Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
“திசைகாட்டி அதிகாரத்திற்கு வருவது நீண்டகாலமாக ஏமாற்றப்படுதலுக்கு இலக்காகிய மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காகவே” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க- “இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் என்பது மக்களை ஆட்சியாளர்களை நோக்கித் தள்ளிவிடுவதாகும்”-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கே. டீ. லால்காந்த- “இந்த சட்டம் போகின்ற வேகத்தையும் தேர்தல் நடத்தப்படுகின்ற வேகத்தையும் பார்த்தால் சட்டம் பாராளுமன்றத்திற்கு வரும்போது ரணில் வீட்டிலேயே” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க- ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு “புதிய அரசியல் கலாச்சாரத்தினால் மாத்திரமே பொருளாதார தீர்வினை அடையமுடியும்.” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-
X

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்.

(-London, June 15, 2024-)

AKD-London-Meeting-QandA

கேள்வி: வினைத்திறனின்மை மற்றும் உத்தியோகத்தர் மனநிலை (பணிக்குழு ஆட்சிமுறை) நிறைந்த அரச சேவையை வினைத்திறன் கொண்ட மக்கள் நட்புமிக்க அரச சேவையாக மாற்றுவதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறது?

பதில் : அரசசேவை எமது நாட்டுக்கு அத்’தியாவசியமானதாகும். எமது அரசசேவை முற்றாகவே சீரழிந்துள்ளது. அரச சேவையை வழங்குவதற்காக உறப்படுகின்ற செலவுகளே சுமை. கல்வி, சுகாதாரம் சுமையல்ல. அந்த சேவையை வழங்குவதற்கான கிரயமே சுமையாக அமைகின்றது. அரசியல் இடையீடுகள் காரணமாக நிறுவனங்கள் ஊழியர்களால் நிரப்பப்பட்டு சீர்குலைக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஒருபோதுமே உறவுமுறைத் தொடர்புகளின்பேரில், அரசசேவையை நெறிப்படுத்த மாட்டோம் என்பதற்கு உத்தரவாதமளிக்கிறோம். துறைசார் அனுபவங்கள் வாய்ந்த, திறன்கொண்ட துறைசாரந்த நிபுணர்களே அவற்றை நெறிப்படுத்த வேண்டும். ஒவ்வோர் அரச நிறுவனத்திற்கும் அந்த துறைசார் திறன்களும் ஆற்றல்களும் நிறைந்த குழுவினர் மாத்திரமே நியமிக்கப்படுவர்.

ஆட்சேர்ப்பு, பதவியர்வு, இடமாற்றம் அரசியலின்பேரில் இடம்பெறமாட்டாது. நாங்கள் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் பகிரங்க கூட்டத்தில் “எங்களின் இந்த கூட்டத்தில் பங்கேற்பது அரசாங்க சேவையில் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமையாக மாட்டாது” எனக் கூறுமாறு சவால் விடுக்கிறோம். நாங்கள் அதனைக் கூறுகிறோம். விஷமத்தனமான செயல்களைப் புரிவதற்கான கும்பல்கள் இருக்கலாம். அதனைத் தடுப்பதற்காகத்தான் அதிகாரம் இருக்கின்றது. அதிகாரம் பிறப்பது அரசியலமைப்பில் அல்ல. அதிகாரம் பிறப்பது மக்களிடமிருந்தாகும். மக்கள் எமக்கு வினைத்திறன்மிக்க அரசசேவைக்காக அதிகாரத்தை தருகிறார்கள். அரசியலமைப்பினால் அதிகாரத்தை பிரயோகிப்பதற்கான எல்லைகளே தரப்படுகின்றது. மக்களிடமிருந்து எமக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றுவதற்காக பிரயோகிக்க அஞ்சமாட்டோம். அரசசேவையை வினைத்திறன் கொண்டதாக்கிட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றை அமுலாக்கவேண்டும்.

கேள்வி: NPP அரசாங்கமொன்றின் கீழ் புத்த சமயத்திற்கு கவனிப்பு குறைவடையுமென பரவிச் செல்கின்ற வதந்திகள் சம்பந்தமாக உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் : எமக்கு எதிரான குழுக்கள் எமக்கு எதிராக உண்மையற்ற, குறைகூறல் மட்டத்திலான தகவல்களை வெளியிடுவதை அவர்களின் தொழிலாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மதத்திற்கு அமைவாக வாழ்வது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்களே. அவர்களின் கூற்று பொய்யானதாகும். அரசியலமைப்பின் 9 வது உறுப்புரையில் பௌத்த மதத்திற்காக வழங்கப்பட்டுள்ள முதன்மைத்தானம் எவ்விதத்திலும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது. 2015 தொடக்கம் 2019 வரை இலங்கைக்கு அரசியலமைப்பொன்றினை ஆக்குவதற்கான உரையாடலொன்று நிலவியது. அந்த உரையாடலில் 9 வது உறுப்புரையை மாற்றியமைப்பது பற்றி பேசப்படவே இல்லை. அனைவரும் 9 வது உறுப்புரையை ஏற்றுக்கொண்டு கலந்துரையாடலை மேற்கோண்டார்கள். அதனால் இனந்தெரியாத அச்சத்தை ஏற்படுத்த முற்படுகிறார்கள். 9 வது உறுப்புரையில் கைவைக்க மாட்டோம். அதில் கைவைக்கவேண்டிய அவசியம் தமிழ் தலைமைகளுக்கும் கிடையாது.

