Home News Tamil மனித உயிர்களை கடவுளிடம் ஒப்படைக்கின்ற ஓர் அரசாங்கம் எங்களுக்கு வேண்டாம்……

மனித உயிர்களை கடவுளிடம் ஒப்படைக்கின்ற ஓர் அரசாங்கம் எங்களுக்கு வேண்டாம்……

by Ravinath Wijesekara

இழக்கின்ற ஒவ்வொரு மனித உயிரினதும் பொறுப்பினை அரசாங்கம் ஏற்கவேண்டும்…..

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய  

தேசிய மக்கள் சக்தி என்றவகையில் கொவிட் நோய் காரணமாக இறந்த எமது சகோதர சகோதரிகள், உறவினர்கள்  மற்றும் இந்நாட்டின் பிரசைகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த பெரும்பாலான இறப்புகள் தடுத்துக்கொள்ளக்கூடிய எனினும் தடுக்கப்படாத இறப்புகளாகும்.  அரசாங்கத்தின் கவனயீனம், தாமதம் மற்றும் தவறான முடிவுகள் காரணமாகவே இவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்தார்கள். ஆனால் நாங்கள் ஒருபோதுமே அவர்களிடமிருந்து அப்படிப்பட்ட ஒன்றை எதிர்பார்ப்பதில்லை. அத்தகைய கூருணர்வினை இந்த அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது.  நாங்கள் இழப்பது இந்த நாட்டுக்கு பெறுமதியான உயிர்களே என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்கின்றது. அந்த உயிர்களை காப்பாற்றிக்கொள்ள இயலாமல் போனமைக்காக நாங்கள் மனம்வருந்துகிறோம். 

நாட்டு மக்கள் இத்தருணத்தில் மிகுந்த பயத்துடனேயே இருக்கிறார்கள். எந்த நேரத்தில் தாம் நேசிக்கின்ற மனிதர்கள் பிரிந்து செல்வார்கள் என அறியாத அதிர்ச்சியிலேயே இருக்கிறார்கள். அதைப்போலவே நோயின் இயல்பு காரணமாக எங்களால் வழமைபோல் எம்மால்  ஒருவரையொருவர் பேணிப்பாதுகாத்திட இயலாது.  பொதுவாக எமது சமூகத்தில் ஒருவர் நோயுற்றால் மற்றவர்கள் ஒன்றுசேர்ந்து பராமரிப்பார்கள். இதன்போது குறைந்தபட்சம் இறப்பில் புரியப்படுகின்ற பாரம்பரிய சடங்குமுறைகளில் சிலவற்றைக்கூட புரியமுடியாத நிலைமையே காணப்படுகின்றது. எமது துன்பத்தை தணித்துக்கொள்ள அந்த சடங்குகளைக்கூட இத்தருணத்தில் புரியமுடியவில்லை.  எனவே எமது நாட்டின் பெரும்பாலானவர்கள் மனவேதனையில், அச்சத்தில், கவலையில், சந்தேகத்துடனேயே இருக்கிறார்கள்.   அத்தகைய தருணத்தில் எமது அரசாங்கம் எங்கே எனக் கேட்கவேண்டும். இத்தகைய அனர்த்தமொன்றின்போது தலைமைத்துவம் வழங்கவே  அரசாங்கமொன்று நியமிக்கப்படுகின்றது.  ஏதேனும்விதத்தில் எமது பிரச்சினைக்கு தீர்வுகிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன் மக்கள் இருக்கிறார்கள்.  ஆனால் தற்போது அரசாங்கத்தின் மௌனம் சாதிக்கின்ற நிலைமையை பொறுப்பிலிருந்து விலகிநிற்பதையே நாங்கள் காண்கிறோம்.  நாட்டு மக்களை கடவுளிடம் ஒப்படைப்பதாயின் அரசாங்கம் எதற்காக? தலைவர்கள் எதற்காக? எமது தலைவர்கள் மக்கள் அனுபவிப்பதை எவ்வாறு உணர்கிறார்கள்? மக்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?  அவர்கள் எமக்கு கூறவேண்டும்.

