(-நாட்டைக் கட்டியெழுப்பும் நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு வெற்றிக்கான திருகோணமலை பொதுக் கூட்டம் – 2024.10.23-) இலங்கையில் பலம்பொருந்திய மாற்றத்தை மேற்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதன் பின்னர் மிகக் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய ஆட்சியொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பினை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்க அதிகாரத்தை நிறுவுதல் வரை இலங்கையிலும் உலகத்திலும் வரலாறு படைத்த மூவரை கொண்ட அரசாங்கமொன்றை நாங்கள் பேணிவருகிறோம். பொதுத் தேர்தல் […]
(-நாட்டைக் கட்டியெழுப்பும் நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு வெற்றிக்கான திருகோணமலை பொதுக் கூட்டம் – 2024.10.23-)
இலங்கையில் பலம்பொருந்திய மாற்றத்தை மேற்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதன் பின்னர் மிகக் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய ஆட்சியொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பினை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்க அதிகாரத்தை நிறுவுதல் வரை இலங்கையிலும் உலகத்திலும் வரலாறு படைத்த மூவரை கொண்ட அரசாங்கமொன்றை நாங்கள் பேணிவருகிறோம். பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை மக்களின் அத்தியாவசிய சேவைகள் சீர்குலையாமல், பொருளாதாரம் சீர்குலையாமல், நாட்டின் பாதுகாப்பு சீர்குலையாமல் பேணி வரவேண்டிய பொறுப்பு எம்மூவருக்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர 14 ஆம் திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பெருமளவிலான உறுப்பினர்கள் மத்தியில் இருந்து இருபத்து ஐந்து பேருக்கு குறைவான அமைச்சரவையொன்றை அமைத்துக் கொள்வோம். இராஜாங்க அமைச்சர் பதவிகள் கிடையாது. அமைச்சுப் பதவிகளுக்கு ஒத்துவரக்கூடியதாக பிரதியமைச்சர் பதவிகள் இருக்கும். அது முதல் படிப்படியாக நாட்டைக் கட்டியெழுப்பி இந்தப் பயணத்தை தொடருவோம். நிலவிய பாராளுமன்றம் மக்கள் அனைவரினதும் எதிர்ப்பிற்கு அருவருப்பிற்கு இலக்காகியிருந்தது. கொவிட் பெருந்தொற்றின் போது வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது கூட அந்த எதிர்ப்பு மக்களிடமிருந்து தோன்றியது. ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு கத்திகள், மிளகாய்த்தூளை எடுத்து வந்தார்கள். ஒருசிலர் புத்தகங்களை எறிந்து சண்டைப்பிடித்த விதத்தை நாங்கள் கண்டோம். எமது நாட்டில் மிருகக்காட்சிசாலை மக்களுக்கு தடைசெய்யப்படவில்லை. எனினும் பாராளுமன்றம் தடைசெய்யப்பட்டது. அந்தப் பாராளுமன்றம் மக்களுக்கு பொருத்தமற்ற பாராளுமன்றமொன்று அல்லவென்பது அதன் மூலமாக வெளிப்பட்டது. அந்தப் பாராளுமன்றத்தை சுத்தம் செய்து புதுப்பிக்க அணித்திரளுகின்ற வேளையில் முன்னாள் பாராளுமன்றத்திலிருந்த அறுபத்தியிரண்டு பேர் தன்னிச்சையாகவே நீங்கிச் சென்றிருக்கிறார்கள். திசைகாட்டியின் நேர்மையான, ஊழலற்ற, அதைப்போலவே மக்களுக்காக எந்தவொரு சவாலையும் வெற்றிக்கொள்ளக்கூடியவர்களைக் கொண்டு பாராளுமன்றத்தை நிரப்புங்கள். அதற்காக திருகோணமலை மாவட்டத்திலிருந்து மிகச்சிறந்த பங்களிப்பினை பெற்றுக்கொடுங்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதற்காக திருகோணமலை மாவட்டத்திலிருந்து பாரிய சக்தி வழங்கப்பட்டது. 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐயாயிரத்திற்கு குறைவான வாக்குகளே திசைகாட்டிக்கு கிடைத்திருந்தது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பதாயிரத்தை விட அதிகமானதாகும். அப்படியானால் பொதுத் தேர்தலில் என்ன நடக்கும்? ஏனைய கட்சிகள் தேர்தல் இயக்கத்தை தொடங்கும்போதே தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டன. எமது நாட்டில் நிலவுகின்ற பல பிரதான சவால்களை வெற்றிக்கொள்ள திருகோணமலை மாவட்டத்திலிருந்து திசைகாட்டிக்கு பலம்பொருந்திய வெற்றி தேவை. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் நீண்டகாலமாக சந்தேகம், பகைமை, குரோதம், அவநம்பிக்கை பரப்பப்பட்டிருந்தது. அந்த நிலையில் தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளை நோக்கியும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் கட்சிகளை நோக்கியும் தள்ளப்பட்டார்கள். அதன்பின்னர் அந்தக் கட்சிகளின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அரசாங்கத்தின் அதிகாரத்தை உறுதிசெய்துகொள்வதற்கான அரசியலை அவர்கள் முன்னெடுத்துவந்தார்கள். திருகோணமலை நகரமும் மாவட்டமும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வசிக்கின்ற நிலைமைக்குப் பதிலாக மக்களை பிரித்து மோதல்களை ஏற்படுத்தி அவர்களின் ஆட்சியை கொண்டு நடத்தினார்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கான கட்சிதான் தேசிய மக்கள் சக்தி. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நாம் வெற்றிபெறுவோம் என நம்பவில்லை. அதனால் நாங்கள் பொதுத் தேர்தலுக்கு பிரவேசிப்பது நாங்கள் வெற்றிபெற்றுள்ள ஒரு பின்புலத்துடன்தான். அனைத்து மக்களும் ஒற்றுமைக்கான ஒரே குடையின் கீழ் வந்து நிழல் பெறவேண்டும். தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அதனை சாதிக்க முடியும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்புகின்ற அனைத்து மக்களினதும் நல்லாசி கிடைக்கின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நிறுவ முடியும்.
ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்குப் பின்னர் வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி மீதான பாரிய எழுச்சி தோன்றியுள்ளது. நம்பிக்கை வளர்ந்துள்ளது. பிரிந்து ஒதுங்கியிருந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒற்றுமையைக் கொண்ட அரசாங்கத்தை நிறுவ வேண்டிய விசேட பொறுப்பு திருகோணமலை மாவட்ட மக்களுக்கு இருக்கின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமாக அமுலாக்கப்படுகின்ற சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புகிறோம். ஒரு சில தடையேற்படுத்தும் சட்டங்கள் இருக்குமாயின் அவற்றை மாற்றியமைத்து மக்களின் நன்மைக்காக ‘நான் இலங்கையன்” என்கின்ற உணர்வை கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். ‘நான் இலங்கையன்” என பெருமையுடன் கூறிக்கொள்ளக் கூடிய பின்புலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும்.
நாங்கள் நாட்டை அந்த நிலைமைக்கு கொண்டுவருகின்ற வேலைத்திட்டத்தை அமுலாக்குகையில் திருகோணமலையின் கனிய மணல் படிவை முறைப்படி பாவனைக்கு எடுத்து பெறுமதி சேர்க்கின்ற கைத்தொழிலாக மாற்றுவோம். அதைப்போலவே, எமது கண்ணெதிரே இற்றுப்போகின்ற எண்ணெய்க் குதங்களை புனரமைத்து தேசிய பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்கின்ற நிலைமைக்கு கட்டியெழுப்புவோம். அதைப்போலவே இந்த எண்ணெய்க் குதங்களை சார்ந்ததாக தூய்மையகமொன்றை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு வழிவகைகள் பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். மரபார்ந்த மீன்பிடித் தொழில்துறையை ஆக்கவிளைவுமிக்க தொழிலாக மாற்றும்பொருட்டு ஏற்கெனவே எரிபொருள் மானியம் வழங்கியிருக்கிறோம். அதைப்போலவே, கால்நடை வளங்களை விருத்தி செய்தவற்கான பாரிய வாய்ப்பு வளம் திருகோணமலை மாவட்டத்தில் நிலவுகின்றது.