AKD-London-Meeting-QandA

கேள்வி: தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சமவுரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டமென்ன?

பதில்: நாங்கள் எந்த நோக்கத்திற்காக அதிகாரத்தை எடுக்கிறோம்? தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவா அதிகாரத்தை எடுக்கிறோம்? நாங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுசேர்ந்து தேசிய ஒற்றுமையை உருவாக்கிக் கொள்வதற்காகவே அதிகாரத்தை எடுக்கிறோம். நாங்கள் அதிகாரத்திற்கு வருகிறோம் என்ற செய்தியே பெரும்பாலும் இனவாதத்தை தோற்றிகடித்திடும். இனவாதம் அவ்வாறே நிலவினால் நாங்கள் அதிகாரத்திற்கு வரமாட்டோம். அதற்கு அப்பால் இருக்கின்ற மறுசீரமைப்பு செயற்பாங்கு என்ன? தமிழ்பேசுகின்ற மக்களும் பொதுவில் மக்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை நாங்கள் எற்றுக்கொள்கிறோம். தமிழ் மொழியைப் பேசுகின்றதாலேயே அவர்களுக்கே தனித்துவமான பல சிக்கல்களும் இருக்கின்றன. பொதுப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான திட்டமொன்று எம்மிடம் இருக்கவேண்டும். கல்வி, சுகாதாரம், விவசாயத்திற்காக உறப்பட நேரிடுகின்ற செலவானது வடக்கு, தெற்கு, கிழக்கினை உள்ளிட்ட அனைவருக்குமே பொதுவான பிரச்சினையாகும். அவை தீர்க்கப்படல் வேண்டும்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு தமது தாய்மொழியில் அரசாங்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? ஒவ்வொரு பிரஜைக்கும் தனது மொழியில் அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்கான உரிமை உறுதிசெய்யப்படல் வேண்டும். அரசியலமைப்பில் அது இருந்தாலும் நடைமுறையில் அமுலாக்கப்படுதில்லை. நாங்கள் அந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்போம். ஒவ்வொரு பிரஜைக்கும் தனது மதத்தை பின்பற்ற அவசியமான சுற்றுச்சூழல் உருவாக்கிக் கொடுக்கப்படும். மதம் என்பது தமது நம்பிக்கையாகும். அதைப்போலவே பல்வேறு கலாசார அடையாளங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரினதும் கலாசார அடையாளங்களை கௌரவத்தினை ஏற்றுக்கொள்கின்ற ஒரு நாட்டை நாங்கள் உருவாக்குவோம். பொதுமக்கள் ஒன்றாக கொண்டாடக்கூடிய வைபவ வாய்ப்பகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

பிரதானமான பிரச்சினை அதிகாரப் பகிர்வுடனேயே பின்னிப்பிணைகின்றது. மாகாண சபைகளை நிலவுகின்ற இந்த விதத்திலேயே பேணி வருவோம். நாங்கள் அரசியல் தீர்வு என்றவகையில் மாகாண சபைகளை ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மாகாண சபைகள் தாம் வென்றெடுத்த உரிமை என நினைக்கிறார்கள். மாகாண சபைகளை ஒழித்துக்கட்டுவதானால் அவர்கள் வென்றெடுத்த உரிமைகளை பறித்தெடுப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள். அப்போது மீண்டும் அநாவசியமான முரண்பாடொன்று உருவாக்கப்படும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை உருவாகும்வரை, இலங்கையரை உருவாக்கி புதிய கட்டமைப்புகளை இனங்காணும்வரை மாகாண சபைகள் இவ்வண்ணமே இயங்கும். எனினும் நிரந்தர தீர்வு இந்த இடத்தில் கிடையாதென நாங்கள் நம்புகிறோம்.

