Home News Tamil “பொருளாதார நியாயம் மற்றும் நீதியுடனான சனநாயகத்தின் உட்பொருளை மீண்டும் கொண்டுவரத் தயார்”

“பொருளாதார நியாயம் மற்றும் நீதியுடனான சனநாயகத்தின் உட்பொருளை மீண்டும் கொண்டுவரத் தயார்”

by Ravinath Wijesekara

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிங்களக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி

தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் இந்த நாட்டை முழுமையாகப் பொறுப்பேற்று நாடு வீழ்ந்துள்ள படுகுழியில் இருந்து மீட்டெடுக்கத் தயாராகின்ற, அதற்கு அவசியமான புலமைசார்ந்த, அறிவார்ந்த, கலாசார வளங்கள் எம்மிடம் இருக்கின்றதென்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த சகோதர சகோதரிகளுடன் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறோம். இந்த நாட்டை மாற்றியமைக்க அவசியமான மக்கள் எழுச்சி அனைத்து துறைகளிலும் தோன்றியுள்ளது. அத்தகைய இயற்கையான சூழல் உருவாக்கப்படுகின்றவேளையில் அந்த மாற்றத்திற்கு தலைமைத்தும் அளிக்க அவசியமான விவேகமிக்க பிரிவினர் அவசியம். வரலாற்றினை மீட்டெடுப்பதற்கான அந்த ஆற்றல் இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளதென்பதை எம்மால் தயக்கமின்றி கூற இயலும்.

நாங்கள் பெருந்தொற்று காலத்தையே கழித்து வருகிறோம். பெருந்தொற்று வருவதற்கு முன்பிருந்தே போராட்டக் கோஷமொன்று மீண்டும்மீண்டும் கூறப்பட்டு வருகின்றது. அனைவரும் ஒருங்கிணைதல், சனநாயகம் பற்றிய போராட்டக் கோஷமாகும். உரிய நேரத்தில் தேர்தலை நடாத்துதல், நியாயமான தேர்தலை நடாத்துதல், தேர்தல் பிரசாரத்தின்போது அனைவருக்கும் நியாயமான வாய்ப்பினை வழங்குதல் போன்றவை. அவை மக்கியமானவை தான். ஆனால் இந்த பெருந்தொற்று எமக்கு கற்றுத் தந்துள்ள விடயம் எமது நாட்டின் சனாயகம் அதனைவிட அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுள்ளமையாகும். தேர்தல் அவதானிப்பாளர்களை ஈடுபடுத்துவதன் மூலமாக மாத்திரம் மீட்டெடுக்க முடியாத மட்டத்திற்கு சனநாயகத்தின் உட்பொருள் அரிப்புக்குள்ளாகி விட்டது. சனாநாயகம் முக்கியமானது என்பதோடு அதனைப் பார்க்கிலும் பொருளாதார சனநாயகம் முக்கியமானதென தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் வலியுறுத்துகிறோம். நவலிபரல் முதலாளித்துவத்தின் அடிப்படை செயற்பொறுப்பு வெளிநாடொன்றுக்கு அல்லது நிறுவனமொன்றுக்கு நிதிசார் உதவி மூலமாக நிலவுகின்ற முதலாளித்துவ முறையை விரிவாக்குவதாகும். அந்த பொருளாதார வளர்ச்சியை தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைக்கொண்டு அளக்கிறார்கள்.

இந்த பெருந்தொற்று எமக்கு சுட்டிக்காட்டி இருப்பது அதிலிருந்து புலனாகாத பல இடைவெளிகள் உள்ளனவென்பதையாகும். சிக்னல் கிடைக்காமல் மரங்களில் ஏறுகின்ற பிள்ளைகளை அதனால்தான் காணக்கூடியதாக இருக்கின்றது. பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் கிராமிய பிள்ளைகளின் பங்கேற்றல் மிகவும் குறைவானதாகும். அது தான் அந்த இடைவெளி. நீதி, நியாயம் இன்மையின் பிரச்சினை இதுவாகும். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் பொருளாதார நியாயத்தையும் நீதியையும் சனநாயகத்தின் உட்பொருளுடன் மீண்டும் கொண்டுவரத் தயார். அதற்கு அவசியமான வளங்கள் எம்மிடம் இருக்கின்றன. இந்த நாட்டின் ஒருசில அரசியல் பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியுமென்ற அபிப்பிராயத்தை தெரிவித்து வருகிறார்கள். 21 வது நூற்றாண்டின் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார கொடுக்கல் வாங்கல்களில் பங்கேற்றகக்கூடிய அனைத்துப் புலமைச் சொத்துக்களும் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளதென்பதை வலியுறுத்த விரும்புகிறேன். தனியொரு குடும்பத்திற்கோ அல்லது பரம்பரைக்கோ நாங்கள் கடன்படவேண்டிய அவசியம் கிடையாது. அறிவும் கல்வியும் படைத்த மனித வளமொன்று எம்மிடம் இருக்கின்றது.

நாங்கள் பொருளாதாரத்தை நோக்குவது வெறுமனே தரவுகளை பார்ப்பதாக மாத்திரம் அமைவதில்லை. எமது பிள்ளைகள் வசதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதைக் நாங்கள் காண நாங்கள். விரும்புகிறோம். ஆனால் அதற்குள்ளே ஒருவர் மீது கருணையுடன், ஒருவர்மீது ஒருவர் பொறுப்புடன், அன்புடன் மனித்துவம் நிறைந்த உறவுகொண்ட சமூகமொன்று கட்டியெழுப்பப்படுவதை நாங்கள் காண விரும்புகிறோம். அத்தகைய மனிதர்ககளைக் கட்டியெழுப்ப அவசியமான கலாசாரரீதியான மற்றும் கலைத்துவ வளங்களும் அதற்க அவசியமான புத்திஜீவிகளும் எம்மிடம் இருக்கிறார்கள். இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றல் எம்மிடம் இருப்பது மாத்திரமன்றி மனிதரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நீண்டகால வளங்கள்கூட எம்மிடம் இருக்கின்றன. எம்மைப்போன்ற பல்கலைக்கழக விரிவரையாளர்கள், கலைஞர்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒன்றுசேர்ந்ததிருப்பது அதனை ஓரிரு நாட்களில் அடைந்துவிடுவதற்காக அல்ல. இந்த நாடு மாற்றமடைவதைக் காண்பதற்காகவே. அதற்கான உரையாடலுக்காக நாங்கள் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். இன்றளவில் முன்வைத்துள்ள கொள்கைகளை நாங்கள் மீண்டும் உரையாலுக்கு இலக்காக்க தயாராக இருக்கிறோம். அதற்காக ஒன்றுசேருமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

தேசிய மக்கள் சக்தி
பிற்றகோட்டே சோலீஸ் வைபவ மண்டபத்தில் ….. 2021.08.01

You may also like

Leave a Comment