நாட்டைக் கட்டியெழுப்புகின்ற உண்மையான தேவை உள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒருங்கிணைந்து வருகிறார்கள்.

இன்றளவில் அதிகாரத்தில் இருக்கின்ற ரனில் விக்கிரமசிங்கவிற்கு இந்நாட்டின் சுதேச பிள்ளைகள் பிரபாகரனைப் போலவே புலப்படுகிறார்கள். நாட்டை இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டு போசாக்கின்மையால் அவதிப்படுகின்ற பிள்ளைகளின் வயிறுகள் முன்நோக்கி தள்ளப்படிருப்பது ரனில் விக்கிரமசிங்கவிற்கு குண்டுகளை வயிற்றில் கட்டிக்கொண்டிருப்பது போலவே தெரிகின்றது. போர்த்துக்கேயர்கள் இந்த நாட்டுக்கு வரும்போது இருந்த குடிமக்கள் போன்றவர்களே ரனில் விக்கிரமசிங்கவிற்குத் தேவை. நாட்டு மக்கள் நாட்டின் குடிமக்களாக மாறுவதை ரனில் விரும்புவதில்லை. அன்று வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்து நிறைவேற்றிக்கொண்ட சட்டதிட்டங்களில் ரனில் விக்கிரமசிங்கவும் ராஜபக்ஷாக்களும் மறைந்துகொண்டிருப்பது அதனாலாகும். ஆனால் தற்போது இருப்பது தேசிய மக்கள் சக்தியின் இடையீட்டினால் குடிமக்களாக மக்கள் மாற்றப்பட்டுள்ள நிலைமையாகும். ராஜபக்ஷாக்கள் நாட்டை உருப்படியாக்குவார்களென ஒருகாலத்தில் மக்கள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால் எழுபத்துநான்கு வருட ஆட்சியில் ரனில் விக்கரமசிங்காக்கள், ராஜபக்ஷாக்கள் இறுதியாக மக்களைக் கொண்டுவந்திருப்பது மக்களுக்குப் பதிலாக குடிமக்களை வலுவூட்டுகின்ற தீர்வுக்கட்டமான ஒரு யுகத்திற்காகும்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மக்கள் வதைக்கப்படுவதை நிறுத்தி திருட்டுகள், மோசடிகள், ஊழல்களை நிறுத்தி புதிதாக சிந்திக்கின்ற மக்கள் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுசேர்கிறார்கள். இந்த நாட்டு மக்கள் நாட்டைக் கட்டியெழுப்பி முன்நோக்கி நகர்வதை எவராலும் தடுக்க இயலாது. தற்போது எஞ்சியுள்ளது மிகவும் சிறிய ஒரு பகுதியே என ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி இணைந்திருப்பவர்கள் எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய குழுவினராவார். பல்வேறு தொழில்வாண்மையாளர்கள், தொண்டர் ஊழியர்கள் உண்மையான அதிர்வுடன் தொடர்ந்தும் எம்மைச்சுற்றி இருக்கிறார்கள். நாங்கள் கட்டியெழுப்புவது மகாராஜாக்களை அல்ல. நாட்டைக் கட்டியெழுப்புகின்ற உண்மையான தேவைக்காக கலைஞர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் போன்ற எந்தவிதமான பேதமுமமின்றி தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி இருக்கிறார்கள்.
இந்த நாட்டைக் கட்டியெழுப்பி பிள்ளைகளின் எதிர்காலத்தை நலமானதாக்க எம்மை அர்ப்பணிப்போம்.

