Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு “ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை” -சட்டத்தரணி சுனில் வட்டகல- “மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் நேற்று (21) முற்பகல் கொட்டகலை மலையகம் மக்கள் சபை நிகழ்வு இடம்பெற்றது. “உலகின் எந்தவொரு நாட்டுடனும் போட்டியிட்டு பயணிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே திசைகாட்டியின் எதிர்பார்ப்பு” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க- ஜப்பானுக்கு அநுர
X

“மக்களினதும் ஆட்சியாளர்களினதும் எதிர்பார்ப்புகள் இணையானதாக அமைகின்ற ஆட்சியொன்று எமது நாட்டுக்குத் தேவை”-தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-கனடாவில் டொரண்டோ இலங்கையர்களுடனான மக்கள் சந்திப்பு – 2024.03.23-)

AKD-Toronto-Speech-and-Q&A-Session

இங்கு குழுமியுள்ள நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்க மாட்டோம் என வாக்குறுதி அளிக்கிறோம். எமது நாட்டு மக்களிடம் சாதகமான நோக்கங்களும் சாதகமான எதிர்பார்ப்புகளும் இருந்தன. எந்த அரசாங்கத்தை அமைத்துக்கொண்டாலும் எந்த ஆட்சியாளனை நியமித்துக்கொண்டாலும் பொதுமக்களிடம் சாதகமான நோக்கங்களும் சாதகமான எதிர்பார்ப்புகளுமே இருந்தன. எனினும் ஆட்சியாளனிடம் இருந்தது அதற்கு முரணான எதிர்பார்ப்புகளும் மாறுபட்ட நோக்கங்களுமே. அதனால் மக்களின் நோக்கங்களும் எதிர்பார்ப்பும் ஆட்சியாளின் எதிர்பார்ப்பும் நோக்கங்களும் இருவேறுபட்டவையாக விளங்கின. மக்களினதும் ஆட்சியாளனதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக அமைகின்ற ஆட்சியொன்றை நாங்கள் இலங்கையில் முதல்த்தடவையாக அமைத்திடுவோம். அவ்வாறான ஆட்சியே எமக்குத் தேவை. உங்களிடம் இருக்கின்ற நோக்கங்கள்தான் எம்மிடமும் இருக்கின்றன. ஒருசில நோக்கங்கள் உங்களைப் பார்க்கிலும் முன்னேறற்மடைந்த நிலையில் எங்களிடம் இருக்கின்றனவென நாங்கள் நம்புகிறோம். எமது நாட்டின் தொலைதூரக் கிராமங்களில் துன்பங்களையும் வேதனைகளையும் எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு இதைவிட நல்ல வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கவும் அபகீர்த்திக்கு இலக்காகியுள்ள எமது இராச்சியத்திற்கு கீர்த்தியைக் கொண்டுவருகின்ற மற்றும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள எமது இராச்சியத்திற்கு செல்வந்தநிலையைக் கொண்டுவருவதற்காகவும் நாங்கள் புதியதோர் அரசாங்கத்தை அமைத்திடுவோம்.

இந்த வருடத்தின் ஒற்றோபர் மாதமளவில் எமது நாட்டில் இருப்பது புதியதோர் அரசாங்கம் புதியதோர் ஆட்சியாகும். எமது எதிர்பார்ப்பு அந்த அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாக மாற்றிக்கொள்வதாகும். இந்த பயணத்தில் இரண்டு பிரதான சவால்கள் நிலவுகின்றன. ஒன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது: இரண்டாவது சீர்குலைந்துள்ள எமது நாட்டைக் கட்டியெழுப்புவது. அதனால் இரண்டு பிரதான பணிகள் எமது தோள்மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த பணிகள் இரண்டும் ஒன்றாக இருப்பினும் ஒரே பயணத்தின் இரண்டு மைல்கற்களாகும். நாங்கள் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கின்ற பாதையில்தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பாதையும் இருக்கின்றது. எமது நாட்டில் பெரும்பாலும் இடம்பெற்ற விடயம்தான் அதிகாரத்தைப் பெறுவதற்காக புரியக்கூடிய அனைத்துவிதமான கீழ்த்தரமான செயல்களையும் புரிவார்கள். புரியக்கூடிய எல்லாவிதமான அழிவுகளையும் புரிந்து அதிகாரத்தைப் பெற்ற ஒரு நாட்டை சீராக்கிவிட முடியாது. அதிகாரத்தைப் பெறுவதற்காக நல்லெண்ணத்துடன் புரிகின்ற பணிதான் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் தோள்கொடுக்கும். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இருக்கின்ற பாதைதான் நாட்டைக் கட்டியெழுப்பவும் இருக்கின்றது. அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அனைவரும் ஒன்றுசேர வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் அனைவருமே ஒன்றுசேரவேண்டும். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமல்ல நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் பங்களிப்பினை வழங்குகின்ற ஒரு அணியாக எம்முடன் இணைந்துகொள்ளுமாறே நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

