தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்ற வகையில் கடந்த மாதம் 09 ஆந் திகதி கோல்பேஸ் போராட்டம் மீது மேற்கொள்ளப்பட்ட கீழ்த்தரமான தாக்குதலும் அதன் பின்னர் தோன்றிய சம்பவத் தொடரின் சமநிலையற்றதன்மையையும் காட்டுவதற்காகவே இந்த விசேட ஊடக கலந்துரையாடல் நடாத்தப்படுகின்றது. உண்மையான காரணத்தைக் கண்டறியாமல் அரசியல் கட்சியொன்றுமீது அரசியல் இயக்கமொன்றுமீது எந்தவிதமான அடிப்படையுமின்றி அந்த தாக்குதலின் பொறுப்பினை சுமத்த அரசாங்கம் முயற்சிசெய்து வருகின்றது. அலரி மாளிகையில் உரையாடல் இடம்பெற்ற பின்னர் அனைத்துவிதமான அழிவுகளும் ஏற்பட்டன. காரணம் மற்றும் விளைவு பற்றி புத்த தர்மத்தின்படி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. காரணம் தோன்றிய அலரி மாளிகையை மறந்து விளைவு மீது தவறான பொருள்விளக்கம் கொடுக்க முனைகிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் அல்லது தேசிய மக்கள் சக்தியின் தொடர்பு பற்றிக்கூற அரசாங்கம் முயற்சிசெய்து வருகின்றது. உண்மையான இடத்தில் இந்த பிரச்சினையைப் பிடித்துக்கொள்ளுமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுகிறோம். அவ்வாறு இல்லாவிட்டாலும் சனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் பொருந்தமாட்டாது. தாக்குதல் சம்பந்தமாக பிரபல்யமான ஒரு சில பாத்திரங்கள் தற்போது களத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றன. சட்டத்தின் அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால் இதற்கு நேரடியாகப் பொறுப்புக்கூறவேண்டிய காரணத்தை உருவாக்கிய மகிந்த ராஜபக்ஷவும் ஜோன்ஸ்ரன் பர்னாந்துவும் தண்டனைச் சட்டக் கோவையையும் குற்றவியல் சட்டக் கோவையையும் சார்ந்ததாக எடுத்துக்கொண்டால் சதித்திட்டத்தையும் சதித்திட்டத்தை ஏற்படுத்துகின்ற வன்மம்சார்ந்த கூற்றுக்களையும் வெளியிட்டவர்களாவர். அதன்பின்னர் ஒருசில சம்பவங்கள் உருவாகின. நாங்கள் அவற்றை அனுமதிக்கப்போவதில்லை.

கேஸ் வரிசை, பால் மா வரிசை, எண்ணெய் வரிசை நாட்டு மக்களுக்குள்ள பிரதான பிரச்சினையாகும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிறோக எரிபொருள் வழங்கவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு செலுத்தவும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுகின்ற விதத்தை பாராளுமன்றத்தில் கண்டோம். நாங்கள் இந்த சமநிலையற்ற தன்மை பற்றியே பேசுகிறோம். இன்னமும் கைதுசெய்யப்பட்டிராத மகிந்த ராஜபக்ஷ? ஜோன்ஸ்ரன் பர்னாந்து ஆகியோரை உடனடியாக கைதுசெய்யுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். அவர்கள்தான் இந்த பிரச்சினையை உருவாக்கியவர்கள். அதன் பின்னர் திருமதி ஹந்தபான்கொட, மகிந்த கஹந்தகம போன்றவர்கள் இருக்கிறார்கள். “மைனா கோ கமவிற்கு தாக்கிவிட்டு வருகிறோம். கோட்டா கோ கமவிற்கு தாக்கப் போகிறோம். நாங்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டோம்.” என திருமதி ஹந்தபான்கொட கூறுகிறார். இவ்வாறு கூறுபவர் பொஜன பெரமுண ஆசிரியர் தொழிற்சங்கத்தின் தலைவராவார்.
