Home News Tamil உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு அரசாங்கம் பதவியுயர்வுகளைக்கூட வழங்கி இருக்கின்றது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு அரசாங்கம் பதவியுயர்வுகளைக்கூட வழங்கி இருக்கின்றது

by Ravinath Wijesekara

நிபுணத்துவ மருத்துவர், பேராசிரியர் கிறிஷாந்த அபேசேன

உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு இன்றளவில் 28 மாதங்கள் கழிந்துள்ளன. சனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. இந்த தாக்குதலில் ஏறக்குறைய 270 பேர் உயிரிழந்ததோடு அதைவிட அதிகமான எண்ணிக்கையுடையோர் இறந்துகொண்டே வாழ்கிறார்கள். கைகால்களை இழந்தவர்கள், மூளைக்கு சேதமேற்பட்டவர்கள் பெருந்தொகையினராக இவ்விதமாக உள்ளதோடு அவர்களின் குடும்பங்கள் இதன் காரணமாக பாரிய அனர்த்தத்திற்கு இலக்காகி உள்ளன.  இது கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக  மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என நாங்கள் நினைக்கவில்லை. தமது சமயமே மிகச்சிறந்த சமயம், தமது இனமே தலைசிறந்த இனம்  எனக் கூறுகின்ற எவரேனும் இருப்பாராயின் அவர்கள்தான் தீவிரவாதிகள்.  இதனூடாக பயங்கரவாதத்திற்குச் செல்வார்களாயின் இந்த சூழமைவின்கீழ் அந்த நிலைமையை மாத்திரம் கருத்திற்கொள்வதில்லை. தீவிரவாதம் அல்லது பயங்கரவாதத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து முழுமையான கருத்தொன்றினை பெற்றுக்கொள்ள வேண்டும். அழுத்தத்திற்கு அல்லது தீவிரவாதத்திற்கு மாத்திரம் சுருக்க நான் விரும்பவில்லை.  இங்கு இருப்பது தீவிரவாதம் அலலது பயங்கரவாதம் பற்றிய பிரச்சினையொன்று, முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் ஏற்பட்ட பிரச்சினையொன்று போல சுருக்க இயலாது. பௌத்த, இந்து மற்றும் ஏனைய மதத்தவர்களைப்போலவே முஸ்லிம் மக்களுக்கும் இந்த பிரச்சினை உருவாக்கக்கூடும். ஆனால் இங்கு இனவாத அல்லது மதவாதப் பிரச்சினையைப் பார்க்கிலும் வேறோன்று இருக்கின்றது.

சனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரதான விடயங்களைப் பார்த்தால் இது சம்பந்தமான தகவல்கள் இருக்கின்றன. ஏன் இந்த தாக்குதலைத் தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை?  அரசாங்க உத்தியோகத்தர்களை தவறாளிகளாக்கி இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பொலீஸின் உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கூற வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது. இந்த பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பற்றி இற்றைவரை நடவடிக்கை மேற்கொள்ளாதது மாத்திரமல்ல, குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளவர்களுக்கு இந்த அரசாங்கம் பதவியுயர்வுகளைக்கூட வழங்கியுள்ளது. இதனைத் தடுக்காமை சம்பந்தமாக முன்னாள் சனாதிபதியும் பிரதம அமைச்சரும் மாத்திரமன்றி அந்த அரசாங்கத்தில் இருந்த அனைத்து அமைச்சர்களும் தாக்குதல் பற்றி அறிந்திருந்தார்கள். அதனால் கடந்த அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரும் உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாவர். இந்த நாட்டில் நிலவுகின்ற டீல் அரசியல் ஊடாக ஒருசில முஸ்லீம் குழுக்களுடன் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இந்த டீல் அரசியல் பிரயோகிக்கப்படுகின்றது. டீல் அரசியல் காரணமாக இதன் மறைவில் இயங்கிய குழுக்கள் பற்றிய முறையான விசாரணைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

