Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“திசைகாட்டி அதிகாரத்திற்கு வருவது நீண்டகாலமாக ஏமாற்றப்படுதலுக்கு இலக்காகிய மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காகவே” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-“மறுமலர்ச்சிக்காக முழுநாடுமே ஒன்றாக” – தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட மாநாடு – தம்புள்ள – 2024.07.13-)

Dambulla-Public-Rally

இங்கு குழுமியுள்ளவர்கள் மத்தியில் ஏற்கெனவே தேர்தல்களில் எமக்கு வாக்குகளை அளித்தவர்களைவிட ஏனைய அரசியல் கட்சிகளுக்கு வாக்குகளை அளித்தவர்களே அதிகமாக இருக்கிறார்கள். 30 வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுண, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பபினை பிரதிநிதித்துவம்செய்து ஜனக பண்டார தென்னக்கோன் 30 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தில் இருந்தார்கள். தற்போது ரணிலை பிரதிநிதித்துவம்செய்து வருகிறார்கள். கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களுக்கு, மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த எங்களுக்கு எவ்வளவு இடையூறுகளை விளைவித்தார்கள்? இரணகொல்லவில் சுட்டுக்கொண்டார்கள். அது யாருக்காக? ரணிலுக்கு எதிராக, மகிந்தவிற்காக, சந்திரிக்காவிற்காக. இப்போது ரணிலுக்காக. பொதுஜன பெரமுன தலைவர் தற்போது ரணிலின் உதவிக்காக இருக்கிறார். பொதுஜன பெரமுணவின் தேசிய அமைப்பாளர் பசில் இருக்கிறார். பொதுஜன பெரமுணவின் தம்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னக்கோனும் இருக்கிறார். சஜித்தின் உதவிக்காக பொதுஜன பெரமுணவின் தவிசாளர் ஜீ.எல். பீரிஸ் இருக்கிறார். அந்த கட்சியின் பொருளாளர் டலஸ் அழகப்பெருமவும் இருக்கிறார். வரிசையாக நிற்கவைத்துப் பார்த்தால் ரணில், மகிந்த. பசில், நாமல், ஜனக பண்டார அந்த வரிசையில் இருக்கிறார்கள். அடுத்த வரிசையில் நிற்கவைத்தால் சஜித், ஜீ.எல்., டலஸ், டிலான் இருக்கிறார்கள். இந்த இரண்டு வரிசையிலும் யு.என்.பி. எது? மொட்டு எந்த வரிசையில்? நான் இதைத்தான் கூறினேன். ஊர் மக்கள் பிளவுபட்டு அரசியலில் ஈடுபட்டாலும் இவர்கள் அத்தனைபேரும் ஒன்றாகவே இருந்தார்கள். தற்போது எமக்குள்ள மகிழ்ச்சி ஊர்களில் இருக்கின்ற அனைவரும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி குழுமியிருப்பதாகும். தம்புள்ள நகரத்தில் சுட்டிக்காட்டப்படுவது அதுவாகும்.

அதிகமான அரசியல் உரையாடல்கள் அவசியமில்லை. நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இவற்றை உற்றுநோக்கினால் அரசியலை விளங்கிக்கொள்ள அது நன்றாகவே போதும். யு.என்.பி. அரசாங்க காலத்தில் அலுவிஹாரே தம்புள்ளவிற்கு வரும்போது பொதுபெரமுணவைச் சேர்ந்தவர்கள் பயந்தவர்களாக இருக்கவேண்டும். ஜனக அதிகாரத்தைக் கைப்பற்றும்போது யு.என்.பி.யை சேர்ந்தவர்கள் பயந்தவர்களாக இருக்கவேண்டும. சுட்டுக்கொண்டார்கள். வீடுகளை தீக்கிரையாக்கினார்கள். வாகனங்களை தாக்கினார்கள். நாங்கள் அந்தக் காலத்தில் கூறினோம் அவர்கள் பிளவுபட்டவர்கள்போல் இருந்தாலும் இரவில் இரகசியமாக சந்திப்பார்களென. தற்போது பட்டப்பகலில் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டு ஒரே மேடையில் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களல்ல: ஒரே அணியென்பதை அவர்கள் தற்போது நிரூபித்திருக்கிறார்கள். ஐம்பதுகளில் இருந்து பரம்பரைவழியாக யு.என்.பி., ஸ்ரீ லங்கா என மக்கள் பிரிந்திருந்தார்கள். சதாகாலமும் அவர்கள் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்தார்கள். தம்புள்ள நகரத்தின் கடைகளுக்கு உறுதிகளை வழங்குவதாகக் கூறினார்கள். தற்போது மீண்டும் கூறத்தொடங்கி இருக்கிறார்கள். எனினும் ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் நாங்கள் அவற்றுக்கு உறுதிகளை வழங்குவோம். அவற்றை எங்களுக்காக எடுப்பதற்கல்ல. பொருளாதார நிலையத்தை மையமாகக்கொண்டு இயங்கிவருகின்ற காடையர்கள் பலத்தை எமது அரசாங்கத்தின்கீழ் முடிவுக்கு கொண்டுவந்து, அனைவரையும் வியாபாரம் செய்யக்கூடியவகையிலான சுற்றாடலை உருவாக்கிக் கொடுப்போம். நாங்கள் அதிகாரத்திற்கு வருவது நீண்டகாலமாக ஏமாற்றப்படுதலுக்கு இலக்காகிய மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காகவே.

