(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. மன்னார் வெற்றிப் பேரணி-2025.04.17-) புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையிலான பாதைக்கு மாற்றுத்திட்டத்துடன் புதிய வகையில் இணைக்க நடவடிக்கை சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தெங்கு பயிரிட திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைத்து மக்களின் கருத்துக்களுடனே மன்னாரில் காற்றாலை திட்டங்கள் முன்னெடுப்பு – மன்னாரில் ஜனாதிபதி தெரிவிப்பு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர், மாற்று திட்டங்களுடன் மன்னாரையும் புத்தளத்தையும் புதிய வழியில் இணைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி […]
(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. மன்னார் வெற்றிப் பேரணி-2025.04.17-)
புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையிலான பாதைக்கு மாற்றுத்திட்டத்துடன் புதிய வகையில் இணைக்க நடவடிக்கை
சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை
வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தெங்கு பயிரிட திட்டம்
சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைத்து மக்களின் கருத்துக்களுடனே மன்னாரில் காற்றாலை திட்டங்கள் முன்னெடுப்பு
– மன்னாரில் ஜனாதிபதி தெரிவிப்பு
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர், மாற்று திட்டங்களுடன் மன்னாரையும் புத்தளத்தையும் புதிய வழியில் இணைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த வீதி திறக்கப்படுவதால் புத்தளத்திற்கான தூரம் சுமார் 90 கிலோமீட்டர் குறையும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு செவிசாய்த்து மக்களுக்காக பாடுபடும் ஒரு அரசாங்கம் என்றும் வலியுறுத்தினார்.
மன்னாரில் இன்று (17) நடைபெற்ற ‘ வெற்றி நமதே – ஊர் எமதே’ மக்கள் பேரணித் தொடரின் மற்றொரு பேரணியில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இனவாத அரசாங்கங்களுக்குப் பதிலாக தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, நாட்டில் இனி இனவாதத்திற்கு இடமில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து மக்களையும் சகோதரத்துவத்துடன் நடத்தும் மற்றும் அனைவரின் உரிமைகளையும் அங்கீகரிக்கும் அரசாங்கமாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மன்னாரிலுள்ள வளங்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற்று சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து அவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு வன பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை மக்களிடம் திருப்பிக் கொடுப்பதற்கும், மூடப்பட்ட பாதைகளை மீண்டும் திறப்பதற்கும் தேவையான பின்னணி உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். பேசாலை பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தல் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் இரு உறுப்பினர்களும் தேசியப்பட்டியல் ஊடாக ஒருவரும் தெரிவானார்கள். இந்த வெற்றிக்கு இப்பகுதி மக்கள் பெரும் பங்காற்றினர். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பிரித்தாளுகின்ற அரசியலுக்கு முடிவு கட்டியுள்ளோம். இதற்கு முன்னர் வாக்குகளினால் மக்களை பிரித்தனர்.வடக்கு மக்கள் தமிழ் கட்சிகளை தெரிவு செய்தனர். கிழக்கு மக்கள் முஸ்லிம் கட்சிகளை தெரிவு செய்தனர். தெற்கிலுள்ள மக்கள் சிங்கள கட்சிகளை தெரிவு செய்தனர். கடந்த தேர்தலில் அனைத்து மக்களும் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தனர். அனைவரும் ஒன்றாக வாழும் நாடே எமக்குத் தேவை. இனவாதத்தினால் நாம் மோசமாக பாதிக்கப்பட்டோம். இனியும் இனவாதத்திற்கு இடமளிக்காது தேசிய ஐக்கியத்திற்கான அரசை உருவாக்கியுள்ளோம்.
இதற்கு முன்னர்அவ்வாறான அரசு உருவானதா? இனவாத அரசுகளே இருந்தன.சிங்களவராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் தமிழராக இருந்தாலும் அவர்கள் இலங்கையர்கள். பிரித்தாளும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். யுத்தத்தை காரணம் காட்டி இப்பகுதி மக்களின் காணிகள் அரசாங்கத்திற்கு பெறப்பட்டுள்ளன. சில வீதிகள் மூடப்பட்டுள்ளன. சில தனியார் காணிகள் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு பெறப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகளை தீர்க்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
நாட்டை முன்னேற்றுகையில் மன்னார் மாவட்டம் முக்கிய பிரதேசமாகும். மன்னார் மக்கள் கடற்றொழிலில் வாழுகின்றனர். எமது கடலில் சட்டவிரோதமாக படகுகளில் வந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அண்மையில் இந்திய பிரதமரின் வருகையின் போது இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் நடத்தினோம்.எமது கடல்வளம் எமது மக்களுக்குரியது. இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எமது கடலை பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொள்வோம். இது தொடர்பில் கடற்படைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
மன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் படகுச் சேவை இருந்தது. அதனை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் ராமேஸ்வரத்திற்கான படகு சேவையை ஆரம்பிப்போம். மன்னாரில் பாரிய காற்றலை மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய பிரதேசமாகும். மக்களின் கருத்துக்களை செவிமடுக்காது காற்றாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவற்றை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு காற்றாளை செயற்பட தயாராக இருக்கிறோம். அனைத்துத் திட்டங்களும் மக்களின் ஒப்புதலுடன் பாதிப்புகளை குறைத்து மேற்கொள்வோம். சுற்றாடலுக்கு பாதிப்பான திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம்.
புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையிலான பாதை நீண்டகாலமாக மூடப்பட்டுள்ளது. இந்தப் பாதையை திறந்தால் புத்தளத்திற்கான பயணத்தூரம் 90 கிலோமீட்டர் வரை குறையும். புத்தளத்திற்கான பாதை தொடர்பிலான சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.தற்பொழுது நிர்மாணிக்கப்படும் பாதைக்கு மாற்றுவழியுடன் புதிய விதத்தில் புத்தளம் மற்றும் மன்னாரை இணைக்க இருக்கிறோம். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே இந்த அரசாங்கம் உள்ளது.மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்கும் அரசாங்கத்தை மக்கள் தான் ஒன்றிணைந்த உருவாக்கினார்கள்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தி வருகிறோம். 5 வருடங்களின் பின்னர் டொலர் கையிருப்பு பாரியளவில் அதிகரித்துள்ளது. 6 மாதங்களாக ரூபாவின் பெறுமதி அசையாமல் இருக்கிறது. எரிபொருள்,மின்சார விலைகளை குறைத்துள்ளோம்.மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறோம். அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினோம். அஸ்வெசும கொடுப்பனவை அதிகரித்துள்ளதோடு கொடுப்பனவு பெறுவோரின் தொகையை 4 இலட்சத்தினால் அதிகரித்துள்ளோம். பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் பெறுவதற்கு 16 இலட்சம் மாணவர்களுக்கு 6 ஆயிரம் ரூபா வீதம் வழங்கினோம். புதிதாக 30 ஆயிரம் பேரை அரச சேவைக்கு இணைக்க இருக்கிறோம். அமைச்சர்களின் பின்னால் சென்று தொழில் கேட்கத் தேவையில்லை.பரீட்சைில் அதிக புள்ளி பெறுபவர்களுக்கு தொழில் கிடைக்கும். அரச சேவையில் தமிழ்மொழியில் பணியாற்றுவோரின் குறைபாடு உள்ளது. பொலிஸிலும் தமிழ் போசுவோரின் குறைபாடு உள்ளது. உங்கள் பிள்ளைகளையும் அரச சேவையிலும் பொலிஸ் சேவையிலும் இணையுங்கள்.
எமது நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட வேண்டும். முன்னர் பணம் செல்வாக்கிருந்தோருக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறான ஒரு நாடு தேவையில்லையா? இன்று பேதமின்றி அனைவருக்கும் சமனாக சட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதனால் தான் பொலிஸ்மா அதிபருக்கு பொலிசுக்குப் பயந்து தலைமறைவாக நேரிட்டது.
லஞ்ச ஊழல் திணைக்களத்தினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதலமைச்சர்கள் விளக்கமறியலில் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படுகிறது. வரலாற்றில் முதன்முறையாக பொதுமக்களின் பணத்தை திருடாத வீண்விரயம் செய்யாத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தை பாதுகாத்து பலப்படுத்த வேண்டும். நாம் திருடுவதில்லை. திருடியவர்களை தண்டிப்போம். முன்னர் இருந்தவர்கள் ஜனாதிபதியாக தெரிவான திகதியில் இருந்து அமைச்சராக தெரிவான தினத்தில் இருந்து திருடுவதற்குத் தான் திட்டம் தீட்டினார்கள். வடமத்திய முதலமைச்சர் 26 இலட்சம் ரூபாவை மோசடி செய்த காரணத்தால் அவருக்கு எதிராக 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தவறுகள் குறித்தும் விசாரணைகளையும் நடத்தி தண்டனை வழங்குவோம். கொலை,திருட்டு,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என அனைத்தையும் விசாரணை செய்வோம். தவறு செய்த அமைச்சர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் மக்களுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த நிலையை மாற்றியுள்ளோம்.
உள்ளுராட்சி சபைகளுக்கு குறைவான வருமானமே கிடைக்கிறது. முசலி பிரதேச சபை குறைந்த வருமானம் பெறும் சபையாகும். மன்னார் நகர சபைக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது.ஆனால் அதிக பணிகள் உள்ளன. வீதிகளை நிர்மாணிக்க வேண்டும்.வடிகாண்களை சீரமைக்க வேண்டும்.பொதுமயானங்களை சீர்செய்ய வேண்டும். முன்பள்ளிகளை அமைக்க வேண்டும். ஆனால் எமது அரசாங்கத்திடம் நிதி உள்ளது. வடக்கு மாகாண வீதிகள் சீரமைக்க இந்த வருடம் 5 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளோம். மேலும் வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தென்னங்கன்றுகளை நட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கான சகல வசதிகளையும் வழங்குவோம். அந்த நிதியை யாருக்கு ஒதுக்க வேண்டும். உள்ளுராட்சி சபையிடம் நிதி இல்லாத போது மத்திய அரசு அதற்கான நிதியை வழங்கப்படும். உள்ளுராட்சி சபைகளிடம் இருந்து வரும் பரிந்துரைகளை ஆராய்ந்து நிதி ஒதுக்குவோம்.நிதியை ஒதுக்க முன்னர் யார் அந்த பரிந்துரைகளை அனுப்புகின்றனர் என்று ஆராய்வோம்.
மன்னார் நகர சபை தேசிய மக்கள் சக்தியின் கீழ் இருக்கும் உள்ளுராட்சி சபையெனின் அந்த பரிந்துரையை கண்ணை மூடிக்கொண்டு அனுமதிப்போம். ஆனால் ஏனைய கட்சியின் கீழ் உள்ள உள்ளுராட்சி சபைகள் எனின் ஆயிரம் தடவை ஆராய்வோம்.வீதிக்கு கொங்கிரீட் இட நிதி கோருவார்கள். வீதிக்கு கொஞ்சம் தான் பணம் செல்லும். அதிக தொகையை சுருட்டிக் கொள்வார்கள். மத்திய அரசாங்கம் திருடாமல் பணத்தை சேகரித்து வைத்த பணத்தை திருடுவதற்காக மன்னாருக்கு அனுப்ப வேண்டுமா? மத்திய அரசு திருடாவிடின் உள்ளுராட்சி சபையும் அவ்வாறே இருக்க வேண்டும். நகர சபை,மற்றும் பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக் கொடுங்கள்.இல்லாவிடின் மத்திய அரசு திருடாத நிலையில் உள்ளுராட்சி சபை திருடும் நிலை ஏற்படும். தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரும் வாக்களியுங்கள்.எதிர்வரும் மே 6 ஆம் பலமான மக்கள் ஆணையை பெற்றுத் தாருங்கள். இங்கு என்ன நிலைமை என்ன என்று கேட்டேன். ‘ நல்லம்’ என்றார்கள். பொதுத்தேர்தலை விட சிறந்த பெறுபேறு இந்த தேர்தலில் கிடைக்கும். நாடு முன்னேற்றப் பாதைக்கு வந்துள்ளது. பழைய தோல்வியடைந்த பாதையில் இனியும் சென்று பயனில்லை.
