Home News Tamil பிரதிநிதித்துவம் செய்கின்ற துறைக்குள் இருந்துகொண்டே தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

பிரதிநிதித்துவம் செய்கின்ற துறைக்குள் இருந்துகொண்டே தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

by Ravinath Wijesekara

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க

கடந்த மூன்று வருட காலப்பகுதிக்குள்  நான் ஒரு கேள்விக்கு பதில் தேடுகிறேன்.  இன்னும் 10 வருடங்களில் எனது மகள் என்னிடம் கேட்கின்ற கேள்வியாகும்.  அப்பா நான்றாக படித்திருக்கிறேன்: எனக்கு தொழிலொன்று கிடையாது: எனக்கு பாதுகாப்பு கிடையாது: நான் ஒரு நல்ல வாழ்க்கையை கழிக்க வேறோரு நாட்டுக்குச் செல்லவேண்டும்: போகட்டுமா? என அவள் என்னிடம் கேட்பாள். அதோ அந்த கேள்விக்கு பதில் இல்லை என்பதால் தான் நான் எனது தொழில்சார் பொறுப்புகளிலிருந்து விடுபட்டு  அரசியலில் முனைப்பாக பங்களிப்புச்செய்ய தீர்மானித்தேன். நாங்கள் திறந்த பொருளாதாரத்திற்குள்ளேயே இருக்கின்றோம். அதற்குள்ளே சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமாயின் சமவாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.  கல்விக்கு சமவாய்ப்பு வழங்கவேண்டும்.   அவ்வாறில்லாவிட்டால் இதற்குள் நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. 

இலங்கையில் 8.6 மில்லியன் பேர் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் வேலையை ஒரு தொழிலாக மாற்றிக்கொள்ள பலருக்கு இயலாமல் போயிற்று. இலங்கையில் உள்ள தொழில்களில் 62மூ ஒழுங்கமையாத தொழில்களாகும். அதாவது ஈரீஎஃ;ப், ஈபிஎஃப்  கிடைப்பதில்லை. தொழில் ஓர் உரிமையல்ல. தமது குடும்பத்திற்கு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தொழிலொன்றைப் புரிய பெரும்பாலானோருக்கு இயலாமல் போயுள்ளது.  இலங்கையில் 70மூ குடும்பங்கள் சார்புரீதியான வறுமையால் வாடுகின்றன.  அவர்களுக்கு எம்மைப்போல் இயலுமை கிடையாது. தொழில்சார் கௌரவத்தை இழந்துள்ளார்கள். அரச ஊழியரின் தொழில்சார் கௌரவத்தை இழந்துள்ளார்கள்.  

அதைப்போலவே சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளரெனில் நீங்கள் இறுகிப்போயுள்ளீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.  உங்களுக்கு தொழில்நுட்பத்தை மூலதனத்தை வழங்க எவருமே கிடையாது. உங்களின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க எவருமில்லை.  எமது நாடு வறிய நாடாகும். எமது நாட்டில் எல்லோரிடமும் மூலதனம் கிடையாது. சிறிய தொழில்முயற்சியொன்றை ஆரம்பிக்க நேரிட்டால் மூலதனம் இல்லாமை காரணமாக பாரிய தொழில்முயற்சிகளுடன் போட்டியிட இயலாது.  போட்டித்தன்மையை வழங்கவேண்டுமானால் அரசாங்கத்தின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  நீங்கள் ஒரு கூட்டிணைக்கப்பட்ட கம்பெனியில் இருக்கலாம்.  இறக்குமதி, எற்றுமதி கம்பெனியில்  இருக்கலாம். மீள் எற்றுமதி செய்கின்ற ஒரு கம்பெனியில் இருக்கலாம். பெறுமதி சேர்க்கின்ற ஒரு கம்பெனியில் இருக்கலாம்.  இன்று உங்களின் தொழில்முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. நாங்கள் தொழில்வாண்மையாளர்கள், தொழில்முயற்சியாளர்கள் என்றவகையில் தனிப்பட்ட நோக்கத்திற்காக செல்ல முயற்சி செய்தாலும்  எம்மால் தனித்தனியாக அந்த இலக்குகளை அடைய இயலாதென்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.   