AKD-Toronto-Speech-and-Q&A-Session

மூன்று உரையாடல்கள் வந்திருக்கின்றன. முதலாவது உரையாடல் பாராளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கானதாகும். தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது தொடர்பானதாகும். இரண்டாவது உரையாடல் சனாதிபதி தேர்தலுக்கு முன்னராக பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதாகும். மூன்றாவது உரையாடல் நிறைவேற்று சனாதிபதி முறைமையை ஒழித்துக்கட்டுதல் பற்றியதாகும். இலங்கையில் தேர்தலொன்று தொடர்பாக இத்தகைய நிச்சயமற்றதன்மை அல்லது ஐயப்பாடு இதற்கு முன்னர் தோன்றியிருக்கிறதா? அரசியலமைப்பிற்கு அமைவாக சனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்றன. உதாரணமாக 2019 நவெம்பர் 08 – திசெம்பர் 08 இற்கு இடையில் சனாதிபதி தேர்தல் நடாத்தப்படவேண்டி இருந்தது. அது சம்பந்தமாக எவருக்குமே சந்தேகம் நிலவவில்லை. அதற்கு அவசியமான சுற்றுச்சூழலை உருவாக்கிட சரியாக உரிய நேரத்தில் ஏப்பிறல் 21 ஆந் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. தேர்தல் பற்றிய நிச்சயமற்ற தன்மை நிலவவில்லை. இலங்கையில் முதல்த்தடவையாக தேர்தல் பற்றிய ஐயப்பாடு தோன்றியுள்ளது. வேறு காரணத்தினால் அல்ல: எமது நாட்டின் ஊழல்மிக்க, அழிவுமிக்க, பிரபுக்கள் பொறியமைப்பிடமிருந்து பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரம் மாறுவதற்கான ஏதுவொன்று உருவாகியுள்ளது. அவர்கள் அதற்குப் பயப்படுகிறார்கள். ராஜபக்ஷ பாசறையிடமிருந்து ரணில் பாசறைக்கு அதிகாரம் கைமாறுவதாயின் ரணில் பாசறையில் இருந்து ராஜபக்ஷ பாசறைக்கு அதிகாரம் கைமாறுமாயின் அவர்கள் ஒருபோதுமே பயப்படமாட்டார்கள். இலங்கையை 76 வருடங்களாக ஆட்சிசெய்த ஊழல்மிக்க, அழிவுமிக்க, பிரபுக்கள் பொறியமைப்பிடமிருந்து பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரம் மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதனால் பாராளுமன்றத் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான பிரேரணையொன்று பாராளுமன்றத்திற்கு வந்துள்ளது. எனினும் சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இதனை அமுலாக்குவதற்கான வாய்ப்பு கிடையாது. சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக கூறுகிறார்கள். சனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத் தேர்தலை நடாத்தினால் கழுவிச் செல்லப்படுமென பசில் ராஜபக்ஷ கூறுகிறார். 2004 இல் பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டது. பாராளுமன்றத்திற்கு 06 வருடங்கள். 2005 இல் சனாதிபதி தேர்தல் நடாத்தப்பட்டது. சனாதிபதி பதவிக்கு 06 வருடங்கள். அப்படியானால் பாராளுமன்றத் தேர்தல் 2010 இலேயே வரவேண்டும். சனாதிபதி தேர்தல் 2011 இலேயே வரவேண்டும். நிறைவேற்று சனாதிபதி முறைக்கு நான்கு வருடங்கள் நிறைவடைந்த பின்னர் தேர்தலுக்கு அழைப்புவிடுக்க அந்நேரத்தில் நிறைவேற்று சனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. அரசியலமைப்பின் உறுப்புரைகளைப் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் சனாதிபதி தேர்தலை அவர் எடுத்துக்கொண்டார். 2015 இல் பாராளுமன்றத்தைக் கலைத்திட முன்னர் மகிந்த ராஸபக்ஷவிற்கு மேலும் இரண்டு வருடங்கள் இருக்கையில் சனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். 2019 இல் சனாதிபதி தேர்தல் நடாத்தப்பட்டது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் 2020 மார்ச்சு 02 ஆந் திகதியே கிடைத்தது. சனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் உடனடியாக பாராளுமன்றத் தேர்தலைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் இரண்டாந் திகதி இரவு பாராளுமன்றத்தைக் கலைத்தார். மூன்று தருணங்களில் பொதுத்தேர்தலுக்கு முன்னர் சனாதிபதி தேரத்தலை எடுத்துக்கொண்ட, அதற்காக செயலாற்றிய பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடாத்தினால் நல்லதென தற்போது கூறுகிறார்.

சனாதிபதி தேர்தல் காரணமாக அவர் பாரிய சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார். ஒன்றில் அவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் அதன்பின்னர் மொட்டு கிடையாது. அப்படியில்லாவிட்டால் வேறொருவரைப் போடவேண்டும். வேறு ஒருவரைப் போட்டால் பாராளுமன்றத் தேர்தலின்போது எடுக்கின்ற வாக்குகளின் எண்ணிக்கையைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது. எனவே இருதலைக்கொல்லி எறும்பின் நிலை ஏற்படும். அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பொதுத்தேர்தலை முதலில் எடுக்க முனைகிறார்கள். அரசியலமைப்பின்படி பொதுத்தேர்தலை முன்கூட்டியே எடுப்பதற்கான தற்றுணிபு ரணில் விக்கிரமசிங்கவின் கையில் மாத்திரமே இருக்கின்றது. இன்று பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டுமென ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தால் கலைக்கமுடியும். இன்று கலைத்தால் நாளைமுதல் ரணிலின் அதிகாரம் சூன்யமாகும். அதனால் ரணில் இறுதித்தருணம்வரை இருக்கவேண்டுமாயின் சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்வதற்குள்ள வாய்ப்பு குறைவானதாகும். தற்போதைய அரசியல் கட்டியெழுப்பப்பட்டுள்ள விதத்தின்படி செத்தெம்பர் 17 இற்கும் ஒற்றோபர் 17 இற்கும் இடையில் சனாதிபதி தேர்தல் நடாத்தப்படும். பெரும்பாலும் செத்தெம்பர் 28 அல்லது ஒற்றோபர் 05 இல் சனாதிபதி தேர்தல் நடைபெறும். அதனைத் தடுக்க எவ்விதத்திலும் இயலுமை கிடையாது. ரணில் விக்கிரமசிங்கவிற்கு செத்தெம்பர் 28 வரை அல்லது ஒற்றோபர் 05 வரை இருக்க முடியும். அவர் சனாதிபதி தேர்தலை நடாத்த தீர்மானிக்காவிட்டால் அதற்கு முன்னராகவே போகமுடியும்.தேர்தலில் பாடமொன்றை புகட்டுவதற்காகவே இன்று எமது மக்கள் இந்த அழுத்தத்தை தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

