Home News Tamil சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வாக அமைய தேசிய மக்கள் சக்தி தயார்…

சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வாக அமைய தேசிய மக்கள் சக்தி தயார்…

by Ravinath Wijesekara

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் பேராளர் மாநாட்டினை எதிர்வரும் 20 ஆந் திகதி  ஸ்ரீ ஜயவர்தனபுர கொட்டே மொனாக் இம்பீரியல் கருத்தரங்கு மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம். எம்மனைவருக்கும் தெரியும் இன்றளவில் சனாதிபதியின் பதவிக்காலம் இரண்டு வருடங்களை கடந்து பாராளுமன்றத்தின் காலம் ஒரு வருடத்தைக் கடந்துள்ளது.  சனாதிபதி தேர்தலில், பாராளுமன்ற தேர்தலில்  அந்த ஆட்சிக்குழு நாட்டுக்குப் பல வாக்குறுதிகளை அளித்தது. சட்டத்தின் ஆட்சியையும் ஆதிக்கத்தையும் பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்தியை எற்படுத்துதல், கமக்காரர்களுக்கு மானியம் வழங்குதல், இலட்சக் கணக்கில் தொழில்களை உருவாக்குதல் போன்ற நடைமுறைச்சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளைக்கூட மக்களுக்கு கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் மிகவும் குறுகிய காலத்தில் படுவேகமாக மக்களின் வெறுப்பிற்கு இலக்காகி இருக்கிறார்கள்.  அதற்கான பிரதான அடிப்படையாக அமைவது  பொருளாதார நெருக்கடியாகும்.

எமது வரலாற்றில் தோன்றியுள்ள மிகவும் ஆழமான நெருக்கடியை பொருளாதாரம் சந்தித்துள்ளது.  ஊடகங்கள் வாயிலாக அறிக்கையிடுகின்ற வகையில் அத்தியாவசிய பண்டங்களை உள்ளடக்கிய 1,500 இற்கு மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. வெளிநாட்டுக் கடன் தவணைகளைக்கூட செலுத்த முடியாத நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து நிலவுகின்றது. அத்தியாவசிய பண்டங்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு பாரியளவில் விலைகள் அதிகரித்துள்ளன. பலவிதமான இறக்குமதி மட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது. கமக்காரர்களுக்கு உரிய தரத்திலான உள்ளீடுகளை வழங்குவதில் தோல்விகண்டுள்ளது.  சமூகத்தின் ஒவ்வோர் அடுக்கிலும் உள்ள ஆட்கள் தற்போது இந்த நிலைமைகளை அனுபவித்து வருகிறார்கள். இதனால் நாட்டு மக்கள் புதிய மாற்றமொன்றை எதிர்பார்த்து பேசத் தொடங்கி இருக்கிறார்கள். கொவிட் பெருந்தொற்று நிலையிலும்கூட மோசடி – ஊழல் புரியப்பட்டுள்மை வெளிப்பட்டுள்ளது. பசளைப் பிரச்சினையை தீர்ப்பதற்காக எடுத்த தீர்மானங்கள் மோசடி – ஊழல்களால் நிரம்பி வழிகின்றன. சீனி வரி மோசடியை உள்ளிட்ட பல வரி மோசடிகள் புரியப்பட்டுள்ளன. இதனால் எமது நாட்டு மக்கள்  மோசடி – ஊழல்கள் மற்றும் விரயமற்ற ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள். அரச நிறுவன முறைமை வினைத்திறனற்றுப்போய் பகிரங்கத் தொழில் முயற்சிகள் பாரிய நட்டமடைகின்ற நிலைமையை அடைந்துள்ளன.  அரச ஆதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உலகில் பலவிதமான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு மண்டியிட்டு கடனெடுக்க நேர்ந்துள்ளது. எல்லாவிதத்திலும் தோல்விகண்ட நாடொன்று எஞ்சியுள்ளது.

பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலைவிட பிரச்சினைகளிலிருந்து மீட்புபெறுவதற்கான தீர்வே தற்போது மக்களுக்கு அவசியமாகியுள்ளது. மரபுரீதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து  அல்லது  ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து எதிர்பார்த்த பதில்களை தற்போது எதிர்பார்ப்பதில்லை. அரசாங்கம் தொடர்பில் விரக்தியடைந்துள்ளதோடு அதனையொத்ததாக ஐக்கிய தேசிய கட்சியையும் அதிலிருந்து சிதைந்துசென்ற குழுவையும் நிராகரித்துள்ளார்கள்.  மக்கள் புதிய தீர்வுப் பாதைக்காக அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள்.  மரபுரீதியான அதிகாரப் பரிமாற்றத்திற்குப் பதிலாக புதிய பாணியிலான  அதிகாரப் பரிமாற்றம் பற்றி அனைவரும் பாரிய தாகத்துடன் இருக்கிறார்கள். மோசடிகள் – ஊழல்களற்ற,   அவர்களின் ஆதனங்களை பறிமுதல்செய்து தண்டிக்கின்ற, கிராமிய மக்களின் மக்கள் வாழ்க்கையை உயர்த்தி சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்து  அமைதியான இராச்சியமொன்றை உருவாக்கும்  தாகத்தால் பொதுமக்கள் பரிதவிக்கிறார்கள். ஒரு கட்சி நிராகரிக்கப்படுகையில் மற்றைய கட்சியை ஆரத்தழுவிக் கொள்கின்ற வரலாறுதான் இதுவரை எமது நாட்டில் நிலவியது. புதிய ஆட்சியாளர் நெருக்கடிக்குத் தீர்வுதருகின்ற  சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற சக்தியாக மாற தேசிய மக்கள் சக்தி தயார்.  மரபுரீதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கும் மண்டைகள் மாற்றப்படுவதற்கும் அப்பால்  நகர்கின்ற கொள்கைரீதியான மாற்றத்திற்காக மக்கள் அணிதிரள்கிறார்கள்.  சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற சவாலை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்.

சட்டத்தரணிகள் சங்கம், பொறியிலாளர்கள், விவசாய விஞ்ஞானிகள், கிராமிய மக்கள், தொழிற் சங்கங்கள் என்பவற்றை இணைத்துக்கொண்டு நாங்கள் கீண்ட உரையாடலை மேற்கொண்டோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது ஒவ்வோர் ஆளினதும் தனித்தனி  அபிலாசையல்ல. இந்த நாட்டில் சாதகமான மாற்றமொன்றை எதிர்பார்க்கின்ற சக்திகளை ஒரு இடத்திற்கு அழைப்பிக்க வேண்டும். அந்த நிலையம்தான் தேசிய மக்கள் சக்தி.  இதுவரை மேற்கொண்ட உரையாடல்கள் மூலமான வேலைத்திட்டத்தையும் அந்த குழுவினை அரங்கேற்றுவதையும் அடிப்படைக் குறிக்கோளாகக்கொண்டு தேசிய மக்கள் சக்தியின் பேராளர் மாநாட்டினை 20 ஆந் திகதி நாங்கள் நடாத்துகிறோம். சுகாதாரக் காரணங்களின்பேரில் அனைவருக்கும் அழைப்புவிடுக்க முடியாதுள்ளது. எனவே அந்தந்த துறைகளிலிருந்து இனங்கண்ட பிரதிநிதிகள் குழுக்களை அழைப்பித்து இந்த மாநாடு நடாத்தப்படுகின்றது.  சனவரி மாதத்தில் மாவட்ட மட்டத்தில் தலைமைத்துவ சபைகளை அறிமுகஞ்செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.  மேல் மட்டத்தில் இருந்து சேர்கின்ற குழுக்களால் மாத்திரம் இந்த சவாலை வெற்றிகொள்ள முடியாது. இலட்சக்கணக்கில் அணிதிரட்டினால் மாத்திரமே  இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களைப்போன்றே  கிராமிய, நகர மற்றும் அனைத்து துறைகளையும்சேர்ந்த   மக்களை நாங்கள் ஒரு இடத்திற்கு அழைக்கிறோம். நகர்சார் ரீதியாக மாத்திரமல்ல கிராமிய ரீதியாகவும்  மக்களை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. மக்களுடன் உரையாடலில் ஈடுபடுதல், கருத்துக்களை பரிமாற்றிக்கொள்ளல் ஊடாக பாரிய மக்கள் இயக்கமொன்றாக மாற்றத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இற்றைவரைபயணித்த அழிவுப் பாதைக்கு பதிலாக தீர்வுகளை தேடுகின்ற பாதைக்காக நாங்கள் மக்களை அழைக்கிறோம்.

