Home News Tamil மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம் நடைபெறுகின்ற வேளையில் லொஹான் ரத்வத்தேவின் செயல் ஒரு விளையாட்டல்ல…..

மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம் நடைபெறுகின்ற வேளையில் லொஹான் ரத்வத்தேவின் செயல் ஒரு விளையாட்டல்ல…..

by Ravinath Wijesekara

சட்டத்தரணி சுனில் வட்டகல

நாட்டுக்குள்ளேபோல் சர்வதேச ரீதியாகவும் மாபெரும் பரபரப்பினை ஏற்படுத்திய ஒருசில செயல்கள் மெகசின் சிறைச்சாலையிலும் அநுராதபுர சிறைச்சாலையிலும் இராஜாங்க அமைச்சரால் புரியப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் பதவிவிலகி உள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் நாங்கள் இந்த பதவிவிலகல் எவ்விதத்திலும் போதுமானதல்ல என்பதை வலியுறுத்துகிறோம். சிறைச்சாலை நிர்வகிக்கப்படுவது அதனோடு சம்பந்தப்பட்ட சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் மூலமாகவேயாகும். லொஹான் ரத்வத்தேவின் செயல்கள் சிறைச்சாலைகள் சட்டம் மற்றும் அதன்கீழ் நிலவுகின்ற விதிகளையும் பிரமாணங்களையும் முழுமையாகவே மீறுவதாகும்.   குடிபோதையில் சிறைச்சாலைக்குள் உரிய நேரத்திற்குப் புறம்பாகச் சென்றுள்ளார்.  அதைப்போலவே காதலி சகிதம் சென்றுள்ளார் அல்லது செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் குறிப்பாக கவனஞ் செலுத்தப்படவேண்டிய விடயம் அநுராதபுரம் சிறைச்சாலையில் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள சிறைக்கைதிகளை மண்டியிடச்செய்வித்து தனது கைத்துப்பாக்கியால் குறிவைத்து மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவமாகும்.    

இது மிகவும் பாரதூரமான ஒரு சம்பவமாகும். சிறைச்சாலைகள் சட்டம், தண்டனைச் சட்டக்கோவை, சுடுபடக் கலங்கள் சட்டம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை உள்ளிட்ட கணிசமான அளவிலான பல சட்டங்களை மீறியமையாகும்.  சர்வதேச சட்டம் சம்பந்தமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைகூட இந்த சம்பவம் தொடர்பில் தலையிட்டுள்ளது. 1990 செத்தெம்பர் 14 அந் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட 45/111 இலக்கமுடைய சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான அடிப்படைக் கொள்கைகளுக்கு இது முற்றிலும் முரணானதென்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. மெண்டெலா கொள்கைக்கிணங்க  இலங்கையின் சிறைக்கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தினால்  உள்நாட்டுச் சட்டமும் சர்வதேச சட்டமும் மீறப்பட்டுள்ளது.  இது சம்பந்தமாக அரசாங்கத்தின் பக்கத்தில் இராஜாங்க அமைச்சர் பதவியை அகற்றியமையாக கூறப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக  பாரிய ஆர்ப்பாட்டம் தோன்றுகின்ற நிலையில் அரசாங்கம் மேற்கொண்டதாக கூறப்படுகின்ற இந்த நடவடிக்கை மக்களை தவறாக வழிநடாத்துவதாகும்.  குற்றவியல் சட்டக் கோட்பாடுகளுக்கிணங்க இடம்பெறுகின்ற தவறுகளை சேர்ந்திணங்கச்  செய்விக்க முடியாது.  இந்த குற்றச்செயல் இடம்பெறுவது அரசாங்கத்திற்கு  எதிராகவே ஆகும். ஆனால் எமது நாட்டில் குற்றவியல் சட்டத்துடன் தொடர்புடைய செயற்பாங்கின்போது பதவியிலிருந்து நீக்குதல் அல்லது திருடப்பட்ட ஆதனத்தைக் கொண்டுவந்து ஒப்படைக்கின்ற முன்னுதாரணம் அமுலில் இருக்கின்றது.  லொஹான் ரத்வத்தே இராஜாங்க அமைச்சரின் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெயர் மாத்திரம் கழற்றப்பட்டுள்ளது. இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் நிறுவனத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் பதவியில் தற்போதும் அவர் இருக்கிறார்.

