(-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.07.25-) பொலிஸ் மா அதிபரின் பதவியை தற்காலிகமாக தடைசெய்து உயர்நீதிமன்றம் நேற்று (25) இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்தது. அதைப்போலவே பொருத்தமான ஒருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய இரண்டு பிரதான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். முதலாவதாக சபாநாயகர் அளித்த சட்டவிரோதமான வாக்களிப்பு காரணமாகவே இந்த சிக்கலின் கேந்திரம் உருவாகியது. ரணில் விக்கிரமசிங்க இந்த சிக்கலின் பிரதானமான […]
(-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.07.25-)
பொலிஸ் மா அதிபரின் பதவியை தற்காலிகமாக தடைசெய்து உயர்நீதிமன்றம் நேற்று (25) இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்தது. அதைப்போலவே பொருத்தமான ஒருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய இரண்டு பிரதான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். முதலாவதாக சபாநாயகர் அளித்த சட்டவிரோதமான வாக்களிப்பு காரணமாகவே இந்த சிக்கலின் கேந்திரம் உருவாகியது. ரணில் விக்கிரமசிங்க இந்த சிக்கலின் பிரதானமான பங்காளியாகிறார். தேசபந்து தென்னக்கோன் பதில் பொலிஸ் மா அதிபராக இருந்ததோடு நிரந்தரமான பொலிஸ் மா அதிபராக நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினாலேயே நியமிக்கப்பட்டார். இந்த இருவரும் செய்த நியமனங்கள் சம்பந்தமாகவே உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டன. தேசபந்துவின் நியமனத்தை இடைநிறுத்தி ஒரு நாள் கழிந்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கத்தில் பதில் பொலிஸ் மா அதிபரொருவர் தொடர்பில் எந்தவோர் அணுகலையும் காணக்கூடியதாக இல்லை. அதன் காரணமாக நாட்டு மக்களிடையே பாரதூரமான ஐயப்பாடு தோன்றியுள்ளது. எனினும் உயர்நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தீர்த்துவைத்த ஒரு விடயத்தை ஆயிரம் கோடி ரூபா செலவிட்டு அரசியலமைப்புத் திருத்தமொன்றாக கொண்டுவர தயாராகி வருகிறார்கள்.
ஜே. ஆர். ஜயவர்தனவின் காலத்தில் உயர்நீதிமன்றம் மீது கல்லெறிந்த வரலாறு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமக்குச் சார்பற்ற தீர்ப்பினை வழங்கியமை காரணமாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றப்பிரேரணையொன்று மூலமாக விரட்டியடித்தார்கள். அரசாங்கத்தின் தேவை உயர்நீதிமன்றத்தினால் ஈடேறாத சந்தர்ப்பங்களில் நிறைவேற்றுத்துறை இடையீடு செய்து வேறொரு முரண்பாட்டினை உருவாக்குகின்றது. ரணில் விக்கிரமசிங்க தெங்கு அபிவிருத்தி சபையில் ஆற்றிய உரையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதில்லையென குறிப்பால் உணர்த்தினார். மஹியங்கனையில் நடைபெற்ற காணி உறுதி வழங்கும் வைபவத்தில் மக்களின் நீதித்துறை தத்துவம் பாராளுமன்றத்திடமே இருக்கிறதெனக் கூறினார். அரசாங்கம் கொண்டுவந்த கொள்கை ரீதியான விடயங்கள் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தினார். எனினும் இந்த கீழ்த்தரமான செயல்களின் போது உயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியதும் அதனை தாக்கிப் பேசுகிறார்.
மனித உரிமைகளை மீறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்த தருணம் சம்பந்தமாக தீர்ப்பளித்தமையால் அரசாங்கம் நீதிமன்றத்துடன் முரண்பாட்டு நிலையொன்றுக்கு செல்ல முயற்சிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவையின் முன்னிலையில் ஆய்வுக்குட்படுத்துவதாக நேற்று கூறப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவையில் ஆய்வுக்குட்படுத்துவது அர்த்தமற்ற செயலாகும். அதைப்போலவே பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாமையால் தோ்தல் பிற்போடப்படும் என்ற பிரச்சினை கிளப்பப்பட்டுள்ளது. இது சரியான வேலையல்லவா? அப்படியானால் இவரும் பதில் ஜனாதிபதி அல்லவா. ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணையை பெறவில்லையே. அப்படியானால் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் முறைப்படி தோ்தல் அலுவல்களை ஈடேற்ற முடியும். இதனை எவ்விதத்திலும் நீதித்துறைக்கும் நிறைவேற்றுத் துறைக்கும் இடையிலான முரண்பாடுவரை ஓட்டிச் செல்ல வேண்டாமென நாங்கள் வலியுறுத்துகிறோம். நீதிமன்ற தீர்ப்பு சம்பந்தமாக கவலைப்படுவது ரணில் விக்கிரமசிங்கவின் தேவையாக இருந்த போதிலும் அது நாட்டின் தேவை அல்ல. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எவ்விதத்திலும் தோ்தலை பிற்போட காரணமாக அமையமாட்டாதென்பதை நாங்கள் இந்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கிறோம். அரசாங்கத்திற்கு நாங்கள் வலியுறுத்திக் கூறுவது இந்த நிலைமையை சாதகமானதாக முகாமைத்துவம் செய்து செயற்படுவதேயொழிய முரண்பாட்டுக்கு செல்லக்கூடாது என்பதாகும்.
“நிறைவேற்றுத்துறைக்கு அவசியமான விதத்தில் தீர்ப்பளிப்பதற்கான கடப்பாடு நீதிமன்றத்திற்கு கிடையாது.”
-ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும-
நிறைவேற்றுத்துறையினால் நீதித்துறைக்கு எதிராக ஒரு விதமான குழப்பநிலையை உருவாக்குவதற்கு கடந்த காலப்பகுதியில் முயற்சி செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விடுத்த கூற்று குறிப்பாக கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இலங்கைக்கு உயர்நீதிமன்றமொன்று தேவையில்லை என்ற விடயமா அதன் மூலமாகக் கூறப்படுகிறது? அப்படியில்லாவிட்டால் நீதிமன்ற முறைமையை வேண்டாம் என்பதா? நிறைவேற்றுத்துறைக்கு அவசியமான வகையில் தீர்ப்புகளை அளிப்பதற்கான கடப்பாடு நீதிமன்றத்திற்கு கிடையாது. அரசியலமைப்புக்கான 17 வது திருத்தத்தின் பின்னர் தோன்றிய வளர்ச்சிகளுடன் அரசியலமைப்பு திருத்தப்பட்டது. நீதிமன்றங்களுக்கு நீதியரசர்களை நியமிக்கின்ற நிறுவனமாக அரசியலமைப்பு சபை ஒரு சுயாதீனத்தன்மை மிக்க நிறுவனம் என்ற வகையிலேயே பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விதப்புரையை அரசியலமைப்பு பேரவை அங்கீகரிக்கவில்லை. சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட வழியுரிமையொன்று இருக்கிறது. எனினும் நேற்று அவசரமாக நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்பந்தமாக ஆழமாக ஆராய்ந்து அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நீதித்துறை தத்துவத்தை அமைச்சரவையோ பாராளுமன்ற தெரிகுழுவோ மீளாய்வு செய்ய முடியுமென்பதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் கிடையாது. இது நீதித்துறை மீதான அப்பட்டமான அழுத்தம் கொடுத்தலாகும்.
நீதியரசர்களின் தீர்ப்புகளை பரிசீலனை செய்வதற்கான தகைமை அமைச்சரவைக்கு இருக்கிறதா? இல்லை. எந்த விதத்திலும் அத்தகைய இயலுமை கிடையாது. எஸ்.பீ.திசாநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த விதத்திலான செயல் ஒன்றுதான் இங்கே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2010 இன் பின்னர் இவ்வாறான நிலைமைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. ‘ஹெஜிங்’ உடன்படிக்கை கைச்சாத்திட்ட காலத்தில் பெற்றோல் விலையை குறைக்குமாறு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை நிறைவேற்றுத்துறை அமுலாக்கவில்லை. அதன் பின்னரும் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக பிரச்சினையொன்றை முன்வைத்தார்கள். ஷிராணி பண்டாரநாயக்க அம்மையாரை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்தார்கள். பாராளுமன்ற தெரிகுழுவொன்று மூலமாக ஷிராணி பண்டாரநாயக்காவை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கினார்கள். அந்த செயற்பாடுகளின் பெறுபேறு என்ற வகையில் தான் 2015 இல் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் போகவேண்டி நேரிட்டது. நல்லாட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதாக மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் விடுத்த கூற்று சம்பந்தமாக மக்கள் நல்லலெண்ணத்துடன் சிந்தித்து அதிகாரத்தை கொடுத்தார்கள். எனினும் அதே ரணில் விக்கிரமசிங்க இப்போது செயலாற்றிக் கொண்டிருப்பது மீண்டுமொரு அதிகார மாற்றத்திற்கு மக்களை தூண்டுவதாக அமைகின்றது. நீதித்துறை பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இருக்கின்றது. அதனை ஒரு புறம் வைத்துவிட்டு தன்னை மகிழ்விக்காத தீர்ப்பினை வழங்கிவிட்டார்கள் என்பதற்காக கோபாவேசத்துடன் கத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சம்பந்தமான வழக்கு விசாரணை முடியும்வரை பொலிஸ் மா அதிபர் பதிவியின் பணிகளை ஆற்றுவதை இடைநிறுத்துவதே தீர்ப்பாக அமைகிறது. இந்த பணிப்புரையை தேசபந்து தென்னக்கோன் மீறினால் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக தவறாளியாகப் போகின்றவர் அவரே.
உயர்நீதிமன்ற தீர்ப்பின் இரண்டாவது பாகத்தில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படவேண்டுமென்பதே கூறப்படுகிறது. அதன்படி இரண்டு பணிப்புரைகள் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளன. அந்த பணிப்புரைகளை அமுலாக்காமை நீதிமன்றத்தை அவமதித்ததாக அமையும். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்ற வகையில் நீதிமன்றத்துடன் விளையாட சட்டவாக்கத்துறைக்கோ நீதித்துறைக்கோ முடியாதென்பதையே நாங்கள் வழியுறுத்துகிறோம். நாட்டு மக்கள் நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பங்கமேற்படக்கூடிய வகையில் செயலாற்றுவதாயின் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்ற வகையில் நாங்கள் அதற்கு எதிராக செயலாற்றுவோம்.
“தமது தேவைகளை ஈடேற்றிக்கொள்ள எதிர்பார்த்தவர்கள் தமது நாடகத்தை எதிர்காலத்தில் நடித்துக்காட்ட முடியும்.”
-சட்டத்தரணி சுசந்த தொடாவத்த-
ஒன்பது மனுக்களை பரிசீலனை செய்ய பின்னரே தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் செயலாற்றுவதற்கான இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினை வழங்கும் பொருட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட ஒரே விடயம் அரசியலமைப்பு சபையினால் இந்த நியமனம் செய்யப்பட்டது என்பதற்காக அல்ல. மனுதாரர் தரப்பினால் மேலும் பல விடயங்கள் நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்டிருந்தன. அவை மத்தியில் முதன்மை விடயமாக அமைந்துள்ளது. இந்த நாட்டில் பொலிஸ் மா அதிபர் பதவியை வகிக்க தேசபந்து தென்னக்கோன் என்பவர் பொருத்தமற்றவர் என்பதாகும். அதற்கு 2022 மே மாதம் ஒன்பதாம் திகதி சுதந்திரமானதும் அமைதியானதுமான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த காடையர்களுடன் இவர் வந்திருந்தமை பிரதான காரணமாகும். காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னக்கோனை ஒரு பிரதிவாதியாக்குமாறு சட்டத்துறை தலைமை அதிபதியால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதைப்போலவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்துக்கொள்ளாமை, பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கொடூரமாகவும் மனிதாபிமானமற்ற வகையிலும் சித்திரவதைக்கு உள்ளாக்கிமைக்கான தவறாளியாகியுள்ளமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக நிலவுகின்றன. அரசியலமைப்பு சபை முறைப்படி நியமித்திருந்தாலும், அவர் இந்த பதவிக்கு பொறுத்தமற்றவர் என்பதையே மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமனம் பெறமுன்னர் பொலிஸை ஒரு நாடக அரங்காக மாற்றினார். பொலிஸ் மா அதிபராக முன்னரும் அதன் பின்னரும் அவருடைய நடத்தைகள் பொலிஸ் மா அதிபர் என்பதற்கு பதிலாக அரசியல்வாதி ஒருவரின் நிலைமையை வெளிக்காட்டியது. பொலிஸ் மா அதிபர் சீருடையை அணிந்து கொண்டு இனிமேலும் கோமாளியாக ஆடமுடியாது. தேசபந்து தென்னக்கோனை நியமித்து தமது தேவைகளை ஈடேற்றிக்கொள்ள எதிர்பார்த்தவர்கள் எதிர்காலத்தில் அவர்களுடைய நாடகத்தை நடித்துக்காட்ட முடியும். தேசபந்து இல்லாமல் ‘யுக்திய’ தோல்வியடையும், பாடசாலை பிள்ளைகளின் பைகளில் போதை பொருட்கள் இருக்க ஆரம்பிக்கும் போன்ற புனைகதைகள் எதிர்காலத்தில் வரக்கூடும்.
