Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வி மலையகம் 200 – கண்டி ரணிலின் பொருளாதார மாற்ற சட்ட முன்மொழிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் தேசிய மக்கள் சக்தி… “எமது நாட்டின் இளைஞர்களின் கைகளில் அரசியல் சுக்கான் கைளிக்கப்படவேண்டும்.” -தேசிய மக்கள் சக்தியியன் தலைவர் அநுர குமார திசாநாயக்க- “ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றத்திற்காக சவால்களுக்கு மத்தியில் மண்டியிடாத தலைமைத்துவமொன்று எமக்குத் தேவை…” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க-
X

“மின்சக்தியானது கேள்வி – வழங்கலின் அடிப்படையில் இலாபம் தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றல்ல : பொருளாதாரத்தின் உயிர்நிலையாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி-

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.05.09-)

எமது நாட்டின் வலுச்சக்தி துறை விரிவாகி புதிய பிறப்பாக்கத் தேவைகள், புதிய கொண்டுசெல்லல் தேவைகள் மற்றும் விநியோகத் தேவைகள் ஊடாக மின்சக்தி துறையில் புதிய மறுசீரமைப்புகள் அவசியமென்பதை நாங்கள் ஒருபோதுமே புறந்தள்ளப்போவதில்லை. நாட்டினதும் மக்களினதும் எதிர்கால தலைமுறையினரதும் உரிமையென்றவகையில் பாதுகாத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் பாவனையாளர் அவசியப்பாடுகளுக்காக விருத்திசெய்து முன்நோக்கி நகர்வதற்காக மறுசீரமைப்புகள் அவசியமாகும். இன்னும் சில மாதங்களில் எமது நாட்டின் சனாதிபதியொருவரை தெரிவுசெய்ய வேண்டும். தற்போது நிலவுவது மக்கள் ஆணையற்ற ஓர் ஆட்சியாகும். நிலவிய கோட்டாபய ராஜபக்ஷ மக்களால் விரட்டியடிக்கப்பட்டு இன்றளவில் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. தற்போது இருப்பது அதற்குப் பின்னர் நியமித்துக்கொண்ட மக்கள் ஆணையற்ற அமைச்சரவையும் சனாதிபதியுமாகும். எதிர்கால சந்தியினரை பாதிக்கின்ற மின்சக்தி சட்டமொன்றை பலவந்தமாகக் கொண்டுவந்து நிறைவேற்றிக்கொள்ள இந்த அமைச்சரவையில் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சருக்கு இயலுமை இருக்கின்றதா?

மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள புதிய மின்சக்தி சட்டத்திற்கு ஒட்டுமொத்த மின்சார சபை ஊழியர்களுமே எதிர்த்தாலும் அதனை நிறைவேற்றிக் கொள்வதாக கூறுகிறார். இலங்கை வரலாற்றில் முதல்த்தடவையாக மின்சக்தி தொடர்பான மொத்த சந்தையாக மாற்றுகின்ற முயற்சி இந்த சட்டத்தில் இருக்கின்றது. மின்சக்தி என்பது கொள்வனவுசெய்து வைத்துக்கொண்டிருந்து பாவிக்கக்கூடிய ஒன்றல்ல. அதைப்போலவே மின்சக்தி தொடர்பிலான இலாபம் அல்லது நட்டம் தீர்மானிக்கப்படுவது பாவிக்கப்படுகின்ற தருணத்தில் மாத்திரமல்ல. மின் சக்தி வைத்தியசாலையில், இராணுவத்தில், பொலீஸில், தொழிற்சாலையில், ஆய்வுகூடத்தில் பாவிக்கப்படுகின்ற அளவுக்கிணங்க இலாபம் பெறக்கூடிய ஒரு துறையல்ல. மக்கள் பாவிக்கின்ற சந்தர்ப்பத்திற்கிணங்க தேசிய இலாபத்தில் சேர்கின்றது. இத்தகைய அத்தியாவசிய சேவையொன்றில் இலாபம் என்பது கேள்வி – வழங்கலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றல்ல: பொருளாதாரத்தின் உயிர்நிலையொன்றாகும்.

