Home News Tamil தேசிய மக்கள் சக்தி புதிய மூச்சு உள்ள இடமாகும்

தேசிய மக்கள் சக்தி புதிய மூச்சு உள்ள இடமாகும்

by Ravinath Wijesekara

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி

மனிதப் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளின்கீழ்  நான் உரைநிகழ்த்த எதிர்பார்க்கிறேன். வாழ்க்கை பற்றிய பயத்துடன்  எமதுமகங்களின் அரைவாசிமறைக்கப்பட்டுள்ள காலத்தில்,  எமது வீடுகளுக்கு வெடிக்கின்ற எரிவாயு வருகின்ற காலத்தில், எமது வீடுகளில் பிள்ளைகள் கற்பதற்காக மரங்கள் மீது. கூரைகள் மீது, மலைகள் மீது ஏறுகின்ற காலத்தில், போஷாக்குமிக்க உணவுவெளையொன்றைக் கொள்வனவுசெய்ய முடியாத அளவுக்கு விலைகள் உயர்வடைந்துள்ள காலத்தில் மனிதப் பாதுகாப்பு என்றால் என்ன என்பது பற்ச் சிந்திப்பது மிகவும் முக்கியமானது. தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த சிறப்பு தலைப்பு பற்றி விசேட கவனஞ் செலுத்துகிறோம்.  எமது நாட்டின் ஆட்சியாளர்கள் பாதுகாப்பு பற்றி அடிக்கடி பேசிவருகிறார்கள்.  ஆனால் அவர்கள் பாதுகாப்பு எனப் பேசிவருவது  அரசாங்கத்தின் பாதுகாப்பு மாத்திரமே என்பது மக்கள் நாளுக்குநாள் அனுபவித்து வருகின்ற துன்பங்களிலிருந்து எமக்கு புலனாகின்றது. எங்களுக்கு மனிதப் பாதுகாப்பு அவசியமாகும். மனிதப் பாதுகாப்புமிக்க நாடு, பாதுகாக்கின்ற நாட்டை உருவாக்குகின்ற பயணத்தைத்தான் நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.  நவீன சமூகத்தில் பல பாதுகாப்பு திரிபுருக்கள் இருக்கின்றன. ஒன்று தேசிய பாதுகாப்பு. வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடுகளிலிருந்து எமது நாட்டைப் பாதுகாத்துக்கொள்வது முக்கியமானதாகும்.  அது வெறுமனே இராணுவத்தைக் கட்டியெழுப்புவது மாத்திரமல்ல. சர்வதேச உறவுகள்  பற்றிய புலனுணர்வு ஊடாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். நாங்கள் வசிக்கின்ற அரச கட்டமைப்பினை  பாதுகாத்துக் கொள்ளவேண்டியது முக்கியமானதாகும். அரசாங்கத்தின் பாதுகாப்பினை எடுத்துக்கொண்டால் அது முக்கியமானதாகும்.  அது மனிதப் பாதுகாப்புடன் ஒத்தவரத்தக்கதாக விரிவடைந்து அமைத்துக்கொள்ளப்படல் வேண்டும்.