அதனால் நாங்கள் விழிப்புடன் இருக்குமாறு இந்நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த நாட்டிலே தெளிவான சட்டமொன்று இருக்கிறது. பொலிஸ் மா அதிபர் பதவி இந்த ஆளினால் வெற்றிடமாகும்போது பதில் கடமையாற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அதற்கான தகைமைகளைக் கொண்ட சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். தேசபந்து இல்லையென்பதற்காக இந்த நாட்டின் வழமையான மக்கள் வாழ்க்கைக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படமாட்டாது. தேசபந்து தென்னக்கோன் என்பவரை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கியமை காரணமாக இந்த நாட்டிலே நீதியான, சட்டத்தை மதிக்கின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிக்க மகிழ்ச்சியடைவார்கள் என்பது எமக்கு தெரியும்.
(-ஊடகச் சந்திப்பு, மவிமு தலைமை அலுவலகத்தில்-) தோ்தலை இலக்காகக் கொண்டு பண்டங்களை வாங்குவதற்கான செயற்பாங்கில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்பியதாகவும் 2048 இல் நாட்டை அபிவிருத்தி செய்வதாகவும் கூறிக்கொண்டே ஜனாதிபதி பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். அதே வேளையில் இலங்கையில் அமுலாக்கப்பட்டு வருகின்ற பெறுகை செயற்பாங்கு மீது ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த அழிவுமிக்க ஒரு சில தீர்மானங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நிதி, பொருளாதார உறுதிநிலை, தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற பதவி என்ற […]
(-ஊடகச் சந்திப்பு, மவிமு தலைமை அலுவலகத்தில்-)
தோ்தலை இலக்காகக் கொண்டு பண்டங்களை வாங்குவதற்கான செயற்பாங்கில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்பியதாகவும் 2048 இல் நாட்டை அபிவிருத்தி செய்வதாகவும் கூறிக்கொண்டே ஜனாதிபதி பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். அதே வேளையில் இலங்கையில் அமுலாக்கப்பட்டு வருகின்ற பெறுகை செயற்பாங்கு மீது ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த அழிவுமிக்க ஒரு சில தீர்மானங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நிதி, பொருளாதார உறுதிநிலை, தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற பதவி என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை நிருபம் மீது இதன்போது நாங்கள் விசேட கவனம் செலுத்துகிறோம்.
“அரச வணிகக்கூட்டுத்தாபனத்திடமிருந்து பண்டங்கள் மற்றும் சேவைகளை ஒரு விலைக்கோரலின் பெயரில் அரச நிறுவனங்களால் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குதல்” எனும் தலைப்பில் அமைச்சரவை நிருபமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மே 14 ஆம் திகதி சமர்ப்பித்த இந்த அமைச்சரவை நிருபத்தின் மூலமாக பெறுகை செயற்பாங்கினை கடைப்பிடிக்காமல் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் நேரடியாகவே அரச வணிகக்கூட்டுத்தாபனத்திடமிருந்து ஐம்பது மில்லியன் ரூபா வரையான பண்டங்களை நேரடியாக கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கொள்வனவுகளின்போது அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியொன்றுடன் கூட்டாக சமர்ப்பிக்க வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட பிணைமுறியொன்று தேவையில்லையெனவும் காட்டப்பட்டுள்ளது.
எளிமையாக கூறுவதானால் ஐந்து கோடி ரூபாவிற்கு பண்டங்களை டென்டர் கோராமல் ஒரே தடவையில் கொள்வனவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலைமையில் சீக்கிரமாக பண்டங்களை பெற்று பகிர்ந்தளிப்பதற்காக இந்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதென்பது இதன் மூலமாக புலனாகின்றது. காகிதாதிகளிலிருந்து பெறுமதியான பொருட்களை வழங்குவதற்காக அரச நிறுவனங்களில் பதிவு செய்து கொண்டுள்ள வழங்கலாளர்களைக் கூட நீக்கிவிட்டு இந்த கொள்வனவுகளை மேற்கொள்ளலாம். அரசாங்கத்திற்கு வழங்கலொன்றை மேற்கொள்ளும்போது முறியொன்றை சமர்ப்பிக்க வேண்டிய நிலைமை தனியார் துறையினருக்கு ஏற்பட்டாலும் வணிக கூட்டுத்தாபனத்திற்கு அவ்வாறான பிணைமுறி அவசியமில்லையென்பதால் பாரதூரமான முறைகேடு உருவாகும். அரச வணிகக் கூட்டுத்தாபனம் திறந்த சந்தையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சம்பந்தப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்ய நோ்வதன் மூலமாக கறுப்புச் சந்தை கொடுக்கல் வாங்கல் ஒன்று உருவாகும். பண்டங்களின் தரம் பற்றி பாரதூரமான பிரச்சினை உருவாகும். நிழற்படப்பிரதி கருவி, டிஜிடல் டுப்ளிகேட்டஸ், பொதுவான கணனி மற்றும் மடிக்கணனிகள், மல்டிமீடியா புரொஜக்டர்ஸ், அச்சிடல் கருவிகள், மத வழிப்பாட்டுத் தளங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான பெற்றோல் மற்றும் டீசல் ஜெனரேடர்கள், ஒலிபெருக்கிக் கருவிகள் மற்றும் தொலைக்காட்சி கருவிகள் என்பவற்றை பாரியளவில் கொள்வனவு செய்ய தயாராகி வருகிறார்கள்.