அநுரங்க எனப்படுகின்ற அமைதிவழி எதிர்ப்பு தெரிவித்தவரை பொல்லால் தாக்குகிறார்கள். இன்னமும் தாக்கப்பட்ட அநுரங்க தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே இருக்கிறார். நாட்டு மக்களின் கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதாலேயே ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் கோபாவேசமடைகின்ற தருணங்கள் இருக்கின்றன. இந்த கோபாவேசமடைவதை மக்கள் விடுதலை முன்னணி மீதோ தேசிய மக்கள் சக்தி மீதோ சுமத்த அரசாங்கம் முயற்சிசெய்து வருகின்றது. ஒரு சில நீதிமன்றங்களுக்கு பொலீஸார் சமர்ப்பித்துள்ள ‘பீ’ அறிக்கைகளின்படி வழக்கினை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல முடியாதென நீதிபதிகள் கூறியுள்ளார்கள். தாக்குதலுடன் தொடர்புடைய மக்கள் விடுதலை முன்னணியச் சேர்ந்த 150 பேர் இருந்ததாக பாராளுன்றத்தில் உறுப்பினரொருவர் கூறியுள்ளார். அதே உறுப்பினர் இதற்கு முன்னர் எக்னெலிகொடவை பிரான்ஸில் சந்தித்ததாக கூறினார். இத்தகைய பொய்யான குறைகூறல்களை முன்வைத்து காரணத்தின் மீது கைவைக்காமல் விளைவு பற்றி பேசுவது பலனற்ற செயலாகும். சிரேட்ட பிரதி பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குற்றச்செயல் புரிந்தவர்களுடன் இருக்கின்ற புகைப்படங்கள் இருக்கின்றன. இந்த ஆட்கள் அலரி மாளிகையில் இருந்து பயணித்து தாக்குதல் நடாத்தியமை தொடர்பாக கைது செய்யப்படல் வேண்டும். ஆனால் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டோம் எனக் கூறிய பின்னரும் இன்றும்கூட ஹந்தபான்கொட வெளியில் இருக்கிறார். அதிகாரத்திற்காக மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டதால் சேதமுற்ற பலியானவர்கள் இன்னமும் சிகிச்சைபெற்று வருகிறார்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படல் வேண்டுமென்பதை வலியுறுத்துகிறோம்.
பொலீஸார் மேற்கொண்டு வருகின்ற சட்டவிரோதமான கைதுசெய்தல்கள் சம்பந்தமாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம் – சட்டத்தரணி சுசந்த தொடாவத்த
அந்தந்த பிரதேசங்களி்ல் பொலீஸாரால் பல்வேறு ஆட்கள் கைதுசெய்யப்பட்டு பிரதேச நீதிமன்றங்ளில் ஆஜராக்கப்பட்டுள்ளார்கள். பிரதேச அரசியல்வாதிகளின் வீடுகளைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜராக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பெரும்பாலான வழக்குகளில் தோற்றுகிறோம். சம்பந்தப்பட்ட பொலீஸாரால் சரியான புலன்விசாரணையின்றி கைதுசெய்யப்பட்டுள்ளமை எமக்கு தெளிவாகியுள்ளது. அலரி மாளிகைக்கு 09 ஆந் திகதி சென்றமைக்கான வீடியோ சான்றுகள் உள்ள பிரதேச அரசியல்வாதிகள் அன்று மாலை 4.00 மணிக்கு தமது விடுகளுக்கு தாக்குதல் நடாத்தப்பட்டவேளையில் வீட்டில் இருந்ததாக பொலீஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்கள். அவர்கள் அவ்வாறு முறைப்பாடு செய்கையில் எந்தவிதமான அடிப்படையுமின்றி மக்கள் விடுதலை முன்னணியினதும் தேசிய மக்கள் சக்தியினதும் முனைப்பான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் பெயர்களை பொலீஸாருக்கு கொடுத்துள்ளார்கள். குறிப்பாக இந்த நிலைமையை ஹோமாகம, கெஸ்பேவ மற்றும் அவிஸ்ஸாவளை