(-2025.06.13 – German-) – ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கையை சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்ததாகவும், அன்று இந்நாட்டின் மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகளை எந்த வகையிலும் சிதைக்க இடமளிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். நேற்று (13) பிற்பகல் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை மக்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜெர்மனியில் […]
(-2025.06.13 – German-)
– ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கையை சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்ததாகவும், அன்று இந்நாட்டின் மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகளை எந்த வகையிலும் சிதைக்க இடமளிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நேற்று (13) பிற்பகல் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை மக்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் இதில் கலந்து கொண்டதுடன், அவர்கள் ஜனாதிபதியை மிகவும் அமோகமாக வரவேற்றனர்.
இலங்கையில் தற்போது புதிய அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக இங்கு தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று, முதல் தடவையாக, மக்களின் விருப்பமும் ஆட்சியாளரின் விருப்பமும் ஒன்றாக உள்ள அரசாங்கம் உருவாகியுள்ளதாகவும், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார்.
முற்போக்கான சிறந்த அரசியல் பணிகளை முன்னெடுத்துச் செல்லும்போது, ஏனைய எதிர் குழுக்கள், தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தப் பணிக்கு எதிராக ஒன்றுபடுவார்கள் என்று தெரிவித்த ஜனாதிபதி, அவர்கள் அவ்வாறு இணைவது நாட்டுக்காக அன்றி தங்களின் ஊழல், மோசடி மற்றும் குற்றங்களை மறைப்பதற்காகவே ஆகும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெற்றிக்கு ஜெர்மனியில் வாழும் இலங்கையர்கள் வழங்கிய பங்களிப்பை இங்கு நன்றியுடன் நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப மென்மேலும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை மக்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
நான் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் ஜெர்மனிக்கு வருகை தந்து, இலங்கையர்களை இவ்வாறு சந்தித்துள்ளேன். அதில் பல முகங்களை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், நமது நாடு பயணிக்கும் அழிவிலிருந்து மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் நாட்டு மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அந்த அதிகாரத்தைப் பெறுவதற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் பெரும் சக்தியாக இருந்தனர். எனவே, முதலில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நாம் பெற்ற இந்த வெற்றி என்ன மாதிரியான ஒரு வெற்றி? நீண்ட காலமாக நமது நாடு சென்று கொண்டிருந்த பொருளாதாரப் பாதை மிகவும் அழிவுகரமானது.எனவே, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். மேலும், மோசடி மற்றும் ஊழல் இல்லாத அரசாங்கம் இருக்க வேண்டும், மோசடி மற்றும் ஊழலைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்.
மேலும், நாட்டில் அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சி சமமாக நிலைநாட்டப்பட வேண்டும் என்ற ஒரு கருத்து இருந்தது. அது மட்டுமல்லாமல், நீண்ட காலமாக அரசியல் தான் நமது நாட்டைப் பிரித்தது. எனவே, இந்த பிளவுபட்ட நாட்டிற்கு பதிலாக தேசிய ஒற்றுமையை உருவாக்கும் விருப்பம் மக்களிடையே இருந்தது.இவ்வாறு, மக்கள் பொதுவாக தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக அன்றி, நாட்டினதும் மக்களினதும் பொதுவான அபிலாஷைகளுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்கினர்.இந்த நாடு இதைவிட சிறந்த ஒரு தேசமாக மாற்றப்பட வேண்டும் என்ற பொதுவான விருப்பத்துடன், இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
இலங்கையில் முதன்முறையாக, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள், சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரின் ஆசிர்வாதத்துடனும் விருப்பத்துடனும் ஒரு அரசாங்கத்தை அமைத்தனர். இதற்கு முன்னர், அந்தந்தப் பிரதேசங்களுக்கு ஏற்ப தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இப்போது அவை அனைத்தும் முடிந்துவிட்டது.
அது மட்டுமல்லாமல்,பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, இலங்கை வரலாற்றில் ஒரு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் பணிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு இப்போது நிறைவடைந்துள்ளன. அதிகாரத்தை வழங்கும் பகுதி நிறைவடைந்துள்ளது. இப்போது, ஆட்சியாளர்களாக நமக்கு ஒரு பொறுப்பு உள்ளதைப் போன்று, நாம் எவ்வாறு முன்னோக்கிச் செல்வது என்ற பொறுப்பும் மக்களாகிய நமக்கு உள்ளது.
உங்களுக்குத் தெரியும், நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது, எங்கள் நாடு உத்தியோபூர்வமாக வங்குரோத்தான நிலையில் இருந்தது. எனவே, கடனை திருப்பிச் செலுத்த முடியாத நாடாக, எங்களுக்கு கடன்களை வழங்கிய நாடுகளுடன் ஒரு இணக்கப்பாட்டை எட்ட வேண்டிய சவால் ஏற்பட்டிருந்தது. வங்குரோத்தான ஒரு நாட்டுக்கு புதிய பொருளாதார பயணம் ஒன்றைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது.
எனவே, முதலில் எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியிருந்தது. அதன்படி, கடந்த வருடம் டிசம்பர் 15 ஆம் திகதி கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தோம். அது ஒரு மிக முக்கியமான பொருளாதார திருப்புமுனையாகும். அது நடக்காவிடின், இன்று நம் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கக்கூட முடியாது.
அதன் பிறகு, இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களை மீண்டும் தொடங்குவதே எமக்கு சவாலாக இருந்தது. அந்த நேரத்தில், கடவத்தை-மிரிகம அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், கட்டுநாயக்க விமான நிலைய நிர்மானப் பணிகளும் ஸ்தம்பித்திருந்தன. அவ்வாறு, சீன அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டிருந்த 11 திட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சீனாவிற்கான விஜயத்தின் போது, சீன ஜனாதிபதி மற்றும் ஏனைய பிரதானிகளுடன் இது குறித்து நாம் கலந்துரையாடினோம்.
அதன்படி, நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான திட்டங்களை மீண்டும் தொடங்க முடிந்ததுடன், மேலும் ஏராளமான புதிய திட்டங்களை ஆரம்பிக்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஒரு இடத்தில் தடைப்பட்டிருந்த நாடு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அன்று முதலீட்டாளர்கள் நம் நாட்டைப் கண்டுகொள்ளவே இல்லை. இருப்பினும், இன்று அந்தத் திட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இது ஒரு முக்கியமான திருப்புமுனையாகும்.
மேலும், வலுவான சர்வதேச உறவுகளை உருவாக்குவது எங்களுக்கு இருந்த மற்றொரு சவாலாகும். இந்த நூற்றாண்டில், உலகில் எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சந்தை வாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, உலக நாடுகளுடன் வலுவான மற்றும் நிலையான வெளிநாட்டு உறவுகளை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அந்த வகையில் நாம் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளோம். நமது அரசாங்கம் அமைக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திற்குள், நமக்கு அருகில் உள்ள நாடான இந்தியாவின் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தார். மேலும், சீனாவுடனான உறவுகளை நாம் வலுப்படுத்தினோம்.
ஏனைய நாடுகளுடனான எமது உறவுகளையும் நாம் வலுப்படுத்தி வருகிறோம். நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை வெற்றிகொள்ள வேண்டுமாயின், நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் சிறந்த வெளிநாட்டு உறவுகள் எமக்கு அவசியம். மேலும், அரச வருமானத்தை நாம் ஈட்ட வேண்டும். 2022 ஆம் ஆண்டில், உலகிலேயே மிகக் குறைந்த அரச வருமானத்தைக் கொண்ட நாடாக நமது நாடு மாறியது. எமது வருமானம் தேசிய உற்பத்தியில் சுமார் 7% ஆக குறைந்தது.
இந்த ஆண்டு தேசிய உற்பத்தியில் 15.1% சதவீதமாக எங்கள் வருமானத்தை அதிகரிக்கும் சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இது 2022 ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக வருமானமாகும். திறைசேரிக்கு நிதியை ஈட்டாமல், முதலீடு செய்யவோ, செயற்திறன் மிக்க அரச சேவைகளை வழங்கவோ, மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கவோ முடியாது. எனவே, நாம் மிக முக்கிய வருமான இலக்குகளை திட்டமிட்டுள்ளோம்.
அரசு, வருமானம் பெற்றுக்கொள்ளும் மூன்று முக்கிய வழிகள் உள்ளன. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம். இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் நாங்கள் மாதந்தோறும் இலக்குகளை வழங்கியுள்ளோம். அவற்றின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும்போது, அது குறித்து நாம் மகிழ்ச்சியடையும் நிலையே உள்ளது.
மேலும், நமது நாட்டில் வரி குறித்து ஒரு சிக்கல் இருந்தது. உழைக்கும் போது செலுத்தும் வரி, கணிசமான அளவு அதிகரித்திருந்தன.
சுமார், ஒரு இலட்சம் ரூபா உழைப்பவர்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்பட்டதுடன், அதே நேரத்தில் ஒன்றரை இலட்சம் ரூபா உழைப்பவர்களுக்கு 72% வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த முறையில், சாதாரண மக்களுக்கு அதிக வரி விலக்கு அளித்தோம். ஆனால் பெறுமதி சேர் வரி இன்னும் அதிகமாகவே உள்ளது.
எமக்கு ஒரு இலக்கு உள்ளது. எமது காலத்திற்குள் இந்த 18% வற் வரியைக் குறைப்பதற்கு. எனவே, வரி வலையமைப்பை நாம் உயர்த்தியுள்ளோம். அதற்காக நாம் டிஜிட்டல் மயமாக்கலை அதிகளவில் செயல்படுத்தி வருகிறோம். அதன்படி, இந்த வரிகளை முறையாக வசூலிப்பதற்கு தேவையான வழிமுறையை நாங்கள் தயாரித்து வருகிறோம். மேலும் பணப்பரிமாற்றத்தை படிப்படியாக நீக்கி, மென்பொருள் கட்டமைப்புகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். பின்னர், அந்தப் பரிமாற்றங்களை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள முடியும். வரி ஏய்ப்பு செய்பவர்களிடமிருந்து வரி வசூலிப்பதற்கான வழிமுறையையும் நாங்கள் நெறிப்படுத்தியுள்ளோம்.
மேலும், நமது அரச பொறிமுறை மிகவும் பலவீனமான மற்றும் செயற்திறனற்ற அரச பொறிமுறையாகும். எனவே, இந்த அரச பொறிமுறையை திறமையானதாக மாற்ற வேண்டும். அதற்காக, அறிவு மற்றும் திறன்களைக் கொண்டவர்களை அரச சேவைக்கு ஈர்க்க வேண்டும். எனவே, திறமை மற்றும் செயற்திறன் கொண்டவர்களை அரச சேவைக்கு ஈர்க்கவும், அரச சேவையை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றவும் நாம் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.
எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் அரச சேவைக்கு பெரும் பங்கு உண்டு. இந்த நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை மீட்டெடுக்கவும் மீண்டும் கட்டியெழுப்பவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், 30,000 புதியவர்களை அரச சேவையில் சேர்ப்பதற்கு நாங்கள் அங்கீகாரம் அளித்துள்ளோம். இந்த ஆட்சேர்ப்புகள் மிகவும் முறையான வகையிலும் தேவைக்கேற்பவும் செய்யப்படுகின்றன. இன்று, எந்த அரச நிறுவனமும் தமது விருப்பப்படி ஊழியர்களை நியமிக்க முடியாது. அதற்காக நாங்கள் ஒரு குழுவை நியமித்துள்ளோம்.
இந்த ஆட்சேர்ப்புகள் இன்று, அரசியல் தேவையின் அடிப்படையில் செய்யப்படவில்லை. இந்த நாட்டை இவ்வாறு முன்னோக்கி கொண்டு சென்று, நமது காலம் முடிந்ததும் நமக்கு வெளியேறலாம். இல்லையெனில், நாம் முழுமையான உறுதியுடன் அரச சேவையை தூய்மைப்படுத்த வேண்டும். அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
நமது நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் பொலிஸ் திணைக்களம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. இருப்பினும்,பொலிஸ் திணைக்களம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தன்மையை ஒத்திருந்தது. இதன் விளைவாக, இலங்கையில் முதல் முறையாக, பொலிஸ் மா அதிபர் பொலிஸிடமிருந்து மறைந்திருந்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் இன்னும் அவர் தான் பொலிஸ் மா அதிபர்.
