Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவி

(-Colombo, October 08, 2024-) இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு […]

(-Colombo, October 08, 2024-)

USA Embassador Julie Chung And The Team Meets President Secretary

இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியினையும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்தார்.

Julie Chung And President Secratary

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி முகவர் நிலையத்தின்(USAID) ஊடாக நிதி உதவிகளை வழங்கத் தயாரெனவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார். ஊழல் மோசடிகளை மட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அமெரிக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார்.

சிறந்த அரச நிருவாகத்திற்காக வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் வழங்குவதோடு, பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்தில் அதற்கான உதவிகளை வழங்கவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.

USA Embassador Julie Chung Chat With The President Secretary

மீள் புதுபிக்கத்தக்க வலுசக்தி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குதல் மற்றும் கிராமங்களின் வறுமையை ஒழிப்பதற்காக புதிய ஜனாதிபதியால் முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமெரிக்க தூதுவர் உறுதியளித்தார்.

தற்போது செயற்படுத்தப்படும் கிராமிய பாடசாலைகளின் பகல் உணவு வேலைத்திட்டத்தை நகர பாடசாலைகளிலும் வழங்க உதவிகளை வழங்கவிருப்பதாகவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

Julie Chung Handover The Documents To President Secratary

இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஜஸ்டின் டிவென்ஷோ (Justin Divenanzo) மற்றும் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோபர் குஷ் (Christopher Gooch) உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Show More

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு – பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவி

(-Colombo, October 07, 2024-) இலங்கையின் சுற்றுலா,வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோவை (Takafumi Kadono) இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இதுவரையில் முன்னெடுக்கபட்டுவரும் அனைத்து ஒப்பந்தங்களும் அவ்வண்ணமே முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான […]

(-Colombo, October 07, 2024-)

இலங்கையின் சுற்றுலா,வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோவை (Takafumi Kadono) இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இதுவரையில் முன்னெடுக்கபட்டுவரும் அனைத்து ஒப்பந்தங்களும் அவ்வண்ணமே முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோ (Takafumi Kadono) தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்காக சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு அவசியமான வசதிகளுக்கான நிதி உதவிகளை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

அதன்படி சுற்றுலாத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை மேம்படுத்த உதவிகளை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோ இணக்கம் தெரிவித்தார்.

அதேபோல் இலங்கையில் வலுவச்தி மற்றும் சிறு தொழில் முயற்சிகளை மேம்படுத்த ​தேவையான நிதி உதவிகளை வழங்கவும், நிதித் துறையின் முன்னேற்றத்துக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோ (Takafumi Kadono), இலங்கைக்கான முன்னெடுப்புக்களின் பிரதானி சொல்பொத் மெம்பேடோவா (Cholpon Mambetova), நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பணிப்பாளர் நாயகம் டீ.ஏ.பி.அபேசேகர, பணிப்பாளர் உதேனி உடுகஹபத்துவ, சிரேஷ்ட பொருளாதார அதிகாரிகளான ஹஷிதா விக்ரமசிங்க மற்றும் லக்‌ஷினி பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Show More

வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஜனாதிபதி ஆசி பெற்றார்

(-Colombo, October 05, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) பிற்பகல் அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெற்றார். அநுராதபுரத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி முதலில் அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்தி ஆசி பெற்றுக்கொண்டதோடு, அவரிடம் நலம் விசாரித்தார். அதனையடுத்து உடமலுவ விகாரைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அடஸ்தானாதிபதி தலைமையிலான மகா சங்கத்தினரால் செத் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கப்பட்டது. அநுராதபுரம் லங்காராம விகாராதிபதி […]

(-Colombo, October 05, 2024-)

President Worship At the Sri Maha Bodi

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) பிற்பகல் அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெற்றார்.

President At The Sri Maha Bodhiya

அநுராதபுரத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி முதலில் அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்தி ஆசி பெற்றுக்கொண்டதோடு, அவரிடம் நலம் விசாரித்தார்.

President Chat with the Chief Incumbent of the Atamasthana

அதனையடுத்து உடமலுவ விகாரைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அடஸ்தானாதிபதி தலைமையிலான மகா சங்கத்தினரால் செத் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கப்பட்டது.

President At The Pirith Sajjayana At The Sri Maha Bodhi

அநுராதபுரம் லங்காராம விகாராதிபதி ரலபனாவே தம்மஜோதி நாயக்க தேரர், ருவன்வெலி, சேதவனாராம அதிபதி வண. ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க தேரர், தூபாராம விகாராதிபதி வண. கஹகல்லே ஞானிந்த தேரர், மிரிச்சவெட்டிய விகாராதிபதி வெலிஹேனே சோபித தேரர், அபயகிரி விகாராதிபதி கலாநிதி வண. கலஞ்சியே ரத்னசிறி தேரர், வரலாற்று சிறப்புமிக்க இசுறுமுனி விகாராதிபதி வண. மதவ சுமங்ல தேரர், அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி வண. நூகேதென்னே பஞ்ஞானந்த தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