பிரதேசங்களில் காணக்கூடியதாக இருந்தது. இதனூடாக அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தி இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதாக செய்திகளை உருவாக்கி இருக்கிறது. பெரும்பாலான நீதிமன்றங்களில் உள்ள நீதவான்கள் விடயங்களை நடுநிலையாக ஆராய்ந்து ஆரம்பத் தருணத்திலேயே பிணை வழங்கியுள்ளார்கள். ஒருசில பொலீஸில் எந்தவிதமான நியாயமான அடிப்படையுமின்றி கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை அடையாள அணிவகுப்பில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். அதனூடாக சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

நேற்கு (21) மீகொட பொலீஸால் ஹோமாகம நீதிமன்றத்திற்கு ஆஜராக்கியிருந்த சந்தேகநபர் ஒருவர் பற்றிய விபரம் மற்றுமோர் உதாரணமாகும். ஒரே வர்த்தக சங்கத்தில் அண்மித்த இரண்டு கடைகளில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆளொருவரின் முறைப்பாட்டின்பேரில் மற்றைய கடையின் வணிகத்தொழில்முயற்சியாளருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டு பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். முறைப்பாட்டாளரின் மகளால் சம்பந்தப்பட்டவரை அடையாளம் காணமுடியுமெனக் குறிப்பிட்டு அடையாள அணிவகுப்பில் முன்வைக்குமாறு கோரப்பட்டிருந்தது. பொலீஸார் மேற்கொள்கின்ற இந்த சட்டவிரோதமான கைதுசெய்தல்கள் மற்றும் சட்டவிரோதமான வழக்கு தொடருதல் சம்பந்தமாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் எவ்விதத்திலும் தயங்கமாட்டோம். அரசாங்கம் தமக்கு அநுகூலம் பெறுவதற்காக மிகவும் தெளிவாக அவர்களின் பிரதேச அரசியல்வாதிகளை ஈடுபடுத்தி பெயர்ப்பட்டியல்களை தயாரித்து கைதுசெய்யப்படத் தூண்டியுள்ளார்கள். நாங்கள் தெளிவாகவே அதனைக் கண்டிக்கிறோம்.
இல்லை எனக் கூறிய மல்வான காணி பசிலினுடையதென பொலீஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்கள் – சட்டத்தரணி அகலங்க உக்வத்த
அரசாங்கமும் அரச ஊடகங்கள் அனைத்தும் கூட்டுச்சேர்ந்து புரிகின்ற பொய்யான பிரசாரங்கள் பல இருக்கின்றன. இந்த பொய்யான பிரசாரங்கள் மத்தியில் நிலவுகின்ற முரண்பாடுகள் எமக்குத் தெளிவாகி வருகின்றன. அது சம்பந்தமான ஓர் உதாரணத்தை பிரபல்யமான மல்வான வீடு சம்பந்தமாக முன்வைக்கிறேன். கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்ற 26/2017 வழக்குடன் தொடர்புடைய ஆதனம் இன்றளவில் ஒரு வழக்குப் பொருளாகும். 10 அந் திகதி பகல் 1.00 மற்றும் மாலை 5.00 மணிக்கு இடையில் இந்த ஆதனம் தீமூட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பீ 58890/2022 இனகீழ் பூகொட நீதிமன்றத்திற்கு தொம்பே பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 12 – 2 இற்கு இடையிலான ஆரம்ப சம்பவத்திற்குப் பின்னர் மாலை 5.00 மணியளவில் ஏறக்குறைய முன்னூறுபேர் வரையான குழுவினர் வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தொம்பே பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியான பிரியந்த எனப்படுகின்ற உத்தியோகத்தர் கௌரவ நீதிமன்றத்திடம் விடயங்களை முன்வைத்துள்ள விதத்தை நான் கூறுகிறேன்.

