(-Colombo, March 15, 2025-) முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு நடைபெற்ற இப்தார் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான முஸலிம்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியதுடன், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபரும் நிகழ்வில் உரையாற்றினார். […]
(-Colombo, March 15, 2025-)
முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு நடைபெற்ற இப்தார் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான முஸலிம்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு நடைபெற்றது.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியதுடன், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபரும் நிகழ்வில் உரையாற்றினார்.
செயிக் அப்துல்லா ஷஹீட் மௌலவி அவர்கள் “ரமழான் மாதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.
சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23 மணிக்கு நோன்பு துறக்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்து நடைபெற்றது.
அதனை அடுத்து இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஆளும் மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(-Colombo, March 08, 2025-) சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி சுமார் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் நடத்திய பேரணியின் விளைவாக மார்ச் 08 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நம் நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிருந்தாலும், மேடைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அந்த கலந்துரையாடல்கள், […]
(-Colombo, March 08, 2025-)
சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி சுமார் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் நடத்திய பேரணியின் விளைவாக மார்ச் 08 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நம் நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிருந்தாலும், மேடைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அந்த கலந்துரையாடல்கள், பூமியில் ஒரு யதார்த்தமாக விதைக்கப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது. அந்த மகத்தான பணிக்காக ஒரு அரசாங்கமென்ற வகையில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, கடந்த குறுகிய காலத்தில் இலங்கைப் பெண்களுக்கு பல வெற்றிகளை அடைய தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம் என்பதையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பல தசாப்தங்களாக கலந்துரையாடலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பங்கேற்பு மற்றும் வகிபாகத்தை அதிகரித்து, கடந்த பொதுத் தேர்தலில் இருபத்தி இரண்டு பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல், ஆண்- பெண் சமூக சமத்துவத்திற்கான சமூக நீதியை அடைவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையான உற்பத்திப் பொருளாதார செயல்பாட்டில், இந்நாட்டின் சனத்தொகையில் 51.7% ஆக இருக்கும் பெண்களை தீவிரமாகவும் செயற்திறனுடனும் ஈடுபடுத்தும் திட்டத்தை நாம் செயல்படுத்தியுள்ளோம்.
நீதியான சமூகம், சுதந்திரமான நாடு, சுதந்திரமான பெண்கள் என்ற அபிலாஷைகளை அடையும் வகையில் வீடு, போக்குவரத்து, சமூகம், தொழிலிடம் மற்றும் அரசியல் உட்பட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் போன்ற பெண்களின் தனித்துவமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரச கொள்கைகளை வகுப்பதற்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.
இதற்கமைய, ” சகல பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம்,உரிமைகள் மற்றும் வலுவூட்டல் எனும் தொனிப்பொருளின் கீழ் ” நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் ” என இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்வதிலுள்ள அர்த்தம் மற்றும் நடைமுறைச்சாத்தியம் என்பனவற்றை நினைவூட்ட வேண்டும்.
பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்த்து சர்வதேச மகளிர் தினத்திற்கு எனது மனார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநுர குமார திசாநாயக்க
சனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2025 மார்ச் மாதம் 08 ஆம் திகதி
(-Colombo, February 26, 2025-) உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது. இது உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்ளவதை குறிக்கிறது. எனவே,மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும்’ என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து தான தர்மங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மகா சிவராத்திரி நாளில் […]
(-Colombo, February 26, 2025-)
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது.
இது உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்ளவதை குறிக்கிறது. எனவே,மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும்’ என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து தான தர்மங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மகா சிவராத்திரி நாளில் வாழ்வில் சுபீட்சம் கிட்ட பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.
சிவன், பார்வதியின் சங்கமம் ஞானம் மற்றும் ஆற்றலின் சங்கமாகும். அது கண்களை மறைத்திருக்கும் மாயையின் திரைகளை கிழித்து யதார்த்தத்தின் வெளிச்சத்திற்கு கண்களை திறக்கிறது. பல யுகங்களாக எம்மை சகோதரத்துவத்திலிருந்து ஒதுக்கி வைத்த பிரிவு – பிளவுகளை உருவாக்கிய இருள் திரையைக் கிழித்து, ஒற்றுமையை கட்டியெழுப்பி இந்த பூமியில் ஒரு புதிய யுகத்தின் உதயத்தை காணும் வேளையில் இந்த தருணம் வந்திருக்கிறது.