விஞ்ஞானரீதியான தகவல்கள் இருக்கையிலும் தீர்மானங்களை மேற்கொள்வதில்லையாயின்  வேறு தகவல்கள் அவர்களிடம் இருக்கின்றனவா?  நாம் அறியாதவற்றை அவர்கள் அறிவார்களா? பொறுப்புவாய்ந்த ஓர் அரசாங்கமெனில் இவர்கள் எந்த அடிப்படையில் தீர்மானம் எடுக்கிறார்கள் என்பதை அவர்ளை நியமித்த மக்களுக்கு கூறவேண்டும். சுகாதாரத் துறையின் விஞ்ஞானிகளின் விதப்புரைகளை பொருட்படுத்தாமல் தீர்மானம் மேற்கொள்ளல் பற்றி அரசாங்கத்திடமிருந்து பதில் தேவை. அரசாங்கம் இத்தருணத்தில் எடுக்கின்ற முடிவுகள் காரணமாக மக்கள் மடிகிறார்கள். மனித உயிர்கள் என்பது இலக்கங்கள் மாத்திரமல்ல. ஒவ்வோர் உயிருக்கும் கடப்பாடு உண்டு. அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானங்களால் அந்த கடப்பாடுகளுக்கே தாக்கம் ஏற்படுகின்றது.   மனித உயிர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பிலிருந்து விலகிநின்று கடவுளிடம் ஒப்படைப்பார்களாயின் அத்தகைய அரசாங்கம் எமக்கு வேண்டாம். குறைந்தபட்சம் அவர்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் தொடர்பில் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான அறைகளில் மறைந்திருந்து புரிகின்ற நடத்தைகள் பொறுப்பற்றவை.

இந்த அனைத்துவிதமான தவறான முடிவுகளினதும் மத்தியில் அதனைத் தாங்கிக்கொண்டு சுகாதாரத்துறையில் உள்ள அனைவரும் பாரிய செயற்பொறுப்பினை ஆற்றுகிறார்கள். இற்றைக்கு ஒன்றரை வருடங்களக்கு மேலாக அவர்கள் எல்லையற்ற பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தருணத்தில் அபாயநேர்வில் முன்னணியில் திகழ்பவர்கள் அவர்களே. மருத்துவத்துறையிலும்  ஒட்டுமொத்த சுகாதாரத் துறையிலும் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் தொற்றுக்கு இலக்காகி உள்ளார்கள். அவர்களின் ஆரோக்கியத்திற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த தடைகளின் மத்தியில் அவர்கள் ஆற்றுகின்ற அரும்பணிக்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். மக்களைப் பற்றிச் சிந்தித்து அவர்கள் அளித்துவருகின்ற அர்ப்பணிப்பினை நாங்கள் விசேடமாக பாராட்டுகிறோம். மக்களைக் கைவிட்டு சுகாதாரத்துறையைக் கைவிட்டு செயலாற்றவேண்டாமென அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.  அரசாங்கம் மனித உயிர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் தெரிவொன்றினைச் செய்து மனித உயிர்களைப் பார்க்கிலும் பொருளாதாரத்தின்மீது கவனிப்பு காட்டுமாயின் மனித உயிர்களை பொருட்படுத்தாத பொருளாதாரம் எவருக்காக என அரசாங்கத்திடம் கேட்கிறோம். எங்களுக்கு இந்த நாட்டு மக்களே முக்கியம்.   

சனாதிபதியவர்களின் அறியாமை காரணமாக இவ்வாறு இடம்பெறுவதாக கூறமுடியும். ஆனால் அரசாங்கம் என்பது ஒரு தனிமனிதரல்ல. பொதுவான பொறுப்பினை வகிக்கின்ற மக்கள் குழுவாகும். ஒவ்வொருவர்மீது பொறுப்பினை சுமத்தி பொறுப்பிலிருந்து விடுபட இயலாது. அனைவரும் பொறுப்பினை வகிக்கவேண்டும். அவர்கள் எடுக்கின்ற தீர்மானத்தின் பின்னால் உள்ள வாதம் யாது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.  இழக்கின்ற ஒவ்வோர் உயிரினதும் பொறுப்பினை அரசாங்கம்  வகிக்கவேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம்.

You may also like

Leave a Comment