Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

ரணிலின் பொருளாதார மாற்ற சட்ட முன்மொழிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் தேசிய மக்கள் சக்தி…

(-Colombo, June 03, 2024-) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரேரணைக்கு அமைவாக அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள பொருளாதார மாற்ற சட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றில் நேற்று (03) பிற்பகல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையின் உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் மனுதாரர்களாகவும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த […]

(-Colombo, June 03, 2024-)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரேரணைக்கு அமைவாக அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள பொருளாதார மாற்ற சட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றில் நேற்று (03) பிற்பகல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையின் உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் மனுதாரர்களாகவும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க அடங்கலாக சட்டத்தரணிகளும் இதில் கலந்துகொண்டனர்.

Show More

“எமது நாட்டின் இளைஞர்களின் கைகளில் அரசியல் சுக்கான் கைளிக்கப்படவேண்டும்.” -தேசிய மக்கள் சக்தியியன் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-Colombo, June 02, 2024-) இன்றளவில் பாதகமான வானிலை காரணமாக அனர்த்த நிலைமையொன்று உருவாகி இருக்கின்றது. ஒருசில பிரதேசங்களில் மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். அதைப்போலவே உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன. மழை காரணமாக உயிரிழந்த மற்றும் நிர்க்கதி நிலைக்குள்ளாகிய மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி என்றவகையில் எமது பக்கத்தில் இருந்து உதவியளிக்க, ஒத்துழைப்பு வழங்க எமது நிவாரண சேவை செயலணிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒருசில பிரதேசங்களுக்கு செல்லமுடியாமல் இருக்கின்றது. வெள்ளப்பெருக்கினால் உயிரிழக்கவும் இவ்வளவு பெருந்தொகையானோர் இடம்பெயரவும் கூடாது. […]

(-Colombo, June 02, 2024-)

இன்றளவில் பாதகமான வானிலை காரணமாக அனர்த்த நிலைமையொன்று உருவாகி இருக்கின்றது. ஒருசில பிரதேசங்களில் மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். அதைப்போலவே உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன. மழை காரணமாக உயிரிழந்த மற்றும் நிர்க்கதி நிலைக்குள்ளாகிய மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி என்றவகையில் எமது பக்கத்தில் இருந்து உதவியளிக்க, ஒத்துழைப்பு வழங்க எமது நிவாரண சேவை செயலணிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒருசில பிரதேசங்களுக்கு செல்லமுடியாமல் இருக்கின்றது. வெள்ளப்பெருக்கினால் உயிரிழக்கவும் இவ்வளவு பெருந்தொகையானோர் இடம்பெயரவும் கூடாது. மழை இயற்கையானது. ஆனால் விபத்துகள் இயற்கையானவையல்ல. எமது நாட்டின் ஆட்சியாளர்கள் நீண்டகாலமாக கடைப்பிடித்த தவறான அபிவிருத்திக் கொள்கைகளின் பெறுபேற்றினைத்தான் நிகழ்கால தலைமுறையினர் அனுபவித்து வருகிறார்கள். உலகில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தினால் இவ்வாறான ஆபத்துகளை முன்கூட்டியே இனங்கண்டு, மழை எப்பகுதிகளுக்கு அதிகமாக கிடைக்கின்றது, எந்தப் பிரதேசங்களுக்கு வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவுகின்றது என்பதை எதிர்வுகூற முடியும். இவ்விதமாக இனங்கண்டு இந்த அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. தரவுகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்துள்ளது. எனினும் எமது நாட்டில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியுள்ளார்கள். இந்த அனர்த்தங்கள் எமக்கு உரத்தகுரலில் கூறுவது இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டுமென்ற செய்தியையாகும்.

இங்கே இருப்பவர்கள் மிகவும் பலம்பொருந்திய அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய இளைய தலைமுறையினராவர். இந்த தலைமுறையினர் உலகத்திற்கு பாரிய செய்தியையும் அனுபவத்தையும் பெற்றுக்கொடுக்கக்கூடியவர்களாவர். எமது பழைய அரசியல்வாதிகளுக்கும் அரசியல்வாதிகளின் கொள்கைகளுக்கும் பலமான தாக்குலை நடாத்தியிருக்கிறார்கள். இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அண்மைக்கால வரலாற்றின் மிகப்பெரிய இயற்கையான மக்கள் எழுச்சி இடம்பெற்றது. கடந்த பல தசாப்தங்களில் எந்தவோர் இடத்திலும் மக்கள் தன்னிச்சையாகவே ஒழுங்கமைந்து வீதியில் இறங்கி அதன் ஆட்சியாளர்களை விரட்டியடிக்கவில்லை. மத்தியகிழக்கு நாடுகளில் ஒருசில சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவை உள்நோக்கங்கள் மற்றும் மறைமுகமான இடையீடுகளின்படியே இடம்பெற்றன. எமது நாட்டில் மக்கள் தன்னிச்சையாகவே எழுச்சிபெற்றார்கள். இந்த மக்களை விழித்தெழச் செய்விப்பதில் பாரிய செயற்பொறுப்பினை ஆற்றியவர்கள் நிகழ்கால இளைஞர் தலைமுறையினராவர். நிகழ்கால உலகம் எங்கள் காலத்தில் நிலவிய தலைமுறையல்ல. 1995 இல் இருந்து 2009 வரை 15 வருட காலத்திற்குள் பிறந்த தலைமுறையினரை இசெட் தலைமுறையினர் என நாங்கள் அழைக்கிறோம். அதற்குப் பிற்பட்ட தலைமுறையினரை அல்ஃபா தலைமுறையினர் என அழைக்கிறார்கள். எமது தலைமுறையினர் எக்ஸ் தலைமுறையினர் 1965 – 1979 இற்கு இடையில் பிறந்தவர்களாவர். இங்கு குழுமியுள்ள பெரும்பகுதியினர் இசெட் தலைமுறையைச் சேர்ந்தவர்களாவர். எமது நாட்டில் இருக்கின்ற 25 இலட்சம் குடும்ப அலகுகளில் 30 இலட்சம் குடும்பங்களில் இசெட் தலைமுறையைச் சேர்ந்த வாலிபனோ யுவதியோ அடங்குகிறார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புகள் வித்தியாசமானவை, வீட்டுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய டிஜிட்டல் உலகத்தில் வாழ்பவர்களாவர். அந்த தலைமுறையினர் எமது தலைமுறையினருக்கு இருந்த மட்டுப்படுத்தப்பட்ட தேவைகள் மற்றும் சிறிய உலகத்தைப் பார்க்கிலும் மிகவும் வித்தியாசமானவர்களாக மாறியிருக்கிறார்கள். பேனா நண்பர்கள், வானொலியில் நேயர்களின் வேண்டுகோள்கள், தபால் அட்டைகள் என்பவற்றை அடிப்படையாகக்கொண்ட தலைமுறையினரில் இருந்து மாறுபட்டு டிஜிட்டல் உலகில் சஞ்சரிக்கிறார்கள். எமது தலைமுறையினர் காலையில் எழுந்து தேநீர் பருகுகிறார்கள்: அதற்குப் பதிலாக உங்கள் தலைமுறையினர் முதலில் போஃனைக் கையில் எடுக்கிறார்கள். தகவல்கள் உங்களை வேகமாக வந்தடைகின்றன. எமக்கு வடிகட்டிய தகவல்களே கிடைத்தன. செய்தித்தாள்களில் கிடைக்கின்ற தகவல்களுக்கு “ஆசிரியருக்கு கடிதம்” அனுப்புவதன் மூலமாகவே பிரதிபலிப்புச்செய்ய முடிந்தது. உங்களுக்கு தகவலொன்று கிடைக்கும்போதே உங்களால் பிரதிபலிப்புச்செய்ய முடியும். நாங்கள் எங்கள் இளமைப் பருவத்தை ஒரு சிறிய உலகில் கழித்தபோதிலும் நீங்கள் அகல்விரவான உலகில் கழிக்கிறீர்கள். 2022 இன் இளைஞர் எழுச்சிக்கு இந்த டிஜிட்டல் உலகமே அடிப்படையாக அமைந்தது. ஆனால் அந்த போராட்டத்தில் நிலவிய உண்மையான ஆன்மீக பிணைப்பும் உங்கள்மீது கொண்டிருந்த வளர்ந்துவருகின்ற இளைஞர் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளை கவலைக்கிடமான அந்தத்தை நோக்கி கொண்டுசென்றது. உங்கள் தலைமுறையினர் அரசியல் கட்சிகளுடன் நெருக்கமாக பின்னிப்பிணைந்திராவிட்டாலும் எமது பரம்பரையினரைவிட நோக்கங்களால் அரசியலுடன் கடப்பாடுகள் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சாதகமான அரசியலின் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