மின்சார சபை நேரடியாகவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் முடிச்சிபோடப்பட்டுள்ளது. மின்சாரத்தின் விலையைத் தீர்மானிப்பதற்காக பாதகம் அல்து சாதகம் சம்பந்தமாக மக்களின் பக்கத்தில் இருந்து பார்ப்பது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவாகும். எனினும் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் விதப்புரைகளைக்கூட பொருட்படுத்தாமல் “போகின்ற பேய் கூரையையும் பிய்த்துக்கொண்டு போகின்ற ” விதத்தில் இந்த சட்டம் அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நாட்டின் பொதுமக்களோ அல்லது தொழிற்சங்கங்களோ மின்சக்தி மொத்தச் சந்தையொன்றைக் கோரி எந்தஇடத்திலும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. தங்குதடையின்றி மின்சாரத்தை வழங்குதல், நியாயமான விலைக்கு வழங்குதல் சம்பந்தமாக மாத்திரமே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சனாதிபதி தேர்தலொன்றை அருகில் வைத்துக்கொண்டு இந்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென நாங்கள் நம்பப்போவதில்லை. மின்சார பிறப்பாக்கம், கொண்டுசெல்லல் மற்றும் விநியோக முறைமையின் மறுசீரமைப்பினை விரிவாக மக்களின் பக்கத்தில் இருந்து சிந்தித்துப் பார்த்து மேற்கொள்ள வேண்டும். நெருக்கடிகளுக்கு தீர்வுகாண்கின்ற முற்றாய்வு மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆனால் தற்போது முனைவதோ சொச்சத்தொகைக்கு மின்சார சபையை விற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதையாகும்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அதிகாரத்தில் இருந்த 2002 இல் உள்நாட்டு இறைவரி, சுங்கம் மற்றும் மதுவரி திணைக்களம் என்பவற்றை ஒருங்கிணைத்து அதிகாரசபையொன்றை நிறுவுவதற்கான சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைப்போலவே பெற்றோலியம், மின் சக்தியை விற்பனை செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2003 இல் மின்சார சபையை எட்டு துண்டுகளாக உடைத்து விற்றுத்தீர்ப்பதற்கான சட்டமொன்றைக் கொண்டுவந்தார்கள். மக்கள் ஆர்ப்பாட்டங்கள், தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு மற்றும் குறிப்பாக பாராளுமன்றத்தில் நாங்கள் எழுப்பிய குரல் காரணமாக அந்த முயற்சிகளை கைவிடவேண்டிய நிலையேற்பட்டது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மின்சாரசபை சட்டமூலத்தை தோற்கடிப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் பொருட்டு இந்த ஊடக சந்திப்பு நடாத்தப்படுகின்றது.

வலுச்சக்தித் துறையென்பது தேசிய பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்துள்ள ஒரு செயற்பாங்காகும். அதற்காக கிடைக்கின்ற முதலீடுகள் அமைச்சரின் சட்டைப்பை ஊடாக வருமாயின் அதன் நன்மைகள் அதிகமாக கிடைப்பதும் அமைச்சருக்கு மாத்திரமாகும். அதனால் நாட்டின் தன்னாதிக்கமும் மின்சக்தி துறையும் சம்பந்தமாக தாக்கமேற்படுத்துகின்ற இந்த சட்டத்தை பாராளுமன்றத்தின் மண்டைகளால் நிறைவேற்றிக்கொள்ள வேண்டாமென நாங்கள் வலியுறுத்துகிறோம். ஏற்கெனவே தேசிய மக்கள் சக்தியின் வலுச்சக்திக் குழுவின் புத்திஜீவிகள் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். மேலும் பல்வேறு தரப்பினர் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். இறுதியாக எல்லா முடிவுகளையும் எடுப்பது மக்களே. மக்கள் அபிப்பிராயத்தினால் அல்லது மக்கள் பலத்தினால் இவ்வாறான அழிவுமிக்க சட்டங்களைத் தோற்கடிக்க ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

