Home News Tamil கட்டளைகளுக்கு அடிபணிகின்ற இராணுவ கலாசாரத்திற்குள் கல்விச் சுதந்திரத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது?

கட்டளைகளுக்கு அடிபணிகின்ற இராணுவ கலாசாரத்திற்குள் கல்விச் சுதந்திரத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது?

by Jayakody PSK

இதற்கு முன்னர் இரண்டு ஊடகக் கலந்துரையாடல்களை நடாத்தி தேசிய மக்கள் சக்தி என்றவகையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் சம்பந்தமாக விடயங்களை எடுத்துரைத்தோம். யூலை 08 ஆந் திகதி இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகின்றது. சேர் ஜோன் கொத்தலாவலவின் இறுதி விருப்பத்தின்படியே கொத்தலாவ பாதுகாப்பு பீடம் நிறுவப்பட்டது. அவர் குடியமர்ந்திருந்த இடத்தில் 1981 இல் கொத்தலாவல பாதுகாப்பு பீடம் தொடங்கப்பட்டது. இராணுவ பயிலிளவல் உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தலுடன் தொடர்புடைய பாடங்களை போதிப்பதற்காகவே அது தொடங்கப்பட்டது. இராணுவத்திற்கு புறம்பானவர்களுக்காக இந்த நிறுவனம் திறந்துவிடுவதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் கடந்த பல வருடங்களில் பல்வேறு காரணங்களின் நிமித்தம் சேர்த்துக்கொள்கின்ற முறையியலை மாற்றியமைத்து இராணுவத்துடன் தொடர்பற்றவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள். அதைப்போலவே இராணுவத்துடன் தொடர்பற்ற பாடங்களைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அதனோடு தொடர்புடைய முறையான சட்ட நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்பட்டிருக்கவில்லை. எனவே ஏற்புடைய சட்ட நடவடிக்கைகளை முறைப்படி பூர்த்திசெய்து கொள்வதற்காக இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரிகளுக்காக தனிவேறான நிறுவனம் தாபிக்கப்படுவது உலகின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறுகின்றது. எங்களுக்கும் அது தொடர்பில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. ஆனால் இந்த சட்டத்தினால் இராணுவ அதிகாரிகளின் முன்னேற்றம் மற்றும் அவர்களை பலப்படுத்துவது எப்படி என்பது மேற்கொள்ளப்படுவதில்லை. இதன்மூலமாக முன்வைக்கப்படுகின்ற கட்டமைப்புகளால் இராணுவ அதிகாரிகள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் வேறு ஆட்களுக்கு கல்வி வழங்குதல் பற்றி சட்டத்தில் குறிப்பிடப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சரால் நியமிக்கப்படுகின்ற ஆளுகைச் சபையொன்றினால் இந்த நிறுவனம் நெறிப்படுத்தப்படுகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உள்ள அத்தனை அதிகாரங்களும் இந்த ஆளுகைச் சபைக்கு வழங்கப்படுகின்றது. அதன் மூலமாக கருதப்படுவது இந்த பல்கலைக்கழகங்களை பேணி வருவது மாத்திரமல்ல, அதற்குப் புறம்பாக இத்தகைய வேறு நிறுவனங்களை தாபிப்பதற்கான வாய்ப்பு வழங்குவதாகும். வேறு பட்டமளிப்புச் செய்கின்ற நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் இயலுமையும் இந்த ஆளுகைச் சபைக்கு வழங்கப்படுகின்றது. பாடசாலைகள் முதல் பல்கலைக்கழங்களை இதன் கீழ் தாபிக்க முடியும்.