குறிப்பாக மலையகத்தில் வசிக்கின்ற மக்கள்மீது கவனஞ் செலுத்தப்படுகின்றது. கடந்த காலத்தில் மலையக மக்கள் பற்றிய பிரகடனமொன்றை நாங்கள் வெளியிட்டோம். அவர்களின் வீடமைப்புப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருக்கின்றன. அவர்களுக்கே தனித்துவமான பிரச்சினைகள் இருக்கின்றன. இலங்கையர்களான மக்களை உருவாக்குவதென்பது அவர்களின் அடையாளத்தை ஒழித்துக்கட்டுவதையல்ல. அவர்களின் அடையாளத்தி-ற்கு மதிப்பளித்து, ஏற்றுக்கொண்டு ஒன்றுசேர்வதாகும். வடக்கிலுள்ள மக்கள் சனாதிபதி தேர்தலில் தெற்கின் தலைவரொருவரை தெரிவுசெய்வதாயின் என்.பி.பி. இன் தலைமைத்துவத்தை தெரிவுசெய்வார்களென நாங்கள் நம்புகிறோம். நாங்கள் கட்டியெழுப்பப்போகின்ற அரசு அனைவருக்கும் நிழல் தருகின்ற குடையாக மாறும். தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையை அமைக்கையில் வடக்கு, கிழக்கு, தெற்கில் உள்ள அனைவரையுமே பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சரவையாக அமையும். நாங்கள் வடக்கில் உள்ள மக்களிடம் கேட்கிறோம் வடக்கிற்கு தனிவேறான ஆட்சியொன்று அவசியமா, நாட்டின் நிருவாகத்தின் பங்காளிகளா மாறுவதா அவசியமென்று. தேசிய சிக்கலைக் குறைத்துக்கொண்டு தேசிய ஒற்றுமையை நிர்மாணிக்க அவசியமான ஆரம்பகட்ட நடவடிக்கைளை நாங்கள் மேற்கொள்வோம்.

AKD-London-Meeting-QandA

கேள்வி: ஒருசில வாக்காளர்கள் தோ்தலை பகிஷ்கரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன. அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான உங்களின் வேலைத்திட்டமென்ன?

பதில்: மிதக்கின்ற வாக்காளர்கள் வெற்றிபெறுகின்ற பக்கத்தைநோக்கி மிதக்கிறார்கள். சமுதாயத்திற்குள்ளே நாங்கள் வெற்றிபெறுவோமென்ற விடயத்தை எம்மால் பலம்பொருந்தியவகையில் உறுதிசெய்ய முடியுமா? அந்த அளவுக்கே மக்கள் எம்மை நோக்கி வருவார்கள். அதைப்போலவே அனைவருமே எம்மை நோக்கி வருவார்களென நம்பிக்கைவைக்க முடியாது. எந்தவொரு மனித சமூகத்திலும் வித்தியாசமான கண்ணேட்டத்தில் பார்ப்பவர்கள் இருக்கக்கூடும். எனினும் காற்று இந்த பக்கத்திற்கு திரும்பினால் இது வெற்றிவரை பயணிக்கும்.

கேள்வி: உயர்கல்வி தொடர்பாக இருக்கின்ற உங்களின் எண்ணக்கரு யாது? வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கைக்கு வர முயற்சி செய்த வேளையில் அவை நிறுத்தப்பட்டன. அதனால் நாங்கள் பாரிய வருமானத்தை இழந்தோம். பலர் இலங்கையில் கல்வி கற்கமுடியாமல் வெளிநாடு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அவற்றை நிறுத்தி நாங்கள் எவ்வாறு ஒரு தேசம் என்ற வகையில் வேறு நாடுகளிலுள்ளவர்களை இலங்கைக்கு வரவழைத்து கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு உள்ள வேலைத்திட்டமென்ன?

பதில்: எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகையில் தனியார் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை அழைப்பித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென்ற மூடநம்பிக்கையில் இல்லை. இந்தியாவில் பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. 2022 இல் 71.000 பேர் உயர் கல்விக்காக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து 11 இலட்சம் பேர் வெளியில் சென்றுள்ளார்கள். பிரித்தானியாவில் கல்விக்காக 82% வருவது இங்கு தங்குவதற்காகவே. இங்கு வருவதற்குள்ள பாதைதான் கல்வி பயில்வது. எந்தவொரு பிள்ளையையும் பாதுகாப்பற்ற நாட்டுக்கு கல்விக்காக அனுப்ப மாட்டார்கள்.

கல்வியில் புதிய அறிவு மேற்கிலேயே உருவாகின்றது. அதனால் புதிய அறிவினைத் தேடிக்கொண்டு மேற்கிற்கே செல்லவேண்.டி இருக்கின்றது. அதனால் மேற்கிற்குச் செல்கின்ற போக்கு அதிகமானதாகும். தனியார் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்வதாயின் இதனைவிட எமது நாடு பாதுகாப்பானதாக அமையவேண்டும். எமது நாடு பாதுகாப்பற்ற நாடாக இருக்கையில் வெளிநாட்டு மாணவர்கள் வரமாட்டார்கள்.