AKD-Toronto-Speech-and-Q&A-Session

அடுத்ததாக நிமல்சிறிபால த சில்வா அண்மையில் பாராளுமன்றத்தில் கூறினார் “பொது எதிரி” பற்றி. ஏனைய கட்சிகளுக்கிடையில் நிலவுகின்ற வித்தியாசங்களை ஒருபுறம் வைத்துவிட்டு பொது எதிரியை எதிர்கொள்ளுமாறு. பொது எதிரி என்.பிபி. அவர்களின் பொது நண்பனாக மாறாமல் பொது எதிரியாக மாறியமைக்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் நிமல் சிறிபாலவிற்கு ஒருபோதுமே எதிரியாக இருக்கவில்லை. அவர் 1994 சந்திரிக்காவின் அரசாங்கத்திலும் 2005 இல் மகிந்தவின் அரசாங்கத்திலும் 2015 இல் மைத்திரிபாலவின் அரசாங்கத்திலும் 2019 இல் கோட்டாபயவின் அரசாங்கத்திலும் 2022 ரணிலின் அரசாங்கத்திலும் அமைச்சராவார். அதனால் நாங்கள் நிமல் சிறிபாலவிற்கு பொது எதிரியாக அமைவது சரிதான். அவர் 30 வருடங்களாக இந்த பாராளுமன்றத்தில் அமைச்சர். அதனால் பிரமாண்டமான கூட்டமைப்பொன்றின் முன்னறிகுறியாகும். தேசிய மக்கள் சக்தியை தோற்கடித்திட அதற்கு எதிரான அனைவரும் ஒன்றுசேர வேண்டுமென்ற உரையாடல் தோன்றியுள்ளது. இவ்வாறான மாற்றமொன்று பொதுவான முறையின்படி இடம்பெற அவர்கள் இடமளிக்கமாட்டார்கள். நாங்கள் தோல்வியடைந்தால் அடுத்த நாளில் இருந்து அரசியலில் ஈடுபடுவோம். நாங்கள் இதனைக் கைவிடமாட்டோம். மாற்றியமைப்பதற்காக திடசங்கற்பத்துடன் செயலாற்றுவோம். அவர்கள் தோல்வியடைந்தால் அவர்கள் பலவற்றை இழந்துவிடுவார்கள். அவர்கள் பரம்பரைக்கிணங்க அரசியல் பலகையில் பகடைக்காய்களை வரிசைப்படுத்தி உள்ளார்கள். நாமல் அண்மையில் அவர்களின் குடும்பத்தின் அரசியல் வரலாறு 98 வருடங்கள் எனக் கூறினார். அவர்கள் தோல்வியடைந்தால் நாமலுக்கு சென்சரி அடிக்கக் கிடைக்காது. மேலே மாத்திரமல்ல மாவட்டரீதியிலும் கிராமிய ரீதியிலும் அவர்களின் தலைமுறையினருக்கு எமது நாட்டில் ஆட்சி எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தலைமுறை ஆட்சி இல்லாதொழியும். அவர்கள் ஒருபோதுமே சட்டத்திற்கு கட்டுப்படவில்லை. சட்டத்திற்கு மேலாக இருந்தவர்கள். அரசியலமைப்பு, குற்றவியல் சட்டங்கள், பணம் தூய்தாக்கல் சட்டம், பொது ஆதனங்கள் சட்டம் எவ்வளவுதான் இருந்தாலும் அந்த எல்லா சட்டங்களையும்விட அவர்கள் மேலேயே இருந்தார்கள். அவர்களுக்கு சட்டத்திற்கு கட்டுப்படவேண்டிய நிலையேற்படும். முறைதகாதவகையில் சேகரித்துள்ள செல்வத்தை இழப்பார்கள். அதனால் அவர்களின் அதிகாரம் கைநழுவிச்செல்வதை தடுப்பதற்காக அவர்களின் பக்கத்தில் செய்யக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் செய்வார்கள். இலங்கையில் காணக்கூடிய பலவர்ண தேர்தல் மேடையை எதிர்காலத்தில் காணமுடியும். முன்னாள் சனாதிபதிகள், சந்திரிக்கா, மகிந்த, மைத்திரி, கோட்டா மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஐவருமே ஒரே மேடையில் ஏறுவார்கள். தற்போதும் மேடையில் ஏறாவிட்டாலும் உள்ளக உடன்படிக்கையொன்றின்படி செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பினர் முதல்த்தடவையாக தமது அதிகாரம் அற்றுப்போய் விடுமோ என திகைத்துப்போய் இருக்கிறார்கள். ஊரில் ஒரு கதை பேசப்படுகிறது “பாரிய வெள்ளப்பெருக்கில் அகப்பட்டால் நாகமும் கீரியும் அடித்துச் செல்கையில் ஒரே மரக்குற்றியில் ஏறுமாம்.” இந்த நாடகத்தையும் கீரியையும் வருங்காலத்தில் ஒரே மேடையில் காணலாம். அவர்களின் பக்கத்தில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக செய்யக்கூடிய அனைத்தையும் செய்வார்கள் என்பது தெளிவானதாகும்.

நாங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மென்மேலும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டி சேர்த்துக்கொள்வதையும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதையுமே செய்யவேண்டும். அந்த பணியில் உங்களை பங்காளர்களாக மாற்றுவதற்காகவே நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். ஊழல்மிக்க, பிரபுக்கள் அமைப்பிற்கு எதிராக பலம்பொருந்திய மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றுசேருமாறு நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். கனடாவில் வசிக்கின்ற தமிழ்ச் சமூகத்திற்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் வசிக்கின்ற மக்கள்மீது பலம்பொருந்திய அழுத்தம் கொடுக்கக்கூடிய இயலுமை அவர்களிடம் இருக்கின்றது. நான் சிங்கள பௌத்த கலாசாரத்திலும், மற்றுமொருவர் தமிழ்க் குடும்பத்தின் இந்து மத கலாசாரத்திலும், வேறொருவர் இஸ்லாமிய கலாசாரத்திலும் கிறிஸ்தவர்களும் பறங்கியர்களும் அந்தந்த கலாசாரங்களிலும் பிறந்து வளர்ந்தவர்களாவர். நாங்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான மத, மொழி, கலாசாரத்திற்கு அமைவாக பிறப்பது ஒரு குற்றச்செயலா? இந்த நாட்டுக்குள்ளே அந்த பிளவினை ஏற்படுத்துவதில் இந்த ஆட்சிக்குழுக்கள் நீண்டகாலமாக வெற்றிபெற்றார்கள். வடக்கின் அரசியலை தெற்கிற்கும் தெற்கின் அரசியலை வடக்கிற்கும் எதிராகவும் தெற்கின் அரசியலை கிழக்கிற்கும் கிழக்கின் அரசியலை தெற்கிற்கும் எதிராகவும் நெறிப்படுத்தினார்கள். ஒட்டுமொத்த அரசியலுமே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை அவர்கள் பேசுகின்ற மொழிக்கிணங்க, அவர்களின் மதத்திற்கிணங்க, அவர்களுக்கே தனித்துவமான கலாசாரத்திற்கிணங்க அவரவர்களுக்கெதிராக எம்மைத் துண்டுதுண்டாக பிளவுபடுத்தின.

