இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸதானிகர் மைக்கல் எபல்டன் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ம.வி.மு. தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் தோழர் விஜித ஹேரத் (பா.உ) மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் என்டா ட்ரெவலர் மற்றும் அந்த அலுவலகத்தின் கொள்கை ஆலோசகர் திருமதி. சுமுது ஜயசிங்க பங்கேற்றனர்.
அதன்போது நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி கலந்துரயாடப்பட்டதோடு தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதன்போது இரு தரப்பினருக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வினை வளர்த்துகொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.