சதொச தலைவர் 15 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட மோசடி செய்தமை வெளிப்பட்ட பின்னர் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். திருவாளர் அஜித் நிவாட் கப்ரால் பொது திறைசேரியின் பணத்தை கிரேக்க முறிகளில் ஈடுபடுத்தியவராவார்.  அவரை மீண்டும் மத்திய வங்கியின் ஆளுனராக நியமித்துள்ளார்கள். ஆட்கொலை தொடர்பில் தவறாளியான ‘சொக்கா மல்லீ’  பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமர்கிறார். உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதி ஆயம்கூட அங்கீகரித்த  ஆட்கொலையுடன் தொடர்புடைய ஒருவர் சனாதிபதி மன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டு  நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.   தமது பெற்றோர்களின் கல்லறைகளை பொதுப்பணத்தில் கட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் சனாதிபதியாகி இருக்கிறார். மல்வானையில் காணியொன்றைக் கொள்வனவுசெய்து பொதுப்பணத்தில் நிர்மாணிப்புகளைச்செய்து இன்றளவில் உரிமையாளர் அற்ற காணியாக மாற்றப்பட்டுள்ளது. அவர் தற்போது நிதி அமைச்சர். நாட்டை சிரிக்க வைக்கின்ற உலகத்தை சிரிக்க வைக்கின்ற செயற்பாடுகள் இவ்வவாறுதான் இடம்பெற்றன.

நீதிமன்றத்தில் கட்டுக்காவலில் உள்ள சிறைக்கைதி ஒருவரின் தலையில் சுடுபடைக்கலனை வைத்து மண்டியிடச்செய்து அச்சுறுத்தியமை பாரதூரமான ஒரு செயலாகும். சிறைச்சாலைகள் அமைச்சர் சிறைச்சாலைக்குள் துப்பாக்கியொன்றை எவ்வாறு எடுத்துச் சென்றார்? குற்றவியல் சட்டத்தின்கீழ் கொள்ளப்படுகின்ற பல சட்டதிட்டங்களை மீறி அவர் இன்னமும் நிம்மதியாக  நடமாடுகிறார். சாதாரண பொதுமக்களை பாதிக்கின்ற சட்டங்கள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சருக்கு ஏற்புடையதாகாமல் போவது எப்படி? ஆசிரியர் சம்பள போராட்டங்களில் பங்கேற்ற  ஆசிரியர்களை கைதுசெய்ததும் சட்டத்தரணிகளுக்குக்கூட பார்க்க அனுமதி வழங்கவில்லை. சிறைச்சாலைகள் சட்டத்தின்படி பாராளுமன்ற உறுப்பினரொருவர்கூட காலை 5.30 தொடக்கம் மாலை 5.30 இற்கு இடைப்பட்ட நேரத்திலேயே சிறைக்கைதியொருவரை பார்க்கமுடியும். ஆனால் அமைச்சர் இரவில் சிறைச்சாலைக்குள் அத்துமீறிப் பிரவேசித்துள்ளார்.  ஒருசில அரச உத்தியோகத்தர்களுக்கும் இதில் பங்கு உண்டு. இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறும்போது சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் பதவிவிலகுகிறார்.  இந்த இரண்டில் எது உண்மை?  இந்த நிலைமையை அரசாங்கம் விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை  நாங்கள் வலியுறுத்துகிறோம்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெறுகின்றவேளையில்கூட இவ்விதமாக நடந்துகொள்வது விளையாட்டல்ல. 

குற்றவியல் சட்டத்தின் சீரழிவு பொதுமக்களின் சுதந்திரம் ஆபத்தில் என்பதற்கான அடையாளமாகும்…..