நாங்கள் புதிய பொலிஸ் அதிகாரிகளை நியமிப்போம். அவர்களுக்கு பொருத்தமான சம்பளம் வழங்குவோம். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனென்றால், நம் நாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு பொலிஸ் திணைக்களத்தை நாம் உருவாக்க வேண்டும்.
அடுத்த முக்கியமான நிறுவனம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் சவால்களின்போது இது நமக்கு மிகவும் முக்கியமான நிறுவனமாகும்.
நம் நாட்டிற்குள் யார் நுழைகிறார்கள், யாரை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பதை ஒரு நாடு அறிந்து கொள்வது முக்கியம். ஆனால், அண்மையில் என்ன நடந்தது? குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் , பாதாள உலகத் தலைவர்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளது. பாதாள உலகத் தலைவர் வெளிநாட்டில் இருக்கிறார். நீங்கள் கடவுச்சீட்டைப் பெறும்போது,புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். உரிமையாளர் வந்து தனது கைவிரல் அடையாளத்தை வழங்க வேண்டும்.
ஒரு பாதாள உலகத் தலைவருக்கு மூன்று கடவுச்சீட்டுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கைவிரல் அடையாளங்கள் புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு புத்தக விற்பனையாளரால் கொடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் அவரைக் கைது செய்துள்ளோம். இந்தத் திணைக்களம் அந்தளவு வீழ்ச்சியடைந்துள்ளது . அடுத்தது போக்குவரத்துத் திணைக்களம். காலையில் கிடைத்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட அதிகாரியின் அலுமாரியை சோதனை செய்தபோது, நான்கு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் இருந்தது. சேகரிக்கப்பட்டதைப் பகிர்ந்துகொண்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மாத்தறை சிறைச்சாலையில் சீர்திருத்தங்கள் காரணமாக, அங்குள்ள கைதிகளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றினோம். பின்னர் மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஏழு கைவிலங்குகளைப் கண்டு பிடித்தோம். அதாவது கைவிலங்குகள் கைதிகளிடம் இருந்தன. கைவிலங்குகளில் 27 திறப்புகள் காணப்பட்டன. தொலைபேசிகள், சார்ஜர்கள், ஐபேட்கள். இதுதான் இந்த நாட்டின் நிலமை. அதுமட்டுமின்றி, சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கத் தொடங்கியுள்ளனர். நான் சொல்ல வருவது என்னவென்றால், நமது நாடு முன்பு இவ்வாறுதான் இருந்தது. இவை முக்கியமான நிறுவனங்கள். சுங்கம், சிறைச்சாலைத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இவை ஒரு நாட்டின் முதுகெலும்பு. ஒரு நாட்டின் இருப்புக்கான முக்கிய காரணிகள். அவை அனைத்தும் பலவீனமாக உள்ளன.
இவை அனைத்தையும் தூய்மைப்படுத்தும் முயற்சிற்கு நாம் கை கொடுப்போம். நமது பிள்ளைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் அவசியம். அது இல்லாமல், நாடு முழுவதும் சிறிய சிறிய சிற்றரசுகள் உருவாக்க இடமளிக்க முடியாது. இந்த சிற்றரசுகள் அனைத்தையும் அழித்து விடும். இலங்கையில் ஒரே ஒரு அரசே உள்ளது. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசு. இந்த இடத்திற்கு கொண்டு செல்வதே எமது குறிக்கோள். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.
அரசியல் அதிகாரமாக, நாம் நமது நேர்மையைப் பற்றி பெருமைப்படலாம். நாம் மக்கள் பணத்தில் ஒரு ரூபாவைக் கூட திருடுவதில்லை. அதை வீணாக்குவதில்லை. அந்த முன்மாதிரியை நாம் ஏற்படுத்தியுள்ளோம். அது போதாது. அரச சேவையும் அந்த இடத்திற்கு வர வேண்டும். அவர்களை அங்கு வருமாறு நாம் தொடர்ந்து அழைத்திருக்கிறோம். மேலும், இந்த நாட்டு மக்கள் நீதிக்காக ஏங்குகிறார்கள். குற்றங்களைத் தண்டிக்கும் அதிகாரம் அரசியல் அதிகாரத்திற்கு இல்லை. சட்டம் அந்த அதிகாரத்தை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளது. ஒரு குற்றத்தை, ஒரு மோசடியை விசாரிக்க, அந்தத் திணைக்களங்களால் முடியும்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு, சட்டங்கள் மூலம் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றால், அதிக சட்டங்கள் இயற்றப்படும். பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரம் உள்ளது. ஏப்ரல் 8 ஆம் திகதி, சட்டவிரோதமாக சேகரித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒரு சட்டத்தை நாங்கள் நிறைவேற்றினோம். அந்த சட்டங்களின்படி நிறுவனங்களை நிறுவுவோம். இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு ஒரு சிறிய அலுவலகத்தில் இருந்தது. எங்கள் அமைச்சர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வீடு வழங்கப்பட்டது. முன்பு, அமைச்சர்கள் வீடுகளில் வசித்து வந்தனர். இப்போது அமைச்சர்களைத் தேடுபவர்கள் வசிக்கின்றனர்.
அவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான சம்பளம் வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவர்களுக்கு தேவையான வாகனங்கள் மற்றும் வசதிகளை நாங்கள் வழங்குவோம். அதுதான் அரசாங்கத்தின் வேலை. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நாங்கள் எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம். பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்ட விவகாரங்களுக்கு உதவ, விசாரணை அதிகாரிகள் உள்ளதுடன், சட்டத்தரணிகளை நியமிப்பது குறித்தும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
அடுத்து, இந்த நிறுவனங்கள் விசாரிக்க வேண்டும். பின்னர், விடயங்களை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அவற்றில் அதிகமானவை ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அது போதாது. பின்னர், மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்து அந்த விடயங்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதுதான் இறுதி நடவடிக்கை. அதன் பிறகு, வழக்குகளை விசாரித்து தண்டனை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டும் உள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்தில் மிக விரைவில் அவர்களுக்கான குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு, அதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றங்களின் வசம் உள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்கிறது. அண்மையில் நீதிமன்றம் எடுத்த முடிவுகள் உள்ளன.
ஒரு வழக்கில், கடந்த காலத்தில் நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், மக்களும் நாடும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக நீதிபதி கூறுகிறார். இதற்குக் காரணம் மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயம்.
எனவே, சாதாரண தண்டனை வழங்கக்கூடாது. அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். மற்றொரு வழக்கில், இந்த வழக்கைத் தாக்கல் செய்வதில் ஏன் 10 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டது என்று நீதிபதி கேட்கிறார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சட்டத்தரணிகள், அவர்கள் 10 ஆண்டுகளும் ஆட்சியில் இருந்தது தான் காரணம் என்று பதிலளிக்கின்றனர். இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்கள் பொறுப்புகளுக்கு கணிசமான அளவிற்கு பொறுப்பேற்கத் தொடங்கியுள்ளன என்பதை இவை காட்டுகின்றன. எனவே, இந்த நாட்டின் மக்கள் எதிர்பார்த்த பணியை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று நான் நினைக்கிறேன்.
தேசிய ஒற்றுமையில் நாம் கவனம் செலுத்தினால், வடக்கு மக்கள் இலங்கையில் முதல் முறையாக எங்களை நம்புவது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். இலங்கையில் பழைய இனவெறி அரசியலை மீண்டும் உயிர்ப்பிப்பதே தோல்வியுற்றவர்களின் நோக்கம். எல்.டி.டி.ஈ. முக்கியமான ஒருவரைச் சந்திக்கவே நான் ஜெர்மனிக்கு வருவதாக கூறுவதைக் கண்டேன். அந்த அரசியலை மீண்டும் அனுமதிக்க முடியாது. இலங்கையில் மீண்டும் இனவெறியை வைத்து அரசியல் செய்ய யாராவது முயன்றால், இருக்கும் சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் இயற்றப்படும், ஆனால் இனவெறி தலைதூக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
ஏன் என்றால்? இனவெறி காரணமாக பெரும் பேரழிவைச் சந்தித்த நாடு நாம். கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலப் போரில் வடக்கு மற்றும் தெற்கில் மக்கள் இறந்தனர்.பூமி நனையும் வரை இரத்தம் சிந்தப்பட்டது. நமது நாடு பின்னோக்கிச் சென்றது. அது வேறு எதனாலும் அல்ல. ஏனென்றால் இனவெறி அதிகாரத்தைப் பெறவும் அதைத் தொடரவும் பயன்படுத்தப்பட்டது. எனவே, இனவெறி அரசியலை மீண்டும் அனுமதிக்க மாட்டோம். தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
எங்களுக்கு ஒரே நாடு வேண்டும். ஒரே இலங்கை தேசம். மொழி, மதம் மற்றும் கலாசாரத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாத ஒரு நாடு. பிளவுபட்ட அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். இது ஒரு பெரிய மற்றும் சவாலான முயற்சி. இது எளிதில் செய்யக்கூடிய ஒன்றல்ல. எதிர் தரப்புகளில் உள்ள பிற்போக்குவாதிகள் இதற்கு எதிராக ஒன்று சேர்கின்றனர். பிரதேச சபைத் தேர்தல்களில், நாங்கள் 267 நிறுவனங்களை வென்றோம். அவற்றில் 152 இல், ஏனைய அனைத்தையும் சேர்த்தாலும், எங்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால் நாங்கள் 115 ஐ வென்றிருந்தாலும், அடுத்தவைகளைச் சேர்க்கும்போது, எங்களை விட அதிகம். அவர்களுக்கு தனித்தனி அரசியல் நீரோட்டங்கள் உள்ளன. அரசியல் நீரோட்டங்களைக் கருத்தில் கொண்டால், அந்த பிரதேசத்தின் மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஆனால், 115 நிறுவனங்களில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. இப்போது அது எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள். குளியாப்பிட்டி பிரதேச சபையை எடுத்துக் கொண்டால், எங்களிடம் சுமார் 21 உறுப்பினர்கள் இருந்தனர். மொட்டில் 6 உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது தலைவர் யார்? மொட்டைச் சேர்ந்தவர். தலைவர் பதவியைப் பெற அவர்களுக்கு யார் ஆதரவு அளித்தார்கள்? ஐ.ம.ச. மற்றும் ஐ.தே.க. கதிரை , இவ்வாறு அனைவரினதும் ஆதரவுடன் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எங்களுக்கு எதிராக ஒரு தரப்பை உருவாக்குகிறார்கள்.
இலங்கையில் முதல் முறையாக இந்த தீவிர அரசியல் பிரிவு உருவாகி வருவதாக நான் நினைக்கிறேன். வரலாற்றில் பல அரசுகள் இந்த சவால்களை எதிர்கொண்டுள்ளன. ஒரு முற்போக்கான மற்றும் நல்ல அரசியல் பணி முன்னெடுக்கப்படும்போது, மற்ற விரோதக் குழுக்கள் தங்கள் பகைமையை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்று சேர்கின்றன. நீங்கள் ஒரு ஊடக விவாதத்தைப் பார்த்திருக்கலாம். ஐ.ம.ச. இன் திஸ்ஸ அத்தநாயக்க, மொட்டைச் சேர்ந்த அதன் செயலாளர், ஐ.தே.க. இன் தலதா போன்றவர்கள் அனைவரும் ஒரே தரப்புக்கு வருகிறார்கள். ஆனால், இதுவரை அவர்கள் நமக்கு எதைக் காட்டியுள்ளார்கள்? அவர்கள் இரண்டு பிரிவினர் என்று.
ஆனால் இன்று அவர்கள் ஏன் ஒன்றாக சேர்ந்துள்ளனர்? வேறு எதற்கும் அல்ல. அவர்கள் செய்த பழைய ஊழல், மோசடி மற்றும் குற்றங்களை மறைக்க ஒன்றாக சேர்ந்துள்ளனர். அவர்கள் மொட்டு என்றாலும் ஐ. ம. ச. என்றாலும் பரவாயில்லை. அவர்கள் குற்றம் அல்லது மோசடி செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்படும். எனவே, நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த பயணத்தை தோற்கடிக்க அவர்கள் அவர்களது விரோதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இணைய வேண்டும். இல்லையெனில், அரசியல் ரீதியாகப் பார்த்தால், சஜித் பிரேமதாசவும் நாமல் ராஜபக்ஷவும் இணைவது நாமலுக்கு பாதகமானது. அது சஜித்துக்கு பாதகமானது. அது இருவருக்கும் பாதகமானது.
