by admin

சிறந்த நாளைய தினத்திற்காக, எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கைக்கான மக்கள் கூட்டமைவு

நெருக்கடியை வெல்வதற்கான துரித அணுகுமுறை (PDF)

Prasannajith Abesooriya speaks NPP Rally at Beruwala on 06.10.2019

எமது நோக்கங்கள்

"ஐயோ எங்களுக்கு நேர்ந்த கதி..."

“தேவலோகத்தைவிட தனது தாயும் தாய்நாடும் பெறுமதிமிக்கவை எனக் கூறியவர்கள் இருந்த நாடுதான் இது. அத்தகைய பெறுமதியான உணர்வுடன் வாழ்ந்த மக்கள் சமூகத்திற்கு தற்போது என்ன நேர்ந்துள்ளது….? 2500 வருடங்களுக்கு மேலான மதிப்புமிக்க வரலாற்றினைக் கொண்டிருந்த   எமது நாட்டின் அடையாளம் படிப்படியாக, கைநழுவிச் செல்கின்ற  இடத்தை அடைந்துவிட்டது. எல்லாபக்கங்களிலும் சீரழிந்த நிலைமையையே எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது: விழுமியங்கள், பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, அரசியல் மற்றும் ஒழுக்கம் போன்ற அனைத்து அம்சங்களிலும் எமது தாய்நாடு சீரழிந்துவிட்டது. ஒரு புழுவுக்கு காகத்திற்கு உயிர்வாழ இயலாத அளவுக்கு  இந்த நிலம் நச்சுக்களால் மாசடைந்து விட்டது. “இது எமது தாயகம்” என பெருமிதத்துடன் கூற முடியாத நிலைக்கு மாறி விட்டது. மாற்றப்பட்டு விட்டது…”

சியம் மகா நிக்காயவின் மல்வத்த பீடத்தின் சபரகமுவ மாகாண பிரதான சங்க நாயக்க, கிரந்த விஷாரத, ராஜகீய பண்டித, கலை முதுமாணி கேலிகம விஜிதானந்த தேரர்

மனநிறைவுகொண்ட கமக்காரர் வாழ்க்கை
நிலைபேறான விவசாய நோக்கு

நாங்கள்;
சுதேச உணவுப் பாதுகாப்பினை பிறப்பிக்கின்ற கமக்காரர் வாழ்க்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்தையும் உயர்த்துகின்ற, பயிர்செய்கைத் திட்டங்கள் – நிலையான விலை – நவீன அறிவு ஊடாக விவசாய ஏற்றுமதியையும் வெற்றிகொண்ட நச்சுக்கலப்பற்ற நிலைபேறான தொழில்த்துறையாக இலங்கையின் விவசாயத்துறையை மாற்றுதல்.

தரமான கல்வி
பண்பான பிரசை

“கல்வி உலகளாவிய நியாயமான மனித உரிமையாகும். வித்தியாசமின்றி ஒவ்வோராளுக்கும் கல்வியின் இலவச புகுமுகத்திற்காக நியாயமான வாய்ப்பினை வழங்குதல் வேண்டும். தேசியங்கள் மற்றும் விசேட தேவையுள்ள ஆட்கள் மத்திரமன்றி கவனியாமல் விடப்பட்டுள்ள  சமூகப் பிரிவுகள் தொடர்பில் விசேட கவனத்துடன் செயலாற்றுதல் வேண்டும். முன்பள்ளிக் கல்வி தொடக்கம்  மூன்றாம்நிலைக் கல்விவரை அவசியமான நிதியங்கள் அரசினால் உறப்படல் வேண்டுமென்பதோடு இலவசக் கல்விச் செயற்பாங்கினை பேணி வருவதற்காக அவசியமான மானிட மற்றும் பௌதீக வளங்களை உறுதிசெய்யவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.”