சட்டம் நியாயமாக அமுலாக்கப்படுகின்ற, களவுகள் இடம்பெறாத இராச்சியமொன்றை எதிர்பார்த்தல், நியாயமான சமூகமொன்றைப் போன்றே முனைப்பான பொது அரசியல் தேவையில் ஈடுபட்டுள்ளமையாலேயே போராட்டத்திற்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இளைஞர் தலைமுறையினரின் குமுறிக்;கொண்டிருக்கின்ற வேதனைகளிலிருந்து உருப்பெற்ற போராட்டத்தை ஆட்சியாளர்கள் போதைத்தூள்காரர்களின் வேலையென்றே அழைத்தார்கள். இந்த ஆட்சியாளர்கள் பாடமொன்றைக் கற்றுக்கொள்வதாயின் போராட்டத்தின் உட்பொருளிலிருந்தே கற்றுக்கொண்டிருக்க வேண்டும். எனினும் அவர்கள் முட்டாள்த்தனமாக, வன்மம்சார்ந்ததாக போதைத்தூள்காரர்களின் எழுச்சி என அழைத்தார்கள். மேலும் இதனை விபச்சாரத் தொழில் புரிபவர்களின் எழுச்சி என்றே அழைத்தார்கள். ஆகக்குறைந்தது அத்தகைய பாரிய மக்கள் எழுச்சியிருந்தும்கூட இந்த ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தொலைதூரக் கிராமத்தில் வசித்தாலும் கோல்பேஸ் போராட்டத்துடன் ஆன்மீகப் பிணைப்பு நிலவியது. ஆட்சியாளர்கள் குறைந்தபட்சம் அந்த ஆன்மீகத் தொடர்பினைக்கூட விளங்கிக்கொள்ளாமல் தமது பலத்தைப் பிரயோகித்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட முயற்சி செய்தார்கள். பிரசன்ன ரணவீர விமான நிலைய ஊழியரைத் தாக்கியமை, அமைச்சர் தொண்டமான் நிறுவனமொன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து நிருவாகத்தினரை அச்சுறுத்தியமை மூலமாக அவர்களின் பலத்தை தற்காலிகமாக நிறுவி பழைய மிருகத்திற்கு வெளியில்வர இடமளித்துள்ளார்கள்.

மக்களிடமிருந்து கொள்ளையடித்த சொத்துக்களை மீளவும் கையப்படுத்த வேண்டுமென்ற போராட்டக் கோஷமொன்று போராட்டத்தில் நிலவியது. அதைப்போலவே சட்டம் சமமானதாக அமுலாக்கப்படாமை அமைச்சர் டயான கமகே மூலமாக நன்றாகத் தெளிவாகின்றது. அவருக்கு குடியுரிமை கிடையாதென்பது டயனாவுக்கே நான்றாகத் தெரியும். அவ்வாறிருக்கையில் பாராளுமன்றத்திற்கு வந்து இராஜாங்க அமைச்சராக பதவிவகித்தமை சட்டத்திற்கு மேலாக இருக்கிறோம் என்று உணர்வுடனேயே. உங்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாவீர்கள். எனினும் அவருக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு இருந்தது. நான்கு வருடங்களாக பாதுகாத்தார். ஒரு மிஸ் ஃபயர் மூலமாகவே தண்டனை கிடைத்தது. டயனாவிற்கு குடியுரிமை கிடையாதென்பதை இரண்டாவதாக அறிந்தவர் ரணில் ஆவார்.

அன்றைய எழுச்சியில்; நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிரான அபிப்பிராயமொன்று நிலவியது. இப்போது மீண்டும் வேகமாக இலாபமீட்டுகின்ற அரச நிறுவனங்களை உள்ளிட்ட நாட்டின் சொத்துக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். எமது ஐவு தொழிற்றுறையையே ஆபத்தில் இலக்காக்கி இலாபத்தில் இயங்குகின்ற ரெலிகொம் நிறுவனத்தை விற்கப் போகிறார்கள். தற்கால ஆட்சியாளர்கள் இலாபமீட்டுகின்ற காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கால்நடை வளங்கள் சபையின் இருபத்தெட்டாயிரம் ஏக்கர் காணி, இலாபமீட்டுகின்ற கேஸ் கம்பெனியை விற்கப் போகிறார்கள். அதிலிருந்து தெளிவாவது ஊர் வழக்கில் கூறுவதாயின் கல்லில் அடித்தும் உருப்படியாக்க முடியாதென்பதாகும்.

