
பட்டினிக்கு எதிரான பெண்கள் என்றவகையிலேயே இன்று எமக்கு ஊடக சந்திப்பினை நடாத்த நேர்ந்துள்ளது. மிகையான பணவீக்க நிலைமைக்கு அப்பால்சென்ற மிகையான போசாக்கின்மை நிலைமை நாட்டில் நிலவுகின்றது. எமது நாட்டின் பிள்ளைகள், பெண்கள் வசிக்கின்ற சமையலறைக்கு வந்து பாருங்கள் என ஆட்சியாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இன்றளவில் நாட்டுக்காக போராட்டத்திற்கு முனைப்பானவகையில் பங்களிப்புச் செய்தவர்கள் கைதுசெய்யப்பட்டு வருவது எமக்குத் தெரியும். ஜாக்கிரதையாக இருங்கள் என்றே சால்வை அரசாங்கத்தைப் போலவே கறுப்புக்கோட் அரசாங்கத்திற்கும் இது சம்பந்தமாக முதலில் கூறவேண்டியுள்ளது. கட்சி பேதமின்றி, இன சாதி பேதமின்றி நாட்டு மக்களுக்காக இடையறாத போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இளைஞர்களுடன் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பும் கைகோர்த்துக்கொண்டு இடையறாத போராட்டத்திற்காக வீதியில் இறங்கத் தயார். அதனால் கலைஞர் தமித்தா அபேரத்ன, பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட துன்புறுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுடன் நாங்கள் கைகோர்த்துக் கொள்கிறோம். பெண்கள் என்றவகையில் வீதியில் இறங்கினால் இது முற்றுப்பெறாத போராட்டம்வரை தொடருமென்பதை வலியுறுத்துகிறோம். சால்வை அரசாங்கம் மற்றும் கறுப்புக்கோட் அரசாங்கம் ஆகிய இரண்டையும் ஒன்றாகத் தோற்கடித்திட நாங்கள் தயார்.
மிகையான பணவீக்கத்துடன் மிகையான போசாக்கின்மை நிலைமைக்கு எமது பிள்ளைகள் இலக்காகி உள்ளார்கள். சிறிய பிள்ளைகள் வடிகானில் விழுந்து இறக்கிறார்கள். அந்த பிள்ளைகளுக்காக பஸ் வண்டியொன்றை ஈடுபடுத்த தவறிய ஆட்சியாளர்கள் தமது வாகனமொன்றுக்கு 19 கோடி ரூபா சேதநட்டத்தை மதிப்பீடு செய்துள்ளார்கள். அத்தகைய சனாதிபதிகள் இருக்கின்ற நாட்டில் எமது பிள்ளைகள் போசாக்கினால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அதேவேளையில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இறந்த பிள்ளைகள் பற்றியும் பதிவாகி உள்ளது. பிள்ளைகளை மிகையான போசாக்கின்மை நிலைமைக்கு ஆளாக்கிய சால்வை அரசாங்கமும் கறுப்புக்கோட் அரசாங்கமும் ஆகிய இரண்டையுமே தோற்கடித்திட பெண்கள் வீதியில் இறங்குவார்கள் என்பதை வலியுறுத்துகிறோம். சிறுவர் வைத்தியசாலையில் போசாக்கின்மை நிலைமைபற்றி விசாரித்தறிய அரசாங்கத்தின் சிறப்பறிஞர் குழுவொன்று போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது நல்லது. ஆனால் இன்றளவில் உலக உணவு அமைப்பு வெளியிட்டிருப்பது ஒவ்வொரு 05 குடும்பங்களிலும் 04 குடும்பங்களுக்கு உணவு கிடைப்பதில்லை என்பதாகும். பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் அந்த குற்றச்சாட்டினையும் தாய்மார்கள்மீது சுமத்தி அரசாங்கத்தை பாதுகாத்துக்கொள்ள செயலாற்றி வருவது எமக்குப் புலப்படுகின்றது. உணவு நெருக்கடி பற்றி பேசிக்கொண்டிருக்காமல் குற்றச்சாட்டினை முன்வைப்பவர்களை எமது சமையறைக்கு வருமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அதைப்போலவே சிறப்பறிஞர் குழுவிற்கும் பெருந்தோட்டத்தின் லயன் அறைகளுக்கும் மீனவர் குடும்பங்களையும் கமக்காரர் குடும்பங்களையும் சேர்ந்த வீடுகளுக்கும் வந்து விசாரித்தறியுமாறு பெருமதிப்புடன் அழைப்பு விடுக்கிறோம். அப்போது மிகையான பணவீக்க நிலைமையையும் போசாக்கின்மை நிலைமையையும் கண்கூடாகவே பார்த்துக்கொள்ள முடியும்.