“2022.05.10 ஆந் திகதி பொலிஸ் நிலையத்திற்கு 119 மத்தியநிலையம் மூலமாக 12.20 மணிக்கு கிடைத்த தகவலின்பேரில் மல்வான பிரதேசத்தில் உள்ள திரு பசில் ராஜபக்ஷவின் வீட்டுக்கு கும்பலொன்று வந்து ஆதனங்களுக்கு சேதமேற்படுத்துவதாக” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவுகாலமும் அந்த காணி பசில் ராஜபக்ஷவினுடையதல்ல என்றே நாங்கள் அறிந்திருந்தோம். ஏழு மூளைகளைக் கொண்டவரும் அப்படித்தான் கூறினார். இராணுவ தலைமையகத்தில் திட்டம் வரையக் கொடுக்கப்பட்டிருந்த ஜயக்கொடி என்பவருக்குச் சொந்தமான காணி என்றுதான் இவ்வளவு காலமும் கூறப்பட்டிருந்தது. தொம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அதனை மறந்துவிடுகிறார். உண்மை நினைவுக்கு வருகின்றது. திரு பசில் ராஜபக்ஷவின் வீட்டுக்கு தீமூட்டப்பட்டுள்ளதாகவே நீதிமன்றத்திடம் விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுவரை காலமும் கூறிய கதை பற்றி தொம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைக் கொண்டுவந்து பசில் ராஜபக்ஷ கேள்வி கேட்கமுடியும். இந்த வழக்கு அறிக்கையில் நீதிவான் அவர்கள் வழங்கியுள்ள கட்டளையை நான் மேற்கோள் காட்டுகிறேன்.
“இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய கம்பஹா மேல்நீதிமன்றம் 26/2017 இலக்கமுடைய வழக்கு சம்பந்தமான வழக்குப் பொருளான சம்பந்தப்பட்ட ஆதனத்தை தீமூட்டி அழித்தமை தொடர்பாக தொம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்ட ‘பீ’ அறிக்கையைக் கவனத்திற் கொள்ளும்போது இந்த குற்றச்செயல் 2022.05.10 ஆந் திகதி இடம்பெற்றுள்ளதெனவும் பொலீஸ் குற்றப்புலனாய்வு உத்தியோகத்தர்கள்கூட இந்த குற்றச்செயலை விசாரணைசெய்ய இரண்டு நாட்களுக்குப் பின்னரே 2022.05.12 ஆந் திகதியே வந்துள்ளமை தெளிவாகின்றது. மேலும் இன்றளவில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரை இந்த இடத்திற்கு வரவழைக்க இயலாமல் போயுள்ளமை புலனாகின்றது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்த கும்பலை அடக்குவதற்காக மூன்று துப்பாக்கித் தோட்டாக்களை பிரயோகத்துள்ளதாக ‘பீ’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும் அதற்காக பாவிக்கப்பட்ட சுடுபடைக்கலன் இற்றைவரை வழக்குப் பொருளாக சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் இந்த தவறு 1982 இன் 12 ஆம் இலக்க பொது ஆதனங்கள் விடயத்துறையில் கொள்ளப்படுகின்ற தவறாகுமென முறைப்பாட்டாளர் காட்டியுள்ளார். எவ்வாறாயினும் இந்த ஆதனம் இற்றைவரை பறிமுதல் செய்யப்பட்ட ஆதனமொன்று அல்லவெனவும் கம்பஹா மேல்நீதிமன்றத்தில் 26/2017 ஆம் இலக்கமுடைய வழக்கின் வழக்குப் பொருள் எனவும் முன்வைக்கப்பட்டு விடயங்களுக்கிணங்க புலனாகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொது ஆதன சட்டத்தில் கருத்திற்கொள்ளப்படுகின்ற 8 வது பிரிவின் பிரகாரம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார். அதன் மூலமாகப் புலனாவது உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் சரியான புலனாய்வினை மேற்கொண்டு இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்பதாகும். இந்த குற்றச்செயல் பகல் நேரத்தில் புரியப்பட்டுள்ளதோடு மேல்நீதிமன்றத்தின் வழக்குப்பொருளாக அமைகின்ற ஓர் ஆதனத்தை பாதுகாத்துக்கொள்ள தொம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இயலாமல் போனமை கவலைக்குரிய ஒரு விடயமாகும். அதன்படி தெளிவாகின்ற விடயம் யாதெனில் இந்த குற்றச்செயல் சம்பந்தமான புலன்விசாரணைகள் தொடர்ந்தும் தொம்பே பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியால் மேற்கொள்ளப்படுவதன் மூலமாக அதிகமான சிக்கல்நிலை உருவாகியுள்ளதென்பதாகும்.”