AKD-Toronto-Speech-and-Q&A-Session

இன்று இலங்கைக்குத் தேவை ஒன்றுசேர்கின்ற மற்றும் ஒற்றுமையின் அரசியலாகும். நாங்கள் முப்பது வருடகால யுத்தத்தை எதிர்நோக்கினோம். பெருநிலம் நனையும்வரை இரத்தம் சிந்தினோம். ஆறுகள் பெருக்கெடுக்கும்வரை கண்ணீர் சிந்தினோம். வடக்கிலும் தெற்கிலும் தாய்தந்தையர் தமது பிள்ளைகளை இழந்தார்கள். இந்த பிரிவினைவாத அரசியலில் எமக்கு எஞ்சிய பெறுபேறு என்ன? நாங்கள் இந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடாதா? நாங்கள் வடக்கின் மக்களுக்கும் அவர்களின் உண்மையான பிரச்சினையான உணவு பற்றி, சுகாதாரம் பற்றி, பிள்ளைகளின் கல்வி பற்றி, வீடொன்றைக் கட்டிக்கொள்ளும் பிரச்சினை பற்றி பாரதூரமான வகையில் சிந்திக்கின்ற அரசியல் தலைவர்களுக்கு நீங்கள் ஒன்றுசேர வேண்டிய இடம் தேசிய மக்கள் சக்தியே என நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். கிழக்கின் முஸ்லீம் மக்களுக்கும் கிழக்கிழங்கை மக்களின் பிரச்சினைகள் பற்றி பாரதூரமான வகையில் சிந்திக்கின்ற ஒவ்வொரு பிரசைக்கும் சமூகத் தலைவர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இந்த மாற்றத்தைச்செய்ய உங்களின் பங்களிப்பு எமக்கு அவசியமாகும். நாங்கள் கட்டியெழுப்புகின்ற அரசாங்கம் தெற்கு, வடக்கு, கிழக்கு, தமிழ், முஸ்லீம், சிங்களம் ஆகிய அனைவரும் ஆட்சியதிகாரத்தை வகிக்கின்ற அரசாங்கமாக மாறவேண்டும். இந்த செய்தியை உங்கள் உறவினரிடம் நண்பரிடம் எடுத்துச் செல்லுமாறு கனடாவில் வசிக்கின்ற தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எமது பரம்பரை யுத்தம் புரிந்தது: சண்டைபோட்டுக்கொண்டோம்: சந்தேகம், கடுங்கோபம், குரோதத்தை ஏற்படுத்திக்கொண்டோம். எதிர்கால சந்ததியினருக்கு அந்த நிலைமையை ஏற்படுத்திக் கொடுக்காதிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு எமக்குண்டு.

1948 இல் சுதந்திரம் கிடைத்தவேளையில் அனைத்து மக்களையும் ஒரே தேசியக் கொடியின்கீழ் ஒன்றுசேர்க்க இயலுமைனதாக இருந்தது. வெள்ளைக்காரனின் ஆதிபத்தியம் சிதைந்தது. சுதேசிகளின் கைகளுக்கு ஆட்சி கைமாறியது. எப்படிப்பட்ட தேசிய உணர்வு எங்கள் மனங்களில் உதிக்கவேண்டும்? தற்போது சுற்றறிக்கை மூலமாக தேசியக் கொடியை ஏற்றிவைக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. எம்மால் அதனை ஒரு சுதந்திரமாக உணரமுடியவில்லை. 1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் தலைவர்களுக்கு தமது நாட்டை முன்னேற்ற வேண்டுமென்ற நோக்கு இருந்தது. அன்று தலைவர்கள் இட்ட அடித்தளம்தான் இன்று சந்திரனுக்குப் போகின்ற இந்தியா, ஆசிய பிராந்தியத்திற்கு வாகனங்களை வழங்குகின்ற மருந்துவகைகளை வழங்குகின்ற உணவு வழங்குகின்ற நாடு உருவாகியது. எமக்கு கடனெடுக்க நேரிட்டது, கடனை மீளச்செலுத்த முடியவில்லை. எமது தலைவர்களுக்கு ஒரு நோக்கினைக்கொண்ட ஆட்சி இருக்கவில்லை. பாரிய பிரதேச வேறுபாடுகளைக்கொண்ட, பல்வேறு கலாசாரங்கள் நிலவுகின்ற, பாரியளவிலான மதபேதங்கள் நிலவுகின்ற, பல்வேறு மொழிகள் பேசப்படுகின்ற நாடான இந்தியாவிற்கு ஒரே தேசியக் கொடியின்கீழ் மக்களை அணிதிரட்டவும் அதன் காரணமாக மன்மோகன்சிங்கிற்கு பிரதமராகவும், அப்துல் கலாமிற்கு சனாதிபதியாகவும் இயலுமை கிடைத்துள்ளது. சாதியில் தாழ்ந்தவரென ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்ணால் சனாதிபதியாக முடியுமானதாகி உள்ளது. அந்த ஆட்சியாளர்களால் தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்த முடிந்தமையே அதற்கான காரணமாகும். ஆனால் எமது நாட்டில் 1958 இல் இருந்து 2019 வரையான ஒட்டுமொத்த வரலாறுமே முரண்பாட்டு வரலாறாகவே இருந்தது. பிறருக்கு எதிராக அரசியல் புரிகின்ற நுகத்தடியில் இருந்து நாங்கள் விடுபடவேண்டும்.

AKD-Toronto-Speech-and-Q&A-Session

ஒற்றோபர் மாதம் சனாதிபதி தேர்தலில் வடக்கும் தெற்கும் கிழக்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து புதிய ஆட்சியொன்றைக் கட்டியெழுப்புவோம். 1948 ஆட்சியாளர்கள் தவிர்த்துக்கொண்டாலும் 2024 இல் ஒற்றுமை, சமாதானம், தேசிய ஒருமைப்பாட்டினைக்கொண்ட ஆட்சியொன்றைக் கட்டியெழுப்புவோம். எனக்கு வாக்களியுங்கள்: நான் 13 பிளஸ், பெடரல் தருவேன் என வாக்குக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடத் தயாரில்லை. அரசியல் என்பது கொடுக்கல்வாங்கலே, பிஸ்னஸ் அல்ல. அரசியல் என்பது ஒரு கூட்டு முயற்சியாகும். வடக்கு, கிழக்கு, தெற்கின் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

டொரண்டோ மக்கள் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அளித்த பதில்கள்

AKD-Toronto-Speech-and-Q&A-Session

கனடாவின் அமைச்சரவையில் 50% பெண்களின் பிரதிநிதித்துவம் நிலவுகின்றது. தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய கருத்து என்ன?

பெண்களுக்கு வாய்ப்பு வழங்க நாங்கள் மிகவும் விரும்புகிறோம். எமக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்தவேளையில் தேசியப் பட்டியலில் ஒரு உறுப்பினர் பதவியே கிடைத்தது. அந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்த சுனில் ஹந்துன்னெத்தி, பிமல் ரத்நாயக்க, லால் காந்த போன்ற பாராளுமன்ற செயற்பாங்கில் பாரிய பங்களிப்பினைச் செய்தவர்கள் இருக்கையில் எமக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தோழர் ஹரினிக்கு வழங்கத் தீர்மானித்தோம்.