இது, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை முன்பை விடவும் வரவேற்று, பாதுகாத்து நாட்டின் அனைத்து மக்கள் குழுக்களும் ஒருவருக்கொருவர் மத்தியில் கௌரவம் – அன்பை முன்னிலைப்படுத்தி எமது தாய்நாட்டின் சுபீட்சத்துக்காக அர்ப்பணிக்கும் தருணமாகும். இந்த வலுவான களத்திலிருந்து சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக்கொள்ள ஒரே தேசமாக நாம் அனைவரும் முன்னோக்கி செல்ல வேண்டும்.
அனைவரும் கோரும் நல்லதொரு அரசியல் கலாசாரத்துடன் கூடிய வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பல புதிய அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் பலவற்றுடன் தற்போது நாம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். மஹா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
மகா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கை இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்ல எண்ணங்களும், விருப்பங்களும் நிறைவேறி அவர்களின் வாழ்வு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமெ பிரார்த்திக்கிறேன்.
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக் சோசலிச குடியரசு
2025 பெப்ரவரி 26 ஆம் திகதி
(-Colombo, February 23, 2025-) தலதாவை தரிசித்த ஜனாதிபதி, மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சந்தித்து ஆசி பெற்றார் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார். அது தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் கலந்துரையாடியதாகவும், மத்திய மாகாண ஆளுநர், கண்டி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தலதா மாளிகையின் தியவடன நிலமே ஆகியோர் இணைந்து அதற்கான ஏற்பாடுகளை […]
(-Colombo, February 23, 2025-)
தலதாவை தரிசித்த ஜனாதிபதி, மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சந்தித்து ஆசி பெற்றார்
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.
அது தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் கலந்துரையாடியதாகவும், மத்திய மாகாண ஆளுநர், கண்டி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தலதா மாளிகையின் தியவடன நிலமே ஆகியோர் இணைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு இணங்கியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையை இன்று (23) தரிசித்த பின்பே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து நலன் விசாரித்ததுடன், சிறிது நேரம் கலந்துரையாடினார். அவர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத்,பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
பின்னர் அஸ்கிரிய மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஸ்கிரிய மகா விகாரையின் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர்கள் மற்றும் சங்கச் செயற்குழு உறுப்பினர்களும் இதன் போது கலந்து கொண்டிருந்ததுடன், மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.
அதனையடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென தெரிவித்தார். பாதாள குழுக்களிடையே மோதல்கள் வலுப் பெற்றிருந்தாலும் அது பொதுமக்களின் பாதுகாப்புக்குக்கு சிக்கலாக அமையவில்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதுவரையில் அரசியல் அனுசரணையில் வளர்ச்சி கண்ட பாதாள குழுக்களை முழுமையாக கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவித்தார்.
அதேபோல் உள்ளூராட்சி தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்தவித சட்ட ரீதியான தடைகளும் இல்லையென்றும், அதற்கு தேவையான நிதியையும் அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குனசேன, பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜயமுனி, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
(-Colombo, January 26, 2025-) அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சலுகைகளை வழங்கும் அரசியல் கலாச்சாரத்திற்கு தற்போதைய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு நடந்து கொண்டாலும், முன்னாள் தலைவர்கள் தங்கள் வீண்விரய வாழ்க்கையை தங்களின் உரித்தாக கருதுவதாகவும் தெரிவித்தார். பழைய வீண்விரய வடிக்கைகள் குறித்து தான் எதுவும் கூறப்போவதில்லை என்றும், இன்று முதல் புதிய அரசியல் கலாச்சாரத்தில் இணையுமாறு அவர்களை அழைப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். அநுராதபுரம் விவேகானந்த […]
(-Colombo, January 26, 2025-)
அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சலுகைகளை வழங்கும் அரசியல் கலாச்சாரத்திற்கு தற்போதைய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு நடந்து கொண்டாலும், முன்னாள் தலைவர்கள் தங்கள் வீண்விரய வாழ்க்கையை தங்களின் உரித்தாக கருதுவதாகவும் தெரிவித்தார்.