கல்வி என்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எமது ஆட்சியில் அரச கல்வி நிலவும். ஒழுங்குறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட உயர்கல்வி நிலவும். வெளிநாட்டுக் கல்வியும் நிலவும். ஒரு பிள்ளைக்கு தனியார் கல்வியைப் பயிலவேண்டுமானால் அதற்காக ஒழுங்குறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு பிள்ளை வெளிநாடுசென்று கல்வி பயிலவேண்டுமானால் அதற்கான வாய்ப்பு உரித்தாகும்.

கேள்வி: இலங்கையிலிருக்கின்ற அடிப்படை பிரச்சினையாக நோ்மையும் பொறுப்புக்கூறலும் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சிதைந்து விட்டதாக நீங்கள் தெளிவுபடுத்தினீர்கள். அதனை கட்டியெழுப்புவதற்காக நீங்கள் நம்பிக்கையை உறுதிசெய்வதை ஆரம்பித்தால் நல்லது. அதற்காக சட்டவிரோதமாக பெறப்பட்ட வாகன அனுமதிப்பத்திரங்களையும் எங்களின் வரித்தொகையையும் எங்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்தது அதிகாரப் பகிர்வின் கீழ் உங்களுடைய கொள்கைப் பிரகடனத்தை தாமதிப்பதன் மூலமாக கொள்கையற்றவர்கள் என வெளிப்படுத்தப்படுகிறது. அதற்கான உங்களுடைய தீர்வு என்ன?

பதில்: எமது அரசநிருவாகத்தில் பிரதானமான பிரச்சினையொன்று நிலவுகின்றது. அரச நிரவாகத்தில் பொறுப்புக்கூறல் கிடையாது. மக்களுக்கும் எமக்கும் இடையிலான உடன்பாடு என்ன? நாங்கள் மக்களிடம் கூறுகிறோம் இந்தஇந்த விடயங்களை செய்வோமென. அதற்காக நீங்கள் எங்களுக்கு வாக்குகளை அளியுங்கள் எனக் கூறுவோம். அதுதான் எமக்கிடையில் நிலவுகின்ற சமூக உடன்படிக்கை. தேர்தல் என்பது அரசியல் இயக்கத்திற்கும் பிரஜைக்கும் இடையில் நிலவுகின்ற தேர்தல் உடன்படிக்கையாகும். வாக்காளனின் பொறுப்ப புள்ளடி இடுவதுடன் முடிவடைகின்றது. கொடுத்த வாக்குறுதிகளுக்கு பொறுப்பக்கூறவேண்டியது அரசாங்கத் தரப்பினரின் பொறுப்பாகும். அரசியல்வாதியிடமும் மக்களிடமும் அவ்வாறான பொறுப்குக்கூறல் பற்றிய குறிப்பு கிடையாது. “தேர்தல் பிரகடனம் என்பது அந்த காலத்தில் கூறுகின்றவை அல்லவா” என சனாதிபதிமார்களே கூறியிருக்கிறார்கள். அதாவது பொறுப்புக்கூறல் கிடையாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி பொறுப்புக்கூறுவது யார்? உயர்நீதிமன்றம் வழக்குத் தீர்ப்பொன்றினை வழங்கியது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்காக அந்த நேரத்தில் சேனாதிபதி என்றவகையில் பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைச்சரென்றவகையில் தனது பொறுப்பினை சரிவர ஈடேற்றாமைக்காக 100 மில்லியன் நட்டஈடு செலுத்தவேண்டியநிலை முன்னாள் சனாதிபதிக்கு ஏற்பட்டது.

மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, பி.பீ. ஜயசுந்தர, அஜித் நிவாட் கப்ரால் குழுவினரக்கு எதிராக மற்றுமொரு வழக்குத் தீர்ப்பு கிடைத்தது. மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். பொருளாதாரத்தை முறைப்படி முகாமைசெய்து முன்நோக்கி எடுத்துச்செல்வதற்கான பொறுப்புக்கூறல் நிலவவேண்டும். அவர்கள் பொறுப்பினை ஈடேற்றவில்லையென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்களை தவறாளியாக்கியது. அரசியல்வாதி பொதுமக்களுக்கு எந்தளவிற்கு பொறுப்புக்கூற வேண்டுமென்பது பற்றி இரண்டு வழக்குத் தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப்படுள்ளது. பொதுக்களின் பாதுகாப்பு பற்றிய பொறுப்பு சனாதிபதிக்கு உண்டு. பொருளாதாரத்தை சீரழிய இடமளியாமல் பேணிவரவேண்டிய பொறுப்பு இருக்கின்றது. உயர்நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் கிடைத்திராவிட்டால் எவருமே அரசியல்வாதி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டுமென நினைக்கமாட்டார்கள். எமது ஆட்சியில் நிலவுகின்ற கட்டமைப்பிற்குள் பொறுப்புக்கூற வேண்டியவர் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். பொறுப்புக்கூறாவிட்டால் அதற்கெதிராக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் நிறுவனங்களின் ஒழுங்குவிதிகளில் குறிப்பிடப்படுகின்றன. அதற்கமைவாக நாங்கள் செயலாற்றுவோம்.

