(-Colombo, October 10, 2024-) முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை (PTA)மேலும் வலுப்படுத்த இரு தரப்பும் இணக்கம் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) இன்று(10)முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உயர்ஸ்தானிகர் எலியாஸ் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மத் யூனுஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தியும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது. இங்கு ஜனாதிபதியும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரும் இரு […]
(-Colombo, October 10, 2024-)
முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை (PTA)மேலும் வலுப்படுத்த இரு தரப்பும் இணக்கம்
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) இன்று(10)முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உயர்ஸ்தானிகர் எலியாஸ் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மத் யூனுஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தியும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.
இங்கு ஜனாதிபதியும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரும் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடினர்.
பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி திசாநாயக்க ஆகியோர் பங்களாதேஷில் இலங்கையின் முதலீடு மற்றும் அங்கு பணிபுரியும் பெருமளவான இலங்கை பணியாளர்கள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடினர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு வலியுறுத் தப்பட்டது.
அத்துடன், வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் தற்போதுள்ள முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை (PTA) வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் உறுதியளித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
(-Colombo, October 10, 2024-) இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி (Major General (Retd) Faheem Ul Aziz HI (M) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், […]
(-Colombo, October 10, 2024-)
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி (Major General (Retd) Faheem Ul Aziz HI (M) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தான் ஜனாதிபதி அஸீப் அலி சர்தாரியின் விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் “இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருங்கிய உறவை நான் பெரிதும் பாராட்டுகிறேன். ஜனநாயகம், பன்மைத்துவம், சட்டத்தின் ஆட்சி, பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் எமது ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்.
இது நம் இரு நாடுகளுக்கும் நல்ல நிகழ்வுகளை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று பாகிஸ்தான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆகியோர் கலந்துரையாடியதுடன், பாதுகாப்புத் துறையில் பாகிஸ்தானின் ஆதரவு இலங்கைக்கு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.
கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. தற்போது, மருத்துவக் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவதுடன், எதிர்காலத்தில் விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான வாய்ப்புகள் வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கிராமிய வறுமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையின் கால்நடைத் துறையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வலுவான உறவு இந்தச் சந்திப்பில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் அந்த உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
(-Colombo, October 10, 2024-) இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தேயிலை ஏற்றுமதியை ஊக்குவித்தல் தொடர்பில் விசேட கவனம் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani)இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸின் வாழ்த்துச் செய்தியை, தூதுவர் […]
(-Colombo, October 10, 2024-)
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தேயிலை ஏற்றுமதியை ஊக்குவித்தல் தொடர்பில் விசேட கவனம்
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani)இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸின் வாழ்த்துச் செய்தியை, தூதுவர் அல்கஹ்தானி ஜனாதிபதியிடம் கையளித்தார். பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை, சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் நீண்டகால ஆதரவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு தூதுவர் அல்கதானி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கை தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் தூதுவரின் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான தேசிய கொள்கையொன்றை வகுக்க அரசாங்கத்தை ஊக்குவித்த சவூதி அரேபிய தூதுவர், சவூதி அரேபிய முதலீடுகளை இந்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு இலங்கையில் சாதகமான சூழலை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இலங்கையில் ஏற்கனவே சவுதி அரேபிய முதலீடுகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் எதிர்கால ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்றும் தூதுவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும் என தூதுவர் அல்கஹ்தானி குறிப்பிட்டார்.
(-Colombo, October 10, 2024-) இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
(-Colombo, October 10, 2024-)
இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
(-Colombo, October 09, 2024-) வருமானம் ஈட்டல் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டமிடல் குறித்து அவதானம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தின் விரிவான பொருளாதார மற்றும் ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்புகளுக்கு ஏற்ப இந்த இரண்டு திணைக்களங்களிலும் வருமானம் ஈட்டல் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. வருமான […]
(-Colombo, October 09, 2024-)
வருமானம் ஈட்டல் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டமிடல் குறித்து அவதானம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தின் விரிவான பொருளாதார மற்றும் ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்புகளுக்கு ஏற்ப இந்த இரண்டு திணைக்களங்களிலும் வருமானம் ஈட்டல் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
வருமான முகாமைத்துவம் மற்றும் வரி அறவீடுகளில் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இரு திணைக்கள அதிகாரிகளும், இதன்போது ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். இந்தப் பிரச்சினை களை திறம்பட கையாள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கும் சுங்கத் திணைக்களத்திற்கும் இடையில் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் இங்கு வலியுறுத்தப்பட்டது. வரிச் சட்டங்களின் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த அமுலாக்கத்தை உறுதி செய்தல், வரி ஏய்ப்பைத் தடுப்பது மற்றும் வருமான சேகரிப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை சுங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.பி.எஸ்.சி நோனிஸ், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகங்களான, எச்.டபிள்யூ.எஸ்.பி கருணாரத்ன, சி.எஸ்.ஏ.சந்திரசேகர, டபிள்யூ.எஸ்.ஐ. சில்வா, எஸ். பி. அருக்கொட, ஜே. எம். எம். ஜி. விஜேரத்ன பண்டார, சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் ஏ. டபிள்யூ. எல்.சி. வீரகோன், பிரதம நிதி அதிகாரி எம். ஆர்.ஜி.ஏ.பி. முதுகுட உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எஸ். சந்திரசேகர, பிரதி ஆணையாளர் நாயகங்களான பி.கே.எஸ். சாந்த, ஜே.ஏ.டி.டி.பி.கே சிறிவர்தன, ஜே.டி. ரணசிங்க, டி.எம்.என்.எஸ்.பி திசாநாயக்க, எச்.எச்.எஸ்.சமந்த குமார, சிரேஷ்ட ஆணையாளர் டி.எம்.எஸ்.தென்னகோன் ஆகியோர் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
(-Colombo, October 09, 2024-) வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்துவதில் கவனம். இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டெம் (Trinh Thi Tam) இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனதும், வியட்நாம் அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தி முன்னோக்கிச் செல்வதற்கு தனது சாதகமான […]
(-Colombo, October 09, 2024-)
வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்துவதில் கவனம்.
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டெம் (Trinh Thi Tam) இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனதும், வியட்நாம் அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தி முன்னோக்கிச் செல்வதற்கு தனது சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) மற்றும் வர்த்தகத் துறையில் வியட்நாம் அடைந்துள்ள வெற்றிகள் குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையில் அந்த துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு வியட்நாமின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பௌத்த மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையை வியட்நாம் சுற்றுலாப் பயணிகளின் முன்னணித் தளமாக மாற்றுவதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்து கண்டறிவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தூதுவர் உறுதியளித்தார்.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் இரு நாடுகளின் அர்ப்பணிப்பு தொடர்பாகவும் இந்த சந்திப்பில் மேலும் வலியுறுத்தப்பட்டது.