Home News Tamil உண்மையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க அனைவரையும் ஒன்றுசேருமாறு அழைப்பு விடுக்கிறோம்…..

உண்மையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க அனைவரையும் ஒன்றுசேருமாறு அழைப்பு விடுக்கிறோம்…..

by Ravinath Wijesekara

இனவாத அரசியல் அணுகுமுறை  மீண்டும் தோன்றி வருகின்ற சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் கருத்துக்கனை முன்வைப்பது மிகவும் முக்கியமானதாகும். அமைச்சர் பேராசிரியர் ஜீ்.எல். பீரிஸ்  ஆங்கில மொழியில் மிகவும் தலைசிறந்த உரையொன்றினை நான்காம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். இலங்கையில் நிலவுகின்ற பன்வகைமை வாய்ந்த சமூகம் பற்றி,  அதன் மீது தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புதல் பற்றி உரையாற்றினார்.  சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக  அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாகக் கூறிய அவர்  அப்பணிக்காக சிவில் சமூகத்திற்கும் அரசாங்கத்துடன் ஒருங்கிணையுமாறு அழைப்புவிடுத்தார். ஆனால் இந்த உரையை எவருக்காக ஆற்றுகிறார் எனும் கேள்வி எம்மிடம் எழுந்தது.  அவர் எந்தக்கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கான காரணம் அரசாங்கமும்  அதனைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பல்வேறு தரப்பினர்களும் மீண்டும் இனவாத மற்றும் மதவாத பிரிவினைகள் பற்றிய கூற்றுக்களை விடுத்துக் கொண்டிருப்பதாகும்.  அதிகாரக் கருத்திட்டத்திற்காக வரலாற்றிலிருந்து அதிகாரம் பெற்ற அனைவரும் இனவாதத்தை பிரயோகித்தார்கள் என்பது தெரியும்.  இனவாதத்தை மிகவும் கடுமையாகப் பாவித்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட இயக்கமொன்று தற்போது அரசாங்கமாக மாறியுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் தோன்றிய சமூக கிளர்ச்சிளை தமது கருத்திட்டத்திற்காக பாவித்துக் கொண்டார்கள். அதனை மேலும் நன்றாக வளர்த்துக்கொள்வதற்காக  பல்வேறு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கர்தினால் அவர்களின் தலையீட்டினால்  தாக்குலுக்கு இலக்காகிய சமுதாயம் நல்லிணக்கம் பெற நடவடிக்கை எடுத்தார். அந்த வழிமுறையை நாங்கள் அனைவரும் பாராட்டுகிறோம். பலியானவர்களுக்கு நீதி வழங்க அர்ப்பணிப்புச் செய்வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு அவர் செயலாற்றினார். இத்தருணத்தில் மீண்டும் நியாயம் பற்றி கர்தினால் அவர்களும் மேலும் சில குழுக்களும் குரல்கொடுக்கின்ற வேளையில் மிகவும் கீழ்த்தரமாக தாக்குதல் நடாத்துவதை நாங்கள் காண்கிறோம். கத்தோலிக்க சமுதாயத்தைப் போன்றே முஸ்லிம் சமுதாயத்தையும் இலக்காகக்கொண்டு சிலகாலம் மௌனமாக இருந்த ஆட்கள் மீண்டும் களமிறங்கி தாக்குதல் நடாத்துகிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி ஏதேனும் கூற்றினை வெளியிடுவது, அரசாங்கத்தை விமர்சிப்பது  சம்பந்தமாக சீ.ஐ.டி. மிகவும்  சீக்கிரமாக இடையீடுசெய்த விதத்தை நாங்கள் கண்டோம். ஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய கூற்றுகளை வெளியிடுகின்ற ஆட்கள் அவர்கள் சம்பந்தமாக பகிரங்க ஊடகங்களில் விடுக்கின்ற கூற்றுகள் சம்பந்தமாக எந்தவிதமான புலனாய்வினையும் மேற்கொள்வதில்லை. ஆனால் இனவாதம் அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்தவிதமாக தொடர்புமற்ற ஆசிரியர்களின் போராட்டத்தின்போது பயங்கரவாதிகளை ஒத்ததாக பிரதிபலிப்புச் செய்வதாக அமைச்சர் சரத் வீரசேகர  கூறியுள்ளார். பொலீசாரின் கட்டளைப்படி செயலாற்றாவிட்டால் முழங்காலுக்கு கீழாக துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் போது தலையில் சூடுபட்டாலும்  சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக தோற்றுவதாக இந்த அமைச்சர் கூறியுள்ளார்.    இனவாதக் கருத்துக்கள் அரசாங்கத்தின் தரப்பில் வெளிப்படுவது தம்மை விமர்சிக்கின்ற பிரிவினரை வேட்டையாடுவதற்காகவே என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்.  இந்த நேரத்தில் அரசாங்கம் பாரதூரமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கி  பதில் இல்லாத நிலையிலேயே உள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சினைகள், சர்வதேச உறவுகள், பொருளாதாரம் போன்ற பிரச்சினைகளில் அரசாங்கம் மிகவும் விரைவாக மக்களின் வெறுப்புக்கு இலக்காகி உள்ளது. இந்த நிலைமையில் அரசாங்கம் பழைய விளையாட்டினை தொடங்கியுள்ளதென்பது மிகவும் தெளிவாகின்றது.  இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் அரசாங்கத்தின் அசிங்கமான இனவாத விளையாட்டில் அகப்பட மாட்டார்களென நாங்கள் நினைக்கிறோம். அதைப்போலவே தேசிய மக்கள் சக்தி என்றவகையில் இத்தகைய கீழ்த்தரமான செயல்களைக் கண்டிக்கிறோம். வரலாற்றுக்காலம் பூராவிலும் தமது அதிகாரக் கருத்திட்டங்களுக்காக இனவாதத்தை பரப்புகின்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்பதாலேயே நாங்கள் மக்களுடன் உரையாடலொன்றைக் கட்டியெழுப்புகிறோம். அதனை மக்களாலேயே சாதிக்க இயலும். இதன் பின்னால் இருக்கின்ற நோக்கங்கள் பற்றி மிகுந்த புரிந்துணர்வுடன் செயலாற்றுமாறு கோரிநிற்கிறோம். நாடு பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நேரத்தில் மக்கள் பிளவுபடுவதற்குப் பதிலாக ஒன்றுசேர வேண்டும்.  எம்மை இனவாத அடிப்படையில் பிரிக்க செயலாற்றி வருபவர்களுக்கிடையில் மிகச்சிறந்த உறவுகள் நிலவுகின்றன. அதனால் இந்த நாட்டில் உள்ள உண்மையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க அனைவரையும் ஒன்றுசேருமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி ஹரினி அமரசூரிய

You may also like

Leave a Comment