எந்தவிதமான தரப்பரிசோதனைகளுமின்றி வணிகக் கூட்டுத்தாபத்திடமிருந்து இந்தப் பண்டங்களை கொள்வனவு செய்ய அனுப்பற்கட்டளைகளை வழங்குதல் முற்றாகவே பெறுகை ஆணைக்குழுவை பொருட்படுத்தாமல் விடுவதாகும். தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு மாத்திரம் 200 கோடி ரூபா பெறுமதியான பண்டங்களை வாங்குவதற்கு தயாராகி வருகிறார்கள். இந்தக் கொள்வனவுகள் துரிதமாக கொள்வனவு செய்யப்பட வேண்டியவை என காட்டப்பட்டுள்ளன. இந்தக் கொள்வனவுகளுக்காக செயற்படுகின்ற விதம் பற்றிய பல தகவல்கள் எமக்கு கிடைத்திருக்கின்றன.
அனைத்து கொள்வனவுகளும் தனியான நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்படுதல் சிக்கலானதாகும்
மத்திய மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் பிரதம கணக்காளர் எச்.எம்.பி. புஞ்சி பண்டா
பெறுகை செயற்பாங்கினை மேற்கொள்ளல் சம்பந்தமாக 2008 இல் வழிகாட்டிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறைந்த கிரயத்துடன் தரமிக்க பண்டங்களை உரிய நேரத்தில் வழங்குதல், உரிய தரத்திற்கும் சம்மந்தப்பட்ட அளபுருக்களுக்கும் அமைவாக பெற்றுக்கொள்ளல், தகைமை பெற்ற தரப்பினர்கள் பெறுகை செயற்பாங்கில் பங்கேற்பதற்கான நியாயமான வாய்ப்பினை வழங்குதல் என்ற வகையில் அடிப்படை விடையங்கள் காட்டப்படுள்ளன.
எனினும் தனி நிறுவனமொன்றுக்கு கொள்வனவு செய்தல்கள் அனைத்தையும் வழங்குவதன் மூலம் ஆகக்குறைந்த கிரயத்தில் தரமிக்க பண்டங்களை வழங்குவதற்கான இயலுமை வணிகக் கூட்டுத்தாபனத்திற்கு இருக்கின்றதா எனும் சந்தேகம் எழுகின்றது. அதைப்போலவே உரிய தரத்தை உள்ளிட்ட நிபந்தனைகள் மத்தியில் குறிப்பாக வெளிப்படைத்தன்மை கொண்டதாக செயலாற்றுவதற்கான இயலுமை சிக்கலானதாகும். இயந்திர சாதனங்கள் போன்ற பண்டங்களை கொள்வனவு செய்த பின்னர் சேவை வழங்குதல் பற்றியும் பழுதுபார்த்தல் மற்றும் உதிரிப்பாகங்களை பெற்றுக்கொள்ளல் பற்றிய சிக்கல்களும் அடிப்படையில் நிலவுகின்றன.
“அனைத்து கொள்வனவுகளும் தனியான நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்படுதல் சிக்கலானதாகும்”
-மத்திய மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் பிரதம கணக்காளர் எச்.எம்.பி. புஞ்சி பண்டா-
பெறுகை செயற்பாங்கினை மேற்கொள்ளல் சம்பந்தமாக 2008 இல் வழிகாட்டிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறைந்த கிரயத்துடன் தரமிக்க பண்டங்களை உரிய நேரத்தில் வழங்குதல், உரிய தரத்திற்கும் சம்மந்தப்பட்ட அளபுருக்களுக்கும் அமைவாக பெற்றுக்கொள்ளல், தகைமை பெற்ற தரப்பினர்கள் பெறுகை செயற்பாங்கில் பங்கேற்பதற்கான நியாயமான வாய்ப்பினை வழங்குதல் என்ற வகையில் அடிப்படை விடையங்கள் காட்டப்படுள்ளன.
எனினும் தனி நிறுவனமொன்றுக்கு கொள்வனவு செய்தல்கள் அனைத்தையும் வழங்குவதன் மூலம் ஆகக்குறைந்த கிரயத்தில் தரமிக்க பண்டங்களை வழங்குவதற்கான இயலுமை வணிகக் கூட்டுத்தாபனத்திற்கு இருக்கின்றதா எனும் சந்தேகம் எழுகின்றது. அதைப்போலவே உரிய தரத்தை உள்ளிட்ட நிபந்தனைகள் மத்தியில் குறிப்பாக வெளிப்படைத்தன்மை கொண்டதாக செயலாற்றுவதற்கான இயலுமை சிக்கலானதாகும். இயந்திர சாதனங்கள் போன்ற பண்டங்களை கொள்வனவு செய்த பின்னர் சேவை வழங்குதல் பற்றியும் பழுதுபார்த்தல் மற்றும் உதிரிப்பாகங்களை பெற்றுக்கொள்ளல் பற்றிய சிக்கல்களும் அடிப்படையில் நிலவுகின்றன.
