Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
“கடந்தகாலத்தில் நிலவிய எமது பிரிவினைகளை மறந்து நாட்டை சீராக்குகின்ற வரலாற்று வேலைத்திட்டத்துடன் இணையுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்…” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய- ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) இடையிலான சந்திப்பு மலையக இந்து குருமார் சம்மேளனம் அநுரவை சந்தித்தது “1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” -அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ்- மொஸ்கவ் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய மக்கள் சக்தி அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது
X

அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் – நான்காவது நாள்

-Colombo, February 08, 2024-

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு அஹமதாபாத்தில் அமைந்துள்ள குஜராத் மாநில அரசாங்கத்தின் கல்வித் திணைக்களத்துடன் இணைந்த i-Hub கம்பெனிக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது.

மேற்படி நிறுவனம் மாணவர்களுக்கும் பயிலுனர் தொழில் முனைவோருக்கும் மதியுரைசேவைகளையும் விஞ்ஞான ஆய்வுகூடங்களை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குகின்ற மற்றும் முதலீட்டாளர்கள் ஊடாக நிதியங்களைப் பெற்றுக்கொடுக்கின்ற புத்துருவாக்க கேந்திரநிலையமாகவே (Innovation Hub) இடையீடு செய்கின்றது. i-Hub நிறுவனம் மாணவர்கள், புத்திஜீவிகள், கைத்தொழில்கள் மற்றும் சந்தையை ஒன்றுடனொன்று தொடர்புபடுத்தி அரச ஒழுங்குறுத்தலைக்கொண்ட வசதி வழங்குகின்ற முறைமையொன்றை அபிவிருத்தி செய்வதற்கான உபாயமார்க்க இடையீடுகளையும் செய்துவருகின்றது. மதியுரை, வலயமாக்கல், பாவனையாளர் உறவுகள், முதலீட்டு வாய்ப்புகள் , உதவிப் பொறியமைப்புகள் மற்றும் ஆய்வுகூட உட்டகட்டமைப்பு வசதிகளை வழங்குதலுடன் தொடர்புடைய துரித நெகிழ்ச்சியான மற்றும் ஒத்துழைப்புச் சேவைகளின் ஒருங்கிணைப்பாக அமைகின்ற i-Hub, தனது சேவை பெறுனர்களுக்கு அவசியமான அனைத்துச் சேவைகளையும் ஒரே கூரையின்கீழ் பூர்த்திசெய்துகொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதன் பின்னர் அஹமதாபாத்தின் விவசாயப் பிரதேசங்களையும் விசாயத்தை அடிப்படையாகக்கொண்ட கைத்தொழில்களை (GAIC – Gujarat Agro Industries Corporation) பார்வையிடுதலிலும் மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலையான (TATA Motors) ஐ பார்வையிடுதலிலும் சூரிய வலுச்சக்திக் கருத்திட்டங்களையும் அவதானித்தலிலும் பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழு இன்று (08) இரவு கேரளா மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் (முன்னர் Trivandrum என அழைக்கப்பட்டது) நோக்கிப் பயணிக்கவுள்ளது.

TATA Motors

Gujarat Agro Industries Corporation

i – Hub