President Blessed By The Maha Sangha At Sri Maha Bodhi

இதன்போது உரையாற்றிய அட்டமஸ்தானாதிபதி வண.பல்லேகம ஹேமரதன தேரர், நாடு,தேசம், மதம் என்பவற்றை உயிரையும் இரண்டாம் பட்சமாக கருதி பாதுகாக்க வேண்டுமெனவும், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதியின் மீது சாட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அதேபோல், வடமத்திய மாகாணத்திலிருந்து உருவான அரச தலைவர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கைவிடமுடியாத பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தற்போது நாட்டிலிருக்கும் அரசியல் சேற்றுக் குழியானது இந்நாட்டின் சுய நினைவுடன் கூடிய அறிவாளிகளுக்கு உகந்ததாக இல்லையென சுட்டிக்காட்டிய அவர், அந்த நிலைக்கு மாறாக நல்லதொரு அரசியல் கலாசாராத்தை நாட்டுக்குள் உருவாக்கும் இயலுமை ஜனாதிபதிக்கு உள்ளதென நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டுக்கு தேசிய கொள்கையொன்று அவசியம் என்றும், புதிய பாராளுமன்றத்தில் எம்.பிக்களின் உதவிகளை பெற்றுக்கொண்டு நீண்ட காலத்துக்கு பொறுத்தமான சிறந்ததொரு தேசிய கொள்கையை உருவாக்க முடியுமாயின் அது சிறப்புக்குரியதாக அமையுமெனவும் அடமஸ்தானாதிபதி சுட்டிக்காட்டினார்.

President Blessed By the Chief Incumbent of the Ruwanwalisaya

அதனையடுத்து ருவன்வெலி மகா சாயவுக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ருவன்வெலி சைத்தியாதிகாரி வண. ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

President Gifted a Stupa By the Chief Incumbent of the Ruwanwalisaya

பின்னர் ருவன்வெலி சைத்தியவிற்கு அருகில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பங்கேற்ற ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினர்.

President Worship At The Ruwanwalisaya

வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச,மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, அகில இலங்கை விவசாய சங்கத்தின் உப தலைவர் சுசந்த நவரத்ன , பேராசிரியர் சேன நாணயக்கார உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

President Worship The Ruwanwalisaya
Show More

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி

(-Colombo, October 05, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். அமரபுர பீடத்தின் செயலாளரும் இதன்போது கலந்துகொண்டிருந்ததோடு, அவர்களால் செத் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டது.

(-Colombo, October 05, 2024-)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

அமரபுர பீடத்தின் செயலாளரும் இதன்போது கலந்துகொண்டிருந்ததோடு, அவர்களால் செத் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டது.

Show More

ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரை சந்தித்து ஜனாதிபதி ஆசி பெற்றார்

(-Colombo, October 05, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) முற்பகல் நாராஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் ராமண்ய பீடத்திற்கு சென்று இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. மகுலேவே விமலநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுகொண்டார். அநுநாயக்க தேரர்கள், பதிவாளர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர் இதன்போது கலந்துகொண்டிருந்ததோடு, அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். அதனையடுத்து ஜனாதிபதி தற்போதைய பொருளாதார அரசியல் நிலைமைகள் குறித்து மகா சங்கத்தினருக்கு எடுத்துக்கூறும் வகையில் சிறிது […]

(-Colombo, October 05, 2024-)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) முற்பகல் நாராஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் ராமண்ய பீடத்திற்கு சென்று இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. மகுலேவே விமலநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுகொண்டார்.

அநுநாயக்க தேரர்கள், பதிவாளர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர் இதன்போது கலந்துகொண்டிருந்ததோடு, அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

அதனையடுத்து ஜனாதிபதி தற்போதைய பொருளாதார அரசியல் நிலைமைகள் குறித்து மகா சங்கத்தினருக்கு எடுத்துக்கூறும் வகையில் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

தூதுவர்களை நியமிக்கும்போது, கற்ற, அறிவார்ந்த, வௌிநாடுகளில் இந்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பொறுத்தமானவர்களை நியமிக்குமாறும், ஆளுநர்களை நியமிக்கும்போது அரசியல் நோக்களுங்காக அன்றி பொறுப்பானவர்களை நியமிக்குமாறும் மகா சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

அதேபோல் அமைச்சுக்களின் செயலாளர் பதவிக்கும் பொறுத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டவாறு தீர்மானங்களை எடுப்பதே தமது நோக்கமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் உரிய மறுசீரமைப்புக்களை செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் மீது வைத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மகாசங்கத்தினர் ஆசி என்றும் ஜனாதிபதிக்கு கிட்டும் என வண. மகுலேவ விமலநாயக்க தேரர் தெரிவித்தார்.

Show More

பாதுகாப்பு படை பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்பு.

(-Colombo, October 04, 2024-) புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து […]

(-Colombo, October 04, 2024-)

புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்படி பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சினேகபூர்வமாக கலந்துரையாடினர்.

இதன்போது நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Show More