Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வி மலையகம் 200 – கண்டி ரணிலின் பொருளாதார மாற்ற சட்ட முன்மொழிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் தேசிய மக்கள் சக்தி… “எமது நாட்டின் இளைஞர்களின் கைகளில் அரசியல் சுக்கான் கைளிக்கப்படவேண்டும்.” -தேசிய மக்கள் சக்தியியன் தலைவர் அநுர குமார திசாநாயக்க- “ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றத்திற்காக சவால்களுக்கு மத்தியில் மண்டியிடாத தலைமைத்துவமொன்று எமக்குத் தேவை…” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க-
X

புதிய தேசிய மறுமலர்ச்சிக்கான பயணத்தை ஆரம்பிக்க புத்தாண்டினை புதிய வலிமையாகக்கொள்வோம்!

புத்தாண்டுச் செய்தி

(-Colombo, April 13, 2024-)

Sinhala-Hindu-New-Year

இலங்கை சிங்கள மற்றும் தமிழ் மக்களால் புத்தாண்டின் பிறப்பினை நிமித்தமாகக்கொண்டு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்ற பாரிய கலாசார வைபவம் இத்தடவை 13 ஆந் திகதி இடம்பெறுகின்றது. மரபுரீதியான நம்பிக்கைக்கிணங்க சூரியன் மீன ராசியில் இருந்து மேட ராசிக்கு இடம் மாறுவதால் வட்டமொன்று நிறைவடைவதன்பேரிலான புதிய வருடப் பிறப்பினைக் கொண்டாட ஒன்றுசேருமாறு சிங்கள தமிழ் மக்களுக்கு நாங்கள் வாழ்த்துக்களை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

புது வருட வைபவமானது வீட்டிலுள்ள பொருட்கள் தொடக்கம் மக்கள் வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்துப் பிரிவுகளிலும் புதியதாக அமைதல் மற்றும் புதுப்பித்துக்கொள்ளலுடன் பின்னிப்பிணைந்துள்ளது மாத்திரமன்றி அது மீண்டும் மக்கள் வாழ்க்கைமீது சாதகமான தாக்கமேற்படுத்துகின்ற சமூக நிகழ்வாகவும் அமைகின்றது. சிலகாலமாக பேணிவந்த அநாவசியமானவற்றை நீக்கிவிட்டு வீடுவாசல்களைப்போன்றே வாழ்க்கையையும் புதுத்தன்மையால் நிரப்பிக்கொள்ள வாய்ப்புவசதிகளை அமைத்துக்கொடுக்கிறது. அந்த புதுத்தன்மையில் இற்றைவரை தாம் வந்த பயணத்தை புதியகோணத்தில் சிந்தித்துப் பார்க்கச் செய்விக்கின்ற அகத்தூண்டுதலும் உள்ளடங்குகின்றது.
நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்குள் மக்களில் பெரும்பாலானோருக்கு புதிய வருடத்தை தமது எதிர்பார்ப்பிற்கிணங்க கோலாகலமாக கொண்டாடுதல் பற்றி சிந்தித்துப் பார்ப்பதுகூட வேதனைமிக்க அனுபவமாக அமையக்கூடும். ஒரு வட்டத்தை நிறைவுசெய்ததன் மூலமாக புத்தாண்டு பிறந்தபோதிலும் நிலவிய மற்றும் நிலவிக்கொண்டிருக்கின்ற ஆட்சிகளால் 76 வருடகாலமாக இலங்கை சமூகத்தை மக்களின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்குகின்ற ஓரே மூர்க்கத்தனமாக வட்டத்திற்குள் பயணிக்கச் செய்வித்ததன் காரணத்தினாலேயே அவ்வாறு நேர்ந்துள்ளது. கிடைக்கின்ற முதலாவது தருணத்திலேயே நிலவுகின்ற மூர்க்கத்தனமான ஊழல்மிக்க சமூக பொருளாதார அரசியல் வட்டத்திலிருந்து நீங்கி வங்குரோத்து நிலையுற்றுள்ள நாட்டை அதிலிருந்து மீட்டெடுக்கின்றதும் முன்னேற்றமான மற்றும் நியாயமான சமூகநிலைக்கு உயர்த்திவைக்கின்றதுமான மக்கள்நேயமுள்ள ஆட்சியை தெரிவுசெய்வதற்காக பிறந்த புத்தாண்டு வாய்ப்புவசதிகளை திறந்துவைத்துள்ளது. அவ்வாறான நிலைமையில் மாத்திரமே புத்தாண்டில் ஏற்படுத்திக்கொள்கின்ற பிரார்த்தனைகள் உண்மையாகவே ஈடேறும்.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கின் அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்கள் பேதங்களை ஒழித்துக்கட்டி அத்தகைய சுபமூகூர்த்தம் பிறக்கும்வரையே மக்கள்நேயமுள்ள ஆட்சியின் அவசியப்பாட்டுக்காக அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான வெற்றியை பெற்றுக்கொடுக்கின்ற புதிய தேசிய மறுமலர்ச்சிக்கான வரலாற்றுப் பயணத்தை தொடங்க புத்தாண்டு புதிய வலிமையாக அமையட்டுமாக என நாங்கள் நல்வாழ்த்துக் கூறுகிறோம்.

அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.04.13