எங்கள் பாராளுமன்றத்தில் அமைச்சரவையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகமாக பெற்றுக்கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். எமக்கு பெண் தலைவிகள் அவசியமென்பதாலேயே இந்நாட்களில் நாங்கள் பெண்கள் மாநாட்டினை நடாத்தி வருகிறோம். அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்தால் அவ்வாறு குறைவடைவது எமது விருப்பம் காரணமாக அல்ல. எமக்கு அதற்குப் பொருத்தமான சகோதரிகள், தலைவிகள் இன்மையால் அவர்கள் கட்டியெழுப்பப்படுகின்ற அளவுக்கு நாங்கள் எமது நாட்டின் அரசியலை மாத்திரமன்றி எல்லாத் திசைகளிலும் பெண்களின் பங்களிப்பு கிடைக்கவேண்டுமென நாங்கள் நம்புகிறோம். நினைக்கிறோம். அந்த பணிக்கு ஏற்றவகையில் சகோதரிகளின் அளவினை எம்மால் கட்டியெழுப்ப முடியுமா எனும் காரணியின்பேரிலன்றி எமது விரும்பம் அல்லது விருப்பமின்மையின் பேரில் அல்ல. எமது பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் பெண்களின் பிரதிநிதித்தும் இடம்பெறுவதைக் காண நாங்கள் விருப்பமுடையவர்களாக இருக்கிறோம்.

சட்டம் மற்றும் ஒழுங்கையும் ஆட்களின் பாதுகாப்பினையும் எவ்வாறு உறுதிசெய்வது?

எமது பிள்ளைகள் அழகான பிள்ளைகளே. அநீதிக்கு எதிரான பிள்ளைகளே. ஏன் சுங்கத்தில் மாற்றமடைவது. ஏன் பொலீஸில் மாற்றமடைவது. இது தனித்தனி ஆட்களின் குற்றச்செயல்கள் அல்ல. எமது சிஸ்டம் ஊழலுக்கு ஒத்தாசை புரிகின்ற சிஸ்டமாகும். பிறக்கும்போது எவருமே கெட்டவர்கள் அல்ல. இந்த வெற்றுக்குடம்போன்ற மனதை நிரப்புவது சுற்றுப்புற சமூகமாகும். அவற்றை நெறிப்படுத்துகின்ற அரசாங்கங்கள். செயலாளர் அறிந்திராமல் அமைச்சரால் திருட முடியாது. செயலாளரின் கையிலேயே நிதி அதிகாரம் இருக்கின்றது. அமைச்சர் செய்கின்றவேலையை செயலாளர், செயலாளர் செய்கின்ற வேலையை மேலதிகச் செயலாளரும் என்றவகையில் படிநிலைவரிசையில் கீழ்நோக்கிய தொடர்புகள் உள்ள அனைவரும் இடம்பெறுகின்றவற்றை அறிவார்கள். இந்த களவு ஒரு தேகம்போல் பரவி இருக்கிறது. இந்த நிலைமையை இல்லாதொழிக்க அரசியல் அதிகாரநிலை முன்மாதிரியாகவும் இடையீடுசெய்தும் ஊழலற்றதன்மையை நிரூபிக்கவேண்டும்.

அதைப்போலவே அரசாங்கம் நினைக்கின்ற விதத்தைப் பார்த்தே பொலீசும் இராணுவமும் நடந்துகொள்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளையில் குற்றப்புலனாய்வத் திணைக்களத்தில் இருந்த சீனியர் டீ.ஐ.ஜீ. ரவீ செனெவிரத்னவை உள்ளிட்ட குழுவினர் மிகுந்த நல்லெண்ணத்துடன் விசாரணைகளை மேற்கொண்டு வந்தார்கள். அரசாங்கம் மாறியது. கோட்டாபய வந்தார், நல்லெண்ணத்துடன் விசாரணைகளை மேற்கொண்டுவந்த உத்தியோகத்தர்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். அதன்போது அரசாங்கம் இப்படித்தான் நினைக்கின்றதென மற்றவர்கள் நினைப்பார்கள். அரசாங்கம்தான் சமிக்ஞை கொடுக்கிறது. சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கையில் முக்கியமானவையாக அமைவது சட்டம், புத்தகங்கள், அரசியலமைப்பு அல்ல: அரசாங்கத்தின் சமிக்ஞையாகும். நாங்கள் எவரையும் அரசியல் அழுத்தத்தின்பேரில் விடுதலை செய்யவோ அல்லது நிர்ப்பந்திக்கவோ மாட்டோம்.

உறுப்பினர் பதவிகளுக்கான கல்வித் தகைமைகளை பார்க்கையில் கல்வி கற்றவர்கள் நல்லவர்களா? கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒருசிலருக்கு இந்த வழிமுறை மூலமாகவே கல்வி இழக்கச்செய்யப்பட்டுள்ளது. நல்ல பாடசாலை, நல்ல ஆசிரியர்கள், இன்மை, வீட்டில் நிலவிய பொருளாதார வசதியீனங்கள் என்பவற்றால் பிள்ளைகளுக்கு கல்வி இழக்கச்செய்விக்கப்பட்டுள்ளது. சமூக அநீதியால் கல்வியை இழந்தவருக்கு நாங்கள் அரசியலையும் இழக்கச்செய்விப்பது நியாயமானதல்ல. கல்வியை ஓர் அளவுகோலாக மாற்றிக்கொள்வது பொருத்தமானதல்ல. முதலாவது விடயம் நேர்மையாகும். ஊழலற்ற தன்மை, பொதுமக்கள் நாடுமீது எந்தளவு ஈடுபாடு இருக்கின்றது எனும் காரணியின்பேரில்தான் மக்கள் பிரதிநிதியை அளவிடவேண்டும். எனினும் அரசாங்கத்தை கொண்டுநடாத்துவதற்காக அந்தந்த துறைசார்ந்த திறன்படைத்தவர்கள் அவசியமாகும்.