Dambulla-Public-Rally

கடந்த காலத்தில் மக்கள் எரிபொருள் வரிசையில் இருக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்க தனிவேறான ஷெட் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களை வரிசையில் வைக்காமல் மக்களை வரிசையில் காத்திருக்கவைத்தார்கள். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஷெட்டிலிருந்து எரிபொருள் பெறவில்லை. மக்கள் பிரச்சினைக்குள் விழும்போது அவர்கள் பிரச்சினைக்குள் விழாத ஆட்சியொன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஆளுங்கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சினை கிடையாது. இந்த நாட்களில் இருக்கின்ற பார் பேர்மிற்கள் அதிகளவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் சஜித் பிரேமதாச அதிகாரத்திற்கு வந்ததும் அவற்றை செல்லுபடியற்றதாக்குவதாகக் கூறினார் இயலுமானால் உங்கள் கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரேனும் ரணிலிடமிருந்து பார் பேர்மிற் பெற்றுக்கொள்ளவில்லையெனக் கூறுமாறு நான் சஜித் பிரேமதாசவிற்கு சவால் விடுக்கிறேன். பார் பேர்மிற் மாத்திரமல்ல. பெற்றோல் ஷெட், எல்.ஆர்.சீ. காணிகளையும் ஒன்றாகவே பகிர்ந்து கொள்கிறார்கள். ஹந்தானையில் 10 எக்கர் காணிகளைப் பெற ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடிக்கடி சனாதிபதி அலுவலகத்தில் நடமாடிக்கொண்டிருக்கிறார். தற்போது மகிந்தானந்த அழுத்கமகே பிரச்சினையைக் கிளப்பியுள்ளதால் தடைப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட உறுப்பினர் நிதியங்கள் வழங்கப்பட்டு வருவதோடு 20 ஐ.ம.ச. உறுப்பினர்களுக்கும் அது வழங்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல காவிந்த ஜயவர்தனவின் வீட்டில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் இடையில் பகிர்ந்துகொள்கின்ற அரசியலை நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம். இனிமேலும் ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட கும்பலைப்போன்றே சஜித் பிரேமதாசவை உள்ளிட்ட கும்பலுக்கும் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதனால் பலனில்லை.

அப்படியானால் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தைக் கொடுப்பதனால் பயன் விளையுமா என்பதைப் பற்றிப் பேசுவோம். தேர்தலைத் தடுக்க ரணில் விக்கிரமசிங்க முடிச்சுமேல் முடிச்சு போட்டாலும் சனாதிபதி தேர்தலை தடுக்கமுடியாது. லேனா என்பவர் நீதிமன்றத்தின் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்தமை தொடர்பில் ஒரிலட்சம் ரூபா அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் மற்றுமொருவர் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க என்னதான் முடிச்சி போட்டாலும் இறுதியில் எஞ்சுவது கழுத்துப்பட்டி முடிச்சி மாத்திரமாகும். பெரும்பாலும் ஒக்டோபர் 05 ஆந் திகதி சனாதிபதி தேர்தல் நடைபெறும். தேர்தலை நடத்தாமலிருக்க தேசிய மக்கள் சக்தி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடமளிக்கமாட்டாது. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அதிகாரத்திற்கு கொண்டுவருமாறு கேட்கவே நாங்கள் தம்புள்ளைக்கு வந்திருக்கிறோம். இலங்கை என்பது உலகம் எற்றுக்கொள்ளாத வீசாகூட வழங்க மறுக்கின்ற நாடாக இழுத்துப்போடப்பட்டுள்ளது. எங்களுக்கு வீசா கொடுக்காவிட்டாலும் பசில் ராஜபக்ஷவிற்கு வீசா வழங்குகிறார்கள். அவரிடம் இரண்டு கடவுச் சீட்டுகள் இருக்கின்றன. ஒன்று அமெரிக்க கடவுச் சீட்டு. அதனை எடுத்தக்கொண்டு உலகின் எந்த நாட்டுக்கும் செல்ல முடியும். எனினும் எங்கள் கையில் இருப்பது கொச்சைப்படுத்தப்பட்ட இலங்கை கடவுச்சீட்டு ஆகும். 76 வருடங்கள் ஆட்சிசெய்து உலகம் எற்றுக்கொள்ளாத ஒரு நாடாக மாற்றியுள்ள இலங்கையை உலகம் ஏற்றுக்கொள்கின்ற அபிமானமிக்க பிரஜைகள் வசிக்கின்ற நாடாக தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பும். அதைப்போதலவே உலகத்திற்கு ஆப்புவைத்த குற்றச்செயல் மலிந்த நாடாக இன்று மாற்றப்பட்டுள்ள இலங்கையை படிப்படியாக கட்டங்கட்டமாக பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்.