அண்மையில் நாங்கள் பொறியியலாளர் மாநாட்டினை நடாத்தினோம். அதன்போது ஐந்து பொறியியல்துறைகள் பற்றிய கொள்கைகளை நாங்கள் முன்வைத்தோம். அதற்கு முன்னர் சுற்றுலாத் தொழிற்றுறை பற்றிய கொள்கைகளை சமர்ப்பித்தோம். இந்த 29 ஆந் திகதி இலங்கையில் இற்றைவரை மேற்கொண்டிராத ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மாநாட்டினை எற்பாடு செய்திருக்கிறோம். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயற்பாங்கினூடாகவே உலகம் முன்நோக்கி நகர்கின்றது. ஒரு காலத்தில் மிகவும் அதிகமான பீரங்கிகளின் சொந்தக்காரரரே உலகத்தை ஆட்சிசெய்தார்கள். அதன் பின்னர் உலகத்தை ஆட்சிசெய்தவர்கள் மிகவும் அதிகமான நிதிப் பலத்தைக் கொண்டவர்களாவர். வருங்காலத்தில் உலகத்தை ஆளப்போகின்றவர்கள் மிகஅதிகமான தொழில்நுட்பத்தின் உரிமையாளர்களே. ஐக்கிய அமெரிக்கா தனது வரவுசெலவின் அதிகமான பங்கினை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கி உள்ளது. 533 பில்லியன் டொலர்களாகும். எமது மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும்.

ஜுன் 29 ஆந் திகதி நடாத்தப்படுகின்ற மாநாட்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கையை பகிரங்கப்படுத்துவோம். தேர்தல் நெருங்கும்போது எமது ஒட்டுமொத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.

AKD-London-Meeting-QandA

கேள்வி: எமது நாட்டின் சிறுவர் பாதுகாப்பு பாரிய பிரச்சினையாகி இருக்கிறது. அது பல வருடங்களாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இலங்கை பொலிஸின் கடுமையான குற்றச்செயல்கள் பற்றிய வருடாந்த அறிக்கைகளின்படி சிறுவர் துர்ப்பிரயோகம் அதிகரித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின்கீழ் இலங்கை சிறார்களுக்கு நியதிச்சட்டமுறையான தனித்துவம் வழங்கப்படுகின்றதா?

ஜப்பான், செம்பியா போன்ற நாடுகள் தேசிய பாதுகாப்பின் மையப்பொருளாக சிறுவர் பாதுகாப்பினை மாற்றியுள்ளது. சிறுவர் பாதுகாப்பு என்பது உடல்ரீதியான பாதுகாப்பு மாத்திரமல்ல. கல்வி, சுகாதாரம், வறுமையொழிப்பு ஆகிய அனைத்தினதும் சேர்க்கையாகும். அதன்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றின்கீழ் இலங்கையின் தேசிய பாதுகாப்பின் மையப்பொருளாக சிறுவர் பாதுகாப்பு மாற்றப்படுமா?

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அடுத்த சனாதிபதி என்றவகையில் அநுர குமார திசாநாயக்க நியமிக்கப்பட்டால் நீங்கள் எமது பிள்ளைகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக எடுக்கின்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகள் என்ன? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் எடுக்கின்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகள் என்ன?

பதில்: அரசியலமைப்பினால் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். அவையிரண்டையும் சேர்த்துக்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம். தேசிய பாதுகாப்பின் மையப்பொருளாக பிள்ளைகள் மாறுவதற்குப் பதிலாக பிரஜைகளின் பாதுகாப்பின் மையப்பொருளாக பிள்ளைகள் மாறுவார்கள். பிரஜைகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பில் முதன்மையானதாக கருதப்படுவது பிள்ளைகளின் பாதுகாப்பாகும். அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயார்.