நாம் அனைவருமே களைத்துப் போயுள்ளோம். இந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கெஸ்பேவ தொகுதி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள பொருந்திரளான மக்கள் இந்த நாட்டுக்கு ஒரு செய்தியைக் கொடுக்கிறார்கள். அதுதான் எந்தவொரு சவாலின் மத்தியிலும் முன்நோக்கி நகருகின்ற மக்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒருங்கிணைந்துள்ளார்கள் என்பதாகும். இந்த மாநாட்டுக்காக பெருமளவிலான பெண்கள் வந்திருப்பது மகிழ்ச்சி தருகின்றது. பொருளாதாரச் சீரழிவின் மத்தியில் எமது குடும்பங்களின் உணவுப் பாங்கு நூற்றுக்கு எழுபது சதவீதத்தால் மாறியுள்ளமை மதிப்பாய்வுகள் மூலமாக வெளியாகி உள்ளது.
பிள்ளைகளுக்கு அவசியமான முறையான போசாக்கினைப் போன்றே முதியவர்களுக்கு அவசியமான உணவினை பெற்றுக்கொடுக்கவும் முடியாதுள்ளது. உட்கொள்கின்ற உணவிலிருந்து முறையான போசாக்கு கிடைப்பதல்லை. உணவுவேளைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது. போசாக்கின்மை பற்றி பலவிதமான புள்ளிவிபரத் தரவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கின்மை நிலைமை வேகமாக அதிகரித்து வருவது எம்மனைவருக்கும் தெளிவாகி வருகின்றது. இவையனைத்தும் இடம்பெறுவது எமது கருமபலன் அல்லது ஆண்டவரின் சித்தப்படியே என சிலகாலம் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். எமது மனதைத் தேற்றிக்கொள்ள நாங்கள் பலவற்றை பிரயோகித்தோம். ஆனால் இந்த பேரழிவு எழுபத்திநான்கு வருடங்களாக இந்த நாட்டை ஆட்சிசெய்த அரசியல்வாதிகளாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென்பது தற்போது எமக்குத் தெளிவாகி உள்ளது. இந்த நிலைமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வீதியில் இறங்குகின்ற தாய்மார்கள், தகப்பன்மார்கள் பற்றி ரனில் விக்கிரமசிங்க வித்தியாசமான ஒரு கதையையே கூறுகிறார். பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வீதிக்கு வருபவர்கள் பயங்கரவாதிகள் என ரனில் விக்கிரமசிங்க கூறுகிறார்.
அரசியல் என்பது எம்மிடமிருந்து ஒதுக்கப்பட்டுள்ள ஒன்றல்ல. எமது வாழ்க்கை அரசியல்மயமானதே. நாங்கள் உண்கின்ற உணவுகள், நாங்கள் வீடுகளில் வசிக்கின்றவிதம், பஸ் ஒன்றில் சீட் கிடைக்காமல் போவது, தொழிலை இழத்தல் இவை அனைத்துமே அரசியலாகும். எமது வாழ்க்கை அரசியலாகுமென்பதை விளங்கிக்கொண்ட பெற்றோர்கள் குடும்பத்தாருடன் ஆர்பாட்டங்களுக்காக வீதியில் இறங்குகிறார்கள். அரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல. எமது பிள்ளைகளை இப்படிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு கொண்டுவரக்கூடிய நிலைமை இருக்கவேண்டும். நான் குறிப்பாக பெண்களிடம் கூறிக்கொள்வது அரசியல் தேவையற்றதாக்கபட்ட ஒன்றல்ல. வாக்காளர்களில் பெரும்பகுதியினர் பெண்களே என்பதை நாமனைவரும் அறிவோம். வாக்குகளை பாவிக்கின்றவர்கள் மத்தியில் 56% பெண்களாவர். அதிகாரத்திற்கு