இருப்பினும், இருவரும் பிரிந்தாலும் அது பாதகமாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே என்ன செய்ய வேண்டும்? நமக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் நீண்டகால அரசியல் பாதகத்தை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. அடுத்த தேர்தலில் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் எப்படி வர முடியும்? ஏனென்றால் இப்போது அது ஒரு அரசியல் முகாம். அவர்களுக்கு அது தெரியும். அப்படி இருந்தாலும், குறுகிய காலத்தில், இந்த குறிப்பிட்ட தருணத்தில், அவர்களின் இருப்பைப் பாதுகாக்க, அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். அது அவர்களின் தனிப்பட்ட நலனுக்காகவே. ஆனால், நினைவில் கொள்ளுங்கள். என்ன செய்தாலும், தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்ட ஆணையின்படி ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான எந்தவொரு விசாரணையும் தடைபட அனுமதிக்க மாட்டோம். மேலும், எங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை எங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளையும் நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
எனவே, இலங்கையில் முதல் முறையாக, ஒரு புதிய அரசியல் உருவாகியுள்ளது. எங்கள் நாட்டைப் பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வை உங்களிடம் உள்ளது. எங்களுக்கு எப்படிப்பட்ட நாடு வேண்டும்? முன்பு, மக்களின் தொலைநோக்குப் பார்வையும் ஆட்சியாளரின் தொலைநோக்குப் பார்வையும் இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருந்தன. மக்களுக்கு ஒரு ஆசை இருந்தது. ஆட்சியாளருக்கு மற்றொரு ஆசை இருந்தது. முதல் முறையாக, உங்கள் விருப்பங்களும் எங்கள் விருப்பங்களும் ஒன்றாக மாறிய ஒரு அரசாங்கம் உருவாகியுள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நீங்கள் ஊழலை நிறுத்த விரும்புகிறீர்கள். எங்களுக்கும் அது வேண்டும். ஊழல் செய்பவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்டு விரும்புகிறீர்கள். எங்களுக்கும் அது வேண்டும். நீங்கள் சட்டத்தின் ஆட்சியை நிறுவ விரும்புகிறீர்கள். எங்களுக்கும் அது வேண்டும். எங்கள் நாட்டில் ஒரு சிறந்த பொருளாதாரத்தை நிறுவ விரும்புகிறீர்கள். எங்களுக்கும் அது வேண்டும். அதன் அர்த்தம் என்ன? மக்களும் ஆட்சியாளரும் இரு தரப்பினர் அல்ல. இலங்கையில் மக்களும் ஆட்சியாளரும் ஒன்றாக இருக்கும் ஒரு அரசாங்கம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இது எங்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு. அந்த வாய்ப்பை உருவாக்க நீங்கள் கடுமையாக உழைத்திருப்பதை நான் அறிவேன். உங்கள் குரலும் பங்கும் இல்லாமல், ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்க முடியாமல் போயிருக்கலாம். அதில் நீங்கள் ஒரு பாரிய பங்கை வகித்துள்ளீர்கள். எதிர்காலத்திற்காக நாங்கள் பல இலக்குகளை திட்டமிட்டுள்ளோம். 2025 ஆம் ஆண்டு வரலாற்றில் இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஆண்டாக இருக்கும்.
மேலும், 2025 ஆம் ஆண்டை வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானத்தைக் கொண்ட ஆண்டாக மாற்றுவோம். 2025 ஆம் ஆண்டை வரலாற்றில் ஒரு அரசாங்கம் அதிக வருமானம் ஈட்டிய ஆண்டாக மாற்றுவோம். அது மட்டுமல்லாமல், வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டை மாற்றுவோம். நல்ல நோக்கங்களுடனும் நம்பிக்கையுடனும் அதை நோக்கி நாங்கள் முயற்சிக்றோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்! எழுந்து நிற்போம்! என்று உங்களை அழைக்கிறோம்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இக் கூட்டத்தில் உரையாற்றினார்.
(-2025.06.11 – China-) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின்பேரில் இந்நாட்களில் சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் நேற்று (10) த சிங் பிரதேசத்தின் வூச கிராமத்தின் சர்வதேச புவிசார் தகவல் நிலையத்தையும் த சிங் பிரதேசத்தின் வெட் வைப்ஸ் (Wet wipes) உற்பத்தி தொழிற்சாலையொன்றையும் பார்வையிடச் சென்றதோடு வூச கிராமத்தின் பிரதானிகளையும் ஹூஜோ நகரத்தின் உப நகராதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, நவீன தொழில்நுட்பத்தை […]
(-2025.06.11 – China-)
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின்பேரில் இந்நாட்களில் சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் நேற்று (10) த சிங் பிரதேசத்தின் வூச கிராமத்தின் சர்வதேச புவிசார் தகவல் நிலையத்தையும் த சிங் பிரதேசத்தின் வெட் வைப்ஸ் (Wet wipes) உற்பத்தி தொழிற்சாலையொன்றையும் பார்வையிடச் சென்றதோடு வூச கிராமத்தின் பிரதானிகளையும் ஹூஜோ நகரத்தின் உப நகராதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வூச கிராமத்தின் குப்பைகூளப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டுள்ள விதம் பற்றியும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் கிராமத்தின் அபிவிருத்திக்காக பெண்கள் கூடுதலான பங்களிப்பினை வழங்குவதாகவும் வூச கிராமத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பயிர்ச்செய்கைக்காக இரசாயனப் பசளையையும் கிருமிநாசினி பொருட்களையும் பாவிக்கையில் சீன மத்திய அரசாங்கம் அறிமுகஞ்செய்துள்ள தரநியமங்களைக் கடைப்பிடிப்பது கட்டாயமானதென்பதும் ஊர்மக்கள் அந்த அளபுருக்களை முறைப்படி கடைப்பிடித்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் இதன்போது வெளிப்பட்டது.
வூச கிராமம் பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த கற்றாராய்வில் ஒரு கிராமம் என்றவகையில் மிகவும் முன்னேற்றகரமான அபிவிருத்தியை அடைந்துள்ளதெனவும் அதன் அனுபவங்களை இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கதாக ஈடுபடுத்து முடியுமெனவும் இதன்போது தோழர் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.
இந்த தருணத்தில் இளைஞர் அலுவல்கள் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றதோடு ஹு ஜோ நகரத்தின் உப நகராதிபதி ஜன் ஷின்யூ, ஹுஜோ நகரத்தின் த சிங் பிரதேசத்தின் உப நகராதிபதி ஷீ மின் லீ, வூச கிராமத்தின் சின் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான தோழரையும் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரும் பங்கேற்றனர்.
(-2025.05.01 காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம்.-) – மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல் அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுக்காக தன்னை அர்ப்பணித்து அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப் பாரிய சவாலை வெற்றிகொண்ட தனது அரசியல் இயக்கம், இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்ற சவாலை நிச்சயமாக வெல்லும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். நாட்டைக் கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டுசெல்லத் தயாராக இருக்கும் ஒரு இயக்கத்தால் […]
(-2025.05.01 காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம்.-)
– மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல்
அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுக்காக தன்னை அர்ப்பணித்து அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப் பாரிய சவாலை வெற்றிகொண்ட தனது அரசியல் இயக்கம், இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்ற சவாலை நிச்சயமாக வெல்லும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நாட்டைக் கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டுசெல்லத் தயாராக இருக்கும் ஒரு இயக்கத்தால் இன்று நாடு ஆளப்படுகிறது என்றும், அதன்போது, இந்த நாட்டின் தொழிற்சங்க இயக்கமும் தனது பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை அணிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்த ஜனாதிபதி,
நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை வெற்றியடையச் செய்ய அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைத்து தொழிற்சங்கங்க இயக்கங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
காலி முகத்திடலில் இன்று (01) பிற்பகல் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
” நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் மே தினக் கூட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மக்கள் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இன்று செயற்படும் ஒரே அரசியல் இயக்கமாக இருப்பது தேசிய மக்கள் சக்தி என்றும், இந்த நாட்டின் எதிர்காலமும் மக்களின் எதிர்காலமும் முழுமையாக தேசிய மக்கள் சக்தியின் கைகளில் உள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் முழுமையான உரை வருமாறு,
நாங்கள் நீண்ட காலமாக மே தினத்தை கொண்டாடியிருக்கிறோம். அப்போது அதிகாரத்தை கைப்பற்ற மக்களை திரட்டுவதே நோக்கமாக இருந்தது. இன்று முதல் முறையாக அதிகாரத்தை கைபற்றி நாட்டை கட்டியெழுப்புவதற்கான கூட்டத்தை நடத்துகிறோம். இன்று தேசிய மக்கள் சக்தி மட்டுமே அரசியல் கட்சியாக உள்ளது. இந்நாட்டின் எதிர்காலமும் மக்களின் எதிர்காலமும் தேசிய மக்கள் சக்தியின் கைகளிலேயே உள்ளது. மற்றைய எதுவும் அரசியல் கட்சிகள் அல்ல. அவை இடிபாடுகள் மட்டுமே. ஆனால் சில குரல்கள் கேட்கிறது. அவற்றில் என்ன தெரிகிறது. நீண்ட காலம் அவர்கள் நாட்டை ஆண்டனர். அத்தோடு நின்றுவிடாமல் அதிகாரத்தை தமது தலைமுறையினர் மீது மாட்டியிருந்தனர். மகன், தம்பி,தந்தை மற்றும் மகன்,மருமகன் என்ற வகையில் அதிகார வரைவு மாட்டப்பட்டிருந்தது. தந்தை, தாய்,மகள் என்ற வகையில் அதிகார வரைவு மாட்டப்பட்டிருந்தது.
மாமன் மருமகன் அதிகார வரைவு மாட்டப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் நீண்டகாலமாக அவர்களின் தலைமுறையினர் கைகளில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டு, எமது நாட்டு மக்களை நெருக்கடிக்கும் அநீதிக்கும் உட்படுத்தி அதிகாரத்தை கொண்டுச் செல்ல முடியுமென நினைத்திருந்தனர். ஆனால் கடந்த செப்டம்பர் 21 இந்நாட்டு மக்கள் மிகத் துணிச்சலாக தீர்மானமொன்றை எடுத்தனர். அந்த தீர்மானத்தின் ஊடாக பல தலைமுறைகளுக்கு அதிகார வரைவை மாட்டிக்கொண்டிருந்தவர்களின் கைகளிலிருந்து மக்களின் கைகளுக்கு ஆட்சி மாற்றிக்கொள்ளப்பட்டது. அந்த அதிகார இழப்பு மற்றும் எதிர்பார்ப்புக்களை இழந்ததன் அவலக் குரலை எமக்கு கேட்கிறது.
மறுதிசையில் அவர்கள் அதிகாரத்தில் இருந்த வேளையில் மக்கள் பணத்தை விரயம் செய்து, மிகுந்த வரப்பிரசாதங்களுடன் கூடிய வாழ்வைக் கழித்தனர். பொது சட்டங்களுக்கு அடிபணியாமல் வாழ்ந்தனர். பொதுமக்களுக்கு மேலாக அதிகார பராக்கிரமத்தை கட்டமைத்துக்கொண்டு மக்களுக்கு மேலிருக்கும் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தினர். இன்று என்ன நடந்திருக்கிறது. பொது சட்டத்துக்கு பணிந்துள்ளனர். வரப்பிரசாதங்களை இழந்துள்ளனர். சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதனால் அவர்களுக்கு இப்போது கவலை வந்திருக்கிறது. அதனால் தான் எதிர்த்திசையில் வேதனையின் அவலக்குரல் கேட்கிறது.
இன்னொரு பக்கத்தில் அவர்கள் செய்த குற்றங்களின் அளவை எங்களை விடவும் அவர்களே அறிவார்கள். அவர்கள் செய்த ஊழல்களையும் எங்களை விட நன்றாக அறிவர். அவர்கள் ஊழல் மற்றும் மோசடி, குற்றங்களின் ஈடுபட்ட விதத்தை அறிவார்கள். அதனை போலவே நாம் யார் என்பதையும் அறிவார்கள். நினைவில் கொள்ளுங்கள்! அவர்களின் குற்றங்களை அறிந்திருக்கும் அளவிற்கு நாங்கள் யார் என்பதும் அவர்களுக்கு தெரியும். அதனால் பீதியின் அவலக் குரல் கேட்கிறது. அதனால் அரசியலின் மறுமுனையில் இன்று என்ன இருக்கிறது? எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாததன் வேதனை. வரப்பிரசாதங்களை இழந்திருப்பதன் அவலக்குரல். பீதியில் அல்லாடுகிறார்கள். அதனால் வேறு அரசியல் கட்சிகள் இல்லை. அவர்கள் பொதுவௌியில் வெட்டித்தனமாக பாடித்திரியும் குழுக்களாக மாறியுள்ளனர்.