ஒரு கோட்பாடு என்றவகையில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் சட்டத்தின் ஆட்சி அவ்விதமாக அமுலில் இல்லை. அவ்வாறு அமுலில் இருக்குமாயின் ஜனக பண்டார எவ்வாறு வெளியில் இருப்பது? சட்டத்தின் முன் சமமானவர் என்றால் அவருடைய மக்கன் ஏன் இந்தியாவுக்கு தப்பியோடிச் சென்றிருக்கிறார்? அவர்கள் சட்டத்தின் முன் சமமானவர்கள் அல்ல. பிரசன்ன ரணதுங்க. பிரேமலால் ஜயசேகர, தயா கமகே, டயனா கமகே வெளியில் இருக்கமாட்டார்கள். சட்டம் அவர்களுக்கு ஒருவிதமாகவும் பொதுமக்களுக்கு மற்றுமொரு விதமாகவும் இயங்குகின்ற யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சட்டம் அனைவருக்கும் நியாயமாக அமுலாகின்ற நாடொன்றை நாங்கள் நிலைநாட்டுவோம். இந்த நாட்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற யுக்திய நடவடிக்கையில் சுறாக்கள் அகப்படாமல் எப்படி நெத்தலிகள் அகப்படுவது? யூன் மாத இறுதியளவில் போதைத்தூள் பாதாள உலகத்தைக் கட்டுப்படுத்துவதாகக்கூறிய தேசபந்து யுக்கிய இரண்டாம் கட்ட நடவடிக்கையை ஆரம்பித்தார். அவர்கள் ஒருபோதுமே எமது நாட்டில் போதைத்தூள் பெருந்தொற்றினை இல்லாதொழிக்க மாட்டார்கள். எமது நாட்டில் குற்றச்செயல்களையும் முடிவுக்கு கொண்டுவர மாட்டார்கள். சட்டமும் நீதியும் சமமாக அமுலாக்கப்படுகின்ற தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் மாத்திரமே குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்.

Dambulla-Public-Rally

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனெவிரத்ன அவர்கள் பாரிய பணியை ஆற்றினார். எமது நாட்டில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய படுகொலைகள் பற்றிய புலனாய்வுகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்காக: உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான தாக்குதல்தாரிகளை பிடித்துக்கொள்வதற்காக பாடுபட்டார். அரசாங்கம் மாறியது. எல்லா விசாரணைகளையும் மூடிமறைத்தார்கள். விசாரணைகளை மேற்கொண்டுவந்த ஒருசில உத்தியோகத்தர்கள் நாட்டைவிட்டுச் செல்லவேண்டிய நிலையேற்பட்டது. ஒருசில உத்தியோகத்தர்களை ஒன்றரை வருடங்களாக சிறையில் வைத்தார்கள். தவறு என்ன? தவறாளிகளை மோப்பம்பிடித்துச் சென்றமையாகும். இந்த ஆட்சியாளர்கள் சதாகாலமும் குற்றச்செயல் புரிபவர்களின் பாதுகாவலர்களே. அவற்றின் பங்காளிகளே. இந்த அரசியல் எங்காவது முற்றுப்பெற வேண்டும். அரசாங்கம் அநியாயம் செய்யுமாயின், அமைச்சர்கள் குற்றச்செயல் புரிபவர்களை பாதுகாப்பார்களாயின் உங்களினதும் எங்களினதும் உயிர்கள் எப்போதுமே ஆபத்தில். அச்சத்துடனும் சந்தேகத்துடனும் நாட்டு மக்கள் வாழவேண்டிய அவசியமில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமமாக வாழக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்கிடவேண்டும். இந்த நாட்டை உருப்படியாக்கிட முதலில் தேவைப்படுவது அதுவே.

