(18 சதவீத வற் வரிக்கு எதிராக மூதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது – 18.01.2024)
ஒருபுறம் பொங்கல் பண்டிகை, கலை நிகழ்ச்சிகள் என்று வெளி உலகுக்கு காண்பித்துக் கொண்டு மறுபுறத்தில் திருகோணமலையின் வளங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் இறங்கியிருக்கிறது.
இலங்கையில் பெறுமதிமிக்க வளங்களை கொண்ட மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருக்கிறது. ஆனால், இங்குள்ள சொத்துக்கள் குறைந்த விலைக்கு அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை திசைதிருப்பும் முகமாக பல்வேறு கொண்டாட்ட வைபவங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. ஆக, இவ்வாறு எமது வளங்களை அந்நியருக்கு தாரைவார்ப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.