மார்ச்சில் அரசாங்கம் சரியும் என்று சொல்கிறார்கள். மார்ச் மாதம் முடிந்தவுடன் ஓகஸ்ட் என்று சொல்கிறார்கள். ஓகஸ்ட் வரும் முன்பாக அடுத்த ஏப்ரல் வரை ஒத்திவைக்கிறார்கள். பின்னர் அடுத்தவர் டிசம்பரில் வருவதாக சொல்கிறார். அவை வெட்டித்தனமான பாடல்கள். அந்த பக்கத்தில் அரசியல் கட்சிகள் இல்லை. தூரநோக்கம் இல்லை. ஒருங்கிணைக்கும் இயலுமை இல்லை. செய்வது என்னவென்று தெரியவில்லை. அங்குமிங்கும் சிதறிய தொகுதிகளின் கூட்டிணைவு காணப்படுகிறது. அவை அரசியல் கட்சியல்ல.அதனால் எங்களுக்கு வௌியில் எங்களுக்கு சவாலொன்று இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.
எங்களுக்கு வௌியே எங்களுக்கு சவாலொன்று உள்ளதா? இல்லை! எங்களுக்கு வௌியில் இன்று காணப்படுவது இடிபாடுகளின் கூட்டிணைவே அன்றி சவால் அல்ல. எனவே சவால் எங்கு உள்ளது. எங்களுக்குள்ளேயே எங்களுக்கான சவால் உள்ளது. அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சவால் இருப்பது எமக்கு அண்மையில்தான். சவால் இருப்பது எமக்கு அருகில் தான். அதனால் சவாலை போக்குவதற்கு நாம் எமக்குள்ளேயே காணப்படுகின்ற எதிர்ப்புக்கள், பொருத்தமின்மை, புதிய நிலைக்கு மாறுவதற்கு இயலாமை,புதிய நிலையை புரிந்துகொள்ள இயலாமை, புதிய நிலைமைக்கு அமைவாக இசைவாக்கம் அடைவது எவ்வாறு? இசைவாக்கம் அடைய இயலாமை என்பன எம்மிடத்திலேயே உள்ளன. வௌியில் வேறு சவால்கள் இல்லை. நாம் யார்? நாம் சிறிய காலமன்றி 65 வருடகால அர்ப்பணிப்பின் உரிமை எம்மிடத்தில் உள்ளது. ஒரு நோக்கத்துக்கான அர்ப்பணித்த கட்சியே இன்று இங்கு கூடியுள்ளது.
பல தலைமுறைகளாக வெற்றி, தோல்வி, கடுமையான சவால்கள், அருகில் இருந்தவர்கள் கைவிட்டுச் சென்றமை, கைவிட்டுச் சென்றது மட்டுமல்லாது எதிரான கட்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்களுடன் நாம் நோக்கத்தை கைவிடாமல் இருந்தோம். எனவே நாங்கள் யார்? நோக்கத்துக்கான உரிமைகளை தோலில் சுமந்து செல்லும் அமைப்பு. சில நேரங்களில் நாம் பழகிப்போன அதிகாரத்திற்கு வேலை செய்திருக்கிறோம். இலக்குகளை மிகத்தூரமானவை சவால்கள் நெருக்கமானவை எமக்கு முன்பாக பல குழப்பங்கள், ஆனாலும் நாம் பாடுபட்டோம், எமது வழக்கமான அதிகாரம் எம்மை பாடுபட தூண்டியது. வேலை செய்வதால் வந்த வழக்கம் எம்மை பாடுபட தூண்டியது. இவை அனைத்தையும் செய்து கடந்த செப்டம்பர் 21 அதிகாரத்தை கைபற்றினோம்.
இப்போது எம்மிடம் இருப்பது வழக்கமான அதிகாரம் அல்ல. மாறாக நம்பிக்கையின் அதிகாரமே உள்ளது. எமக்கு நம்பிக்கை உள்ளது. இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். இந்த நாட்டு மக்கள் எம்மை நம்புகிறார்கள். எம்மீது எதிர்பார்ப்புக்களை வைத்துள்ளனர். அரசியல் கட்சி என்ற வகையில் நாங்கள் பொதுமக்களை ஒரு நோக்கத்தை நோக்கி திரட்டிக்கொண்டிருக்கிறோம். அதுவே நம்பிக்கையின் பலம். எனவே எமக்கு இருப்பது அரசியலமைப்பில் கிடைத்த அதிகாரத்தை மிஞ்சி செல்லும், பாராளுமன்றத்தில் எமக்கு கிடைத்த அதிகாரத்தை மிஞ்சிய நம்பிக்கையின் பலம் எம்மிடம் உள்ளது. 65 வருடங்களாக ஒரே நோக்கத்துடன் கடுமையான சவால்களுக்கு மத்தியில் வரம்புகளை மிஞ்சிய அதிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ள நாங்கள், உறுதியாக இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையின் சக்தியுடனே நாங்கள் இதில் இறங்கியிருக்கிறோம்.
அதனால் பெரும் நம்பிக்கையோடு நாம் இந்த பணியை செய்கிறோம். மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நடைமுறை தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மிகக் கடுமையான யாதார்த்தமே எம்முன் உள்ளது. பாதாளத்திற்குள் விழுந்திருக்கும் பொருளாதாரம், சமூகத்தில் மற்றையவர் மீதான கருணையை இழந்திருக்கும் சமூகம், சட்டம் ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்பட நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகம், எமது நாட்டின் நிறுவனக் கட்டமைப்புக்கள் மற்றும் அவற்றின் நோக்கங்கள் முழுமையாக சரிவடைந்திருந்த நிலைமை, சமூக பொறுப்புணர்வு தொடர்பில் அனைத்து பிரஜைகள் மத்தியிலும் சிதைந்துபோன நம்பிக்கை நிறைந்த சமூகமே இருக்கின்றது. எம்முன் இருப்பது யதார்த்தம் கடுமையானது என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனாலும், சமூகத்தின் நீதி மற்றும் நியாயத்துக்காக போராடுகிறோம். கடுமையான யதார்த்தம் எம்முன் இருந்தாலும் எமது நோக்கங்கள் எவ்வாறானது? நாம் சமூகத்தில் நீதியை உருவாக்குகிறோம். நீதியை நிலைநாட்டுகிறோம். அவ்வாறு கைவிடாமல் போராடுவோம். கைவிடப்போதவில்லை!
சமூக நீதியை நிலைநாட்டுவது நாளாந்தம் நடக்கும் தினசரி நிகழ்வல்ல. சமூக நீதியை உருவாக்குவது ஓரிரு இரவுகளில் நடக்காது. ஆனாலும் சமூகத்தின் நீதி மற்றும் நியாயத்திற்காக நாம் மிகவும் சரியான முறையில் செயல்படுகிறோம். அது அனைவருக்கும் தெரியும். பொதுவாக விவசாயியொருவர் தனது அறுவடையை செய்துகொள்ளும் வரையில் எடுக்கின்ற முயற்சிகள் முறையான நெசவாகும். வயல்களை சுத்தப்படுத்தி, வரம்புகளை கட்டி, வயல்களை உழுது, நெல்களை நாட்டி, புல்களை அகற்றி,உரமிட்டு அறுவடை செய்ய வேண்டும். எனவே தனது அறுவடையை பெற்றுக்கொள்ள சரியான முறையொன்று அவசியம் என்பது எந்தவொரு விவசாயிக்கும் தெரியும். அதனை விவசாயிகள் அறிவர். பொதுவாக வீட்டுப் பணிகளை செய்யும் பெண்மணி அதற்கான தகுந்த முறைமையை அறிவார். எழும்புதல், உணவு சமைத்தல், பிள்ளைகளை பராமரித்தல், பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்குதல், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளல், அவசியமான வருமான வழிகளை உருவாக்குதல் என்ற வகையில் பெண்னொருவர் வீட்டை பராமரிப்பதும் சரியானதொரு முறையிலாகும்.
எனவே, கடுமையான சமூக யராத்தம் கொண்ட நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டுவது சமூக நியாயத்தை நிலைநாட்டுவது போகிற போக்கில் செய்யப்படும் காரியம் அல்ல. அது தற்செயலாக நடப்பதும் அல்ல. அது மிக நன்றாக திட்டமிடப்பட்ட நல்லதொரு முறைமையாகும். ஒரே இரவில் பிரதிபலன்களை எதிர்பார்ப்பவர்களுக்கே இதனை சொல்கிறேன். 76 வருடங்களாக அழிவின் ஆழத்திற்கே கொண்டுச் சென்று, ஆறு மாதங்களில் பலனை எதிர்பார்ப்பவர்களுக்குச் சொல்கிறேன். மிகக் கடுமையான யதார்த்தமொன்று உள்ளது அதனை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.
அந்த யதார்த்திற்கு மத்தியில் திட்டமிடப்பட்ட எதிர்காலத்தை உருவாக்க சரியான முறையொன்று அவசியம். எமது செயல்பாடுகளை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்து அதனை சரியான முறையில் செய்வோம் என்பதை இந்நாட்டு மக்களுக்கு உறுதியாக கூறுகிறேன். வெற்றிகரமாக அதனை செய்வோம். முயற்சி கைவிடப்போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது தற்செயலாகவோ, எதேற்சையாகவோ நடக்காது. கடுமையான யதார்த்தத்திலிருந்து புதிய சமூகத்தை தோற்றுவிக்க குறுக்கு வழிகள் இல்லை. இது மிகவும் சரியான திட்டமிடப்பட்ட முயற்சியாகும். தேசிய மக்கள் சக்தி மக்களின் எதிர்பார்ப்பு, நோக்கங்கள், மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் தன்மை என்ற அனைத்தையும் புரிந்துகொண்டுள்ளது.
நீங்கள் சொல்வதை விடவும் அதிகமாக நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் சக்தியை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். எனவே நாங்கள் மிகவும் திட்டமிட்டவாறு அழிவுகரமான சமூகத்தை, சரியான பொருளாதாரம் சரியான சமூக அணுமுறைகளுடன் கூடிய பயணத்தை செல்லக்கூடிய நாடாக மாற்றுவதற்கான பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம். ஆரம்பம் எங்குள்ளது. அதற்கு வழுவான அத்திபாரத்தை இட வேண்டும். அத்திபாரம் இல்லாத நாடே எம்மிடம் இருந்தது. துடுப்பு உடைந்த கப்பலை போன்றது. இலக்கு இல்லாமல் மிதந்துகொண்டிருந்த நாடு. எல்லையின்றி போகிற போக்கில் சென்றுகொண்டிருந்த நாடு. போகிற போக்கில் சென்ற சமூகம், இதனை சரியான பாதைக்கு மாற்ற வலுவான அத்திபாரத்தை இட வேண்டும். அதுவே முக்கியமானது. கடந்து வந்த காலத்தில் அத்திபாரத்தை அமைத்தற்காக நாங்கள முடிந்தளவில் பாடுபட்டிருக்கிறோம். அத்திவாரத்தின் பிரதான தூண்கள் யாவை? ஊழலற்ற அரசியல், இந்நாட்டை கட்டியெழுப்புவதற்காக பாதையை அமைத்துகொள்ள கட்டியெழுப்ப வேண்டிய முதல் தூண் ஊழலற்ற அரசியல். 76 வருடங்களுக்கு பின்பு மக்களின் ஒரு ரூபாவைக்கூட திருடாத விரயம் செய்யாத அரசியல் இலங்கையில் உருவாகியிருக்கிறது. அந்த தூண் இல்லாமல் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
அந்த அத்திபாரத்தை நாம் அமைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அடுத்தாக அந்த வலுவான அத்திபாரத்தை அமைக்க எமக்கு தேசிய ஒற்றுமை அவசியம். தேசிய ஒற்றுமை இல்லாமல் எமது நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது. என்ன நடந்திருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் எம்மையும் மிஞ்சி மக்கள் அதற்காக அடி வைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் நாங்கள் பின்தங்கியிருப்பதாக நினைக்கிறோம். மக்கள் முற்போக்காக இருக்கிறார்கள். வடக்கு , கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது பாரிய நம்பிக்கை வைத்து எம்மையும் மிஞ்சிய அடியை வைத்தனர். எவ்வாறான நிலைமை. வடக்கோடு மிகக் குறைவாகவே அரசியல் செய்திருக்கிறோம். கிழக்கிலும் மிகக் குறைவாகவே அரசியல் செய்திருக்கிறோம். வடக்கிலும் கிழக்கிலும் தமிழில் தொடர்பாடல் செய்ததும் மிகக் குறைந்த அளவிலாகும். ஆனால் வடக்கின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் பாரம்பரிய தலைவர்கள் அனைவரையும் புறக்கணித்து எம்மை நம்பியதால் என்ன தெரிகிறது. தேசிய ஒற்றுமையின் தேவைக்காக எம்மை மிஞ்சிய அடி வைக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் திரும்பிச் செல்வதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்கப்போவதில்லை. அவர்களின் உரிமைகள், கலாச்சார உரிமைகள், மொழி உரிமை, பூர்வீக காணி உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை மற்றும் அவர்கள் இந்நாட்டு பிரஜைகளாக வாழ்வதற்கான உரிமைகள் என அனைத்தையும் உறுதிப்படுத்துவோம்.