எமது நாட்டில் கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை திருடுகின்ற அரசியல் நிலவுகின்றது. இந்த திறைசேரிக்கு வருவது உங்களின் பணமாகும். தொழில்வாண்மையாளர்களின் சம்பளம்மீது வரி விதித்தால் திறைசேரிக்கு பணம் வருகிறது. ஒருசில தொழில்வாண்மையாளர்கள் இதனைத் தாங்கிக்கொள்ள முடியாதெனக்கூறி வெளிநாடு செல்கிறார்கள். நீங்கள் கடைக்குப்போய் பொருட்களை விலைக்கு வாங்கினால், பெற்றோல் ஷெட்டுக்கு போய் எண்ணெய் அடித்துக்கொண்டால், நோய்க்கான பரிசோதனை ஒன்றைச் செய்துகொள்வதற்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் அதில் ஒரு தொகை திறைசேரிக்கு வருகின்றது. பிள்ளைக்கு கற்பிக்கும்போது அரசாங்கத்திற்கு வரியொன்றைச் செலுத்தவேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகளில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு, மருத்துவ உபகரணங்களுக்கு, உணவுகளுக்கு வரி விதிப்பதில்லை. இந்த திறைசேரிக்கு பலவிதமான மக்களிடமிருந்து பணம் வருகின்றது. இந்த பணத்தைத்தான் அரசியல்வாதிகள் பகிர்ந்துகொள்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க வரவுசெலவில் ஒதுக்கிக்கொண்ட பணத்திற்கு மேலதிகமாக 875 கோடி ரூபாவை ஒதுக்கிக்கொண்டார். அது மாத்திரமல்ல சஜித் பிரேமதாசவின் உறுப்பினர்களுக்கு 120 கோடியை ஒதுக்கிக்கொடுத்தார். ஒருபுறத்தில் இந்த பொதுப்பணம் விரயமாக்கப்படுகின்றது. அதைப்போலவே திறைசேரிக்கு வரவேண்டிய பணத்தை திருடுகிறார்கள். சீனி வரி மோசடியால் 1500 கோடி ரூபாவை வீட்டுக்குத் திசைதிருப்பினார்கள். பிணைமுறி மோசடியால் மத்திய வங்கிக்கு வரவிருக்கின்ற பணத்தில் 1100 கோடியை அர்ஜுன் அலோசியசின் வீட்டுக்கு திசை திருப்பினார். அந்த இடத்திலிருந்து குறுக்குவழியில் ரணிலின் வீட்டுக்கும் பணம் போனது. பொதுப்பணத்தை இவ்விதமாக விரயம்செய்து ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமா? சஜித் பிரேமதாச ஐயாயிரம் மில்லியன் நிதியத்தை விரயமாக்கியதாக செய்தித்தாளில் செய்திகள் வெளியாகியிருந்தது. கலாச்சார நிதியம், வீடமைப்பு நிதியத்தை நாசமாக்கினார்கள். ஒரு பக்கத்தில் பெயர்ப் பலகைகளை அடிக்க, பெயரை அடித்துக்கொள்ள கோடிக்கணக்கில் பணத்தை விரயமாக்கினார்கள்.

Dambulla-Public-Rally

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களாக இருக்கவேண்டும். திறைசேரிக்கு வருகின்ற பணத்தை கோவில்சொத்து போல பாதுகாத்து, பிரஜைகளின் அலுவல்களுக்காக, நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஈடுபடுத்துகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைப்போம். தற்போது தொழில்முயற்சிகள் சீரழிந்துவிட்டன. தற்போது தொழில்முயற்சிகளில் ஈடுபட அரசியல்வாதிகளின் அனுமதி தேவை. எமது நாட்டில் பெற்றோல் செட்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் கைகளிலேயே இருக்கின்றன. பார் போ்மிற்கள் அரசியல்வாதிகளின் கைகளிலேயே இருக்கின்றன. கேகாலையின் அமைச்சர் மூன்று பார் போ்மிற்களை ஒன்பது கோடி ரூபாவிற்கு விற்றார். (900 இலட்சம்) எலஹெர பக்கத்தில் பாரியளவிலான சுரங்கங்களை அகழ்பவர் குருணாகலில் இருந்த ஓர் அமைச்சராவார். மணல் கரைசோ்ப்பவர்களும் அவர்களேதான். பாசிக்குடாவின் கரையோரப் பரப்பில் இருக்கின்ற பெரும்பாலான காணிகள் அமைச்சர்களினதும் அவர்களின் பிள்ளைகளினதும் கைகளில் தான் இருக்கின்றன. நாங்கள் உங்களுக்கு ஓர் உத்தரவாதத்தைக் கொடுக்கிறோம். தேசிய மக்கள் சக்தியின் உயர்பீடங்களில் இருக்கின்ற எவருமே பார் வாங்குவதற்காக, மணல் கரைசோ்ப்பதற்காக, சுரங்கம் அகழ்வதற்காக, ஹோட்டல் கட்டுவதற்காக வரமாட்டார்கள். அதனைச் செய்பவர்கள் தொழில் முயற்சியாளர்களே. கனியவளங்களைச் சார்ந்ததாக, கறுவா, தேயிலை, சுற்றுலா கைத்தொழில், மீளப்புதிப்பிக்கத்தக்க வலுசக்தியில் பாரியளவிலான முதலீட்டு வாய்ப்புகள் நிலவுகின்றன. தற்போது எந்தவொரு பரிசுத்தமான முதலீட்டாளரும் இங்கு வருவதில்லை. தலைவரிலிருந்து அனைவருக்குமே இலஞ்சம் கொடுக்கவேண்டும். “எங்களுக்கு உங்களிடமிருந்து ஒரு கிளாஸ் பச்சை தண்ணீர்கூட வேண்டாம், நீங்கள் எதை கொண்டு வருகிறீர்கள்? நீங்கள் நாட்டுக்கு கொடுக்கின்ற நன்மைகள் என்ன?” என்றே வருகின்ற தொழில் முயற்சியாளர்களிடம் நாங்கள் கேட்போம். அது தான் எங்களின் ஒரே அளவுகோல்.