வருகின்ற அரசாங்கங்களால் பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து சம்பந்தமாக பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ளப்பட்டாலும் எமக்கு எந்தவிதமாக பெறுபேறும் கிடைக்கமாட்டாது. தேசிய பாதுகாப்பிற்கு வரவு செலவில் 15% ஒதுக்கப்பட்டாலும் எமக்கு எந்தவிதமான பாதுகாப்பும் கிடைப்பதில்லை. பிள்ளைகள் என்றவகையில், பெண்கள் என்றவகையில் பெரிதாகக் கூறுகின்ற தேசிய பாதுகாப்பில் இருந்து எமக்கு என்ன கிடைக்கின்றது? கல்விக்ககாக வரவுசெலவில் 3% இற்கு குறைவாகவே ஒதுக்கப்படுகின்றது. இவையனைத்திலும் நிலவுகின்ற பிரச்சினை எமக்குத் தெளிவாகின்றது. அப்படியானால் தீர்வு என்ன? தீர்வு எமது கைகளிலேயே இருக்கின்றது. அதைவிட சுதந்திரமான, அன்பான வாழ்க்கையைக் கட்டியெழுப்பிட நாமனைவரும் ஒன்றுசேர வேண்டும். நாங்கள் முனைப்பானவர்களாக மாறவேண்டும். சுயநலவாதிகளை உருவாக்குகின்ற இந்த சிஸ்டத்திற்குப் பதிலாக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனைவரும் கூட்டாக ஒருங்கிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்பி பிள்ளைகளின் எதிர்காலத்தை நலமானதாக்கிட அர்ப்பணிப்போமென அழைப்பு விடுக்கிறோம். நாங்கள்தான் இந்த நாட்டைப் பொறுப்பேற்க வேண்டும்.
வன்முறைக்குத் தூபமிடுவது ரனில்….. தேர்தல் வரைபடத்தை சுருட்டிக்கொள்ள நாங்கள் இடமளிக்கமாட்டோம்

எமது நாட்டில் நீண்டகாலமாக பலவிதமான அரசியல் மாற்றங்களை மேற்கொள்ள சாதகமான எதிர்பார்ப்புடனேயே மக்கள் இடையீடு செய்தார்கள். எமது பிரச்சினகளைத் தீர்த்துக்கொள்ள அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டதையிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் குறுகிய காலத்தில் ஏமாற்றத்திற்கு இலக்காகினார்கள். ஏன் இப்படி நடந்தது? மக்களின் எதிர்பார்ப்புக்களைவிட வித்தியாசமான எதிர்பார்ப்புகளே ஆட்சியார்களிடம் நிலவியது. இந்த நிலைமையின் கீழேயே மக்கள் மீண்டும்மீண்டும் ஏமாற்றத்திற்கு இலக்காகினார்கள்.
ஏமாற்றத்திற்கு இலக்காகிய இந்த நிலைமையை தீர்வுக்கட்டமான வகையில் நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும். இந்த பணியைக் கட்டாயமாக ஈடேற்றுகின்ற நோக்கத்திற்காகவே தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இலங்கை ஒரு வறிய நாடு என்பதை உறுதிப்படுத்தவதற்காக அமைச்சரவைப் பத்திரத்தைப் போடுகிறார்கள். பாடசாலைக்குச் செல்கின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. பாடசாலைப் பிள்ளைகள் மயக்கமுற்று வீழ்கிறார்கள். வைத்தியசாலைகளில் மருந்து கிடையாது. நோயாளிகள் இறக்கிறார்கள். கைத்தொழில்கள் சீரழிகின்றன. இவ்வாறான துன்பங்கள் ஒரு நாட்டுக்கு மேலும் அவசியமா? நாங்களும் எமது பிள்ளைகளும் இந்த கவலைக்கிடமான நிலைமைக்கு இரையாகிவிட்டோம். இந்த நிலைமையை மாற்றியமைத்திட நிர்ப்பந்திக்கின்ற அனுபவங்கள் தராளமாக எமக்கு இருக்கின்றன.
சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நாட்டைவிட்டுச் செல்லவேண்டிய நிலையேற்பட்டது. மகிந்த ராஜபக்ஷவிற்கு அலரி மாளிகையிலிருந்து கள்ளத்தனமாக வெளியேறி கடற்படை முகாமொன்றில் தங்கவேண்டிய நிலையேற்பட்டது. பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடுசெல்ல பிளையிற் ஒன்றைத் தேடிக்கொள்ள முடியாமல் போயிற்று. பாரிய பர்வதம்போல் இருப்பதாக இருப்பதாக கூறிய பாசறை எமது கண்ணைதிரிலேயே சிதைவடைந்துள்ளது. அப்படியானால் மக்களிடமே பலம் இருக்கின்றதென்பது தெளிவாகின்றது. எனினும் இந்த மக்கள் சரிவர ஒழுங்கமையவில்லை. அந்த மக்களை ஒழுங்கமைத்தே தேசிய மக்கள் சக்தி தொகுதிக்கிளைகளை அமைத்து வருகின்றது. தொகுதிக்கிளைகளிடம் மூன்று பிரதான விடயங்கள் கைளிக்கப்பட்டுள்ளன. மீண்டுமொரு மக்கள் எழுச்சியின்போது அது தேசிய மக்கள் சக்தியின் கீழேயே இடம்பெறவேண்டும். இல்லாவிட்டால் மக்கள் எழுச்சி விரயமாகிவிடும். அதைப்போலவே ஊர்மட்டத்தில் மக்களை ஒழுங்கமைவு செய்விக்கின்ற பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ள நிலைமையின் மத்தியில் மக்களை பாதுகாத்துக்கொள்வதும் அதன் மத்தியில் இருக்கின்ற முதன்மைப்பணியாகும். நாட்டின் உற்பத்தி சீரழிந்து. பணவீக்கம் பாரியளவில் உயர்வடைந்துள்ளது. தொழில்கள் அற்றுப்போய் வருகின்றன. மாதாந்த சம்பளம் பெறுகின்ற மக்களால் கடனை மீளச்செலுத்த முடியாது. இந்த அழுத்தத்திற்கு எதிராக மக்கள் கொதித்தெழுவார்கள். அத்தகைய எழுச்சியை வன்முறையின்பால் தள்ளிவிட அரசாங்கம் முயற்சிசெய்து வருகின்றது. அதனால் மிகவும் ஒழுங்கமைந்தவகையில் எழுச்சியடைகின்ற மக்கட் குழுக்களுக்கு எமது தொகுதிக் கிளைகள் தலைமைத்துவம் வழங்கவேண்டும். எதிரிக்கு சாதகமானதாக அமைகின்ற எதனையும் செய்யாதவிதத்தில் ஒழுங்கமைந்தவகையிலான தலைமைத்துவம் அளிக்க தொகுதிக்கிளை செயலாற்றவேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தேர்தல்களுக்குத் தயாராகி வருகின்றது. எனினும் அரசாங்கம் தேர்தல்களைக்கண்டு அஞ்சுகின்றது. உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பலவிதமாக தந்திரோபாயங்களைக் கையாளுகின்றது. ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக்கூட மக்கள் ஆணையற்ற ரனில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தலில் அடைகின்ற தோல்வியின் மத்தியில் தொடர்ந்தும் சனாதிபதி கதிரையில் அமர்ந்திருக்கமுடியாது. அதைப்போலவே தேர்தலில் நியமித்துக்கொள்ளப்பட்ட மகிந்த ராஜபக்ஷவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம் மக்களால் விரட்டியடிக்கப்பட்டது. இப்படியானால் நிகழ்கால அரசாங்கத்திற்கும் மக்கள் ஆணை கிடையாது. அதனால் அவர்கள் தேர்தலுக்குச் செல்லப்போவதில்லை. தேர்தலுக்குச் சென்றால் அவர்களுக்கு கிடைத்த அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் ஆணை தற்போது எங்கே இருக்கின்றது என்பது தெளிவாகும். ரனிலும் ராஜபக்ஷவிற்கும் ஒன்றுசேர்ந்து தேர்தலுக்குச்செல்ல முடியாது. ஊர்மட்டத்தில் இந்த இருசாராரையும் ஒன்றுசேர்க்க முடியாது. இத்தகைய நிலைமையில் தேர்தலை ஒத்திவைக்க இருதரப்பினரும் விரும்புகிறார்கள்.