இந்த பிராந்தியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு மாத்திரம் மேலாக இருக்கின்ற நிலைமைக்கு நாடு இழுத்துப்போடப்பட்டுள்ளது…..

சட்டவாதி திரு. லால் விஜேநாயக்க

73 வருடங்களாக சேனாநாயக்க குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம், ஜயவர்தன தற்போது ராஜபக்ஷ எந்தவிதமான மாற்றமுமற்ற அரசியலை நாட்டில் அமுலாக்கி இருக்கிறார்கள். அதன் பெறுபேறாக எமது நாடு இன்றளவில் இந்த பிராந்தியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு மாத்திரம் மேலாக இருக்கின்ற நிலைமைக்கு இழுத்துப்போடப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றவேளையில் ஜப்பானுக்க மாத்திரம இரண்டாவதாக அமைகின்ற நிலையில் இருந்தோம். பொருளாதார ரீதியில் சீரழிந்து, மனித உரிமைகள் விடயத்தில் மிகவும் கவலைக்கிடமான நிலைமையை அடைந்துள்ளோம். பொலிஸ் கட்டுக்காவலில் உள்ளவர்கள், சிறைக்கைதிகள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதைப்போலவே பாராளுமன்ற விவாதங்கள் மூலமாக  எந்தளவு சீரழிவு இடம்பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது. எம்மெதிரில் இருக்கின்ற பிரதானமான சவால் சீரழிந்த நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதுதான். எந்தளவுக்கு சீரழிந்துள்ளது எனக் கூறுவதாயின் எமது நாட்டின் கல்விகற்ற திறமையான இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்காக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து மீட்புபெறுவதற்காக மரபுரீதியான வழிமுறையிலிருந்து படிப்படியாக வித்தியாசமான வேலைத்திட்டமொன்றை அமுலாக்க வேண்டும். இந்த 20 ஆந் திகதி உரையாடலுக்கான வேலைத்திட்டமொன்று  மக்களிடம் முன்வைக்கப்படுவதோடு  எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தலைமைத்துவ சபையொன்றும் பிரகடனஞ் செய்யப்படும். இலங்கை வரலாற்றில் அத்தகைய தருணமொன்று இடம்பெறுகின்ற முதலாவது சந்தர்ப்பம் அதுதான். மக்களுக்கு அதிகாரத்தைக் கையளிப்பதன் மூலமாக நாட்டைப் பேணிவருவதற்கான வேலைத் திட்டத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.

நாட்டுக்கு அவசியமான தீர்வுக்கட்டமான மாற்றத்தை ஏற்படுத்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்….