70 ஆம் தசாப்தத்தில் இந்தியாவில் குடைக் கைத்தொழில், புடவைக் கைத்தொழில், சவர்க்கார உற்பத்தி இருக்கவில்லை. இன்று இந்தியா சந்திரனுக்கு செல்கின்ற, பிராந்தியத்திற்கு மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்கின்ற, உணவு உற்பத்தி செய்கின்ற, விதையினங்களை உற்பத்தி செய்கின்ற, ஔடதங்களை உற்பத்தி செய்கின்ற இந்தியாவை உருவாக்கியிருக்கிறது. எனினும் எம்மை எல்லாவற்றையும் இறக்குமதி செய்கின்ற நாடாக மாற்றியிருக்கிறார்கள். எமது ஆட்சியாளர்களுக்கு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான நோக்கு இருக்கவில்லை. ஆட்சியாளர்களுக்கு இருந்த ஒரே நோக்கு தாம் எவ்வாறு தம்மை வளர்த்துக் கொள்வது? தமது ஏழேழு பரம்பரைக்கும் எவ்வாறு திரட்டிக்கொள்வது? என்பதாகும். இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான புதிய மறுமலர்ச்சி யுகமொன்றை நாங்கள் உருவாக்கிடவேண்டும். சட்டத்தின் முன் சமத்துவம் நிலவுகின்ற, ஊழல் – மோசடி – விரயம் ஒழிக்கப்படுகின்ற, தொழில் முயற்சியாளருக்கு நியாயமான வகையில் தொழிலில் ஈடுபடக்கூடிய, கமக்காரனுக்கு அவசியமான வசதிகளை வழங்குகின்ற மறுமலர்ச்சி யுகமொன்றை நாங்கள் உருவாக்கிடவேண்டும்.

எங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய நிலைமாற்றமொன்று தேவை. கிராமிய மக்கள் வறுமை நிலையிலிருந்து விடுபடவேண்டுமானால் கிராமத்து பொருளாதாரத்தை முன்னேற்றவேண்டுமானால் பிள்ளைகளை கிராமத்திலிருந்து வெளியே எடுக்கவேண்டும். பிள்ளைகளை பழைய கடப்பாடுகளிலிருந்து கழற்றியெடுத்து உலகத்தில் இருக்கின்ற அறிவுடன் போட்டியிடுகின்ற சிறந்த உழைப்பாளியாக மாற்றவேண்டும். 2030 இல் உலகத்திற்கு 40 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் அவசியமாகின்றனர். அவர்களை எங்கள் கிராமங்களில் உருவாக்கவேண்டும். புதிய தலைமுறையினருக்கு உலகத்தை திறந்து விடவேண்டும். அதனை ஆரம்பிக்க அரசியல் நிலைமாற்றமொன்று அவசியமாகின்றது. வருகின்ற ஜனாதிபதி தோ்தலில் நிலைமாற்றத்திற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்போம். ஜனாதிபதி தோ்தலுக்கு இருக்கின்ற இரண்டரை மாதக்காலத்திற்குள் நாம் அனைவரும் நன்றாக உழைப்போம். யு.என்.பி. – ஸ்ரீ லங்கா வித்தியாசங்களை வைத்துக்கொள்ள வேண்டாம். நாம் அனைவரும் சமமான பிரஜைகளாக சமமான பங்காளிகளாக ஒன்றிணைவோம். அவர்கள் மேல் மட்டத்தில் ஒன்று சேர்வதைப்போல எம்மால் ஒன்று சேரமுடியாதா? இந்த தீர்மானகரமான திருப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள கிராமத்திலுள்ள நாம் அனைவரும் ஒன்றுசோ்ந்து சவால்களை ஏற்றுக்கொள்வோம்.

Dambulla-Public-Rally

“அரசாங்கத்திடம் கையேந்தாமல் சொந்தக்காலில் எழுந்திருக்கக்கூடிய பொருளாதாரமொன்றை மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம்”
-மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா-