எங்கள் முதற்கட்ட நடவடிக்கைதான் ஒவ்வொரு பிள்ளைக்கும் உணவு கொடுப்பது. எமது நாட்டில் ஐந்து வயதிற்கு குறைவான பிள்ளைகளின் போசாக்கின்மை ஏறக்குறைய 21% ஆகின்றது. ஐந்து வயதினைவிடக் குறைந்த பிள்ளைகள் ஐவரை எடுத்துக்கொண்டால் ஒரு பிள்ளை போசாக்கின்மையால் பாதிக்கப்படுகின்றது. அந்த பிள்ளைகளின் உரிமைகள், பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைவிட “உணவு” முதன்மை இடம் வகிக்கின்றது. எனவே எமது கொள்கைப் பிரகடனத்தில் பிரஜைகளின் உணவு, சுகாதாரம், கல்வியை நாங்கள் தெளிவாக உறுதிசெய்திருக்கிறோம்.

இரண்டாம்கட்ட நடவடிக்கையாக பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக இருக்கின்ற நிறுவனங்களில் மறுசீரமைப்பினை எற்படுத்த வேண்டும். இந்த லேபளை ஒட்டிக்கொள்வதற்காக ஒருசில நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த நிறுவனங்களை வினைத்திறன் கொண்டவையாக மாற்றி நெறிப்படுத்தவேண்டும்.

மூன்றாவது விடயம் பொலிஸில் சிறுவர் குற்றச்செயல்கள் பற்றி கண்டறிவதற்காக விசேட கூறு ஒன்று தாபிக்கப்படல் வேண்டும். வயது ஐந்து வருடங்களில், ஏழு வயதில் துர்ப்பிரயோகத்திற்கு இலக்காகின்ற பிள்ளைகளின் வழக்குகள் 22,23 வயதிலேயே விசாரிக்கப்படுகின்றது. அது எவ்விதத்திலும் நியாயமானதல்ல. இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவதற்காக துரிதமான பொறியமைப்பொன்று நிறுவப்படும்.

கேள்வி: அரசியல்வாதிகள் இடைக்கிடையே அங்குமிங்கும் விற்பனையாகிறார்கள். உங்களுடைய அரசாங்கமொன்றின் கீழ் இதனை நிறுத்துவீர்களா? திரிபு நிலை ஏற்படவும் இதுதான் காரணம்.

பதில்: அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகையில் அதனை ஆக்குவதற்கான முன்மொழிவுகளை நாங்கள் சமர்ப்பித்தோம். அதில் ஒரு முன்மொழிவுதான் பாராளுமன்றத்தில் கட்சி மாறினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகும் என்கின்ற வாசகமாகும். பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மூலத் திருத்தத்தில் அந்த வாசகம் இருந்தது. பாராளுமன்றத்தில் சட்டமொன்று ஆக்கப்படுகையில் குழுநிலை எனும் கட்டம் வருகின்றது. குழுநிலைக் கட்டத்தில் தினேஷ் குணவர்தன எழுந்து அதனை நீக்கிவிடுமாறு கூறினார். அந்த நேரத்தில் நீதி அமைச்சர் என்றவகையில் இதனை சமர்ப்பித்தவர் விஜேதாச ராஜபக்ஷ ஆவார். விஜேதாச ராஜபக்ஷ இணங்கினார். அந்த வாசகம் இருந்திருந்தால் விஜேதாச ராஜபக்ஷவிற்கும் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகிப் போயிருக்கும்.

அரசியல்வாதியின் கட்சிதாவல் பற்றி நாங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கிறோம். அது அரசியலை தெருச்சுற்றிமயமாக்கி விட்டது. அண்மையில் வழக்குத் தீர்ப்பொன்று வந்தது. முஸ்லீம் காங்கிரஸின் நசீர் அஹமட் கட்சி தாவியமை காரணமாக உறுப்பினர் பதவி வறிதாகியது. எனினும் ஹரீன் பர்னாந்துவினதும் மனுஷ நாணாயக்காரவினதும் வழக்குகள் விசாரிக்கப்பட்டுவிட்டன. தீர்ப்பு வழங்குவது தாமதித்துள்ளது.

எவர் சனாதிபதியானாலும் பாராளுமன்றம் கலைக்கப்படும். கட்சிதாவல் தொடர்பான வழக்குத் தீர்ப்பு வழங்குதல் இதற்கு முன்னரும் நேர்ந்துள்ளது. 1993 அளவில் லலித், காமிணீ நீங்கிய தருணத்தில் எட்டு உறுப்பினர்கள் நீங்கினார்கள். பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகியது. அரசியலமைப்பிற்கு மேலும் வாசகங்கள் தேவையெனில் அதனைச் சேர்த்திடுவோம். கட்சி தாவினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகுமென எற்கெனவே வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

AKD-London-Meeting-QandA

கேள்வி: உங்களுடைய உயிர் பாதுகாப்பு?