பன்மொழித் தோழமைகொண்ட வேலைத்தலமொன்று
புதியதொரு கலாசார மனிதன்

“அடையாளத்தின் தோற்றப்பாடு என்றவகையில் கலாசாரத்திற்குள்ள முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளையில் கலாசாரத்தன்மையை கட்டியெழுப்புதல் என்பதும் கலாசாரத்தின் ஒரு முக்கியமான அம்சம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதாவது, ஏதேனும் சமுதாயத்திற்கு ஏற்கெனவே மரபுரிமையானது என கருதப்படுகின்ற வரையறைகள் பற்றி அந்த சமுதாயம் புலனுணர்வு கொண்டதாக அமையுமிடத்து அந்த வரையறைகளிலிருந்து சுதந்திரம் மற்றும் விடுதலையை நோக்கி வளர்ச்சியடைய ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனிமனிதனுக்கும் உள்ள உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதாவது, மானிட சுதந்திரத்திற்கும் கலாசாரத்திற்கும் இடையில் ஒருசில சந்தர்ப்பங்களில் முரண்பாடுகள் நிலவுவதை நாங்கள் அறிவோம். அத்தகைய முரண்பாடுகள் தோன்றுவது கலாசாரத்தின் ஒரு பகுதியாகுமென்ற என்ற புரிந்துணர்வு எமது கொள்கையின் ஓர் அங்கமாகும். மனிதனை ஒருசில கலாசார சிறைக்கூடங்களிலிருந்து விடுதலை செய்வதானது கலாசாரத்தின் ஒரு பகுதியாக அமைகின்ற கலையிடம் ஒப்படைக்கப்படுகின்ற ஒரு பணி என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.”  

தரமான சுகாதார சேவை
ஆரோக்கியமான பிரசை

“உலக சுகாதார தாபனம் வரைவிலக்கணம் கூறுகின்றவகையில் சுகாதாரம் என்பது நோய்நொடிகள் அல்லது இயலாமைநிலைகள் அற்றதாக இருப்பது மாத்திரமல்ல நிறைவான உடல், உள மற்றும் சமூக சுகநிலையைப் பெறுவதாகும். ஒவ்வொரு மக்கட்சமூகத்திலும்  பிரசையின் வாழ்க்கைத்தரத்தின் உயர்வான நிலையை அளவிடுகையில் அவரது ஆரோக்கியநிலை ஒரு பிரதான காரணியாக அமைகின்றது. ஆரோக்கியமான பிரசை நல்ல குடும்பமொன்றில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான உரிமை கிடைப்பதன் மூலமாக சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்கிறார்.”

தரமான வாழ்க்கை
நிலைதளராத பொருளாதாரம்

“நிலைபேறான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவதும் அதன் நன்மைகளை மக்களுக்கிடையில் நியாயமானவகையில் பகிர்ந்தளிப்பதும் நிலைதளராத இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான அத்திவாரமாக அமையும். விவசாய, மீன்பிடி, பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில்களை கட்டியெழுப்புகையில் எதிர்காலத் தேவைகளை கவனத்திற்கொண்டு உலகம் அடைந்துள்ள நவீன அறிவையும் தொழில்நுட்பத்தையும் அத்துறைகளுக்குள் அழைப்பித்துக்கொள்ள வேண்டும். உலகின் முன்னிலையில் பெருமைமிக்க ஒரு நாடாக இலங்கையை உயர்த்திவைக்கையில் எங்களுக்கு பலம்பொருந்திய வெளியுறவுக் கொள்கையொன்றும்  அரசாங்கத்தின் தேச எல்லைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு பற்றிய புதிய பொருள்கோடலுடனான தேசிய பாதுகாப்பு முறைமையொன்றும் அவசியமாகின்றது. இந்த அனைத்து துறைகளிலும் அடைகின்ற வெற்றிகளால்  நிலைதளராத இலங்கை கட்டியெழுப்பப்படும்.”

