Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு “ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை” -சட்டத்தரணி சுனில் வட்டகல- “மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் நேற்று (21) முற்பகல் கொட்டகலை மலையகம் மக்கள் சபை நிகழ்வு இடம்பெற்றது. “உலகின் எந்தவொரு நாட்டுடனும் போட்டியிட்டு பயணிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே திசைகாட்டியின் எதிர்பார்ப்பு” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க- ஜப்பானுக்கு அநுர
X

“உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள புதிய பாணியிலான போராட்டமொன்று அவசியமாகும் “மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா”

(தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.02.17)

எமது நாட்டின் 76 வருடகால சாபக்கேட்டுக்கு முற்றுப்பள்ளி வைப்பதற்காக ஒட்டுமொத்த சக்திகளையும் ஒன்றுசேர்த்து வருகின்றவேளையில் தேசிய மக்கள் சக்தி வரலாற்றுரீதியாக பெண்களை ஒரு சக்தியாக சேர்த்துக்கொண்டது. பெண்கள் வெறுமனே வாக்குகளை அளிக்கின்ற ஒரு பிரிவினர் அல்ல, அரசாங்கங்களை அமைக்கின்ற, அந்த அரசாங்கங்களுடன் ஒன்றுசேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புகின்ற கௌரவமான ஒரு குழுவாகவே ஒன்றுசேர்ந்து வருகின்றனர். அவர்கள் தற்போது ஒரு வரலாற்றுரீதியான சக்தியாக இயங்கி வருகிறார்கள். இன்னும் ஏறக்குறைய எட்டு மாதங்களில் எமது யுகம் நிர்மாணிக்கப்படுகின்ற தொடக்கநிலையாக சனாதிபதி தேர்தல் வருகின்றது. சனாதிபதி தேர்தலை பிற்போடவோ தவிர்த்துப் பயணிக்கவோ முடியாது. அவ்வாறு தவிர்த்துப் பயணிக்க எவர் இடமளித்தாலும் நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். தவிர்த்துப் பயணிக்க முயற்சிசெய்தால் வீதியில் இறங்கி அவர்களை விரட்டியத்திட பெண்கள் ஒரே மூச்சுடன் முன்னணி வகிப்பர் என்பது திண்ணம்.

இயலாதநிலையிலும் ரணில் விக்கிரமசிங்கவும் சனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருவது புலனாகின்றது. பாராளுமன்ற அமர்வு நிறுத்தத்திற்குப் பின்னர் சபாநாயகரின் அக்கிராசனத்தில் அமர்ந்து உரை நிகழ்த்துவதை ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறார். பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்துகையில் 2048 இல் நாட்டைக் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்குமாறு கோரினார். ரணில் விக்கிரமசிங்கவின் பிரதம சீடரான வஜிர அபேவர்தன 2048 இல் நாடு சீரடைந்து, ஐரோப்பாவின் வெள்ளைக்காரப் பெண்கள் இங்கு மனைப்பெண்களாக சேவையாற்ற வருவார்களெனக் கூறினார். காணி உறுதிகளை வழங்குவதாகக் கூறி சனாதிபதி தேர்தலுக்கு வருவதற்காகவே நாடு பூராவிலும் உள்ளவர்களை தம்புல்லைக்கு திரட்டினார். மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இங்கு ஆயிரக்கணக்கில் குழுமியிருப்பது உறுதிகளை பெற்றுக்கொள்வதற்காக அல்ல. நாட்டை வீழ்த்தியவர்களை விரட்டியடித்து நாட்டைக் கட்டியெழுப்ப தயாராகுங்கள் எனும் செய்தியைக் கொடுப்பதற்காகவே இங்கு வந்துள்ளார்கள். ஒரு பை அரிசியைக்கொடுத்தும் வாக்குகளை சேகரிக்க ரணில் முயற்சி செய்கிறார். அரிசிப் பைக்காக, தகரத் தகட்டுக்காக வாக்குகளை அளித்து அரசாங்கங்களை அமைத்த யுகம் முற்றுப்பெற்று விட்டதென்பதை நாங்கள் அவருக்கு கூறவேண்டும். இது ஒரு புது யுகம், திசைகாட்டியின் யுகம். அரிசியல்ல தங்கத்தை பகிர்ந்தளித்தாலும் இந்த நாட்டின் பெண்கள் திசைகாட்டியை வெற்றிபெறச் செய்விக்க தயார் எனும் முடிவினை எடுத்துவிட்டார்கள்.

