தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்

சர்வாதிகார வெறிபிடித்த சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த நாட்டு மக்களின் பொதுவான போராட்டத்தினால் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டார். அது பதவிவிலகல் அல்ல. பொதுவான மக்கள் அதிகாரத்திலிருந்து நீக்கியமையாகும். நாட்டு மக்கள் எதிர்பார்த்த முதலாவது வெற்றி நிறைவு செய்யப்பட்டுள்ளது. இப்போது புதிய அரசாங்கமொன்றையும் சனாதிபதியையும் நியமிக்கும் பொறுப்பு பாராளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கடந்த சில தினங்கள் பூராவிலும் பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான பாரிய முயற்சியை மேற்கொண்டது. நாட்டு மக்கள், சிவில் அமைப்புக்கள், போராட்டத்தில் கலந்துகொண்ட குழுக்களை உள்ளிட்ட அனைவரும் இடைக்கால பொது இணக்கப்பாட்டு அரசாங்கமொன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்தார்கள். அத்தியாவசியமாக மேற்கொள்ளவேண்டிய பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக இடைக்கால அரசாங்கமொன்றுக்குச் செல்லுமாறு பொதுவான கோரிக்கையொன்று நிலவியது. அந்த அர்த்தத்தில் பாராளுமன்றத்தில் நடைபெறுகின்ற சனாதிபதியை தெரிவுசெய்வதற்கான போட்டியில் நிகழ்கால சபாநாயகரை அடுத்த காலப்பகுதிக்கான அனைவரதும் இணக்கப்பாட்டுடன் நியமித்துக்கொள்ளுமாறு நாங்கள் முன்மொழிந்தோம். அனைவரதும் இணக்கப்பாட்டுனான இடைக்கால அரசாங்கமொன்றையும் அதன் பின்னர் அனைத்துக் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் பிரதமரை நியமித்துக்கொள்ளவும் நாங்கள் முன்மொழிந்தோம்.
அதன்பின்னர் தேர்தலொன்றை நடாத்தி அதன்மூலமாக புதிய உறுதியான அரசியல் கட்டமைப்பொன்றினை உருவாக்க வாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் நாங்கள் முன்மொழிந்தோம். சிவில் அமைப்புக்கள், பல்வேறு வெகுஜன அமைப்புகள் மற்றும் முனைப்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினர்களினதும் முன்மொழிவுகளின் உட்பொருளாக அமைந்திருந்தது அனைவரதும் இணக்கப்பாட்டுடன் இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவுவதற்காகும். அந்த இடைக்கால அரசாங்கம் பொது இணக்கப்பாட்டுடனான வேலைத்திட்டமொன்றை அமுலாக்குவதற்காகவே. நாங்கள் அதற்காக நல்லெண்ணத்துடன் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து அரசியல் தரப்புகளுடனும் கடந்த நாட்களில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். ஆனால் அந்த முன்மொழிவுக்கு ஏனைய கட்சிகளின் பொதுவான இணக்கப்பாடு தெரிவிக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை மாலையளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் பக்கத்தில் ரனில் விக்கிரமசிங்க முன்வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும தானும் சனாதிபதி போட்டிக்காக முன்வருவதாகவும் கூறப்பட்டது. அதேவேளையில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவும் முன்வருவதாக கூறப்பட்டுள்ளது. சர்வகட்சி இடைக்கால அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வது நடைமுறைச்சாத்தியமற்றது என்பது இதன்மூலமாக தெளிவாகின்றது. இந்த போட்டி காரணமாக இணக்கப்பாடு உருவாகப் போவதில்லை. எனினும் எமது முயற்சியை முழுமையாக கைவிடவில்லை.
இணக்கப்பாட்டுக்கு வரமுடியாவிட்டால் இந்நாட்டின் பல்லாயிரக்கணக்கான மக்களின் எதிர்கால எதிர்பார்ப்பிற்காக தேசிய மக்கள் சக்தியின் இடையீடு அத்தியாவசியமானதாகும். அந்த தேவையை ஈடேற்றுவதற்காக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் பல்வேறு இனத்துவங்களைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கருத்தியல்களைக்கொண்ட ஆட்கள், நாட்டுக்கு வெளியில் இருக்கின்ற இலட்சக்கணக்கான இலங்கையர்கள் இன்று நாடு அடைந்துள்ள நெருக்கடியிலிருந்து பயணிக்கக்கூடிய தெளிவான உறுதியான அரசியல் கொள்கையொன்றைக் கோரிநிற்கின்றார்கள். அவர்கள் கோரிநிற்கின்ற, அவர்கள் முன்மொழிகின்ற உறுதிநிலையுடன் தொடர்புடைய தலைமைத்துவம் பற்றிய சவாலை ஈடேற்ற நாங்கள் தயார் என்ற செய்தியை வழங்குகிறோம். அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகும். நாடு வீழ்ந்துள்ள பிரமாண்டான படுகுழியில் இருந்து மீட்டெடுக்கின்ற தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு அந்த பொறுப்பினை ஈடேற்றுமாறு மக்கள் கோரிநிற்கின்ற சவாலை ஏற்றுக்கொள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் தயார். இதற்காக பாராளுமன்றத்திற்குள்ளே சனாதிபதியை தெரிவுசெய்கின்ற போட்டியில் எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம். நாங்கள் தலைமைத்துவத்தை ஏற்கின்ற தருணத்தில் இருந்து அனைவரதும் இணக்கப்பாட்டுடன் நியமித்துக்கொள்கின்ற இடைக்கால அரசாங்கம் ஊடாக பொவான முன்மொழிவினை அமுலாக்குகின்ற பொறுப்பினை ஏற்றுக்கொள்ள நாங்கள் யதார்.
