மக்கள் போராட்டம் இன்னமும் ஓயவில்லை என்றும் மக்களுடைய கோரிக்கைகள் அவ்வாறே உள்ளன என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் கொத்மலை தேர்தல் தொகுதியின் மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொள்ளையர்கள், பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ,கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர். இதையும் பஸில் உள்ளிட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஹிட்லர் பற்றி கதைப்பதற்கு முன்னர் ´காற்சட்டை´யை எப்படி சரியாக அணிவது என்பதை ரணில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.