AKD-Toronto-Speech-and-Q&A-Session

தேசிய சிக்கலைத் தீர்த்துவைத்தல் சம்பந்தமாக

எமது நாட்டில் இனவாதம் என்பது அரசியலாகும். எமது நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் முரண்பாடொன்று நிலவுகின்றது. சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வசித்தார்கள். விவாகம் செய்துகொண்டார்கள். அந்தந்த கலாசாரங்களுக்கிடையில் ஈடுபாடுகள் நிலவின. எமது நாட்டின் அரசியல்வாதி அனைத்திலும் தோல்விகண்டான். அதனால் அரசியல்வாதி தான் மக்களை வென்றெடுப்பதற்காக கிட்டிய பாதையை தேடிக்கொள்கிறான். ஆட்சியாளன் அந்தந்த கலாசாரங்களின் ஆன்மீகத்தை தட்டியெழுப்புகிறான். அவரால் சனநாயகம், பொருளாதார வளர்ச்சிபற்றி பேச முடியாது. அரசாங்கமொன்றினால் மக்களுக்கு ஆற்றப்படவேண்டியவை பற்றிப் பேசமுடியாது. அப்போது இவர் இனத்தை மதத்தைக் காப்பாற்றிக்கொள்வது பற்றிப் பேசுவார். இறுதியில் மக்கள் சாப்பாடு இல்லாவிட்டாலும் தேசத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வாக்குகளை அளிப்பார்கள். பொதுவில் மக்கள் இனவாதிகள் அல்ல. எமது நாட்டில் இனவாதம் என்பது அரசியலாயின் அதற்கெதிராக தேசிய ஒற்றுமையின் அரசியலைத் தெரிவுசெய்துகொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவம் செய்வது தேசிய ஒற்றுமையின் அரசியலையாகும்.

தமிழ், முஸ்லீம் மக்களுக்கு அவர்களுக்கே தனித்துவமான பிரச்சினைகள் உள்ளனவென்பதை நாங்கள் எற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் இரண்டு பிரதான தாய்மொழிகள் இருக்கின்றன. பிரஜைகளுக்கு தமது தாய்மொழியில் அரசாங்கத்துடன் அலுவல்களை மேற்கொள்வதற்கான உரிமை உறுதிசெய்யப்படவேண்டும். தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் அவர்களுக்கு தமது தாய்மொழியில் கல்வி பயிலவும் அரசாங்கத்துடன் அலுவல்களை மேற்கொள்வதற்கும் இருக்கின்ற உரிமையை உறுதிசெய்கிறோம். தமிழ் மக்களைப் போன்றே முஸ்லீம் மக்களுக்கும் அவர்களுக்கே தனித்துவமான ஒரு கலாசாரம் இருக்கின்றது. தமது கலாசாரத்திற்கமைவாக உயிர்வாழ்வதற்கான பாதுகாப்பும் மேற்படி கலாசாரங்களுக்கு மதிப்பளித்தலும் இடம்பெறுவதில்லை. சட்டம், கல்வி, சமூகப் புரிந்துணர்வின் கலாசார அடையாளத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை நாங்கள் பிரிந்துசெல்வதற்கான காரணியாகவோ அல்லது மற்றவருக்கு எதிராக செயற்படுவதற்காகவோ ஏற்றுக்கொள்ளலாகாது. எவரேனும் பிரஜைக்கு தனது மதத்தை அனுட்டிப்பதற்கான சுதந்திரமானது தனக்கு பாதுகாப்பற்ற நிலைமையே இருக்கின்றதெனும் பயப்படுகின்ற நிலைமை உருவாக்கலாகாது. மதம் என்பது தனது நம்பிக்கையாகும். மதத்தை அனுட்டிப்பதற்கான அவர்களின் உரிமை கிடைக்காத நிலையேற்படலாகாது. கலாசார அடையாளத்தையும் மதச் சுதந்திரத்தையும், மொழி உரிமையையும் நாங்கள் உறுதிசெய்ய வேண்டும். அவர்களுக்கு அரசியலுக்கு, அரசாங்க செயற்பாங்கிற்கு, அரசியல் உரிமைகளுக்கு நியாயமானவகையில் பிரவேசிப்பதற்கான உரிமை உறுதிசெய்யப்படல் வேண்டும்.

மீண்டும் வடக்கில் ஒரு யுத்தம் வரமாட்டாதென நான் உங்களிடம் கூறுகிறேன். வடக்கில் உள்ளவர்கள் பிள்ளைகளை வளர்ப்பதே யுத்தத்திற்காக என தெற்கில் ஒரு காட்சியை புனைய முற்படுகிறார்கள். எனினும் வடக்கின் தாய்தந்தையர் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்க, நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்கவே முயற்சி செய்கிறார்கள். தெற்கினை ஒத்த பிரச்சினைகள் வடக்கில் நிலவுகின்றன. முப்பது வருட யுத்தம் வடக்கின் பிரச்சினைகளை தீவிரப்படுத்தி உள்ளன. வடக்கினை தனிவேறாக எடுத்து வேகமாக அபிவிருத்திக் கருத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கானதாகும். மேலேயுள்ள அரசியல் பிரச்சினையையும் அடிமட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளையும் கருத்தில்கொண்டு நாங்கள் இரண்டுக்குமே தீர்வுகாணவேண்டும். நாங்கள் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம். நாங்களும் நீங்களும் முப்பது வருடகாலமாக அடிபட்டுக்கொண்டிருந்தோம். இறுதிப் பெறுபேறு என்ன? நாங்கள் மேலும் முப்பது வருடகாலம் அடிபட்டுக்கொள்ளப்போகிறோமா? இன்றேல் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மக்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்களுக்கு தீர்வு தேடுவதா? நாங்கள் அதற்காக அந்தந்த கட்சிகளுடன் கலந்துரையாட தயாராக இருக்கிறோம்.

மக்களின் எதிர்பார்ப்புகள் பற்றி

எமக்கு மக்களின் துன்பங்களும் வேதனைகளும் ஒரு பெஷன் அல்ல. பிள்ளை வறுமை காரணமாக இழப்பது உணவு வேளையை மாத்திரமல்ல. சமூக நன்மதிப்பினையும் இழக்கின்றது. கல்வியின்போது ஓரங்கட்டப்படுதல், பொலீஸ், வங்கி போன்ற நிறுவனங்களில் ஓரங்கட்டப்படுதல் கல்வி என்பது பொரளாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல. அது ஒரு சமூகப் பிரச்சினையாகவும் மாறுகின்றது. வறுமைநிலை சமூக வாழ்க்கையில் ஒரு சிக்கலாகும். எமது நாட்டு மக்கள் எவ்வளவுதான் எதிர்பார்ப்புக்களை சுமந்துகொண்டு அரசாங்கங்களை அமைத்தார்கள்? நாங்கள் வறுமையைப் பற்றிப்பேசுவது ஒரு பெஷன் என்றவகையில் அல்ல. எமக்கு மக்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் இதயம் துடிக்கின்ற ஓசையில் பொதிந்துள்ள வேதனை துன்பகரமான நிலைமையை நாங்கள் எமது அரசியல் மேடையில் காட்சிப்படுத்துகின்ற பொருட்கள் அல்ல. வறுமை பற்றிப் பேசுவது உண்மையாகவே வாழ்க்கையில் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் பற்றிய புரிந்துணர்வுடனேயே ஆகும். எமது நாட்டின் மக்களை சிறிய அளவிலேனும் ஏமாற்றுவதற்கான நியாயமான தார்மீக உரிமை எமக்கு கிடையாது. இது போதும். ஆனால் ஓரிரு வருடங்கள்தான் நீங்கள் எதிர்பாருங்கள். நாங்கள் இதனை சீர்செய்வோம். நாளையும் நீங்கள் முன்வந்து இன்றுபோலவே எங்களுடன் பேசமுடியும்.

