(-Colombo, September 24, 2024-) நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 28வது பிரதமர் ஆவார். இதேவேளை, இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ளஅமைச்சர்கள் பின்வருமாறு: ஜனாதிபதி கௌரவ. அநுரகுமார திஸாநாயக்க 01. பாதுகாப்பு02. நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா03. வலுசக்தி04. விவசாயம், காணி, கால்நடை , […]
(-Colombo, September 24, 2024-)
நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 28வது பிரதமர் ஆவார்.
இதேவேளை, இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ளஅமைச்சர்கள் பின்வருமாறு:
ஜனாதிபதி கௌரவ. அநுரகுமார திஸாநாயக்க
01. பாதுகாப்பு
02. நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா
03. வலுசக்தி
04. விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள்
பிரதமர் கௌரவ.ஹரிணி அமரசூரிய
05. நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில்
06. கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம்
07. பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு
08. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி
09. சுகாதாரம்
விஜித ஹேரத்
10. புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை
11. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து
12. பொதுமக்கள் பாதுகாப்பு
13. வெளிவிவகாரம்
14. சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
15. கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை
பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, பிமல் ரத்நாயக்க, டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, வசந்த சமரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(-Colombo, September 24, 2024-) கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் நஜித் இந்திக்க, கொழும்பு மருத்துவ பீடத்தில் தனது மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்தார். கடந்த 05 வருடங்களில் பல அரச வைத்தியசாலைகளில் வைத்தியராகவும் வைத்திய அதிகாரியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார். வைத்தியர் நஜித் இந்திக்க பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் மற்றும் […]
(-Colombo, September 24, 2024-)
கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் நஜித் இந்திக்க, கொழும்பு மருத்துவ பீடத்தில் தனது மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
கடந்த 05 வருடங்களில் பல அரச வைத்தியசாலைகளில் வைத்தியராகவும் வைத்திய அதிகாரியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
வைத்தியர் நஜித் இந்திக்க பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
(-Colombo, September 23, 2024-) புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார். பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார். இங்கு கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தச் […]
(-Colombo, September 23, 2024-)
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார். பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.
இங்கு கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,
இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பை நாட்டு மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர். இது பொறுப்பு வாய்ந்த மற்றும் கடினமான பணியாக இருக்கலாம். அதற்காக அவருக்கு நாம் முழு ஆதரவையும் ஆசிகளையும் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். குறிப்பாக இந்நாட்டின் வறிய மக்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் மற்றும் உண்மையை வெளியே கொண்டுவரத் தேவையான அடித்தளத்தை தயார் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வதாக ஜனாதிபதி தனக்கு உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.
கொழும்பு உயர் மறைமாவட் துணை ஆயர்களான மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகை, ஜே.டி. அந்தோணி ஆண்டகை, அன்டன் ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு பேராயர்களின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி, கொழும்பு பேராயரின் செயலாளர் அருட்தந்தை ஜோசப் இந்திக்க, பொருளாளர் அருட்தந்தை ஜூட் சமந்த பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(-Colombo, September 23, 2024-) கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று பிற்பகல் (23) வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையை தரிசித்து ஆசி பெற்றார். தலதா மாளிகை வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார சம்பிரதாய முறைப்படி வரவேற்றார். பின்னர், தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட […]
(-Colombo, September 23, 2024-)
கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று பிற்பகல் (23) வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையை தரிசித்து ஆசி பெற்றார்.
தலதா மாளிகை வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.
பின்னர், தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட பார்வையாளர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் ஜனாதிபதி பதிவிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால் காந்தவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
(-Colombo, September 23, 2024-) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உப சரத்து 52 (1) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ. ஆர். பி. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ரவீ செனவிரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான அவர், விசேட அதிரடிப் படையின் ஆரம்பகால உறுப்பினராகவும், அரச புலனாய்வுப் […]
(-Colombo, September 23, 2024-)
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உப சரத்து 52 (1) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ. ஆர். பி. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ரவீ செனவிரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான அவர், விசேட அதிரடிப் படையின் ஆரம்பகால உறுப்பினராகவும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளராகவும், தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் முதல் செயலாளராகவும், இன்டர்போல் இலங்கைக் கிளையின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
(-Colombo, September 23, 2024-) பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 52 (I) பிரிவின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சீன தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக பாதுகாப்புக் கல்வி தொடர்பான விஞ்ஞானப் பட்டதாரியான அவர், கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியுமாவார். எம் ஐ 24 தாக்குதல் ஹெலிகொப்டர் […]
(-Colombo, September 23, 2024-)
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 52 (I) பிரிவின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சீன தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக பாதுகாப்புக் கல்வி தொடர்பான விஞ்ஞானப் பட்டதாரியான அவர், கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியுமாவார்.
எம் ஐ 24 தாக்குதல் ஹெலிகொப்டர் படையின் முன்னாள் கட்டளை அதிகாரி, அனுராதபுரம் விமானப்படை தளத்தின் முன்னாள் கட்டளை அதிகாரி, சீன துறைமுக விமானப்படை கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி, பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி மற்றும் விமானப்படை தலைமையகத்தில் முன்னாள் பயிற்சிப் பணிப்பாளரான அவர் வீரவிக்ரம விபூஷண ரணவிக்ரம மற்றும் ரண சூர பதக்கங்களையும் வென்றுள்ளார்.