இந்த திட்டத்தை தீட்டியவர்கள் முஸ்லிம் தீவிரவாத குழுக்களென ஒருசிலர் கூறுகிறார்கள். மேலும் சிலர் தெற்கின் அரசியல் குழுக்களில் இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகின்றது. அது முக்கியமானது.  சாரா ஜெஸ்மின் பற்றி எங்களுக்குத் தெரியும். ஒருசிலர் அவர் தப்பியோடியதாகவும் மேலும் சிலர் அவரைக் கொன்றுவிட்டதாகவும் கூறுகிறார்கள். தெஹிவலையில் இறந்த ஜமீலை சந்திக்க இராணுவ உளவுப் பிரிவின் தூதர் ஒருவரை அனுப்பிவைத்ததாகவும் கூறுகிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் வினைத்திறமையீனம் காரணமாக மக்களுக்கு ஏதேனும் அழுத்தம் ஏற்பட்டது. அந்த அழுத்தத்தின் பேரில் இனவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை பரவச்செய்வித்த தெற்கின் அரசியலை நெறிப்படுத்துபவர்கள் இதன் சூத்திரதாரிகள் எனும் சந்தேகம் எமக்கு நிலவுகின்றது. நிகழ்கால அரசாங்கம்  உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்தியே ஆட்சிக்கு வந்தது.  இது சம்பந்தமாக முறையான விசாரணையை மேற்கொண்டு அனைத்தையும் மக்களுக்கு அம்பலப்படுத்துவதாக தேர்தலுக்கு முன்னர் அவர்கள் கூறினாலும் தற்போது கடைப்பிடிப்பது  உப்புச்சப்பற்ற ஒரு கொள்கையைாயகும். விசாரணைகளை இடைநடுவில் நிறுத்திவிட்டார்கள்.   அதனால் தெற்கில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இது மேற்கொள்ளப்பட்டதா என்ற வலுவான சந்தேகம் எம்மிடம் நிலவுகின்றது. கத்தோலிக்கர் மாத்திரமன்றி இந்த நாட்டில் வசிக்கின்ற நீதியை நேர்மையை  மதிக்கின்ற அனைத்து மக்களுக்கும்  உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை இருக்கின்றது. ஒவ்வொரு மாதத்திலும் 21 ஆந் திகதி எதிர்ப்பினை வெளிக்காட்டுமாறு கர்தினால் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நாங்கள் அந்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கிறோம். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைக் கண்டுபிடிக்க முடியாத உளவுப் பிரிவே எம்மிடம் இருக்கின்றது…..

தேசிய மக்கள் சக்தியின் நெறிப்படுத்தல் குழு அங்கத்தவர் அருண சாந்த நோனிஸ்

 28 மாதங்கள் கழிந்துள்ள குண்டுத் தாக்குதலால் இன்னமும் கவலையுடனும் அழுத்தத்துடனும் சீவிக்கின்ற அனைவருக்கும் இறந்த அனைவருக்கும் காயமுற்ற அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.  அதைப்போலவே ஏதேனும் மோதல்கள் காரணமாக இறந்த இராணுவத்தையும் பொலிஸாரையும் சேர்ந்த அனைவருக்கும் எமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

 இந்த நாட்டில் குண்டுத்தாக்குதல்கள் பற்றி உங்களுக்கும் எனக்கும் பாரிய அனுபவங்கள் இருக்கின்றன. அது சம்பந்தமாக பலவருடங்களின் தகவல்கள் எம்மிடம் இருக்கின்றன.  இவை மத்தியில் குண்டுகளை வெடிக்கவைத்தல் மற்றும் குண்டுத் தாக்குதல் நடாத்துதல் என இருவகைகள் இருக்கின்றன. ஆனால் இந்த இரண்டுவகையான குண்டுத் தாக்குதல்களையும்விட நினைத்துப்பார்க்க முடியாத வித்தியாசம் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் உள்ளது. எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினால் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர் அவர்கள் அந்த பொறுப்பினை எற்றுக்கொண்டார்கள். குண்டு வெடிக்கச் செய்விப்பதற்கு முன்னர் பெறப்பட்ட புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்த விதத்தை நாங்கள் கண்டோம்.  இந்த குண்டுத் தாக்குதல்களுக்கு ஏதோஒரு காரணம் இருக்கின்றது.  ஆனால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கான காரணத்தைக் கூறுமுடியாதுள்ளது.  இது சம்பந்தமாக பாரிய குழப்பநிலையே இருக்கின்றது.  அதனால் புலனாய்வுச் செயற்பாடுகள் மேலும் விரிவானதாக மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆனால் அன்று இருந்த அரசாங்கமும் தாக்குதலால் அநுகூலத்தைப்பெற்ற நிகழ்கால அரசாங்கமும்  கடைப்பிடிக்கின்ற செயற்பாங்குகள் எமக்குத் தெளிவாகவில்லை.  இற்றைவரை வழங்கப்பட்ட அறிக்கைகளை கத்தோலிக்கத் திருச்சபை நிராகரிக்கின்றது. உள்ளடக்கப்படவேண்டிய ஒருசில தகவல்கள்  கிடையாதெனக் கூறுகிறார்கள். இதனால் பாரிய சந்தேகம் நிலவுகின்றது. சந்தேகத்தைப் போக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கின்றது. இந்த பொறுப்பினை முறைப்படி ஈடேறறாமைக்கான காரணம் என்னவென தேசிய மக்கள் சகதி என்றவகையில் நாங்கள் கேட்கிறோம்.