சட்டத்தரணி  ஜகத் அபேநாயக்க

சட்டத்தின் ஆட்சியில் நிலவுகின்ற பிரதான விடயமாக அமைவது ஒவ்வொரு பிரசையும் சட்டத்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட வேண்டுமென்பதாகும். எனவே நாட்டின் ஒவ்வோர் ஆளுக்கும் சட்டம் அமுலாக்கப்படல் வேண்டும். அதனூடாக ஒவ்வோர் ஆளினதும் சுதந்திரமும் காப்புநிலையும் பாதுகாக்கப்படுகின்றது.  அது பற்றிய உணர்வு  ஒவ்வொருவரிடமும் ஏற்படும்.  ஏதேனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால்  நியாயமான வழக்கு விசாரணைக்கு முகங்கொடுத்து  அவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்பது இவற்றின் ஊடாகவே உறுதிசெய்யப்படுகின்றது.  ஆனால் நிறைவேற்றுத் துறையைச் சேர்ந்த ஒருவர் சட்டத்தை தனது கைகளில் எடுத்துக்கொண்டால் சட்டம் மீதுள்ள நம்பிக்கை தளர்வடையும்.  நாளை வேறோர் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் வீதியில் எவரையாவது துப்பாக்கியால் சுட முயற்சிசெய்தால் என்ன நேரிடும்? சட்டத்தின் சீரழிவினால் இத்தகைய நிலைமையே உருவாகும். அது அராஜகத்திலேயே முடிவடையும்.  மக்கள் சட்டத்தைக் கடைப்பிடிப்பதை நிராகரிக்கக் கூடும். அது மிகவும் பயங்கரமான நிலைமையாகும்.  இவ்வாறான ஓரிரு சம்பவங்கள் மாத்திரம் நிலவுவதில்லை.  இதன் இறுதிவிளைவு மக்களின் பக்கத்தில் பொதுமக்களின் பக்கத்தில் சட்டம் மீதான நம்பிக்கை சிதைவடைவதாகும். குற்றவியல் சட்டம் சரிவர அமுலாக்கப்படாமை தெளிவாக புலப்படுகின்றது. இலங்கையின் உயர்நீதிமன்றம்வரை நீதியை நிலைநாட்டிக்கொள்ளச் செல்லமுடியும். ஆனால் தமது அதிகாரத்தைப் பிரயோகித்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக்கூட மாற்றிக்கொண்டதும் குற்றவியல் சட்டத்தின் அத்திவாரம் சிதைவடைகின்றது.  அப்பாவி பிரசையின் பாதுகாப்பு இந்த சட்டத்தின் அத்திவாரமாகும். இது இவ்விதமாக சீரழிந்தால் எந்தவொரு நாட்டிலும் மிகவும் மோசமான நிலைமை உருவாகும்.  இதனால் இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் சரிவர அமுலாக்கப்படல் வேண்டும்.  லொஹான் ரத்வத்தே தொடர்பான சம்பவம் அரசியல் சதுரங்க விளையாட்டில் காய்களை அங்குமிங்கும் நகர்த்தி மீட்டெடுக்கக்கூடிய ஒன்றல்ல. மிகவும் பாரதூரமான நிலைமையாகும். பொது மக்களின் சுதந்திரம், சனநாயகம், சட்டத்தின் ஆதிக்கம் பற்றிய பாரதூரமான ஆபத்தின்  அடையாளம்  இதில் அடங்கியுள்ளது.

சர்வதேச தீர்மானங்களின் மத்தியில் இன்னல்களுக்கு இலக்காவது சனாதிபதியோ அமைச்சர்களோ அல்ல. பொது மக்களேயாவர்…

