Home News Tamil நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்த்தியை தவிர வேறு பாதை கிடையாது

நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்த்தியை தவிர வேறு பாதை கிடையாது

by Ravinath Wijesekara

தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் டாக்டர் நிஹால் அபேசிங்க

பிரமாண்டமான மக்கள் சக்தியாக மாற்றுவதற்காகவே நாங்கள் தேசிய மக்கள் சக்தியை விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தேசிய நிறைவேற்றுப் பேரவையை நியமித்துக்கொண்டோம். இது ஆரம்பம் மாத்திரமே. இந்த தேசிய பேரவை அடுத்ததாக மாவட்ட பேரவைகளை தாபிப்பதில் இடையீடு செய்யும். இந்த நாட்டில் ஒவ்வொரு பிரதேச சபை, நகர சபைப் பிரிவும் கிராம அலுவலர் பிரிவும் உள்ளடங்கத்தக்கதாக நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரிவுப் பேரவைகளை  நியமிப்போம். நம்பிக்கையான நேர்மையான நல்ல மனிதர்களின் ஒதுக்கமாக இந்த பேரவைகளை நியமிப்போம். நாங்கள் இந்த நாட்டு மக்கள்மீது பரிபூரணமான நம்பிக்கை வைத்துள்ளோம்.  இந்த மக்கள்தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்குள்ள பிரதானமான வளம். இந்த மனிதவளத்தைப் பாவிப்பதுதான் அரசாங்க அதிகாரத்தை பெற்றுக்கொள்கின்ற எந்தவோர் அரசியல் குழுவிற்கும் உள்ள சவால். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது அவ்வளவுதூரம் சிரமமானதாக அமையமாட்டாதென நாங்கள் நம்புகிறோம். 

2019 இலும் 2020 இலும் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை நம்பியே வாக்களித்தார்கள். ஆனால் மிகவும் குறுகிய காலத்தில் இந்த நம்பிக்கை பாரதூரமானவகையில் வற்றிப்போய்க் கொண்டிருக்கின்றது. இந்நாட்டிலுள்ள அனைவரும் பாரதூரமான விதத்திலான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பலவற்றுக்கு உள்ளாக்கப்பட்டே கடந்த ஒரு வருடமும் 08 மாதங்களும் கழிந்தது.  தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் இந்நாட்டின் சகோதர மக்களுக்கு இது கானல் நீருக்குப் பின்னால் செல்வதாகுமென தெளிவுபடுத்த முயற்சிசெய்தோம். மக்களின் எதிர்பார்ப்பு சீக்கிரமாக மீறப்படுகின்றது என்பதாகும்.  இதனால் எம்மோடு ஒன்றுசேருங்கள் என அந்த நேரத்தில் மக்களிடம் கூறினோம். ஆனால் பெரும்பாலானோர் அந்த நேரத்தில் அந்த கோரிக்கைக்கு அவ்வளவுதூரம் செவிசாய்க்கவில்லை. அங்கு பல்வேறு மக்கட் பிரிவுகள் இருந்தன.   கல்வியறிவுடன்கூடிய தொழில் அல்லது  தொழில் முயற்சியில் ஈடுபட்டு மிகவும் நேர்மையாக இந்த  நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்பார்த்த  பாரிய குழுவினர் இருந்தார்கள். ஒருசிலர் தொழில்களைக் கைவிட்டு அரசியலில் ஈடுபட்டார்கள்.  புத்திஜீவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கோட்டாபய ராஜபக்ஷவின் குழுவுடன் இணைந்தார்கள். திருவாளர் கோட்டாபய ராஜபக்ஷ  புதிதாக அரசியலில் வந்தவர் என்பதால்  பழைய வழமையான ஊழல் செயற்பாங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த நாட்டைக் கட்டியெழுப்ப இடையீடு செய்வாரென பலரும் நம்பினார்கள்.

  ஆனால் அதன் பின்னால் சென்ற பெரும்பாலானோர் தற்போது வழிதவறி உள்ளார்கள். அதனால் அவர்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றுகின்ற தேசிய இயக்கமொன்றாக தேசிய மக்கள் சக்தியை  மாற்றவேண்டிய நிலை எங்களுக்கு எற்படுகின்றது. நாங்கள் அவர்களுக்கு எதிர்பார்ப்பு ஒன்றைக் கொடுக்கிறோம். அவர்களை நாங்கள் வென்றெடுத்து அவர்களுக்கு இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற பொறுப்பினையும் தரப்பினர்களாக மாறுகின்ற பொறுப்பினையும் கையளிக்கவேண்டும். நேர்மையான, நம்பிக்கைமிக்க  வெகுசன தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பி நாங்கள் அவர்களுக்கு இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற அரும்பணியுடன் தொடர்புகொள்ள வாய்ப்பு வழங்கவேண்டும். நேர்மையான, ஊழலற்ற, நாட்டை நேசிக்கின்ற  அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.  தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ளுமாறு இந்த நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் வசிக்கின்ற மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தேசிய மக்கள் சக்தியைத் தவிர உங்களக்கு வேறு பாதையொன்று கிடையாது.  தேசிய மக்;கள் சக்தி என்றவகையில் தற்போது ஒன்றுசேர்ந்துள்ள எங்களால் மாத்திரம் செய்யக்கூடிய பணியல்ல.  இது உங்களுடையதும் தேசமாகும்.  இது எம்மனைவரதும் தேசமாகும். தேசத்தின் பிள்ளைகளுக்காக இந்த நாட்டை எஞ்சவைக்கவேண்டும். இந்த நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும். உங்கள் பிள்ளைகள் வசிப்பதற்கான சுற்றுச்சூழலை உருவாக்கவேண்டும். நாங்கள் பல அர்ப்பணிப்புகளை செய்யவேண்டி ஏற்படும். அதற்காக உங்களின் சக்திக்கேற்றவாறு பங்களிப்புச் செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம்.  

You may also like

Leave a Comment