Home News Tamil மக்கள் அண்மைக்கால வரலாற்றில் இரண்டு காட்டிக்கொடுப்புகளை எதிர்கொண்டார்கள்

மக்கள் அண்மைக்கால வரலாற்றில் இரண்டு காட்டிக்கொடுப்புகளை எதிர்கொண்டார்கள்

by Ravinath Wijesekara

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினீ அமரசூரிய

அண்மைக்கால வரலாற்றில் பல்வேறு காட்டிக்கொடுப்புகளை மக்கள் எதிர்கொண்டார்கள். 2015 இல் நல்லாட்சி என மக்களை வரிசைப்படுத்தி அந்த பதத்தைக்கூட வெறுக்குமளவிலான காட்டிக்கொடுப்பினை செய்தார்கள். 2019 இல் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய தன்னாதிக்கம் எனும் போராட்டக் கோஷங்களை பாவித்து மீண்டுமொரு தடவை மக்களைக் காட்டிக்கொடுத்தார்கள். இந்த இரண்டுவிதமான காட்டிக்கொடுப்புகளிலிருந்தும் பாதிப்புற்ற மக்கள் பலவிதமான தீர்வுகளைத் தேடிவருகிறார்கள். இதற்காக 73 வருடங்கள் கடைப்பிடித்த பயணப்பாதையை மாற்றியமைக்கவேண்டிய அவசியம் மக்களால் நன்றாக உணரப்பட்டுள்ளது. அந்த நிலைமையின்கீழ் பழைய சக்திகளே புதிதாக அமைவதற்கான மறைவில் மீண்டும் மக்களை தவறாக வழிநடாத்த, மீண்டுமொருதடவை மக்களை காட்டிக்கொடுக்க ஒழுங்கமைகின்ற அறிகுறிகளை காணக்கூடியதாக இருக்கின்றது.

அந்த காட்டிக்கொடுப்பில் அகப்படாமல் குறிப்பாக 1997 இற்குப் பின்னர் மேற்கொண்டுள்ள மாற்றத்துடன் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளுக்கு மாற்றுத் தீர்வாக தேசிய மக்கள் சக்தி செயலாற்றி வருகின்றது. அதனைச் சுற்றி ஒன்றுசேருமாறு நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். பொருளாதார நெருக்கடியுடன் பாரிய சமூக பாதுகாப்பற்றநிலை காணப்படுகின்றது. எமது குடும்பங்கள், எமது சமுதாயங்கள், எமது வேலைத்தலங்கள் அனைத்துமே பாதுகாப்பற்றவை. தேசிய பாதுகாப்பு பற்றி பேசிவந்தாலும் மக்களின் பாதுகாப்பு மிகவும் குறைவாக காணப்படுகின்ற தருணமே இது. வீடுகளில், வீதிகளில் இந்த பாதுகாப்பற்ற நிலைமைகளை பிள்ளைகளும் பெண்களும் அனுபவித்து வருகிறார்கள். பிள்ளைகள், பெண்கள் மற்றும் பெற்றோர்கள் கொவிட் நிலைமையின்கீழ் மிகவும் பாரதூரமானவகையில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பொருளாதார நெருக்கடியினால் தான் சமூகச் சீரழிவு உருவாக்கப்பட்டுள்ளது. 1977 இல் அறிமுகஞ்செய்யப்பட்ட பொருளாதார மறுசீரமைப்புகள் மூலமாக தனியாள்மயமான, நுகர்வுவாதத்தன்மைகொண்ட கலாசாரத்திற்கு பழக்கப்பட்டமையால் பாதுகாப்பற்றதன்மையும் சீரழிவும் இடம்பெறுகின்றமை நிரூபணமாகி உள்ளன.

அறிமுகஞ் செய்யப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி மாதிரி ஊடாக தனித்தனியாக பிரச்சினைகளக்கு தீர்வுகாண்பற்குப் பதிலாக கூட்டுமனப்பான்மை, மனித உறவுகள், கலாசாரப் பெறுமானங்கள், கல்விச் செயற்பாங்கு சம்பந்தமான உரையாடல்கள் மிகவும் பலமானவையாக்கப்பட்டுள்ளன. தனியாள் சுதந்திரமும் அடையாளமும் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளையில் ஒத்துழைப்பு மற்றும் மனித உறவுகள் ஊடாக ஒருவரையொருவர் பேணிப்பாதுகாக்கின்ற ஒருவருக்கொருவர் கூருணர்வுகொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதாகும். இந்த பொருளாதார முறையியலில் அதற்கான தீர்வுகள் கிடையாது. இந்த பொருளாதார முறைமை சமூக உறவுகளை சிதைத்து தொலைவுக்கு கொண்டுசெல்கின்றது. அதனால் பொருளாதார, கலாசார மற்றும் அரசியலை மாற்றியமைப்பதற்காக தலைமைத்துவம் வழங்க தேசிய மக்கள் சக்தி தயார். மீண்டும் காட்டிக் கொடுப்புகளுக்கு அகப்படாமல், பழைய கதைகளை புதிய சொற்களைப் பாவித்து கூறுவதற்கு அகப்படாமல் உண்மையான மாற்றத்திற்காக எம்மோடு ஒன்று சேருமாறு அழைப்பு விடுக்கிறோம்.

தேசிய மக்கள் சக்திபிற்றகோட்டே சோலீஸ் வைபவ மண்டபத்தில் ….. 2021.08.01

You may also like

Leave a Comment