“தோ்தல் கொள்ளைகளிலும் தீத்தொழிலிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்”
-இளைப்பாறிய முதுநிலை உதவி கணக்காய்வாளர் தலைமை அதிபதி ரம்யா லாலனி-
கள்வனுக்கு முன்னராக வாழைக்குலை வேலியைத் தாண்டியது போல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன குறிப்பாக பண்டங்களை பகிர்ந்தளிப்பதற்கான அமைச்சரவை நிருபத்தை சமர்ப்பித்து பொறுப்பு வழங்கப்பட்டுள்ள வணிக கூட்டுத்தாபனம் பற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். ஒப்பந்தக்காரர்களுடன் உடன்படிக்கைகளை செய்திராமை, பிணைமுறி பாதுகாப்பு பெற்றிராமை, பெறுகைத்திட்டம் தயாரிக்கப்பட்டிராமை போன்ற பல குறைபாடுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. முட்டை இறக்குமதி செய்வதற்கான அனுமதி இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமையால் 2023 மார்ச் தொடக்கம் மே வரை 16.5 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தற்காலிக களஞ்சியமென்ற வகையில் கம்பெனியொன்றின் இடவசதி பாவனைக்கு எடுக்கப்பட்டுள்ளதோடு அந்த கம்பெனியால் அது பிரிதொரு கம்பெனிக்கு ஒப்படைக்கப்பட்டதால் களஞ்சிய வாடகையாக 07 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. 2023 கணக்காய்வு அறிக்கைக்கு இணங்க நெல் களஞ்சியப்படுத்துவதற்காக 2015 இல் பாரிய பொதியிடல்கள் இறக்குமதி செய்யப்பட்டு அழிவடைய இடமளித்துள்ளமை வெளியாகியிருக்கிறது. இந்த பொதியிடல்கள் 107.37 மில்லியனை செலவிட்டு பிலிப்பைன்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 48 மில்லியன் பெறுமதியான பொதியிடல்கள் 8 வருடங்களாக அழிவடைய இடமளிக்கப்பட்டுள்ளது. அரச வணிகக் கூட்டுத்தாபனத்தில் கடுமையான வினைத்திறமையீனமும் தீவிரமான நிதிசார் சேதமும் இடம்பெற்றுள்ளமை இதன் மூலமாக தெளிவாகின்றது. 2020 கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் நடமாடும் விற்பனை நிலையங்களை பேணி வந்ததால் 10 மில்லியன் ரூபா நட்டத்தை உள்ளிட்ட பல நட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அரசாங்க பெறுகை நடவடிக்கைகள் சம்பந்தமான ஒழுங்குறுத்தல் பொறுப்பு தேசிய பெறுகை ஆணைக்குழுவிடமே கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள இந்த அமைச்சரவை நிருபத்துடன் தொடர்புடைய விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் நேற்று (22) முறைப்பாடு செய்தோம். இந்த செயற்பாங்கினை வலுவிழக்கச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஜனாதிபதி தோ்தல் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும்போது பண்டங்களை பகிர்ந்தளிப்பதற்காக அமுலாக்கியுள்ள இந்த செயற்பாட்டினூடாக அமைச்சர்களுடன் தொடர்புடைய கம்பெனிகளுக்கு இந்த வழங்கலுக்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ள பல சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பில் எங்களுடைய எந்த விதமான எதிர்ப்பும் கிடையாது. எனினும் பண்டங்களை பகிர்ந்தளித்தலை மேற்கொண்டு தோ்தலை கொள்ளையடிக்கவும் தீத்தொழிலில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டியுள்ளது. வாக்காளர்கள் என்ற வகையிலும் இதனை எதிர்ப்பதற்கான உரிமை எங்களுக்கு இருக்கிறது. சம்பந்தப்பட்ட ஒழுங்குறுத்தல் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நாங்கள் இந்த விடயங்களை வெளிப்படுத்துகிறோம்.
(-Japan, July 22, 2024-) நேற்று (22) பிற்பகல் Tokyo Prince இல் இடம்பெற்ற ஜப்பான் வாழ் இலங்கையர்களின் தொழில்வாண்மையாளர்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். இதன்போது, எதிர்காலத்தில் திசைகாட்டியின் அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் முதலீடுகள் தொடர்பாகவும் கருத்து பரிமாறப்பட்டது.
(-Japan, July 22, 2024-)
நேற்று (22) பிற்பகல் Tokyo Prince இல் இடம்பெற்ற ஜப்பான் வாழ் இலங்கையர்களின் தொழில்வாண்மையாளர்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
இதன்போது, எதிர்காலத்தில் திசைகாட்டியின் அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் முதலீடுகள் தொடர்பாகவும் கருத்து பரிமாறப்பட்டது.
(-Japan, July 22, 2024-) தற்போது ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumi அவர்களுக்கும் இடையில் இன்று (22) பிற்பகல் குறித்த அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்றளவில் இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக இருந்துவருகிற நட்புறவு குறித்தும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தக்கட்ட நகவர்வுகள் சம்பந்தமாகவும் இதன்போது […]
(-Japan, July 22, 2024-)
தற்போது ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumi அவர்களுக்கும் இடையில் இன்று (22) பிற்பகல் குறித்த அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இன்றளவில் இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக இருந்துவருகிற நட்புறவு குறித்தும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தக்கட்ட நகவர்வுகள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஜப்பான் வெளிவிகார அமைச்சர் ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இந்த சந்திப்பில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் Tsutsumi Taro அவர்களும் அந்தப் பிரிவின் பிரதி பணிப்பாளர் IWASE Kiichiro அவர்களை உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் தேசிய மக்கள் சக்தியின் ஜப்பான் குழுவின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
(-Colombo, July 21, 2024-) நிகழ்கால அரசாங்கம் அரசிலமைப்பினை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தில் ஐயப்பாட்டினை உருவாக்க முனைந்து வருகின்றது. இந்த ஐயப்பாட்டின் மூலாரம்பம் சனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா, ஆறு வருடங்களா என்கின்ற உரையாடல். இந்த ஐந்தா, ஆறா என்கின்ற உரையாடல் உயர்நீதிமன்றத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட உரையாடலாகும். அதனை மீண்டும் களத்திற்கு கொண்டுவந்தவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். எந்நேரமும் ஐயப்பாட்டுடன் வாழ்கின்ற ரணில் விக்கிரமசிங்க அதனை சமூகமயப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஐந்து வருடங்களா ஆறு வருடங்களா என்கின்ற உரையாடல் […]