சட்டத்தரணி அகலங்க உக்வத்த

20 வது திருத்தம் கொண்டுவரப்பட்டு சனாதிபதியின் தத்துவங்களை அதிகரித்தமை ஊடாக சட்டத்தின் சமத்துவம் அமுலாவதில்லை என்பதை வெளிப்படையாகக் கூறினால் எம்மால் எம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இருக்க முடியும். சட்டத்தரணிகள் என்றவகையிலன்றி  சாதாரண பிரசைகள் என்றவகையில் சிந்தித்தாலும்  இவ்விதமாக நேரடியான கூற்றுகளை வெளியிட்டால் எம்மால் அதற்கிணங்க செயலாற்ற முடியும். சிறைச்சாலையொன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆளை ஓர் அமைச்சர் என்றுகூடக் கூற நான் விரும்பவில்லை.  இந்த ஆளின் இறந்தகால நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் அதுவும் இதைப்போலத்தான். பொலிசு, நீதிமன்றம், சிறைச்சாலை ஆகிய அனைத்துமே ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்த நிறுவனங்களாகும். ஒரு குற்றவாளி சம்பந்தமாக அல்லது சுத்தவாளி சம்பந்தமாக நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பு கிடைக்கின்றமை நீதி நிலைநாட்டப்படுவதாக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.  ஒருசில அவ்வாறானவையல்ல.     இந்த மனிதர்கள் இறந்தகாலத்தில் செய்தவற்றை மீண்டும் செய்யாதிருப்பார்கள் என்பதற்கான உத்தரவாதம் கிடையாது. இந்த ஆளுக்கு தண்டனைச் சட்டக் கோவையின் ஏறக்குறைய அரைவாசியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் கடந்தகாலத்தில் இருந்தன. அவை சம்பந்தமாக வழக்கு விசாரணைகள் காணப்பட்டன.   அரசாங்கம் கூறுகின்ற மட்டத்தில்  விஞ்ஞானரீதியாக வழங்கப்பட்ட ஒரே அமைச்சுப்பதவி இதுதான். இந்த ஆள் சிறைச்சாலைக்குள் இருந்தார்.  அதனால் அவருக்கு அதுசம்பந்தமாக அனைத்துவிதமான புரிந்துணர்வும் இருக்கின்றது. விஞ்ஞானரீதியாக மிகச்சிறந்த அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட ஆளும் இவ்விதமாக நடந்துகொள்வாராயின் மற்றைய ஆட்களைப் பற்றிப் பேசவேண்டியதில்லை. ஒரு நாடு என்றவகையில் எடுத்துக்கொண்டால் இந்த நிலைமைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்கள் மத்தியில் பாதகமான நிலைமையை ஏற்படுத்துகின்றன. அவர்கள் இந்த நாட்டுக்கு விதிக்கின்ற ஒருசில மட்டுப்பாடுகள், தடைகள் தாக்கத்தை ஏற்படுத்துவது சனாதிபதிக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ அல்ல. இந்நாட்டு மக்களுக்கே. இதன் பாரதூரத்தன்மை சாதாரண மக்களால் உணரப்படவேண்டும். ஆட்கள் என்றவகையில் முன்வந்து இந்த நிலைமைகளுக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும்.

சிறைச்சாலைக் கைதியொருவரின் பாதுகாப்பு சம்பந்தமாக அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும்….

சட்டத்தரணி உபுல் குமரப்பெரும

இங்கு 2 திட்டவட்டமான விடயங்கள் இருக்கின்றன. இராஜாங்க அமைச்சர் அனுமதி இல்லாத நேரத்தில் சிறைச்சாலைக்குச் சென்றமை மற்றும் அதன் உத்தியோகத்தர்களின் நடத்தை என்ற வகையிலாகும். சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு சிறைச்சாலையை அவதானிப்பதற்கான இயலுமை நிலவுகின்றது. ஆனால் அவர் அவ்விதமாக சென்று நடந்துகொண்ட விதம் அறிக்கைகளில் குறிப்பிடப்படுகின்றது. அவரது பிரத்தியேக சுடுபடைக் கலனை சிறைச்சாலைக்குள் எடுத்துச்சென்றுள்ளார். கடந்த காலங்களில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியதன் மூலமாக தனது சேவைபெறுனர்களை பார்க்கச்செல்கின்ற சட்டத்தரணிகளின் சப்பாத்துக்கள் பட்டிகளைக்கூட கழற்றி  உடற்பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். பேனைகளைக்கூட பரிசோதித்தார்கள். இது சம்பந்தமாக சட்டத்தரணிகள் சங்கமும்கூட தலையிடவேண்டிய நிலையேற்பட்டது.  இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுலில் இருக்கையில் சுடுபடைக்கலனை எடுத்துச்செல்வதற்கான அனுமதி எங்கிருந்து?   

அமைச்சரால் சிறைச்சாலையொன்றை பரீட்சித்துப் பார்க்கமுடியும். அவசியமெனில் சிறைக்கைதிகளுடன் உரையாடவும்  இயலும். முன்னொரு காலத்தில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சிறைச்சாலையை பரிசோதிக்கச் சென்று அவருக்கு பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க நேரிட்டது.   இங்கு   சிறைச்சாலையில் தடுத்துவைத்துள்ள சிறைக்கைதிகளை வெளியில் எடுத்து கைத்துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை   அமைச்சரின் விடயப்பரப்பிற்குள் வருகின்ற விடயமன்று. இங்கு அத்துமீறிப் பிரவேசித்தமை, குற்றவியல் பலவந்தம், மரண அச்சுறுத்தல் விளைவித்தமை, உத்தியோகத்தர்களின் கடமைக்கு தடையேற்படத்தியமை மற்றும் சட்டவிரோத ஒன்றுகூடல் ஆகிய தண்டனைச் சட்டக்கோவையின் கீழான பல தவறுகள் புரியப்பட்டுள்ளன. சிறைக்கைதிகளின் உரிமைகள் பற்றிய பிரகடனத்தின் ஏற்பாடுகள் மீறப்பட்டுள்ளன. நீதிமன்றக் கட்டளையின்பேரில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆளொருவர் சம்பந்தமாக நீதிவான் ஒருவர் அல்லது வேறொரு நீதிவான் திட்டவட்டமான அறிவுறுத்தல்களை கட்டளைகளை சிறைச்சாலைகள் அதிகாரிக்கு வழங்குவார். அதனை நீதிமன்ற நம்பிக்கைப் பொறுப்பு எனக் கூறுவார்கள்.  அவரது பாதுகாப்பு சம்பந்தமாக நீதிமன்றம், அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