எம்மெதிரில் நிலவுகின்ற சவால் கொஞ்சநஞ்சமல்ல. நல்லதொன்று இருக்கின்ற இடத்திற்கு நல்லதொன்றைக் கொடுப்பது சிரமமான வேலையல்ல. தீய ஒன்று இருக்கின்ற இடத்திற்கு ஊக்கமுள்ள மனிதர்களால் மாத்திரமே நல்லதொன்றைக் கொடுக்கமுடியும். மிகவும் கெட்ட ஒரு நாட்டுக்குப் பதிலாக நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக பெண்கள் முண்டியத்துக் கொண்டிருக்கிறார்கள். உற்பத்தி வழிவகைகளை சீரழித்து, தொழில்முயற்சிகளை சீரழித்து, எமக்கு உயிர்வாழ்வதற்கான வருமான வழிவகைகளை ஈட்டிக்கொள்ளமுடியாத வங்குரோத்து அடையச்செய்வித்த ஒரு நாடுதான் இருக்கின்றது. கடன் வாங்கி, திருடித் தின்று, கடன் செலுத்த முடியாதென்பதை உலகம் கூறிய ஒரு நாட்டிலேயே நாங்கள் வசிக்கிறோம். 1948 இல் சுதந்திரம் பெறும்போது ஆசியாவின் இரண்டாவது பலம்பொருந்திய பொருளாதாரம் நிலவிய நாட்டைத்தான் கடைசி இடத்திற்கு தள்ளியுள்ளார்கள். பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்காக ஒட்டுமொத்த மக்களையும் தொடர்புபடுத்திக்கொண்ட பாரிய செயற்பொறுப்பு இருக்கின்றது. இன்றும்கூட ஏற்றுமதி பொருளாதாரத்தின் பெரும்பங்கினை வகிப்பது தேயி்லை மற்றும் ஆடைத்தொழிற்றுறையைச் சேர்ந்த பெண்களாவர். வெளிநாட்டுத் தொழில்களிலிருந்து அதிகளவான டொலர்களை அனுப்பிவைப்பவர்கள் பெண்களே. எனினும் எவருமே பெண்களை பொருட்படுத்துவதில்லை. பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பி ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்மைகளை வழங்குகின்ற வேலைத்திட்டமொன்றை நாங்கள் அமுலாக்குவோம். அதனூடக கல்விக்கு, சுகாதாரத்திற்கு போதியளவிலான பணத்தை ஒதுக்கி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். அதைப்போலவே அழுகிப்போன ஒரு சமூகத்திற்குப் பதி்லாக மனிதம் நிலவுகின்ற சமூகமொன்றை உருவாக்கிட வேண்டும். அதற்காக மக்களின் செல்வத்தை மோசடியால் ஊழலால் திருடித் தின்றவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்குவோம்.

காசுக்காக பிள்ளைகளுக்கு போதைப்பொருள் விற்கின்ற ஒரு சமூகத்திலேயே நாங்கள் சீவிக்கிறோம். பெண்களை மதிக்காமல் அநியாயம் செய்கின்ற ஒரு நாடுதான் இருக்கின்றது. ஒருவரையொருவர் மதிக்காத எம்மெவருக்கும் உயிர்வாழ முடியாத ஒரு சமூகமே இருக்கின்றது. மொழிகளுக்கிடையில் முரண்பாடுகள், மதங்களுக்கிடையில் முரண்பாடுகள், உடுக்கின்ற உடைகளுக்கிடையில் நிலவுகின்ற முரண்பாடுகளுக்குப் பதிலாக ஒத்துணர்வும் மனிதமும் நிலவுகின்ற ஒரு நாடுதான் எமக்குத்தேவை. அன்பு நிலவுகின்ற ஒரு நாடுதான் எமக்குத் தேவை. பிள்ளைகள்மீது அன்பு செலுத்துகின்ற, பெண்களை மதிக்கின்ற, ஒத்துணர்வுள்ள சமூகமொன்றை நாங்கள் உருவாக்கிடவேண்டும். மிகவும் சாதகமான சமூகமொன்றை அமைத்திட நாங்கள் அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும்.