அமைச்சர் ராமலிங்கம் சந்ரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜகதீஸ்வரன் ஆகியோரும் இங்கு உரையாற்றியதோடு உள்ளுராட்சி சபை வேட்பாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. காலி வெற்றிப் பேரணி – 2025.04.07-) செப்டம்பர் 21 வரையிருந்த அரசியல் பாதையை மாற்றியமைத்து தனித்துவமான அரசியல் தீர்மானமொன்றை மக்கள் எடுத்தனர். பழைய தோல்வியுற்ற அரசியல் முகாம்களைத் தோற்கடித்து, அதிகாரத்தை சாதாரண மக்களுக்கு அளிக்கும் வெற்றியாக அது அமைந்தது. பின்னர், அந்த வெற்றியை மேலும் வலுப்படுத்தி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் எங்களுக்கு மற்றொரு விசேடமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள். அதேபோன்று உள்ளுராட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெற […]
(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. காலி வெற்றிப் பேரணி – 2025.04.07-)
செப்டம்பர் 21 வரையிருந்த அரசியல் பாதையை மாற்றியமைத்து தனித்துவமான அரசியல் தீர்மானமொன்றை மக்கள் எடுத்தனர். பழைய தோல்வியுற்ற அரசியல் முகாம்களைத் தோற்கடித்து, அதிகாரத்தை சாதாரண மக்களுக்கு அளிக்கும் வெற்றியாக அது அமைந்தது. பின்னர், அந்த வெற்றியை மேலும் வலுப்படுத்தி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் எங்களுக்கு மற்றொரு விசேடமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள்.
அதேபோன்று உள்ளுராட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தல் மார்ச் 2023 இல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் முந்தைய அரசாங்கம் இந்தத் தேர்தலை ஒத்திவைத்தது. சிறிய தேர்களை ஒத்திவைத்தாலும் பெரிய தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்று மக்களிடம் கூறினோம். அதை உண்மையாக்கும் வகையில் இந்த நாட்டின் அரசியலை நாங்கள் முழுமையாக மாற்றியமைத்தோம்.
இந்த உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு சில விடயங்களை நிறைவுசெய்ய வேண்டியிருந்தது. முன்னர் பெறப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்யவும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்கான புதிய சட்டத் திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியிருந்தது, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நமது அரசாங்கத்தின் முதல் திருத்த சட்ட மூலமாக உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. பின்னர் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்றது. திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து, ஏப்ரல் 6 அல்லது 7 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்த முடியும்.
புத்தாண்டுக்கு முன்பு தேர்தலை நடத்த நாம் விரும்பினோம். ஆனால் எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணைக் குழுவை கோரியிருந்தன. அதன்படி, தேர்தல் மே 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் நாங்கள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியவாறு தேர்தல் ஆணைக்குழு செயல்பட்டிருந்தால், இந்நேரம் உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்கும். எங்களுக்கு தொடர்ந்து தேர்தல்களை நடத்த வேண்டிய தேவையில்லை. வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் அதிக அளவில் பணத்தை வழங்கியுள்ளோம். டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பு அந்தப் பணத்தைக் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். இப்போது, அந்த நடவடிக்கைகள் மே 6 ஆம் திகதி வரை தாமதிக்க நேரிட்டது. ஆனால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஒரு கடினமான அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்பதை எதிர்க்கட்சி நினைவில் கொள்ள வேண்டும்.
இலங்கை வரலாற்றில் இந்தத் தேர்தலைப் போல அரசியலில் இவ்வளவு தெளிவான பிளவு இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. இன்று, நாட்டின் அரசியல் இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது. அந்த இரண்டு முகாம்களும் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நமது அரசாங்கமும், ஆங்காங்கு ஒன்றிணைந்துள்ள இடிபாடுகளும் அந்த இரண்டு முறைகள் ஆகும். அவர்களின் தேர்தல் மேடை, அவர்களின் பாராளுமன்ற உரை, பாராளுமன்றத்திற்கு வெளியே அவர்கள் ஆற்றும் உரைகள் ஆகியவற்றை நோக்கும் போது, அனைவரின் எதிர்ப்பும் தேசிய மக்கள் சக்திக்கு என்பதை உணரலாம்.
செப்டம்பர் 21 ஆம் திகதி பெற்ற வெற்றியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பை வெற்றிபெறச் செய்வதா இன்றேல் அந்தப் பயணத்தைத் திருப்புவதற்காக ஒன்றிணைந்துள்ள இடிபாடுகளின் குவியலை முன்னோக்கிக் கொண்டு செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில், இந்த நாட்டு மக்கள் பழைய அரசியல் முகாம்களை தீர்க்கமாக தோற்கடித்தனர். அந்தத் தோல்விக்குப் பிறகு பெற்ற வெற்றியை முன்னோக்கி எடுத்துச் செல்வதா இல்லையா என்பதை மக்கள் இப்போது முடிவு செய்ய வேண்டும். நம் நாட்டு மக்கள் நாட்டிற்காக முன்வைத்த காலை ஒரு அங்குலமேனும் பின்நோக்கி வைக்க மாட்டார்கள் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியை முறையாக நிலைநாட்ட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நாடு இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, நம் நாட்டில் சட்டம் பலவீனமானவர்களுக்கு எதிராக மட்டுமே செயற்படுத்தப்பட்டது. சட்டம் ஒரு சிலந்தி வலையைப் போன்றது. பெரியவர்கள் அதனை கிழித்துக் கொண்டு செல்வர் சிறியவர்கள் பிடிபடுகின்றனர். எனவே, இன்று நாம் பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டம், அதிகாரமுள்ளவர்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலையை மாற்றியுள்ளோம். இலங்கை வரலாற்றில் ஒருபோதும் பொலிஸ்மா அதிபர் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் இதற்கு முன்பு இருந்ததில்லை. இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அந்த நிறுவனங்களுக்கு நாங்கள் சுதந்திரமாக செயற்பட இடமளித்துள்ளோம். சட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை மட்டுமே நாங்கள் கவனிக்கிறோம். ஆனால் முன்பிருந்த , அரசாங்கங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்க தலையிட்டன. குற்றம், மோசடி அல்லது ஊழல் செய்திருந்தால், அவரது அந்தஸ்து என்னவாக இருந்தாலும் சட்டம் அமுல்படுத்தப்படும் ஒரு ஆட்சியை முதன் முறையாக நாங்கள் உருவாக்கியுள்ளோம். எனவே, தேசிய மக்கள் சக்தி என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் தரப்பாகும். எதிர்காலத்தில் இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு நம்பகமான நாட்டைக் கட்டியெழுப்பும் ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி தான் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
அது மட்டுமல்லாமல், நமது நாட்டின் அரசியல் கலாச்சாரத்திலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம். இலங்கையில் முதன்முறையாக, பொதுமக்களின் பணத்தில் ஒரு சதம் கூட திருடாத அல்லது வீணாக்காத ஒரு அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நாட்டில் மக்களின் பணத்தைத் திருடாத அல்லது வீணாக்காத ஒரு அரசாங்கம் நமக்குத் தேவை.
நாம் நாட்டைக் பொறுப்பேற்ற போது, பொருளாதாரம் மிகவும் கடினமான நிலையில் இருந்தது. ஆனால், படிப்படியாக நமது நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீர நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்யாமல் நாம் எதுவும் செய்ய முடியாது. எனவே, எங்கள் முதல் முயற்சி பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதாகும். இன்று நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான பல சமிக்ஞைகள் காணப்படுகின்றன. டிசம்பர் 21 ஆம் திகதி கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நாங்கள் முழுமையாக நிறைவுசெய்தோம். அதே சமயம், நமது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டது. அதே நேரத்தில், தடைபட்டிருந்த வெளிநாட்டு திட்டங்களை மீண்டும் தொடங்க முடிந்துள்ளது.
மேலும், டொலரின் பெறுமதி 300 ரூபாய்க்கு நெருங்கிய அளவில் பேணுவதில் எமது அரசாங்கம் வெற்றி பெற்றது. 35%-40% ஆக இருந்த வங்கி வட்டி விகிதங்கள், இன்று 10% விட குறைவாக ஒற்றை இலக்கத்தில் பராமரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறைந்த வட்டி விகிதத்தில் கைத்தொழிலாளர்கள், வர்த்தகர்களுக்கு கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அன்று, நாட்டில் பணவீக்கம் 70% -75% ஆக உயர்ந்தது. இன்று நாம் அதை குறைக்க முடிந்துள்ளது. இன்று முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய பயப்படுவதில்லை. சுற்றுலாத் துறை மிகப் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
அதன்படி, நமது நாட்டின் பொருளாதாரத்தின் மீது உலகில் உள்ள அனைவரினதும் நம்பிக்கையும் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களும் பயனடைய வேண்டும். அதற்காக அஸ்வெசும பயன்களை அதிகரித்தல், ஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரித்தல் மற்றும் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய அதிகரிப்பபாக அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரித்தல் உள்ளிட்ட சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக 33,000 கோடி ரூபாய் செலவிடப்படும். இந்தப் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்று சிலர் எங்களிடம் கேட்கிறார்கள். பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாவையும் கவனித்து, அதைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்குள் இதைச் செய்கிறோம்.
நாம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 16 இலட்சம் மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்ய 6,000 ரூபாவை இலங்கையில் முதல் முறையாக வழங்கினோம். மேலும், மஹபொல புலமைப்பரிசில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்கும் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.
பாரிய பொருளாதார மாற்றங்கள் அன்றி, சிறிய திருப்பத்தின் மூலம் பெறும் பணத்தை படிப்படியாக மக்களின் நலனுக்காக செலவிடத் தொடங்கியுள்ளோம். நாங்கள் அத்தோடு நிற்கவில்லை. இந்த ஆண்டு, மூலதனச் செலவினங்களுக்காக 1400 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம்.
இந்தப் பணம் வீதிகள், வடிகால் கட்டமைப்பு ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு செலவிடப்படுகிறது. இலங்கையின் வரலாற்றில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மிகப்பாரிய மூலதனச் செலவை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம். இந்தப் பணத்தை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் செலவழிக்க வேண்டும்.
அவ்வாறாயின் இந்த நாடு மீண்டும் பணியிடமாக மாற்றப்பட வேண்டும். இந்த 1400 பில்லியன்களை நமது நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் முதலீடு செய்தால், நாம் 3%-4% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைய முடியும்.
மேலும், தற்போது ஒரு சாதகமற்ற புவிசார் அரசியல் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நமது ஏற்றுமதியில் சில தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதைத் தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, அதைப் பற்றி கலந்துரையாடி வருகிறோம். அத்தகைய சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அதைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் நாங்கள் திட்டங்களை வகுத்துள்ளோம்.
இது நாம் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலை என்றாலும், நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் நமது பொருளாதாரம் மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் காட்டுகிறது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு இலங்கையில் பல துறைகளில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்யும் ஆண்டாக இருக்கும்.
அதில் முதலாவதாக, 2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஆண்டாக இருக்கும். மேலும், 2025 ஆம் ஆண்டு இலங்கையில் அதிக மூலதனச் செலவினங்களைக் கொண்ட ஆண்டாக இருக்கும். மேலும், 2025 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருமானத்தை ஈட்டும் ஆண்டாக இருக்கும்.
சர்வதேச அளவில் உருவாகியுள்ள சூழ்நிலை அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலிலோ அல்லது முடிவுகளிலோ ஒரு பிரச்சினையாக இல்லை. இங்கே ஒரு புவிசார் அரசியல் பிரச்சினை எழுந்துள்ளது. நாம் அந்தப் பிரச்சினையை ஒரு கட்சியாக அல்ல, ஒரு நாடாக எதிர்கொள்ள வேண்டும்.
எனவே, இந்த நாட்டின் அனைத்து மக்களும் இதுபோன்ற ஒரு பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்க தங்களால் இயன்றவரை தலையிட வேண்டும் என்றும், அத்தகைய பிரச்சினையை எதிர்கொள்ள ஒரு தேசமாகத் தயாராக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எந்தவொரு நாட்டிற்கும் தமது நாட்டின் வரி தொடர்பில் தீர்மானிக்க உரிமை உண்டு.
அந்த உரிமையை நாம் மறுக்க முடியாது. இது எங்களை குறிவைத்து நடத்தப்பட்ட அல்லது எங்களைப் பின்தொடர்ந்த வந்த விடயம் அல்ல. ஒரு பொதுவான நிகழ்வு. அதன்போது சில பாதகமான சூழ்நிலைகள் ஏற்படும் அபாயத்தை நாங்கள் எதிர்கொள்கிறோம். இன்று காலை சர்வதேச நாணய நிதியத்துடனும் நான் கலந்துரையாடினேன்.
இந்த ஆண்டு நாம் அடைய வேண்டிய இலக்குகளை சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளது. உருவாகியுள்ள புதிய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய பரிமாணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்ற விடயத்தின் மீது நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச ஆதரவை நாங்கள் பெற்றுக்கொள்வோம்.
இந்தியப் பிரதமரின் வருகையின் போது, சிறந்த பொருளாதார சாதனைகளை அடைய நாங்கள் முயற்சித்தோம். இந்த ஆண்டு நமது நாட்டிற்கு சுமார் ஆயிரம் கோடி நன்கொடை வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், சம்பூரில் 120 மெகாவோட் மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டது.