இத்தருணமாகும் வேளையில் குண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களில் வசிப்பவர்களுக்கு பாரிய சந்தேகமொன்று எழுந்துள்ளது. இதன் மறைவில் இருப்பவர்கள் யார் என்பதுதான் அது. உயிர்த்த ஞாயிறு  ஆணைக்குழு அறிக்கை காரணமாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூறியிருந்தார்கள். கீழ்மட்டத்தில் உள்ளவர்கள்மீது பொறுப்பினை சுமத்துவதைப் பார்க்கிலும் உயர் மட்டத்தில் இருப்பவர்களை இனங்காண  வேண்டியது முக்கியமானதாகும். யாரோ ஒருவரின் கட்டளையை ஏற்றுநடக்க  எந்தவொரு பங்கரவாதக் குழுவினாலும் முடியும். ஆனால் அவர்களை நெறிப்படுத்தியவர் யாரென்பதுதான் பிரச்சினை. மக்களுக்காக இந்நாட்டின் ஆட்சியாளர்களிடம் நான் கேட்கிறேன். எமது உளவுப் பிரிவுகளால் கண்டுபிடிக்க இயலாத இந்த குழுவினர் யார்?  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளை கண்டுபிடிக்க முடியாத உளவுப் பிரிவா எமது நாட்டில் இருக்கின்றது?  இங்கு மறைக்கப்படுகின்ற பல தகவல்கள் இருக்கின்றன. இதனால் மக்கள் மத்தியில் சந்தேகம் வளர்ந்து வருகின்றது. சந்தேகத்தைப் போக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது. அந்த பொறுப்பினை வகிக்காததால் ஒவ்வொரு மாதத்தினதும் 21 ஆந் திகதி நடாத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். அது அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைப் பார்க்கிலும் மக்களின் உரிமைக்காக செயலாற்றுவதாக அமையும்.  சந்தேகம் நிலவுகின்ற இடங்களுக்கு அரசாங்கத்தின் கவனத்தைச் செலுத்தி அசல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சட்டத்தின்முன் கொண்டுவருமாறு இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் சார்பிலும் நாங்கள் வற்புறுத்துகிறோம்.

ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளை அடையாளம் காண்பதற்கான ஆற்றலும் மக்களிடம் இருக்கவேண்டும்….

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு 28 மாதங்கள் நிறைவடைகையில் இந்த மிகநீண்ட காலத்திற்குள்  சம்பந்தப்பட்ட  பொறுப்புக்கூற வேண்டியவர்களை இனங்காணாமை பாரியதொரு பிரச்சினையாகும். இந்த தாக்குதல் காரணமாக மக்கள் பேரதிர்ச்சி அடைந்திருந்தவேளையில்  திருவாளர் கோட்டாபய ராஜபக்ஷவை உள்ளிட்ட அமைப்புக்கள் அதிகாரத்திற்கு வருவதற்காகவும் பாவித்தன.  சனாதிபதி தேர்தலுக்காக திருவாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடப் போவதாக இந்த அதிர்ச்சி நிலவுகையிலேயே கூறினார்.  அது சப்பந்தமான விசாரணைகளை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்து இந்த தாக்குதலால் அச்சமடைந்திருந்த மக்களின் வாக்குகளைப் பெற்றார்.  அதனால் இந்த அரசாங்கத்திற்கு தாக்குலால் இறந்த, வேதனைக்கு உள்ளாகிய, காயமுற்ற  அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கான பொறுப்பு இருக்கின்றது.  ஆனால் தற்போது படிப்படியாக காலப்போக்கில் வரலாற்றின் மணல்மேட்டில் புதையுண்டுசெல்ல  இடமளித்துள்ளார்கள். திருவாளர் மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழு பலவீனமானதாயின் புதிய ஒன்றை நியமித்து  கோட்டாபய ராஜபக்ஷ தகவல்களைத் திரட்டியிருக்கலாம். ஆனால் அது அவ்வாறு இடம்பெறவில்லை.