நீங்கள் ஆட்சிக்காக வேறு குழுக்களுடன் ஒன்றுசேர்வீர்களா?

முன்னர் சனாதிபதி தேர்தலை நடாத்தி பின்னர் பொதுத்தேர்தல் நடாத்தப்படுமானால் எந்தவிதமாக ஐயப்பாடும் கிடையாது ” கலாவெவவின் மடையைத் திறந்ததுபோல்” அமைந்துவிடும்.

பொதுத் தேர்தலை நடாத்தினால் எமக்கு 113 கிடைக்குமானால் பிரச்சினை இல்லை. 113 ஐ விடக் குறைவாகக் கிடைத்தால் அந்த அளவு என்னவென்று, அதாவது மக்கள் எமக்கு அரசாங்கத்தை அமைத்திட முயற்சி செய்திருக்கிறார்கள் ஆனால் 113 கிடைக்கவில்லை. (ஓரளவு அதிக எண்ணிக்கை) எமக்கு அரசாங்கமொன்றை அமைத்துக் கொடுப்பது மக்களின் எதிர்பார்ப்பாகும். அப்படியானல் நாங்கள் அந்த எதிர்பார்ப்பினை பூர்த்திசெய்ய வேண்டும். அவ்வாறான வேளையில் நாங்கள் எம்மால் சேர்த்துக்கொள்ளக்கூடிய அனைவரையுமே சேர்த்துக்கொண்ட அரசாங்கத்தை அமைப்போம். மக்களின் எதிர்பார்ப்பு எம்மை எதிர்க்கட்சியில் அமரவைப்பதாயின் நாங்கள் எதிர்க்கட்சியில் அமர்வோம்.

ஊழல், மோசடிகள் பற்றி விசாரணைசெய்து கைதுசெய்வதற்கான அதிகாரத்தை சரத் பொன்சேகாவிடம் கையளிப்பதாக சஜித் பிஜரேமதாச கூறினார். தயா ரத்நாயக்க எனும் முன்னாள் இராணுவத் தளபதி வந்தார் அவருக்கு எதிராக பழைய இரும்பு விற்பனை செய்தல் பற்றிய குற்றச்சாட்டு இருக்கின்றது. நாங்கள் ஊழல், மோசடியற்ற ஆட்சியையே அமைக்கப்போகிறோம். அதனால் இந்த ஊழல், மோசடிகளுக்கு அகப்பட்டவர்களை எடுக்கவேண்டாம் என்கிறோம். அதன்பின்னர் ஊழல், மோசடிகளில் பங்காளியானவர் உள்ளே. ஊழல், மோசடிகளை பிடிக்க இருந்தவர்கள் வெளியில். நாங்கள் அப்படிச்செய்ய மாட்டோம் ஊழல் – மோசடி பற்றிய விசாரணைகள் அவசியமாகின்றன. நாங்கள் தொடக்கத்திலேயே சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவோம். எமக்கு பொருளாதாரத் திட்டமொன்று அவசியமாகும். அதனை மாற்றியமைப்பது எமது வேலையாகும். இந்த அரசியல் கலாசாரம் மாற்றமடையும். எமக்கு வாக்களித்த மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையைத் தொடர்ந்தும் நிச்சயமாக உறுதிசெய்துகொள்வோம்.

AKD-Toronto-Speech-and-Q&A-Session

ஆட்சியாளர்கள் விற்றுள்ள வளங்களை மீண்டும் எடுப்பீர்களா?

எமது தேசிய வளங்கள் ரணில் விக்கிரமசிங்க விற்பதற்கு திட்டமிட்டுள்ள தேசிய வளங்களாகும். ரெலிகொம் நிறுவனம், லங்கா ஹொஸ்பிட்டல் என்பவற்றை விற்க ரணில் தீர்மானிக்கிறார், அப்போது இந்தியக் கம்பெனியொன்று கோருகின்றது. அவை ரணில் விக்கிரமசிங்கவின் தேவைகளாகும். நாங்கள் அந்த தொழிற்சங்கங்களுடனும் நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளோம் குறைந்தபட்சம் ஆறுமாதம் காலந்தாழ்த்தினால் அவற்றையும் காப்பாற்றிக்கொள்ள முடியும். நீங்கள் வினவிய தெற்கு முனையம் , அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பிரச்சினைகள் எளிமையானவை அல்ல. அவற்றை விற்றுத் தீர்த்துவிட்டார்கள். கெரவலபிட்டிய மின்நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை மீளப்பெற முடியாது. நாங்கள் பொருளாதாரீதியாக பலவீனமடைந்த ஒரு நாடாவோம். பொருளாதர உறுதிநிலையின் பேரிலேயே எமக்கு எமது வளங்கள் பற்றி கவனத்திற்கு இலக்காக்கிட முடியும்.