அதிகாரமற்ற அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க பலவிதமான வியூகங்களை அமைத்துவருகின்றது. எனினும் தேசிய மக்கள் சக்தியின் தொகுதிக் கிளைகள் விசேட பொறுப்பினை ஏற்று போராட்டத்திற்கு தயாராவதைப்போன்றே தேர்தலுக்குத் தயாராகவும் வேண்டும். எனினும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒருவரையொருவர் பின்தொடர்ந்துசென்று தோற்கடிக்கின்ற மனோபாவத்திற்குப் பதிலாக நாட்டைக் கட்டியெழுப்புகின்ற கூட்டான உணர்வுடன் ஒருங்கிணைய வேண்டும். பிறரது வேதனையைத் தனது வேதனையாக எவ்வாறு மாற்றிக்கொள்வது எனும் கூட்டான உணர்வு எமக்குத் தேவை. அவ்வாறின்றி மேலிருந்து ஓர் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டோம் என்பதற்காக நாட்டை உருப்படியாக்கிவிட இயலாது. சமூகத்தில் மாற்றமொன்று அவசியமாகும்.
ஒரு நாட்டுக்கு நேரிடக்கூடிய அனைத்துவிதமான அழிவுகளையும் இந்த நாட்டுக்கு கொடுத்துவிட்டார்கள். ரனில் விக்கிரமசிங்க திருகோணமலைக்குச் சென்று க அன்று தாங்கிகளை விற்றிருந்தால் இன்று எண்ணெய் இருந்திருக்கும் எனக் கூறுகிறார். எமது நாட்டுக்கு எண்ணெய் கிடைக்காமல் போனது தாங்கிகள் காரணமாக அல்ல: டொலர் இன்மை காரணமாகவே. ஐ.ஓ.சீ. கம்பெனிக்கு எட்டு தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எட்டு தாங்கிகளும் நிரப்பப்பட்டிருக்கவில்லை. அவசியமாகி உள்ளது இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய பொருளாதார திட்டமாகும், அரசியல் மாற்றமொன்றும் அதற்காக அணிதிரட்டப்பட்ட மக்களின் தயார்நிலையுமாகும். நிலக்கரி கொண்டுவந்ததால் ஐநூறு மில்லியன் டொலருக்கு மேலாக இழந்துள்ளதாக கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கையிலிருந்து வெளியாகி உள்ளது. உரத்தைக் கொண்டுவருகயைில் எட்டு மில்லியன் டொலரை இழந்துள்ளதாகவும், எண்ணெய் கொண்டுவருதல், உரம் கொண்டு வருதல், சீனி கொண்டுவருதல் போன்ற அனைத்து துறைகளிலும் புரிந்துள்ள நிதிசார் குற்றச்செயல்கள் பற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கைகளில் விடயங்கள் வெளிப்பட்டுள்ளன. இவற்றுக்குப் பொறுப்புற்கூற வேண்டியவர்களுடன் ஒரு நாட்டை உருப்படியாக்கிட முடியாது.
பாடலொன்றை இரசிக்கின்ற, புத்தகமொன்றை வாசிக்கின்ற, திரைப்படமொன்றைப் பார்க்கின்ற, ஆரோக்கியமான வாழ்க்கையொன்றைப் பற்றிச் சிந்திக்கின்ற கூட்டான கலாசாரமொன்றை உருவாக்கிட வேண்டும். அத்தகைய மக்களைக்கொண்ட தொகுதிக்கிளையின் மூன்று அடிப்படைப் பணிகள் இருக்கின்றன. மக்களின் எழுச்சிக்குத் தலைமைத்துவம் வழங்குதல், எதிர்வரும் தேர்தலில் தொகுதியை வெற்றிபெறச் செய்வித்தல் தொகுதிக்குள்ளே மக்கள் மத்தியில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற உரையாடலொன்றை நடாத்துதல் என்பவையே அத்தகைய செயற்பொறுப்புகளாகும். இந்த பணிகளை வெற்றிபெறச் செய்வித்தால் எம்மால் வெற்றியை அடையமுடியும்.