அதுவே நாட்டின் முன்னேற்றத்துக்கான இரண்டாவது தூண். அது இல்லாமல் எமது நாட்டை கட்டியெழுப்புவது குறித்து நினைத்துப்பார்க்கவும் முடியாது. பழைய அரசியல் என்பது யாது? பிளவுபடுத்தப்பட்ட அரசியல். வேறுபடுத்தப்பட்ட அரசியல். முதல் முறையாக இலங்கையை ஒற்றுமைப்படுத்தும் அரசியல் வென்றிருக்கிறது. வடக்கு,கிழக்கு,தெற்கு மக்கள் ஒரே நம்பிக்கையுடன் ஒரே அரசியல் கட்சியுடன் இணைந்திருக்கிறார்கள். எமக்கு தேவையான அத்திபாரம் அதுவாகும். அதனை நாங்கள் அமைத்திருக்கிறோம். அதுவே அளவீடு, அதுவே புரட்சி, அதுவே நாம் பெற்றுக்கொள்ளும் வெற்றி. மிக்க முக்கியமான அடியை நாங்கள் வைத்திருக்கிறோம். அதேபோல் எமக்கு வலுவான அரச சேவையொன்று அவசியம். எமது அரச சேவை சரிந்திருந்தது. அரச நிறுவனங்கள் சரிந்து கிடந்தன. நாம் வலுவான அரச சேவையை ஆரம்பிப்போம். 30 ஆயிரம் பேரை இணைத்துகொள்ளவுள்ளோம். அரச சேவையின் அடிப்படைச் சம்பளத்தை பெருமளவில் அதிகரித்திருக்கிறோம். அரச சேவை மீதான ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறோம்.
அதேபோல் அரச சேவையில் மேலீட்டுக் காணப்படும் அலட்சியத்தன்மை, செயலதிறன் இன்மை, உள்ளிட்ட அனைத்தையும் நீக்கி வலுவான அரச சேவையை கட்டமைப்பதற்கான அத்திபாரத்தையும் இட்டுள்ளோம். அடுத்த முக்கியமான விடயம் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது, எமது நாடு எவ்வாறான நாடாக இருந்தது? மேலிருப்பவர்களுக்கு சட்டம் இல்லாத நாடு, மேலிருப்பவர்கள் சட்டத்துக்கு அடிபணிவதில்லை. மேலிருப்பவர்களுக்கு சட்டத்துக்கு பயமும் இல்லை. இலங்கையில் முதல் முறையாக மேலிருப்பவர் கீழிருப்பவர், அதிகாரத்தில் இருப்பவர் , அதிகாரம் இல்லாதவர் என்று அனைவருக்கும் சட்டத்தை சமமாக நடைமுறைப்படுத்தும் நாடொன்றை உருவாக்கியிருக்கிறோம். நல்லமல்லவா! அவ்வாறான நாடொன்று வேண்டுமல்லவா! ஆனால் பழைய நாடு என்று நினைத்துக்கொண்டிருக்கும் சிலர் ஒவ்வொரு கதைகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கதை சொன்ன மாத்திரத்திலேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படுகிறார்.
அவர் இன்றும் பழைய நாடு என்ற நினைப்பில் இருக்கிறார். இல்லை இது புதிய நாடு. சட்டத்திற்கு அனைவரும் அடிபணிய வேண்டும். சட்டத்துக்கு முன் அனைவரும் சமமானவர்கள். சட்டமா அதிபர் திணைக்கம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, கீழ் மட்ட மக்களுக்கு மாத்திரம் செயல்படும் நிறுவனம் என்று நினைத்தால் அது பழைய யுகம். சட்டம் அனைவருக்கும் சமமான நாட்டை உருவாக்கியுள்ளோம். அதுவே இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான அடுத்த முக்கியமாக அத்திபாரம். அதனை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். சட்டத்தினால் நிறுவனங்களை பலப்படுத்துவதற்கு அப்பால் நடைமுறையிலும் அதனை காண்பிப்போம். குற்றம் செய்தது எப்போது, ஊழல் செய்தது எப்போது என்று இல்லாமல் காலம் எப்போதாக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
சட்டத்தின் முன்பு அச்சப்பட வேண்டும், சட்டத்திற்கு பணிய வேண்டும் அதுவே சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான பாதை. அதனையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அடுத்ததாக சர்வதேசத்தின் முன்பாக கரும்புள்ளி வைக்கப்பட்ட நாடாக இலங்கை மாறியிருந்தது. நாம் படிப்படியாக மிக வலுவாக சர்வதேசத்திற்கு முன்பாக பாராட்டப்படும், சர்வதேசத்தின் முன்பாக எமது சுயாதீனத்தன்மை, எமது நாட்டை முன் நிறுத்தி செயல்படக்கூடிய அரசாங்கத்தை கட்டமைத்திருக்கிறோம். அதுவே நாட்டின் தேவை. அதனாலேயே ஜப்பான் அரசாங்கம் நிறுத்திய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கிறது. சீனா அரசாங்கம் நிறுத்திய திட்டங்களை ஆரம்பிக்கிறது. இந்திய அரசாங்கம் மேலும் பல அன்பளிப்புக்களை வழங்க இஙணங்கியுள்ளது. நாம் மிக வலுவான சர்வதேச ஒத்துழைப்புக்கான அத்திபாரத்தை அமைத்திருக்கிறோம். இவ்வாறான அத்திபாரங்கள் அவசியம்.
ஊழலற்ற ஆட்சி, சகலருக்கும் சமமான சட்டத்தை கொண்ட நாடு, இனவாதத்திற்கு பதிலாக தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் ஆட்சி, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் ஆட்சி என்ற அனைத்தையும் நாங்கள் கட்டியெழுப்பியிருக்கிறோம். அதனால் இந்த அத்திபாரத்தின் மீது மிக வலுவான கட்டிடத்தை அமைப்போம். அதில் சமத்துவம், நீதி, சமூக கருணை, சமூகத்தின் பிணைப்பு, ஒருவருக்கொருவர் கௌரவம் செயதல், பொருளாதார மலர்ச்சி, தூய்மையான நாடு, சுற்றாடலை மிகவும் தூய்மையாக பராமரிக்கும் சமூகம் அதற்கு இருக்கும். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியின் மீதும் அன்பு காட்டும் சமூகத்தை நாம் தோற்றுவிக்க வேண்டும். எனவே அவ்வாறான சமூகத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அத்திவாரத்தை அமைத்திருக்கிறோம். அமைத்துக்கொண்டும் இருக்கிறோம். சமூக எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய மிகப்பெரிய கட்டிடத்தை இதன் மீது நாங்கள் அமைப்போம். அந்த கட்டுமானத்தில் நம் அனைவருக்குமான பணிகள் உள்ளன.
அரசியல் அதிகார தரப்பான எமக்கும் பெரும் பணி உள்ளது. எமது பணிகளை நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். எமது வரம்புகளையும், இயலுமைகளையும், இயலாமைகளையும் அறிந்துகொண்டிருக்கிறோம். எம்மால் முடியாதவற்றை மற்றையவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம். எம்மால் செய்ய முடியாதவற்றை மற்றையவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். கற்றுக்கொண்டு ஊழல்,மோசடி, விரயமற்ற ஆட்சிக்காக அர்ப்பணிப்போம். அத்திபாரத்தை அமைக்க மிக வலுவான அரசியல் தலைமைத்துவம் அவசியம் அதனை நாம் வழங்குவோம். அதனை செய்திருக்கிறோம். அடுத்ததாக எமது கைதொழில் மற்றும் தொழில் முனைவோருக்கு முதலீடு செய்வதற்கான அழைப்பை விடுத்திருக்கிறோம். உங்களுக்கு அவசியமான வசதிகளுடன் முடங்கும் இடங்களை கூறுங்கள் அதற்கு தீர்வு தருகிறோம். கொழும்பு நகருக்குள் வணிக பெறுமதியுடைய வெற்று நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களை எமது முதலாவது ஆட்சி காலத்தில் வெற்றிடங்களாக வைக்கமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். அவை அனைத்தையும் நாட்டின் அபிவிருத்திகாக பயன்படுத்திக்கொள்வோம். அதற்காக கைத்தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். தேவையான சட்ட பாதுகாப்பை வழங்குவோம். உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தித் தருவோம். ஆனால் சரியான வரியை செலுத்துங்கள் அதில் ஒவ்வொரு ரூபாவையும் நாங்கள் பாதுகாத்து தருவோம்.
கைத்தொழிலாளர்கள், தொழில்முனைவோர், விவசாயிகளுக்கு பெரும் பணி உள்ளது நாட்டின் விளைச்சல் நிலங்களில் மீண்டும் விளைச்சலை ஆரம்பியுங்கள். ஒரு பகுதியிலும் வெற்று நிலங்களை வைக்காமல் விவசாய புரட்சியை நாட்டில் ஏற்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம். உர நிவாரணத்தை அதிகரிப்போம், சிறந்த விதை நெல்லை பெற்றுத்தருவோம். விவசாயத்தில் தொழில்நுட்பத்பை புகுத்த நடவடிக்கை எடுப்போம். நிலையான விலையை வழங்க நடவடிக்கை எடுப்போம். இந்த நாட்டில் விலைச்சலை ஆரம்பியுங்கள். நாட்டை கட்டியெழுப்ப விவசாயிகளான உங்களுடைய பங்களிப்பு அவசியம். எல்லை தெரியாமல் எமது பெரும் கடல் பரப்பில் சென்று மீன்பிடிக்கும் மக்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் வசதிகளை தருகிறோம். கடலுக்குச் செல்லுங்கள் மீன்பிடித்தல் அறுவடையை செய்யுங்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்யுங்கள்.
அதேபோல் எமது தொழிற்சங்கங்கள் பழைய அணுகுமுறைகளை கைவிடுங்கள். ஊசித் துண்டுக்கும் போராடிய காலத்தை கைவிடுங்கள். எமக்கு சட்டத்தினாலும், நியதிகளாலும் விடயங்களை கைவிடக்கூடிய அரசியல் கட்டமைப்பொன்று உருவாகியுள்ளது. எனவே தொழிற்சங்கங்கள் ஊசித் துண்டிலிருந்து அனைத்தையும் கேட்காதீர்கள். கால அவகாசம் தாருங்கள். வீதியில் இறங்கி விழிப்பூட்ட வேண்டிய கட்சி நாங்கள் அல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உங்களோடு பணியாற்றியிருக்கிறோம். உங்களுடைய எதிர்பார்ப்புக்களை புரிந்துகொண்டுள்ளோம். அவ்வாறு இல்லாவிட்டால் உங்கள் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்திருக்க மாட்டோம். உங்களுடைய சிறிய அழுத்தம் கூட இல்லாமல் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தோம். நீங்கள் கேட்காமல் அனர்த்த கடனை அதிகரித்தோம். உங்களுடைய கோரிக்கை இன்றி சம்பள உயர்வை அதிகரித்தோம். மேலதிக நேர கொடுப்பனவை அதிகரித்தோடம். மேலதிக வேலை நேர கொடுப்பனவை அதிகரித்தோம். எனவே சிறிதொரு சொல்லின் மீது நின்று போராட தயாராக வேண்டாம்.