ஒட்டுமொத்த நாடும் சீரழிகின்ற வேளையில்  தமது மக்கள் சீரழிகின்ற வேளையில் நாங்களும் சீரழிகின்றோம். அந்த முறைக்குள்ளே எமது தனிப்பட்ட நோக்கங்களை எம்மால் தீரத்துக்கொள்ள இயலாத நிலை தோன்றியுள்ளது. நாங்கள் எவ்வாறு இதற்கு அப்பால் நகர்வது? நாங்கள் பொருளாதார கோட்பாடுகளின் அடிப்படை இடங்களுக்கு வரவேண்டும்.  உற்பத்தி எல்லை இயலுமை வளையத்தை விருத்திசெய்துகொள்ள வேண்டும். எங்களுக்கு மனித மூலதனம், தொழில்நுட்பம், இயற்கை வளங்களின் உற்பத்தித்திறனை விருத்திசெய்துகொள்ளவேண்டி நேரிடும். நாங்கள் அவற்றைச் செய்துகொள்ளவில்லை. ஒரு நாடு தனக்கு சார்புரீதியாக அநுகூலங்கள் கிடைக்கின்ற உற்பத்திகளையும் சேவைகளையும் மேற்கொள்ளவேண்டும். ஆடைத்தொழிற்றுறையில், தகவல் தொழில்நுட்பத்துறையில் எமக்கு அநுகூலம் நிலவுகின்றது.   ஆனால் அவற்றை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்சென்று உலகப் பொருளாதாரத்ததில் எமது  பங்கினைக் கையகப்படுத்த எம்மால் இயலவில்லை. அதைப்போலவே எமது நாட்டுக்கு சார்புரீதியற்ற இடஅமைவு அநுகூலம் நிலவுகின்றது. மீன்பிடி வளத்தின் அநுகூலம் நிலவுகின்றது. கனிய வளங்களின் அநுகூலம் நிலவுகின்றது. நாங்கள் தற்போது அந்த சார்புரீதியற்ற அநுகூலத்தை வெளிநாட்டவர்களுக்கு விற்று வருகிறோம். எமது ஆட்சியாளர்கள் எமக்குப் புரிந்துள்ளது அதுதான்.  அவர்களின் நோக்கம் எங்களதும் உங்களதும் பிள்ளைகளின் வாழ்க்கையை உயர்த்துவதல்ல: அவர்கள் கோடிக்கணக்கில் செலவழித்து அதைப்போல மூன்று நான்கு மடங்கினை அவர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையில் பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் அதுவரை தெரிவுசெய்தவற்றில் இருந்து அரசியல்ரீதியான தெரிவினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான ஒருசி;ல அளவுகோல்களை வழங்க நான் விரும்புகிறேன்.  முதலில் அரசியல் புரிய வருபவரின்  நோக்கத்தைப் பார்க்கவேண்டும்.  அது பொதுவான நோக்கமா, தனிப்பட்ட நோக்கமா எனப் பார்க்கவேண்டும். அவர்களின் பாவனை என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.  வாழ்கின்ற விதத்தை கண்டுகொள்ள வேண்டும்.  அவர்களிடம் ஒத்துணர்வு இருக்கின்றதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.  தனியாள் ஓருவரை அதிகாரத்திற்கு கொண்டுவந்து  சந்தித்த அழிவினை நாங்கள் அனுபவித்துள்ளோம். அது கூட்டு முயற்சியாக அமைதல் வேண்டும். ஒரே நோக்கத்தின்பால் அணிதிரட்ட வேண்டும். எனது விடயத்துறை தரவு விஞ்ஞானமாகும். உலகில் மிக அதிகமான கேள்வி நிலவுவது அந்த விடயத்துறைக்காகும். தரவு விஞ்ஞானத்தில் இடம்பெறுவது தரவுகளைப் பாவித்து முடிவுகளை மேற்கொள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க  அவசியமான அறிவினை முகாமைத்துவத்திந்கு வழங்குவதாகும். ஒரு நாட்டுக்கும் உள்ள பிரச்சினையைத் தீர்த்துவைக்க எம்மால் தரவுகளைப் பாவிக்க இயலும். அதனைக்கொண்டு எதிர்வுகூற இயலும்.  ஆனால் எமது ஆட்சியாளர்களுக்கு இவற்றில் இருந்து பயன்பெறவேண்டிய அவசியமில்லை.  முழு உலகுமே உச்சமட்டக் கைத்தொழில் புரட்சிக்கு சென்றாலும் எமது நாட்டின் கைத்தொழில்கள் இரண்டாவது கைத்தொழில் புரட்சிக்குக்கூட செல்லவில்லை.  உற்பத்தித்திறனை மே;மபடுத்தவில்லை. நாங்கள் ஊழல்மிக்க தீத்தொழில் புரிகின்ற ஒரு வகுப்பினருக்கு  எமது அதிகாரத்தை சர்வசன வாக்குரிமைப் பலத்தினால் பரிமாற்றிக் கொண்டுள்ளோம்.  அந்த அதிகாரத்தை நாங்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளவேண்டும். அந்த தீர்வுக்குச் செல்வதானால்  எமக்கு கட்டாயமாக குழுவொன்று அவசியமாகின்றது.  அந்த குழுவினரையே நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். எனவே நீங்கள் இருக்கின்ற இடத்தில் இருந்துகொண்டே தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு நாங்கள் இளைஞர் சமுதாயத்திற்கு முன்மொழிகிறோம்.

You may also like

Leave a Comment