இந்தியா டிஜிட்டல் மயமாக்கலில் மிகப் பாரிய வெற்றியை பெற்றுக்கொண்டுள்ள நாடு. இந்தியப் பிரதமர் டிஜிட்டல் மயமாக்கலில் எங்களுக்கு உதவவும், கிழக்கு மாகாணத்தில் பல துறைகளில் உதவி வழங்கவும், மருந்து உற்பத்தியில் ஆதரவை வழங்கவும் ஒப்புக்கொண்டார்.
நாம் இதில் எதையும் தனிப்பட்ட எமது அரசாங்கத்தின் நலனுக்காகச் செய்யவில்லை, மாறாக இந்த நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்காகவே செய்கிறோம். பாதுகாப்பு ஒப்பந்தம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. ஆனால் இப்போது நடக்கும் விடயங்களே அதில் உள்ளன.
கூட்டு நடவடிக்கைகள் மற்றும் கூட்டுப் பயிற்சிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. அவற்றை முறைப்படுத்த இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும். அதிக திறன் மற்றும் நிபுணத்துவம் கொண்ட நாடுகளிடமிருந்து நாம் உதவிகளைப் பெற வேண்டும்.
கடந்த எழுபத்தாறு ஆண்டுகளில் நமது நாட்டை தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணிக்குக் கொண்டுவர இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், நாம் அதைச் செய்ய வேண்டி இருக்காது. ஆனால் உலகம் தொழில்நுட்பத்தில் முன்னேறும்போது, எதையும் உள்வாங்காத ஒரு நாடாக நாம் இருந்தோம்.
எனவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அந்த முன்னேற்றத்தை அடைந்த நாடுகளின் ஆதரவைப் பெறுவதுதான். நாம் யாரையும் வாங்க முடியாது. இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கையையும், நாட்டிற்கு பெருமையையும் உருவாக்கும் நோக்கத்துடன் இதையெல்லாம் செய்கிறோம் என்பதைக் கூற வேண்டும்.
(-Colombo, April 1, 2025-) – புத்தல பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை நாட்டின் வெற்றிகள் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக கிராமத்திற்கு கொண்டு வரப்படும் என்றும், அதற்காக அச்சம், சந்தேகமின்றி நிதி ஒதுக்கக்கூடிய பிரதேச பொறிமுறை அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளை நிறுவ வேண்டும் என்பதோடு, பிரதேச அரசியல் அதிகார தரப்பின் முன்மொழிவுகள் ஜூலை-ஒகஸ்ட் மாதத்திற்குள் மத்திய அரசாங்கத்திடம் வழங்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, […]
(-Colombo, April 1, 2025-)
– புத்தல பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை
நாட்டின் வெற்றிகள் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக கிராமத்திற்கு கொண்டு வரப்படும் என்றும், அதற்காக அச்சம், சந்தேகமின்றி நிதி ஒதுக்கக்கூடிய பிரதேச பொறிமுறை அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளை நிறுவ வேண்டும் என்பதோடு, பிரதேச அரசியல் அதிகார தரப்பின் முன்மொழிவுகள் ஜூலை-ஒகஸ்ட் மாதத்திற்குள் மத்திய அரசாங்கத்திடம் வழங்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, அதன்படி
கிராமத்திற்கு தேவையான நிதி நவம்பர் மாதமளவில் வழங்கத் தயாரெனவும் கூறினார்.
“வெற்றி நமதே- ஊர் எமதே” வெற்றிப் பேரணித் தொடரின் நேற்று (31) புத்தல பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டிலும் தேசிய மக்கள் சக்தியினால் வெற்றிபெற முடிந்தது. எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 10 உள்ளூராட்சி மன்றங்களையும் வெற்றிகொள்வோம் என்பதில் சந்தேகமில்லை. எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் இந்த நாட்டு மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்வதை தவிர ஏனைய தெரிவுகள் இருக்காது. எனவே, இந்நாட்டின் எதிர்காலத்தையும், மக்களின் எதிர்காலத்தையும் பொறுப்பேற்றுகொள்ள இருக்கின்ற ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியாகும்.
இந்த நாட்டில் முன்பிருந்த ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தை மாற்ற நீண்ட காலமாக மக்கள் பல வழிகளில் முயன்றனர். ஆனால் அவதூறு, பொய் தகவல், வன்முறை கும்பல் போன்ற பலவற்றைச் செய்து நீண்டகாலம் அதிகாரத்தை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டார்கள். இதன் இறுதி விளைவாக நாடு வங்குரோத்தடைந்தது. அவர்களால் முடிந்த எல்லாவிதமான அழிவுகளையும் நாட்டுக்கு செய்தார்கள். அதற்கு மறு திசையில் அவர்கள் வளர்ந்தனர்.
மேலும் அவர்கள் வீடுகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மதுபான விற்பனை நிலைய அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொண்ட விதம் தெரியவருகிறது. வீடுகளை எரிந்து விட்டதாக கூறி பணம் பெற்றமை தொடர்பிலும் எதிர்காலத்தில் தெரியவரும். தனமல்வில மக்கள் வன்முறை கும்பல்களுக்கு அஞ்சாமல் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக தலையீடு செய்தனர். அவ்வாறு பெரும்பணியாற்றி அமைத்துக்கொண்ட அரசாங்கமே இன்று இருக்கிறது. இந்த அரசாங்கம் கவிழப்போவதில்லை. கவிழ்க்கவும் எவரும் இல்லை. நாம் இந்த நாட்டை கட்டியெழுப்பிய பின்பே திரும்பிப் பார்ப்போம்.
மிகக் குறுகிய காலத்தில் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பல பணிகளைச் செய்துள்ளோம். பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற ஒரு நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாது. இந்த 6 மாதங்களுக்குள் நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்தியுள்ளோம். நீண்ட காலத்திற்கு வட்டி விகிதத்தை தனி இலக்கமாக பேணிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்திரமற்ற பொருளாதாரம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 76 வெளிநாட்டுத் திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வங்கித் துறையில் நம்பிக்கை ஏற்பட வேண்டும். நாடு ஸ்திரப்படுத்தப்பட்டிருப்பதால் இன்று மீண்டும் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகின்றனர். கொழும்பு நகரில் மாத்திரம் பாரிய திட்டங்களுக்காக 15 காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் நாட்டின் மீது நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். முதலீட்டாளர்கள் தங்கள் திட்டங்களை கமிஷன் வழங்காமல் ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளோம். குறைந்த விலையில் மின்சாரம் வாங்குகிறோமே தவிர, முன்னைய அரசாங்கங்களைப் போல அதிக விலைக்கு கொடுத்து மின்சாரம் கொள்வனவு செய்வதில்லை.
வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் பெருமளவான நிதி வீதிகள், கால்வாய்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பணம் இருந்தாலும், வேலை செய்யும் அளவுக்கு அரச அதிகாரிகள் இல்லை. அரச துறையின் உயர் பொறிமுறை வலுவாக இருந்தபோதிலும், வினைத்திறனான அரச சேவைக்காக 30,000 புதிய அரச ஊழியர்களை உள்வாங்க தீர்மானம் எடுத்துள்ளோம். அரச தொழில் பெற அரசியல்வாதியை பின் தொடரும் காலம் முடிந்துவிட்டது. இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், எமக்கு வலுவான அரச சேவையும் அவசியம்.
அரச ஊழியர்களுக்கு அதிகபட்ச சம்பளம் அதிகரிக்கப்படுள்ள அதேநேரம், எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்கிறோம். தற்போது வழங்கப்படும் 10 இலட்சம் காப்புறுதி 2 1/5 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. வாகன அனுமதி இல்லை. எரிபொருள் ஒதுக்கீடு அரைவாசியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசியல் தலைவர்கள் என்ற வகையில் நாம் முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளோம். கடந்த காலங்களில் எம்.பி.க்கள் எம்.பி சம்பளத்துடன் ஓய்வூதியமும் பெற்று வந்தனர்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம், 4 இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக அஸ்வெசும வழங்கப்படும். அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது, ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறான நன்மைகள் எதுவும் கிடைக்காத 8 இலட்சம் பேர் இந்நாட்டில் உள்ளனர். இவ்வருடத்தில் அவர்களுக்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் 2500 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது. மேலும், இந்த ஏப்ரல் மாதம் முதல் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க தீர்மானித்துள்ளோம். மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் இருக்க வேண்டும். இதற்கு முன்பு இவ்வாறான அரசாங்கங்கள் இருந்ததா?
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர நிவாரணம் 25,000 ஆக அதிகரிக்கப்பட்டது. எதிர்காலத்தில் வயல்களில் மாற்றுப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு இம்முறை சிறு போகத்தில் உர நிவாரணமாக 15,000 ரூபா வழங்கப்படும். நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மாவட்டத்திலுள்ள அனைத்து வயல்களிலும் இம்முறை சிறு போகத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நமது நாட்டை இங்கிருந்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமானால், பிள்ளைகளுக்கு புதிய பொருளாதார தேவைகளை வழங்க வேண்டும். இந்த நாட்டை கட்டியெழுப்ப, அன்னிய செலாவணியை ஈட்டுவது அவசியம். நாடு தற்போது சுற்றுலாத் தொழில், ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து டொலர்களைப் பெற்றுக்கொள்கிறது. மேலும் நாட்டுக்கு தேவையான டொலர் தொகையை ஈட்டுவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
டொலர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை தவிர்க்க நம்மால் முடிந்த அனைத்தையும் உற்பத்தி செய்ய வேண்டும். நெல் விளையக்கூடிய ஒவ்வொரு காணியிலும் நெல் பயிரிடுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம். தென்னைச் செய்கையை மேம்படுத்துவதற்கு உர நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் பல ஏக்கர்களில் தென்னைச் செய்கைக்காக 5000 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீனி இறக்குமதிக்கு பெருமளவில் டொலர்களை செலவிடுகிறோம். பெலவத்தை சீனி நிறுவனம் மட்டும் VAT வரி உள்ளடங்களாக 394 கோடி ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இன்றைய நிலையில் பெலவத்தை சீனி தொழிற்சாலை சரிவடையச் செய்யப்பட்டுள்ளது. எனவே, சீனி உற்பத்தி செய்யும் போது, உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து ஒரு கிலோ சீனியை 190 ரூபாவிற்கு கொண்டு வர முடியும். எனேவ நுகர்வோரை பற்றி சிந்தித்து உற்பத்தி செய்வதை விட இறக்குமதி செய்வது இலாபமானது. இப்படி தொழிற்சாலைகளை நடத்த முடியுமா? இவ்வாறு சரிவடைந்த நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்குங்கள்.
ஊழியர் பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்படுவதோடு சீனி உற்பத்தி நிறுவனத்தை இலாபமீட்டும் நிலைக்குத் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிறுவனங்களுக்காக நாம் மேலும் கடன்பட வேண்டுமா? இந்த நிறுவனங்களின் சொத்துக்கள் குறைவு ஆனால் கடன் அதிகம். இந்த நிறுவனங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதன் மூலம் இந்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். திருட்டு, மோசடி, ஊழல் என்பதே பிரச்சினைகளுக்கு காரணமாக காணப்பட்டது.
சுற்றுலாத் துறையில் இருந்து நாட்டுக்கு கிடைக்கும் டொலர்களின் எண்ணிக்கை பெருமளவானது. 2025 அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்த ஆண்டாக மாறும். மார்ச் 30ஆம் திகதி வரை 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் வந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 30 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவார்கள். பெலவத்தையை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கட்டுநாயக்க விமான நிலையத்தை வினைத்திறனாக்கும் பணிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
அதேபோல், 2025 ஆம் ஆண்டு பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனை மூலம் அதிக ஏற்றுமதி வருவாய் ஈட்டப்படும் ஆண்டாக மாறும். 2030க்குள், 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலக்காகக் கொண்டு திட்டங்களைத் தயாரித்துள்ளோம். மேலும், 2025ஆம் ஆண்டு வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிக அளவு டொலர்களை அனுப்பும் ஆண்டாக மாறும். இவை நல்ல விடயங்கள் அல்லவா? 2021, 2022-2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு இடமளியோம்.
மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் கிராமத்துக்கு வர வேண்டும். நாட்டின் வெற்றிகள் கிராமத்தை வந்தடைவதற்கு உள்ளூராட்சி மன்றம் அவசியம். ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டாமா? அடுத்த வரவு செலவு திட்டத்தை நவம்பர் மாதம் சமர்பிப்போம். ஜூன் மாதம் முதல் அதற்கான முதற்கட்ட முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வோம். அதன்போது பிரதேச அரசியல் அதிகார தரப்பினால் மத்திய அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டம் முடியும் வரை தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தன. ஆனால் மே 6 ஆம் தேதி தேர்தல் திகதி மிகவும் தாமதமானது. தேர்தலை மட்டும் நடத்திக்கொண்டிருக்க முடியாது. ஜூன் 02 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட வேண்டும். ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதத்திற்குள் அவற்றின் முன்மொழிவுகள் மத்திய அரசாங்கத்திடம் வழங்கப்பட வேண்டும். நவம்பர் மாதமளவில் தேவையான பணத்தை வழங்குவோம்.
