பில் அதுவரை பாவிக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் எமது சட்ட முறைமைக்குள் அடக்கப்படுகின்றன. அதன் பின்னர் 1978 அரசியலமைப்பின் 76 வது உறுப்புரையில் நாட்டின் சட்டவாக்கத் தத்துவம் சட்டவாக்கத்துறைக்கே இருப்பதாக தெளிவாக குறிப்பிடப்படுகின்றது. வேறு நிறுவனமொன்றுக்கு சட்டமாக்குவதற்கான அதிகாரம் கிடையாது. ஆனால் இப்போது தனிமைப்படுத்தல் சட்டத்துடன் அமைச்சரால் ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஒழுங்குவிதிகளின் தன்மை எத்தகையது என்பதை ஆராய நீதிமன்றம் தவிர்ந்த வேறு இடம் கிடையாது.
கடந்த சில நாட்களாக கைதுசெய்யப்பட்ட ஆட்கள் குற்றவியல் தவறுக்காகவே கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இந்த தனிமைப்படுத்தல் சட்டத்தில் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள இரண்டுவகையான குற்றங்கள் இருக்கின்றன. அவற்றுடன் எற்புடைய தண்டனைகள் இருக்கின்றன. எனினும் பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலுக்கிணங்க கைதுசெய்யப்படுவதற்கான குற்றம் என்ன என்பது பற்றி தெளிவுபடுத்தப்படவில்லை. கொரோனா பரவலுடன் வெளியிடப்பட்ட பல வர்த்தமானி அறிவித்தல்கள் இருக்கின்றன. சமூக இடைவெளியைப் பேணுதல், முகக் கவசம் அணிதல் போன்ற ஒருசில விடயங்கள் பற்றியே 2020.10.15 ஆந் திகதிய வர்த்தமானியில் குறிப்பிடப்படுகின்றது. எவரேனுமொருவர் சமூக இடைவெளியைப் பேணாமல் முகக்கவசம் அணியாமல் இருப்பாராயின் சட்டத்தை அமுலாக்குவதற்கான இயலுமை நிலவுகின்றது. ஆனால் கைதுசெய்யப்பட்டவர்கள் வழிகாட்டலுக்கமைவாக செயலாற்றவேண்டுமென குறிப்பிடப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒருவரை எவ்வாறு கைது செய்வது? அது தனியாள் சுதந்திரத்திற்கு இடையூறு செய்வதாகும்.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவசரகாலச் சட்டத்தை ஒவ்வொரு மாதத்திலும் விதிப்பதற்கான அதிகாரம் சனாதபதியவர்களுக்கு உண்டு. அதைப்போலவே பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படவும் வேண்டும். தனியாள் சுதந்திரம், பேச்சு சுதந்திம் உள்ளிட்ட மனித உரிமைகளை மட்டுப்படுத்துதல் பாராளுமன்றத்தின் தீர்மானத்திற்கிணங்க முன்னெடுத்துச் செல்லப்படுவதாக என்பது அமுலில் இருந்தது. ஆனால் இப்போது இடம்பெறுவதோ தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளின் தன்மை பாராளுமன்றத்தில் ஆராயப்படுவது கிடையாது. இதனால் சுகாதார பணிப்பாளர் நாயகம் சமர்ப்பித்தாக கூறப்படுகின்ற கடிதம் மூலமாக அடிப்படை உரிமைகளை மீறவோ தனியாள் சுதந்திரத்தை வேறோர் அதிகாரசபைக்கு கையளிக்கவோ முடியாது. நாட்டின் பிரசைக்கு எதிராக குற்றச்சாட்டினை முன்வைக்கவும் தண்டனை வழங்கவும் வேறோரு கடிதத்தை சமர்ப்பிக்கிறார்கள். சுகாதார பணிப்பாளர் நாயகம் நாட்டு மக்களை தண்டிப்பதற்காக சட்டமொன்றை உருவாக்கி உள்ளார். இது மிகவும் பயங்கரமான நிலைமையாகும். அரசியலமைப்படன் நேரடியாக முரண்படுகின்ற நிலைமையாகும். அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் சம்பந்தமாக அரசியலமைப்பில் காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகளை விஞ்சி செல்வதாகும்.
இந்த ஆவணம் நிலவுகின்ற சட்டத்திற்கு முரணானதாகும். அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டம் ஆகிய இரண்டக்குமே முரணானதாகும். அத்துடன் அடிப்படை உரிமைகளில் உள்ளடங்கிய தனியாள் சுதந்திரம் முற்றாகவே மீறப்படுவதாகும். எவவே இந்த ஆவணத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கான உரிமை மக்களுக்கு உண்டு.
தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள்
2021.07.08
1 comment
චීන සමුහ ආණ්ඩුවේ ප්රතපත්ති වලට හෝ ව්යවස්ථාවට හෝ අපරාධ නීති සංග්රහයට හෝ මානව හිමි කම් වලට හෝ හානියක් නැත්නම්, එක කෑම මේසේ වාඩිවෙලා ඉන්න 225 දීපුදේ කාල එලියට ඇවිත් මුහුණ ඇඹුල් කරගන අරැන්ට කිරි අපට කැකිරි තියල කෑගහනවට වඩා කල හැකිදෙයක් පේන්නේ නැත්තේ ඇයි මේ ධනවාදයේ අතකොලු වන අපි වාමාංසික බයියන්ට. උන්ට කන්න පාර හදල වපුරල අස්වද්දල උන් කාපු දඩමස්වල කට්ට සූප්පු කරන්න දුන්නම අපිට එනව දුක කියන්න. මගේ කරැමෙට මමත් වාමාංසික බයියෙක් උනා.අඩුගානේ මීලග ජන්දෙ ගැන හිතල මොල හෝදගෙන ඉදිරියට වරෙව් ජෙප්පනි ඉදිරියටම වරෙව්. හැබැයි වාමාංසික ධනවාදයේ වාසුදේවල නොවෙව්.ජාාතියේ සැබෑ මිතුරන් විදිහට. අවංකව රට වෙනුවෙන්, එදාට අපි හිටගන්නම් උඹලා වෙුනවෙන්……..