அன்றைய 2022 எழுச்சியிருந்து பாடம் கற்றுக்கொள்வதாயின் அந்த எழுச்சியுடன் இணையாகச் பயணிக்கின்ற அரசியலுக்கு செல்லவேண்டியிருந்தது. எனினும் அந்த அரசியல் தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே இருக்கின்றது. 2022 போராட்டத்திலிருந்து பாரிய அனுபவத்தைப் பெற்றாலும் அது முடிவானதல்ல. எதிர்வரும் தேசிய பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக செயலாற்றுவது அதன் இரண்டாம் கட்டமாகும். எதிர்காலம் இருப்பது இசெட் மற்றும் அல்பா தலைமுறையினரின் கைகளில் தான். ஏதிர்காலத்திற்காக அரசியல் நோக்கங்கள் வரிசைப்படுத்தப்படல் வேண்டும். விசேட அறிவையும் திறமையையும் அன்றைய தலைமுறையினரை விட நீங்கள் சேர்த்துக் கொண்டுள்ளீர்கள். அன்று ஒரு தங்கச் சங்கிலியை வாங்குவதற்கு, மோதிரம் ஒன்றை செய்து கொள்வதற்காக பணத்தை சேகரித்துக்கொண்ட நோக்கத்திற்காக காமண்ட் பெக்டரி ஒரு தீர்வாக அமைந்தது. இன்று கல்வி மட்டத்தில் உயர்வடைந்து தொழில்சார் மட்டத்தை அடைந்த வித்தியாசமான இளைஞர்களே இருக்கிறார்கள். உலகத்திலுள்ள புதிய மாற்றங்களை உறிஞ்சி எடுத்துக்கொண்ட வித்தியாசமான வாழ்க்கை நோக்கங்கள் உங்களுக்கு இருக்கின்றன. அன்று இருந்த தொழில் இன்று உங்களுக்கு ஒத்துவராத காரணத்தினால் காமண்ட் பெக்டரிகளில் வெற்றிடங்கள் நிலவுகின்றன. எனினும் இளைஞர்களுக்கு தொழிலும் கிடையாது. அதற்கான காரணம் இளைஞர்கள் வசிக்கின்ற நிகழ்கால உலகத்திற்கு அந்த வெற்றிடங்கள் பொறுத்தமானவை அல்ல. காமண்ட் பெக்டரிகளில் கேட்கின்ற ஆரம்ப நிலை உழைப்புக்குப் பதிலாக அறிவும் அனுபவமும் கொண்ட வித்தியாசமான உழைப்புத் தேர்ச்சியே அவர்களிடம் நிலவுகின்றது.

இளைஞர் தலைமுறையினர் நிராகரித்த பொருளாதாரமே இந்த நாட்டில் நிலவுகின்றது. இளைஞர் தலைமுறையினர் மாறிய வேகத்திற்கு இணையாக பொருளாதாரம் மாற்றம் அடையவில்லை. அதனால் இந்தப் பொருளாதாரத்துடன் இணைந்து கொள்ளாத பெருந்தொகையான இளைஞர்கள் வெளியில் இருக்கிறார்கள். அந்த இளைஞர்களின் சிந்தனைகள், எதிர்பார்ப்புகள், வாழ்க்கை பாங்குகளுக்கு நேரொத்ததாக சீராக்கப்பட்ட பொருளாதாரத் திட்டமொன்றை உருவாக்குவதே எமது நோக்கமாகும். 2030 அளவில் 45 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் உலகத்திற்கு தேவைப்படுவார்கள். அதனோடு தொடர்புடைய திட்டங்களுக்கு இளைஞர்களை கொண்டு செல்வதற்கான வழிவகைகளை ஆட்சியாளர்கள் வகுத்துள்ளார்களா? அவ்வாறு இடம் பெறாமையால் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மையில் பாதிக்கப்பட்டுள்ள, நாட்டை கைவிட்டுச் செல்லும் நோக்கத்தைக் கொண்ட இளைஞர் தலைமுறையினரே தற்போது இருக்கிறார்கள். எனினும் உங்களின் விருப்பு வெறுப்புகள், எதிர்பார்ப்புகள், பாணிகளுக்கு நேரொத்ததாக அமைகின்ற சினிமா, இசை, விளையாட்டுக்கள் சம்பந்தமான திட்டங்கள் தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே இருக்கின்றன. நவீன உலகத்துடன் கைகோர்த்துச் செல்கின்ற இளைஞர் தலைமுறையினரின் நோக்கங்களை ஈடேற்றுவது தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். நாங்கள் தற்போது உலகில் மிகவும் ஆரம்ப நிலை உழைப்புச் சந்தையையே இன்றளவில் கைப்பற்றிக் கொண்டுள்ளோம். இந்த தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்கான உண்மையான தேவை எமக்கிருக்கின்றது.