நாம் எவருமே அரசாங்கத்தைப் பொறுப்பேற்பது காலத்தைக் கழிப்பதற்காக அல்ல. நாட்டை உருப்படியாகிடவே. இவர்கள் ஒருவரையொருவர் பாதுகாத்து ஊழல்பேர்வழிகளை பாதுகாக்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்த ஊழல்பேர்வழிகளைத் தண்டித்து அவர்கள் கொள்ளையடித்த பொதுச் செல்வத்தை மீண்டும் அறவிட்டுக்கொள்வோம். அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்துடன் இயங்கிவருவது அரசாங்கத்திற்குச் சுமையாகுமென்ற பாரிய உரையாடலொன்று தற்போது நிலவுகின்றது. இந்த நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் மூலமாக ஊழியர்களை நிரப்பி, அரச நிறுவனங்களை சிதைத்தார்கள். பொருளாதாரத்தின் புதிய வாய்ப்புகளை உருவாக்கி புதிய தொழில்முயற்சியாளர்களை அறிமுகஞ்செய்து தொழில்களை பிற்பிப்பதற்குப் பதிலாக தேர்தலை நோக்கமாகக்கொண்டு அரச நிறுவனங்களில் தொழில்களை வழங்கினார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி வெற்றிடங்கள் நிலவாத எந்தவோர் அரசாங்க நிறுவனத்திற்கும் தொழில்களை வழங்க மாட்டாது. சுற்றுலாத்துறை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித்துறை, கப்பற்றுறை உள்ளிட்ட பலதுறைகள் பொருளாதாரத்தின் முதன்மைப் பிரிவுகளாக அபிவிருத்தி செய்யப்படும். இவ்விதமாக பொருளாதாரத்தை விரிவுபடுத்தியே எமது ஆட்சியின்கீழ் தொழில்கள் வழங்கப்படும்.
இதுவரை ஆட்சியாளர்கள் நாட்டை பின்நோக்கி இழுக்கின்ற பொருளாதார முறையினைக் கடைப்பிடிப்பதையே செய்துவந்தார்கள். நாங்கள் நாட்டை முன்நோக்கி நகர்த்துகின்ற பொருளாதாரத் திட்டங்களை அமுலாக்குவோம். புதிய இளைஞர் தலைமுறையினருக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவது எமது முதன்மை செயற்பொறுப்பாகும். நிகழ்கால இளைஞர்கள் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை தொழில் புரிவதைவிட சுதந்திரமான சந்தர்ப்பங்கள் பற்றிச் சிந்திக்கிறார்கள். அதற்கான ஊக்குவிப்புகளைக்கொண்ட இணைந்த, வினைத்திறன்மிக்க அரச சேவையொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். வெள்ளையர்கள் வெளியெறி எழுபத்திநான்கு ஆண்டுகளை விஞ்சிவிட்டபோதிலும் இன்னமும் வெள்ளைக்காரன் அறிமுகஞ்செய்த அரசசேவையே அமுலில் இருக்கின்றது. அதனை வினைத்திறன்மிக்க மக்கள் சேவையாக நாங்கள் மாற்றியமைப்போம்.
