இலங்கையின் வரலாற்றில், நாம் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை அவ்வப்போது எதிர்கொண்டுள்ளோம். ஆனால் இன்று நாம் வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றினையும், அதன் விளைவாக தீவிரமடைந்துள்ள பலதரப்பட்ட சமூகப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றோம் என்பது ஒரு இரகசியமல்ல. திறைசேரியின் செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், நிதி அமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சர் போன்றோர் அவ்வப்போது வெளியிட்ட பற்பல அறிக்கைகளில் இருந்து இது மேலும் தெளிவாக உறுதிப்படுத்தப்படுகிறது. ஊழஎனை 19 தொற்றுநோய் மூலம் இந்த நெருக்கடி தீவிரமடைவதற்கு முன்பே எமது நாடு அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது என்பதை பல்வேறு புள்ளிவிவரங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியும். 73 ஆண்டுகளாக இலங்கை பின்பற்றிய தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உத்திகள் என்பவற்றுடன் ஊழல் மற்றும் அதிகார பேராசை கொண்ட ஏமாற்று அரசியல்வாதிகளும் இதற்குக் காரணம் என்பது இன்று வெளிப்படை. 1978ல் அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டுக் கடன்களில் கற்பனை செய்யப்பட்ட அபிவிருத்தி போன்றன இந்த துரதிருஷ்டவசமான பயணத்தை மேலும் துரிதப்படுத்தின.
உற்பத்திப் பொருளாதாரமொன்றை இலக்காகக் கொண்ட மக்கள் பங்கேற்பு அதேபோல் சுற்றுச்சூழல் பாதிப்பற்ற வளர்ச்சி உத்திகள் மற்றும் அந்த பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் என்பன சமூகத்தில் உள்ள அனைவருக்கும் நியாயமாக சென்றடையும் ஒரு திட்டம். அதன் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக-பொருளாதார அமைப்பின் பரந்த மற்றும் ஆழமான மாற்றத்துடன் அன்றி இந்த நெருக்கடியை சமாளிக்க வேறு எந்த குறுக்குவழி மூலமும் சாத்தியமில்லை என்பது மிகத் தெளிவானது.
அந்த பரந்த சமூக மாற்றத்திற்கு மக்களை வழிநடத்தும் மற்றும் அந்த சமூக மாற்றத்திற்கான பரந்த பார்வை கொண்ட ஒரு நம்பகமான அரசியல் இயக்கம் எது என்பதை சரியாக அடையாளம் காண்பதே எமக்கு முன்னால் உள்ள மிகப் பெரிய சவாலாகும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில், நாட்டை காப்பாற்ற அரசர்கள், ராணிகள், ஆண்கள் பெண்கள் மற்றும் மந்திரவாதிகள் அவ்வப்போது முன்னால் வருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் அனைவரும் பின்பற்றிய ஒரேவிதமான தவறு என்னவெனில் தவறான மற்றும் அழிவுகரமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உத்திகளும், அவர்களுடன் கைகோர்த்திருந்த நேர்மையற்ற மற்றும் ஊழல் கும்பல்களாலும் நாடு மென்மேலும் இருண்ட பள்ளத்தை நோக்கி தள்ளப்படுவதை தடுத்து நிறுத்த அவர்கள் எவராலும் முடியவில்லை. இறுதியில், இந்த அனைத்து ஊழல் நிறைந்த கனவான்களும் சீமாட்டிகளும், ராஜாக்களும் ராணிகளும் ஒருவருக்கொருவர் அவரவர்களைப் பாதுகாத்து, ஒருவருக்கொருவர் தத்தமது விருப்பு வெறுப்புகள் பற்றி மட்டுமே கவனித்தும் கொண்டனர் என்பது இப்போது எமக்குத் தெளிவாக உள்ளது.
ஊழல் குடும்பம் ஒன்றும், அவர்களது உற்றார் உறவினர்களைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்ட நிலப்பிரபுத்துவ (குநரனயட) அரசியல் கும்பலும் ஒரு நாட்டுக்குச் செய்ய முடியுமான அழிவின் அளவுக்கு அல்லது அதைவிடவும் ஒரு பேரழிவை ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்ற போலியான போர்வையில் கனவான்கள் சீமாட்டிகள் குழுவொன்றாலும் செய்ய முடியும் என்ற அனுபத்தை நாம் சிறப்பாகவே பெற்றிருக்கிறோம்.
எனவே, இன்று நாட்டுக்கு தேவைப்படுவது
- ஒரு குடும்பம், ஓர் இனத்தைச் சுற்றிக் குவிந்துள்ள ஆணவம், நிலப்பிரபுத்துவ ஊழல் அரசியல் கும்பல் மற்றும் சமூக நீதி, ஜனநாயகம் பற்றி பொய்யான கூற்றுக்களைக் கூறும் கொள்கையற்ற, வெண்நிற ஆடையணியும் மேலாதிக்கக் குழுக்கள் போன்ற அனைத்தையும் ஒன்றாகத் தோற்கடிக்கக்கூடிய ஓர் அரசியல் இயக்கம்.
- பொதுச் சொத்தை விற்றுக் கொள்ளையடிக்கும் மற்றும் மென்மேலும் உள்நாட்டை, வெளிநாட்டை மட்டும் நம்பி பின்பற்றும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உத்திகளுக்குப் பதிலாக… ஒரு உற்பத்திப் பொருளாதாரம், அந்த பொருளாதார நன்மைகள் கிராமம் நகரத்திற்கு நியாயமான முறையில் பிரிந்து செல்லும் ஓர் திட்டம் தொடர்பான பார்வை மற்றும் புரிதலுடன் கூடிய ஓர் அரசியல் இயக்கம்.
