சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மொழிக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி
ஜன நியமு கலைஞர்கள் அமைப்பினையும் பிரதிநிதித்துவம் செய்து கட்டியெழுப்பபட்டுள்ள தேசிய மக்கள் சக்தி என்பது எனது வாழ்நாளில் கட்டியெழுப்பப்பட்ட தலைசிறந்த போராட்டக் களமாகும். அரசியல் பெருநிலமாகும். உன்னதமான நிலை, விவேகம், தொலைநோக்கு, அன்பு, மனிதத்திற்கு அபரிமிதமாக மரியாதை செலுத்துதல் ஆகிய பல பண்புகள் இதில் காணப்படுகின்றன. இலங்கையின் மிகவும் பெறுமதியான ஆண்களும் பெண்களும் அதனாலேயே இவ்விதமாக குழுமி இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் உங்களுக்கு தெளிவான செய்தியொன்றை கொண்டுவந்து ‘இந்த நாட்டை நாங்கள் மாற்றியப்போம்’ என அழைப்பு விடுக்கிறார்கள். அதற்கான பல்வேறு பூர்வாக வேலைத்திட்டங்களை நாங்கள் கடந்த தேர்தலின்போது முன்வைத்துள்ளோம்.
கொவிட் 19 இந்த நாட்டில் மிகவும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் 1948 இல் இருந்து நீல, பச்சை ஆட்சிகள் இந்த நாட்டில் நாறிப்போன நிலையில் உள்ளன. சீழ் வடிகின்ற அளவுக்கு தொற்றுக்குள்ளாகி இருக்கின்றது. கொவிட் என்பது என்ன வைரஸ் என்பதை அந்த அழிவுமிக்க அரசியலுக்குள் வாழ்வதன் மூலம் உணரமுடிகின்றது. ஏழு தசாப்பதங்களாக மக்களை நிர்க்கதி நிலைக்குள்ளாக்கி, அந்த அழிவுமிக்க நிலைமையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு நிர்ப்பந்தித்துள்ளது. கண் திறந்து செவிவழிக் கேட்டு நாங்கள் உயிர்வாழ்கின்ற தருணத்தைப் பார்த்தால் இலங்கையில் பல விடயங்கள் நடந்து வருகின்றன. நாடு பூராவிலும் இடம்பெற்று வருகின்ற எதிர்ப்புகள் இரகசியமன்று. அது வெடித்துச்சிதறுதல் வரை நகர்வது இரகசியமன்று. அது பற்றி மக்கள் ஆக்கமுறையாக சிந்திக்க வேண்டும். ஆசிரியர் – அதிபர் போராட்டம் ஒரு புறத்தில். பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்கள் முதன்மைவகித்து பல்கலைக்கழக மிலிட்டரிமயமாக்கலுக்கு எதிரான மக்கள் இயக்கத்திற்கு தலைமைத்துவம் கொடுக்கின்றன. சிசு ஜன இயக்கம் மற்றுமொரு பக்கத்தில் போராடத் தயாராகி வருகின்றது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்ற இத்தருணமாகும் வேளையிலும் நுகேகொடவில் இருந்து வாகனப் பேரணியொன்று ஆரம்பித்துள்ளது. ஏன் இவ்வாறு இடம்பெறுகின்றது? இவை பலவந்தமாக செய்யக்கூடியவை அல்ல.
அனைத்து தொழில்வாண்மையாளர்கள், மாணவ மாணவியர், பொதுமக்கள், விவேகிகள் அனைவரும் அந்த ஆட்சியை முற்றாகவே நிராகரிக்கிறார்கள். ஆசிரிய அதிபர் சம்பளப் போராட்டம் இரண்டரை தசாப்தங்களுக்கு மேற்பட்டதாகும். ஒருசிலர் கூறுகிறார் இந்த நேரத்தில் இந்த போராட்டம் தவறானதென. ஆனால் இந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட கோரிக்கை சம்பந்தப்பட்டதென்பது மிகவும் தெளிவானதாகும். இந்த துறையை பாதுகாத்துக் கொள்ளாவிட்டால் நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்கவே முடியாது. மறுபுறத்தில் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் எவ்வளவு அழிவுமிக்கது என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்காக பில்லியன் கணக்கில் அரச வங்கிகளிலிருந்து கடன் கொடுத்துள்ளார்கள். தேசிய பல்கலைக்கழக முறைமைகளை விருத்திசெய்யாமல் கல்வி வாய்ப்பினை விருத்திசெய்ய இயலாது என்பதை பெற்றோர்கள்கூட தற்போது ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் பிரிவினைகளை காரணமாகக்கொண்டு இந்த நாட்டில் இந்த அளவுக்கு இந்த படுகுழியில் கொண்டுவந்துள்ளார்கள். இந்த பிரிவினைகளைக் கொண்டதாகவே தத்தமது வேறுபாடுகளை வைத்துக்கொண்டே ஒரு இலக்கினை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். நிலவுகின்ற அரசாங்கம் இதற்கு முகங்கொடுக் தயாராக வேண்டும். பலகாலமாக பேணிவந்த அழிவுமிக்கவை வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளன.
இது அதற்கு பொருத்தமான நேரமா எனக் கேட்கவேண்டாம். நெருக்கடிகளினாலேயே வரலாற்று விடயங்கள் தெரிவுசெய்யப்படுகின்றன. இலங்கை மிகவும் பொருத்தமான இடத்திற்கு தன்னை அமைத்துக்கொண்டுள்ளது. ஏழு தசாப்தங்களாக பரம ஏழ்மைநிலைக்கு, கொள்ளையடித்தலுக்கு, மனிதத்துவதத்திற்கு எதிரான பேரழிவுக்கு இலக்காக்கப்பட்டுள்ள எனது ஒட்டுமொத்த இலங்கையரையும் பற்றிச் சிந்தித்தே நான் அவ்வாறு கூறுகிறேன். இந்த நிலைமைகளை ஆக்கமுறையானதாக மாற்றியமைக்க தேசிய மக்கள் சக்தியால் இயலும். அதன் கொள்கைப் பிரகடனத்தில் அதன் தலைசிறந்த வேலைத்திட்டம் பிரகடனஞ் செய்யப்பட்டுள்ளது. அந்த வேலைத்திட்டத்தைச் சுற்றி ஒட்டுமொத்த இலங்கையரையும் ஒன்றுசேருமாறு அழைப்புவிடுக்கிறேன்.
தேசிய மக்கள் சக்திபிற்றகோட்டே சோலீஸ் வைபவ மண்டபத்தில் ….. 2021.08.01