அதேபோலவே மரபு ரீதியான பிரபுக்கள் அரசியலை முன்னெடுத்து வருகின்ற குடும்ப அரசியலை இளைஞர் தலைமுறையினரின் கைகளுக்கு மாற்ற வேண்டியுள்ளது. ஐ.ம.ச. அல்லது வேறு எவரேனும் அத்தகைய பலத்தை இளைஞர் தலைமுறையினருக்கு வழங்கமாட்டார்கள். சஜித் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் அனைவரும் முந்திய தலைமுறையினர்களின் மைந்தர்களாவர். மறு பக்கத்திலிருப்பவர்கள் மைந்தர்களின் சேர்க்கையாவர். எமது இளைஞர்களை அவர்கள் போஸ்டர் ஒட்டுவதற்காகவும் கென்வசிங் போவதற்காகவும் மாத்திரமே ஈடுபடுத்துவார்கள். தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த நாங்கள் எவருமே பாரம்பரிய அரசியல் குடும்பங்களிலிருந்து வருபவர்களல்ல. இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக புதிய அரசியல் எதிர்பார்ப்புக்களை தெரிவுசெய்து கொண்டவர்கள் மாத்திரமே தேசிய மக்கள் சக்தியில் இருக்கிறார்கள். அவர்களின் கையில் இருக்கின்ற பெட்டனை எடுத்து உங்கள் கைகளில் கொடுக்கின்ற செயற்பாட்டினை நாங்கள் செய்து வருகிறோம். மிகவும் குறுகிய காலத்தில் நாங்கள் அந்த பெட்டனை உங்களின் கையில் கொடுத்து நீங்கள் நாட்டை கட்டியெழுப்புகின்ற விதத்தை பார்த்து மகிழ்ச்சியடைய எதிர்பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் எளிதில் அதிகாரத்தை கைவிட மாட்டார்கள். அவர்கள் கொண்டுள்ள குடும்ப அதிகாரத்தையும் அரசாங்க அதிகாரத்தையும் பயன்படுத்தி அரசியல் பலத்தை உடும்புப் பிடியாக வைத்துக்கொள்ள அவர்கள் எத்தனிக்கிறார்கள். மகனுக்கு பெட்டனை கையளிப்பதற்கான எல்லா வேலைகளையும் தகப்பன் செய்வார். அப்படியானால் நாங்கள் மல்லுக்கட்டி இந்த பெட்டனை கைமாற்றிக்கொள்ள எதிர்வரும் தேசிய தேர்தலை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதிகாரத்தை கைமாற்றிக் கொள்ள உகந்த தருணம் வரும்வரை தெம்புடன் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டால் எனது வாழ்க்கையில் 35 வருடங்கள் அதனை பிடித்துக்கொண்டிருந்தேன். அவதூறுகள், அவமதித்தல், குற்றச்சாட்டுகள், மக்களால் நிராகரிக்கப்படுதல், 3 வீதம் வரை வீழ்த்தியமை எல்லாவற்றுக்கும் மத்தியில் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் பணியை கடந்த காலம் பூராவிலும் செய்து வந்திருக்கிறோம். தற்போது காலம் கனிந்துள்ளது. முதலில் நடாத்தப்படுவது ஜனாதிபதி தேர்தலையா, பொதுத் தேர்தலையா என்பதை தெரிவு செய்ய முடியாத அளவுக்கு ஆட்சியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மொட்டுக் கட்சிக்கு வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்து கொள்ள முடியாமல் இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா? என்பதை தீர்மானிக்கமுடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. மரபு ரீதியாக அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கம் ஒன்றுக்கு பின்னர் எதிர்க் கட்சித் தலைவரின் தலையில் கிரீடம் விழுந்த காலம் இப்போது மலையேறிவிட்டது. அதனால் அவர்கள் பாரிய மன அழுத்தத்திற்கு இலக்காகியுள்ளார்கள். பாடசாலை பிள்ளைகளின் முன்னிலையில் பேசுகின்ற விடங்களைப் பார்த்தால் அவர்களின் மன அழுத்தம் தெளிவாகின்றது. எதிhக்;கட்சித் தலைவர் ஒரு கோமாளியாக மாறிவிட்டார்.

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களாகிய உங்களின் பலம் இந்த கற்பாறையை விட உறுதியானதென நாங்கள் நம்புகிறோம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வெற்றியை சுவைத்து சிரித்த முகத்துடன் இந்த மாற்றத்திற்கு பங்களிப்புச் செய்வோம். அனைவருக்கும் வெற்றி கிட்டட்டுமென பிரார்த்திக்கிறோம்.

Show More

“ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றத்திற்காக சவால்களுக்கு மத்தியில் மண்டியிடாத தலைமைத்துவமொன்று எமக்குத் தேவை…” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க-

(-NPP பொறியியலாளர்களின் தேசிய மாநாடு – ஸ்ரீ ஜயவர்தனபுர Monarch Imperial இல் – 2024.06.01.-) இதோ எங்கள் முன்னிலையில் இருப்பது இலங்கையால் நிர்மாணிக்கப்பட்ட மிகவும் தலைசிறந்த மனித வளமாகும். உங்களின் அறிவு, ஆற்றல். அனுபவம் இந்த நாட்டை மாற்றியமைக்க போதுமான அளவிலான ஆற்றல்களை நீங்கள் கொண்டுள்ளீர்கள். எமது நாட்டுக்கே இருப்பது பொறியியல் வரலாறாகும். கி.மு. 5 வது நூற்றாண்டில் பண்டுகாபய மன்னன் வசபக் குளத்தை அமைத்தான். அதிலிருந்து ஆரம்பித்த எமது நீர்ப்பாசனத் தொழிற்றுறை மாபெரும் கடல்போன்ற […]

(-NPP பொறியியலாளர்களின் தேசிய மாநாடு – ஸ்ரீ ஜயவர்தனபுர Monarch Imperial இல் – 2024.06.01.-)

இதோ எங்கள் முன்னிலையில் இருப்பது இலங்கையால் நிர்மாணிக்கப்பட்ட மிகவும் தலைசிறந்த மனித வளமாகும். உங்களின் அறிவு, ஆற்றல். அனுபவம் இந்த நாட்டை மாற்றியமைக்க போதுமான அளவிலான ஆற்றல்களை நீங்கள் கொண்டுள்ளீர்கள்.

எமது நாட்டுக்கே இருப்பது பொறியியல் வரலாறாகும். கி.மு. 5 வது நூற்றாண்டில் பண்டுகாபய மன்னன் வசபக் குளத்தை அமைத்தான். அதிலிருந்து ஆரம்பித்த எமது நீர்ப்பாசனத் தொழிற்றுறை மாபெரும் கடல்போன்ற முப்பதாயிரம் குளங்களை அமைக்குமளவுக்கு பொறியியல் தொழில்நுட்பத்திற்கு உயிர்கொடுத்துள்ளார்கள். உலகத்தில் எவரையும் வியப்படையச் செய்கின்ற இராட்சதக் கால்வாய் (யோத எல) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் நிர்மாணிக்கப்படுகின்றது. கலா வெவவில் இருந்து திசா வெவ வரை 120 சிறிய குளங்களுக்கு நீரை நிரப்பி பதினோராயிரம் ஏக்கர் வயல்களுக்கு நீர்பாய்ச்சி 54 மைல்கள் நீளம்வரை நீர்ப்பிரவாகத்தை ஏந்தி இராட்சதக் கால்வாய் பாய்ந்து செல்கின்றது. முதல் 17 மைல்களில் சாய்வு ஒரு மைலுக்கு ஒரு அங்குலம் ஆகும். இற்றைக்கு 1500 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட இன்றைய உலகத்தை வியப்படையச் செய்விக்கின்ற சீகிரியாவில் மிகவும் முன்னேற்றமான நகரத் திட்டம் இருக்கின்றது. அங்கே மிகவும் முன்னேற்றமான வாஸ்துக்கலை நிலவுகின்றது. மிகவும் முன்னேற்றகரமான சூழற்றொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மிகவும் விருத்தியடைந்த பொறியியல் தொழில்நுட்பம் நிலவுகின்றது. எமக்கு மிகவும் நீண்ட பொறியியல் வரலாறு உண்டு. அந்த வரலாறு 17 ஆம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதி 18 அம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதில் நீராவித் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதும் உலகின் கைத்தொழில் துறையில் பாரிய பாயச்சலொன்று இடம்பெறுகின்றது. அதனூடாக புகையிரத சேவைகள், கப்பற் கைத்தொழில், சுரங்கக் கைத்தொழிலிலான முன்னேற்றங்கள், கைத்தொழில் துறைக்குள்ளே நீராவி இயந்திரம் சேர்க்கப்பட்டமை உலகில் பாரிய வெற்றிக்கான பாய்ச்சலாக அமைகின்றது. அதனை நாங்கள் முதலாவது கைத்தொழில் புரட்சி என அழைக்கிறோம்.