சுதந்திரம் எனக்கூறி கடலுக்கு பீரங்கி வேட்டுகளைத் தீர்த்து மீன்களை அச்சுறுத்தி தேசிய கோடியை ஏற்றிவிட்டோம் என்பதற்காக சுதந்திரம் இருக்கின்றதா? எமது நாட்டின் நிதிக்கொள்கையைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும். எமது நாட்டின் சுயாதீனத்தன்மை, எமது நாட்டின் உரிமை எமக்கில்லை. நாட்டு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதாகக்கூறி தம்புல்லைக்கு வரவழைப்பிக்கின்ற அதேவேளையில் அரசாங்கத்திற்குச் சொந்தமாக பாற்பண்ணைகளை அமூல் கம்பெனிக்கு விற்கிறார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்புத் துறைமுகத்தின் முனையங்கள், எண்ணெய்க் குதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனவே நாடு சுதந்திரமானதா? இந்த நிலைமைக்கு எதிராக உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள புதிய பாணியிலான சுதந்திரப் போராட்டமொன்று எமக்குத் தேவை. ஏதேனும் வசதிபடைத்த, நாட்டைவிட்டுச் செல்லக்கூடிய அனைவருமே நாட்டைவிட்டுச் செல்கிறார்கள். அதற்குப் பதிலாக நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனும் ஊக்கமுள்ள மனிதர்களை நாங்கள் விழித்தெழச் செய்விக்கவேண்டும். அதேவேளையில் திராணியுள்ள பெண்கள் ஒருமூச்சுடன் ஒன்றுசேர்ந்து நாட்டை சீராக்குவோம் என்ற செய்தியைக் கொடுக்கவே நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். தேசிய மக்கள் சக்தி தேசிய மறுமலர்ச்சி யுகமொன்றை உருவாக்கி கைத்தொழில்களை கட்டியெழுப்பி, தொழில்முயற்சிகளைக் கட்டியெழுப்பி உண்மையான சுதந்திரத்தை வென்றெடுத்து நாட்டைக் கட்டியெழுப்புதலை மேற்கொள்கின்றது. அதைப்போலவே சிங்கள, தமிழ், முஸ்லீம் நாமனைவரும் ஒரு தேசிய நோக்கத்திற்காக உழைக்க வேண்டும். அதிகாரத்திற்காக இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் மக்களை மதரீதியாக , இனத்துவரீதியாக பிரித்தாண்ட யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். முன்னேற்றமடைந்த கலாசார சமூகமொன்றைக்கொண்ட மனிதர்களைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும். எல்லாவற்றினதும் விலையை அறிந்த ஆனால் பெறுமதியை அறியாத நிலையிலுள்ள இந்த முறைமையை மாற்றியமைப்பதன் மூலமாகவே இந்த படுமோசமான சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.