அதற்கு மேலதிகமாக 23 ஆயிரம் ஏக்கர் கரும்பு செய்கையைக் கொண்டதாக கந்தளாய் சீனித் தொழிற்சாலை நிலவியது. அந்த இயந்திர சாதனங்கள் அழிவடைந்து வருகின்றன. கரும்பு விளைநிலங்கள் யானைகளின் வாழிடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தக் காணிகளில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர்களை தற்காலிகமாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம். கரும்புச் செய்கையை மீண்டும் ஆரம்பித்து தொழில்சாலையை இயங்கும் நிலைக்கு கொண்டுவரும் வரை விவசாயிகள் இந்தக் காணிகளில் பயிர் செய்வார்கள்.
அதைப்போலவே, அரிசி ஆலை உரிமையாளர்களை சந்தித்த வேளையில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதில்லை என எமக்கு தெளிவாகியது. எமக்கும் அவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வுடன் செயலாற்ற நாங்கள் அடிப்படை அணுகுமுறையை தொடங்கினோம். சட்டத்தை அமுலாக்குவதைப் பார்க்கிலும் புரிந்துணர்வு முக்கியமானது. நாட்டில் அரிசி தட்டுப்பாடு கிடையாதென்பதால் சுற்றுலாத் தொழில்துறைக்கு அவசியமான அரிசியை தவிர்ந்த வேறு அரிசி மணி ஒன்றைக் கூட இறக்குமதி செய்ய நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ரூபா 15 ஆயிரமாக நிலவிய உரமானியத்தை ரூபா 25 ஆயிரமாக அதிகரித்தது அதற்காகத்தான். அடுத்த வருடத்தின் பெப்ரவரி மாதமளவில் எங்களுடைய முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து மக்களுக்கு குறுங்கால ரீதியாக மானியங்களை வழங்குவோம். அதன் பின்னர் நீண்டகால ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர் மக்களை சுயசக்தியுடன் நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றுவோம். உலகில் விசேடமான ஒரு நிலைமை உருவாகாவிட்டால் 2025 ஆம் ஆண்டை இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிக அதிகமாக வருகை தந்த நாடாக மாற்றுவோம்.
அதேவேளையில் எதிரிகள் அரசாங்கம் மூன்று மாதங்களில், ஆறு மாதங்களில் வீழ்ந்து விடுவதாக சோகக் கதைகளை பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குடும்ப ஆட்சி சிதைவடைந்து இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு வங்குரோத்து அடைந்திருக்கிறார்கள். மக்கள் அரசியல்வாதிகளுக்கு பின்னால் சென்ற யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சட்டத்தின் முன் சமமானவர்களாக மாற்றுவோம். 2015 நல்லாட்சி அரசாங்கம் மோசடிப்பேர்வழிகள், ஊழல்பேர்வழிகள் சம்பந்தமாக செயலாற்றுவதற்கு பதிலாக வெறும் காட்சிக்காக மாத்திரம் செயலாற்றி வந்தது. அந்த நிலைமையை மாற்றியமைத்து எல்லா விதத்திலும் நிறைவான ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதற்காக இந்தப் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தை திசைகாட்டியின் பிரதிநிதிகளால் நிரப்புங்கள். திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழ் தோழர் ஒருவரை, முஸ்லிம் தோழர் ஒருவரை, சிங்கள தோழர் ஒருவரை என்ற வகையில் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தோழர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள். ஒரே கொடியின் நிழலில் அனைத்து மக்களையும் பிரதிநிதித்தும் செய்கின்ற அரசாங்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம்.