(-Colombo, July 21, 2024-)
நிகழ்கால அரசாங்கம் அரசிலமைப்பினை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தில் ஐயப்பாட்டினை உருவாக்க முனைந்து வருகின்றது. இந்த ஐயப்பாட்டின் மூலாரம்பம் சனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா, ஆறு வருடங்களா என்கின்ற உரையாடல். இந்த ஐந்தா, ஆறா என்கின்ற உரையாடல் உயர்நீதிமன்றத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட உரையாடலாகும். அதனை மீண்டும் களத்திற்கு கொண்டுவந்தவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். எந்நேரமும் ஐயப்பாட்டுடன் வாழ்கின்ற ரணில் விக்கிரமசிங்க அதனை சமூகமயப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஐந்து வருடங்களா ஆறு வருடங்களா என்கின்ற உரையாடல் முதன்முதலில் 19 வது திருத்தம் உயர்நீதிமன்றத்திற்கு வந்தவேளையிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த உரையாடல் உயர்நீதிமன்றத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனை மீண்டும் மைத்திரிபால சிறிசேன கிளப்பினார். அவருடைய பதவிக்காலம் நிறைவடைய அண்மித்துக்கொண்டு இருக்கையில் தன்னால் ஆறு வருடங்கள் இருக்க முடியுமா என்பது பற்றிய அபிப்பிராயத்தை உயர்நீதிமன்றத்திடம் வினவினார். உயர்நீதிமன்றம் அந்த பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என வெளிப்படுத்தியது. அதன் பின்னர் லெனவ என்பவர் 19 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே உயர்நீதிமன்றம் ஐந்து வருடங்களென தீர்ப்பளித்து ஒரு இலட்சம் ரூபா வழக்குக்கட்டணத்தை செலுத்துமாறு கட்டளையிட்டது. அதன் பின்னர் ஒரு சட்டத்தரணியைக்கொண்டு இந்த கேள்வியை மீண்டும் கேட்டார்கள். அவர்மீது ஐந்து இலட்சம் ரூபா வழக்குக் கட்டணம் விதிக்கப்பட்டு ஐந்து வருடங்களே என தெளிவுபடுத்தப்பட்டது. இன்றளவில் சனாதிபதியின் பதவிக்காலம் அரசியலமைப்பின் 30 (2) உறுப்புரையின்படியும் உப பிரிவுகளின்படியும் ஐந்து வருடங்களே என்பது எமக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கையில் நீதியமைச்சர் தனிக்கடதாசியில் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டார். அவரே, “இதனை நாங்கள் சனாதிபதி தேர்தலுக்குள் கொண்டுவர மாட்டோம், அதனை முன்னெடுத்துச் செல்லவேண்டாம்” என அவருடைய செயலாளருக்கு அறிவித்ததாகக் கூறினார். அவ்வாறு கூறியிருக்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் தனிக்கடதாசியில் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டார். மக்கள் தீர்ப்பிற்குச் செல்வதா, அதனால் சனாதிபதி தேர்தலுக்கு தடையேதும் ஏற்படுமா என்ற விடயத்தின் அடிப்படையில் தற்போது சமூகத்தில் மீண்டும் ஓர் ஐயப்பாட்டினை உருவாக்கி வருகிறார்கள். இந்த வர்த்தமானியில் இருப்பது இரண்டு பதங்களுக்கிடையிலான போட்டியாகும். ஒரு பிரிவில் கூறப்படுகின்றது “ஆறு வருடங்களை விஞ்சியதாக” எனப்படுகின்ற பதங்களை “ஐந்து வருடங்கள் வரை” என்பதாக மாற்றப்படுவதாகும். இந்த இரண்டு பதங்களுக்காக 1000 கோடி ரூபா பணத்தைச் செலவிட ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்க்கிறார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணமில்லை எனக்கூறி ரணில் விக்கிரமசிங்க முழுமையாகவே சுருக்கிக்கொண்டது எமக்கு ஞாபகம் இருக்கிறது. இன்று வெளிநாடு சென்றுள்ள உழைப்பாளிகளினதும் ஏற்றுமதி வருமானத்தையும் அடிப்படையாகக்கொண்டு கடன் மறுசீரமைப்பிற்குள்ளே சிரமத்துடன் பேணி வருகிறார். இது சனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படவுள்ள தருணமாகும். தயவுசெய்து சீக்கிரமாக இந்த சிக்கலைத் தீர்த்துவைக்குமாறு நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறுகிறோம். சனாதிபதி தேர்தல் நடைபெறுகின்ற தினத்தையும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற திகதியையும் உடனடியாக வெளிப்படுத்துங்கள். இனிமேலும் காலம்தாழ்த்தாமல் இந்த திகதியை அறிவிப்பதன் மூலமாக இந்த நிலைவமையை ஓரளவிற்கு தணிக்கலாம். சனாதிபதி தேர்தல் நடைபெறுவதை ரணில் விக்கிரமசிங்கவின் தில்லுமுல்லுகளால் நிறுத்திவிட முடியாது. இந்த வர்த்தமானப் பத்திகை சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதன் பின்னர் பொதுமக்களுக்கு மனுக்களை சமர்ப்பிக்க இரண்டுவாரகால அவகாசம் கொடுக்கவேண்டும். உயர்நீதிமன்றம் மனுவினை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க மேலுமொரு வாரம் தேவை. பாராளுமன்றத்தில் விவாதத்திற்கான திகதியைக் குறிக்க மேலும் ஒரு வாரம் வரை எடுக்கும். அந்த விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்று சனாதிபதி தன்னுடைய கையொப்பத்தை இடவேண்டும். இது மக்கள் தீர்ப்பிற்குச் செல்லவேண்டுமென உயர்நீமன்றம் தீர்மானித்தால் அதற்கு சனாதிபதி கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்டு ஒரு மாதத்திற்குள் மக்கள் தீர்ப்பிற்கான அழைப்பு விடுக்கவேண்டும்.
இந்த செயற்பாங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் சனாதிபதி தேர்தல் செயற்பாங்கு நின்றுவிட மாட்டாது. இந்த நாடு சிரமத்துடன் கழித்துவருகின்ற காலமே இது. தமது அசிங்கமான அயோக்கியத்தனமான அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்காகவே உயர்நீதிமன்றம் தீர்த்துவைத்த விடயமொன்று மீண்டும் களமிறக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை. உண்மையைக் கூறுவதானால் ரணில் விக்கிரமசிங்க இந்த தேர்தலில் போட்டியிடுகிறாரா இல்லையா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அவர் போட்டியிடுவதற்கு ஒரு கட்சி கிடையாது. அவருக்கு ஏற்பட்டுள்ள ஐயப்பாட்டினை அரசியலமைப்பு மூலமாக நாட்டின் ஐயப்பாடாக மாற்ற முனைகிறார். இது உயர்நீதிமன்றத்திற்கு வந்தால் நாங்கள் வாதாட எதிர்பார்த்திருக்கிறோம். ஆறு வருடங்களை விஞ்சுவதாயின் மக்கள் தீர்ப்பிற்குச் செல்லவேண்டியது அவசியமென்றே இந்த பிரிவில் இருக்கின்றது. காலத்தைக் குறைப்பதாயின் உண்மையாகவே அத்தகைய ஒன்று அவசியமா என வாதம்செய்ய எதிர்பார்க்கிறோம். இது உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட்ட ஒரு பிரச்சினையாகும். அப்படியானால் இதனை பாராளுமன்றத்தில் 2/3 மூலமாக எம்மால் தீர்த்துக்கொள்ள முடியுமா என பார்க்கவேண்டும். முடியுமானால் மக்கள் தீர்ப்பிற்குச் செல்லவேண்டியதில்லை. இயலுமானால் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் 2/3 ஐ எடுத்துக் காட்டட்டும்.
