(-Colombo, June 03, 2024-)
தேசிய மக்கள் சக்தியின் ஹற்றன் பிரகடனத்தை மக்கள்மயப்படுத்தும் கண்டி மலையகம் மாநாடு நேற்றைய தினம் (02) கண்டி செல்வ விநாயகர் ஆலயத்தின் வரவேற்பு மண்டபத்தில் (கண்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள்) இடம்பெற்றது.
இம்மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், கண்டி மாவட்டத் தலைவர் தோழர் கே.டி.லால் காந்த, தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைப்பின் தேசிய குழு உறுப்பினர், தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைப்பின் தேசிய குழு உறுப்பினர் பேராசிரியர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான மலையக மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.