சனாதிபதி தேர்தலை இலக்காகக்கொண்டு தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் நாடு பூராவிலும் பல கூட்டத் தொடர்களை நடாத்தி வருகிறோம். ரணில் விக்கிரமசிங்காக்கள் என்னதான் முயற்சி செய்தாலும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது வாரமளவில் எமது நாட்டுக்கு ஒரு புதிய சனாதிபதியை நியமித்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. எமது நாட்டு மக்களைக் காட்டிக்கொடுத்த பிரபுக்களை அகற்றி மக்கள்நேயமுள்ள ஆட்சியை நிறுவத் தயார் என்ற செய்தியை எடுத்துக்கொண்டு நீங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். 3 சதவீத வாக்குகளைப் பெற்றவர்கள் எப்படி அரசாங்க அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதென ஒருசிலர் எங்களிடம் கேட்கிறார்கள். வேறுநாட்களில் வேறு கட்சிகளுக்காக உழைத்தவர்களில் பலர் தற்போது திசைகாட்டியுடன் கைகோர்த்துக்கொண்டு இருப்பதாலேயே எமக்கு அரசாங்கமொன்றை நிறுவுவதற்கான இயலுமை கிடைக்கின்றது. இந்த வெற்றியின் முன்னோடிகள் நீங்கள் அனைவருமே.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு, மகிந்த ராஜபக்ஷவிற்கு, சஜித் பிரேமதாசவிற்கு வெற்றிபெற முடியுமானால் தேர்தலை விரைவில் நடாத்துவார்கள். இன்றளவில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் அனைவருமே திசைகாட்டியின் வெற்றிக்காக செயலாற்றி வருவதோடு மாத்தளை மாவட்ட மக்களும் அந்த வெற்றிக்காக உயர்வான பங்களிப்பினை வழங்குவதற்காக ஒருங்கிணைந்து வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் அமைப்புக்களைக் கட்டியெழுப்பியே செயலாற்றி வருகிறோம். அந்தந்த துறைசார்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள் ஒன்றுசேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புகின்ற கொள்கைகளையும் செயற்பாட்டு வேலைத்திட்டங்களையும் வகுக்கின்ற அதேவேளையில் நாங்கள் அவற்றை அமுலாக்க அவசியமான அடி மட்டத்திலான அமைப்புகள் என்றவகையில் என்.பி.பி. வட்டார சபைகளை நிறுவினோம். இன்றளவில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் தேர்தலை இலக்காகக்கொண்ட தேர்தல் தொழிற்பாட்டுக் குழுக்களை உருவாக்கி வருகிறோம். பல்வேறு புத்திஜீவி தொழில்வாண்மையாளர்களை ஒழுங்கமைத்து வருகின்ற அதேவேளையில் அண்மையில் விஞ்ஞானிகளின் மாநாடு ஒன்றினை நடத்தினோம். தொழில்சார் மட்டத்திலான சக்திகளை ஒன்றுசேர்த்து வருவதோடு இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவினையும் பொலிஸ் கூட்டமைவினையும் இறுதியாக இன்றளவில் கட்டியெழுப்பி வருகிறோம். முறைப்படி சட்டத்தை அமுலாக்கிட ஆட்சியாளர்களிடமிருந்து வாய்ப்பு கிடைத்திராத பெருந்தொகையான பொலீஸார் அதனைச் சுற்றி ஒருங்கிணைந்து வருகிறார்கள்.

ரஷ்யாவைப்போல் எமது நாட்டில் ஒக்டோபர் மாதத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தொடக்கத்தை எடுக்கின்ற மாதமாக மாற்றிக்கொள்வோம். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் இவ்விதமாக மக்களை ஒழுங்கமைத்துச் செல்கின்ற வேளையில் ஏனைய கட்சிகள் சருகுகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டை வீழ்த்துவதில் பங்களிப்புச்செய்த எந்தவோர் அரசியல்வாதியையும் தேசிய மக்கள் சக்தியுடன் இணைத்துக்கொள்ள மாட்டாமென்ற உத்தரவாதத்தை உங்களுக்கு கொடுக்கிறோம். கடந்த தடவை சஜித்தை அவதூறாக பேசியவர்கள் தற்போது சஜித்துடன் இருக்கிறார்கள். மறுபுறத்தில் சஜித்துடன் இருப்பவர்கள் ரணிலிடம் செல்ல முயற்சி செய்கின்ற அதேவேளையில் ரணிலுடன் இருப்பவர்கள் சஜித்திடம் போக முயற்சி செய்கிறார்கள். தற்போது மொட்டில் எதுவுமே எஞ்சவிவ்லை. பாராளுமன்றத்திற்கு உள்ளே இருக்கின்ற இற்றுப்போன தீய சக்திகளை அவர்கள் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். சஜித்தை குறைகூறிக்கொண்டிருந்த டலஸிற்கு சஜித்திடம் போக முடியும். ரணிலை திருடன் எனக்கூறிய மொட்டுக்கட்சியை சேர்ந்தவர்களால் ரணிலிடம் போகமுடியும். இவர்கள் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் எமக்கு அடி மட்டத்தில் பாரிய அரசியல் பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளார்கள். யு.என்.பி., ஸ்ரீ லங்கா என இதுவரை பிளவுபட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே ஊழல்மிக்க அரசியல் பிரபுக்கள் வம்சத்தினரே என்பதை அந்த காலப்பகுதிக்குள் நிரூபித்திருக்கிறார்கள். ரணிலிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக கோட்டாபயவை வெற்றிபெறச் செய்விக்க வேண்டுமென கூறியவர்கள் இப்போது ராஜபக்ஷாக்களை காப்பாற்றுவதை ரணிலிடம் ஒப்படைத்துள்ளார்கள். ரணிலிடம் நாட்டை ஒப்படைப்பது நாட்டைக் காப்பாற்றுவதற்காக அல்ல: ராஜபக்ஷாக்களை காப்பாற்றுவதற்காகும். மகிந்த ராஜபக்ஷாக்கள் தமக்கு பாராளுமன்றத்தில் இருந்த மிகவும் நம்பிக்கையானவர் என்றவகையில் ரணில் விக்கிரமசிங்கவிடம் அதிகாரத்தைக் கொடுத்தார்கள். இந்த அணிகளைச்சேர்ந்த அனைவருமே ஒரு குழுவினர் என்பதை நிரூபித்துள்ளார்கள்.