இன்று இந்த அரசாங்கம் ஒட்டுமொத்த சமூகத்தையுமே சந்தேகத்திற்கு ஐயப்பாட்டுக்கு இலக்காக்கி இருக்கின்றது. பயப்படவேண்டாமென மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி சரியாக விளங்கிக்கொண்டுள்ளது. இந்த தந்திரோபாயங்களுக்கு மாட்டிக்கொள்ள வேண்டாம். சனாதிபதி தேர்தலை எவராலும் தடுக்க இயலாது. இனிமேலும் காலத்தை வீணடிக்காமல் இயலுமானவரை சிக்கிரமாக வேட்பு மனுத் திகதியையும் தேர்தல் திகதியையும அறிவிக்குமாறு நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கிறோம். அப்போது இந்த பிரச்சி்னையில் அரைவாசி தீர்ந்துவிடும். தேசிய மக்கள் சக்தியின் வலிமையைக்கண்டு அஞ்சி ரணில் விக்கிரமசிங்க என்னதான் நாடகம் ஆடினாலும் இந்த பயணத்தை திசைதிருப்ப முடியாது. ரணில் விக்கிரமசிங்க இந்த சமூகத்தை ஐயப்பாட்டுடன் கொண்டுசெல்வதை உடனடியாக நிறுத்தவேண்டும். அதற்கான தீர்வினை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
“சிவில் அமைப்புக்களோ மக்களோ வழக்கொழிந்த ஒரு பிரிவினை திருத்தியமைக்குமாறு கோரவில்லை”
-சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார-
அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தத்தி்ன் பின்னர் இந்த நாட்டில் தேர்தலால் நியமிக்கப்பட்ட சனாதிபதியொருவரின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகும். அதைப்போலவே பதவி வெற்றிடம் ஏற்பட்டமை காரணமாக நியமிக்கப்படும் பின்தொடருகின்ற சனாதிபதியொருவர் பதவி வகிக்கக்கூடிய காலம் நீங்கிச்சென்றவரின் பதவிக்காலத்தைக் கழித்தபின்னர் எஞ்சுகின்ற காலப்பகுதி மாத்திரமாகும். அதனால் இலங்கையின் அரசியலமைப்பின்படி ஐந்து வருடங்களை விஞ்சியதாக இருக்கக்கூடிய சனாதிபதியொருவர் கிடையாது. உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதி ஆயத்தினால் இது கடந்த வாரத்திலும் பிரகடனஞ்செய்யப்பட்டது. அரசியலமைப்பின் 83 (ஆ) பிரிவில் இருக்கின்ற ” வருடங்களை விஞ்சியதாக நீடிப்பதாயின்” எனும் சொற்றொடர்கள் வழக்கொழிந்த சொற்றொடர்களாக மாறியுள்ளன.
அரசியலமைப்பில் வழக்கொழிந்த ஒரு சொல்லைத் தீர்த்துவதற்காக காலத்தை வீணடிப்பதோ மக்கள் தீர்ப்பொன்றினை நடாத்துவதோ எனக்கூறுவது பயங்கரமான அநியாயமாகும். இலங்கை ஒரு வங்குரோத்து நாடாக மாறி கேஸ் விலை, பாடசாலை உபகரணங்களின் விலை, உணவுப்பொருட்களின் விலை, மின்சாரம், நீர் ஆகியவற்றின் விலைகள் மிகவும் அதிகமாக உயர்வடைந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தருணத்தில் சட்டப்படி உரிய தேர்தலை தவிர்ந்த மேலுமொரு மக்கள் தீர்ப்பினை நடாத்த வேண்டுமென எவரேனும் தீர்மானிப்பதாயின் அவர் ஒரு பொருளாதாரக் கொலைகாரனாவார். தவறான பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்து அதற்கிணங்க நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு ஆளாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றம் ஒரு வழக்குத்தீர்ப்பினை அளித்துள்ளது. பசில் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உளய்ளிட்ட சிலர் பொருளாதாரத்தை படுகொலை செய்தமை தொடர்பில் மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. கட்டாயமாக நடாத்தவேண்டிய ஜனாதிபதி தோ்தல் நடாத்தப்படவேண்டிய நேரத்தில் அதற்குள்ளே மக்கள் தீர்ப்பொன்றினை நடாத்தி இந்த வறிய நாட்டில் பெருந்தொகையான பணத்தை செலவிட முற்படுவார்களாயின், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கியுள்ள தீர்ப்புகளுக்கிணங்க அதுபற்றிய தீர்மானங்களை எடுத்தவர் பாரதூரமான பொருளாதார கொலைக்காரனாக மாறுவார். அது நடைபெறக்கூடாத ஒன்றாகும்.
போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை நீங்கிச்சென்ற பின்னர் இந்த நாட்டில் சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள், மத அமைப்புக்கள் அனைத்துமே ஒற்றுசோ்ந்து இந்த நாட்டில் பொதுத் தோ்தல் ஒன்றை நடத்தி மக்கள் விரும்புகின்ற அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள இடமளிக்குமாறே கோரிக்கை விடுத்தார்கள். மக்களின் அந்த கோரிக்கையை உதறித்தள்ளிவிட்டு திரிபு நிலையடைந்த அரசாங்கமொன்றை மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த அரசாங்கமே அமைத்துக்கொண்டது. திரிபு நிலையடைந்த அரசாங்கமொன்றை அமைத்துக்கொண்டு அமைச்சரவையொன்றையும் நியமித்துக் கொண்டார்கள். அவ்விதம் திரிபு நிலையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவையும் ஜனாதிபதியும் இந்த நேரத்திலேயே அரசியலமைப்பை திருத்தவேண்டுமென தீர்மானிக்கிறார்கள். இந்த நாட்டில் சிவில் அமைப்புக்கள் அல்லது மக்கள் வழக்கொழிந்த பிரிவொன்றினை திருத்துமாறு வேண்டுகோள் விடுக்கவில்லை. பாராளுமன்றத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் வேறு சிறிய கட்சிகளின் உறுப்பினர்களும் நீங்கலாக பாராளுமன்றத்தின் 150 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தோ்தலுக்கு அஞ்சியவர்களாவர். இது போராட்டத்தால் நிராகரிக்கப்பட்டவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்றமாகும். வெளியில் என்ன தான் கூறினாலும் உள்ளே ஒன்றிணைந்து இந்த ஜனாதிபதி தோ்தல் நடாத்தப்படுவதற்கு இடையூறு விளைவிக்க முயற்சி செய்தாலும் நாட்டின் அதியுயர் சட்டத்தை மிதிப்பதற்கான உரிமை எவருக்கும் கிடைக்கமாட்டாது.