NPP-Engineers-Summit

நாங்கள் கழித்துக் கொண்டிருப்பது நான்காவது கைத்தொழில் புரட்சியின் இறுதிப்பகுதியில் ஐந்தாவது கைத்தொழில் புரட்சியின் தொடக்கத்திலாகும். இந்த உலகில் தோன்றிய புதிய தொழில்நுட்ப மாற்றங்களை உறிஞ்சிக்கொள்வதில் நாங்கள் வெற்றிபெற்றோமா எனும் கேள்வி எம்முன் நிலவுகின்றது. இந்த கைத்தொழில் புரட்சிகளிலிருந்து தோன்றிய பொறியியல் அறிவு, தொழில்நுட்ப அறிவு, பொருளியல் மாற்றங்களை உறிஞ்சிக்கொண்ட நாடுகளால் அது அபிவிருத்தியை நெருங்குவதற்கான பாரிய பாய்ச்சலாக அமைந்தது. அதன் பெறுபேறாக 433 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை நிர்மாணிக்க வியட்நாமிற்கு இயலுமை கிடைக்கின்றது. தென் கொரியாவினால் 1.7 ரில்லியன் பொருளாதாரத்தை நிர்மாணிக்க இயலுமாயிற்று. பங்களாதேஷின் 459 பில்லியன் டொலர் பொருளாதாரமானது உலகில் தோன்றிய புதிய மாற்றங்களுடன் சார்புரீதியாக தமது கொள்கைகளை அமைத்துக்கொண்டமையால் ஆசியப் பிராந்தியம் 21 ஆம் நூற்றாண்டின் அபிவிருத்திப் பிராந்தியமாகி இருக்கின்றது. எனினும் இலங்கை 70 பில்லியன் டொலரையே நிர்மாணித்துள்ளது. உலகில் தோன்றிய புதிய மாற்றங்களை புதிய நிலைமாறல்களை சமூக மாற்றத்துடன் பொருளாதாரத்தின் முன்னேற்றத்துடன் சேர்த்துக்கொள்ளத் தவறிய நாடுதான் எமது நாடு. அதன் காரணமாகவே கொரியா 685 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகையில் வியட்நாம் 380 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகையில் பங்களாதேஷ் 70 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகையில் இலங்கை 12 பில்லியன் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகின்றது.

எமது ஆட்சியாளர்கள் வரலாற்றுமோகத்தில் தேசத்தை சிறைவைத்து இலங்கையை உலகத்திலிருந்து விலக்கிவைத்திருந்த ஆட்சியாளர்கள், உலகம் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கையில் நாங்கள் அவற்றின் பின்னால் ஆமைவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த நிலைமையானது வெறுமனே தரவுகளுக்குள்ளே, இறக்குமதி – ஏற்றுமதிக்குள்ளே, தொழில்நுட்ப வறுமைநிலைக்குள்ளே மாத்திரம் நிலவ மாட்டாது. அது சமூகத்தில் அனர்த்தமொன்றை பேரழிவொன்றை உருவாக்கும்.

NPP-Engineers-Summit

அதனால் 54% இற்கு கிட்டிய மக்கள் பலவிதமாக ஏழ்மைநிலையினால் பீடிக்கப்பட்டுள்ள நாடாக மாறியுள்ளது. சனத்தொகைகளில் 68% இற்கு சரியான உணவுவேளையொன்றை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

34 இலட்சம் குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10 கிலோ அரிசியை வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்தும் இந்த பயணத்தை இவ்விதமாகத் தொடர இடமளிக்கப் போகிறோமா? நாங்கள் இதனை மாற்றியமைப்போம்.

ஒவ்வொரு பிரசைக்கும் தமது மனச்சாட்சியுடன் பிரசைகளின் அவலக்குரல் கேட்குமாயின், கண்களுக்குப் புலப்படுமாயின், பிரசைகளின் வேதனைகள், அவர்களின் வாழ்க்கையின் துன்பங்களை இதயத்தால் உணரத்தக்கதாக இருக்குமாயின் இந்த நிலைமையை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காக முன்னணிக்கு வரவேண்டியது ஒவ்வொரு பிரசையினதும் செயற்பொறுப்பாகும். அதனை மாற்றியமைப்பதற்காக தெம்புடைய, நம்பிக்கை கொண்ட, எதிர்பார்ப்புடைய மாபெரும் மனிதக்குழுமத்தின் சேர்க்கைதான் தேசிய மக்கள் சக்தியாகும். அதனைச் சுற்றி ஒன்றுசேருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் அதனை மாற்றியமைத்திட வேண்டும். இதனை மாற்றியமைக்க வேண்டுமாயின் பொருளாதாரத் தேகத்திலும் சமூகத் தேகத்திலும் பாரிய அதிர்வினை ஏற்படுத்த வேண்டியுள்ளது. நாங்கள் எவ்வாறு இந்த அதிர்வினை ஏற்படுத்துவது? புதியவற்றைக் கண்டுபிடிக்கின்ற புதியவற்றை உருவாக்குகின்ற சமூகமொன்றை நாங்கள் நிர்மாணிக்கவேண்டும். வழமைபோல் விவசாயத்தை, கைத்தொழிலை, அன்றாட வாழ்க்கையை பேணிவந்து இந்த சமூகத்தை மாற்றிவிட முடியாது. இந்த சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டுமாயின் புதியவற்றை நிர்மாணிக்கவேண்டும். புத்தாக்கங்களை உருவாக்கிட வேண்டும். புதிய ஆராய்ச்சியாளர்கள், புதிய எண்ணக்கருக்கள், புதிய கருத்துக்கள், புதிய சந்தைகள் அவசியமாகும்.