(-Colombo, October 22, 2024-) சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். சீனா-இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார […]
(-Colombo, October 22, 2024-)
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
சீனா-இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
(-Colombo, October 22, 2024-) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha)ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்க […]
(-Colombo, October 22, 2024-)
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha)ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்படி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
மேலும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இச்சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு நடத்தப்பட்டது.
இந்தியக் கடன்உதவிகள் மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மேலும் ஆராயப்பட்டதுடன், திட்டப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவுசெய்வதற்காக அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.
(-Colombo, October 22, 2024-) அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய […]
(-Colombo, October 22, 2024-)
அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது.
மேலும், எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும் பின்பற்றக்கூடிய நிலையான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அண்மையில் பெய்த கடும்மழையால், பல மாவட்டங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்ததோடு உட்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தன.
(-Colombo, October 22, 2024-) • விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் அரிசியைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவதற்கும் முறையான வழிமுறை தேவை. • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளீடுகளின் விலையை குறைப்பது தொடர்பில் ஆராய்வு – அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு […]
(-Colombo, October 22, 2024-)
• விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் அரிசியைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவதற்கும் முறையான வழிமுறை தேவை.
• சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளீடுகளின் விலையை குறைப்பது தொடர்பில் ஆராய்வு
– அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு
அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் நுகர்வுப் பொருட்களின் தற்போதைய விலை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதுடன், மக்களின் பிரதான உணவாக பயன்படுத்தப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும் அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும் முறையான பொறிமுறையொன்று அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரிசியின் விலை செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்டகாலமாக உத்தரவாத விலைகளை அமுல்படுத்தாததன் காரணமாகவே இந்த விலை ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரிசியை சேகரித்து வைக்கும் மூன்றாம் தரப்பினர் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அவர்களை பதிவு செய்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு விவசாய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில், சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக உள்ளீட்டு விலைகளைக் குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி டட்லி சிறிசேன, நிபுன கம்லத், மித்ரபால லங்கேஸ்வர, ஜயசிறி குணதிலக்க, மேனக கம்லத் உள்ளிட்ட வர்த்தகர்கள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
(-Colombo, October 22, 2024-) • மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறை வெற்றிடங்கள் தொடர்பில் ஆராய்வு • புதிய அரசியல் கலாசாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கக் கூடாது – மாகாண ஆளுநர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் […]
(-Colombo, October 22, 2024-)
• மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறை வெற்றிடங்கள் தொடர்பில் ஆராய்வு
• புதிய அரசியல் கலாசாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கக் கூடாது
– மாகாண ஆளுநர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு
மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு அதற்குச் சாதகமான தீர்வுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போதைய நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகுபடுத்துவதற்கு மாகாண சபைகளினால் வழங்கக் கூடிய உச்ச சேவையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) முற்பகல் நடைபெற்ற மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் மாகாண சபைகளினால் சாத்தியமான அனைத்து பொருளாதார மற்றும் சமூக தலையீடுகளையும் மேற்கொள்ளுமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
புதிய அரசியல் கலாசாரமொன்றை ஆரம்பிப்பதற்காகக் கிடைத்துள்ள மக்கள் ஆணையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, மக்களின் எதிர்பார்ப்பை பாதிக்காத வகையில் செயற்படுமாறும் வலியுறுத்தினார்.
அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதில் முன்னைய மோசமான முன்னுதாரணங்களை ஒதுக்கி தரமான அரச சேவைக்கு தம்மை அர்ப்பணிக்குமாறு ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இதன்போது வடக்கு கிழக்கு காணிகள் தொடர்பாகவும் மாகாண சபை நிதிப் பயன்பாடு தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டது.
கந்தளாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திர, மத்திய மாகாண ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க அபயகோன் மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிரி ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.