“மின்சாரம் சம்பந்தமான தனிப்பட்ட ஏகபோகஉரிமையை அமுலாக்குகின்ற இயலுமை அமைச்சருக்கு கிடைப்பது பயங்கரமானது”
-தேசிய மக்கள் சக்தியின் வலுச்சக்திக் குழுவின் அங்கத்தவர் மின் பொறியியலாளர் புபுது நிரோஷண-

இரண்டு அடிப்படை விடயங்களை தெளிவுபடுத்த எதிர்பார்க்கிறேன். இத்தகைய சட்டமொன்றைக் கொண்டுவருகையில் அதனால் என்ன நேரிடுமென்பது பற்றிய சமூக அரசியல் புரிந்துணர்வினை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். 2022 யூலை மாதத்தில் மறுசீமைப்பு முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு 2022 ஒற்றோபர் மாதத்தில் விதப்புரைகளை சமர்ப்பித்தது. அந்த குழுவில் 10 பேர் இயங்கினாலும் தொழிற்சங்கங்கள் மற்றும் பாவனையாளர்களை உள்ளிட்ட சிவில் அமைப்புகள் மேலும் பல முன்மொழிவுகளை சமர்ப்பித்தன. சம்பந்தப்பட்ட குழு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை கவனத்திற் கொண்டது. 2023 ஏப்பிறல் மாதமளவில் குழுவிலிருந்து வெளியில் வந்த அங்கத்தவர்கள் 2022 ஒற்றோபர் மாதமளவில் அவர்கள் முன்வைத்திருந்த விதப்புரைகளைக்கூட இந்த சட்டம் கவனத்திற் கொள்ளவில்லை எனக் கூறினார்கள். அமைச்சரோ அல்லது சட்டமூலத்தின் வரைவினைத் தயாரித்தவர்களோ மேற்படி குழுவின் விதப்புரைகளைக்கூட கவனத்திற்கொள்ளாமல் செயலாற்றி மின்சார சபையுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் விஷமத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாராளுமன்றத்தில் கூறினார். நீங்களே நியமித்த குழுவின் விதப்புரைகளைக்கூட ஏன் கவனத்திற்கொள்ளவில்லையென நாங்கள் அமைச்சரி்டம் கேட்கிறோம். உதாரணமாக இதில் முன்மொழியப்பட்டுள்ள ” நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர்” எனும் பதவி சுயாதீனமானதாக அமையவேண்டுமென்ற குழுவின் விதப்புரைக்கிணங்க காட்டப்பட்டிருப்பினும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் அந்த பதவி அமைச்சருக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதைப்போலவே இலங்கை பொறியியலாளர் நிறுவனம் 2022 செத்தெம்பர் மாதத்தில் இந்த தேசிய மக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலம் சம்பந்தமான விதப்புரைகளை முன்வைத்திருந்தது. அதைப்போலவே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர் குழு 2023 செத்தெம்பர் மாதத்தில் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புகளைக் கோரியது. எனினும் ஒருதலைப்பட்சமாக தெரிவுசெய்யப்பட்ட ஒரு குழுமத்திற்கு மாத்திரம் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. 2022 செத்தெம்பர், நவெம்பர், 2023 சனவரி மாதங்களில் இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் கருத்துக்கள் இது சம்பந்தமாக முன்வைக்கப்பட்டன. அதற்கு மேலதிகமாக மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியலாளர் சங்கத்தினால் எழுத்திலான நீண்ட கருத்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 2024 ஏப்பிறல் வரை நாங்கள் இந்த மறுசீரமைப்பு சம்பந்தமாக கருத்துக்களை முன்வைக்க முயற்சி செய்தோம். அரசியலுடன் தொடர்புபடாத பொறியியலாளர் நிறுவனமான மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியலாளர் ஒன்றியம் கருத்துக்களை முன்வைப்பதற்காக விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இந்த சட்டத்திற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டுமென நான் விடயங்களை முன்வைக்கிறேன். எந்தவொரு வலுச்சக்தித் துறையிலும் பிறப்பாக்கம், கொண்டுசெல்லல் மற்றும் விநியோகித்தலை அரசாங்கத்தினாலும் தனியார் துறையினாலும் உலகத்தின் ஏனைய நாடுகள் வகிக்கலாம். இந்த செயற்பாங்கு ஊடாக அத்தியாவசிய சேவையொன்று வழங்கப்படுவதோடு அதற்காக செலவிடப்படுகின்ற பணம் நியாயமான பணத்தொகை மூலமாக தீர்க்கப்படல் வேண்டும். மின்சாரம் சம்பந்தமாக மொத்த சந்தைக்குச் செல்லுமாறு இந்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. ஏறக்குறைய 150 பக்கங்களைக்கொண்ட இந்த சட்டமூலத்தின் பிரிவுகளால் எமது மின்சார வழங்கல் முதிர்ச்சியடைவதற்கான ஏற்புடைய காலத்தை 5 தொடக்கம் 10 வருடங்கள் வரை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதிக்குள் மொத்த சந்தையை நிறுவ முடியாமல் போனால் இயல்பாகவே தனியார்மயமாக்கலுக்குச் செல்வதற்கான இயலமை வழங்கப்பட்டுள்ளது. 1996 இற்கு முன்னர் அரசாங்கத்திடம் நிலவிய ஏகபோகஉரிமையை தனியார் துறைக்கு கட்டியெழுப்புவதற்கான அபாயநிலை காணப்படுகின்றது. மின்சாரம் சம்பந்தமாக தனியார்துறையின் ஏகபோக உரிமையை வலுவுடையதாக்க அமைச்சரின் தனி அபிப்பிராயத்திற்கு அமைவாக செயலாற்றுவதற்காக இயலுமை இதன் மூலமாக கிடைக்கின்றது.