சுற்றாடல் நேயமுள்ள
வினைத்திறன்மிக்க போக்குவரத்துச் சேவை

“ஒட்டுமொத்தமாக பிரசைகளின் போக்குவரத்து அவசியப்பாடுகளை இலக்காகக்கொண்ட, இலாப எதிர்பார்ப்புடன் இயங்கிவருகின்ற வெறுமனே வர்த்தக நோக்கங்களற்ற மக்கள் சேவைக்காக சுற்றாடல் நேயமுள்ள மற்றும் நிலைபேறான போக்குவரத்து முறைமையொன்று வரை படிப்படியாக மாற்றியமைக்கின்ற நோக்கு சகிதம், அரச இடையீட்டினை வலியுறுத்துகின்ற, வினைத்திறன்கொண்ட, நம்பகத்தன்மையுடைய, பாதுகாப்புமிக்க, நன்மதிப்புடைய போக்குவரத்துச் சேவையொன்றை தாபிப்போமாக.”

ஒரு நாடு
பன்வகைமையினாலும் சமத்துவத்தினாலும் பிணைக்கப்பட்ட இலங்கைத் தேசமொன்று

“சிறந்த சமூக வழியுரிமையொன்றுக்கான அத்தியாவசியமான காரணி என்றவகையில் அச்சமூகத்தின் நெறிமுறைசார்ந்த தன்மை மிக முக்கியமான இடம் வகிக்கின்றது. நெறிமுறைகளின் சீரழிவு பற்றி சமூகம் பாரதூரமானவகையில் கவனத்திற்கொள்ளாவிட்டாலும் அதன் கட்டாயமான பெறுபேறாக பல சமூகக் கட்டமைப்புகளின் சீரழிவுக்கான தொடக்கநிலையை உருவாக்கிக் கொடுக்கின்றது. அனைத்துச் சமுதாயங்களையும் சமமாக கவனிக்கின்ற, சட்டத்தையும் சனநாயகத்தையும் பாதுகாக்கின்ற, அரசியலமைப்பிற்கு மதிப்பளிக்கின்ற,  அனைத்துச் சமுதாயங்களினதும் வழியுரிமையை ஏற்றுக்கொண்டு அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற,  விசேட கவனிப்பு காட்டப்படவேண்டிய குழுக்களாகக் கருதப்படுகின்ற சிறுவர், பெண்கள், முதியோர்  மற்றும் ஊனமுற்றோர்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் உயர்வானதாக எற்றுக்கொண்டு அவற்றைப் பாதுகாக்கின்ற சமூகமொன்றை நெறிமுறைசார்ந்த இலங்கையைக் கட்டியெழுப்புதலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதைப்போலவே அரசு தனது மக்களுக்கு பொறுப்புக்கூறலுக்கான பிரதிபலிப்பாக கடமைகளையும் பொறுப்புகளையும் விளங்கிக்கொண்ட பிரசைகள் சமூகமொன்றையும் அதன் மூலமான பிரதிபலனாக எதிர்பார்க்கிறோம்.”    

இயற்கை எழில் கொஞ்சும் இலங்கை

“என்றும் பசுமையானதன்மை, குளிர்ச்சி, அழகியல் நிறைந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கொண்ட இந்த இராச்சியத்தை தூய்மையான உணவு, கிராமிய மற்றும் நகர அலங்காரம், இடப்பரப்பினை ஒழுங்கமைத்தல்  போன்ற வீச்சிடங்கள் அனைத்தையும் பாரிய தூய்மை மற்றும் உயர்வான குறிகாட்டியொன்றில்வைத்து பராமரித்தல்  எமது பொறுப்பாகும்.    பிரசைகள் உயிர்வாழ்வதற்காக உள்ள இந்த இடப்பரப்புசார்ந்த பெருநிலத்தையும் தாவர உயிர்களையும் பாதுகாப்பதன் மூலமாக உலக வெப்பநிலை பற்றிய சிக்கலைக் குறைத்துக்கொண்ட வனப்புமிகு சுற்றுச்சூழல் மீதியாக எஞ்சும். சுத்தமான நிலப்பரப்பொன்றின் நீலநிற நீர்த்தொகுதி, தூய்மையான வளிமண்டலத்தைக்கொண்ட பாதுகாக்கப்பட்ட, சுத்தமான, உணவுபானவகைகளை உள்ளடக்கிய மானிட வாழக்கையைக் கழிக்க அவசியமான தூய்மையான வாழிடத்தையும் சேவைநிலையத்தையும் உருவாக்குவதும் ஒரு நாடு என்றவகையில் தூய்மையான சுற்றாடலை உருவாக்குவதும் எமது எதிர்பார்ப்பாகும்.”