ஆனால் இவையனைத்தும் இருந்தாலும்  மனிதப் பாதுகாப்பு இல்லாவிட்டால் அந்த நாட்டினை முன்னேற்றமடைந்த நாடெனக் கூறிவிட இயலாது. எமது நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன், சந்தோஷமாக இல்லாவிட்டால் அதில் பயனில்லை.  மனிதப் பாதுகாப்பு மிகவும் நன்றாக ஒளிரும் இடமே மனித வாழ்க்கை. நாங்கள் தேசிய மக்கள் சக்தி என்றவகையில் உணவில் பாதுகாப்பான, கல்வியில் பாதுகாப்பான, சுகாதாரத்தில் பாதுகாப்பான ஒரு நாட்டை உருவாக்கவே திட்டமிடுகின்றோம். உளரீதியாக பாதுகாப்பான உடல்ரீதியாக பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதாகும். அதோ அத்தகைய ஒரு நாடுதான் மனிதப் பாதுகாப்புமிக்க நாடு எனக் கூறப்படுகின்றது. அவ்வாறான ஒரு நாட்டின் மக்கள் ஆழமான  மனித விழுமியங்களை மனதில் தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அத்தகைய ஒரு நாட்டின் மக்கள் மனித உணர்வகளால் பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள். அத்தகைய ஒரு நாட்டில் மக்கள் ஒருவருக்கொருவர் மனித கௌரவத்துடன் வாழ்கிறார்கள். அத்தயை ஒரு நாட்டு மக்கள் அத்தகைய ஆழமான சிந்தனை கொண்டுள்ளார்கள். ஆக்கமுறையான சிந்தனையில் ஈடுபடுகிறார்கள். அர்த்தமுள்ள  கலை இரசனையை அனுபவிக்கிறார்கள். அர்த்தமுள்ள பொழுதுபோக்கு வாழ்க்கையை கழிக்கிறார்கள். சுற்றாடல் விலங்குகளுடன் சகவாழ்வு வாழ்வதற்காக இடையறாத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அத்தகைய ஒரு நாட்டில் ஆண்கள் மாத்திரமல்ல பெண்களும் பாதுகாப்பானவர்களே.  அத்தகைய ஒரு நாட்டில் தாய்மார்கள் மாத்திரமல்ல மகள்மார்களும் பாதுகாப்பானவர்களே. அத்தகைய நாட்டில் பிள்ளைகள் பாதுகாப்பானவர்கள். இனத்துவ பெரும்பான்மையினர் மாத்திரமன்றி  சிறுபான்மை இனக்குழுவினரும் பாதுகாப்பானவர்கள். அத்தகைய நாட்டில் ஒரு கலாசாரம் மாத்திரமன்றி அனைத்துக் கலாசாரங்களும் பாதுகாப்பானவையே. அனைத்து கலாசாரங்களுடனும் ஒருவரோடொருவர் உரையாடலில் ஈடுபடுகிறார்கள். உண்மையாகவே மனிதப் பாதுகாப்பு நிலவுகின்ற ஒரு நாட்டின் நிலைமை இதுதான்.  மனிதப் பாதுகாப்பு நிலவுகின்ற ஒரு நாட்டில் அனைவருக்கும் சார்புரீதியில் சமமான பொருளாதாரப் பலம் இருக்கவேண்டுமென நாங்கள் நம்புகிறோம்.  அத்தகைய ஒரு நாட்டை எம்மால் வெளிநாட்டிலிருந்து கொண்டுவர இயலாது.  ஆனால் எமது நாட்டை அத்தகைய ஒரு நாடாக மாற்ற இயலுமென்பதை நாங்கள் அறிவோம். அந்த மாற்றம் கூட்டான ஆர்வத்துடன் செய்யப்படவேண்டிய மாற்றமாக அமைதல் வேண்டும். அதற்காகத்தான் நீங்கள் அனைவரும் இங்கு குழுமி இருக்கிறீர்கள்.  அந்த பணிக்காகவே நாங்கள் அடுத்த மாதத்தில் இருந்து மக்கள் மத்தியில் செல்ல எதிர்பார்க்கிறோம்.

மனிதப் பாதுகாப்புமிக்க ஒரு நாட்டை எம்மால் தனித்து உருவாக்கிட இயலாது. நாட்டு மக்கள் உக்கிப்போன அரசியல் கட்சிகளின் பாதகத்தன்மையின் இருளில் இருந்து வெளியில் வந்து புதிய மூச்சினை எடுக்கவேண்டி உள்ளது.  நாங்கள் புதிய மூச்சு உள்ள இடமாகவே தேசிய மக்கள் சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சகோதரத்துவத்தின்  மேசையைச் சுற்றி சமமானவர்;களாக அமர்ந்து  உணவு உட்கொண்டு நாங்கள் உரையாடுவோம்.   கருத்தியல்சார்ந்த பிரிவினைகளின் படுகுழிக்கு மேலாக சகோதரத்துவத்தின் சூடுபிடித்த கரங்களால் நாங்கள் ஒருவரோடொருவர் இணைவோம்.  அதற்கான காலமே தற்போது கனிந்துள்ளது.   நோய்ப் படுக்கையில் வீழ்ந்த நாட்டை நாட்டு மக்களின் சகோதரத்துவத்தின் சக்தியால் மாத்திரமே மீட்டெடுக்க முடியும். இது அதற்கான காலமாகும். நான் பேசுகின்ற இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ளது எதிர்பார்ப்பாகும். எதிர்பார்ப்பு என்பது தாங்கிக்கொள்ள முடியாத யதார்த்தத்திற்கு எதிராக எமது உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து எழுகின்ற வெளிப்பாடாகும்.  அந்த எதிர்பார்ப்பு எம்மில் தனித்தனியாகவன்றி  கூட்டாக வெளிப்பட்ட தினத்தில்  இந்த நாட்டை மாற்றியமைப்பதை  எவராலும் நிறுத்திவிட இயலாது.  அதனால்த்தான் நாங்கள் தேசிய மக்கள் சக்தியை  உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பொருளாதார நெருக்கடியொன்றுக்குள் விழுந்துள்ளோம். 