இந்த ஆளுகைச் சபைக்கு நியமிக்கப்படுகின்ற ஒன்பதுபேரில் நால்வர் தவிர்ந்த ஏனைய அனைவரும் முப்படையின் அதிபதிகள். அத்துடன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அமைபவர் ஓர் இராணுவ அதிகாரியாவார். உயர்கல்வி சம்பந்தமான விடயத்துறை பற்றி விழிப்புணர்வுகொண்ட தொழில்வாண்மையாளர்கள் அந்த உயர்கல்வி நிறுவனங்களுக்காக நியமிக்கப்பப்படுவார்கள். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இயங்குகின்ற விதம் பற்றிய பிரச்சினைகள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட பாடத்துறை வல்லுனர்களே அதற்காக நியமிக்கப்படுவர். பல்கலைக்கழகங்களுக்கும் அவ்விதத்திலேயே நியமிக்கப்படுகின்றனர். ஏதேனுமொரு பல்கலைக்கழகம் பற்றிய தீர்மானம் எடுப்பவர்கள் ஒவ்வொரு துறையும் பற்றிய நிபுணத்துவ அறிவு படைத்தவர்கள் ஆவர். ஆனால் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதால் உயர்கல்வி நிறுவனமொன்றில் நிலவவேண்டிய கலாசாரம் பற்றி தரம் பற்றி எந்தவிதமான அபிப்பிராயமுமற்றவர்கள் ஆளுகைச் சபைக்காக நியமிக்கப்படுவர். இந்த சட்டம் ஆரம்பத்தில் 2018 ரனில் – மைத்திரி அரசாங்க காலத்திலேயே சமர்ப்பிக்கப்படுகின்றது. அந்த காலத்தில் இடம்பெற்றவற்றை மாற்றியமைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இந்த சட்டத்தை எந்தவிதமன மாற்றமுமின்றி சமர்ப்பித்துள்ளது.

இலவசக் கல்விச்சட்டம் 1943 இல் கொண்டுவரப்பட்டவேளையில் பாரிய உரையாடல் தோன்றியிருந்தது. இந்த சட்டத்தின் மூலமாக வெறுமனே இலவசமாக கல்வி வழங்குதல் மாத்திரம் இடம்பெறவில்லை. இந்த சட்டத்தை மையமகக்கொண்ட உரையாடல்களிலிருந்து இலவசக் கல்விச்சட்டத்தை நிறைவேற்றுவதன் வேறு பல குறிக்கோள்கள் நிலவியமை தெளிவாகின்றது. சமூக அந்தஸ்து, பணம், ஆற்றல், ஆங்கில மொழி பேசுபவர்கள் போன்ற பிரிவினருக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இந்நாட்டிலுள்ள அனைவருக்கும் வழங்கும் நோக்கத்துடன் இலவசக் கல்விச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த இடத்தில் ஏதேனுமொரு தூரநோக்கு இருந்தது. கல்வி ஒரு சிறப்புரிமையல்ல: உரிமை என்பது அதற்குள்ளே இருந்தது. அதைப்போலவே தரமான கல்விக்கான உரிமையை அனைவருக்கும் உறுதிசெய்வதற்கான அடிப்படை நோக்கு இருந்தது. இந்த நாட்டுக்கு அவசியமான சனநாயகம், இந்நாட்டின் கலாசாரத்தை விளங்கிக்கொண்ட பிரசைகளை உருவாக்குவதற்கான ஒரே பொறுப்பினை ஈடேற்றுவதற்கான நோக்கு இருந்தது. இந்த சட்டம் மூலமாக அந்த நோக்கு முற்றாகவே திரிபுபடுத்தப்பட்டுள்ளது. கல்வி அனைவரதும் உரிமை என நிலவிய நோக்கினை திரிபுடுத்துதல் இதன்மூலமாக இடம்பெறுகின்றது. ஏற்கெனவே உத்தியோகபூர்வமற்றதாக இடம்பெறுகின்ற கல்விச்சிறப்புரிமை என்கின்ற நிலைமை உத்தியோகபூர்வரீதியாக அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்படப் போகின்றது.