கட்டியெழுப்பப்படுகின்ற அவளது சக்தி

“ஆழமான ஏற்றத்தாழ்வுகளைக்கொண்ட இந்த சமூக அந்தஸ்தினை நாங்கள் நிராகரிக்கிறோம். அனைவருக்கும் சுதந்திரமும் சமத்துவமும் உறுதிசெய்யப்பட்ட துன்புறுத்தல்களும் இன்னல்களும் அற்றதாக வாழக்கூடிய சமூகத்திற்காக நாங்கள் அயராது உழைக்கிறோம்.”

எமது அரும்பணி

பேரரசுவாதிகளிடமிருந்து கிடைத்த ஈனியா சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த நாட்டை நிலவியதைப் பார்க்கிலும் பாரிய படுகுழியில், கழிவுக்குழியில்  இழுத்துவிட்ட தோல்விகண்ட, சித்தியடையாத, சந்தர்ப்பவாத, வயிறுவளர்க்கின்ற,    துரிதமாக தெருச்சுற்றிநிலைக்கு உள்ளாக்கப்பட்ட, இந்த நாட்டை நாசமாக்கி ஆட்சிசெய்த ஏமாற்றுப்பேர்வழிகளான  கும்பல்களிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து, உண்மையாகவே மக்களுக்குப் பொறுப்புக்கூறுகின்ற மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குகின்ற, நாட்டைக் கட்டியெழுப்புகின்ற – நாட்டை பாதுகாக்கின்ற விரிவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புதல். 

தேசிய கொள்கையின் அத்திவாரம்

எமது இணைந்த அமைப்பொன்றான தேசிய புத்திஜீவிகள் அமைப்பு நாடு பூராவிலும் சென்று பல்வேறு மக்கட் குழுக்களை சந்தித்து  கலந்து பேசி  அவர்களின் அவசியப்பாடுகளைக் கேட்டறிந்து கட்டியெழுப்பிய தேசிய  கொள்கைகள் தொடரையும் அடிப்படையாகக்கொண்டு, பல்வேறு அமைப்புக்கள் மற்றும் ஆட்களின் முக்கியமான முன்மொழிவுகளையும் சேர்த்துக்கொண்டு எமது கொள்கைகள் தொடர் வகுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்தும் மக்கள் கருத்துக்காக திறந்துவிட்டு அதனை அபிவிருத்திசெய்து அதனூடாக தினசரி அதிகரித்து வருகின்ற  பொருட்களின் விலைகள், தாக்குப்பிடிக்க இயலாத கடன்சுமை,  பொருளாதார மற்றும் சமூக அழுத்தம், தேசிய ஒற்றுமையின்மை போன்ற பாதகவிளைவுகளிலிருந்து விடுபட்டு நாம் இழந்துவருகின்ற  எமது நிலம், எமது கடல், எமது வேலைத்தலம், எமது வானத்தை நாம் வென்றெடுத்து வளங்கள் கொழிக்கின்ற இந்த அதிர்ஷமிக்க நாட்டை உண்மையான சௌபாக்கியத்தை நோக்கி கொண்டுசெல்வது எமது கொள்கையின் அத்திவாரமாகும்.  

நாளைய தினத்திற்காக...

எழுபது வருடகால தோல்விகண்ட ஆட்சிகளால் களைப்படைந்துள்ள இலங்கை மக்களை ஏமாற்றுப்பேர்வழிகளான அரசியல் வர்க்கத்தினரிடமிருந்து விடுவித்துக்கொண்டு முற்போக்குவாத மற்றும் மக்கள்நேயமுள்ள அரசாங்கத்தை அமைப்பதற்கான அத்திவாரம் இடுகின்ற நாங்கள்...

நாளைய தினத்திற்காக...

தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள்

எம்மோடு ஒன்றுசேர்ந்து வீறுநடை போடுக