அதியுயர் சட்டத்தின்படி ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்படல் வேண்டும். ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தோ்தல் நடாத்தி முடிக்கப்படல் வேண்டும். அதனை எவராலும் மாற்ற முடியாது. எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் எவ்வாறு போட்டியிடுவதென நிச்சயித்துக் கொள்ள முடியாவிட்டாலும் இந்த அமைச்சரவையும் ஜனாதிபதியும் போட்டியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதியும் ஒரு போட்டியாளாராவர். போட்டியிடவுள்ள ஜனாதிபதியும் அமைச்சரவையும் அரசியலமைப்பினை திருத்துவதற்கான தீர்மானமொன்றை தான்தோன்றித்தனமாக கொண்டுவந்து அந்த முன்மொழிவின் அடிப்படையில் மக்களின் வாக்குப்பலத்திற்கு இடையூறு விளைவிக்கவோ ஜனாதிபதி தோ்தலுக்கான பணத்தை வேறு பக்கத்திற்கு திசைத்திருப்பி மக்கள் தீர்ப்பினை நோக்கி சுழற்றிவிட முயற்சி செய்வார்களாயின், ஒரு போட்டியாளர் ஏனைய போட்டியாளர்களுக்கு எதிராக எடுக்கின்ற மிலேச்சத்தனமான நெறிமுறைகளுக்கு புறம்பான செயலாகும். இதற்கு முழுச்சமூகமுமே கண்டனம் தெரிவிக்கவேண்டும். இவர்கள் காலத்தை வீணடிப்பதையே செய்ய முனைகிறார்கள்.
ஜனாதிபதி தோ்தல் கட்டாயமாக நடைபெறும். தேசிய மக்கள் சக்தி கட்டாயமாக போட்டியிடும். ஏனைய அனைவருமே ஒன்று சோ்ந்து ஒருவர் அல்லது இருவர் அல்லது ஒரு சிலராக வரலாம். அரசியலமைப்பின் 3 வது உறுப்புரையில் விபரிக்கப்பட்டுள்ள இறைமைத் தத்துவம் மக்களின் பாராதீனப்படுத்த முடியாத உரிமையாகும். அரசியலமைப்பின் 04 வது உறுப்புரையில் 05 தத்துவங்கள் காட்டப்பட்டுள்ளன. மக்களால் பாராளுமன்றத்திடம் அல்லது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிராத இரண்டு தத்துவங்கள்தான் அடிப்படை உரிமைகளும் வாக்களிக்கின்ற உரிமையுமாகும். அது பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்ட ஒரு அதிகாரமல்ல. வாக்குப்பலம் மக்கள் கொண்டுள்ள பாராதீனப்படுத்த முடியாத அதிகாரமாகும். அதற்காக பாராளுமன்றம் சட்டங்களை விதித்தல் அல்லது சட்டங்களை விதிக்க முயற்சி செய்வதனூடாக இடையூறு விளைவிப்பதற்கான எந்தவிதமான உரிமையும் கிடையாது. அவ்வாறு செய்வது அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆகிய உறுப்புரைகளை மீறுவதாக அமையும். எவரேனும் ஜனாதிபதியொருவர் ஏலாமை நிலையினால் அல்லது வலுக்குறைவினால் அல்லற்படுவாராயின் அது குற்றப்பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு ஏதுவாக அமையத்தக்க விடயமாகும். அரசியலமைப்பில் பாவிக்கப்படாத ஒரு பிரிவு இருக்கிறது. சனாதிபதி தேர்தலொன்றின் முன்னிலையில் மக்கள் தீர்ப்புக்கு ஏதுவாக அமையக்கூடிய அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ள முயற்சி செய்வது மிகவும் கபடத்தனமான செயலாகும். இன்றேல் மனநோயாகும். எவ்வாறு இருப்பினும் இது குடியுரிமையை இல்லாதொழிக்கக்கூடிய பாரதூரமான அரசியலமைப்பு மீறலாகும். இந்த மீறல் தொடர்பில் அமைச்சரவையும் பின்தொடர்ந்த ஜனாதிபதியும் பொறுப்புக்கூறவேண்டும். ஜனாதிபதி தோ்தலுக்கான மாற்றீடாக மக்கள் தீர்ப்பொன்றினை நடாத்த முடியாது. அவ்வாறு நடைபெற இடமளிக்கவும் ஆகாது.
ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தப்படுகின்ற ஜனாதிபதி தோ்தலுக்கு முழு நாடுமே தயாராகுங்கள். உங்களுடைய பண்டங்களின் விலைகள் அதிகரித்த விதம் பற்றி சிந்தியுங்கள். பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்களின் விலைகள் அதிகரித்த விதத்தை சிந்தித்துப்பாருங்கள். பொருளாதார கொலைகாரார்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிய விதம் பற்றி சிந்தித்துப்பாருங்கள். குற்றச் செயல் புரிந்தவர்கள், கொள்ளைக்காரர்கள் பாராளுமன்றத்தில் இருப்பது பற்றி சிந்தித்துப் பாருங்கள். எல்லா அரசாங்கங்களிலும் அமைச்சர் பதவிகளை வகித்து எல்லாவற்றுக்கும் கையை உயர்த்தி இந்த நிலைமை உருவாக காரணமாக அமைந்தவர்கள் பற்றி சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் எதிர்நோக்கியுள்ள பாரதூரமான பிரச்சினைகள் பற்றி சிந்திப்பதை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படுகின்ற மிலேச்சத்தனமான பிரயத்தனமே இது. அந்த பிரயத்தனங்களை கண்டிக்க வேண்டும்.
(-Colombo, July 22, 2024-) இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், நுவரெலியா மாவட்டத் தலைவர் மஞ்சுள சுரவீர, தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
(-Colombo, July 22, 2024-)
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், நுவரெலியா மாவட்டத் தலைவர் மஞ்சுள சுரவீர, தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.