பொது இணக்கப்பாட்டின், பொது வேலைத்திட்டமொன்றின் செயற்பாட்டுக்காக எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த நாட்டின் நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவிற்கு ஒத்துழைப்பு வழங்குவீர்களாயின் அந்த ஏனைய அரசியல் கட்சிகளுடனான பொது இணக்கப்பாட்டு வேலைத்திட்டத்தின் பேரில் ஒத்துழைப்புடன் நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் தயார். அதற்கான பொது இணக்கப்பாட்டுக்குவர தொடர்ந்தும் காலம் இருக்கின்றது. சர்வகட்சி அரசாங்கமொன்றில் சர்வகட்சி அமைச்சரவையைக் கொண்டதாக தோழர் அநுர திசாநாயக்கவின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் தயார். இந்த செய்தியை நாங்கள் அனைவருக்கும் வழங்குகின்றோம்.
ஏனைய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பினை நாங்கள் எதிர்பார்க்கிறோம்
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கடந்த சில நாட்களுக்குள் அனைவரதும் இணக்கப்பாட்டின்பேரில் பாராளுமன்றத்தின் அனைவரதும் ஏற்றுக்கொள்கின்ற தலைமைத்துவத்தை சனாதிபதியாக நியமித்துக்கொள்ளவே நாங்கள் முயற்சி செய்தோம். இத்தருணத்தில் தோன்றியுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வாக அனைத்துக் கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். அதற்காக தோற்றினோம். பாராளுமன்றத்திற்கு வெளியில் தோன்றிய மக்கள் எதிர்ப்பு காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சனாதிபதி பதவியைவிட்டு தப்பியோட நேர்ந்தது. நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடனேயே இத்தருணத்தில் இருக்கிறார்கள். பலமாதங்களாக அவர்கள் புரிந்த போராட்டத்திற்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதைப்போலவே நீண்டகால அரசியல் மாற்றத்தை மேற்கொள்வதையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக ராஜபக்ஸ குடும்பத்தினால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட ஊழல்மிக்க, வன்முறைசார்ந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் மிகவும் கடுமையாக மக்களிடமிருந்து வெளிப்படுகின்றது. வெளியில் இருந்து வருகின்ற போராட்டத்தின் கோரிக்கைகள் மற்றும் தாக்கங்கள் மீது பாராளுமன்றத்தில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் கூருணர்வுமிக்கவர்களாக இருக்கவேண்டும். ஆனால் எம்மால் இணக்கப்பாட்டினைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனமையால் எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவை 19 ஆந் திகதி பாராளுமன்றத்தில் வேட்புமனுவில் முன்மொழிய நாங்கள் முன்வருகிறோம். நாட்டில் தோன்றியுள்ள எதிர்பார்ப்பினை தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவிற்கும் ஈடேற்ற முடியுமென்ற நம்பிக்கையில் நாங்கள் இதற்காக முன்வருகிறோம்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள்
கேள்வி :- பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ள நீங்கள் நிபந்தனைகளை விதித்துள்ளீர்களா?
பதில் :- எமது எந்தவிதமான நிபந்தனைகளும் கிடையாது. இந்த பொறுப்பினை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு ஏனைய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். நாடு வீழ்ந்துள்ள படுகுழியில் இருந்து மீட்டெடுக்க விரும்பினால் , இணங்கினால், அதற்குத் தலைமைத்துவம் வழங்க நாங்கள் தயார். அதற்காக எமக்கு எந்தவிதமான நிபந்தனையும் கிடையாது. அவர்கள் இணங்கினால் ஏனையவர்களுடன் கூட்டான தீர்மானங்களை மேற்கொள்ள அமைச்சரவையையும் கட்டமைப்பொன்றையும் உருவாக்க நாங்கள் தயார். பாராளுமன்றத்திற்கு வெளியில் இருக்கின்ற தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், போராட்டக்காரர்கள் மற்றும் பல்வேறு குழுக்கள் ஆகிய அனைவரது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பொறுப்பினை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்.
கேள்வி :- கடந்த காலத்தில் ஏனைய கட்சிகளுடன் செயலாற்றுகையில் நிபந்தனைகள் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இப்போது அது மாறிவிட்டதா?
பதில் :- இல்லை. இது பாராளுமன்றத்தின் ஊடாக சனாதிபதி பதவிக்காக தெரிவுசெய்கின்ற நடவடிக்கையாகும். இந்த பதவியை வகிக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் தனி அரசாங்கமொன்றை நிறுவிக்கொள்வதற்கான தருணம் இதுவல்ல. அதற்காக பலரது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொள்வதைப்போன்றே அவர்களின் பங்களிப்புடன் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபடவேண்டியுள்ளது. அதற்காக தலைமைத்துவம் வழங்க தோழர் அநுர திசாநாயக்க முன்வருகிறார்.
இந்த ஊடக சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் நிஹால் அபேசிங்கவும் பங்கேற்றார்.