-Colombo, February 08, 2024-
அனர்த்த நிவாரண வேலைத் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து தேசிய மக்கள் சக்தியிடம் கலந்துரையாட அபிவிருத்தித்துறை அதிகாரிகள் பெப். 08 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியஆராச்சி உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
மேலும்,
-> இயற்கைப் பேரிடரின் போது இதுவரைகாலம் மக்கள் பெற்று வந்த அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை குறைக்க அரசாங்கத்தின் முயற்சி
-> பேரிடர் கால நிவாரண சேவை அதிகாரிகள் உட்பட 117 அதிகாரிகள் பணி நீக்கம்
-> பேரிடர் நிவாரண சேவைகளின் தேசிய செயல்முறை வீழ்ச்சியடையும் ஆபத்துக்கள்
அடங்கலாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தேசிய மக்கள் சக்தியிடம் தெரியப்படுத்தினர்.