NPP-Engineers-Summit

எமது நாட்டில் முக்கியமான நிறுவனங்களாக அமைவன மிகவும் அதிகமாக பணப்புழக்கம் இடம்பெறுகின்ற நிறுவனங்களாகும். மிக அதிகமாக நிர்மாணிப்புகள் இடம்பெறுகின்ற இடத்தைத்தான் அமைச்சர் அதிகமாக விரும்புவார். நெடுஞ்சாலைகள் அமைச்சு கிடைக்குமாயின் சனாதிபதியின் மிகச்சிறந்த கவனிப்பு அவருக்கு கிடைக்கும். துறைமுகங்கள் அமைச்சு கிடைப்பவருக்கு சனாதிபதியின் மிகச்சிறந்த கவனிப்பு அவருக்கு கிடைக்கும். வலுச்சக்தி அமைச்சு கிடைக்குமாயின் சனாதிபதியின் மிகச்சிறந்த கவனிப்பு அவருக்கு கிடைக்கும். விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அமைச்சு கிடைப்பவருக்கு சனாதிபதியின் கவனிப்பு கிடைக்கவே மாட்டாது. அதனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்த IT அத்தியாவசியமாகும். எதிர்வரும் 29 ஆந் திகதி உலகத்தினதும் இலங்கையினதும் ஆராய்ச்சியாளர்களுடன் பாரிய கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்பட்ட பெருந்தொகையானோர் இன்று உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் விஞ்ஞானிகள் மண் பற்றி, புதிய தொழில்நுட்பம் பற்றி பாரிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். புற்றுநோய்க்கு நிரந்தர மருந்தினைக் கண்டுபிடிக்க இலங்கை விஞ்ஞானியொருவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். உலகம் பூராவிலும் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளோம். பலர் 29 ஆந் திகதி இலங்கைக்கு வருகிறார்கள். இன்றேல் தொழில்நுட்பத்துடன் இணைந்து புதியதொரு கட்டத்திற்கு எமது நாட்டை மாற்றியமைக்க முயற்சி செய்து வருகிறோம்.

அடுத்ததாக சிறந்த நோக்கினைக்கொண்ட தலைவரொருவர் எமக்குத் தேவை. நோக்குடைய தலைவர் தேவைப்படுவது அரசியலுக்காக மாத்திரமல்ல. ஐ.ரீ. துறையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய, பலம்பொருந்தியவகையில் முட்டிமோதக்கூடிய, சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, எதிர்காலத்தைக் காணக்கூடிய சிறந்த நோக்கினைக்கொண்ட தலைவர்களை உருவாக்க வேண்டும். அந்த அத்தனை துறைகளும் நிர்மாணிக்கப்படவேண்டும். அரசியலுக்கு மாத்திரமே சிறந்த நோக்கினைக்கொண்ட தலைவர் தேவையென நாங்கள் பெரும்பாலும் நினைக்கிறோம். அவ்வாறு நினைக்கக் காரணம் எமது நாட்டில் நோக்கு இல்லாத தலைவர்கள் அரசியல்வாதிகளாக அமைவதாலாகும். எதிர்காலத்தைக் காண்கின்ற, அதற்கான திட்டங்களை வகுக்கின்ற அதற்கு தலைமைத்துவம் வழங்குகின்ற தலைவர்களை உருவாக்கவேண்டும். அதற்காக பாரிய அழுத்தங்களைக்கொண்ட ஆட்களாக அமையவேண்டும். அவர்கள் கண்டுபிடிக்கின்றவை, அவர்கள் உருவாக்குகின்ற கருத்திட்டங்கள், ஈடுபடுத்துகின்ற தொழில்முனைவோர் என்றவகையில் அந்த அனைத்திற்குமே அழுத்தம் கொடுக்கக்கூடிய ஆட்கள் உலகத்திற்காக புதியவற்றை நிர்மாணிக்கையில் அந்த அழுத்தத்தைக்கொண்ட ஆட்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். நிர்மாணத் தொழிற்றுறையில், வலுச்சக்தி துறையில், புதிய திசைகளைத் தெரிவுசெய்கின்ற வழிகாட்டுகின்ற தலைவர்கள் அவசியமாகும். எங்களுக்கு மாரி கியூரி, ஐன்ஸ்டைன், ஸ்டீவ் ஜோன்ஸ் போன்றவர்கள் அவசியமில்லையா? அந்த அனைத்து துறைகளிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் அழுத்தத்தைக்கொண்ட தலைவர்களாவர். அதைப்போலவே எமக்கு வரக்கூடிய சவால்களை மீறிச்செல்லக்கூடிய தலைமைத்துவம் எமக்கு அவசியமாகும். சவால்களுக்கு மத்தியில் மண்டியிடுகின்ற, சவால்களைக்கண்டு அஞ்சியோடுகின்ற, வாரிச்சுருட்டிக் கொள்கின்ற தலைமைகளால் எமக்குப் பயனில்லை.

NPP-Engineers-Summit

நான் இங்க மீண்டும் கூறுவது அரசியல்வாதிகளைப் பற்றி மாத்திரமல்ல. சவால்களுக்கு மத்தியில் தப்பியோடியிருந்தால் அணுக்குண்டு தயாரிக்கப்பட்டிருக்க மாட்டாது. மனித குலம் இந்த அபிவிருத்தியை அடைய சவால்களை வென்றெடுக்ககூடிய தலைமைத்துவம் அவசியமாகின்றது. அவர்கள் தான் Crown Makers. இதனை முற்றாகவே மாற்றியமைக்கவல்ல தலைமைத்துவ சமுதாயமொன்று எமக்கு அவசியமாகும். இதுதான் இந்த மாநாட்டின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது. அதனால் நாமனைவரும் கிரவுன் மேக்கர்களாவோம். அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறோம்.