அத்துடன் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரையொன்றும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை சம்பந்தமாக பொலிஸ் மா அதிபரின் கவனஞ் செலுத்தப்படல் வேண்டுமென நீதிபதி அறிவித்துள்ளார். 20 ஆந் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஆனால் மேலதிக அறிக்கையை இன்னமும் சமர்ப்பித்துள்ளவர் தொம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாவார். பொலிஸ் மா அதிபர் இதுசம்பந்தமாக புலனுணர்வு கொண்டவராக இல்லை. அவருக்கு தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் தேசபந்துவை பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டிய தேவை நிலவுகின்றது. பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஆற்றியுள்ள உரைகளின்படி பொலீஸ் மா அதிபரிடமும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சு செயலாளரிடமும் இருந்து கிடைத்துள்ள பணிப்புரையின் பிரகாரம் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேசபந்து தென்னக்கோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் வழங்கியுள்ள வாக்குமூலத்தின்படி பொலீஸ் மா அதிபரும் அந்த செயலாளரும் தண்டனைச் சட்டக்கோவையின் 112 வது பிரிவின்படி சட்டப்படி செயலாற்றாமை சம்பந்தமாக தண்டனை பெறக்கூடிய தவறினைப் புரிந்துள்ளார்கள். பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 56 வது பிரிவின்படி அவர்கள் கடப்பாடு கொண்டுள்ள கடமையை ஈடேற்றவில்லை. பொலீஸ் மா அதிபர் களங்கமற்றவராக வேண்டுமாயின் தேசபந்து தன்னக்கோன் உடனடியாக கைதுசெய்யப்படல் வேண்டும். அதைப்போலவே புதிய நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவால் பலியானவர்களை பாதுகாப்பதற்காக சட்டத்தை அமுலாக்கவும் இயலும். நல்லாட்சிக் காலத்தில் அவன்காட் சம்பவம் காரணமாக அரசாங்கத்திற்கு உள்ளேயிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இக்காலத்தில் ராஜபக்ஷாக்களை பாதுகாத்த நீதி அமைச்சர் மீண்டும் அதே பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீமிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகிணங்க சனத் நிஷாந்தவுடன் தேசபந்து தென்னக்கோன் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அவர் ஏன் கைதுசெய்யப்படவில்லை என நீதிவான் கேட்டிருந்தார். தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே சட்டத்துறை தலைமை அதிபதியின் சார்பில் பதிலளிக்கப்பட்டிருந்தது. சனத் நிஷாந்த கைதுசெய்யப்பட்டு தேசபந்து ஏன் கைதுசெய்யப்படவில்லை எனபது நீதவானுக்கு கேள்விக்குறியாக இருந்தது. கடமையை ஈடேற்றாமை சம்பந்தமாக எல்லாப் பக்கங்களிலும் உறுதியாகின்றது. வாக்குமூலம் ஒன்றைக் கொடுத்தால் சாதாரண பிரசைகள் கைதுசெய்யப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் பற்றிய புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும் கைதுசெய்யப்படுவதில்லை. சட்டத்துறை தலைமை அதிபதிக்கும் தனது களங்கமற்ற தன்மையை வெளிக்காட்டுவதற்கிருந்த 29 வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொண்டிருந்த அழுக்கான வரலாறு இருந்தாலும் நாமல் ராஜபக்ஷவும் சட்டவிஜரோத கூட்டங்களை நடாத்தி புரிந்த சூழ்ச்சி சம்பந்தமாக கைதுசெய்யப்பட முடியும். நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் புனர்வாழ்வளிப்பு பற்றிப் பேசினார். உண்மையாகவே தகப்பனுக்கு புனர்வாழ்வளித்து ஆரம்பித்தால் நல்லது. அதன் பின்னர் தன்னுடன் அண்ணன் தம்பிமார்கனை புனர்வாழ்வு பெறுமாறு கூறுங்கள்.

