Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

பாலஸ்தீனத் தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு

(-Colombo, August 12, 2024-) இலங்கைக்கான பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி சுஹய்ர் ஷயிட் அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. தனது பதவிக்காலம் நிறைவடைந்து சொந்த நாட்டுக்கு திரும்புவதாகக் கூறிய தூதுவர், பாலஸ்தீனத்தில் காசாவில் இடம்பெற்று வருகின்ற மனிதாபிமானமற்ற படுகொலைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவும் பாலஸ்தீனத்தினத்திற்காக ஒத்துழைப்பு வழங்கியதற்காகவும் இதன்போது நன்றி தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் தேசிய […]

(-Colombo, August 12, 2024-)

இலங்கைக்கான பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி சுஹய்ர் ஷயிட் அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

தனது பதவிக்காலம் நிறைவடைந்து சொந்த நாட்டுக்கு திரும்புவதாகக் கூறிய தூதுவர், பாலஸ்தீனத்தில் காசாவில் இடம்பெற்று வருகின்ற மனிதாபிமானமற்ற படுகொலைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவும் பாலஸ்தீனத்தினத்திற்காக ஒத்துழைப்பு வழங்கியதற்காகவும் இதன்போது நன்றி தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டிருந்தார்.

Paleistien-Embassador-AKD
Show More

“வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் மக்களுக்கு உரித்தாக்குவதற்கான சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயார்.” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்ட சந்தர்ப்பத்தில் – ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் – 12.08.2024-) பெரும் நெருக்கடிக்குள் இருந்த ஆளும் குழுவினால் எமது நாடு அழுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று நாங்கள் இட்ட இந்த கையொப்பம் நிச்சயமாக வெற்றிக்கான கையொப்பமிடலாக அமையும். ஏனென்றால், இப்பொழுது ஏனைய பாசறைகள் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து, சிதைந்து அழுக்குகளை சேகரிக்கும் நிலைக்கு மாறியுள்ளது. தேசிய மக்கள் […]

(-ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்ட சந்தர்ப்பத்தில் – ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் – 12.08.2024-)

Nomination-Sign-AKD-Media

பெரும் நெருக்கடிக்குள் இருந்த ஆளும் குழுவினால் எமது நாடு அழுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று நாங்கள் இட்ட இந்த கையொப்பம் நிச்சயமாக வெற்றிக்கான கையொப்பமிடலாக அமையும்.

ஏனென்றால், இப்பொழுது ஏனைய பாசறைகள் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து, சிதைந்து அழுக்குகளை சேகரிக்கும் நிலைக்கு மாறியுள்ளது. தேசிய மக்கள் சக்தியாகிய நாம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே எமது பயணத்தை சரியாக ஆரம்பித்தோம். நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையிலும் ஒழுங்கமைந்த வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி இற்றைவரை இந்தப் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றோம். இன்னும் எங்களுக்கு ஒரு மாதத்தை விட சற்று அதிகமான நாட்கள்தான் இருக்கின்றன. இந்தக் கொஞ்ச நாட்களில் நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையில் எமது தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம். கிராமங்களில் மிகவும் வலிமைமிக்க ஒரு ஒழுங்கமைப்பும் அதைப்போலவே, தேசிய மக்கள் சக்திக்கு சொந்தமான பலம்பொருந்திய குழுக்களும் இருக்கின்றன. எனவே, இந்த தேர்தலை நிச்சயமாக எங்களால் வெற்றிகொள்ள முடியும்.

இந்த தேர்தலுக்கப் பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான சவாலையும், எமது நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கான சவாலையும், மக்களுக்கு நல்ல வாழ்க்கையை உரித்தாக்கிக் கொடுப்பதற்கான சவாலையும் தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று இட்ட இந்தக் கையொப்பம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகரமான கையொப்பமிடலாக அமையும் என்பது நிச்சயம்.