பதில்: நாங்கள் மக்களுடனேயே செயலாற்றவேண்டும். பாதுகாப்பு தொடர்பிலும் அக்கறை செலுத்தவேண்டும். உயிரை நயமாக விற்றுவிட முடியாது. அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தில் இருந்துகொண்டு நாங்கள் செயலாற்றி வருகிறோம்.

கேள்வி: தூதரக சேவையை தூதரக உத்தியோகத்தர்களை கொண்டு மாத்திரம் பேணிவர எதிர்பார்க்கிறீர்களா? அவ்வாறின்றே தூதரக சேவைக்கு அரசியல் உத்தியோகத்தர்களை நியமிக்க எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: வெளியுறவுச் சேவை பற்றிய விடயத்தில் அதற்கான கல்வியைப் பயின்ற, அதற்காகவே பயிற்றப்பட்ட குழுவொன்று இருக்கின்றது. அவர்கள் தொடர்பில் நாங்கள் அதிக அக்கறையைக் காட்டுவோம். சமூகஞ்சார் அனுபவம் உள்ளவர்களை அனுப்பிவைப்பதில் தவறுகிடையாது. இங்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது. நாவலகே பெனற் குறே எவ்வாறு உரோமிற்கு செல்வது? ஜாலிய விக்கிரமசூரிய எவ்வாறு அமெரிக்க தூதுவரானது? ஷிரந்தியின் தம்பி எவ்வாறு சீசெல்ஸிற்குச் செல்வது? ரஷ்யாவிற்கு உதயங்க வீரதுங்க எவ்வாறு செல்வது? அத்தகைய அரசியல் நியமனங்கள் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றில் இடம்பெறமாட்டாது. எமது தூதரக சேவையை நாங்கள் புதிய சந்தைகளை தேடுகின்ற திசையைநோக்கி ஆற்றுப்படுத்த எதிர்பார்க்கிறோம். அத்தருணத்தில் வணிகரீதியான ஆற்றல்களைக்கொண்ட குழுக்கள் தூதரக சேவையில் ஈடுபடுத்தப்படுவது வெற்றிகரமானதாக அமையுமென நாங்கள் நினைக்கிறோம். நாட்டின் அவசியப்பாட்டுடன் தொடர்புபடுத்திக் கொண்டுதான் நாங்கள் தூதரக சேவையில் அமர்த்துவோம்.

கேள்வி: எம்மைப்போன்ற சிறிய நாடுகள் முன்னேற்றமடைந்திருப்பது உற்பத்திப் பொருளாதாரமொன்றின் கீழ் அல்ல. சேவைகள் பொருளாதாரத்தினூடாகவே. கல்வி, நிதிசார் சேவைகளை, விற்பனை செய்யவும் முடியாவிட்டால் சேவைகளின் உற்பத்திக்காக உங்களிடமிருக்கின்ற வேலைத்திட்டமென்ன?

பதில்: நீங்கள் கூறுகின்ற சேவைப் பொருளாதாரம் நிலவுகின்ற ஒவ்வோர் இராச்சியத்திலும் உற்பத்திப் பங்கொன்று இருக்கின்றது. நாங்கள் ஒரு சிறிய நாடாவோம். சேவைகள் பொருளாதாரத்தில் ஒரு பங்கு இருக்கின்றது. எமது நாட்டில் IT துறையில் பாரிய சேவை வாய்ப்பினை உருவாக்கிக்கொள்ள முடியும். கப்பற்பயணத்துறையின் சேவை வாய்ப்புகளின் பெரும்பங்கினை கைப்பற்றிக்கொள்ள முடியும். நிதிசார் சந்தையில் ஒரு மையநிலையமாக எம்மை மாற்றிக்கொள்ள முடியும்.

எனினும் அவசியமான முட்டைகளை இறக்குமதி செய்யாமல் உற்பத்தி செய்துகொள்ள முடியும். கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் குறைந்தபட்சம் தமக்கு அவசியமான அடிப்படை பண்டங்களை தாமே உற்பத்தி செய்துகொள்ள வேண்டுமென்ற புதிய எண்ணக்கருவொன்று கட்டியெழுப்பப்படவேண்டுமென்ற அழுத்தம் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. அங்கு விவசாயத்தை நவீனமயமாக்குகின்ற திசைக்கு நாங்கள் செல்லவேண்டி ஏற்படும். அந்த இடத்திற்கு நாங்கள் பயணிக்கவேண்டும். எமது கனியவளங்களின் அடிப்படையில் எமக்கு பொருளாதார வாய்ப்புவளங்கள் இருக்கின்றன. நாங்கள் அந்த இடத்திற்குச் செல்லவேண்டும். அத்தகைய பல துறைகளை நாங்கள் தெரிவுசெய்திருக்கிறோம்.. நாங்கள் உற்பத்தியில் எந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என இனங்கண்டு கைத்தொழில் துறை தொடர்பான புதிய மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்’றும் சேவைகள் பங்கினை உருவாக்குவது எமது எதிர்பார்ப்பாகும்.