அது அநீதியானது. இன்று வந்திருப்பது நாட்டை கட்டியெழுப்ப தலையீடு செய்யும், நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்லும் கட்சியே ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் எமது தொழிற்சங்கங்கள் பழைய ஆடைகளை அகற்றிவிட்டு புதிய ஆணைகளை அணிய வேண்டிய காலம் வந்திருக்கிறது. அரச சேவையை வலுவூட்டும் எண்ணம் கொண்ட அரசியல் கட்சியே இன்று இருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு வலுவான அரச சேவை அவசியம் என்பதை நம்புகின்ற அரசியல் கட்சி, அரச சேவையை பலப்படுத்துவதற்கான குழுக்களை உள்ளீர்க்க முடியும் என்ற நம்பிக்கை மிகுந்த அரசியல் கட்சி, பதவி உயர்வை அரசியல் அன்றி இயலுமை மற்றும் திறனுக்கு முன்னுரிமை அளித்து வழங்க வேண்டுமென நினைக்கும் அரசியல் கட்சியே இன்று உள்ளது. இன்று இருப்பது தொழிற் சங்கங்களுடன் ஒன்றாக பணியாற்றிய அவர்களின் இதயத் துடிப்பை அறிந்த, அவர்களித் தேவைகளுக்காக சுவரொட்டிகளை வரைந்த, அதற்காக போராடிய, அவர்களுக்காக குரல்கொடுத்த அரசியல் கட்சி. எம்மிடையே இருக்க வேண்டிய வேறுபாடுகள் என்ன? எந்த முரண்பாடுகளும் இருக்க முடியாது. ஒற்றுமையாக இந்த நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளை முன்னெடுக்க எம்மோடு இணைந்துகொள்க.
எமது இளம் அமைப்பினருக்கு பெரும் பணி உள்ளது. இளையோரின் எதிர்காலம் தொடர்பிலான மிகப் பாதகமான வரைபே அவர்களின் முன்பாக இருந்தது. சரிந்துபோன கனவுகளே இருந்தன. மீண்டும் கனவு காணும் இளம் சமூகத்தை உருவாக்குவோம். இந்த நாட்டுடன் இணைந்து உங்களுக்கான பணியை ஆற்றத் தயாராகுங்கள். பொதுமக்கள், கலைஞர்கள், சாகித்தியர்கள், மீனவர்கள், விவசாயி, வர்த்தகர், கைத்தொழில் முயற்சியாளர், அரசியல் வாதிகள் என்ற வகையில் நாங்கள் உட்பட அனைவரும் எமது சந்ததியை விடவும் எமது எதிர்கால சந்ததிக்கு நல்லதொரு நாட்டை அமைத்துக்கொடுக்க போராடுவோம்! மல்லுக்கட்டுவோம்! எம்மால் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்லதொரு நாட்டை உருவாக்க வேண்டும்.
எமது விரல்கள் தொங்கி பாலர் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு நல்ல நாடொன்றை உருவாக்க வேண்டும். எமது தாயின் கர்ப்பத்தில் துடிக்கும் குழந்தைக்கு இப்போது இருப்பதை விடவும் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அதற்காகவே இந்த அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டிருக்கிறோம். எனவே வௌியில் இருப்பவர்கள் வெட்டிப் பாடல் பாடித் திரிவோர். அரசியலும் சவாலும் எங்களிடமே உள்ளது. அவ்வளவுதான்! வௌியில் எந்த சவாலும் இல்லை. தலைவர்கள் உள்ளனரா? அரசியல் கட்சிகள் உள்ளதா? இலட்சக்கணக்கில் கிராம மக்கள் இங்கு கூடியுள்ளனர். நண்பர் சென்று கிராமங்களை பிடித்துகொண்டாரா என்பது தெரியவில்லை. மக்கள் காலி முகத்திடலுக்கு வந்தவுடன் கிராமங்களை கைபற்றுவார்களாம்! வெட்டிப் பேச்சு! அவர்களின் அரசியல் கட்சிகளும், நோக்கங்களும் முடிவைக் கண்டுள்ளன. அடி நுனியின்றி சிதைவை கண்டுள்ளனர். சில நேரங்களில் அவர்களின் வலது கைகள் எழுதுவதை வாய் பேசுவதில்லை. ஒரு மேடை சொல்வதை மற்றைய மேடையில் சொல்வதில்லை. பாரிய குழப்பத்தில் உள்ளனர். எனவே வௌியே சவால்கள் முடிந்துவிட்டன. இப்போது இங்கு மட்டுமே உள்ளது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும். மக்களை மென்மேலும் முன்னோக்கி கொண்டுச் செல்லும் பயணத்தை நாம் ஆரம்பித்திருக்கிறோம். அந்த பயணத்தை வெற்றியோடு நிறைவு செய்ய, எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க புதிய பாய்ச்சலை புதிய துணிச்சலுடன் நாம் ஆரம்பிப்போம்.
அதற்காக இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து இந்த சவாலை ஏற்கத் தயார் என்று காண்பித்துள்ளனர். நாட்டை கட்டியெழுப்ப தயார் எனும் செய்தியை கூறுகின்றனர். தேசிய மக்கள் சக்தியே நம்பிக்கைக்குரிய கட்சி என்ற செய்தியை கூறுகின்றனர். எதிர்காலம் சிறக்கும் என்ற செய்தியை கூறுகின்றனர். நாட்டுக்கும் உலகத்திற்கு வெட்டிப் பேச்சு பேசுவோருக்கும் இதுவே செய்தி. நாம் மேற்கொள்ள வேண்டிய புதிய பாச்சலை மே 6 மேற்கொள்ள முடியும். ஜனாதிபதி, கெபினட், பாராளுமன்றம், பிரதேச சபை ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்பதே எமது தேவையாகும். ஒரே வகையில் அணிவகுத்து நிற்க வேண்டும். அரசியல் அதிகார தரப்பு ஒரே திசைக்கு பயணிக்க வேண்டும். ஜனாதிபதி பதவி தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது. அமைச்சரவை தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது. பாராளுமன்றம் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது. எனவே பிரதேச சபைகளும் நகர சபைகளும் தேசிய மக்கள் சக்தி வசமாக வேண்டும். அதனுடன் இணைந்த மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டு்ம். எனவே இனியும் மத்திய அரசு திருடாது. பிரதேச சபையும் திருட்டுக்கள் இல்லாத பிரதேச சபை. மத்திய அரசு விரயம் செய்யாது. பிரதேச சபையிலும் விரயம் இருக்காது. மத்திய அரசாங்கம் சேவையும் செய்யும். பிரதேச சபையும் நகர சபையும் சேவை செய்வதாக அமையும். அவைதான் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபைகளும் நகர சபைகளுமாகும். நல்லதொரு மக்கள் ஆணையுடன் வென்றோம். இந்த நாட்டை புதிய புரிதலுடன் மலரச் செய்து, முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும்.
எமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எமக்கு இவ்வாறான வாய்ப்பு சில சமயங்களில் கிடைத்திருக்கிறது. மீண்டும் இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை விட எமக்கு எவ்வகையிலும் நியாயமான உரிமை இல்லை. எனவே கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக முகாமைத்துவம் செய்து. சரியாக திட்டமிட்டு, இலக்குகளுடன் இந்த நாட்டை புதிய திசைக்கு மாற்றுவோம். சமூக நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்திய எதிர்கால சமூகத்தை கட்டமைப்போம். அதற்காக முன்வருவோம். அர்ப்பணிப்போம். நன்றி!
(-2024.05.01 – Colombo-) 1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரத்தம் சிந்திய தொழிலாளர்களை நினைவுகூறும் வகையில், 1889 ஆம் ஆண்டு கூடிய இரண்டாவது கம்யூனிஸ சர்வதேசம், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்த முடிவு செய்தது. […]
(-2024.05.01 – Colombo-)
1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரத்தம் சிந்திய தொழிலாளர்களை நினைவுகூறும் வகையில், 1889 ஆம் ஆண்டு கூடிய இரண்டாவது கம்யூனிஸ சர்வதேசம், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்த முடிவு செய்தது.
இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள்நேய ஆட்சியின் கீழ், நாடும் சமூகமும் ஆழமான, சாதமான மாற்றத்துடன் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒரு சில குடும்பங்கள் மற்றும் பரம்பரைகளால் 76 ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் வகையில், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இன, மத வேறுபாடின்றி இந்நாட்டின் அனைத்து மக்களும் செயல்பட்டனர்.
அந்த மக்கள் ஆணையின் அபிலாஷைகளை உணர்ந்து, நாட்டில் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி செயலாற்றுகிறது. ஊழல் நிறைந்த, சிறப்புரிமை அரசியல் முறைமையால் பாதாலத்திற்குள் தள்ளப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரத்தை, மீட்டெடுத்து நிலையான ஆரம்பத்தை ஏற்படுத்துவதில் தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதன் தெளிவான அறிகுறிகள் இப்போது அனைவருக்கும் தெரிகின்றன.
அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத்திட்டத்திலேயே வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தமை உட்பட விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் மாத்திரமன்றி, உற்பத்தியாளர்கள், சிறிய வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் நன்மைகளை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் குடியுரிமை உரிமைகளை உறுதி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
நாளாந்தம் மாறிவரும் உற்பத்தி அற்றலுக்கு ஏற்ப நாம் அனுபவிக்கும் உரிமைகளில் ஒரு புதிய அத்தியாயத்தின் அவசியத்தை நாங்கள் காண்கிறோம். 1948 மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் இல்லாத டிஜிட்டல் பிரவேச உரிமைகள், சுற்றுச்சூழல் உரிமைகள் உள்ளிட்ட மாறிவரும் அரசியல் கட்டமைப்புகளின் தோற்றம் மற்றும் உலக அமைதியை அடிப்படையாகக் கொண்ட புதிய அபிவிருத்தித் தேவைகளுக்கமைய உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை இன்றைய சமூக கோருகிறது. இது குறித்த புரிதலுடன், தலையீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை சர்வதேச தொழிலாளர் தினமான இந்த சந்தர்ப்பத்தில், நாம் மீண்டும் நினைவூட்டுகிறோம்.
சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து, ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி “வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை” உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதுடன் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2025 மே மாதம் 01ஆம் திகதி
(-பொலொன்னருவா – 2025.04.20-) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து ஆவணங்களையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்தக் மிலேச்சத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். 2019 ஏப்ரல் முதல் 2024 செப்டம்பர் வரையிலான கடந்த ஐந்தரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட விசாரணைகள் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதற்காகவே நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த ஆறு […]
(-பொலொன்னருவா – 2025.04.20-)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து ஆவணங்களையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்தக் மிலேச்சத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
2019 ஏப்ரல் முதல் 2024 செப்டம்பர் வரையிலான கடந்த ஐந்தரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட விசாரணைகள் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதற்காகவே நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த ஆறு மாதங்களில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு மிகத் தெளிவான, படிப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பாகங்களும் பொதுமக்களுக்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் அந்த ஆவணங்கள் தொடர்ந்தும் மறைக்கப்பட்டிருக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
பொலன்னறுவையில் இன்று (20) இடம்பெற்ற “ வெற்றி நமதே. கிராமம் எமதே” பேரணித் தொடரின் மற்றுமொரு பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தித் தருமாறு மக்கள் கோரினார்கள். முழுமையாக சுத்தப்படுத்தினோம்.உள்ளுராட்சி சபைகளின் அதிகாரம் எமக்கு அவசியம். தேசிய மக்கள் சக்தி தவிர தெரிவு செய்வதற்கு வேறு தலைமையோ கட்சியோ உள்ளதா? மக்கள் பல்வேறு கட்சிகளுடன் பிணைப்பை வைத்திருந்தனர். அவற்றில் இருந்து ஒதுங்கி மக்கள் எமக்கு ஆணையை வழங்கினார்கள். அந்த மக்கள் ஆணையை சிறிதேனும் மக்களுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம்.
2022-23 காலப்பகுதியில் நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டது. 77 வருடங்கள் ஆட்சியாளர்களால் நாசமாக்கப்பட்ட நாட்டை தேசிய மக்கள் சக்தி மீளமைக்கும். 30 வருட யுத்தம்,இனவாதத்தினால் மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டது. தேர்தல்களில் மக்களை பிரித்தாளும் நிலை காணப்பட்டது.வாக்குகளுக்காக இனவாதத்தை பிரயோகித்தனர். ஆனால் சகல பிரதேச மக்களும் இணைந்து தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தனர். மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்தனர். இது இலங்கை அரசியல் வரலாற்றில் விசேடமான நிலை அல்லவா.