- இந்த நாட்டில் பிறந்து வடக்கு கிழக்கு மேற்கு மத்திய… போன்ற நாட்டின் பல பாகங்களிலும் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம், பேகர் போன்ற பல்வேறு இனங்களுக்கும் அதேபோல் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம் போன்ற மதங்களுக்கும் தனித்துவமான கலாச்சாரங்களுடன் வாழும் அனைவருக்கும் இது எனது தாய் நாடு இலங்கை என்று பெருமையுடன் கூறக்கூடிய அரசியல் மற்றும் சமூக சூழல் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஓர் அரசியல் இயக்கம்.
- ஒருவரை ஒருவர் தோற்கடித்து, ஒருவரை ஒருவர் அலட்சியம் செய்து தனிநபர்களாக வெற்றியை நோக்கிச் செல்லும் நனிநபர் மையப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்திற்குப் பதிலாக… ஒருவருக்கொருவர் இருப்பு, கண்ணியம் மற்றும் பாதுகாப்பை அங்கீகரிக்கும் அதேபோல் அவரவர்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை மேற்கொள்ளும் ஒரு சிறந்த மனித சமுதாயத்திற்காக கூட்டாக முன் நிற்கும் ஓர் அரசியல் இயக்கம்.
- தவறான மற்றும் தன்னிச்சையான விவசாயக் கொள்கைகள், உத்திகள் மற்றும் தேசிய உற்பத்தி செயல்முறைக்கு பங்களிக்கும் முறையான திட்டம் இல்லாமை காரணமாக வறுமையின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டுள்ள கிராமப்புற ஏழை மக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பொருளாதாரத் திட்டங்கள் அதேபோல் உணவுப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உயர் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும் பொருளாதார நோக்கு கொண்ட ஓர் அரசியல் இயக்கம்.
- மிகவும் இரக்கமற்ற முறையில் சுற்றுச்சூழலின் இருப்பை மற்றும் அதன் சமநிலையைப் புறக்கணித்து இலாபம் மற்றும் உற்பத்தி இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்தி மேற்கொள்ளும் நுகர்வோர் மேம்பாட்டு மாதிரிக்குப் பதிலாக… சுற்றுச்சூழல் அமைப்பு, பல்லுயிர் மற்றும் அதன் நிலையான சமநிலையைப் பாதுகாத்து இயற்கையுடன் இணைந்த ஒரு வாழ்க்கை முறையை மனித சமுதாயத்திற்கு முன்மொழியும் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் ஓர் அரசியல் இயக்கம்.
- கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப அறிவினால் போஷிக்கப்பட்ட மேம்பட்ட தொழில்முறை திறன்களுடன் சர்வதேச தொழில் சந்தையில் போட்டியாக வேலை செய்ய முடியுமான இளைஞர் குழுவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்கும் நாகரீகமிக்க குடிமக்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட கல்வி கொள்கையை பின்பற்றும் ஓர் அரசியல் இயக்கம்
- மக்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்களில் மூழ்க விட்டுவிட்டு அவர்களை நசுக்கியும் பொறுமையாக இருக்கும்படியும் வேண்டிக்கொண்டு மக்களின் வரிப்பணத்தை மிகவும் ஒழுக்கக்கேடான முறையில் தனதும் தம் உறவினர்கள், நண்பர்களினதும் தனிப்பட்ட மகிழ்ச்சிகளுக்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்குப் பதிலாக… பொது மக்களின் துன்பம் மற்றும் வலிகளை இனங்கண்டு அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் எளிமையான ஒரு வாழ்க்கை முறையை தம் வாழ்வாகக் கொண்ட அரசியல் தலைமைத்துவம் உள்ள ஓர் அரசியல் இயக்கம்.
மேற்கூறிய நோக்கங்களை பின்பற்றி சமூக – பொருளாதார அரசியல் அமைப்பில் ஆழமான மற்றும் பரந்த மாற்றம் ஒன்றிற்கு இலங்கையை உட்படுத்தி வீழ்ச்சியடைந்துள்ள நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பது என்பது மிகவும் கடினமானதொரு பணி. அதற்காக ஒரு கூட்டு முயற்சியின் மூலம் அனைத்து தேசிய இனங்கள், மதக் குழுக்கள் மற்றும் சமூகப் பிரிவுகளையும் அரவணைத்து ஒரு சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் ஆற்றலுடைய ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்குவது என்பதுவும் மாபெரும் சவாலாகும்.
தேசிய மக்கள் சக்தியாக இந்த சவாலான அரசியல் இயக்கத்தை வழிநடத்தும் திறன் எங்களிடம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதேபோல் அது ஒரு பரந்த பொது மக்கள் இயக்கமாக தொடர்ந்தும் வளர வேண்டும் என்பதையும் நாங்கள் தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறோம். அனைத்து முற்போக்கு அரசியல் கட்சிகள், மத மற்றும் சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் மற்றும் தனிநபர் குழுக்களையும் ஒன்றிணைத்து அந்த சமூக மாற்றத்திற்காக உழைக்கின்ற ஒரு பாரிய மக்கள் இயக்கத்தை உருவாக்கும் பொருட்டு மத்திய தலையீட்டின் சவாலை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அந்த உயர்ந்த மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்பும் பொருட்டு தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்குமாறு அனைத்து முற்போக்கு அரசியல் சக்திகளிடமும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் ஃ அழைப்பு விடுக்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தி
01ளவ யுரபரளவ 2021