நாங்கள் பலவற்றை இழந்திருக்கிறோம். உலகில் தோன்றுகின்ற புதிய மாற்றங்களுக்கு இணையாக, சமாந்தரமாக எமது நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். நாங்கள் உலகத்துடன் பல காத தூரத்தில் பின்னால் இருக்கிறோம். இதனை மாற்றியமைத்திட, ஒட்டுமொத்த முறைமையையும் மறுபுறம் மாற்றவேண்டுமாயின், வேகமாக திடசங்கற்பத்துடன், அரசியல் தலைமைத்துவத்துடன் ஒருங்கிணைந்த மக்கள் இயக்கமொன்று அவசியமாகும். அது ஏன்? இன்றைய உலகில் நிர்மாணத் தொழிற்றுறையின் 11 மில்லியன் டொலர்களாகும். 2030 அளவில் நிர்மாணத் துறையின் பொருளாதாரம் 17 ரில்லியன் டொலர்களாக ( 17,000 பில்லியன் டொலர்) அமையும். எமது நாட்டின் நிர்மாணத் தொழிற்றுறை 12 மில்லியன் டொலராகும். 22 மில்லியன் மக்களுக்கு மாத்திரம் அவசியமான நிர்மாணிப்புகளை மேற்கொண்டு எமது நிர்மாணத் தொழிற்றுறையை முன்னெடுத்துச் செல்லமுடியுமா? இந்த நிர்மாணத் தொழிற்றுறை இந்த இடத்திலிருந்து முன்நோக்கி நகரவேண்டும். சாத்தியவளம், ஆற்றல்கள், திறன்கள் நிறைந்த பலம்பொருந்திய கம்பெனிகள் இலங்கையில் இருக்கின்றன. நாங்கள் அவர்களை பாராட்டவும் பெறுமதியளிக்கவும் வேண்டும். அவர்களுடன் உலகின் நிர்மாணத் தொழிற்றுறை சந்தையில் பிரவேசிப்பதற்காக அவசியமான வழிகாட்டல்கள், பங்களிப்பு, அரச அனுசரணை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் வழங்கப்படுமென்பதற்கு உத்தரவாதமளிக்கிறோம். 17,000 பில்லியன் டொலர்களில் ஒரு பகுதியையாவது நிர்மாணத் தொழிற்றுறையிலிருந்து ஈட்டிக்கொள்ள வேண்டும்.

NPP-Engineers-Summit

உலகில் மென்பொருள் துறையில் வேகமான வளர்ச்சி இடம்பெற்று வருகின்றது. அது நாங்கள் கைவிட்டுள்ள ஒரு துறையாகும். வெள்ளைக்காரன் நாட்டைவிட்டுச் செல்லும்போது எமது தலைவர்களுக்கு கொடுத்துச் சென்றது தேயிலை, இரப்பர், தெங்கு மாத்திரமாகும். அதற்கு அப்பால்சென்று உலகத்தைக் காண்பதற்கான நோக்கு இருக்கவில்லை. IT துறை உலகில் வேகமாக வளரச்சியடைந்து வருவது அறுபதாம் தசாப்தத்தின் பின்னரைப் பகுதியில் ஆராய்ச்சிகள் மூலமாக வெளியில் வருகின்றது. எனினும் நாங்கள் அதற்குத் தயாராகவில்லை. எமது அண்டை நாடான இந்தியா IT துறையுடன் சமாந்திரமாக தமது பொருளாதார, கல்விக் கொள்கைகளை வகுத்துக் கொள்வதில் வெற்றியடைகின்றது. அதன் விளைவாக இந்தியா தற்போது 150 பில்லியன் பொருளாதாரத்தைப் பெற்று வருகின்றது. உலகில் எண்ணெய் எற்றுமதி செய்கின்ற பிரதான நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் பொருளாதாரம் 113 பில்லியன் டொலர்களாகும். உலகின் பிரதானமான மென்பொருள் நிறுவனங்களில் உயர்ந்த இடத்தை இந்தியா வகிக்கின்றது. கூகல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சுந்தர் ஓர் இந்தியராவார். அதைப்போலவே அடோபி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சங்கான நாராயணன் ஓர் இந்தியராவார். ஐ.பீ.எம். நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சத்யா நாதில்லா ஓர் இந்தியராவார். உலகம் எந்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது? எந்த வகையைச்சேர்ந்த பொருளாதாரத்தை நிர்மாணிப்பது எனும் நோக்கு இந்தியத் தலைவர்களிடம் இருந்தது.

தற்போது வெளிநாடு செல்பவர்களிடமிருந்து எமக்கு ஆறு பில்லியன் டொலர் வரை கிடைக்கின்றது. வெளிநாடு சென்றவர்களிடமிருந்து பெரும்பங்கு மத்திய கிழக்கில் இருந்தே கிடைக்கின்றது. உலகின் IT சந்தையில் பெரும்பகுதியை கைப்பற்றிக்கொள்ள தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் திட்டங்களை வகுத்துள்ளோம். 2023 அளவில் 19 பில்லியன் பெறுமதியான மென்பொருள் பொறியியலாளர் அவசியமாகி இருந்தார்கள். எம்மால் கார் மார்க்கெற்றுடன் அல்லது போன் மார்க்கெற்றுடன் போட்டியிட முடியாமல் போகும். எமக்கு IT மார்க்கெற்றில் இந்தியாவுடன் இணைப் போட்டியாளர்களாக மாறக்கூடிய இயலுமை நிலவுகின்றது. இணைச் சந்தையில் ஒரு பங்குடன் மாத்திரமல்ல, உலகத்தாருக்கு அவசியமான மென்பொருள் நிர்மாணிப்பில் ஒரு பங்கினை கைப்பற்றிக் கொள்வதற்கான கம்பெனியொன்றை நாங்கள் ஆரம்பிக்க வேண்டும். முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டிய நிலை எமக்கு ஏற்படும். தொடக்கத்தில் எம்மால் தனித்து பிரவேசிப்பதற்கான சாத்தியப்பாடு இல்லாதிருக்கக்கூடும். நாங்கள் ஏனைய மென்பொருள் கம்பெனிகளுடன் ஒன்றுசேர்ந்து வேர்ல்ட் மார்க்கெற்றிற்கு செல்வதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.