Dambulla-Public-Rally

ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை ஒப்படைத்த 2022 ஆம் ஆண்டு முடிவடைகையில் ஒட்டுமொத்த அரச படுகடன் 83 பில்லியன் டொலராக அமைந்திருந்தது. தற்போது ஒட்டுமொத்த அரச படுகடன் 100 பில்லியன் டொலரை விஞ்சியுள்ளது. எனவே செய்து நற்செய்தியா? அதேவேளையில் எமது நாட்டில் 28,000 ஏக்கர் காணியுள்ள பாற்பண்ணைகள் உள்ளிட்ட எஞ்சியுள்ள வளங்களை விற்கப் போகிறார்கள் எனவே செய்தி நற்செய்தியா? இந்த அனைத்து நற்செய்திகளுக்கும் மத்தியில் எமக்கு தெளிவான நல்ல இலக்கொன்று இருக்கின்றது. எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் திசைகாட்டியின் வெற்றி நிச்சயம் என்ற நற்செய்தி எமக்கு கிடைத்துள்ளது. நாட்டை வீழ்த்திய ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டைக் கட்டியெழுப்பமுடியுமா? தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவை சனாதிபதியாக்க வேண்டியது மற்றுமொரு அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதற்காக அல்ல. முழுநாட்டையும் பிரமாண்டமான நிலைமாற்றத்திற்கு இலக்காக்குவதே எமது தேவையாகும். தோழர் அநுர திசாநாயக்க சனாதிபதியாக உறுதிப்பிரமாணம் செய்துகொண்டதும் உடனடியாக இந்த உக்கிப்போன பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய மக்கள் அபிப்பிராயத்திற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்போம். அந்த தேர்தலில் 130 ஆசனங்களுக்கு மேற்பட்ட பலம்பொருந்திய அரசாங்கமொன்றை நிறுவி நாட்டுக்கு அவசியமான மாற்றங்களை அமுலாக்குவோம். வீழ்ந்த நாட்டைக் கட்டியெழுப்பி நாட்டை வீழ்த்திய ஊழல் பேர்வழிகளுக்கு சட்டத்தினால் தண்டனைவழங்க நடவடிக்கை எடுப்போம். மக்களுக்கு மேலாக இருக்கின்ற உறுப்பினர்களின் அசிங்கமான அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்திடுவோம்.

இதுவரை பாரிய செலவினை ஏற்று அமைச்சர்களை வரவழைத்து அடிக்கல் நாட்டுகின்ற கருத்திட்டங்களை செய்வதையே மேற்கொண்டோம். சிறிய பாதையை திறந்துவைக்கவும் அமைச்சர்களை வரவழைப்பார்கள். குறைந்தபட்சம் மரநடுகை கருத்திட்டங்களில் மரநடுகைக்காக ஒரு சிறிய கிடங்கு வெட்டப்பட்டு பாரிய கம்பளம்மீது வருகின்ற அமைச்சர் கன்றினை நடுவதற்காக இறங்க மேலுமொரு பெரிய கிடங்கினை அகழவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. பாதுகாப்புப் பிரிவுகள் புடைசூழ அதிகாரத்தைக் காட்டிக்கொள்கின்ற கலாச்சாரத்தை நாங்கள் இல்லாதொழிப்போம். பணத்தையும் செல்வத்தையும் பாவித்து மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்த நச்சு வட்ட அரசியலுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம். மக்களின் வாக்குகளால் நியமிக்கப்படுகின்ற இந்த ஆட்சியாளர்களால் மக்கள் வறுமையில் அமிழ்த்தப்படுகின்ற இந்த முறைமையை நாங்கள் முற்றாகவே முடிவுக்கு கொண்டுவருவோம். 1948 இல் சுதந்திரம் பெறுகையில் நாங்கள் கடனற்ற இராச்சியமாக விளங்கினோம். ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக கடன்பெற்று திருடித் தின்றதால் இன்று கடனை மீளச்செலுத்தமுடியாமல் வங்குரோத்து நாடாக தள்ளப்பட்டுள்ளது. கடனை மீளச்செலுத்துவதற்கான காலத்தை 2028 வரை பிற்போட்டு அதனை நற்செய்தி என அவர்கள் கூறுகிறார்கள். சிங்கப்பூர், தென் கொரியா, மலேசியா முன்நோக்கி பயணிக்கையில் எமது ஆட்சியாளர்கள் எமது நாட்டை பின்நோக்கி இழுத்துப் போட்டார்கள். அதனால் வெற்றியை அடைவதற்கான பாய்ச்சலொன்றைப் பாய்வதற்கு இலங்கை மக்கள் அனைவரும் தயார் என்பதை நாங்கள் நிரூபிக்க வேண்டும்.

