Home News Tamil சனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கான ஒரு போராட்டம் நிலவவேண்டும்

சனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கான ஒரு போராட்டம் நிலவவேண்டும்

by Ravinath Wijesekara

ஐக்கிய இடதுசாரி அமைப்பின் சக்தியின் செயலாளர் லால் விஜேநாயக்க

இன்றளவில் உருவாகியுள்ள நெருக்கடி கொவிட் பெருந்தொற்று காரணமாக தோன்றியதொன்றல்ல. 73 வருடங்களாக இந்த நாட்டின் ஆட்சியார்கள் கடைப்பிடித்த பொருளாதார அரசியல் கொள்கைகளின் பெறுபேறாகும். இதிலிருந்து மீட்புப்பெற வேண்டுமாயின் இந்த பாதையிலிருந்து நாங்கள் விலகவேண்டும். அவ்வாறு மாற்றுவதற்கான திடசங்கற்பமும் ஆற்றலும் உள்ளவர்கள் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியது அவசியமாகும். பொருளாதார நெருக்கடி முற்றிப்போவதால் சமூக நெருக்கடியொன்று உருவாகி இருக்கின்றது. ஊழல் கடுமையாக பரவியுள்ளமை, அந்த ஊழல் தமது ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படுதல், எந்தவிதமான நம்பிக்கையும் இன்மை என்பவை மக்கள் அனுபவித்து வருகின்ற பாரதூரமன சமூக நெருக்கடியாகும்.

மாற்று வேலைத்திட்டமொன்று ஊடாக மாத்திரமே இத்தகைய நெருக்கடிகளுக்கு தீர்வுகளைக் கண்டறியவேண்டும். நாட்டின் வளங்களை விற்பனை செய்கின்ற பயங்கரமான கொள்கைகளுக்குப் பதிலாக மாற்று வேலைத்திட்டத்தை அமுலாக்குதல் வேண்டும். பொருளாதார நெருக்கடியின் பெறுபேறாக இன்று மக்களின் சனநாயக உரிமைகள் கத்தரிக்கப்பட்டு வருகின்றன. அதனால் இந்த நாட்டை கட்டியெழுப்புகின்ற போராட்டமானது சனநாயகம் மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற போராட்டங்கள் இரண்டினதும் ஒருங்கிணைப்பாகும். இன்று ஒவ்வொரு நிறுவனமும் இராணுவமயமாக்கலுக்கு இலக்காக்கப்பட்டு சனநாயம் சுருட்டிக்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்களின் எதிர்ப்பினை அடக்கியாள்வதற்கான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. சனநாயகத்திற்கான போராட்டத்தை பொருளாதாரத்தை மாற்றியமைப்பதற்கான போராட்டத்திலிருந்து மாற்றியமைக்க முடியாது. எனவே சனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் மாற்றியமைத்து புதிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒருங்கிணைய வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த பயணத்தை தொடரவேண்டும். சனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்காக ஒரே போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். அதற்கான ஒன்றுசேருமாறு நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

தேசிய மக்கள் சக்திபிற்றகோட்டே சோலீஸ் வைபவ மண்டபத்தில் ….. 2021.08.01

You may also like

Leave a Comment