நான் வடமாகாணத்திற்கு சென்ற போது, வடமாகாணத்தில் பழுதடைந்த வீதிகளை புனரமைக்க பணம் தேவை என மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலில் யோசனை முன்வைக்கப்பட்டது. பழுதடைந்துள்ள வீதிகளை சீரமைக்க இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 5000 இலட்சம் ஒதுக்கியுள்ளோம். இந்த 5000 இலட்சத்தை செலவழித்து இந்த டிசம்பருக்குள் வீதிகளை அமைக்க வேண்டும் என்பதுதான் இப்போது அவர்களுக்கு சவாலாக உள்ளது. அதற்கு பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளின் ஆதரவு தேவை. அநுராதபுரம் சென்றபோது, ராஜாங்கனை குளம், நாச்சதுவ குளம், ஹுருலுவெவ உள்ளிட்ட நீர்ப்பாசன முறைகளை நவீனப்படுத்த பணம் தேவை என்று கூறினர். அவற்றை சீரமைக்க வரவு செலவுத் திட்டத்தில் 3000 இலட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு பேசிவிட்டு, 3,000 இலட்சம் அதிகம், 2,000 இலட்சம் போதுமானது என்று திறைசேரிக்கு அறிவித்துள்ளனர். அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து, மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை கூறினேன். இந்த டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினேன். மேலும், அமைச்சுக்களின் செயலாளர்களையும் வரவழைத்து டிசம்பர் 31ஆம் திகதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று பணித்திருக்கிறேன்.
இப்போது, பணம் இருக்கிறது, வேலை செய்ய வேண்டும். அதற்கு கிராமத்திற்குள் வலுவான பொறிமுறையொன்று தேவை. முன்பெல்லாம், 10 இலட்சம் செலவாகும் வீதிக்கு 20 இலட்சம் வழங்க வேண்டியிருக்கும். இப்போது 10 இலட்சம் கொடுத்தால் போதும். அன்றைய பணத்திற்கு முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக பணியாற்ற முடியும். ஆனால் இம்முறை பணம் அதிகரித்துள்ளதால் பணிகளை சிறப்பாகச் செய்ய முடியும். அச்சமின்றி பணத்தை ஒதுக்கக்கூடிய நல்ல பிரதேச பொறிமுறையொன்று எமக்குத் தேவைப்படுகிறது. உள்ளூராட்சி சபையொன்றின் அதிகாரத்தை வேறு யாராவது கைப்பற்றி யோசணைகளை அனுப்பினால் அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டியிருக்கும். அப்படி நடந்தால், பணத்தை ஒதுக்க முடியாது. எங்களுக்கு நம்பிக்கையான குழுவை அனுப்புங்கள். முன்னைய ஆட்சியாளர்கள் செய்த செயற்பாடுகள் காரணமாக வேறு தரப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
76 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மக்களின் பணத்தை திருடாத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் வேலை கிடைத்தால் அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டும். வீதி அமைக்கும் போது கூட அமைச்சரின் வீட்டுக்கு ஒரு தொகை சென்றது.அரசாங்க அதிகாரிகளும் மோசடி, ஊழலில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் வருகிறது. அது தெரியவரும் பட்சத்தில், கஷ்டங்களுடன் தேடிக்கொண்ட தொழிலை மிகக் குறுகிய காலத்தில் இழக்க நேரிடும். அப்படியல்லவா நாடு சீரமைக்கப்பட வேண்டும்? பொலிஸ் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பலர் ஊழல் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அரசியல் அதிகார தரப்பு திருடிக்கொண்டிருக்கும் போது, அரசாங்க அதிகாரிகளை திருட வேண்டாம் என்று சொல்ல முடியாது. அந்த பொறிமுறையை நாங்கள் சரியாக சீரமைத்திரு்கிறோம். மீண்டும் ஊழல்வாதிகள் ஆட்சி அமைக்க இடமளிக்கப்படாது. மத்திய அரசாங்கத்தின் திருட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அதிகளவிள் சுரண்டப்பட்ட பிரதேச சபைகளையும் தூய்மைப்படுத்தி எங்களிடம் தாருங்கள்.
மோசடி செய்பவர்கள், ஊழல்வாதிகள் மீது ஏன் வழக்குத் தொடரவில்லை என்ற கேள்வி இன்னும் கேட்கப்படுகிறது. மோசடி செய்பவர்களை, ஊழல்வாதிகளை தண்டிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை. நீதிமன்றங்கள் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும். அதற்கான முழு சுதந்திரமான அதிகாரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம். இதுபோன்ற மோசடி மற்றும் ஊழல் செய்பவர்கள் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. முன்னைய ஆட்சியாளர்களுக்குச் சொந்தமான செவனகல, கதிர்காமம் வீடுகள் தொடர்பிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஈஸ்டர் தாக்குதல், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே மூன்று முன்னாள் அமைச்சர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள்ளார். எவ்வளவு காலம் மறைந்திருப்பார்கள் என்று பார்ப்போம். முன்னாள் பொலிஸ் மா அதிபரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடு, அதிகாரம், பதவி, செல்வம் பற்றிய சிந்தனை இல்லாமல் செயல்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் செயல்படும் நாடு உருவாகியுள்ளது.
(-Colombo, March 31, 2025-) உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமழான் மாத நோன்பு , உலக ஆசைகளிலிருந்து தூரமாகி, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையுடனான முன்மாதிரி நடைமுறையை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. உலகெங்கிலும் பசியால் வாடும் மக்களுக்கு தானதருமம் செய்யவும், உள்ளத்தை கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளவும், இந்த மாதம் […]
(-Colombo, March 31, 2025-)
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமழான் மாத நோன்பு , உலக ஆசைகளிலிருந்து தூரமாகி, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையுடனான முன்மாதிரி நடைமுறையை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. உலகெங்கிலும் பசியால் வாடும் மக்களுக்கு தானதருமம் செய்யவும், உள்ளத்தை கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளவும், இந்த மாதம் ஒரு சிறந்த வாய்ப்பாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுடன் கூடிய முன்னேற்றகரமான இலங்கை தொடர்பில் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நனவாக்கி,சுதந்திரம், சமத்துவம், ஒற்றுமை மற்றும் கண்ணியம் நிலவும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப நாம் எடுக்கும் முன்னெடுப்பில் இஸ்லாத்தின் இந்த போதனைகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
அதேபோல், பொதுமக்களின் நிதி மற்றும் அரச சொத்துக்களை அழிக்கும் அநாகரிகமான அரசியல் கலாச்சாரத்திற்குப் பதிலாக, எளிமை மற்றும் அர்ப்பணிப்புடன் மக்களின் உணர்வுகளை உணரக் கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தையும் பிரஜைகள் சமூகத்தையும் நாட்டில் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளில் ரமழான் மாத செயற்பாடுகள் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும்.
மத எல்லைகளைக் கடந்து, மனிதநேயத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் சுயநலத்திற்குப் பதிலாக பரோபகாரத்தை ஊக்குவிக்கும் பண்டிகையான ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடுகின்ற இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறுமலர்ச்சி யுகத்திற்கான எதிர்பார்ப்புகள் நிறைவேறும் சமாதானம், நல்லிணக்கம் நிறைந்த இனிய ஈதுல் பித்ர் பெருநாளுக்கு வாழ்த்துகிறேன்.
ஈத் முபாரக்!
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2025 மார்ச் 31 ஆம் திகதி
(-Colombo, March 29, 2025-) – திஸ்ஸமஹாராம மக்கள் பேரணியில் ஜனாதிபதி உரை பிரஜைகளின் வரிப் பணத்தில் ஒவ்வொரு ரூபாயினையும் மக்களுக்காக கவனமாகச் செலவிடப்படுவதை தற்போதைய அரசாங்கம் உறுதி செய்யும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நேற்று (29) நடைபெற்ற “வெற்றி நமதே – ஊர் எமதே” என்ற வெற்றிக் கூட்டத் தொடரின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். […]
(-Colombo, March 29, 2025-)
– திஸ்ஸமஹாராம மக்கள் பேரணியில் ஜனாதிபதி உரை
பிரஜைகளின் வரிப் பணத்தில் ஒவ்வொரு ரூபாயினையும் மக்களுக்காக கவனமாகச் செலவிடப்படுவதை தற்போதைய அரசாங்கம் உறுதி செய்யும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நேற்று (29) நடைபெற்ற “வெற்றி நமதே – ஊர் எமதே” என்ற வெற்றிக் கூட்டத் தொடரின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
திஸ்ஸமராம ஒவ்வொரு முறையும் எமக்கு பெரு வெற்றியைத் தந்தது. திஸ்ஸ தொடர்பில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாம் தற்போது இலங்கை அரசியலில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளோம். நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்த பழைய குழுவிடமிருந்து பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய குழுவிடம் அதிகாரம் கைமாறியுள்ளது. இது சாதாரண விடயமல்ல. அதற்கான முதல் திருப்பம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் செய்யப்பட்டது. பொதுத் தேர்தலில், இலங்கை வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களுடன் பாராளுமன்றத் தேர்தலை வெற்றிக்கொண்டோம். உள்ளூராட்சி தேர்தலில் அதனை விடவும் அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி. ஏனெனில் நாங்கள் எற்படுத்திய திருப்பத்தை மாற்ற மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதை முன்னெடுத்துச் செல்வதுதான் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் இருக்கும் ஒரே வழியாகும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நமது நாடு பொருளாதார ரீதியாக குணமடைந்த நாடாக இருக்கவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நாடு பெரும் வங்குரோத்து நிலைக்குச் சென்றது. நீண்ட காலம் நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களின் பலவீனத்தால் ஒரு நாட்டிற்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய பேரழிவை கொண்டு வந்தனர். நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு வரக்கூடிய மிகப்பெரிய அழிவு பொருளாதார வங்குரோத்து நிலையாகும். நாம் உலக நாடுகளிடம் கடன் பட்டு கடன் செலுத்த முடியாதென கூறி தனிமைப்பட்ட நாடு. இன்னும் நூறு வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட்டாலும் 2021-2023 பொருளாதார நெருக்கடி வரலாற்றில் எழுதப்படும். கடனை அடைக்க முடியாத நாடு. எண்ணெய் இறக்குமதி செய்ய டொலரை ஈட்டிக்கொள்ள முடியாத நாடு. மருந்து இறக்குமதிக்கு டொலரை ஈட்டிக்கொள்ள முடியாத நாடு, சமையல் எரிவாயு இறக்குமதி செய்ய பணமில்லாத நாடு, மக்கள் வீதியில் இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடு. நாட்டை ஆண்டவர் மறைந்திருந்து உயிரை காப்பாற்றிய காலம் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.
அப்படி ஒரு நாடு வங்குரோத்தடையும் போது அதிலிருந்து வழமைக்கு திரும்ப சுமார் பத்து வருடங்கள் ஆகும். உலகில் பல நாடுகள் இத்தகைய பேரழிவை சந்தித்த போது அத்தகைய காலம் சென்றது. ஆனால் குறுகிய காலத்தில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எம்மால் முடிந்தது.
முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வர நம்பிக்கை வேண்டும். கடந்த ஐந்து வருடங்களில் இந்த நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வரவில்லை. தற்போதைய அரசாங்கத்துடன் முதலீட்டாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கையின் மிகப் பெரிய முதலீடான ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் பற்றி நாம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவை தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்தியப் பிரதமரின் பங்கேற்புடன் எதிர்வரும் 5ஆம் திகதி சம்பூரில் மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது. முதலீடுகள் வர ஆரம்பித்துள்ளன. சியாம்பாலாண்டுவவில் 100 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க முதலீடுகள் வந்துள்ளன. கெரவலப்பிட்டியில் புதிய சேமிப்பு முனையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் முதலீடு செய்வதற்கு ஏற்ற காணி கண்டறியப்பட்டுள்ளதுடன், முதலீடுகளுக்காக அவை மிக விரைவில் பிரசித்தப்படுத்தப்படும். முதலீட்டாளர்கள் படிப்படியாக நம் நாட்டின் பக்கமாக கவனத்தை திருப்பியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை நிர்மாணித்த முதலீட்டாளர்கள கைவிட்டுச் சென்றனர். கட்டுநாயக்க திட்டத்தை இரண்டு மாதங்களில் பூர்த்தி செய்வோம். கடவத்த – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணித்துக் கொண்டிருந்த முதலீட்டாளர்களும் வெளியேறினர். ஆனால் மீண்டும் அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை ஆரம்பிக்கிறோம். கைவிட்டுச் சென்ற முதலீடுகள் மற்றும் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதில் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது. டொலரை 300 ரூபாயில் தக்கவைக்க தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. முன்பு டொலருக்கு இரவில் தூங்கும் போது ஒரு பெறுமதியும், காலையில் எழுந்தவுடன் மற்றொரு பெறுமதியும் இருக்கும். வட்டி விகிதம் தனி இலக்கத்தில் பேணப்படுகிறது. பங்குச் சந்தைபெரு வளர்ச்சியை காண்பிக்கிறது. இது பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடையாளமாகும். கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு, நாங்கள் 500 டொலர் மில்லியன் கடனை அடைந்துள்ளோம். ஆனால் டொலரின் பெறுமதியில் எந்த மாற்றமும் இல்லை. ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வாகனங்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது வாகன சந்தை படிப்படியாக திறக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொருளாதாரத்தின் நல்ல சமிக்ஞையை காட்டுகிறது. தற்போதைய அரசாங்கத்தினால் கடந்த ஆறு மாதங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையுடன் நீங்கள் முன்னேற்றமடைய முடியாது.
பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக, நாங்கள் ஈட்டிக்கொண்ட நிதியை மீண்டும் மக்களை சென்றடைவதற்கான வழிகளை செய்திருக்கிறோம். நான்கைந்து ஆண்டுகளாக அரச சேவைக்கு ஊழியர்கள் உள்வாங்கப்படவில்லை. புதிதாக 30,000 பேரை அரச சேவைக்கு இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளோம். அதற்காக இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்திலும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 15,700 வெற்றிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மீதமுள்ள வெற்றிடங்களை கண்டறிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களில் தொழில்நுட்ப அதிகாரிகள் (TO) இல்லை. வீதிகளை அமைக்கும் போது பல தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படுகிறது. பொருளாதாரத்தில் அடைந்துகொள்ளும் ஸ்திரத்தன்மையின் பலன்கள் மக்களுக்கு மீளக் கிடைக்கும். எனவே, ஐந்து வருடங்களாக ஆட்சேர்ப்பு செய்யப்படாத அரச சேவைக்கு இந்த வருடம் மீண்டும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது. அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரித்த சம்பளத்தை செலுத்துவதற்காக மட்டும் 11,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. நெல் விளைச்சலுக்காக வழங்கப்படும் உர நிவாரணத்தை, மாற்றுப்பயிர் பயிரிடும் விவசாயிகளுக்கும் வழங்க அமைச்சரவை அனுமதி பெற்றுள்ளோம். இலங்கையில் முதல் தடவையாக பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பொருட்களை கொள்வனவு செய்ய பணம் வழங்கப்பட்டது. ஈட்டிக்கொள்ளும் பணத்தை பாதுகாத்து மக்களுக்காக ஈடுபடுத்தும் அரசாங்கம். சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மஹாபொல சலுகை கொடுப்பனவுகளை அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை உணவுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அஸ்வெசும கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது நிவாரணம் கிடைக்காத 400,000 பேர் கொண்ட நிவாரண குழுவிற்குள் அடுத்த ஜூன் மாதம் முதல் உதவி தேவை என்று கருதும் குழுவினருக்கும் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும். ஒவ்வொரு பாடசாலை மாணவியருக்கும் மாதாந்தம் எட்டு சானிட்டரி நப்கின்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. உதவி வழங்கும் திட்டத்தை பலப்படுத்தியுள்ளோம்.
போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் பேருந்து சேவையை ஒருங்கிணைக்கும் திட்டம் உள்ளது. பஸ் சேவைகளில் ஒரு குறிப்பிட்ட தரத்தை கொண்டு வருவோம். அதற்காக, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பஸ்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. சொகுசு பஸ் சேவை உள்ளடங்களாக பொது போக்குவரத்து சேவையை தயார்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுகாதார துறைக்கு 650 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு, மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக, கட்டிடங்கள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்ப மருத்துவர் இருக்க வேண்டும். அதற்கான முன்னோடி திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரையின்படி நீங்கள் அடுத்த நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம்.
கல்விக்காக 2026 இல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, ஒன்பதாம் ஆண்டில் பரீட்சையை எதிர்கொண்ட பிறகு, பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ப செல்லக்கூடிய பாதை காண்பிக்கப்படும். சுகாதாரம், கல்வி, போக்குவரத்து என ஒரு குடும்பம் செலவிடும் தொகை குறைக்கப்படுகிறது. அதனை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும். எஞ்சும் பணத்தை வைத்து மக்கள் வேறு திட்டங்களுக்கு செல்லலாம். ஒரு திரைப்படத்தை பார்க்கலாம், சுற்றுலா செல்லுங்கள்.
சிறையில் இருப்பவர்களை எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை. எனவே, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் தொழில் திறன்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தொழில் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அனாதை இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதில் மூவாயிரத்தை நிலையான வைப்பாக பேண வேண்டும். திருமணமாகும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வீடு கட்டுவதற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். எவரையும் கைவிடாத அரசாங்கம். மக்கள் நலனில் அக்கறை கொண்டு சேவைகளை மேம்படுத்தும் அரசாக நாம் செயலாற்றுகிறோம்.
சுற்றுலாத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஆண்டாகும். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி காணும் தொழில்துறையாக மாற்றுவோம். அதிகளவான பொருட்கள் ஏற்றுமதி செய்யும் ஆண்டாக இந்த ஆண்டை நாங்கள் மாற்றுவோம் வெளிநாட்டு பணியாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்படும் அதிக டொலர்கள் இந்த வருடத்தில் கிடைக்கும் என்பது உறுதி. 2025 ஆம் ஆண்டுதான் அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைக்கும் ஆண்டாகவும் அமையும். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு மாதத்திற்கு வழங்கப்பட்ட இலக்கை விட அதிகமாகச் வருமானம் ஈட்டி வருகிறது. பொதுமக்கள் வரி செலுத்த பழகி வருகின்றனர். வரி செலுத்தும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், பெறப்படும் ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்காக கவனமாக செலவிடப்படுகிறது. அப்படித்தான் ஒரு நாடு கட்டமைக்கப்படுகிறது. துரித வேலைத்திட்டத்தில் நாங்கள் நுழைந்துள்ளோம். எந்தவொரு பிரஜையும் தற்போதைய அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டி ஆட்சியாளர்கள் திருடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. அதனால், எதிர்க்கட்சிகளின் அரசியல் எதிர்காலம் சரிவடைந்து வருகிறது.
மாலை நேர செய்திகளை பார்க்கும் போது எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் ஊடகங்கள் முன் கதறி அழுகின்றனர். ஒரு கட்டத்தில் ஊடகங்களுக்கு முன்னால் இவ்வளவு அழுதால் வீட்டில் எவ்வளவு அழுதிருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதனால் அரசாங்கம் சரியான பாதையில் செல்கிறது என்பது உறுதியாகிறது. அரசாங்கத்திற்கு சர்வதேச உறவுகள் இல்லை என்று எதிர் தரப்பினர் கூறினர். ஆனால் நாங்கள் ஆட்சியை கைப்பற்றி ஆறு மாதங்களுக்குள் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகிறார். பொதுத் தேர்தல் முடிந்த உடனேயே இந்தியா மற்றும் சீனாவில் இருந்து எனக்கு அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு வந்தது. அதேபோல் ஜப்பான் மற்றும் வியட்நாமில் இருந்து சுற்றுப்பயணத்திற்கான அழைப்புகளைப் பெற்றுள்ளோம். சர்வதேச உறவுகள் வலுப்பெறுகின்றன. நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்யாமல் நேரடியான வலுவான சர்வதேச உறவுகளைப் பேணுவதற்கு நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். நாடு மிகவும் சாதகமான திசைக்கு மாறி வருகிறது. செய்திகளால் உருவாக்கப்பட்ட மாயைகளால் நாட்டின் அரசியலை திசை திருப்ப முடியாது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றங்கள் என்பன தற்போது சிறப்பாகச் செயற்படுகின்றன. இதுவரை மூன்று முன்னாள் அமைச்சர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில் இடப்பட்டுள்ளார். மற்றொரு அமைச்சர் தலைமறைவாகியுள்ளார். பொலிஸ்மா அதிபர் தலைமறைவாகயிருந்தார். இப்போது வெளியில் வந்திருக்கிறார். இந்த பரிசோதனைகள் நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. அவற்றில் தோற்றுப் போகாத வகையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. கதிர்காமம் வீட்டு வழக்கு. வீடொன்று உள்ளது அதன் மின் கட்டண பட்டியல் நந்தசேன கோட்டாபய ராஜபக்சவின் பெயருக்கு வருகிறது. ஆனால் அவர் தனது வீடு இல்லை என்று கூறுகிறார். விசாரணைகள் நடந்து வருகின்றன. அனைத்து விசாரணைகளும் நடந்து வருகின்றன. ஊழலை நிறுத்தி இருப்பதும் ஊழல்வாதிகளை தண்டிப்பதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மட்டுமே.
மக்களுக்கான வீதிகளை அமைக்க மூலதனப் செலவாக ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தை அடுத்த எட்டு மாதங்களுக்குள் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்தி முடிக்க வேண்டும். முன்பு வேலை செய்ய பணம் இல்லை. இன்று பணம் இருக்கிறது ஆனால் வேலை செய்ய ஆட்கள் இல்லை. அதனால்தான் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈட்டிக்கொண்ட பணம் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டுகிறது. எனவே, அரச சேவைத்திறனை அதிகரித்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியை செயல்படுத்த அரசியல் தலைமைத்துவம் அவசியம். அந்த பொறுப்புகளை செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் அரசியல் அதிகாரம் தேவை. நாட்டின் பணிகளுக்கு ஜனாதிபதியும் பாராளுமன்றமும் உள்ளது கிராமத்தின் பணிகளுக்கு உள்ளூராட்சி சபைகளின் அரசியல் அதிகாரம் தேவை. மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் உள்ளூராட்சி மன்றம் தேவை. இல்லாவிட்டால் வண்டியில் இரண்டு வகை மாடுகள் கட்டப்பட்டது போல் ஆகிவிடும். ஒன்று நிலத்திற்கு இழுக்கும் போது, மற்றொன்று சேற்றுக்கு இழுக்கும். கிராம மட்டத்தில் செய்ய வேண்டிய பணிகளை மேற்கொள்வதற்கு உள்ளூராட்சி சபையின் தலைமைத்துவம் தேவை. எதிர்வரும் ஜூன் மாதம் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான முன்மொழிவுகள் பெறப்படும். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். எனவே, ஜூன் மாதத்திற்குள் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரிக்க தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம் அதை வலுப்படுத்த முடியும். நீங்கள் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை பெற்றுத் தருவதற்காக பணியாற்றுவதை போன்றே நாங்கள் நாட்டின் வெற்றிக்காக உழைக்கிறோம்.
(-Colombo, March 21, 2025-) – ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த 4 மாத காலப்பகுதியில் நாடு நல்லதொரு எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார ஸ்திரத்தன்மையை நாட்டுக்குள் உருவாக்கியுள்ளதென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இதன்படி பல பொருளாதார வெற்றிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் வெளிநாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கான சமிக்ஞையை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி […]
(-Colombo, March 21, 2025-)
– ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த 4 மாத காலப்பகுதியில் நாடு நல்லதொரு எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார ஸ்திரத்தன்மையை நாட்டுக்குள் உருவாக்கியுள்ளதென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இதன்படி பல பொருளாதார வெற்றிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் வெளிநாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கான சமிக்ஞையை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டை முன்னோக்கி நகர்த்தும் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைத்து எவரேனும் அரசியல் செய்ய நினைத்தால் அவர்கள் அரசியலில் இருந்து செல்லாதவர்களாகி விடுவார்கள் என தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பின்பற்றி ஆசிர்வதிப்பதே இன்றைய நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் உள்ள ஒரே வழியாகும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், ஊடகங்கள் ஊடாக அரசியல் செய்யும் யுகம் முடிந்துவிட்டதாகவும், அந்த யுகம் நடைமுறையில் இருந்தால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காது எனவும், தற்போதைய அரசாங்கம் எப்போதும் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடும் ஒரு அரசியல் இயக்கம் என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்
வரலாற்றில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் பல சந்தர்ப்பங்களைப் தேசம் என்ற வகையில் கைவிட்டிருக்கிறோம் என்பதை நினைவுபடுத்திய, ஜனாதிபதி, அரசாங்கம் என்ற வகையில் நாட்டிற்கான இன்றைய வாய்ப்புகள் தவறவிடப்படாது எனவும், நாடு நெருக்கடிகளிலிருந்து விடுபட்ட பின்னரே பயணத்தை நிறுத்துவதாகவும் வலியுறுத்தினார்.