Dambulla-Public-Rally

பொருளாதாரத்தில், சிந்தனையில் , கல்வியில், கலாச்சாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். எமது நாட்டில் பண்டங்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்கின்ற பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதாக நாங்கள் கூறும்போது ரணில் உள்ளிட்ட குழுவினரும் அதனையே கூறுகிறார்கள். எமது பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த மக்களையும் பங்கேற்கச் செய்விக்கின்ற மற்றும் மக்களை நோக்கி அதன் பெறுபேறுகள் பாய்ந்துசெல்கின்ற செயற்பாட்டுத் திட்டமொன்றை தயாரித்திருக்கிறோம். நாங்கள் கட்டியெழுப்புவது மக்கள் பங்கேற்புடனான பொருளாதாரமொன்றை ஆகும். அந்த பொருளாதாரத்தின் நன்மைகள் ஒருசில குடும்பங்களுக்கல்ல: ஒட்டுமொத்த மக்களுக்கும் பாய்ந்துசெல்கின்ற பொறியமைப்பொன்றினை தயாரிப்போம். மாத்தளை மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வறியவர்களாகி தம்புள்ளையில் இருக்கின்ற வியாபாரிகள் செல்வந்தர்களாகின்ற பொருளாதாரத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து அனைவருக்கும் நியாயமான நன்மைகளை வழங்குகின்ற முறையியலொன்றை வகுப்போம். அதற்காக பொருத்தமான கல்வித்திட்டமொன்றை அமுலாக்கி பிள்ளைகள்மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தத்தை நீக்கிடுவோம். பொதுப்பணத்தைக் கொள்ளையடித்து அவ்விதமாக திருடிய பணத்தில் சொச்சத்தொகையை ஈடுபடுத்தி ஐந்து கிலோ அரிசியைக் கொடுத்ததும் அதனை எடுப்பதற்காக மக்கள் திருடனை வணங்கிவிட்டும் போகின்ற நிலைமையே தற்போது நிலவுகின்றது. மிகவும் கவலைக்கிடமான இந்த முறையியலை மாற்றியமைப்போம். வறுமையைப் பேணிவருவதற்காக நிவாரணங்களை வழங்குவதற்குப் பதிலாக எமது ஆட்சியின்கீழ் சொந்தக்காலில் எழுந்து நிற்பதற்கான பொருளாதார முறைமையொன்றினை உருவாக்கிடுவோம். எனினும் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை நிவாரணங்கள் வழங்கப்படவேண்டிய அனைவருக்கம் சலுகைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவோம். வெகுவிரைவில் வறுமையை ஒழித்துக்கட்டி திசைகாட்டி அரசாங்கமொன்றின்கீழ் மகிழ்ச்சியுடன் வசிக்கின்ற மக்களை உருவாக்குவோம்.

எமக்கு இருப்பது ஒரு சிறிய பணியல்ல: 76 வருடகால சாபக்கேடான அரசியல் பயணப்பாதையை மாற்றியமைப்பதாகும். இந்த மேடையில் இருப்பவர்கள் அதற்காக அர்ப்பணிப்புச்செய்ய வந்தவர்களேயொழிய வேறு எதையும் எதிர்பார்த்து வந்தவர்கள் அல்ல. இதைவிட சிறந்த வாழ்க்கை, அழகான வாழ்க்கை எமக்குத் தேவை. பெண்களும் பிள்ளைகளும் பயமின்றி சுதந்திரமாக வாழக்கூடிய, அன்பும் மதிப்பும் பாதுகாப்பும் நிறைந்த ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்பவேண்டும். மக்கள் ஒருவரையொருவர் நேசிக்கின்ற அன்புநிறைந்த ஒரு தேசத்தை நாங்கள் கட்டியெழுப்பிட வேண்டும். அனைவருக்கும் மனிதத்துடன் கவனிப்பு காட்டுகின்ற ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்பிட வேண்டும். இதுவரை எம்முடன் கைகோத்திராத அனைவருக்கும் இந்த செய்தியைக்கொடுத்து விழிப்புணர்வூட்டி, இன, மத பேதங்களற்ற ஒரே தேசத்தை கட்டியெழுப்புவதற்காக நாமனைவரும் கைகோர்த்திடுவோம். இந்த சனாதிபதி தேர்தலில் உத்தமராம் என கூறவேண்டி ஏற்படாத எமது தோழரொருவரை சனாதிபதியாக்கி, எமது பாராளுமன்றமொன்றை உருவாக்கி எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம். வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற தலைமுறையே நாங்கள். எமது பணியை நாங்கள் ஈடேற்றிடுவோம். எமது வாழ்நாளில் நாட்டைக் கட்டியெழுப்புவோம். அதற்காக அனைவருக்கும் ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கவேண்டுமென பிரார்த்திக்கிறோம்.

Dambulla-Public-Rally
Dambulla-Public-Rally
Dambulla-Public-Rally
Dambulla-Public-Rally
Dambulla-Public-Rally
Dambulla-Public-Rally
Dambulla-Public-Rally