எம்மெதிரில் இருப்பது பாரிய பணியாகும். அனைத்தையும் மீள் உருவாக்குவதற்காகவே தேசிய மக்கள் சக்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தமக்கு தனிப்பட்டமுறையில் எதனையும் எதிர்பார்க்காமல் தொண்டு அடிப்படையில் பணிபுரிகின்ற பிரமாண்டமான இயக்கமொன்று கட்டிவளர்க்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரத்தில் இருந்தவர்கள் வாக்குகளைப் பெற்றதும் மற்றைய பக்கத்திற்கு தாவியதும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவேயாகும். இந்த நிலைமையை மாற்றியமைத்திட பெண்கள் ஒரே மூச்சில் அதிகாரத்தைப் பெறுவதற்கு முன்னர் ஒன்றுசேர்ந்து இவ்விதமாக ஒழுங்கமைவார்களாயின் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு நாட்டை சீராக்க தலைமைத்துவம் வழங்குகின்ற பெரும்பாலானோர் இந்த மேடையில் இருக்கிறார்கள். இதுவரை அதிகாரத்தைப் பெற்ற குழுக்கள் மக்களை அர்ப்பணிக்குமாறு கூறிக்கொண்டு அவர்கள் திருடி வந்தார்கள். அந்த பழைய அரசியலை முற்றாகவே மாற்றியமைத்திட இந்த அனைவரும் தயார். ஆசிரியைகளால் பிள்ளைகளுக்கும் கிராமத்தில் உள்ள பெண்களால் சமூகத்திற்கும் இதுவரை பயணித்த தவறான, அழிவுமிக்க பாதை பற்றிய விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொடுக்கமுடியும். 76 வருடகால வரலாற்றினை மாற்றியமைத்து இந்த வருடத்திலேயே புதிதாக எழுதத் தொடங்குகிறோம். பெண்களை சீக்கிரமாக ஏமாற்ற முடியுமென ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அரிசிப் பையைக் கொடுத்து வென்றெடுக்க முடியுமென நினைக்கிறார்கள். இந்த அவமானத்தில் இருந்து பெண்களை உங்கள் அனைவராலுமே விடுவித்துக்கொள்ள முடியும். அரிசிப் பைக்காக , வாக்குறுதிக்காக மாறிவிடாமல் மக்களின் ஆட்சிக்காக நின்றுவிடாமல் பயணிக்கின்ற சக்தி பெண்களே என்பதை நிரூபிக்கவேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பணியின் பிரதான பங்காளிகள் பெண்களே என்பதை நிரூபிக்கவேண்டும். எவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சமூகமொன்றைக் கட்டியெழுப்புகின்ற பிரதான பங்காளிகளாக மாறுகின்ற மகிழ்ச்சி உங்கள் அனைவரிடமும் இருக்கின்றது. சனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய எந்த தேர்தலைக் கொண்டுவந்தாலும் அவர்களை அரியாசனத்திலிருந்து இறக்கி புதிய நாட்டை உருவாக்கத் தயார் எனும் செய்தியைத்தான் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அன்புக்குரிய சகோதரிகளே, எமது பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை இல்லாதொழித்த, பொருளாதாரத்தை நாசமாக்கிய, எமது மகிழ்ச்சியை இல்லாதொழித்த 76 வருடகால சாபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளிவைக்க பெண்கள் தயார் என்பதை ஊர்ஊராகச் சென்று கூறுங்கள். மீண்டும் எவராலும் பெண்களை ஏமாற்ற முடியாதென்பதை வீடுவீடாகச் சென்று பெண்களுக்கு விளக்கிக்கூறுங்கள். கிடைக்கின்ற முதலாவது வாய்ப்பிலேயே கொடிய ஆட்சிக்கு முடிவுகட்டி வெற்றியை அடையும்வரை நின்றுவிடாமல் முன்நோக்கி நர்வோம் என்பதை உறுதிப்படுத்துங்கள். எதிரிகளை விரட்டியடித்து மக்களின் வெற்றி, தாய்நாட்டின் வெற்றி, பிள்ளைகளின் எதிர்கால வெற்றியை பெற்றுக்கொள்ளாமல் நின்றுவிடப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். புதிய சுதந்திரப் போராட்டம் மூலமாக தாய்நாட்டைக் கட்டியெழுப்புதல்வரை ஒட்டுமொத்த மக்களுடன் அணிதிரண்டு வெற்றியடைவோம் என்பதை வரலாற்றில் குறிப்புப் பதிவீராக.