தனக்கோ அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சருக்கோ தனிப்பட்ட இலட்சியங்கள் இல்லை என்றும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் ஒரு நல்ல கனவை மட்டுமே காண்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்த கனவை நிச்சயமாக நனவாக்குவதாகவும், இந்த திட்டங்களை கண்டு பொறாமைப்பட்டவர்களாக வரலாற்றில் இடம் பிடிக்காமல் அதற்கு பங்களிப்பு செய்தவர்களாக முன்வருமாறு எதிர்கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
அண்மைக்காலத்தில் பாராளுமன்றத்திற்குள் நீண்ட காலமாக இதற்கு முன்னைய வரவு செலவு திட்ட விவாதங்களில் உரிய தினங்கள் கூட வழங்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நாம் முழுமையாக அந்த நாட்களை வழங்கி விவாதத்தை நடத்தினோம். அந்த விவாதத்தில் சில விடயங்கள் வேதனையுடன் முன்வைக்கப்பட்டன. சில விடயங்கள் கோபத்துடன் முன்வைக்கப்பட்டன. சில விடயங்கள் ஏற்புடையவை. கோபமடைவதும், வேதனையடைவதும் நாம் புதுமைப்பட வேண்டிய விடயங்கள் அல்ல. ஹந்தானையில் காணி கிடைக்காமல் போகும் போது வேதனையடைவது புதுமைக்குரிய விடயமல்ல.
ஜனாதிபதி செயலகத்தில் கோப்பு ஒன்றும் உள்ளது. அதனால் வேதனையை புரிந்துகொள்ள முடிகிறது. கோபத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாங்கள் இந்த பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் ஏற்புடைய கருத்துக்களில் நல்லதை ஏற்றுகொள்ளவும் பாதகமானதை நிகாரிக்கவும் இருக்கின்ற அரசியல் தரப்பாவோம். அதேபோல் நாம் பயணித்துக்கொண்டிருந்த பொருளாதார பாதையின்
தீர்மானமிக்க திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டுமென நினைக்கும் அதற்காக செயலாற்றும் அரசியல் தரப்பாவோம்.
நாம் அவ்வாறான திருப்புமுனையை எவ்வாறு செய்யலாம் என்ற தெரிவை கொண்டிருக்கும் அரசியல் தரப்பாவோம். மிகச் சிறந்த, நெருக்கடிகள் அற்ற பொருளாதாரமொன்று எம்மிடம் இருக்கின்ற பட்சத்தில் அந்த திருப்புமுனை மிகத் துரிதமான திருப்புமுனையாக மாறும். பொருளாதாரம் மிகக் கஷ்டமான இடத்தில் இருக்குமாயின். குறிப்பிட்டளவு காலமெடுத்து அந்த திருப்பத்தை செய்துகொள்ள வேண்டும். அதனால் நீங்கள் காட்டும் அவசரத்தை எங்களினால் சரியாக புரிந்துகொள்ள முடியும்.
நாங்கள் மிகச் சரியான முறையில் நீண்டகாலமாக நடைமுறையிலிருக்கும் இந்த பொருளாதார கொள்கையில் நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமாக வகையில் தீர்மானமிக்க திருப்பத்தை ஏற்படுத்துவோம். அந்த திருப்பத்தை ஏற்படுத்த முதலில் நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது. தற்போதிருக்கும் பொருளாதார நிலைமையை ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவர வேண்டும். ஸ்திரதன்மையை அடையாமல் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் பொருளாதாரம் மிகப் பெரிய திருப்பங்களை தாக்கு பிடிக்காது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். சக்கரம் இழந்த வாகனத்தினால் திரும்ப முடியாது. முதலில் சக்கரங்களை பூட்டிக்கொள்ள வேண்டும். எனவே நாம் மிகச் சரியான திட்டமிடலுடன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த திட்டங்களை முன்னெடுக்கிறோம். நாட்டிலிருந்த பொருளாதரம் எவ்வாறானது? ஒரு புறத்தில் நாம் உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையை அடைந்த நாடே எமக்கு கிடைத்தது.
உத்தியோகபூர்வமாக மாத்திரமன்றி நடைமுறையிலிரும் வங்குரோத்தடைந்த நாடே எமக்கு கிடைத்தது. அதேபோல் எமது வரவு செலவிற்கிடையில் 2025 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட ஆவணத்தை எடுத்துக்கொண்டால், எமது மொத்த பொருளாதாரத்தில் 4990 பில்லியன்களை எதிர்பார்க்கும் போது, எமது வட்டியை செலுத்த 2950 பில்லியன்கள் தேவைப்படுகிறது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 1352 பில்லியன்கள் தேவை.
ஓய்வூதியம் வழங்க 442 பில்லியன்கள் தேவை. மொத்த வருமானம் 4990 வட்டி, அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் வழங்க 4744 பில்லியன்கள் 256 பில்லியன்கள் மட்டுமே எஞ்சும். இதுவே தற்போதிருக்கும் பொருளாதாரம். இது உடனடியாக
திருப்பம் செய்யக்கூடியதும் அவசரமாக மாற்றம் செய்யக்கூடியதுமான பொருளாதாரம் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். பிரதான செலவுக்கான மூன்று தரப்புக்களுக்கான செலவுக்கு நிகாரன அல்லது அதனை விட சிறிதளவு அதிகமான வருமானத்தை கொண்ட பொருளாதாரத்தை கொண்ட நாடே எமக்கு கிடைத்தது.
அதுவே தற்போது நாம் அறிந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தின் நிலைமை. அது மட்டுமல்ல எமது வசமாக உள்ள அரச நிறுவனங்கள் சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன். ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை எடுத்துக்கொண்டால் அதன் கடந்த வருட நட்டம் 256 பில்லியன். 1837 மில்லியன் கடனும் உள்ளது. நிறுவனங்கள்! ஔிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கடந்த வருட நட்டம் 152 பில்லியன். 1603 மில்லியன் கடனும் உள்ளது. சுயாதீன தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டால் (ITN) 1476 மில்லியன் கடன் உள்ளது. இலங்கை சீனி நிறுவனத்தை பார்த்தால் 11165 ரூபாய் கடன் உள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவனத்திற்கு 3216 மில்லியன் கடன் இருக்கிறது. மில்கோ நிறுவனத்தின் கடன் 15096 மில்லியன். எயார் லங்காவின் கடன் 340 பில்லியனுக்கு கிட்டியதாக உள்ளது.
பாரிய கடன் சுமையால் வாடும், வருடாந்தம் பாரியளவில் நட்டமீட்டும் அரச நிறுவனங்கள் பலவே எமக்கு கிடைத்தன. பெற்றுக்கொள்ளும் வருமானம் நான் முன்புகூறிய விடயங்களுங்கு மாத்திரமே போதுமான நாடொன்றே எமக்கு கிடைத்தது. வருமானம் சில குறிப்பிட்டவர்களுக்குள் சுருங்கிய நாடு எமக்கு கிடைக்கிறது. பொருளாதாரத்திற்கு பங்களிப்வர்கள் குறுகிய வட்டத்துக்கு குவிந்திருக்கும் நாடே எமக்கு கிடைத்தது. உதாரணமாக எடுத்துக்கொண்டால் எமது ஏற்றுமதி வருமானத்தில் 90 சதவீதத்தை 10 சதவீதமான ஏற்றுமதியாளர்களே பெற்றுக்கொள்கிறார்கள்.
எமது இறைவரித் திணைக்களத்தின் வருமானத்தின் 69 சதவீதம் 620 க்கு கிட்டிய கோப்புகளில் இருந்தே கிடைக்கிறது. அதுவே பொருளாதாரம் மிகக் குறுகிய குழுக்களின் கைகளுக்குள் குவிந்து கிடக்கும் பொருளாதாரம். மறுமுனையில் உலகத்தின் முன்பாக வங்குரோத்து அடைந்த நாடு. கடன் பெற முடியாத. வங்கிக் கட்டமைப்பு மீதான நம்பிக்கை இழந்த, அரச நிதி நிலைமைகள் தொடர்பில் நம்பிக்கையின்மை ஏற்பட்டிருக்கும் நாடு.
அவ்வாறாயின் முதலில் என்ன செய்ய வேண்டியுள்ளது. முதலில் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தாமல் திருப்பங்களை செய்ய நாம் தயாரில்லை. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தாமல் செய்யப்படும் திருப்பங்கள் பொருளாதாரத்துக்கு பாதகமான விளைவுகளை கொண்டுவரும். இந்த நிலையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முன்னுரிமை அளிப்பதை நாம் வௌிப்படுத்தினோம்.
நாம் வரும்போது சர்வதேச நாணய நிதியத்துடன் 4 வருட நீடிக்கப்பட்ட கடன் வேலைத்திட்டத்துடன் இணைந்திருந்தோம். எனவே நாம் திருப்பத்தை செய்ய என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் சொல்லுங்கள். எமக்கு இரு பாதைகள் தெரிந்தன. ஒன்று சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் கைவிட வேண்டும். நீங்கள் கைவிடுவோம் என்றே நினைத்தீர்கள். அந்த பிடிக்குள் நாங்கள் சிக்கப்போவதில்லை. எமது எதிர்பார்ப்புகள் தொடர்பில் நாம் அறிவோம். எமது பொருளாதாரம் இருக்கின்ற நிலைமைக்கு அமைய நாம் சிறியளவில் செய்யும் தவறுகள் கூட அழிவுகரமான எதிர் விளைவுகளை கொண்டு வந்து தரும். இது அப்பட்டிப்பட்ட பொருளாதாரம்.
அதனால் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு, பாரிய தவறுகளையும் அழிவுகளையும் செய்து ஏற்படுத்திய பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரப்படுத்தும் போது சிறிய தவறு கூட நேராமல் பார்த்துகொள்வதே எமது பொறுப்பாகும். அதனை நாம் செய்திருக்கிறோம்.
பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதே எமது முதல் முயற்சியானது. ஜனாதிபதி அதிகாரம், பாராளுமன்ற அதிகாரம், அமைச்சரவை என்பவற்றுடன் நாம் நவம்பர் 21 ஆம் திகதியே முழுமையாக ஆட்சியமைத்தோம். இன்று மார்ச் 21 ஆம் திகதி நான்கு மாதங்கள் ஆகிறது.
இ்ந்த நான்கு மாதங்களுக்குள் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாம் சுபமான எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை வைக்கும் நிலைத்தன்மையை இந்த நாட்டில் நாம் உருவாக்கியிருக்கிறோம். நாம் டிசம்பர் 21 உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டோம். கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி வரையில் நாம் கடனை மீளச் செலுத்தாத நாடு. பெற்றக்கடனை மீளச் செலுத்தாமல் இருந்த நாடு டிசம்பர் 21 ஆம் திகதி வரையில். டிசம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னரும் நாம் கடன் செலுத்தவில்லை.
கடன் செலுத்தாமல் இருப்பது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்த நாடு. பலந்தமாக, ஒருதலைபட்சமாக பெற்ற கடனை செலுத்த மாட்டோம் என்ற நாட்டிலிருந்து கடன் பெற்றவர்கள் மற்றும் கடன் தந்தவர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கும் நாடு. 2028 வரையில் நாம் அவர்களின் கடன்களை செலுத்தப்போவதில்லை என்ற இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கிறோம். அதன்படி டிசம்பர் 21 ஆம் திகதியே உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டிருக்கிறோம். வங்குரோத்து நிலையை அடைந்ததால், எமக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் சம்பூர் மின்சார நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிக்க ஏப்ரல் 05 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையுடன் ஆரம்பித்து வைக்க எதிர்பார்க்கிறோம். கடந்த சில வருடங்களில் பிரசித்தமான நாடுகளின் தலைவர்கள் நாட்டிற்கு வருகை தந்தனரா? வரமாட்டார்கள். இது வங்குரோத்தடைந்திருந்த நாடு. இன்று ஸ்திரத்தன்மையை சமிக்ஞையை காண்பித்திருக்கிறோம். அதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு கிட்டிய காலத்தில் சியம்பலாண்டுவ பகுதியில் புதிய சூரிய சக்தி நிலையத்தையும் மன்னாரில் 50 மெகாவோட் காற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்தையும் ஆரம்பிப்போம். அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும், வௌிநாட்டு நிதி நிறுவனங்களுக்கும் நம்பிக்கையற்ற நிலைமை காணப்பட்டது. எமது நிதி அலகுகள் ஸ்திரமான இருக்கவில்லை. தொடர்ச்சியாக ஏற்ற இறக்கமடையும் நிதி அலகொன்றே காணப்பட்டது. நாம் கடந்த 4 மாதங்களுக்குள் எமது நாட்டில் ரூபாவின் பெறுமதியை தொடர்ச்சியாக 300 ரூபாய்க்கு கிட்டியதான பேணியிருக்கிறோம்.