தாக்குதல் இடம்பெற்றவேளையில் இருந்த சனாதிபதி தற்போது இந்த அரசாங்கத்திற்குள்ளேயே இருக்கிறார். அவர்கள் பொறுப்பினை தவறவிட்டமையால் தாக்குதல் இடம்பெற்றதாக கோட்டாபய ராஜபக்ஷவை உள்ளிட்ட குழுக்கள் கூறின.  அதனால் அவர்களை தோற்கடித்து தம்மை அதிகாரத்திற்கு கொண்டுவந்து பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு தண்டனை  வழங்க வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.  ஆனால் இப்போது பொறுப்புக்கூற வேண்டுமென அவர்களே கூறிய பிரதானியை தம்மிடமே வைத்துக்கொண்டு  உண்மையான பொறுப்பாளிகளை பாதுகாக்கிறார்களா எனும் சந்தேகம் மக்களிடம் எடுந்துள்ளது.  யார் சதிகாரர்கள் என எங்களிடம் கேட்கவேண்டாம். அரசாங்கத்திடம் உள்ள உளவுப் பிரிவுகளை ஈடுபடுத்தி  அதனைக் கண்டுபிடிப்பதற்கான பொறுப்பு அவர்களுக்கு உண்டு. ஆனால் உப்புச்சப்பற்ற கொள்கை காரணமாக இந்த சந்தேகம் மேலும் வலுப்பெறுகின்றது. அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கத்தின் செயலென்றால் இவ்விதமாக செயலாற்றுமென சாதாரண பொதுமக்கள் அறிவார்கள். ஊடகவியலாளர் திரு. லசந்த விக்கிரமதுங்கவை படுகொலை செய்தமை போன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன. உயிர்த்தஞாயிறு தாக்குதலும் இந்த குவியலில் வீழ்ந்துள்ளது. விசாரணைகளின் பெறுபேறுகளை சரிவர  நாட்டுக்கு வெளிப்படுத்தாமையால் சந்தேகத்தின் கரங்கள் அரசாங்கத்தின் பக்கம் நீட்டப்படுவதை தடுக்கமுடியாது.