“பிள்ளைகளுக்கான கனவினை நனவாக்கிக்கொள்ளக்கூடிய சமூகமொன்றை உருவாக்கவேண்டியது எமக்கு அவசியமாகும்”
-தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாந்தி ஹரினி அமரசூரிய-

நாடு முழுவதிலுமுள்ள பெண்கள் விழிப்படைவதையும் ஒழுங்கமைவதையும் நாங்கள் காண்கிறோம். அது உன்னதமானது. பல வாரங்களாக பல மாதங்களாக நாங்கள் வீடுவீடாகச் சென்று உங்கள் அனைவருடனும் உரையாடியதால் தோன்றிய மலர்ச்சியும் ஒழுங்கமைதலும் நாடுபூராவிலும் காணப்படுகின்றது. “பெண்களாகிய நாங்கள் ஓரே மூச்சுடன்” எனும் தொனிப்பொருளின்கீழ் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒருங்கிணைவதே அதிலுள்ள உன்னதமான நிலைமையாகும். இந்த நாட்டுக்கு அவசியமான மாற்றத்திற்கான தலைமைத்துவத்தை நீங்கள் அனைவரும் எடுத்துக்கொள்வதே இதன் மூலமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. மேடையில் இருக்கும்போது கிடைத்த ஒருசில செய்திகள் தொடர்பில் கவனத்தை ஈர்க்கச்செய்வித்து உரையாற்றலாமென்று நான் நினைக்கிறேன். இனங்காணப்படாத போதை மாத்திரைகளை பருகியதால் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் ஆண்டு ஐந்து மாணவர்கள் நால்வர் மயங்கிவிழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். எமது ஆசிரியர்கள் பற்றியும் அதிபர்கள் பற்றியும் பாடசாலைகள் பற்றியும் எம்மனைவருக்கும் பெருமைமிக்க நம்பிக்கை இருந்தது. பிள்ளையின் பாதுகாப்பு தொடர்பில் நிலவிய நம்பிக்கை சிதைக்கப்பட்டு வருகின்றது. பாடசாலை மதில் சிதைந்து பிள்ளைகள் மடிகிறார்கள். பாடசாலைக்குள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு நிலவுகின்றது எனும் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாதுள்ளது. வீட்டில் அமைதி இல்லாத அளவுக்கு குடும்பக் கட்டமைப்பு சீரழிந்துவிட்டது. உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி ஆகிய அனைத்தையுமே நாங்கள் இழந்துள்ளோம். வைத்தியசாலையில் முறைப்படி மருந்து கிடைத்து குணமடைவது ஒரு அதிசயமாக மாறியுள்ளது. இந்த சமூக பொருளாதார நி்லைமைக்குள் எமது மனிதாபிமானமும் அன்பான கடப்பாடுகளும் பேரவலமாக மாறிவிட்டது.

இந்த சமூக பொருளாதார நி்லைமைக்குள் பெண்கள் – ஆண்கள் ஆகிய நாங்கள் அனைவருமே இறுகிப் போயுள்ளோம். அன்றாட விலைச் சிட்டைகளை செலுத்தி, பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பி, ஏதோசில மருந்துகளை வாங்கி, மூச்செடுத்து உயிர்வாழவே காலை தொடக்கம் இரவு வரை போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்காக வீடுக்குள்ளே எவ்வளவுதான் யுத்தம் நடைபெறுகின்றது? குறைந்தபட்சம் நிம்மதியான உறக்கம்கூட கிடையாது. தமது பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க, மருந்து கொடுக்க மிகவும் கடினமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவள் மீதுள்ள பெறுமதியும் , அபிமானமும் இல்லாமல் போகின்ற தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தாய் தந்தையருக்கு நாட்டைக் கைவிட்டுத் தொழில்தேடி செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. பிள்ளைகளுடன் உரையாட எமக்கு நேரமில்லை. பிள்ளை சிறு தவறு புரிந்தாலும் பெற்றோர் ஆத்திரமடைகிறார்கள். பசிக்கு உண்ண, மருந்து வாங்க, ஓரளவுக்கு கல்வியை வழங்க மற்றும் பில்களைச் செலுத்த பெரும்போராட்டத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதற்கு அப்பால் ஒரு வாழ்க்கையைப் பற்றி எவ்விதத்திலும் சிந்திக்க முடியாது. இந்த சமூக பொருளாதார முறைமை நாசமாக்கியுள்ளது எமது வாழ்க்கையை மாத்திரமல்ல, எமது மனிதாபிமானத்தையும் ஆகும். எமது ஈடுபாடுகள், உயிர்களுக்கு அர்த்தம் தருகின்ற உறவுகளின் தரம் ஒழிக்கப்பட்டு, பெற்றோர்கள் பிள்ளைகளை வெறுத்துவிட்டார்கள். பிள்ளைகள் பெற்றோர்களை வெறுத்துவிட்டார்கள். ஒருவரையொருவர் வெறுத்துவிட்டார்கள்.