வற் வரி 8 வீதமாக இருக்கையில் ரூ. 30 அக இருந்த சிறிய பிஸ்கற் பெக்கெற் தற்போது ரூ. 120 ஆகி விட்டது. அதில் 15 வீதம் வரை அதிகரித்த வற் வரியும் சேர்ந்துவிட்டால் பிஸ்கற் மிகையான சுகபோக உணவாக மாறிவிடும். வற் என்பது ஒரு மறைமுகமான வரியாகும். அந்த வரிக்கு மேலும் வரிகளைச் சேர்த்திட அரசாங்கம் செயலாற்றி வருகின்றது. புதிய கறுப்புக்கோட் வரி “சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி” என சேர்க்கப்படுகின்றது. மரத்தால் விழுந்தவனை 1000 மாடுகள் முட்டியதைப்போல். இந்த வரிக்காக இறக்குமதியின்போது, உற்பத்தியின்போது, விநியோகத்தின்போது மற்றும் சில்லறை வர்த்தகத்தின்போது என்றவகையில் தொடர் வரியொன்று 2.5 சதவீதத்தில் நான்கு தடவைகள் சேர்கின்றது. சிறிய பிள்ளைகளுக்கு ஒரு பக்கெற் பிஸ்கற் கொடுக்க முடியுமா? அத்தியாவசியமான அத்தனை பண்டங்கள் மீதும் கறுப்புக்கோட் அரசாங்கம் விரட்டிவிரட்டி வரி விதிக்கின்றது. இதற்கிணங்க பண்டங்களுக்கு 25 சதவீதம் வரையான புதிய வரி சேர்கின்றது. மிகையான பணவீக்கம் நிலவுகின்றதென இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்களில் இருந்து தெளிவாகின்றது. ஓகத்து மாத இறுதியளவில் உணவுசார்ந்த பணவீக்கம் 93.7 சதவீதமாக அமைந்துள்ளது. நாளுக்குநாள் வருமானத்தை இழக்கின்ற மீனவர்கள், பெருந்தோட்டத்துறை மக்களால் எவ்விதத்திலும் இந்த பணவீக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாது. வயது முதிர்ந்த பெற்றோர்கள்கூட வீதிகளில் இறங்கி பிச்சையேந்துகின்ற நிலைமை உருவாகி இருக்கின்றது. பிள்ளைகள் சுகவீனமுற்றால் மருந்து வாங்கிக் கொடுக்கக்கூட வழிகிடையாது.
அதைப்போலவே பெரும்பாலானவர்கள் வெளிப்படையாக பேசாத ரூ. 140 ஆக நிலவிய துப்பரவேற்பாட்டு துவாய் பக்கெற் ஒன்று ரூ. 500 ஐ விஞ்சிவிட்டது. இரண்டு மகள்மார்கள் அல்லது மூவர் இருக்கின்ற குடும்பமொன்றின் தாய்க்கும் மகள்மாருக்கும் துப்பரவேற்பாட்டு துவாய்களைக் கொள்வனவுசெய்ய குறைந்தபட்சம் ரூ. 2,000 மேலதிகமாக செலவாகின்றது. இது சம்பந்தமாக குடும்பத்திற்குள்ளேயும் திறந்த உரையாடல் இடம்பெறுவதில்லை. குறிப்பாக பாடசாலைப் பிள்ளைகளின் விளையாட்டு வைபவங்களுக்குச் செல்கின்றவேளையில் முறையான உணவு வழங்கப்பட முடியாது. அவர்களுக்கு ஒரு சோடி சப்பாத்து வாங்கிக்கொடுக்க முடியாது. ரூ. 1500 ஆக விளங்கிய ஒருசோடி சப்பாத்து தற்போது ரூ. 6000 ஐ விஞ்சிவிட்டது. விளையாட்டுக்கான பாதணி ரூ. 20.000 விஞ்சிவிட்டது. அதற்கிணங்க அரசாங்கத்தின் திருட்டுக்களின் சுமை பிள்ளைகள்மீது சுமத்தப்பட்டுள்ளது. குப்பை பசளைக் கப்பல்களுக்கு நட்டஈடு செலுத்துகிறார்கள். தாமதக் கப்பல் கட்டணமாக மில்லியன் கணக்கான டொலர்களை செலுத்துகிறார்கள். எமது பிள்ளைகளுக்கு உடுதுணியும் கிடைக்காத நிலைக்கு கறுப்புக்கோட் அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.
