Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் மட்ட தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

(-2025.06.19 – China-)

Tilwin Silva with Xi Taifeng

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இந்நாட்களில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா அவர்களை உள்ளிட்ட குழுவினர் பீஜிங் நகரத்தில் பிரதான மக்கள் மண்டபத்தில் சீன கம்யூனிஸ் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள், நிலையியற் குழு உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புப் பிரிவின் பிரதானி தோழர் ஷீ தெய்ஃபென் உள்ளிட்ட மேல் மட்டத் தலைவர்களை சந்தித்தனர்.

மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால உறவு பற்றி நினைவுகூர்ந்த தோழர் ஷீ தெய்ஃபென், கட்சித் தொண்டர்களின் அரசியல் கோட்பாடு சார்ந்த அறிவினை தொடர்ச்சியாக விருத்தி செய்வதில் உள்ள முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், சீனா எந்தவொரு நேரத்திலும் தனது அனுபவத்தை மக்கள் விடுதலை முன்னணியுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tilwin Silva and the team at Great Hall of the People in Beijing

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இணங்க தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தாம் தயார் என்றும், அதுதொடர்பான சில புரிந்துணர்வுகள் இந்த வருடத்தின் தொடக்கத்தில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடுன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலும் நிலவுகின்ற நட்புறவு இந்த சுற்றுப்பயணத்தின் ஊடாக இன்னொருபடி விரிவடைந்தது என்று தோழர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

A group of high-ranking leaders of the Communist Party of China

அத்துடன், சீனாவின் ஜஜியான் மாநிலத்திலும் குய்ஷு மாநிலத்திலும் உள்ள ஊர்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் அந்த ஊர்களை முன்னேற்றுவதற்கு மேற்கொண்ட செயன்முறைகள் பற்றி சிறந்த புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்ள முடிந்ததென்றும் இலங்கையை அபிவிருத்தியடைச் செய்யும் வேலைத்திட்டத்தை வெற்றிமிக்கதாக்கிட இந்த அனுபவங்கள் உதவி புரியும் என்றும் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இறப்பர் – அரிசி ஒப்பந்தம் முதற்கொண்டு வெவ்வேறு முறைகளின் மூலம் சீனா இலங்கைக்கு உதவி புரிந்து வருவதாகவும் நிகழ்காலத்திலும் இலங்கைப் பாடசாலை பிள்ளைகளுக்கு சீறுடைத் துணிகளை வழங்கியமை குறித்து வரவேற்று கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா, 2026 ஆம் ஆண்டிலும் இவ்வாறு சீறுடைத் துணிகள் இலங்கையின் பாடசாலைகளுக்கு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

Tilwin Silva gifting Xi Taifeng

இந்த சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் பிரதி அமைச்சர் தோழர் சுன் ஹெய்யான் உள்ளிட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் மட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். ஜெகதீஸ்வரன், மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய விஜேசிங்க உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

JVP team at the Great Hall of the People in Beijing