பெற்றோல், கேஸ், மண்ணெண்ணை இன்றி மக்கள் பலநாட்களாக வரிசைகளில் இருக்கையில் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு ஹெலிகொப்டரில் வருகிறார் – சட்டத்தரணி சரித் கல்ஹேன
நாங்கள் இலங்கை வரலாற்றில் இருண்ட காலகட்டமொன்றில் இருள்மயமான பொழுதின் பின்னரே சந்திக்கிறோம். மக்களுக்கு அவசியமான அடிப்படை தேவைகளைப் பெற்றுக்கொள்ள நாளின் அதிகமான நேரத்தை வரிசைகளில் செலவிட நேர்ந்துள்ளது. அதேவேளையில் பாராளுமன்றத்தில் 4 நாட்களாக விவாதம் நடாத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்குப் பதிலாக தமது அவலக்குரல் பற்றிபேசத் தொடங்கினார்கள். இந்நாட்டு மக்கள் எக்கச்சக்கமாக வன்முறைகளை கண்டிருக்கிறார்கள். கடந்த நாட்களில் தோன்றிய வன்முறைக்கும் இதற்கு முன்னர் ஏற்பட்ட நிலைமைகளுக்கும் இடையில் தெளிவான வித்தியாசமொன்று நிலவுகின்றது. 83 இல் கறுப்பு யூலையின்போது மக்களின் வீடுகள் பற்றியெரிவதை அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நாடுபூராவிலும் தோன்றிய பகைமை காரணமாக தீப்பற்றியெரிவதை அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தேர்தலின் பின்னர் பகைமையை விதைத்து பற்றியெரிவதை வெற்றிபெற்ற அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இத்தடவை மக்கள் தமது பகைமையை அரசியல்வாதிகள்மீது கட்டவிழ்த்து விட்டார்கள். ஆனால் நாங்கள் ஒருபோதுமே வன்முறையை அனுமதிப்பதோ அல்லது அதற்குப் பக்கச்சார்பு கொண்டவர்களாகவோ இருப்பதில்லை. ஆனால் இந்த நாட்டின் ஆட்சியாளன் இப்போதாவது குறைந்தபட்சம் வன்முறையின் மறைவில் இருக்கின்ற உண்மைக் கதையை விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்நாட்டு மக்களுடன் இளைஞர்கள் ஒருமாத காலமாக அமைதியான போராட்டமொன்றை கோல்பேஸ் மைதானத்தில் முன்னெடுத்து வந்தார்கள். ஆனால் பிரதமரின் வீட்டில் குழுமிய கட்சி ஆதரவாளர்கள் மதம்பிடித்த யானையை கட்டவிழத்து விட்டதுபோல நாட்டின் ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் முன்னிலையில்கூட நேரலை ஒளிபரப்பினை பொருட்படுத்தாமல் மிருகத்தனமாக தாக்குதலை நடாத்தினார்கள். பொலீஸார் கைகோர்த்துக்கொண்டு காடையர்களை தடுத்துநிறுத்த முயற்சிசெய்வதாக காட்டிக்கொண்டாலும் பார்த்தமாத்திரத்திலேயே வன்முறைக்கு இடமளித்தார்கள். சட்டத்தைக் கையில் எடுத்த காடையர்கள் அதனை தெளிவாக வெளிக்காட்டினார்கள். எவரேனும் சட்டத்தைக் கையில் எடுத்தால் ஏனையோருக்கும் தானாகவே அதற்கான வழி திறக்கப்படுகின்றது. மக்களின் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளமுடியாத பாராளுமன்றம் இந்த நாட்டின் இளைஞர் தலைமுறையினரையும் வளர்ந்துவருகின்ற மாற்று அரசியலையும் பற்றி மக்களை தவறாக வழிநடத்துவதையே சமூகமயப்படுத்த முயற்சிசெய்து வருகின்றது. இவர்களின் மானியமுறை அரசியல் முறைக்கே அடிவிழுந்துள்ளது. நிலப்பிரபுக்களின் அடிமைகளாக மக்களை தொடர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இவர்களிடம் நிலவுகின்றது. பல நாட்களாக மக்கள் பெற்றோல், கேஸ், மண்ணெண்ணை இல்லாமல் வரிசைகளில் காத்திருக்கையில் பாராளுமன்றத்திற்கு ஹெலிகொப்படர்களில் வருபவர்கள் இருக்கிறார்கள். அந்த ஹெலிகொப்டர்கள் நீரினால் இயக்கப்படுகின்றனவா என எங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். இப்போதாவது குறைந்தபட்சம் கூருணர்வு படைத்தவர்களாக இருங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்ததாக வீட்டிலுள்ள நாய்கள் கடிக்கத் தொடங்கிவிடும். ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களின் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள்கூட அவர்களை தாக்கியுள்ளமையை நாங்கள் கண்டோம். வருங்காலத்தில் நிலைமை அதைவிட பாரதூரமானதாக அமையும்.