 இந்த பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கையும் அடிப்படை உரிமைகளும் மீறப்பட்டுள்ளன. இது ஒரு சின்னஞ்சிறிய தவறு அல்ல. அமைச்சரொருவர் போய் கைத்துப்பாக்கியைக்காட்டி ஆட்களை வெளியில் இழுத்துப்போட முடியுமாயின் இது ஆபிரிக்கா போன்ற நிலைமையாகும். றுவாண்டா, சூடான் போன்ற ஆபிரிக்க நாடல்ல இது. ஆசியாவின் மிகவும் தொன்மைவாய்ந்த சனநாயக இராச்சியமாகும். இது இராணுவ ஆட்சி நிலவுகின்ற நாடல்ல. எனவே இதனை ஓர் ஆபிரிக்க நாடாக மாற்றவேண்டாம். சிறைச்சாலையில் உள்ள மனிதனுக்குக்கூட உரிமைகள் இருக்கின்றன. இவற்றை சிதைத்திட வேண்டாம். அரசாங்கம் இது தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்நாட்டுக்கு தடைகள் விதிக்கப்பட்டால் இங்குள்ள எந்தவோர் ஆட்சியாளரும் அல்லற்படப் போவதில்லை.  இந்நாட்டின் பொதுமக்களே பொருளாதார மற்றும் எந்தவொரு தடையாலும் பாதிக்கப்படப் போகிறார்கள். இந்த அனைவராலும் அவர்களின் தாய்நாட்டுக்குச் செல்லமுடியும். அவ்வாறு செல்ல பணமும் இருக்கின்றது.  எம் எவருக்கும் அதனைச்செய்ய இயலாது. எனவே இந்நாட்டின் வழியுரிமைக்காக, அரசுக்காக  தமது பொறுப்பு ஆற்றப்படுவதை அரசாங்கம் மக்களுக்கு வெளிக்காட்ட வேண்டும்.

மறுபுறத்தில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் நடத்தையையும் கவனித்துப் பார்க்கவேண்டும். அமைச்சர் வந்து சிறைக்கைதிகளுடன் உரையாடிவிட்டுச் சென்றதாகவே அவர் கூறியுள்ளார்.  அரச ஊழியரொருவரின் அடிப்படைப் பொறுப்பு அரசியலமைப்பினை கட்டிக்காப்பதாகும். அவர் அதற்காக உறுதிப்பிரமாணம் செய்துள்ளார்.  அரச உத்தியோகத்தர்கள் நிர்வகிக்கப்படுகின்ற விதிகளுக்கு கட்டுப்பட்டுள்ளார்கள்.  இவையனைத்துமே இருக்கையில் அவர் புரிந்துள்ளது தமது அமைச்சரைப் பாதுகாப்பதற்காக கூற்று ஒன்றினை வெளியிட்டமையாகும்.  அரசியல்வாதியைப் பாதுகாப்பதற்கான கடப்பாடு  அரச உத்தியோகத்தர்களுக்கு கிடையாது.  அரசியல்வாதிகளின் தவறான தீர்மானங்களை நிராகரித்த கீர்த்திமிக்க  அரச உத்திஅயாகத்தர்கள் இந்த நாட்டில் இருந்திருக்கிறார்கள். நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மேலிருந்து வருகின்ற ஒருசில தீர்மானங்களுடன் இணங்கமுடியாது என்பதாலேயே பதவியை இராஜிநாமா செய்தார்.  அரச உத்தியோகத்தர்களுக்கு முதுகெழும்பு இருக்கவேண்டும்.  அவர் இந்த நாட்டு மக்களுக்கே பொறுப்புக்கூற வேண்டும்.  திருவாளர் உபுல்தெனியவும் இந்த பதவியிலிருந்து இராஜிநாமா செய்யவேண்டும்.  அரசாங்க சேவை ஆணைக்குழு அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார பதிலளிக்கையில்….