உயர் கல்வி நிறுவகமொன்றில் கல்விக்கான சுதந்திரம் கட்டாயமாக இருத்தல் வேண்டும். இது உலகளாவிய உடன்பாடாகும். இலங்கையும் கைச்சாத்திட்டுள்ள உலகளாவிய உடன்பாடாகும். அறிவைத் தேடிச் செல்கையில் கேள்வி கேட்பதற்கான உரிமை இருத்தல் வேண்டும். புதிய அறிவு பிறப்பிக்கப்பட வேண்டுமெனில் இருக்கின்ற அறிவினை கேள்விக்குட்படுத்த வேண்டும். அதைப்போலவே அதிகார முறைமையை கேள்விக்குட்படுத்த வேண்டும். அத்தகைய கேள்விக்குட்படுத்தல் அதிகாரத்தில் இருப்பவர்களை மனம் நோகடிக்கின்ற கேள்விக்குட்படுத்தலாக அமைகின்றபோதிலும் அதனை மேற்கொள்வதற்கான சுதந்திரம் உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கவேண்டும். அவ்வாறு இடம்பெற்றால்தான் சமூகமொன்றை மாற்றக்கூடிய அறிவு உற்பத்தி செய்யப்படும். கல்விச்சுதந்திரம் பல்கலைக்கழகத்திற்கு அத்தியாவசியமான ஒன்றாகும். மாணவர்களுக்கு போன்றே ஆசிரியர்களுக்கும் அது சமமான முக்கியத்துவம் வகிக்கின்றது. ஆனால் அப்படிப்பட்ட கலாசாரமொன்று இராணுவங்களில் இல்லை. இராணுவம் இருப்பது எதையுமே கேள்விக்குட்படுத்துவதற்காக அல்ல. மேலிருந்து வருகின்ற கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவே. அத்தகைய இராணுவ கலாசாரத்திற்குள் இருக்கின்ற உயர்கல்வி நிறுவகமொன்றிலிருந்து கல்விச் சுதந்திரத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது? கல்விச் சுதந்திரமற்ற உயர்கல்வியொன்றின் தரம் எத்தகையது? கல்விப் பாடநெறிகள் எப்படிப்பட்டவையாக அமையும்? அத்தகைய நிறுவனத்திற்கு எத்தகைய தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்?

இந்த சட்டத்தின் மூலமாக இடம்பெறுவது மற்றுமொரு கல்வி நிறுவகத்தை ஆரம்பிப்பதோ இராணுவத்திற்கு கல்வி வழங்குகின்ற நிறுவனமொன்றை ஆரம்பிப்பதோ அல்ல. அதற்கு அப்பால்சென்ற நோக்கங்கள் இருக்கின்றன. மிகவும் சிரமப்பட்டு இவ்வளவு காலமாக பாதுகாத்த கல்விச் சுதந்திரம், கல்வி நோக்கம் ஆகிய அனைத்தையும் திரிபுபடுத்துகின்ற சட்டமொன்றுதான் சமர்ப்பிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் இருக்கின்ற ஏனைய உறுப்பினர்களிடம் நான் பேட்பது எமக்கு மரபுரிமையான கல்வித் திட்டத்தை அழிக்கின்ற இந்த சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் உடன்படப் போகிறீர்களா? கல்வியை அழிக்க பங்களிப்புச் செய்தவர்களாக வரலாற்றில் பெயர் பொறிக்க விரும்பினால் அதற்கு கையை உயர்த்துங்கள். மனச்சாட்சி இருந்தால் எவ்விதத்திலும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக கையை உயர்த்த இயலாது. கையை உயர்த்தவேண்டாமென்ற வேண்டுகோளினை விடுக்கிறேன். 

பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி திருமதி ஹரினி அமரசூரிய

(ஊடக சந்திப்பு – தேசிய மக்கள் சக்தி – 2021 .07.06
பத்தரமுல்ல, மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில்)

You may also like

Leave a Comment