மிகவும் விசித்திரமான முறையிலேயே பொலீஸார் சட்டத்தை அமுலாக்கி வருகிறார்கள். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயச் சட்டத்தின்கீழ் ஆட்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குகின்ற விதத்தை கடந்த காலத்தில் நாங்கள் கண்டோம். நீதவான் நீதிமன்றத்திடமிருந்து பிணை பெறமுடியாதவகையிலேயே இந்த சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்கள். பொலீஸார் அந்த சட்டத்தை இத்தருணத்தில் மறந்துவிட்டார்கள். அந்த சட்டத்தின் மூன்றாவது பிரிவு மத மற்றும் இனங்களுக்கிடையில் பகைமை விதைக்கப்படுவதற்கு எதிராக செயலாற்றுதற்கான ஏற்பாடுகள் இந்த சட்டத்தில் இருக்கின்றன. ஆனால் இந்த பிரிவினை உண்மையாகவே அவசியமான சந்தர்ப்பங்களில் அமுலாக்குவதில்லை. அதனை சட்டத்துறை தலைமை அதிபதியும் மறந்துவிட்டார். கோட்ட கோ கமவிற்கும் மைனா கோ கமவிற்கும் தாக்குதல் நடாத்தியவர்களை கைதுசெய்யுமாறு சட்டத்துறை தலைமை அதிபதி அறிவுறுத்தல் வழங்குவதோடு பிரதேச வன்முறைகள் சம்பந்தமாக அரசாங்கத்தின் பிரதேச அரசியல்வாதிகளே கைதுசெய்யுமாறு அறிவுறுத்தல் வழங்குகிறார்கள். எதிர்ப்பு இயக்கத்திற்கு சிறிது உணவு வழங்கியவர்களையும் கைதுசெய்கின்ற நிலைமை உருவாகி இருக்கின்றது. தற்போது நிறுவப்பட்டுள்ள அரசாங்கத்திடமிருந்து குறைந்தபட்ச பிரச்சனைகளுக்குக்கூட தீர்வுகள் கிடைப்பதில்லை. திருவாளர் ரனில் விக்கிரமசிங்க பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார், நியாயமான விசாரணைகளை மேற்கொள்வார், டொலர்கள் பாய்ந்துவரும், எரிபொருள் மற்றும் கேஸ் பிரச்சினை தீர்ந்துவிடும் என பார்த்துக்கொண்டு இருப்பதானால் அத்தகைய ஒன்று நடக்கமாட்டாது. அவர் அவரது பிரச்சினையை மாத்திரம் தீர்த்துக்கொண்டார். மைத்திரிபாலவிற்குச் செய்தது அவருக்குத் தற்போது சக்கிராயுதமாக திரும்பி வந்துள்ளது. ராஜபக்ச ஆட்சிக்கு ஏற்பட்ட தற்காலிகமான தாக்குதலில் இருந்து மீட்டெடுப்பதற்காக ரனில் விக்கிரமசிங்கவை பாவித்து வருகிறார்கள். அரசியல் வேட்டையாடலை நிறுத்திக்கொள்ளுமாறே நாங்கள் அவர்களுக்கு நாங்கள் வலியுறுத்துகிறோம். பொலீஸார் சட்டத்தை நியாயமான முறையில் அமுலாக்கவேண்டுமென்பதாகும். சீருடைக்குள் இருப்பவர்களும் மனிதர்களே. பொலீஸ் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவு அல்ல. பொலீஸாரின் கடமைகளைச் செய்யுங்கள். பொலீஸார் இருப்பது மக்களின் பாதுகாப்பிற்காகவன்றி அரசியல்வாதிகளுக்கு பணிவிடை செய்வதற்காக அல்ல, அவர்களின் கால்களை கழுவுவதற்காக அல்ல.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்…..