கலாநிதி திருமதி ஹரினி அமரசூரிய

பல்வேறு மக்கட் பிரிவுகளுடன் கலந்துரையாடி  நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்காகவே நாங்கள் ஆரம்பத்திலிருந்தே முன்னுரிமை வழங்கினோம். கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் நிலவிய நிலைமைகள் துரிதமாக மாற்றமடைந்தன. இக்காலப்பகுதிக்குள் மனித வாழ்க்கை எவ்வளவு சிரமமானது மற்றும் உறுதியற்றது என்பது தெளிவானது. அழுது புலம்பி, பிரச்சினைகளால் பிழியப்பட்டு , விரக்தியால் பாதிக்கப்பட்டுள்ள இவையனைத்தையும் கூறுவதற்கு ஒரு இடமில்லாத நிலையை மக்கள் அடைந்துள்ளார்கள். கொவிட் பெருந்தொற்றின் மத்தியில்கூட நிலவுகின்ற மட்டுப்பாடுகளுக்குள் மக்களை நாட்டை மாற்றியமைக்கின்ற பாதையில் அணிதிரட்டுவதற்காக எமது பேராளர் மாநாடு நடாத்தப்படுகின்றது. கூட்டு முயற்சியைக்கொண்ட தீர்வுக்கட்டமான மாற்றமொன்று அவசியம்.   பொருளாதாரச் செயற்பாங்கினைப் போன்றே அரசியல் செயற்பாங்கிலிருந்தும் தவிர்த்துச்செல்கின்ற நிலைமைக்கு மக்கள் மாறியுள்ளார்கள். இதனால் மக்களை இந்த செயற்பாங்கில் மீண்டும் பங்கேற்கச் செய்வித்தல் எமது நோக்கமாகும். உண்மையான சனநாயக செயற்பாடொன்று இந்த நாட்டுக்கு அவசியமாகும். எனவே எங்களுடன் ஒன்றுசேருமாறு  அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். எமக்கிடையில் வாதப்பிரதிவாதங்கள், வித்தியாசங்கள் நிலவலாம். ஆனால் எம்மால் உடன்படத்தக்க  மற்றும் ஒன்றுசேரக்கூடிய பொதுவான இடங்கள் இருக்கின்றன. அந்த நம்பிக்கையின்பேரில்  இந்த நாட்டு மக்களிடம் மீண்டும் எதிர்பார்ப்பு  தளிர்விட,  நாட்டை மாற்றியமைக்க முடியுமென்ற நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்காக இந்த மாநாடு நடாத்தப்படுகின்றது. அதற்காக அனைவரையும் ஒன்றுசேர்க்கின்ற முதலாவது அடியெடுப்பு 20 ஆந் திகதி நடைபெறும்.

நாட்டை விட்டுச்செல்லாமல் நாட்டைக் கட்டியெழுப்பிட ஒன்றுசேருமாறு இளைஞர் தலைமுறையினரிடம் கேட்டுக்கொள்கிறோம்…

டாக்டர் திரு. நிஹால் அபேசிங்க

எமது நாடு மிகவும் தீர்வுக்கட்டமான ஒரு தருணத்திலேயே இருக்கின்றது. 1505 இல் போரத்துக்கேயர்கள்  எமது நாட்டை ஆக்கிரமித்து  கரையோரப் பிரதேசங்களை முழுமையாக அவர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தார்கள். அதற்கு 150 வருடங்களுக்குப் பின்னர் ஒல்லாந்தர்களின் ஆக்கிரமிப்பு வந்தது.  அதன் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் எமது நாட்டை முழுமையாகவே கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்கள். இந்த இரண்டு பாசறையினரும் நாட்டை ஆட்சிசெய்த பின்னர் அந்த நிலைமைக்கே கொண்டுவந்துள்ளதுதான் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.  இவர்கள் பல்வேறு நாடுகள் மற்றும் கம்பெனிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைகள் காரணமாக வருங்காலத்தில் பாரிய அனர்த்தம் ஏற்படுவது தெளிவானதாகும்.  அதனால் தேசிய புத்திஜீவிகள் அமைப்பு என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் முன்வைத்துள்ள வேலைத்திட்டம் மக்களின் உரையாடலுக்கு இலக்காக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த சனாதிபதி தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே வாக்குகளை அளித்தார்கள்.  பல்வேறு சிறப்புரிமைகள், தொழில்களை பெற்றுக்கொள்ளல், வீடுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த இரு தரப்பினருக்கும் வாக்களித்த பெருந்தொகையானோர் இருந்தார்கள். அதேவேளையில் அரசாங்கத்திடமிருந்து ஒன்றையுமே எதிர்பார்க்காமல்  இந்த நாட்டைப் பாதுகாத்துக்கொள்ளும் எதிர்பார்ப்புடன்  கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஏனைய பிரிவினருக்கும் வாக்குகளை அளித்தார்கள். சுதந்திரமான அடிமைத்தனமற்ற வாழ்க்கையை பாதுகாப்புமிக்கதாக கழித்திடுவதற்காக வாக்குகளை  பாவித்த மக்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த குழுவினரும் அவர்களிடம் எந்தவிதமான வேலைத்திட்டமும் கிடையாதென்பதை விளங்கிக்கொண்டுள்ளார்கள். தொடர்ந்தும் இந்த நாடு அதல பாதாளத்திற்குச் செல்வதைத் தடுக்க இந்த நாட்டை நேசிக்கின்ற அனைவரும் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேர்ந்து வருகிறார்கள்.  எந்தவொரு நேரத்திலும் எந்தவோர் அர்ப்பணிப்பையும்செய்து இந்த மக்களுடன் முன்நோக்கிச்செல்ல நாங்கள் தயார் என்பதை வலியுறுத்துகிறோம். அதைப்போலவே இளைஞர் தலைமுறையினரிடம் இந்த நாட்டைவிட்டுச் செல்லவேண்டாமென மன்றாடுகிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேருமாறு அழைப்பு விடுக்கிறோம். இதனை உங்களின் பணியாக  மாற்றிக்கொள்ளுமாறு மன்றாடுகிறோம்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்