அவர் பொது ஆதனங்களை பயன்படுத்தி இருப்பின் கடமைப்பணிக்காக அவ்வாறு செய்யவில்லை.  தமது நன்பர்களின் களியாட்டத்திற்காகவே. இங்கு நாங்கள் பார்ப்பது அவர் பயணித்த வாகனத்தையல்ல. அவரது நடத்தையையே. அவரது நடத்தை சட்டவிரோதமானது. அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கிறோம்.  அமைச்சருக்கு மதுபோதையில் மக்களின் மனித உரிமைகளை ‘பயிட்டுக்கு’ எடுக்க உரிமை கிடையாது. மனிதர்களைத் துன்புறுத்தி அதிலிருந்து மகிழ்ச்சியடைவது ஒரு மனோவியாதியாகும். இந்த இராஜாங்க அமைச்சர் புரிந்த செயலின் பாதூரத்தன்மை இறந்த காலத்தில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுடனேயே இருக்கின்றது. மஹர படுகொலை, வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை ஆகிய அனைத்தினதும் மூலமாக  எமது நாட்டின் மனித உரிமைகள் பற்றி சர்வதேசரீதியில் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.  இந்த நாட்டில் தலையீடுசெய்து தடைகளை விதிக்க பின்னணியை அமைத்துக்கொடுப்பது இந்த அரசாங்கமாகும். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு விசாரணையின்றி 16 மாதங்கள் கைதில் இருக்கிறார். வழக்கு விசாரித்து, குற்றவாளியாக காணப்படின் சிறையில் அடைப்பது பற்றி எமக்குப் பிரச்சினை கிடையாது. கவிஞர்கள்கூட இவ்விதமாக சிறைவைக்கப்பட்டுள்ளார்கள்.  ஆற்றைக் கடக்க கல்விமான்களை பாவித்தார்கள். இன்று அவர்களை வீசியெறிந்து விட்டார்கள். திருவாளர் கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்திற்கு கொண்டுவர அயராது உழைத்த கல்விமான்கள் இன்று தலைமறைவாகவே இருக்கிறார்கள்.  எனவே இன்று ஒழுங்கமைந்த கள்வர் கும்பலொன்றே   இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள்.  எமது நாட்டின் பொருளாதாரம், சமூக கலாசார வாழ்க்கை ஆகிய அனைத்துமே இந்த கும்பல் மூலமாகவே கட்டப்படுத்தப்படுகின்றது. சம்பவத்தின் பாரதூரத்தன்மைக்கிணங்க   1 வருடத்தில் இருந்து  6 வருடம் வரையான காலம் தண்டனை வழங்கக்கூடிய  தவறுகள் இங்கு புரியப்பட்டிருக்கக்கூடும். இன்னமும் எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதாலேயே அதனைச் சரியாகக் கூறமுடியாது. இந்த சம்பவத்துடன் அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குமாறு திருவாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். கைவிலங்கு மாட்டப்படவேண்டிய கரங்களுக்கு ஒருசில பிக்குமார்கள் பிரித் நூல் முடிச்சுப்போட்டால் இத்தகைய பிரச்சினைகள் தோன்றும்.  அவருடன் இருந்த பெண்ணுக்கும் ஒரே சட்டம் அமுலாகவேண்டும். இன்னமும் பொலீசார் இது சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை. பஹன்துடுவ சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் அடுத்தநாளில் கைது செய்தார்கள். இங்கு இருப்பது அதைவிட பாரதூரமான நிலைமையாகும். பொலிசும் குற்றப் புலனாய்வத் திணைக்களமும்  இந்த இடத்திற்குச்சென்று  சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடமும்  சிறைச்சாலைகள் ஆணையாளரிடமும் வாக்குமூலங்களை பதிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள பாரதூரமான நிலைமை இந்த அடிப்படை நிலைமைகூட இடம்பெறாமையாகும்.

You may also like

Leave a Comment