மன்னாரில் காற்றுவிசை மின்நிலையம் சம்பந்தமான உரையாடல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 100% மின்சார சபைக்குச் சொந்தமான 100 மெகாவொற் மின் நிலையமொன்று இருக்கின்றது. இந்த சட்டத்தின் ஊடாக அந்த மின்நிலையம்கூட 100% தனியார்மயமாக்கலுக்கு இலக்காகின்றது. மின்சார சபைக்கு எஞ்சுவது நீர் மின் நிலையங்கள் மாத்திரமே. தனியார் துறையினரிடம் கையளித்த பின்னர் விலையைத் தீர்மானிக்கின்ற அதிகாரம்கூட அமைச்சருக்கே கிடைக்கின்றது. நாங்கள் இங்கு எதிர்ப்பது தனியார் முதலீடுகளுக்காகவன்றி தனியார் ஏகபோக உரிமையை நிலைநாட்டுதல் தொடர்பாகவே. முதலீடுகள் கிடைப்பதென்பது நிலவுகின்றவற்றை விற்றுத் தீர்ப்பதல்ல. மக்கள், கைத்தொழிலதிபர்கள் மிகுந்த கூருணர்வுடன் இந்த விடயங்கள் பற்றி கவனஞ்செலுத்த வேண்டியுள்ளது. புதிய மின் பிறப்பாக்கத்திற்காக தனியார் முதலீடு அத்தியாவசியமாகும். அந்த முதலீடு போட்டியடிப்படையிலேயே கிடைக்கவேண்டும். அமைச்சருக்கோ அல்லது அமைச்சரவையின் ஒருசிலருக்கோ அவசியமான வகையில் கொடுக்கக்கூடாது. தற்போது இந்தியாவின் தனியார் கம்பெனி 0.35 டொலருக்கு உற்பத்தி செய்கின்ற காற்று மின்சார அலகொன்றை எமது நாட்டின் 0.85 டொலருக்கு உற்பத்தி செய்யப்போகின்றது. போட்டியடிப்படையிலான டெண்டர் ஊடாக கொடுத்திருப்பின் குறைந்த பட்டச் 0.5 டொலருக்கு எடுக்கலாம். இவ்விதமாக உயர்ந்த விலைக்கு 30 வருடங்கள் கழியும்வரை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள். இந்த ஐந்து மாதங்களில் அரசாங்கத்தை கவிழ்க்க முன்னர் இவ்விதமாக மக்களைப் பழிவாங்கவே தயாராகி வருகிறார்கள். பாராளுமன்றத்தில் இருக்கின்ற மண்டைகளின் எண்ணிக்கையால் இதனை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிசெய்தால் அதனை அமுலாக்கும்போது நாங்கள் அதனை தோற்கடிப்போம் என்பதை வலியுறுத்துகிறோம்.

