உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவின்படி 4 பேர் அடங்கிய குடும்பத்தின் ஒருவேளை சாப்பாட்டுக்கான மாதச் செலவு ஒரு இலட்சம் ரூபா அல்லது ஒன்றரை இலட்சம் ரூபா வரை காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய நேற்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறான வருமானம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேள்வியெழுப்பிய அவர், 100,000 ரூபா வருமானம் பெறும் நபருக்கும் வரி விதிப்பதற்கு வரவுசெலவில் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய உணவு நெருக்கடி உள்ளிட்ட நெருக்கடிகள் பல எதிர்காலத்தில் தீவிரமடையும் எனவும் அவர் தெரிவித்தார்.