மனிதாபிமான உறவுகளை இந்த அளவுக்கு நாசமாக்கிய ஒரு சமூகத்தை முன்னேற்றமானதெனக் கூறமுடியுமா? இந்த சமூகத்தில் பாதுகாத்துக்கொள்ள ஏதாவது எஞ்சியுள்ளதெனக் கூறமுடியுமா? நாங்கள் இருப்பது ஒரு பொருளாதாரச் சீரழிவில் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த பேரவலத்தையே எதிர்நோக்கியுள்ளோம். அதனை விளங்கிக்கொண்ட பெண்கள் பொறுத்தது போதும், இப்போது நீங்கள் மாறவேண்டுமென தீர்மானித்து விட்டீர்கள். இத்தகைய சமூகமொன்றை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது எனும் திடசங்கற்பம் எம்மனைவரிடமும் இருக்கின்றது. இந்த நிலைமையை மாற்றியமைத்திடவே நாங்கள் அனைவரும் இணைந்திருகிறோம். மற்றுமொரு அரசாங்க மாற்றத்திற்கன்றி பாரதூரமான சமூக மாற்றமொன்று மூலமாக எமது மனிதாபிமானத்தை மீண்டும் கண்டுபிடிக்கவே அனைவரும் முன்வந்திருக்கிறோம். எமது மானிட உறவுகளுக்கு புதிய தரமான அர்த்தமொன்றைக் கொடுக்க, மனிதப் பண்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவே நாங்கள் அணிதிரள்கிறோம். பெண்களாகிய எமக்குள் பத்தினிமார்கள் மாத்திரமல்ல காளியம்மனும் இருக்கிறார்கள். எமது பொறுமை எல்லை கடந்துவிட்டால் காளியம்மனும் வெளியே வரக்கூடும். இந்த முறைமைக்குள் இனிமேலும் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பினை வைத்துக்கொள்ள முடியாது.

எமது பிள்ளைகளுக்காக கனவு காணவும் இந்த கனவினை நனவாக்கவும்கூடிய சமூகமொன்றை உருவாக்கவேண்டிய அவசியம் எமக்கு உண்டு. அந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரலாற்றுரீதியான மாற்றத்திற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இருக்கிறோம். பெண்களிடம் பொதிந்துள்ள தலைமைத்துவம், திறமைகள், துணிச்சல் என்பவற்றை நாட்டுக்காக அர்ப்பணித்திடவே இந்த பெண்கள் ஒழுங்கமைந்து வருகிறார்கள். பெண்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கின்ற மேடையொன்று எமது சமூகத்திற்கு அவசியம். அவற்றுக்கு செவிசாய்க்கின்ற சமூகமொன்று, அரசியல் தலைமைத்துவம் எமக்கு அவசியமாகும். அதற்காக கட்டியெழுப்பப்பட்டுள்ள மேடைதான் திசைகாட்டி. எமது பெறுமதி, எமது மகிழ்ச்சிக்கு இடமுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் எமக்கு அதிகாரம் அவசியமாகின்றது. அடுத்த சனாதிபதியாகப் போகின்றவர் தோழர் அநுர திசாநாயக்க என்பதை சமூகம் எற்றுக்கொண்டுள்ளது. அதற்கு அப்பால் சுதந்திரமான சமூகமொன்றை, பெண்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நாடொன்றை உருவாக்கவேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் உண்டு. மகிழ்ச்சியால், அமைதியால், அன்பால் நிரம்பிவழிகின்ற சமூகமொன்றைக் கட்டியெழுப்ப நாமனைவரும் ஒன்றுசேர்வோம்.