இது மூன்று வருடங்களுக்கு பின்பு ஏற்பட்டிருக்கும் நிலைமை. கடந்த நான்கு மாதங்களாக டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமான தன்மையுடன் பேணியிருக்கிறோம். உலக தரப்படுத்தல் நிறுவனங்கள். எமது நாட்டை மிகக் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளான நாடு என்பதிலிருந்து கடன் நெருக்கடி குறைந்த நாடு என்பது வரையில் எமது தரப்படுத்தலை குறைத்திருக்கிறது. நாம் ஸ்திரத்தன்மையை உருவாக்கியிருக்கிறோம்.
அடுத்ததாக எமது நாட்டின் வங்கிக் கட்டமைப்பு மீதான நம்பிக்கை இழக்கப்பட்டிருந்தது. எமது வங்கிக் கட்டமைப்பு மீதான சர்வதேச நிதி நிறுவங்களின் நம்பிக்கையை மீள ஏற்படுத்தியிருக்கிறோம். நம்பிக்கையை
கட்டியெழுப்பியிருக்கிறோம். அது மட்டுமல்லாது வங்கி வட்டி வீதத்தை தனி இலக்கமாக பேண வேண்டும் என்று நீண்டகாலமாக முயற்சிக்கப்பட்டது. நாம் செய்து காட்டியிருக்கிறோம். தனி இலக்கத்தில் வங்கி வட்டி வீதத்தை பேணியிருக்கிறோம். பணவீக்கம் ஓரளவு அவதானமான நிலையில் உள்ளது. அது நல்லதல்ல. ஆனால் இந்த நாட்டில் கடுமையாக பணவீக்கம் உயர்வந்துகொண்டிருந்தது. பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரித்தது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக எமது நாட்டின் பணவீக்கம் 70 சதவீதமாக அதிகரித்தது. இன்று பணவீக்கம் குன்றிய நிலைமை உருவாகியிருக்கிறது. அதுவும் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. அது ஒரளவான மதிப்பு பணவீக்கமான உயர்வடையுமென நாம் எதிர்பார்க்கிறோம். மீள்பணவீக்கம் நாட்டுக்கு நல்லதல்ல. நாம் அந்த நிலைக்கு வந்திருக்கிறோம். கடந்த இரு மாதங்களில் இலங்கை வரலாற்றில் இதுவரையில் கிடைக்கப்பெற்ற அதிகளவான வௌிநாட்டு பணியாளர்களின் வருமானம் கிடைத்திருக்கிறது. அது பொருளாதாரம் பற்றிய நம்பிக்கை உறுதி செய்யப்பட்டிருப்பதையே பிரதிபலிக்கிறது.
அது மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளின் பயணத்தை பார்க்கும் போது, சுற்றுலாப் பயணிகளின் வருகை சிறந்த வகையில் காணப்படுகிறது. இந்த மார்ச் மாதம் நிறைவடையும்போது 6 இலட்சத்து 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். நாம் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன். இவ்வருடம் இலங்கைக்கு அதிளவான சுற்றுலா பயணிகள் வருகின்ற வருடமாக மாறும். எமது எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கு, எதிர்பார்க்கப்படும் இலக்குக்கும் உண்மையான இலக்குக்கும் காணப்படும் வேறுபாட்டினை பல முறை இந்த பாராளுமன்றத்தில் நாம் கண்டிருக்கிறோம்.
2024 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட வருமானத்திற்கு நிகரான வருமானத்தை சுங்கத் திணைக்களம் எமக்கு பெற்றுத் தந்தது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மார்ச் மாதம் வரை எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 356 பில்லியன். ஆனால் மார்ச் 17 ஆம் திகதி ஆகும்போதே 437 பில்லியன்கள் கிடைத்திருக்கிறது.
எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிஞ்சிய வருமானத்தை இந்த சில மாதங்களில் நாம் ஈட்டியிருக்கிறோம். அதேபோல் ஜனவரியில் சுங்கத் திணைக்களத்தின் வருமானம். நாம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக கிடைத்திருக்கிறது. அதுவே பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பிலான சமிக்ஞை. இந்த நிலைத்தன்மையை அடைந்துகொள்ளாமல் பொருளாதாரத்தில் பாரிய திருப்பங்களை செய்ய முடியாது.
சரிவடைந்த பொருளாதாரத்தில், நெருக்கடியிலிருக்கும் பொருளாதாரத்தில் எவ்வாறு திருப்பத்தை செய்வது. எனவே எமது முதல் முயற்சி இ்ந்த பொருளாதாரத்தை வலுவாக ஸ்திரப்படுத்துவதாகும். தனியார் தொழில் முயற்சியாளர்களுக்கு எமது பொருளாதாரம் தொடர்பிலும் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் எமது பொருளாதாரத்துடன் தொடர்புபட்டிருக்கும் குழுக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ளாமல், பொருளாதாரத்தினால் முன்னோக்கி செல்ல முடியாது. இன்று எமது பொருளாதாரம் தொழில் முயற்சியாளர்களின், , வங்கிக் கட்டமைப்பின், சர்வதேச நிதி நிறுவங்கள், வௌிநாட்டு முதலீட்டாளர்களின், நம்பிக்கையுடன் கூடியதாக அமைய வேண்டும். தரவுகள் மற்றும் தரவுகளால் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனை மீதான தீர்மானங்களின் அடிப்படையில் நாம் பொருளாதாரத்தை வழிநடத்துகிறோம்.
வாகன இறக்குமதி விவகாரம் மிக அவதானமான தீர்மானம்.நாம் நாளாந்தம் பரிசீலனை செய்து இந்த இலக்கை நோக்கி நகர திட்டமிடுகிறோம். பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்க நாம் பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறோம். வேண்டியளவு அரசியல் செய்யுங்கள். பொருளாதாரம் ஸ்திரமற்று போவதற்கான பொய்யான விடயங்களை சமூகமயப்படுத்த வேண்டாம். உங்களுடைய சிலருக்கு பொருளாதார வல்லுனர்கள் என்ன நாமங்கள் உள்ளன. அவ்வாறானவர்களின் கருத்துகள் பொறுப்புடன் கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறான கருத்து எமது நிதிச் சந்தையில் பாரிய ஸ்திரமற்ற நிலையை உருவாக்கலாம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் என்று நினைக்க வேண்டியது அரசாங்கம் என்ற வகையில் எமது கடமை மாத்திரமல்ல. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் பிரஜைகள் என்ற வகையிலும், மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலும் அனைவரினதும் பொறுப்பாகும்.
அரசியல்வாதிகள் என்ற வகையில் அரசியலுக்குள் வேண்டியளவு போராடலாம். வேண்டியளவு ஒருவருக்கொருவர் முரண்படலாம். ஆனால் பொருளாதாரம் பற்றிய பொய்யான விடயங்களை சமூகமயப்படுத்த வேண்டாம் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாளை அது பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். நாளை அது எமது வங்கிக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையில் தாக்கம் செலுத்தலாம். நாளை நமது நாட்டின் மீது பார்த்துக்கொண்டிருக்கும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தலாம்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிக்களுக்கு வெற்றியளிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டிய தருணம்.
அதேபோல் பொருளாதாரம் ஸ்திரமடையும் வரையில் பிரஜைகளின் வாழ்க்கை போகிற போக்கில் போகட்டும் என்று விட்டுவிட முடியாது. படிப்படியாக நாட்டின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காகவும் பொதுமக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கும் அவசியமான நிவாரணங்களை வழங்க வேண்டும். அதன்படி நாம் வரும்போது ஒரு ஏக்கருக்கான உரத்திற்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாவை 25 ஆயிரமாக அதிகரித்தோம். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செய்தோம். கடந்த அமைச்சரவையில் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கும் 15 ஆயிரம் உர நிவாரணத்தை வழங்குவதாக தீர்மானித்தோம். இதற்கு முன்னதாக வயல் விளைச்சல்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது. வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கும் நாம் உர நிவாரணத்தை வழங்குவோம்.
அடுத்தாக அஸ்வெசும. சற்று முன்னர் எம்.பியொருவர் மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார். ஆம், அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அஸ்வெசும இரு பிரிவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு குழுவிற்கு 8500 கிடைத்தது மற்றுமொரு குழு 15 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டது. நாம் வந்த விரைவில் என்ன செய்தோம்? 8500 ரூபாய் பெற்றுக்கொள்ளும் குழுவின் கொடுப்பனவை 10 ஆயிரமாக அதிகரித்தோம். இந்த ஜவரியிலிருந்து 15 ஆயிரம் பெற்ற குழுவினருக்கு 17500 ஆக அதிகரித்தோம். ஏன்! மக்களை பாதுகாக்க வேண்டும். அது எமது பொறுப்பு அதனை கைவிடப்போவதில்லை. 2024 டிசம்பர் 31 ஆம் திகதி எட்டு இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும திட்டத்திலிருந்து விடுவிக்கப்படவிருந்தன. அதில் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு மேலும் நான்கு மாதங்கள் நீடிப்பு செய்திருக்கிறோம். இன்னும் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு 12 மாதங்கள் நீடிப்பு செய்திருக்கிறோம். நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே செய்தோம். கடந்த டிசம்பர் 31 முதல் அஸ்வெசும வேலைத்திட்டத்திலிருந்து விடுவிக்கப்படவிருந்த எட்டு இலட்சம் குடும்பங்கள் மீண்டும் அஸ்வெசும திட்டத்திற்குள் தக்க வைக்க நடவடிக்கை எடுத்தோம். ஏனெனில் பொருளாதாரத்தை பரிசீலனை செய்யும்போது பொருளாதாரம் நல்ல நிலைக்கு திரும்பவில்லை. மேற்படி மக்கள் விடுவிக்கப்படுவது நியாமானது அல்லவென புரிந்துகொண்டோம்.
இந்த நிலைமைக்குள் மக்களை பார்த்துக்கொள்வோம். கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் பிரச்சினை காணப்பட்டது. பாடசலை விடுமுறை கிடைத்தது. கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்யும் இயலுமை இல்லை என்பது தெரிந்தது. ஒரு பிள்ளைக்கு 6000 ரூபாய் வழங்கத் தீர்மானித்தோம். ஆனால் சலுகை கிடைக்கவேண்டியவரை இலக்கு வைத்து சலுகையை வழங்க வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் இலக்காகும். அதுவே எமது கொள்கையாகும். சலுகை கிடைக்க வேண்டியவரும், அவசியமற்றவருமாக அனைவருக்கும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை சலுகை வழங்க வேண்டிய குழுவொன்று உள்ளது. இவ்வருடத்தில் பாடசாலை புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்ய 16 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபாய் கொடுப்பனவை வழங்கினோம். இது முதல் முறையாக நடக்கிறது. இந்த பொருளாதாரம் சரியாக குணமடையவில்லை. பொருளாதாரத்தில் நாம் பாரிய திருப்பத்தை நாம் இன்னும் செய்யவில்லை. ஆனாலும் நாம் அவர்களை பாதுகாக்க வேண்டும்.
சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு 7500. இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அதனை 10 ஆயிரமாக அதிகரித்திருக்கிறோம். அடுத்ததாக முதியவர்களுக்கான கொடுப்பனவு 3000 இருந்ததை 5000 ஆக அதிகரித்திருக்கிறோம். மக்களை பாதுகாக்கிறோம். ஆரம்பத்திலேயே நாங்கள் ஓய்வூதிய தொகையை 3000 ரூபாவினால் அதிகரித்தோம். மக்களை பாதுகாப்பதற்காக. நாங்கள் மக்களை கைவிட்டதாக சொல்கிறார்கள். இல்லை. எந்த மக்கள் குழுக்கள் மீது எமக்கு பொறுப்புள்ளது என்பதை புரிந்துகொண்டு செயலாற்றும் அரசியல் தரப்பு நாங்கள். எமக்கு பொறுப்பும் கடமையும் உள்ளது.
மக்களை பாதுகாக்க வேண்டும். அவர்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்த வேண்டும். மகாபொல 5000 ரூபாய் கொடுப்பனவை 7500 ரூபாவாக அதிகரித்திருக்கிறோம். புலமைப்பரிசில் கொடுப்பனவை 6500 ரூபாவாக அதிகரித்தோம். நான் முன்பு கூறிய பொருளாதார நிலைமைக்குள்ளேயே இதனை செய்கிறோம். அதேபோல் நிலையங்களுக்குள் வசிக்கும் பிள்ளைகளுக்கு அதாவது பெற்றோர் இல்லாத வீதி பிள்ளைகளுக்கு 5000 கொடுப்பனவு வழங்கவும் 3000 ரூபாவை அவர்களின் நிலையான கணக்கில் வைப்புச் செய்யவும் நாம் தீர்மானித்திருக்கிறோம்.