மரபுரீதியான கட்சிகள் ஒன்றுசேர்ந்து மேடையில் கைகோர்த்து அரசாங்கமொன்றை அமைத்துக்கொண்டு பதவிகளையும் சிறப்புரிமைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அதுதான் மரபுரீதியான கூட்டணிகளின் செயற்பாடு, எனினும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கட்சிகள், ஆட்கள் மாத்திரமன்றி  இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல் பற்றிய நேர்மையான உணர்வுபடைத்த ஊழலற்ற மக்களை உள்ளடக்கியதாகும். தேசிய மக்கள் சக்திக்கு வெளியில் அத்தகைய பெருந்தொகையானோர் இருக்கிறார்கள். அத்தகைவர்களுடன்தான் நாங்கள் கூட்டமைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறோம். பிரதானமானவை எனக் கூறப்படுகின்ற இரண்டு பாசறைகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவிதமான  உடன்பாடும் கூட்டிணைதலும் தேசிய மக்கள் சக்திக்கு கிடையாது. தேசிய மக்கள் சக்தி தயாரித்துள்ள அரசியல் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற, ஊழலற்ற, நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புச் செய்யக்கூடிய எந்த ஒருவரும் பிரவேசிக்ககூடிய நிலையமொன்றைாக நாங்கள் இந்த மத்தியநிலையத்தை கட்டியெழுப்பி இருக்கிறோம்.  அதாவது மக்கள் விடுதலை முன்னணியின் வீட்டுக்குள்ளே வருமாறு கூறவதல்ல. நாங்கள் அனைவரும் ஒன்றுசேர முடியும். எமது நோக்கங்களை ஏற்றுக்கொள்கின்ற அமைப்புக்களையும் ஆட்களையும் சேர்த்துக்கொள்ள நாங்கள் தயார்.

நாங்கள் எல்லாவற்றையும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டியதில்லை.  நீதிமன்றத்திற்கு மேலும்  பல வேலைகள் இருக்கின்றன. எல்லாவறையும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கின்ற மரபு அவ்வளவுதூரம் நல்லதல்ல.  இந்த நாட்டு மக்கள் அனைத்தையும் பொறுப்பேற்க வேண்டும். யுகதனவி உடன்படிக்கை பற்றிய பிரச்சினை மக்களின் நீதிமன்ற முறைமையாலேயே தீர்க்கப்படவேண்டுமென நாங்கள் நம்புகிறோம். அரசியலமைப்புடன் அமைந்தொழுகுகின்றதா என்பதை விசாரித்தறிவது  மாத்திரமே நீதிமன்றத்தினால்  மேற்கொள்ப்படுகின்றது. இதற்கு வெளியில் பொருளாதார, அரசியல் நிபந்தனைகள் பல இருக்கின்றன.

You may also like

Leave a Comment