மக்கள் மீது சுமையை ஏற்றுகின்ற செயற்பாடுகளில் அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபடுமாயின் போராட்டத்தை மேற்கொள்ள முன்னணி வகிக்க பெண்கள் தயார். அரசாங்கத்தின் செலவுகளை உயர்த்தி வருமானம் தேடிக்கொள்வதற்காக ரனில் எந்தவிதமான சமூகவியல் ரீதியான ஆய்வுமின்றி மதுபானங்களை விரிவாக்கத் தீர்மானித்துள்ளார். சேதனப் பசளை அரசியல் தீர்மானத்தினால் நட்டஈடு செலுத்தவேண்டிய நிலை மக்களுக்கே ஏற்பட்டது. அதைப்போலவே அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக தற்போது அறிமுகஞ் செய்துள்ள மதுபான உரிமத் திட்டம் ரனில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் ஓகத்து 28 ஆந் திகதி அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது. இதனால் இடம்பெறுகின்ற சமூக நெருக்கடி பற்றி குடும்பத்திற்கு ஏற்படுகின்ற தாக்கம் பற்றி எந்தவிதமான கரிசனையும் அவருக்கு கிடையாது. ரனில் விக்கிரமசிங்கவின் மத்திய வங்கியின் திருடர்களைப் போலவே சாராய உற்பத்தி நண்பர்களினதும் உரிமத் தடை நீக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக எமது நாட்டின் பிள்ளைகளுக்கு நேர்ந்துள்ள சேதத்தை கறுப்புக்கோட் அரசாங்கம் ஒருபோதுமே கருத்திற் கொள்வதில்லை. அதனால் எமது நாட்டின் ஆட்சியை மாற்றுகின்ற போராட்டத்திற்கு தயாராகுமாறு எமது நாட்டின் பெண்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அரசாங்கம் இந்த குரலுக்கு செவிசாய்க்காவிட்டால் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவைக்கின்ற போராட்டத்தில் பெண்கள் முன்னணி வகிப்பார்கள் என்பதை வலியுறுத்துகிறோம்.
நாட்டின் ஆட்சியாளர்கள் எமது வனப்புமிக்க வாழ்க்கையை இல்லாதொழித்து விட்டார்கள்…..

நாளுக்கு நாள் பேசப்பட்டு வருகின்ற, அதிகரித்து வருகின்ற பிரச்சினைகளால் எமது வாழ்க்கையின் வனப்பு இல்லாமல் போயுள்ளதென்றே இத்தருணத்தில் எனது அன்புக்குரிய இலங்கையர்களுக்கு கூறவேண்டி உள்ளது. வயோதிப பருவம், சிறுவர் பருவம் மற்றும் வாலிபப் பருவம் என வாழக்கையின் வனப்பினை பிரித்துப்பார்க்க முடியாது. ஒவ்வொரு மனிதனதும் வாழ்க்கை வனப்புமிக்கதாக அமைதல் வேண்டும். இலங்கையர்கள் என்றவகையில் எமது வனப்புமிக்க வாழ்க்கைக்கு என்ன நேர்ந்தது? சிறுவர் பருவத்தில் யுத்தத்துடன் வாழவேண்டி ஏற்பட்டது. அதன்பின்னர் இனவாத பிரிவினை வந்தது. அதன் பின்னர் கொரோனாவுடன் வாழநேர்ந்தது. இப்போது எங்களுக்கு என்ன நேர்ந்துள்ளது? நாட்டின் ஆட்சியாளர்கள் எடுக்கின்ற திரிபடைந்த பொருளாதார, அரசியல், சமூகத் தீர்மானங்கள், முடிவுகள் காரணமாக பலவிதமான போராட்டங்களில் ஈடுபடவேண்டியநிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மிகையான பணவீக்கத்துடன் போராடவேண்டி நேர்ந்துள்ளது. அப்படியானால் எமது வனப்புமிகு வாழ்க்கை எங்கே? அதனை இல்லாதொழித்தவர்யார்? அதனை இல்லாதொழித்தவர்கள் நாட்டின் ஆட்சியாளர்களே. நியாயமான ஆட்சியைக் கொண்டுவருவதாகக் கூறியே ஆதிகாரத்தைப் பெற்றார்கள். 