“மக்கள் வலுச்சக்திக்கான தமது உரிமையை உறுதிசெய்து கொள்வதற்காக அணிதிரள வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் வலுச்சக்திக் குழுவின் அங்கத்தவர் கலாநிதி மயுர நெத்தி குமார-

இந்த ஊழல்மிக்க முறையியலும் இலஞ்சம் பெறுகின்ற கொடுக்கல் வாங்கலும் தவறு என்பதையே நாங்கள் இங்கு வலியுறுத்துகிறோம். நியாயமான வலுச்சக்தி சந்தைக்குப் பதிலாக வரிசை அமைச்சரின் ஆதிக்கத்தை விரிவாக்குகின்ற சந்தையை நீங்கள் விரும்புகிறீர்களா என நாம் அனைவரிடமும் கேட்கிறோம். இந்த சந்தையில் தனியார் முதலீட்டாளர்களாலும் அரசாங்கத்தாலும் ஆற்றக்கூடிய செயற்பொறுப்புகள் தனித்தனியாக நிலவுகின்றன. தனிப்பட்ட தொழில்முயற்சியாளர்களின் பக்கத்தில் நோக்கினால் “நாங்கள் சம்பாதித்தால் நாங்கள் சாப்பிடுவோம்” என நிலவிய எண்ணக்கரு நடைமுறையில் உண்மையல்ல என்பது கடந்த காலத்தில் உறுதிசெய்யப்பட்டது. நாட்டில் ஊழலற்ற கொள்கைகள் நிலவுமாயின் , நாட்டின் வர்த்தக நாமம் சிறந்ததெனில் உலகம் ஏற்றுக்கொண்ட போட்டித்தன்மைமிக்க முதலீட்டாளர்கள் வருவார்கள்.

தம்மை புத்திஜீவிகள் எனக் கூறிக்கொள்கின்ற ஒருசிலர் தேசிய மக்கள் சக்தி முதலீடுகளுக்கு எதிரானதென கூறிவருகிறார்கள். முதலீடுகள் என அவர்கள் அழைக்கின்றவற்றினால் மக்களுக்கு, நாட்டுக்கு, இந்நாட்டின் தொழில்முயற்சியாளர்களுக்கு பெறுபேறுகள் கிடைக்காவிட்டால் அவற்றினால் கிடைக்கின்ற பயன் என்ன? என நாங்கள் அவர்களிடம் கேட்கிறோம். இவற்றை முதலீடுகள் என அழைப்பதில்லை. விற்றுத் தின்னுதல் அல்லது கையிலுள்ள பணத்தைச் செலவிட்டு மாடு மேய்த்தல் என்றே இதனைக் கூறுவார்கள். நாட்டுக்கு முதலீடு வருமாயின் அதன் நன்மைகள் மக்களுக்கு கிடைக்கவேண்டும். இந்த மின் சக்தி சட்டமூலம் ஊடாக அத்தகையதொன்று இடம்பெறுவதில்லை. ஒருசிலர் தமது செல்வத்தை அதிகரித்துக் கொள்ளக்கூடிய முறையியலே இதன் மூலமாக வகுக்கப்பட்டுள்ளது. இந்த மின் சக்தி சட்டத்தைப் போலவே “ஆண்டி அரசனான விதம்” எனும் நூலை வாசித்துப் பாருங்கள் என நான் திறந்த அழைப்பு விடுக்கிறேன். ஏறக்குறைய நூறு வருடங்களாக ஒரு கும்பலால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நன்மைகளை அவர்கள் பெற்றுக்கொண்ட விதத்திலிருந்து உங்களுக்கு தெளிவாகும். அந்த செயற்பாங்கினையே நாங்கள் எதிர்க்கிறோம். மிகவும் சிறியதொரு கும்பலின் கைகளை நன்மைகள் சென்றடைய இடமளிப்பதே இந்த சட்டத்தினால் எதிர்பார்க்கப்படுகின்றது.