பழைய வீண்விரய வடிக்கைகள் குறித்து தான் எதுவும் கூறப்போவதில்லை என்றும், இன்று முதல் புதிய அரசியல் கலாச்சாரத்தில் இணையுமாறு அவர்களை அழைப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
அநுராதபுரம் விவேகானந்த விளையாட்டு மைதானத்தில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற நட்புறவுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
சில காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்தியே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்ததாகவும் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றுவதும், வீண்விரயம் மற்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதும் மக்களின் பிரதான அபிலாஷை என்றும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, வீண்விரய அரசியல் முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கையில் அதனை அரசியல் பழிவாங்கலாக சித்தரிக்க முயல்வதாகவும் தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாங்கள் அநுராதபுரத்தில் பாரிய கூட்டத்துடன் எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தோம். அதைத் தொடர்ந்து, கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற முடிந்தது. இலங்கை வரலாற்றில், ஆட்சி அதிகாரம் தலைமுறை தலைமுறையாகவே கைமாறியது. தாய் பிரதமராக இருந்ததால் மகளுக்கு அதிகாரம் கிடைத்தது. மூத்த சகோதரர் ஜனாதிபதியாக இருந்ததால் இளைய சகோதரருக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தார். மாமா ஜனாதிபதியாக இருந்ததால் மருமகன் ஜனாதிபதியானார்.
பெருமளவு பணம் செலவிடுவதன் மூலம் அரசாங்கங்களைக் கட்டியெழுப்பும் வரலாறு எமது நாட்டில் இருந்தது. சதி மற்றும் ஊடகங்களில் தம் நிலைப்பாட்டை பிரச்சாரம் செய்வதன் மூலம் அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களின் தலையீட்டின் மூலம் உருவாக்கப்பட்டது. தலையீடு மூலம். மக்களால் கூட்டாக அமைக்கப்பட்ட இந்த அரசாங்கம், இரண்டு மாதங்களாக செயற்பட்டு வருகிறது. எனவே, இந்த வெற்றியை வழங்கிய மக்களுடன் நட்புறவாகப் பேச இந்த சந்திப்பைப் பயன்படுத்துகிறோம்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் நாங்கள் வெற்றி பெற்றபோது, மிகச் சிறிய அரசாங்கமே இருந்தது. நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தி, நவம்பர் 21 ஆம் திகதி அமைச்சரவையை அமைக்க எமக்கு முடிந்தது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது சர்வதேச உறவுகள் சீர்குலைந்துவிடும் என்று சில குழுக்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் கைத்தொழிலாளர்களும் முதலீட்டாளர்களும் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று வேறு சிலர் வதந்திகளைப் பரப்பினர். அந்த சமயத்தில் இலங்கையின் பொருளாதாரம் எந்த சூழ்நிலையையும் தாங்கக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை. இந்த நிலைமை தொடர்ந்திருந்தால், ஆட்சியாளர்களுக்கு டொலர் மீதான கட்டுப்பாட்டை இழக்க நேர்ந்திருக்கும். எனவே, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வளர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். பங்குச் சந்தை இன்று வேகமாக முன்னோக்கி நகர்கிறது. ஆனால் பங்குச் சந்தை முழுப் பொருளாதாரத்தையும் பிரதிபலிப்பதில்லை. பங்குச் சந்தையினால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை உருவாகிறது. கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பங்குச் சந்தை பெறுமதி உயர்ந்து வருகிறது.
நமது நாடு பாரியளவில் வங்குரோத்தடைந்து விட்டது. தற்போதைய அரசாங்கத்தால் அந்த நிலைமையைச் சீர்செய்து , கடந்த டிசம்பரில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்ய முடிந்தது. அதனோடு அதுவரை இருந்த வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கையை மீட்க்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முடிந்தது. வங்குரோத்து நிலையினால் அது வரை செயற்படுத்தப்பட்டு வந்த அபிவிருத்தித் திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. ஜப்பானிய அரசாங்கம் இதுபோன்ற 11 திட்டங்களை நிறுத்தியிருந்தது. கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டம் அவற்றில் ஒன்றாகும். கடன் மறுசீரமைப்பைத் தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் அந்த 11 திட்டங்களையும் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்தது அதே போன்று சீன அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வந்த மற்றும் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த 76 திட்டங்களை மீண்டும் தொடங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எனது அண்மைய சீன விஜயம் பாரிய உத்வேகத்தை அளித்தது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிநாடுகளுடனான தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.