Show More

தோழர் அநுர ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்…

(-Colombo, August 12, 2024-) எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தோழர் டாக்டர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவை உள்ளிட்ட தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் சிலரும் […]

(-Colombo, August 12, 2024-)

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தோழர் டாக்டர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவை உள்ளிட்ட தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Nomination-Sign
Show More

“இப்போது அரசாங்கமும் எதிர்கட்சியின் சஜித்தின் ஒரு குழுவும் இணைந்து காணிகளை கொள்ளையடிக்கின்றனர்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க-

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.08.10-) இந்த ஊடகச் சந்திப்பினை ஏற்பாடு செய்ததற்கான காரணம் ரணில்-சஜித் கூட்டணி இலஞ்சம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்துகொள்ளும் வித்தையினை, நிர்வாணத்தை அம்பலப்படுத்துவதற்காகும். பணம் மாத்திரமல்ல, பார் லைசன்ஸ், காணிகள், வீதிகளை புனரமைப்பதற்கான கொந்தராத்து ஆகிய பல்வேறு விதமான இலஞ்சம் கொடுக்கப்படுகின்றது. இதுவரையில் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையின் காணிகளில் பெரும் பகுதியை கொள்ளையடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. தனிநபர் 50 ஏக்கருக்கு அதிகமான காணியை வைத்துக்கொள்ள முடியாது என்ற […]

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.08.10-)

இந்த ஊடகச் சந்திப்பினை ஏற்பாடு செய்ததற்கான காரணம் ரணில்-சஜித் கூட்டணி இலஞ்சம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்துகொள்ளும் வித்தையினை, நிர்வாணத்தை அம்பலப்படுத்துவதற்காகும். பணம் மாத்திரமல்ல, பார் லைசன்ஸ், காணிகள், வீதிகளை புனரமைப்பதற்கான கொந்தராத்து ஆகிய பல்வேறு விதமான இலஞ்சம் கொடுக்கப்படுகின்றது.

இதுவரையில் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையின் காணிகளில் பெரும் பகுதியை கொள்ளையடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. தனிநபர் 50 ஏக்கருக்கு அதிகமான காணியை வைத்துக்கொள்ள முடியாது என்ற சட்டம் இருக்கிறது. ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தமது நெருக்கமானவர்களின் காணிகளையும் அரசாங்கத்தின் பெறுமதிமிக்க வளங்களையும் கைமாற்றிக்கொண்டார். லக்ஷ்மன் கிரிஎல்லவின் மனைவிக்காக ஹந்தானையில் காணியைப் பெற்றது போல ரணில் விக்ரசிங்கவுடன் இணைந்து கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கபீர் ஹாசிம் உடனான பேச்சுவார்த்தை அண்மையில் இடம்பெற்றது.

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான ஹந்தான பெருந்தோட்டத்தில் 12 ஏக்கர் 03 றூட் 53 பர்ச்சஸ் அளவுடைய காணி தொடர்பான கள்ளவியாபாரமொன்று ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கும் சஜித் பிரேமதாசவின் எதிர்கட்சி குழுவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உறுப்பினர்களை ரணில் விக்ரமசிங்கவுடன் இணைத்துக் கொள்வதற்கான ஒரு கள்ளவியாபாரம் இந்தக் காணிப் பரிமாற்றம் ஊடாக வெளிப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் கோப் குழுவில் விசாரணை முன்னெடுக்கப்படவிருந்தது. ஆனால், கோப் குழுவை செல்லுபடியற்றதாக்க இடமளித்து குறித்த அறிக்கையை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கடிதங்கள் தேசிய மக்கள் சக்தியிடம் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது. கபீர் ஹாசிமின் மகனுக்கு ஹந்தானையில் 12 ஏக்கர் 03 றூட் 18.53 பர்ச்சஸ் அளவிலான காணியைக் கொடுக்கும்படி, காணிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் ஜனவசம தலைவருக்கு எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 பெப்ரவரி மாதத்தில் ஜனவசமவிடம் இருந்து குறித்த காணி வேறாக்கப்படுகின்றது. அத்துடன், அந்தக் காணியை பரிமாற்றிக் கொள்வது தொடர்பான விடயங்கள் அம்பலமானதால் கபீர் ஹாசிமிற்கு இந்தக் கொடுக்கல் வாங்கலை நிறைவசெய்துகொள்ள இயலாமல் போனது.