மின் சக்தி துறையை விருத்திசெய்ய முதலீடுகளைக் கொண்டுவர வேண்டுமாயின் செய்யவேண்டியது தற்போது இருக்கின்றவற்றை விற்றுத் தீர்ப்பதல்ல. புதிய விருத்திகளுக்கான முதலீடுகளை அழைப்பிப்பதாகும். கைக்கெட்டியதூரத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு அவர்களின் அன்பர்கள் சிலருக்காக கொண்டுவருகின்ற இந்த சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி மாத்திரமன்றி ஒட்டுமொத்த மக்களும் கவனஞ்செலுத்த வேண்டும். வலுச்சக்தி சம்பந்தமாக மக்கள் கொண்டுள்ள உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மக்கள் முன்னணிக்கு வரவேண்டும். இதனை ஒரு கட்சியின் வேலையாக கருதக்கூடாது.

ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளி்கையில்

கேள்வி :

நீங்கள் தெளிவுபடுத்துகின்ற விதத்தில் இந்த சட்டம் அவ்வளவு பயங்கரமானதெனில் அது தொடர்பில் சனாதிபதியால் இடையீடு செய்யமுடியாதா? அதைப்போலவே நீதிமன்றத்திற்கு சென்றிருப்பின் இதனை நிறைவேற்றிக்கொள்ளும் இயலுமை நிலவுகின்றதா?

பதில் :

சனாதிபதி அறிந்திராதவகையில், அவருடைய ஆதரவின்றி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வாறான சட்டமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர மாட்டார். அமைச்சரவையில் அங்கீகரித்துக்கொள்ளவும் முடியாது. அத்தகைய அமைச்சரவை முன்மொழிவினை சனாதிபதி விரும்பாவிட்டால் நீக்கிவிடுவார். அதைப்போலவே இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள பொதுஜன ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கட்டாயமாக அவசியமாகும். ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருசில உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்கள். நாங்கள் இங்கு கூறுவது மறுசீரமைப்பிற்கு எதிராகவல்ல. தேசிய அவசியப்பாடு பற்றிக் கூறினாலும் இதன் பின்னால் பணம் சுழன்றுகொண்டிருக்கின்றது. நீதிமன்றம் அளிக்கின்ற தீர்ப்பு கட்டாயமாக பாராளுமன்றத்தை பாதிக்கும். நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளுக்குக்கூட அகப்படாமல் பயணித்து நிறைவேற்றிக்கொண்ட விதத்தை நாங்கள் கடந்த காலத்தில் கண்டோம். அவ்வாறான சந்தேகம் நிலவுகின்றபோதுகூட இதற்காக செல்லக்கூடிய அனைத்து இடங்களுக்கும் நாங்கள் செல்வோம். இது இறுதியாக நிலவுவது மக்களின் தீர்ப்பளிப்பின் மத்தியிலாகும்.