இந்தியா அமைத்துள்ள திட்டத்திற்கு கட்டுப்பட்டதாக இந்தியா முதலாவதாக முன்மொழிந்துள்ளது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எண்ணெயக் குழாய்த் தொகுதி. இரண்டாவதாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மின்சார வடத்தொகுதி. மூன்றாவது பாலம். ஆனால் அவை இப்போதே இடம்பெறுவதில்லை. அவற்றின் சாத்தியள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாரிய பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்த ஐந்தாறு மாதங்களில் இடம்பெறக்கூடியதுதான் ரெலிகொம் நிறுவனத்தை விற்பனைசெய்வது. நாங்கள் 15 பில்லியன் டொலர்களுக்கு ஐ.ரீ. துறைக்குச் செல்லமுடியும். தொடக்கத்தில் 5 – 8 பில்லியன் டொலர் பொருளாதாரமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். ஐ.ரீ. துறையை விருத்திசெய்வதற்காக அவசியமான தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை ரெலிகொம் நிறுவனமே அமைத்துக்கொடுக்க வேண்டும். அந்த உட்டகட்டமைப்பு வசதிகளை அமைத்துக்கொடுத்தால் மாத்திரம் எம்மால் இந்த துறையை மேல்மட்டத்திற்கு கொண்டுவர முடியும். நாங்கள் எவரோ ஒருவரின் கம்பெனிக்கு ரெலிகொம் நிறுவனத்தை விற்று அவர்கள் எமக்கான உட்டகட்டமைப்பு வசதிகளை விருத்திசெய்யாவிட்டால் எமது ஐ.ரீ. கைத்தொழிலின் வளர்ச்சி நின்றுவிடும். அதனால் ரெலிகொம் விற்பனை செய்யக்கூடாது எனும் நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கிறோம். எயார் லங்கா விற்பனை தொடர்பிலும் எமது நிலைப்பாடு அதுவாகும். நாங்கள் சுற்றுலாத் தொழிற்றுறையை இலக்காகக் கொள்வோமேயானல் நாங்கள் 40 இலட்சம் உல்லாசப் பயணிகளைக் கொண்டுவர விரும்புகிறோம். பொதுவாக சுற்றுலாவில் ஈடுபடுபவர்கள் இடையில் நேரத்தை விரயமாக்க விரும்புவதிலவ்லை. அதற்கிணங்க எமக்கு எயார்லைன் ஒன்று தேவை. எயார்லைன் டிக்கெற்றைப் பார்க்கிலும் ஹோட்டல் அறையின் கட்டணம் குறைவு. சுற்றுலாப் பயணி ஹோட்டலுக்கு அதிக கட்டணம் செலுத்தி எயார்லைனுக்கு குறைந்த கட்டணம் செலுத்த விரும்புவார். அப்படியானால் எமக்மு பட்ஜெட் எயார்லைன் ஒன்று அவசியம் அதனை எயார்லைனுடன் இணைந்ததாக ஆரம்பிக்கவேண்டி வரும். எயார்லைன் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனை எவ்வாறு கரைசேர்ப்பது என்பது பற்றி நாங்கள் மூன்று விதமாக பேசிவருகிறோம். ஒன்று அரசாங்கத்தால் செய்யமுடியுமா? இரண்டாவது ஜொயின்ற் வென்சருக்குச் செல்ல முடியுமா? மூன்றாவது கைவிடுவதா?

மில்கோ நிறுவனம் பற்றிய பிரச்சினையின்போது “மில்கோ நிறுவனம்” என்பது பாலுற்பத்தியில் அரசாங்கள் இடையீடுசெய்கின்ற நிறுவனமாகும். நாங்கள் பால் அபிவிருத்தி பற்றிய திட்டமொன்றை வகுப்பதாயின், அதனை அமுலாக்க அரசாங்க நிறுவனமான்று அவசியமாகும். என்.எல்.டீ.பீ. மில்கோ அரசாங்கத்தின் கையில் இருக்கவேண்டும். இந்தியாவின் என்.டீ.பீ. (கால்நடைவளச் சபை) எமது கால்நடைவளச் சபையைக் கொள்வனுவசெய்ய வருகின்றது. இந்தியாவின் அரசாங்க நிறுவனமொன்றுதான் எமது என்.எல்.டீ.பீ. ஐ கொள்வனவு செய்ய வருகின்றது. நாங்கள் கைவிட முனைவதை விரும்பவில்லை. எமது தேசிய உறபத்தியை விருத்திசெய்யும் நோக்கத்துடனேயே இந்த தனியார்மயமாக்கல் பற்றி சிந்திக்கிறோம்.

இறுதியாக எமது நாட்டின் அரசியல் தீர்மானகரமான ஒரு மைல்கல்லை அடைந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தைக் கைவிட்டுவிட்டால் மேலும் சந்தர்ப்பங்கள் இருப்பதாக நினைத்துவிடவேண்டாம். இத்தருணத்தில் வெற்றியை அடைந்தே ஆகவேண்டும். எமது வெற்றி உங்களின் கைகளிலேயே இருக்கின்றது. நீங்கள் எந்தளவுக்கு பங்களிப்புச்செய்யத் தயார், அந்தளவுக்கு வெற்றிபெற எமக்கு இயலுமை நிலவுகின்றது. உறவினர்கள் நண்பர்களுடன் உரையாடுங்கள், சமூக வலைத்தளங்களில் அதற்காக எழுதுங்கள், தோற்றுங்கள். பலம்பொருந்திய கருத்தியல்சார்ந்த பொறியமைப்பாக மாற்றிடுவோம்.

மக்களின் எதிர்பார்ப்புகளை மாறாதவகையில் எவ்வாறு பேணிவருவது?

எமது நாடு இறுகிப்போயுள்ள வகையில் ஓரிரு நாட்களில் மாற்றியமைத்திட முடியாது. நாங்கள் கட்டாயமாக மூன்று அடிப்படை காரணிகளை மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும். நாங்கள் முதலின் பிரஜைகளின் உணவுக்கான உரிமையை உறுதிசெய்வோம். சுகாதாரம் கல்வியை உரிமைகளாக முதலில் உறுதிசெய்திடுவோம். நீண்டகாலத் திட்டங்களுக்குச் செல்வதானால் முதலில் இந்த விடயங்களை உறுதிசெய்ய வேண்டும். இதற்கு பாரிய எழுச்சி, மலர்ச்சி அவசியமாகும். 1948 இல் வெள்ளைக்காரன் நாட்டைவிட்டுச் செல்கையில் மக்களிடம் எத்தகைய உணர்வு தோன்றியிருக்கக்கூடும்? 76 வருடங்களாக இந்த நாட்டுக்கு அழிவினை ஏற்படுத்திய ஆட்சியாளர்களை தோற்கடித்தால் எத்தகைய உணர்வு ஏற்படும்? இங்கு தேசிய எழுச்சியொன்று இருக்கின்றது. இந்த எழுச்சியை இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக பாவிக்கவேண்டும். அந்த எழுச்சியை பாதுகாத்துக்கொள்வதற்காக நாங்கள் அரசியல்வாதிகள் என்றவகையில் முன்மாதிரிகளைக் கொடுக்கவேண்டும். ஓய்வூதியத்தை இல்லாதொழித்தல், நாலா பக்கங்களிலும் ஓடுகின்ற பாதுகாப்பு வாகனங்களை அகற்றுதல், உத்தியோகபூர்வ இல்லங்களை அகற்றுதல் போன்ற செயற்பாடுகள் மூலமாக அரசியல்வாதி தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை ஈடேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். அரசியல்வாதி ஏனைய பிரஜைகளுக்கு இணையானவனே. நாங்கள் அந்த முன்மாதிரியைக் கொடுப்போம்.