AKD-London-Meeting-QandA

கேள்வி: அரசியலமைப்பிலே ஒரு பிரிவு இருப்பதாக கூறப்படுகிறது. ஐந்து வருடங்களை ஆறு வருடங்களாக நீடித்துக்கொண்டு இருக்கமுடியுமா? வடக்கு கிழக்கின் சிறுபான்மை வாக்குகளை வென்றெடுப்பதற்கான உங்களுடைய வேலைத்திட்டம் என்ன?

பதில்: சனாதிபதியீன் பதவிக்காலம் ஆறு வருடங்களை விஞ்சுவதாயின் மக்கள் தீர்ப்பினாலன்றி மாற்றியமைத்திட முடியாதென 83 வது உறுப்புரையில் இருக்கின்றது. அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தத்தில் இந்த உறுப்புரை திருத்தப்படவில்லை. எனினும் சனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உறுப்புரையை எவ்விதத்திலும் ரணில் விக்கிரமசிங்கவினால் பயன்படுத்திக்கொள்ள முடியாது. இப்போது சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டு அடுத்ததாக வருகின்ற சனாதிபதியால் மாத்திரமே அவ்வாறு செய்யமுடியும். அதனால் 83 வது உறுப்புரைக்குள்ளே நுழைந்துசெல்வதற்கான எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது.

அடுத்ததாக வடக்கு சம்பந்தமான பிரச்சினையில் நாங்கள் காண்பது வெற்றிக்காக தமிழ் வாக்குகள் தேவையென்ற அடிப்டையில் அல்ல. வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய அனைத்து மக்களினதம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாங்கள் அரசாங்கமொன்றை அமைக்கவேண்டும். நாங்கள் தெற்கில் மாத்திரம் வெற்றிபெற்றால் அதன்மூலமாக வெளிக்காட்டப்படுவது வடக்கின் மக்கள் எம்மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதாகும். இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் கிழக்கு, வடக்கு, தெற்கு, மலையக மக்கட் சமுதாயத்தின் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. நாங்கள் வடக்கில் ஒருபகுதி பணியை ஆற்றிவருகிறோம். இளைஞர் தலைமுறையினரின் எழுச்சியொன்று இருக்கின்றது. கிழக்கின் முஸ்லிம் மக்களின் பாரிய போக்கு நிலவுகின்றது. வடக்கும், தெற்கும், கிழக்கும், அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதே எமது எதிர்பார்ப்பு. அதனை மையமாகக்கொண்டு நாங்கள் அந்த பிரதேசங்களில் விரிவான பல வேலைத்திட்டங்களை தொடங்கி இருக்கிறோம்.

கேள்வி: உங்களின் அரசாங்கமொன்றின் கீழ் விவசாயக் கொள்கை எவ்வாறு அமுலாக்கப்படும்? கமக்காரர்களின் சிக்கல்களிலிருந்து அவர்களை மீட்டெடுத்து ஏதேனும் மட்டத்திற்கு கொண்டுவருவதற்காகவுள்ள கொள்கை என்ன?

பதில்: எமது விவசாயத்தில் இருக்கின்ற பிரதானமான சிக்கல் திட்டமிடப்பட்ட விவசாய உற்பத்தியொன்று இல்லாமையாகும். உலகின் எந்தவோர் உற்பத்தியும் சந்தைக்கு வருவது தரவுகள், தகவல்களின் அடிப்படையிலாகும். எமது விவசாயம் இருப்பது தரவுகள், தகவல்களின் அடிப்படையில் அல்ல. மோப்பத்தின் அடிப்படையிலாகும். திட்டமிடப்பட் விவசாயமொன்று எம்மிடம் இல்லை. எமது முதலாவது முயற்சி ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி சந்தைக்கு வரத்தக்கவகையில் ஒழுங்கமைவதாகும். பலம்பொருந்திய பயிர்ச்செய்கைத் திட்டமொன்றுக்குள் விதையினங்கள், உள்ளீடுகள், தொழில்நுட்பம், பொதிசெய்தல், களஞ்சியப்படுத்துதல், சந்தை, அறுவடைக்குப் பிந்திய விரயத்தை தடுத்துக்கொள்ளல், புதிய விதையினங்களை அறிமுகஞ் செய்தல் போன்ற பல துறைகளில் புதிய ஆராய்ச்சிகள், புதிய துறைகள் அவசியமாகும். அவை பற்றி கருத்திற்கொண்டு எமது விவசாயக் கொள்கையை வகுத்திருக்கிறோம்.