56 சதவீதமான பெண்கள் வாக்குகளை அளித்து தமது குடும்பத்துடன் வனப்புமிகு வாழ்க்கையைக் கழிப்பதற்காகவே வாக்குகளை அளித்தார்கள். ஆனால் இந்த அனைவருக்கும் அந்த வனப்பினை அனுபவிக்க முடியவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தூக்கிக்கொண்டு போகிறார்கள். பாரதூரமான வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் பாதிக்கப்பட்டு பெருமூச்சுவிட்டுக்கொண்டு பொழுதினைக் கழிக்கவேண்டி நேர்ந்துள்ளது. இத்தகைய ஆட்சி எமக்கு எதற்காக? நாமனைவரும் ஒன்றுசேர்ந்து சட்டத்தின் நியாயத்துடன் சமூக நீதியுடன் எமது விருப்பத்தின்படி வாழவேண்டும். இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த ஒவ்வொரு பெண்ணினதும் எதிர்பார்ப்பாக அமைந்தது அதுவாகும். எனவே அன்புச் சகோதரிகளை ஆழமாகச் சிந்திக்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.
தொழில் புரிகின்ற ஒரு பெண் பெறுகின்ற சம்பளத்தைக்கொண்டு பஸ் கட்டணம், உணவுவேளையை தயாரித்துக் கொள்ளல், ஆடை அணிகளைப் பெற்றுக்கொள்ளல் முதலியவற்றைச் செய்யமுடியாது. எமக்கு எஞ்சுவது என்ன? சிறிய பருவத்தில் கற்றுக்கொண்ட வறுமையின் விஷச் சக்கரத்திற்கு மீண்டும்மீண்டும் இரையாகி வருகிறோம். இதிலிருந்து விடுபட சிறிய அர்ப்பணிப்பினைச் செய்வோம். அதற்காக நீங்கள் மாறவேண்டுமென அழைப்பு விடுக்கிறோம். அந்த மாற்றத்தின் பெறுபேறுகளை உங்களின் பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுங்கள். உங்கள் வாழ்க்கையையும் வனப்புமிக்கதாக அமைத்துக் கொள்ளுங்கள். இந்த நாடு வனப்புமிக்கது. எமது நாட்டை வனப்புமிக்கதாக்குவதற்கான வாய்ப்புகள் அவசியமாகும். அரசாங்கங்களில் அதிகாரத்தில் இருப்பவர்கள். தமதும் தமது குடும்பங்களின் சகபாடிகளினதும் நலன்கருதி அரசியல்ரீதியான முடிவுகளை எடுத்து நாட்டின் பல்லாயிரக்கணக்கான மக்களை வதைப்பார்களாயின் அத்தகைய ஆட்சியொன்று எமக்கு அவசியமா? உணவுரீதியான பாதுகாப்பின்மை, சுகாதாரரீதியான பாதுகாப்பின்மை, வயது முதிர்ந்தவர்கள் மாத்திரமல்ல இளைஞர்களும் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கையல்ல கௌரவமான வாழ்க்கையைக் கழித்திடுவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வது பற்றி நாங்கள் சிந்திக்கவேண்டும். சதாகாலமும் இவ்வாறு உயிர் வாழ்வதா இன்றேல் போராட்டம் நடாத்தி உரிமைகளை வென்றெடுத்து அனைத்து மக்களையும் இந்த நிலைமையில் இருந்து மீட்டெடுப்பதா? அனைத்து மதநிலையங்களிலும் இந்த பிரச்சினையை மேலோங்கச் செய்விக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். அது சம்பந்தமாக கவனஞ் செலுத்துமாறு அனைத்து மதகுருமார்களிடமும் கேட்டுக்கொள்கிறோம். அப்படி இல்லாவிட்டமால் மனிதர்களிடமிருந்து மனிதம் இல்லாதொழிகின்ற நிலைமை உருவாகும்
இந்த ஊடக சந்திப்பில் அகில இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சகோதரி ஆர். கிருஷனா, உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் திருமதி சுபாஷினி விக்கிரமசிங்கவும் பங்கேற்றார்.