கல்வியைப் பெறுகின்ற இளைஞர்கள் தொழிலொன்றில் ஈடுபடுதல் இன்றைய உலகில் இடம்பெறுகின்ற ஒன்றாகும். ஆனால் எமது நாட்டில் இருப்பது பொலநறுவையில் கல்வி பயில்கின்ற பிள்ளை தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பை பார்த்துக்கொண்டு இருப்பதாகும். ஆனால் புத்தாக்கப் பொருளாதாரமொன்று மூலமாக அந்த பிள்ளைகளுக்கு பொலநறுவை பிரதேசத்திலேயே தொழில் வழங்கப்படவேண்டும். பொருளாதார வளர்ச்சியும் பொருளாதார அபிவிருத்தியும் இவ்விதமாக புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி உலகின் புதிய சந்தைகளை நோக்கிப் பிரவேசிப்பதன் மூலமாக மாத்திரமே உருவாகும்.
இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஊழலற்ற, நேர்மையான குழுவினர் தேசிய மக்கள் சக்தியில் மாத்திரமே இருக்கிறார்கள். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற பணிக்காக நாங்கள் பொருளாதாரப் பேரவையொன்றை நிறுவியுள்ளோம். பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் ஜனத் குமாரசிங்க, கலாநிதி சாந்த ஜயரத்ன, பேராசிரியர் தயானந்த மற்றும் எமது தோழர் சுனில் ஹந்துன்னெத்தி இந்த பேரவையில் செயலாற்றி வருகிறார்கள். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்களின் துறை தோழர் சத்துரங்கவின் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது. எமது பாதுகாப்புப் பேரவை பற்றி ஒருசிலர் கேட்கிறார்கள் முன்னாள் ஜெனரல்மார்களை உள்ளடக்கிய பாதுகாப்புப் பேரவையொன்றை நாங்கள் இந்த முப்பதாந் திகதி நிறுவுவோம். அதைப்போலவே வெளிநாட்டு உறவுகள் பற்றியும் நாங்கள் கவனஞ்செலுத்தியுள்ளோம். இன்றைய உலகில் எம்மைப் பற்றிய மிகவும் அவலட்சணமான பிரதிபிம்பமே நிலவுகின்றது. நாம் இழந்துள்ள சர்வதேச பிரதிபிம்பத்தை மிகவும் பலம்பொருந்தியவகையில் உலகின் முன்னிலையில் மிளிரச் செய்விக்கின்ற வெளியுறவுக் கொள்கையொன்றை நாங்கள் அமுலாக்குவோம்.
இணைத்தளத்தை வருடினால் பிரசன்ன ரணதுங்க பற்றி நீதிமன்றத்தினால் இரண்டரைகோடி தண்டனை வழங்கப்பட்ட கப்பம்பெறுனர் என்றே இருக்கின்றது. சொக்கா மல்லீ பற்றித் தேடினால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவராவார். மகிந்த ராஜபக்ஷவின் பெயரை இணையத்தளத்தில் தேடினால் “நிவ்யோர்க் டைம்ஸ்” செய்தித்தாளில் வெளியிட்ட சீனக் கம்பெனியொன்றிடமிருந்து இலஞ்சம் பெற்றார் என்ற தகவல் வெளியே வரும். நாமலின் பெயரை அடித்தால் “கிறிஸ் கொடுக்கல்வாங்கல்” பற்றி அவுஸ்திரேலியாவின் ஊடகவியலாளர் வெளியிட்ட தகவல் தொடரொன்று வெளியில் வருகின்றது. உலகத்தார் முன்னிலையில் நாட்டின் நற்பெயரை கறைபடியச் செய்வித்த இவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மனித உரிமைகள், சட்டம், மகளிர் உரிமைகள், முதியோர்களின் உரிமை போன்ற உலகத்தை வென்றெடுக்கின்ற அளவுகோல்கள் இருக்கின்றன. அவற்றுக்கிணங்க எமது சமூகத்தை முன்னேற்றவேண்டும். சமூகப் பாதுகாப்புமிக்க நாடாக கட்டியெழுப்பவேண்டும். அத்தகைய நாட்டுக்குத்தான் சுற்றுலாத்தொழிற்றுறையை விருத்திசெய்ய முடியும். இத்தகைய