எமது முதல் விஜயத்திற்கு நாம் இந்தியாவைத் தெரிவு செய்தோம். அதன் மூலம் நாட்டுக்குப் பல பொருளாதார நன்மைகளைப் பெற முடிந்ததோடு மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான ரயில்வே சமிக்ஞைக் கட்டமைப்பை நிதிஉதவியாக மாற்ற இந்த விஜயத்தின் ஊடாக வாய்ப்பு ஏற்பட்டது. அத்தோடு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக நிவாரணம் வழங்க இந்திய அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச அளவில் தற்போதைய அரசாங்கத்தைப் பற்றி நாங்கள் நம்பிக்கையை வளர்க்க முடிந்துள்ளது. இன்று முதலீட்டாளர்களுக்கு நம்பகமான நாடாக இலங்கை மாறி வருகிறது.
பாடசாலை சீருடைகளுக்காக வழங்கும் 80% சலுகையை 100% ஆக மாற்ற சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. 2026 ஆம் ஆண்டிற்கான சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 3.7 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது. இது இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய முதலீடாக வரலாற்றில் இடம்பிடிக்கிறது. கடவத்தை-மீரிகம அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இழப்பீடு செலுத்த வேண்டியிருந்தது. அந்த இழப்பீட்டை 50% வீதத்தினால் குறைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அந்த பாதையை மீண்டும் நிர்மாணிப்பதற்கு சீனாவிடமிருந்து உதவி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
பொது மக்களைக் கவனித்துக் கொள்ள தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓய்வூதியதாரர்களிடையிலான சம்பள முரண்பாட்டை நீக்க நாம் நடவடிக்கை எடுத்தோம். அத்தோடு அஸ்வெசும வழங்கப்படும் குழுக்கள் தொடர்பாக எதிர்வரும் ஜூன் மாதத்தில் மீளாய்வு செய்ய எதிர்பார்க்கிறேன். உதவி கிடைக்க வேண்டிய தரப்பினர்களை இலக்காகக் கொண்டு உதவி வழங்கும் திட்டமொன்றைச் செயல்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.உதவி கிடைக்க வேண்டிய தரப்பினர்களுக்கு உதவு வழங்குவதே உலகில் அநேக அரசாங்கங்களின் திட்டமாகும். அதற்கு துல்லியமான தரவுகள் திரட்டப்பட வேண்டும்.
இதுவரை, பிரஜைகளின் கண்ணோட்டத்தில் அன்றி அரசியல் கண்ணோட்டத்தில் தான் உதவிகள் வழங்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். எனவே, உதவி பெறத் தகுதியான குடிமக்களை முறையாகப் பராமரிப்பதற்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தை வகுப்பதே எங்கள் நோக்கமாகும். இந்தத் திட்டங்களுக்கு மக்களின் வரிப் பணம் தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட, இலக்கு வைக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
பாடசாலைக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாத மாணவர்களுக்கு உதவி வழங்க ஒரு திட்டத்தை நாங்கள் தயாரித்தோம். அதில் அஸ்வெசும கிடைக்கும் குழுவுக்கு மேலதிகமாக மேலும் பிள்ளைகள் இருந்தனர். எனவே, இந்த தரவுகளில் சில குழப்பங்கள் உள்ளன. முன்னூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்க முடிவு செய்தோம். துல்லியமான தரவைப் பெற்ற பிறகு, உதவி தேவைப்படும் சமூகத்தை இலக்காக வைத்து உதவி வழங்க நடவடிக்கை எடுப்போம்.
மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக கடந்த இரண்டு மாதங்களாக நாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். நாங்கள் இன்னும் வரவு செலவுத்திட்ட ஆவணத்தை சமர்ப்பிக்கவில்லை. வரவு செலவுத்திட்ட ஆவணம் பெப்ப்ரவரி 17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும். இந்த நாட்டில் எப்போதும் நிவாரணங்களைச் சார்ந்து இருக்கும் மக்கள் இருக்கக் கூடாது. நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருளாதார பலத்தை முறையாக வழங்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அதுதான் அரசாங்கத்தின் குறிக்கோள். 2022-2023 ஆம் ஆண்டு போல மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை நம் நாடு சந்திக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டிற்கு வலுவான பொருளாதார அடித்தளத்தை உருவாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
துறைமுகத்தை இலக்கு வைத்து பாரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளோம். 2030 ஆம் ஆண்டுக்குள் கொழும்பு துறைமுகத்தில் 113 இலட்சம் கொள்கலன் செயற்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. முன்னாள் தலைவர்களிடம் துறைமுகம் குறித்த எந்த திட்டமும் இருக்கவில்லை. துறைமுகத்தில் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. அவற்றில் இரண்டு நுழைவாயில்கள் மட்டுமே செயல்படுகின்றன. அதற்கான திட்டங்களை கூட முன்னாள் தலைவர்கள் செயல்படுத்தவில்லை. இதனாலேயே துறைமுகத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. கிழக்கு இறங்குதுறை பணிகளை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால் கொள்கலன் செயல்பாடுகள் மேலும் அதிகமாகும். அப்போது நெரிசல் அதிகரிக்கும். அதற்காக, கெரவலப்பிட்டியில் கொள்கலன் இறங்குதுறை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதனை அமைப்பதற்கு இன்னும் ஒரு வருடமாகும். இந்த இறங்குதுறை செயற்பாடுகளுக்கு விரைவான திட்டமொன்று அவசியம். தூரநோக்கம் கொண்ட ஆட்சியாளர்கள் இல்லாதிருந்தமையால் துறைமுகத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. நாம் படிப்படியாக நெரிசலை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சுற்றுலாத் துறையில், மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கிறோம். சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வந்தாலும், சுற்றுலா பயணிகளை கவரும் பகுதிகள் குறைவாக காணப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் நெரிசல் இன்றி பார்க்க கூடிய இடங்களை உருவாக்க வேண்டும். அனுராதபுரத்தை சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற்ற வேண்டும். இலங்கையின் முதலாவது இராசதானி, இலங்கையின் முதலாவது குளம் அமைக்கப்பட்ட இடம் அனுராதபுரமாகும். எனவே, அனுராதபுரத்தை ஒரு ரம்மியமான சுற்றுலா மையமாக மேம்படுத்தும் இயலுமை காணப்படுகிறது. உலகத்திற்குச் செல்லும்போது நாட்டின் பெயர் கூறப்படுவதில்லை. நகரத்தின் நாமமே கூறப்படுகிறது. லண்டன், பாரிஸ் என்று கூறுவது நகரங்களின் நாமங்களை அடையாளப்படுத்துவதற்காகும். அனுராதபுரத்தை வரலாற்று நகரமாக மாற்ற வேண்டும். மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வந்தால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் விஸ்தரிக்க வேண்டும்.
நம் நாட்டில் இயற்கை வளங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை. நமது கனிம வளங்களுக்கு பெறுமதி சேர்க்க எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கனிம வள மேம்பாட்டுக்கான தொழிற்சாலையை திறக்க திட்டமிட்டுள்ளோம். அனுராதபுரம் நகரில் 07 பழமையான நீர்ப்பாசன முறைமைகள் உள்ளன. அந்த ஏழு நீர்ப்பாசன முறைகளை மீளமைக்க நடவடிக்கை எடுப்போம். இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை உரிய திட்டங்களுக்கு செலவிட நடவடிக்கை எடுப்போம். இந்த செயற்பாடுகள் மூலம் பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
எரிசக்தி பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் முக்கிய துறையாகும். இன்று மின் கட்டணம் குறைந்துள்ளது. ஆனால் மின் கட்டண குறைப்பை நிலையாக வைத்திருக்க முடியாது. மழை பெய்தால் மின்கட்டணம் குறைவடைந்து வெயில் காலத்தில் அதிகரிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். மன்னாரில் காற்றாலை மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.அதிலிருந்து பெறப்படும் மின்சார அலகு ஒன்றின் கொள்வனவு விலை பதினான்கு ரூபாய். ஆனால் கடந்த அரசாங்கம் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இவ்வாறான ஒரு திட்டத்தை நிர்மாணிப்பதற்காக ஒப்பந்தம் செய்திருந்தபோது கொள்வனவு விலை 18 ரூபாயாக இருந்தது. கடந்த அரசாங்கம் சாம்பூர் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின் அலகு ஒன்றை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்திருந்த விலை அண்ணளவாக இருபத்தி நான்கு ரூபாய். ஆனால் அதை நாங்கள் பதினேழு ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுத்தோம். சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையங்களை அமைக்க 10,000 ஏக்கர் ஒதுக்கி டெண்டர் முறையில் முதலீட்டாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்குள் புதிதாக பிரவேசிப்போருக்கு அரசாங்க வங்கியொன்றுடன் இணைத்து அபிவிருத்தி கடன் திட்டத்தை தயாரித்து வருகிறோம்.