அது மாத்திரமல்ல, நாங்கள் ஒரு நாடு என்றவகையில் கடுமையான ஆன்மீக நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளோம். இந்த ஆன்மீகரீதியான நெருக்கடி கவலைக்கிடமானவகையில் வெளிப்படுகின்ற இடம்தான் இந்த நாடு இவ்வளவுக்கு வீழ்ந்துள்ள நிலையிலும்  தனித்தனியாக முன்னேற்றமடைய, வெற்றியிட்ட இயலுமென்ற  தன்னல உணர்வு. அத்தகைய தனிப்பயனாக்கப்பட்ட மனோபாவங்கள் இருக்குமாயின்  நாட்டின் அனைத்து மக்களினதும் நல்ல இதயங்களில் நல்ல  நரம்புகளுடன் உரையாடக்கூடிய சக்தியே தேசிய மக்கள் சக்தியாகும்.  இந்த நாட்டில் நல்லதை பிரார்த்திக்கின்ற  மனிதர்களின் இதயங்களில் நற்சிந்தனைகள் மறைந்துள்ள இடங்களை திறந்துவிடத்தான் நாங்கள் தேசிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம். நீதி, நியாயம், பொருளாதாரம், சனநாயகம் என்பவற்றின் உள்நாட்டுத் தோற்றப்பாடு ஒன்று இருக்கின்றது.  நாங்கள் அதனை உள்நாட்டுரீதியாக வெற்றிகொள்ள வேண்டும். அப்போதுதான் கல்விரீதியாக, சுகாதாரரீதியாக, மனநிம்மதிரீதியாக  மனிதப் பாதுகாப்புமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்பமுடியும். எனினும் இருபத்தோராம் நூற்றாண்டில் நாங்கள் எமது நாட்டில் மனிதப் பாதுகாப்பு எனக் காண்பது உலகில் மேலும் பிற நாடுகளில் உள்ள முற்போக்குவாத மனிதர்களின் நல்லாசி மற்றும் சகோதாரத்துவத்துடன் கட்டியெழுப்பக்கூடிய, கட்டியெழுப்பப்படவேண்டிய பாதுகாப்பு என்ற வகையிலேயே காண்கிறோம்.  சுற்றுப்புற உலகத்துடன் நீதிநியாயத்தின் அடிப்படையில் உறவுகளைப் பேணிவர நாங்கள் தயார்.  எமது அபிமானம் அழிந்துவிடாத விதத்தில் உறவுகளைப் பேணிவர நாங்கள் தயார்.