1972 காணிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு முன்பிருந்த நிலைமையை முன்வைத்து கபீர் ஹாசிம் இந்த டீலை பேசியுள்ளார். தனக்கு கிடைக்க வேண்டிய காணியின் ஒரு பகுதியை மகனுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். காணிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்குச் சொந்தமான மிகமுக்கியமான கடிதங்கள் தற்போது காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது. கபீர் ஹாசிம் மூலமாக தனது மகனான எம்.எச்.எம். கபீரின் பெயருக்கு காணியை மாற்றித் தருமாறு கேட்டுக்கொண்ட எல்லா விபரங்களும் எங்களிடம் உள்ளது.

இந்த இடத்தில் இருப்பது நிர்ணயித்துக்கொள்வதைப் போல் பாசாங்கு செய்து ஜனவசமவிற்கு சொந்தமான காணிகளை அரசியல்வாதியொருவர் கொள்ளையடித்தமையாகும். கடந்த காலத்தில் அரசாங்கத்தின் நண்பர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்க்பட்டன. இப்போது இடம்பெறுவது அரசாங்கமும் எதிர்கட்சியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரிவும் ஒன்றுசேர்ந்து காணிகளை கொள்ளையடிப்பதாகும். கடந்த காலத்தில் பார் லைசன் பகிர்ந்துகொள்ளல், ஷெட் பகிர்ந்துகொள்ளல், பஸ் பேர்மிட் பகிர்ந்துகொள்ளல் மேற்கொள்ளப்பட்ட விதத்திலேயே இந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹந்தானையில் ஜனவசமவிற்கு சொந்தமான தோட்டத்தின் நடுவில் 45 ஏக்கர்களை தனியார் கம்பனியொன்றுக்கு கொடுக்க தயார் நிலை காணப்படுகிறது.

ஹந்தான தோட்டத்தின் நடுவில் தோட்டமொன்று தனியார் கம்பனியொன்றுக்கு உரித்தாகியுள்ளது எனக் கூறி இந்த கள்ளவியாபாரத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள். அதைப்போலவே, பலவிதமான மாதிரிகளை கடைப்பிடித்து இப்பொழுது அவர்கள் இரண்டாக பிரித்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு பணம் தேடிக்கொள்வதற்காக ஹில்டன் ஹோட்டல், போகம்பர சிறைச்சாலை இருந்த காணி என்பற்றை விற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

அரசாங்கம் மாத்திரமல்ல, தாம் எதிர்கட்சியினரே எனக் கூறிக்கொண்டு இதுவரை முன்னெடுத்துவந்த கள்ளவியாபாரங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தலை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ள வேண்டும். நாங்கள் அம்பலப்படுத்திய இந்த தகவல்கள் சம்பந்தமாக சீக்கிரமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதைப்போலவே, இந்த ஊழல்பேர்வழிகளை ஒரே வரிசையில் வைத்து தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துக்கொள்ளுமாறு ஊழலுக்கு எதிரான முற்போக்கான மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

Show More

முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு – மல்வான

(-Colombo, August 08, 2024-) நேற்று (08) இரவு கம்பஹா – மல்வானையில் இடம்பெற்ற “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்ட போது…

(-Colombo, August 08, 2024-)

நேற்று (08) இரவு கம்பஹா – மல்வானையில் இடம்பெற்ற “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்ட போது…

Muslim-Metting-Malwana-AKD

MuslimMettingMalwana-Crowd

MuslimMettingMalwana-Muneer

MuslimMettingMalwana-Ashoka

MuslimMettingMalwana

Show More

வேலையிற்ற பட்டதாரிகளுக்கும் தோழர் அநுரவிற்கும் இடையிலான சந்திப்பு

(-Colombo, August 08, 2024-) நேற்று (08) முற்பகல் மவிமு தலைமை அலுவலகத்தில் இலங்கையின் எல்லா மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வேலையற்ற பட்டதாரிகள் சிலர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களை சந்தித்தனர். இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதைப்போலவே, இதுவரையில் வேலையில்லாத பட்டதாரிகள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

(-Colombo, August 08, 2024-)

நேற்று (08) முற்பகல் மவிமு தலைமை அலுவலகத்தில் இலங்கையின் எல்லா மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வேலையற்ற பட்டதாரிகள் சிலர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களை சந்தித்தனர்.

இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதைப்போலவே, இதுவரையில் வேலையில்லாத பட்டதாரிகள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

Unemployed-Graduates-MeetsAKD
Show More