அதன் கீழ், சலுகை வட்டியில் கடன் வழங்கப்படும். திட்ட அறிக்கை காண்பித்து தொழிற்சாலைகள் அமைச்சின் அனுமதியுடன் வங்கியில் கையளிக்கும்போது கடன் வழங்கும் முறையை உருவாக்குவோம். புதிய விளைச்சல் நிலத் தொகுதிகளின் உரிமங்களை உருவாக்க இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்குவோம். சிறு மற்றும் மத்தியத்தர தொழில்துறை கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் பொருளாதாரத்தில் உயர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கிராமங்கள் அபிவிருத்தி அடைந்து கிராமிய பொருளாதாரம் என்ற வகையில் உயர்வடைந்து செல்வது அவசியமாகிறது.
அதேபோல், பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். நகர்ப்புறங்களில் முன்னோடி திட்டமாக இந்த முறைமையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை பல வழிகளில் முன்னோக்கி கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுப்போம். எமக்கு வாக்களிக்கும் போது மக்கள் பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தினர். அரசியல் கலாசாரம், வீண்விரயம், ஊழலை மட்டுப்படுத்தல் போன்ற விடயங்களை மக்கள் எங்களிடம் கேட்டனர். அதன்படி, முதலில் நிலவிய ஊழல் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தோம். அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்போவதில்லை. அந்த கலாச்சாரத்திற்கு முடிவுகட்டியுள்ளோம். அம்பியூலன்ஸ்கள் பின்னால் சென்ற வரலாறு இருந்தது. எந்த அமைச்சருக்கும், எம்.பி.க்கும் நாங்கள் வீடுகள் வழங்கவில்லை. கொழும்பு, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து இல்லங்களையும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் இவ்வாறு செயற்படும் போது முன்னாள் ஜனாதிபதிகள் அரசியல் பழிவாங்கல்கள் என்று கூறுகின்றனர். இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் கொழும்பு 07 இல் கோடிக்கணக்கில் பெறுமதியான காணிகள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் முப்பதாயிரம் சதுர அடி கொண்ட வீட்டில் இருக்கிறார். நல்ல அரசியல் கலாச்சாரத்திற்குள் வர விரும்புவோர் வாருங்கள். முன்னாள் ஆட்சியாளர்களுடன் எமக்கு காணி வழக்குகள் இல்லை. வீண்விரயம் செய்வது எமக்கு பழக்கமில்லை. வீண்விரயம் செய்து வாழ்வது அவர்களின் வாழ்வுரிமை என்று கூறுகிறார்கள். பொதுமக்களின் பணத்தை அதற்காக கொடுக்க வேண்டுமா? முன்னாள் ஜனாதிபதி அம்மையார் 15,000 சதுர அடி வீட்டில் இருக்கிறார். பழைய வீண்விரயம் குறித்து நாங்கள் எதுவும் கூறவில்லை. இன்று முதல் புதிய அரசியல் கலாசாரத்திற்கு வாருங்கள் என்று அவர்களை அழைக்கிறோம்.
அரசியல்வாதி என்பவர் மக்களுக்கு மேலாக இருப்பவர் அல்ல. எம்.பி.க்களுக்கு நாங்கள் வாகன கொள்வனவு அனுமதிகளை வழங்கவில்லை, வீடுகளை வழங்கவில்லை. ஓய்வூதியம் கொடுக்கவில்லை. ஊழல்வாதிகள் பிடிபட்டுள்ளனரா? என்று சிலர் கேட்கின்றனர். இது தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இடமளித்திருக்கிறோம். வலுவான முறையில் அந்த வழக்குகளை தொடருமாறு சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பவைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் எவரையும் தனிப்பட்ட முறையில் துறத்தவில்லை. விசாரணைகள் முடிவடையும் விதத்தில் நீதிமன்றத்தில் அறிக்கையிடுவோம்.
லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டு பத்து வருடங்கள் ஆகிவிட்டன. தாஜுதீன் கொல்லப்பட்டு பதின்மூன்று வருடங்கள் ஆகின்றன. தாஜுதீன் கொலையை கையாண்ட சட்ட வைத்திய அதிகாரி தற்போது மரணமடைந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரும் தற்போது உயிரிழந்துள்ளார். எனவே சில விசாரணைகள் கால தாமதம் ஆகலாம்.
போதைப்பொருள் கைது தொடர்பில் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.இந்த நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை உடைப்பதற்கு தேவையான வசதிகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்படாத துப்பாக்கிகள் சமூகத்தில் புழக்கத்தில் உள்ளன. அதனால் தான் சட்டவிரோதமான பாதாள உலகம் ஒன்று உள்ளது. இதை எதிர்த்துப் போராட தேவையான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த பாதாள உலகத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். நாம் மக்களுக்கு நெருக்கமானவர்கள். நாங்கள் ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. கறுப்பு சந்தை வியாபாரிகளுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எங்களின் அடிப்படை பிணைப்பு இந்த நாட்டு மக்களுடன் மட்டுமே உள்ளது. மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை சிதைய இடமளியோம்.
இலங்கையின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலத்திற்குப் பின்னர் மாற்று அரசியல் தலைமைத்துவம் உருவாகியுள்ளது. அதற்கு உங்களுடைய ஆதரவு தேவை. பொலிஸ், இராணுவம், அரசாங்க அதிகாரிகளின் உதவி எமக்குத் தேவை. உலகம் ஒரு காலத்தில் வெயிலையும் மழையையும் பார்த்துக்கொண்டு பயணித்தது. ஆனால் இப்போது உலகம் தரவுகளின் அடிப்படையில் பயணிக்கிறது. எனவே, தயாரிப்புகள் நுகர்வுக்கு போதுமானதா இல்லையா என்பது தரவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. அந்த தரவு சேகரிப்பு முழுமையாக செய்யப்பட வேண்டும். கமநல அதிகாரி ஒரு முறை ஒரு மில்லியன் மெட்ரிக் டொன் நெல் காணாமல் போனதாக கூறினார். ஆனால் அரச அரிசி களஞ்சியங்களில் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி மட்டுமே இருக்க முடியும். பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் மொத்த தொகை சேகரிப்பும் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் மட்டுமேயாகும். அவ்வாறிருக்க குறித்த அதிகாரி அவ்வாறானதொரு அறிக்கையை எதற்காக வெளியிட வேண்டும்? சரியான முறையில் தரவு சேகரிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. தரவு சரியாக இருந்தால், தேவையான நேரத்தில் முடிவுகளை எடுக்க முடியும். எனவே, எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் அரச சேவை முழுவதிலும் தரவு சேகரிப்புத் திட்டத்தை முழுமைப்படுத்த எதிர்பார்க்கிறோம். இதன் பின்னர் அரிசி தட்டுப்பாடு ஏற்பட இடமளியோம். நெல்லுக்கான நிர்ணய விலையும் நுகர்வோருக்கு நியாயமான விலையையும் வழங்க நடவடிக்கை எடுப்போம்.
வடக்கில் தென்னைச் செய்கைக்காக 3000 ஏக்கர் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கான நிதியை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க எதிர்பார்க்கிறோம். மிகவும் மோசமாக, முற்றிலும் சரிந்த நாட்டை படிப்படிகயாகக் கட்டியெழுப்பி வருகிறோம். அந்த வேலைத்திட்டத்தை இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
(-Colombo, January 22, 2025-) இன்று (22) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணி பிரதான அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் தொடர்பாகவும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அலுவலகத்தின் அரசியல் பொறுப்பதிகாரி ஆதம் எல்.மிச்சலோ, அரசியல் அலுவல்கள் நிபுணர் நசீர் மரிக்கார் […]
(-Colombo, January 22, 2025-)
இன்று (22) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணி பிரதான அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் தொடர்பாகவும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அலுவலகத்தின் அரசியல் பொறுப்பதிகாரி ஆதம் எல்.மிச்சலோ, அரசியல் அலுவல்கள் நிபுணர் நசீர் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துப்படுத்தி அதன் சர்வதேச பிரிவுக் குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி மது கல்பனா தோழர் இணைந்துகொண்டிருந்தார்.