நாடுகளுக்கே வெளிநாட்டு முதலீடுகள் வரும். அதற்கான நேர்மையான ஊழலற்ற குழுவொன்று தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தியின் பொறுப்பினை வகிக்க தெரிவுசெய்யப்பட்ட எவருமே தமக்கு தனிப்பட்டவகையில் எதனையும் பெற்றுக்கொள்வதற்காக வந்தவர்கள் அல்ல. முன்னரைவிட அதிகமாக எம்மைப் பார்க்கின்ற, விருப்பம் தெரிவிக்கின்ற மக்களே இன்று இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை உறுதிசெய்துகொண்டு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெருவெற்றியை அடையவேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் எமது அரசாங்கமொன்றை நிறுவுதல் பற்றிய சமிக்ஞை அந்த உள்ளூராட்சி தேர்தலில் வழங்கப்படல் வேண்டும். உள்ளூராட்சித் தேர்தலில் இந்த சமிக்ஞை சரிவர வழங்கப்பட்டால் மிகவும் குறுகிய காலத்தில் நிச்சயமாக பொதுத்தேர்தலில் எம்மால் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் இந்த வேலையில் பிரவேசித்தது பகுதியளவிலான வெற்றியைப் பெறுவதற்காக அல்ல. இந்த நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கிய இந்த நிலைமையிலிருந்து மீட்டெடுக்க வேறு எவருக்குமே முடியாது. நாமலின் மாமாவின் ஹோட்டலில் ஓர் இரவுக்கான அறை வாடகை “எயார் லங்கா” கம்பெனியின் விமானச்சீட்டு ஒன்றைவிட பல மடங்கு அதிகமானதாகும். விமானமொன்று தாமதித்தால் நாமலின் மாமாவின் ஹோட்டலிலேயே அறை வழங்கப்படுகின்றது. இவ்விதமாகத்தான் பிஸ்னஸ் நடைபெறுகின்றது. அப்படிப்பட்டவர்களால் இந்த நாட்டை மீட்டெடுக்க முடியுமா?
அமைச்சர்கள் செலுத்தியிராத லயிற் பில் பற்றி இந்நாட்களில் பேசப்படுகின்றது. அமைச்சர்களின் உத்தியோகபூர்வ வீடுகளின் பில் அமைச்சினால் செலுத்தப்படுகின்றது. அப்படியானால் எப்படி நிலுவை இருக்கலாம்? ஒருசிலர் அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே வசிக்கிறார்கள். எனினும் பில் அமைச்சினால் செலுத்தப்படுவதில்லை. அப்போதுதான் பற்றாக்குறை ஏற்படும். லயிற் பில் செலுத்தாதிருப்பது மாத்திரமல்ல. அவர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களிலும் பலவந்தமாகவே இருக்கிறார்கள். ஒருசிலர் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களில் இருப்பதற்காகவே அமைச்சர் பதவிகளை ஏற்கிறார்கள். நாமல் ராஜபக்ஷ தொப்புள் கொடியை அறுத்த நாளில் இருந்தே அரசாங்க இல்லங்களிலேயே வசிக்கிறார். மகிந்த கோட்டா தற்போது அரசாங்க இல்லங்களிலேயே இருக்கிறார்கள். நிலக்கரி கொண்டுவர, எரிவாயு கொண்டுவர இந்த சிரமமான தருணத்தில் வழங்கப்படுகின்ற உதவிகளிலிருந்தும் சூறையாடுகிறார்கள். இவர்கள் எத்தகைய ஆட்சியாளர்கள்? அதனால் அவர்களிடமிருந்து எமது நாட்டுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ எந்தவிதமான எதிர்காலமும் கிடைக்கப்போவதில்லை. அதனால் இந்த கேடுகெட்ட கும்பலைத் தோற்கடித்து தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றை நிறுவ நாமனைவருமே அணிதிரள்வோம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.