மாதாந்தம் அவர்களின் நிலையான வைப்புக்காக 3000 ரூபாய் வழங்குகிறோம். அந்த அநாதை பிள்ளைகள் திருமணம் ஆகின்ற போது கொடுப்பனவை, குறிப்பாக பெண்
பிள்ளைகள் திருணம் செய்கின்ற போது அவருக்கு வீடொன்றை கட்டிக்கொள்ள 10 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொடுப்போம். இல்லாவிட்டால் அவர்களை யார் பார்ப்பது. பாலர் பாடசாலை மாணவர்களுக்கு 60 ரூபாயாக இருந்த உணவுக் கொடுப்பனவை 100 ரூபாயாக அதிகரித்தோம். நாம் மக்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டிருக்கும் ஆளும் தரப்பாவோம்.
அடுத்த பாரிய பிரச்சினை அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலானது. நாம் அரச சேவையிலிருக்கும் இரண்டு பிரச்சினைகளை அறிந்துகொண்டிருக்கிறோம். சிறந்த தொழில்வான்மை மிகுந்த அரச ஊழியர்கள் நாட்டை விட்டுச் செல்லும் நிலைமை காணப்படுகிறது. நல்லதொரு தொழில் இயலுமை மிக்கவரை அரச சேவைக்குள் உள்வாங்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
எமக்கு அது தொடர்பிலான இயலுமை கொண்ட அதிகாரிகள் குழுவை அரச சேவைக்குள் ஈர்த்துக்கொள்ள முடியாமல் உள்ளது. அரச சேவையின் சம்பளம் மிகக் குறைவான மட்டத்தில் இருந்தது. அதனால் நாட்டை விட்டுச் செல்லல் மற்றும் இயலுமை மிக்கவர்களை அரச சேவைக்குள் உள்ளீர்ப்பது மந்த நிலையில் காணப்பட்டது. அதனால் நாம் இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் நல்லதொரு அதிகரிப்பை செய்ய வேண்டுமென நினைத்தோம். அதனை செய்திருக்கிறோம். ஊழியர்களும் இவ்வாறான அதிகரிப்பை எதிர்பார்க்கவில்லை.போராடி கேட்கவும் இல்லை. அடிப்படைச் சம்பளம் தொடர்பில் கலந்துரையாடல் மட்டுமே இருந்தது.ஆனால் அறிவியல் முறையில் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை எடுத்தோம். அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தியிருக்கிறோம். விடுமுறை நாட்களில் பணியாற்றுவோருக்கு கிடைக்கும் கொடுப்பனவின் அளவை. அடுத்ததாக வருடாந்த சம்பள அதிகரிப்பை பற்றி ஒருபோதும் கலந்துரையாடலொன்று இருக்கவில்லை. மிகக் குறைந்த சம்பள அதிகரிப்பு விகிதமே காணப்பட்டது. நாங்கள் அதனை 80% சதவீதத்தினால் சம்பள உயர்வை வழங்க தீர்மானித்தோம். அதிகரித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பாரிய பிரச்சினை ஒன்று இருந்தது. தமது சம்பளத்தில் தம்மால் தாங்கிக்கொள்ள முடியாத வரி விதிக்கப்பட்டது. ஒரு இலட்சம் என்ற வரி வரம்பை ஒன்றரை இலட்சமாக அதிகரித்தோம். ஒன்றரை இலட்சம் சம்பளம் எடுப்பவர் முழுமையான வரியிலிருந்து விடுவிக்கப்படுவார். இந்த அனைத்தினாலும் நாம் வினைத்திறனான அரச சேவை ஒன்றிணையே எதிர்பார்க்கிறோம்.
மறுமுனையில் அரசியல் அதிகார தரப்பு என்ன செய்கிறது. நான் ஜனாதிபதியானவுடன் எம்.பிக்கான ஓய்வூதிய சம்பளம் எனக்கு கிடைக்கிறது. முன்பிருந்தவர்களுக்கு கிடைத்திருக்கிறது. ஜனாதிபதி சம்பளத்திற்கு மேலதிகமான எம்.பிக்கான கொடுப்பனவும் எனக்கு கிடைக்கிறது. எம்.பிக்கான ஓய்வூதியம் எனக்கு வேண்டாமென இன்று கடிதம் கொடுத்திருக்கிறேன். நாட்டை திருத்த ஆரம்பிக்க வேண்டும். எம்.பிக்கள் ஜனாதிபதியான பின்னர் அவர்களுக்கு எம்.பிக்களுக்கான ஓய்வூதியமும் கிடைக்கும். உண்மையாகவே நான் இவ்வாறு கிடைக்கும் என்பதை அறிந்திருக்கவில்லை. அறிந்துகொண்ட உடனேயே பாராளுமன்றத்திற்கு எனக்கு ஓய்வூதியம் வேண்டாம் என்று கடிதம் கொடுத்திருக்கிறேன்.
அதேபோல் அமைச்சர்கள் எம்.பிக்களுக்கும் அமைச்சர்களுக்கும். எம்.பி அமைச்சரவானவுடன் எம்.பியின் சம்பளமும் கிடைக்கும் அமைச்சரின் சம்பளமும் கிடைக்கும். இவ்வாறுதான் அனுபவித்திருக்கிறார்கள்.
எமது அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் எம்.பிக்களுக்கான சம்பளத்தை மட்டுமே பெறுவர் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். நாட்டை திருத்த நியாயமாக செயற்பட வேண்டும். அந்த அர்ப்பணிப்பை நாங்கள் செய்திருக்கிறோம். இந்த நாட்டை மாற்ற இந்த அரசியலும் மாற வேண்டும். எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வோம் அதற்கான சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவோம். ஜனாதிபதியின் வரப்பிரசாத சட்டத்தை திருத்தம் செய்வோம். அந்த சட்டமும் மிக விரைவில் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும். பாராளுமன்றத்தில் அனைவரும் இணைந்து கை உயர்த்தக்கூடிய சில சட்டங்கள் விரைவில் கொண்டு வருவோம். எமது அமைச்சர்கள் எண்ணிக்கையை 21 ஆக குறைத்திருக்கிறோம் பிரதி அமைச்சர்கள் எண்ணிக்கையை அதற்கு ஏற்றவாறு வழங்கியிருக்கிறோம். அமைச்சர்களுக்கான வீடுகள் உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்தியிருக்கிறோம். இது எதற்காக. அரசியலிலும் நிலைத்தன்மையை உருவாக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது. எம்.பிக்கள் உள்ளடங்களாக அரசியல் தரப்பு நாட்டை கட்டியெழுப்ப முன்னுதாரணமாக இருக்கின்ற போது அரச ஊழியர்களும் அதற்கு தயாராக வேண்டும். அவ்வாறில்லாமல் அபிமானம் என்ற சிறிய விடயங்களுக்குள் சிக்கி கேள்வி கேட்க வேண்டாம்.
அடுத்ததாக வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியிருக்கிறோம். இந்நாட்டில் எல்லா இளையோருக்கும் தொழில் செய்யும் உரிமை உள்ளது. தொழில் வாய்ப்புக்கள் உருவாக வேண்டும் அரசாங்கத்தினால் வௌியில் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனால் நாம்
மீண்டும் வேலையில்லாத, பதவியில்லாத, கதிரை இல்லாத, இலக்கு இல்லாத கூட்டமாக அரசாங்கத்திற்கு உள்வாங்கப் போவதில்லை.
அதனால் தொழில் வழங்கும் கொள்கையொன்றை தயாரித்திருக்கிறோம். தற்போது உயர் மட்டத்தில் பெரிய நெருக்கடி இல்லை. கீழ் மட்டத்தில் தன்னிறைவாக உள்ளது. மத்திய நிலையில் குறைப்பாடு உள்ளது. அந்த வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.
தற்போது நாங்கள் 15300 வெற்றிடங்களை அறிந்திருக்கிறோம். 15300 பேரை இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாம் அரச சேவையை ஏற்கும் ஆட்சி. அரச சேவையை வழங்க நாம் செய்யும் செலவு அதிகம். அதனை குறைக்கும் திட்டங்களை நாம் தயாரித்திருக்கிறோம்.
இப்போதிருப்பதை அவ்வண்ணமே செய்துகொண்டு செல்வதாயின் அது எமக்கு இலகுவானது. ஆனால் தற்போதிருப்பதை நாட்டுக்கும் மக்களுக்களுக்கும் நலன் தரும் வகையில் மாற்றவே நாம் வந்தோம். அதனையே செய்துகொண்டிருக்கிறோம். அந்த மாற்றத்தை செய்கிறோம். அதன்போது எமது வர்த்தகர்களுக்கு பெரும் பணியுள்ளது. அனைவரும் உரிய வகையில் வரி செலுத்த வேண்டும். வரி ஏய்ப்பவர்கள் இருந்தால் நழுவிச் செல்வோர் இருந்தால் வரி மோசடி செய்ய எவரேனும் முயற்சிப்பார்களாயின் அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டத்தை பலப்படுத்தி செயற்படுத்துவோம்.
நியாயமான வரியை செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்தும் வரியில் ஒவ்வொரு ரூபாவையும் கடவுள் பணியை போல பார்த்துக்கொள்வோம்.வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் வழங்கவேண்டிய சலுகைகள் தொடர்பில் நாம் ஆலோசித்திருக்கிறோம்.
அவர்களுக்கு நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. ஆட்சியொன்று வந்துள்ளது செலுத்தப்படும் வரிகள் மிகச் சரியாக பாதுகாக்கப்படுகிறது. பாதுகாப்பான ஆட்சி என்ற சமிக்ஞையை வழங்கினால் அவர்கள் வரி செலுத்துவார்கள். வரி செலுத்துபவர் நான் வரி செலுத்துபவன் என்று பெருமையாக சொல்ல முடியும்.
அரச சம்பளத்தை அதிகரித்திருக்கிறோம் அனைவரும் பணியாற்ற வேண்டும். அரசாங்கத்தினால் செய்யக்கூடிய பணிக்காக இலஞ்ச பணம் செலுத்த வேண்டிய நிலைமை உருவாகாமல் இருக்க வழி செய்ய வேண்டும். அவர்களுக்கு மக்கள் வரியில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. வேலையை செய்து கொள்ள வருபவரிடம்
பணம் பெற முடியாது. அவருக்கான கணக்கை அரசாங்கம் கொடுக்கிறது. இந்நாட்டில் இலஞசம் அரச சேவையை செயலிழக்கச் செய்கிறது.
கல்வியில் பாரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். பாடசாலை கட்டமைப்புக்குள் பெருமளவான பிரச்சினைகள் எழுந்துள்ளன. எனவே பாடசாலைகளை மீண்டும் ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். குறைந்தபட்சம் பாடசாலையில் போட்டி நடத்தக்கூடிய, சுற்றுலா செல்லக்கூடிய, விளையாடக்கூடிய மாணவர்கள் தொகையாவது இருக்க வேண்டும். எனவே பாடசாலை கட்டமைப்பில் புதிய திட்டங்களை திட்டமிட்டிருக்கிறோம்.
இலங்கையில் முதல் முறையாக மக்களுக்கு அரசாங்கம் ஒன்று கிடைத்திருக்கிறது. இவ்வளவு காலமும் மக்களுக்கு அரசாங்கம் கிடைக்கவில்லை. முதல் முறையாக மக்கள் ஆட்சி கிடைத்திருக்கிறது. அரசாங்கம் என்பது என்னவென பிரஜைகளுக்கு இந்நாட்டில் நாம் முன்னுதாரணம் காட்டுவோம்.
அப்படியொரு ஆட்சியையை அமைத்திருக்கிறோம். எனவே இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறோம். பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கியிருக்கிறோம். வலுவான அரச சேவையை உருவாக்க அடி வைத்திருக்கிறோம். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்திருக்கிறோம்.
இந்த நாட்டை கட்டியெழுப்ப அவசியமான பொறிமுறையை நாம் வலுப்படுத்த வேண்டும். அதற்கான அடித்தளமாக அரச சேவை, அரசியல் அதிகார தரப்பு, பொருளாதார நிலைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக சட்டம் செயற்படுத்தப்படும் நாடு. இந்த நாடு மற்றும் நாட்டு மக்களுடனான தொடர்பு மட்டுமே எங்களுக்கு உள்ளது. எனவே நாங்கள் அடித்தளத்தை அமைத்திருக்கிறோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் முன்னோக்கிச் செல்வோம்.