இருக்கும் சட்டங்கள் போதாவிட்டால் புதிய சட்டங்களை உருவாக்கியாவது இனவாதத்தை ஒழிப்போம்.தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவோம். 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் அதிகாரத்திற்காக பாரிய அனர்த்தம் இடம்பெற்றது.2019 ஏப்ரல் முதல் 2024 செப்படம்பர் வரை சுமார் ஒன்றரை வருடங்கள் உண்மையான சூத்திரதாரிகளை மறைக்கவே விசாரணைகளை நடத்தினர். 2019 வரை இருந்த அரசாங்கங்களோ அதன் பின்னர் அரசாங்கங்களோ எவ்வகையிலும் உண்மையான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. எவருக்கும் சந்தேக நபர்களை வெளிப்படுத்தும் நோக்கமிருக்கவில்லை.6 வருடங்கள் கடந்து விட்டன. நாம் கட்டம் கட்டமாக சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் சில பகுதிகள் மறைக்கப்பட்டன. நாட்டிற்கோ சி.ஐ.டிக்கோ முழுமையான அறிக்கை முன்வைக்கப்படவில்லை.சில பகுதிகள் மறைக்கப்பட்டே அறிக்கை வெளியிடப்பட்டது. உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் சகல ஆவணங்களையும் இன்று சி.ஜ.டிக்கு அனுப்பினேன். முழுமையாக ஆராய்ந்து விசாரணை நடத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளேன். அதில் பல பரிந்துரைகள் உள்ளன .அவற்றை செயற்படுத்துமாறும் கேட்டுள்ளேன்.இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகங்கள் உள்ளன.வவுனதீவு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கொல்லப்பட்ட இடத்தில் ஜெக்கட் ஒன்றை இட்டது யார். அது தொடர்பில் சந்தேகம் உள்ளது. அதனை ஆராய வேண்டும். சில தொலைபேசிகளின் இமி இலங்கங்களை பயன்படுத்தினார்கள் என்பதில் சந்தேகம் உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் விசாரணைகளை முன்னேடுப்போம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிப்படுத்தும் பொறுப்பை ஏற்று செயற்பட்டு வருகிறோம்.
கடந்த 6 மாத காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சவாலை எதிர்கொண்டோம்.பொருளாதாரத்தை ஒரளவு ஸ்தீரப்படுத்தியுள்ளோம்.300 ரூபாவாக டொலரின் பெறுமதி பேணப்படுகிறது. பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி வருகிறோம். எரிபொருள் மற்றும் மின்சார விலைகளை குறைத்துள்ளோம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து வருகிறோம். கட்டுநாயக்க விமான நிலையத் திட்டம் உட்பட 11 திட்டங்களை மீள ஆரம்பிக்க ஜப்பான் முன்வந்துள்ளது.76 புதிய மற்றும் பழைய திட்டங்களை மீள ஆரம்பிக்க சீனா உடன்பாடு கண்டுள்ளது.
காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சம்பூரில் 120 மெகா வோர்ட் சூரிய சக்தி திட்டம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சியம்பலாண்டுவில் 100 மெகா வோர்ட் மின்திட்டம் மற்றும் மன்னாரில் 50 மெகாவோர்ட் புதிய மின் திட்டம் ஆரம்பிக்கப்படும்.
நீர்ப்பாசன துறைக்கு மாத்திரம் 78 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவுகளுக்கு பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டை கட்டியெழுப்ப நிதி ஒதுக்கப்படுகிறது. டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும்.கோரும் அனைத்து நிதியையும் வழங்க முடியும். ஆனால் அரச இயந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பலமான அரச சேவை உருவாக்கப்பட வேண்டும்.அரச துறைக்கு ஒன்றரை வருடத்தில் 30 ஆயிரம் பேரை இணைக்க இருக்கிறோம்.
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. வறுமைய ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மாணவர்களுக்கு சுமையாக உள்ள கல்வி முறையை மாற்ற இருக்கிறோம்.2026 முதல் புதிய பாடவிதாணம் அறிமுகம் செய்யப்படும்.மாணவர்கள் செல்ல வேண்டிய பாதை 10 ஆம் வகுப்பில் தீர்மானிக்கப்படும். 13 வருட பாடசாலை கல்வி கட்டாயமானது. எந்த மாணவரும் வெறும் கையுடன் வெளியேற மாட்டார்கள்.
பசளை மானியத்தை அதிகரித்துள்ளோம். உப பயிற்செய்கைக்காகவும் 15 ஆயிரம் ரூபா பசளை மானியம் வழங்க முடிவு செய்துள்ளோம். வழங்கப்படும் பசளை மானியத்தினால் பசளை மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும். பசளைபெற வவுச்சர் வழங்கப்படும். அறுவடையை நியாயமான விலைக்கு வாங்குவோம். இம்முறை எவருக்கும் நெல்விலை தொடர்பான பிரச்சினை எழுந்திருக்காது.இனி ஒருபோதும் அவ்வாறான பிரச்சினை எழாது. 3 மெற்றிக் தொன் களஞ்சியம் செய்யக் கூடிய களஞ்சியங்கள் அமைக்கப்பட்டன.குறைந்த விலைக்கு செல்லும் அனைத்து நெல்லையும் அரசாங்கம் வாங்கும். 500 கோடி ஒதுக்கினோம். ஆனால் நெல் வரவில்லை. விவாசாயிக்கு நியாயமான விலை நெல்லுக்கு வழங்க வேண்டும்.
விவசாயிகளின் காணி உறுதி தொடர்பான பிரச்சினை உள்ளது. விவசாயிகளுக்கு காணி உறுதி வழங்க தயார். ஆனால் அவற்றை விற்க முடியாது.
கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் ஊடாக வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும். இந்த வருடத்தில் முதற்கட்டமாக பஸ்கொள்வனவிற்காக 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுகிறது. பதிவு செய்யப்படாமல் வீதியில் வாகனம் செலுத்திய முன்னாள் அமைச்சர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். இலஞ்ச ஊழல் திணைக்களம்,சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பலப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் ஐந்து சதத்தைக் கூட திருடாத வீண் விரயம் செய்யாத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வருக்கு எதிராக ஒரு வழங்கும் அடுத்த மகனுக்கு எதிராக இரு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. பாட்டிக்கு எதிராகவும் வழக்கு பதிவாகும்.சி.ஐ.டி ஊடாக பல விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. சட்டவிரோதமாக உழைத்த சொத்துக்களை மீளப் பெற பலமான சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இதற்காகத்தான் எமக்கு ஆணை வழங்கினார்கள். பயந்தவர்கள் தான் அதிகமாக பேசுகிறார்கள்.முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு சவால் விடுகிறார்கள். எமக்கு யாரையும் பலிவாங்கத் தேவையில்லை.தற்பொழுது தான் திறைசேரியின் நிதி மக்களுக்கு சென்றடைகிறது. மக்களின் வரிப்பணம் நாட்டு நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்றம்,பிரதேச சபை.நகர சபைகள் அனைத்தும் இணைந்து பல வருடங்கள் போராடி நாட்டை கட்டியெழுப்புவோம் என்றும் தெரிவித்தார்.
(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. யாழ்ப்பாணம் வெற்றிப் பேரணி-2025.04.17-) – ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு எந்த வடிவத்தில் இனவாதம் நாட்டில் மீண்டும் தலைதூக்க முயற்சித்தாலும் அதனைத் தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இனவாதத்தைத் தூண்டும் குழுக்களுக்கு என்ன முத்திரை குத்த முயற்சித்தாலும், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார். […]
(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. யாழ்ப்பாணம் வெற்றிப் பேரணி-2025.04.17-)
– ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு
எந்த வடிவத்தில் இனவாதம் நாட்டில் மீண்டும் தலைதூக்க முயற்சித்தாலும் அதனைத் தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இனவாதத்தைத் தூண்டும் குழுக்களுக்கு என்ன முத்திரை குத்த முயற்சித்தாலும், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
“வெற்றி நமதே – ஊர் எமதே” மக்கள் பேரணித் தொடரின் மற்றொரு பேரணி யாழ்ப்பாணத்தில் நேற்று (17) நடைபெற்றதுடன் அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
எந்தவொரு மாகாண மக்களின் உரிமைகளையோ அல்லது பாரம்பரியத்தையோ பறிக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என்று கூறிய ஜனாதிபதி, திஸ்ஸ விகாரையின் பிரச்சினையைத் தீர்க்க, அதில் உள்ள அரசியல் அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், போரின் கசப்பான வரலாறும், நாம் மறந்துவிட வேண்டிய வரலாறும் மீண்டும் நிகழ அனுமதிக்கப்படாது என்றும் தெரிவத்த ஜனாதிபதி, யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, புதிய நகரத் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனுபவிக்கும் வலியை தாம் நன்கு அறிவதாகக் கூறிய ஜனாதிபதி, அந்த வலியைப் போக்க, அவர்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், உண்மையை வெளியே கொண்டுவர அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்காக நாட்டு மக்கள் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நியமித்ததாக மேலும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இருண்ட கடந்த காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் இது என்றும், மீண்டும் கட்டியெழுப்பப்படும் நாட்டிற்கு வருகை தந்து முதலீடு செய்யுமாறு தான் தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாட்டில் எப்போதும் தேர்தல்களில் மக்களிடையே பிரிவினை ஏற்படுகின்றது. ஆனால் கடந்த பொதுத் தேர்தலில், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் என அனைத்து மக்களின் விருப்பமும் தேசிய மக்கள் சக்தியாக இருந்தது. கடந்த தேர்தலில் பிளவுபடுவதற்குப் பதிலாக, மக்கள் நாட்டுக்காக ஒன்று திரண்டனர். இவ்வாறு ஒன்றுபட்ட நாம், மீண்டும் ஒருபோதும் பிரிந்து விடக்கூடாது. நாம் ஒருவருக்கொருவர் பயத்துடனும் சந்தேகத்தடனும் வாழும் ஒரு நாட்டை நாம் விரும்பவில்லை.
சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து, இறக்கும் ஒரே தாயகமாக, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சம உரிமைகளைப் பெறும் ஒரு நீதியான நாட்டைக் கட்டியெழுப்புவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விருப்பமாகும், நாங்கள் ஒருவரையொருவர் வெறுத்துள்ளோம். போர் நடத்தியுள்ளோம்.
ஆனால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை. எங்களுக்கு எஞ்சியிருந்தது பேரழிவிற்குள்ளான வடக்கு மாகாணமும், தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர்களும் மாத்திரமே. எங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் இழந்துவிட்டோம். இது வடக்கிலும் தெற்கிலும் நடந்தது. மீண்டும் அப்படி ஒரு சகாப்தம் நமக்கு வேண்டாம். நாம் இப்போது அதனை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். எமது தலைமுறை போர்களை நடத்தியது. சண்டைபிடித்தோம்.
ஆனால், தேசிய மக்கள் சக்தி நமது குழந்தைகளின் தலைமுறைக்காகப் போர் செய்யாத, சண்டையிடாத, அனைவரும் ஒற்றுமையாக வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நம் நாட்டில் இனிமேலும் இனவெறி இல்லை. அரசியல்வாதிகளுக்குத் தேவையானதுதான் இனவெறி. திஸ்ஸ விகாரையை தொடர்பில் ஒரு பிரச்சினை இருப்பது உங்களுக்குத் தெரியும். கடந்த பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில், திஸ்ஸ விகாரை பிரச்சினையைத் தீர்ப்பது இலகுவானது என்று நான் கூறினேன். அந்தப் பிரச்சினையின் பின்னணியில் நடத்தப்படும் வடக்கு மற்றும் தெற்கின் அரசியல் அகற்றப்பட வேண்டும். திஸ்ஸவிகாரையில் உள்ள அரசியல் நீக்கப்பட்டால், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
விகாரையின் விகாராதிபதி, அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள், நாக விகாரையின் தேரர் ஆகியோர் ஒன்று சேர்ந்தால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். அரசியல்வாதிகள் விரும்புவது மீண்டும் இனவாதத்தைத் தான். ஒரு அரசாங்கமாக, எந்தவொரு மாகாண மக்களின் உரிமைகளையோ அல்லது பாரம்பரியத்தையோ பறிக்கும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஒருபோதும் எடுக்க மாட்டோம்.
இந்த நாட்டில் எங்கெல்லாம் தொல்பொருள் கலைப்பொருள் காணப்பட்டாலும், எங்கெல்லாம் வரலாற்று இடிபாடுகள் காணப்பட்டாலும், அவற்றை சிங்களவர், தமிழர் அல்லது முஸ்லிம் என்று நாம் அடையாளம் காணத் தேவையில்லை. நாம் அதை நாட்டின் பாரம்பரியமாகப் பார்க்க வேண்டும்.