முன்னர் நிலவிய அரசாங்கம் தாக்குதலை தடுக்கமுடியாமல் போனமைக்கான பொறுப்பினை ஏற்கவேண்டும். அதைப்போலவே தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமை பற்றிய பொறுப்பினை இந்த அரசாங்கம் எற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு விளையாட்டல்ல. ஏறக்குறைய 300 மனித உயிர்களை இழந்தமை, உளரீதியான பீதிநிலை உருவாகியமை போன்றே நிகழ்கால அரசாங்கம் இந்த சம்பவத்தை அரசியலுக்காக பயன்படுத்துகின்றமையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்தைச் சுற்றியுள்ள தீவிரவாதக் குழுக்களை அந்நாட்களில் ஈடுபடுத்தினார்கள். இதனால்தான் வேட்டையாடியதை தோளில் சுமந்து போகின்றவரைக் கண்டால் துப்பாக்கியைக் கட்டியவரை இனங்காண முடியுமென்ற கதை உருவாகியது.   தற்போது நடைபெறுவது அரசாங்கம் மென்மேலும் இந்த சந்தேகத்தை உறுதிசெய்வதாகும்.  அரசாங்கத்தினால் இந்த பிரச்சினையில் இருந்து கைநழுவிச்செல்ல முடியாது. கர்தினால் அவர்கள் சனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திற்கு கிடைத்த பதிலைக்கூட ஏற்றுக்கொள்ள இயலாதெனக் கூறியுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக சந்தேகம் தோன்றுவது ஒரு நாடு என்றவகையில் பாரதூரமான கவலைக்குரிய நிலைமையாகும். எமது நாட்டில் ஒவ்வோர் அரசாங்கமும் அதிகாரத்திற்காக மனித உயிர்களுடன் விளையாடினவென்பதை நாங்கள் அறிவோம். முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தின் மத்தியில் மனித உயிர்கள் தொடர்பில் எந்தவிதமான பெறுமதியும் கிடையாதென்பது எங்களுக்குத் தெரியும்.  எந்தளவு எண்ணிக்கையிலான மனிதர்களையும் கொன்று அதிகாரத்தைப் பற்றிக்கொண்டாலும் கைப்பற்றிய அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ளவும் அவ்வண்ணமே செயலாற்றி வருவதும் எமக்குத் தெரியும்.  கொவிட் பெருந்தொற்று நிலைமையைக்கூட பொருட்படுத்தாமல் அவர்கள் மனித உயிர்கள் பெறுமதியற்றவை என்பதாலேயே மாயாஜால உலகில் வசிக்கிறார்கள்.  முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு   அதிகாரத்தின் அளவுக்கு மனித உயிர்கள் பெறுமதியானவையல்ல. அதிகாரத்திற்காகவும் சிறப்புரிமைகளுக்காகவும் அவர்கள் எந்தவொரு சதியையும் செய்வார்களென்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

இந்த சந்தேகம் ஏற்படுவதை அரசாங்கம் விரும்பாவிட்டால் உண்மையிலேயே பொறுப்புவாய்ந்தவரை  காரணங்கள் சகிதம் முன்வைத்து அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதையே செய்யவேண்டும். ஆனால் தற்போது இடபெற்றுள்ளதோ  காலத்தை வீணடிப்பது மாத்திரமே. வழக்குத் தாக்கல் செய்யுமளவுக்கு பேதியளவிலான சான்றுகள் முன்வைக்கப்படவில்லையென  சட்டத்துறை தலைமை அதிபதி அண்மையில்  குறிப்பிட்டிருந்தார். இறுதியில் நேரக்கூடியது படுகொலைகள் இடம்பெற்றாலும் கொலையாளி இல்லாதிருப்பதாகும். எனவே இதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளுமாறு நாங்கள் மக்களுக்கு கூறுகிறோம். தமது அதிகாரத்திற்காக நாளைகூட இவ்வாறான செயல்களைப் புரியக்கூடும். அதனைத் தோற்கடிக்க வேண்டும். இந்நாட்டு மக்களாலேயே அதனைத் தோற்கடிக்க முடியும்.  அதன்பொருட்டு மக்கள் மத்தியில் தேசிய ஒற்றுமையும் மதம்சார்ந்த ஒற்றுமையும் நிலவவேண்டும்.  அதைப்போலவே ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளை அடையாளம் காண்பதற்கான ஆற்றலை மக்கள் கொண்டிருக்கவேண்டும். மக்களை ஏமாற்றி, இன்னல்களுக்கு இலக்காக்கி, மக்களின் இரத்தத்தின்மீதும் உயிர்களின்மீதும் அதிகாரத்திற்கு வந்து அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்கொள்கின்ற முயற்சிகளை நாங்கள் விளங்கிக்கொள்வோம்.  இறந்தவர்கள் இந்நாட்டின் பிரசைகளே. பெருந்தொகையான இலங்கைப் பிரசைகளை படுகொலை செய்தமை தொடர்பாக அரசாங்கம் மௌனம் சாதிக்குமானால்  அது மிகவும் பாரதூரமானது. அதற்காக எந்தவிதமான மன்னிப்பையும் வழங்க இயலாது. அதனால் வெகுவிரைவில் முறையான விசாரணையை மேற்கொண்டு பொறுப்புவாய்ந்தவர்களை அம்பலப்படுத்தாவிட்டால் அரசாங்கம் இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தயாராக வேண்டுமென்று நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.   இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ள  நடவடிக்கைகளுக்கு தேசிய மக்கள் சக்தி  பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும்.

You may also like

Leave a Comment