ஊழல் பேர்வழிகள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அதைப்போலவே ஊழல்பேர்வழிகளுக்கு எதிரான மக்கள் எழுச்சி எல்லா நாடுகளிலும் நிலவுகின்றது.  அதோ அவ்விதமாக தமது நாட்டில்  நீதியைக் கோரிநிற்கின்ற மக்கள் எங்கள் பயணத்தின்; சகபாடிகள்.  எனவே நாங்கள் உலகத்தை விளித்துக் கூறுவது எங்களுக்கு உதவுங்கள். எங்களுடன் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வாருங்கள். எமது சிறிய  மிளகு விதைக்கு செலுத்துகின்ற விலை, எமது கிராமங்களில் வறிய குடிசைகளுக்குச் சென்று அந்த வீடுகளில் உள்ள பிள்ளைகளை எடுத்துக்கொண்டு பாடசாலைக்குச் செல்வதாக  கூறக்கூடிய அரசியல் இயக்கமொன்று எங்களுக்குத் தேவை. அதனைத்தான் நாங்கள் கட்டியெழுப்பி வருகிறோம். எங்கள் தேயிலைக்கு நீங்கள் செலுத்துகின்ற விலை, எமது கிராமங்களுக்குச் சென்று அந்த வீடுகளில் உள்ள பிள்ளைகளை  நோய்நொடிகளிலிருந்து பாதுகாப்பதாக  உலகத்திற்கு எடுத்துக்கூறக்கூடிய அரசியல் இயக்கமொன்று எங்களுக்குத் தேவை.  தேசிய மக்கள் சக்தி அந்த இயக்கமாக மாறுமென்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது. தேயிலை, மிளகுஅளவிலாள சிறிய கம்பியூட்டர் சிப்ஸ் தயாரிக்கக்கூடிய மக்கள் எமக்கு இருக்கிறார்கள். அந்த மக்களை உருவாக்க எமக்கு உதவுமாறு எம்மால் உலகத்திற்கு எடுத்துரைக்ககூடிய ஆட்சியொன்று எமக்கு அவசியமாகும். அந்த ஆட்சியைத்தான் நாங்கள் கட்டியெழுப்பி வருகிறோம். 

உலக வல்லரசு நாடுகளின் அரசியல் மனச்சாட்சி அவ்வளவு எளிதில் உருகமாட்டாதென்பதை நாங்கள் அறிவோம்.  என்றாலும் உலகம் பூராவிலும் நீதி, நியாயத்திற்கு மதிப்பளிக்கின்ற பிரசைகள் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். உலகத்தில் பெரும்பாலான மக்கள் வறுமையிலிருந்து விடுபடுவதைக் காண விரும்புகின்ற உலகளாவிய பிரிவினரை சகோதரத்துவத்துடன்  விளிக்கக்கூடிய குழுவினவரின் கைகளில் அந்த நாட்டின் ஆட்சி நிலவவேண்டும். எங்களுக்கு டீல் வேண்டாம். எங்களுக்கு கொமிஸ் வேண்டாம். எமக்கு இந்தக் கட்டியெழுப்ப உதவுமாறு நேர்மையாக வேண்டுகோள் விடுக்கக்கூடிய ஆட்சியொன்று எமக்கு அவசியமாகும்.   எமது கூட்டு மனச்சாட்சி இறந்துவிட்டதெனில் உலக முற்போக்குவாதிகளின் மனச்சாட்சி உருகக்கூடிய விதத்தில் எம்மால் அந்த கதையைக் கூறமுடியாது.  நாங்கள் அவ்விதமாக மனச்சாட்சி மடிந்த மக்கள் அல்ல. இதைவிட சாதகமான நாடு, இதைவிட சாதகமான உலகம் பற்றிய கனவு மடிந்துபோய் விட்டதெனில் புலமைசார் வகையில் சிந்தனைரீதியாக மடிந்துவிட்ட மக்களல்ல நாங்கள்.  உங்கள் மனங்களில் இன்னமும் இருக்கின்ற நேர்மையின் நீதியின் சகோதரத்துவத்தின் உயிருடன் உரையாடவே   தேசிய மக்கள் சக்தி தோன்றியிருக்கின்றது.  தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எங்களுக்கு இந்த பெருந்தொற்றுக் காலத்திலும்கூட  வருகைதந்து, செவிமடுக்கின்ற உங்களைக் காண்கின்ற எங்களுக்கு அந்த புதிய உலகின் உயிர் துடிக்கின்ற ஓசை கேட்கின்றது.  இனிமேலும் எம்மை   எமது தனிநபர் கனவுகளில் சிறைப்படுத்தி, எமக்கு எமது வேலைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறுகின்ற பல்வேறு அரசியல் இயக்கங்கள், ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த நாட்டை அழித்தொழிக்கும் வரை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  நாங்கள் முண்டியடித்துக்கொண்டு வந்து  இந்த சபையில் இன்று இருப்பதைப் போலவே இந்த கனவை நனவாக மாற்றியமைக்க அணிதிரள்வோமாக.

You may also like

Leave a Comment