ஆனால் இப்போது, தொல்பொருட்களும் வரலாற்று இடிபாடுகளும் கண்டுபிடிக்கப்படும்போது, அவை சிங்களமா அல்லது தமிழா என்பதை தீர்மானிக்க முயற்சிக்கிறார்கள். அதுதான் இனவெறியரின் இயல்பு. ஆனால் அவற்றைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு வழங்க நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.
இந்த இனவாதக் குழுக்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டன. ஆனால் மீண்டும், அதே இனவெறியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் மோதல்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், எந்த உருவத்தில் அல்லது எந்த வழியில் இனவாதம் மீண்டும் தலைதூக்க முயன்றாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதைத் தோற்கடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நமக்கு தேசிய ஒற்றுமை அவசியம். யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய அரசியல் தலைவர்கள் இருந்தனர்.
பாரம்பரிய கட்சிகள் இருந்தன. இந்த பெரிய கட்சிகள் இருந்தபோதும், சிறந்த தலைவர்கள் இருந்தபோதும் நீங்கள் எங்களை நம்பினீர்கள். எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும், எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எங்களை நம்பி நீங்கள் தீர்க்க விரும்பும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
நாங்கள் அவற்றைத் தீர்ப்போம். இனவாதக் குழுக்களால் எத்தகைய முத்திரைகள் சூட்டப்பட்டாலும் சரி, எத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் சரி, உங்கள் உரிமைகளையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.
முதலாவதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். இனிமேலும் பாதுகாப்பு காரணங்கள் என்ற போர்வையில் மக்களின் நிலங்களை வைத்திருக்க அரசாங்கத்திற்கு உரிமை இல்லை. விடுவிக்கப்படக்கூடிய அனைத்து நிலங்களும் விடுவிக்கப்படும். நீங்கள் நிலங்களில் குடியேறுங்கள். பயிரிடுங்கள்.
யுத்தம் வரும் என்று எதிர்பார்த்து நாங்கள் செயற்படவில்லை, யுத்தம் வராமல் தடுக்க தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது. அதுதான் ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்தப் பகுதியில் ஏராளமான வீதிகள் மூடப்பட்டிருந்தன. நாங்கள் அந்த வீதிகளை படிப்படியாக மீண்டும் திறந்து வருகிறோம். நீங்கள் சுதந்திரமாக செயல்படுங்கள். கொழும்பிலும் வீதிகள் மூடப்பட்டிருந்தன.
ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதி, அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதியும் மூடப்பட்டிருந்தன. நாங்கள் அந்த வீதிகளைத் திறந்தோம். ஜனாதிபதி, பிரதமர் மாளிகைகளுக்கு முன்னால் வீதிகளைத் திறக்க முடியும் என்றால், யாழ்ப்பாணத்தில் வீதிகளை மூடுவதற்கு எந்த உரிமையும் இல்லை.
இந்த யாழ்ப்பாணத்தை நாங்கள் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவோம். போரின் கசப்பான வரலாறு, நாம் மறக்க வேண்டிய வரலாறு, மீண்டும் நிகழ இடமளிக்க மாட்டோம். காணாமல் போனவர்கள் பற்றிய ஒரு பிரச்சினை இருப்பதாக எனக்குத் தெரியும். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். உங்கள் பிள்ளையை அரசாங்கத்திடம், பொலிஸ் நிலையத்திலோ அல்லது இராணுவ முகாமிலோ ஒப்படைக்கப்பட்டால், அவருக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அது ஒரு பொறுப்பான அரசாங்கத்தின் கடமையாகும்.
காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோரின் வலியை நான் அறிவேன். பொதுவாக ஒருவர் இறந்தால், நாம் அந்த உடலைக் காண்கிறோம். மதச் சடங்குகள் செய்யப்படுகின்றன. எமது கையாலே இறுதிச்சடங்குகளை நிறைவேற்றுகிறோம். நாம் காலப்போக்கில் இயல்பு நிலைக்குத் திரும்புகிறோம். ஆனால் ஒரு பிள்ளை காணாமல் போகும் போது அவ்வாறு இல்லை. மிகுந்த வலி இருக்கிறது. என் உறவினர் ஒருவரும் காணாமல் போனார். அதனால் அந்த வலி எனக்குத் தெரியும். அந்த வலி தீரவேண்டுமாயின், பிள்ளைகளைப் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அது யாரையும் பழிவாங்குவதற்காக அல்ல. அது அமைதிக்கு அவசியம். நாங்கள் அதை ஒரு அரசாங்கமாக நிறைவேற்றுவோம்.
நாம் வரலாற்றில் வாழ்வதிலிருந்தும் அதன் வலியிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டும். அதனால்தான் நீங்கள் எங்களை நம்பினீர்கள். நீங்கள் பழையதை விரும்பினால், பழைய கட்சிகளைத் தெரிவு செய்திருப்பீர்கள். நீங்கள் எங்களை புதிய விடயத்திற்காகத் தேர்ந்தெடுத்தீர்கள். அந்தப் புதிய விடயங்களை நாங்கள் பயமின்றிச் செய்வதை உறுதிசெய்கிறோம். அது செய்யப்பட வேண்டும். இது எமது நாடு. இதுதான் நாம் அனைவரும் வாழும் நாடு.
அது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையை படிப்படியாக மேம்படுத்த வேண்டும். பழைய ஆட்சியாளர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாரியளவில் சீர்குலைந்தனர். எரிபொருள், மருந்தை இறக்குமதி செய்ய முடியாத, கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத ஒரு நாட்டை அவர்கள் உருவாக்கினர். ஆனால் நாம் இப்போது படிப்படியாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருகிறோம்.
இதற்காக அனைத்து நாடுகளிடமிருந்தும் நாங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதே எங்கள் குறிக்கோள். வளரும் பொருளாதாரத்தின் நன்மைகளை இந்த நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கும் நாங்கள் தற்போது செயற்பட்டு வருகிறோம்.
நான் அண்மையில் இந்த யாழ்ப்பாண மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
அங்கு எங்களுக்கு பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அந்த ஒவ்வொரு திட்டத்திற்கும் நாங்கள் பணம் ஒதுக்கினோம். காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை சிறந்த திட்டத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு வழங்க நான் தயாராக இருப்பதாக அதன்போது தெரிவித்தேன்.
இதுபோன்ற இடங்களை மக்களுக்காக செயற்படும் இடங்களாக மாற்ற வேண்டும். நம் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இடங்களாக அவை இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் அவர்களை விடுவிக்கிறோம்.
மேலும், நாங்கள் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பத்து இலட்சத்து 5,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது, இது இந்த மாகாணத்தில் வீதிப் புணரமைப்புக்காக அண்மைய காலங்களில் செய்யப்பட்ட அதிகபட்ச ஒதுக்கீடாகும். அது மட்டுமல்ல, வரலாற்றில் இருண்ட நிகழ்வுகளில் ஒன்று யாழ்ப்பாண நூலகத்துடன் தொடர்புடையது. ஒரு நூலகத்தின் அழிவு எங்கள் இதயங்களை பாதித்தது.
நூலகத்தை எரிப்பது இனவெறியின் உச்சம். இந்த ஆண்டு நூலக வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 கோடி ரூபாவை ஒதுக்கினோம்.
அதுமட்டுமல்ல, இந்த நகர சபைக்கு ஒரு பாரிய கட்டிடம் இருக்கிறது. ஆனால் எந்தப்பயனும் இல்லை. அது ஒரு பாரிய கட்டிடம். எங்கள் கிராமங்களில் வீடுகள் மிகச் சிறியவை. எங்கள் நகர சபை மிகப் பெரியது. அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்காக அதைப் புதுப்பிக்க பத்து இலட்சத்து 400 ரூபாவை ஒதுக்கியுள்ளோம். இவற்றைக் புணரமைத்து மக்களுக்கான இடங்களாக மாற்ற வேண்டும்.
மேலும், வடக்கு மாகாண மக்கள் நிலத்துடன் தொடர்புபடும் மக்கள். நாம் உர மானியத்தை 15,000 த்திலிருந்து 25,000 ஆக அதிகரித்தோம். மரக்கறி மற்றும் பழங்களைப் பயிரிடுவதற்காக உர மானியங்களை வழங்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வட மாகாணத்தில் 16,000 ஏக்கரில் தென்னை பயிரிடலாம். ஒரு புதிய தேங்காய் முக்கோணத்தை உருவாக்கலாம்.
அதற்கு அரசாங்கம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்காக நாங்கள் 500 மில்லியன் ஒதுக்கினோம். தென்னை வளர்க்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் தென்னங் கன்றுகளை வழங்குகிறது. தென்னை உரம் வழங்கப்படும். தென்னை அகழிகளை வெட்டி நிலத்தை தயார் செய்ய பணம் தருகிறேன். பயிர்செய்யத் தயாராகுங்கள். வடக்கு, தெற்கு அல்லது கிழக்கு என்ற பேதமின்றி இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் பாடுபடுவோம்
இந்த வட மாகாணத்தில் சுற்றுலாவுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அருகம்பே அல்லது தெற்கிற்கு வருவது போல் வடக்குக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. உள்நாட்டு விமான சேவைகளை மேலும் வலுப்படுத்தி, கொழும்புக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும்.
யாழ்ப்பாணம் ஒரு புதிய சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டும். பழைய யாழ்ப்பாணத்தைப் பிரதிபலிக்கும் புதிய அபிவிருத்தித் திட்டத்துடன் அடுத்த ஆண்டு யாழ்ப்பாண நகரத்தை மறுவடிவமைக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். யாழ்ப்பாணம் ஒரு வரலாற்று நகரமாக பிரதிபலிக்கப்பட வேண்டும்.
அவர்களின் கலாசாரம், வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் மீண்டும் கட்டியெழுப்ப தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபை திட்டங்களைத் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு அதற்கான பணத்தை ஒதுக்குவோம்.
யாழ்ப்பாண மக்களின் குடிநீர் மற்றும் கழிவகற்றல் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என்ற பேதமின்றி அனைத்து மாகாண மக்கள் மீதும் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் நம்பிக்கை கொண்ட ஒரு அரசாங்கம்
மேலும் 1983 ஆம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பது நமக்குத் தெரியும். இன்று அவர்கள் உலகில் பாரிய தொழிலதிபர்களாகவும் செல்வந்தர்களாகவும் மாறிவிட்டனர். உங்கள் உறவினர்கள் வசிக்கும் பூமியை கட்டியெழுப்பவும், அவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடிந்தவரை முதலீடு செய்யவும், புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும் இலங்கைக்கு மீண்டும் திரும்பி வருமாறு நான் அழைக்கிறேன்.
இந்த நாடு இப்போது பாதுகாப்பானது. இனவாதம் இல்லாத நாடாக மாறியுள்ளது. அனைவரின் உரிமைகளையும் நியாயமாக அங்கீகரிக்கும் நாடு. அனைத்து கலாசாரங்களையும் மதிக்கும் நாடு. எனவே, இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உங்கள் முதலீடுகளைப் பயன்படுத்துமாறு நான் உங்களை அழைக்கிறேன்.
இது ஒரு புதிய அத்தியாயம், பழைய இருண்ட கடந்த காலத்தை நிறைவுசெய்து புதிய எதிர்காலத்திற்குச் செல்லும் ஒரு அத்தியாயம். இது மிகவும் முக்கியமான அரசியல் மாற்றமாகும். இது எங்கள் தாய்மார்களும் தந்தைமார்களும் நீண்ட காலமாக பிரார்த்தித்த ஒன்று. அவர்கள் பல்வேறு வழிகளில் இத்தகைய அரசாங்கமொன்றை எதிர்பார்த்தனர்.
இப்போது அந்த அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது. , பொதுமக்களின் பணத்தில் ஒரு சதத்தையேனும் திருடாத அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது. பழைய அரசியல் இந்த நாட்டை ஏழ்மையாக்கியது. மக்கள் ஏழைகளாக்கப்பட்டனர். ஆனால் ஆட்சியாளர்கள் செல்வந்தர்களானார்கள். அந்தக் கலாசாரத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். இப்போது, அனைவரையும் ஒன்றிணைந்து பிரதேச சபைகளையும், நகர சபைகளையும் வலுப்படுத்தி, அந்தத் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லுமாறு நான் அழைக்கிறேன்.