கேள்வி :- சட்டத்தை நியாயமாக அமுலாக்குவதற்காக நீங்கள் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குகிறீர்கள்?
பதில் :- சட்டத்தரணிகள் தொழிலுடன் பின்னிப்பிணைந்த சில விதிமுறைகள் இருக்கின்றன. தொழில்வாண்மையாளர்கள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கவிதிமுறைகள் உயர்நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் சாதாரண பொதுமக்களுக்கு முக்கியமானதாக அமைகின்ற, மக்களின் உரிமைகள் அரசாங்கத்தினால் மீறப்படுகின்ற இவ்வாறான சிறப்பான சந்தர்ப்பங்களில் சட்டத் தொழில்வாண்மையாளர்கள் தனிப்பட்ட முறையில் அல்லது இலவசமாக தோற்றுகின்ற தருணங்கள் இருக்கின்றன. அதைப்போலவே சட்டத்தரணிகள் சங்கத்திற்கு மேலதிகமாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் போன்ற வேறு அமைப்புகள் இருக்கின்றன. இந்த அமைப்புகளிலிருந்து எடுக்கின்ற தீர்மானங்களுக்கிணங்கவும் சேவைபெறுனர்களுக்காக இடையீடு செய்துவருகிறோம். ஏதேனும் குற்றச்செயல் புரிந்தவர்களுக்காக சட்டத்தரணிகள் தோற்றுவதை தடுக்க இயலாது. அது எந்தவோர் ஆளுக்கும் அரசியலமைப்பு ரீதியாககிடைத்துள்ள உரிமையாகும். சேவைபெறுனர்களுக்காக தோற்றுவதை மறுக்கவேண்டிய விடயங்கள் இல்லாவிட்டால் அரசியலமைப்பில் உறுதிசெய்துள்ள முன்கூட்டிய குற்றமற்றவர் என்ற அடிப்படையில் இருந்துகொண்டு சட்டத்தரணியொருவரின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை இருக்கின்றது. மேல் நீதிமன்றத்தில் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கொன்றின் மேன்முறையீட்டாளர் சார்பாக வேறொரு சட்டத்தரணி இல்லாவிட்டால் அரசதரப்பு சட்டத்தரணியொருவர் வழங்கப்படுவார். ஒருவருக்காக சட்டத்தரணியொருவரை பெற்றுக்கொள்வதையோ அல்லது சட்டத்தரணியொருவரை பெற்றுக்கொள்வதை தடுக்கவோ எமக்கு இயலுமை கிடையாது. ஆனால் இந்த சம்பவத் தொடரில் அரசியல் பழிவாங்கலுக்கு இலக்கானவர்களுக்காக பொலீசாரின் சட்டத்திற்குப் புறம்பான தலையீடு தொடர்பில் நாங்கள் தோற்றுகிறோம்.
கேள்வி :- கடந்த நாட்களில் நடுத்தெருவில் தாக்குதல் நடாத்தியமை அல்லது கொலைபுரிதல் இடம்பெற்றது. சரியாகவும் இருக்கலாம் பிழையாகவும் இருக்கலாம் போராட்டத்தின் சார்பாக தோற்றுவார்கள் என்ற கருத்து மக்களிடம் இருக்கின்றதல்லவா?
பதில் :- நாங்கள் வன்முறைக்குச் சார்பாக தோற்றுவது கிடையாது. தாம் விரும்புகின்ற அரசியலுக்காக தோற்றுவதற்கான, அந்த கருத்துடன் வாழ்வதற்கான உரிமை இருக்கின்றது. ஆனால் வன்முறையை போராட்டத்தில் சுருக்கிவைத்து சட்டத்தரணிகள் செயற்படுவார்களென நினைப்பது கடினமாகும்.