NPP-Engineers-Summit

ஹைட்றோ பவர், சோலா பவர், வின்ட் பவர் சாத்தியப்பாடுகள் நிலவுகின்றன. இன்றளவில் எமது அனைத்து மின்நிலையத் தொகுதிகளையும் சேர்த்தால் நான்கு கிகாவொற் மாத்திரமாகும். 2040 இல் நாற்பது கிகாவொற் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் வின்ட் பவரில் மாத்திரம் எமக்கு 40 கிகாவொற்றுக்கு மேலான கொள்திறன் நிலவுகின்றது. மிகச்சிறந்த சாத்தியப்பாடு ஆகும். உலகத்தின் எதிர்கால மார்க்கெற் பீன் றைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி சாத்தியவளங்களிலேயே நிலவுகின்றது. அதற்கான மிகச்சிறந்த சாத்தியவளங்கள் எமது கைத்தொழில்கள், எமது பாவனையாளர்களுக்கு நியாயமான விலையில் மின்சாரத்தை வழங்குவதற்காக மாத்திரமல்ல. அதற்கு அப்பால் சந்தையில் பிரவேசிப்பது எவ்வாறு என சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த இடத்தில் எமக்கு சாத்தியப்பாடு நிலவுகின்றது. அதைப்போலவே மெராயன் தொழிற்றுறையிலும் எமக்கு பாரிய சாத்தியவளம் நிலவுகின்றது. இந்த 21 ஆம் நூற்றாண்டு ஆசியாவிற்கு உரித்தானதெனில் ஆசியாவின் பிரதான கேந்திரநிலையம் இலங்கையாகும். நாங்கள் ஆசியாவின் நாடுகளை வெற்றிகொள்வதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். வெற்றியின் பெறுபேறுகளை எவ்வாறு இலங்கைக்கு கொண்டுவருவது. “தனியாக தென்னை மரம் வளர்வதுபோல் நாடுகள் கரைசேர மாட்டாது” ஏனைய நாடுகளுடன் நிலவுகின்ற ஒருமைப்பாடு, அதைப்போலவே ஏற்படுகின்ற வளர்ச்சிகள், அதைப்போலவே ஏற்படுகின்ற அபிவிருத்திகள் என்பவற்றுடன் நேரொத்தவகையில் நாங்கள் எவ்வாறு சீராக்கிக்கொள்வது? ஆசியா பாரிய அபிவிருத்தி பற்றி 21 ஆம் நூற்றாண்டில் நம்பிக்கை வைத்திருக்குமாயின், ஆசியாவின் ஏனைய நாடுகள் அடைகின்ற வெற்றிகளின் நன்மைகளை எவ்வாறு இலங்கைக்கு கொண்டுவருவது. அவ்வாறு கொண்டு வருகையில் மெராயன் தொழிற்றுறை எமது நாட்டின் இடஅமைவின்படி முக்கிய இடம் வகிக்கின்றது. நாங்கள் அது பற்றிக் கவனஞ் செலுத்தி இருக்கிறோம்.

அதைப்போலவே எமக்கு கனிய வளங்கள் தாராளமாக பாரிய அளவில் நிலவுகின்றன. அது சம்பந்தமாக நீண்டகாலமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பல ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். எமது அரசியல் அதிகாரிகளுக்கு அவசியமாவது மிகவும் பலம்பொருந்திய நிலையான நோக்கினைக்கொண்ட பயணப்பாதையல்ல. அவர்களுக்கு சதாகாலமும் தேவைப்பட்டது பயிங் அன்ட் செலிங் மாத்திரமே. இப்போதே எடுத்து இப்போதே விற்பது. அவர்களுக்கு இல்மனைற் படிவத்தை மணலுடன் ஏற்றியனுப்புவது இலாபமாகும். பொஸ்பேற் படிவத்தை மண்ணாகவே விற்பனை செய்வது இலாபமாகும். 1998 இல் மிகவும் முக்கியமான வழக்குத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. இந்த வழக்குத் தீர்ப்பினை ஒருபுறம் வைத்துவிட்டு பொஸ்பேற் படிவினை மண்ணாகவே தற்போது விற்கிறார்கள். எம்மிடமுள்ள வளங்கள் மிகவும் நன்றாக முற்றாய்வு செய்யப்பட்டுள்ளன. புதிதாக முற்றாய்வு செய்யப்படவேண்டிய அவசியமில்லை. புதிய தொழில்நுட்பத்துடன் விருத்திசெய்யக்கூடிய ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் இலங்கையில் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒன்றுசேர்ந்து புதிய பொருளாதார திசைக்கு அவசியமான உற்பத்திகளில் நாங்கள் கைவைக்கவேண்டும். எங்களிடமிருந்து கைநழுவிச் சென்றவற்றை நாங்கள் வேகமாக பின்தொடர்ந்துசென்று கைப்பற்றிக்கொள்ள வேண்டும். 20 ஆம் நூற்றாண்டிலும் இந்த பாதை பற்றிய கலந்துரையாடலொன்று நிலவியது. திரு விமலசுரேந்திர 1918 இல் லக்ஷபான மின்நிலையத்தை முன்மொழிகிறார். அந்த கைத்தொழில் புரட்சிக்கு ஊக்கியாக அமைந்தது மின்னியலாகும். 1918 இல் சோவியத் தேசத்தின் அதிகாரத்தை லெனின் கைப்பற்றிக்கொண்ட பின்னர், ஒரு பெண் உடகவியலாளர் லெனினிடம் கேட்கிறார், ” நீங்கள் ரஷ்யாவில் சோசலிஸத்தை எப்போது முடிவுறுத்தப் போகிறிர்கள்? என்று. அவர் கூறுகிறார் ” ரஷ்யாவை எப்போது இலத்திரனியல்மயமாக்கி முடிக்கிறோமோ, அன்றுதான்”. என்று. அன்று கைத்தொழில் புரட்சிக்கு அவசியமான தொழில்நுட்பத்தின் பிரதானமான சாதனத்தையும் ஊக்கியையும் வழங்கியது மின்னியலாகும்.

NPP-Engineers-Summit

அன்று ரஷ்யாவில் அந்த லெனின் பிரகடனம் வரும்போது இலங்கையில் திரு. விமலசுரேந்திர லக்ஷபான மின்நிலையத்தை முன்மொழிகிறார். மேலதிக மின்சாரத்தைக்கொண்டு புகையிரதம் ஓட்டப்படவேண்டுமென அவர் கூறினார். அரசியல் ஒரு பண்டைய கால அதிகார நிலையாகும். இருந்ததோ நவீனத்துடன் பின்னிப்பிணைந்த அரசியல் அதிகாரசபையல்ல. அதனால் அந்த முன்மொழிவுகள் பயனற்றுப் போயின. ஔடதத்துறையில் பாரிய ஆராய்ச்சிகள், உற்பத்திகள் பற்றி பேராசிரியர் சேனக்க பிபிலே முன்மொழிந்தார். அவை ஏற்புடையதாகவில்லை. உலகில் வாஸ்துக்கலையில் ஏற்படுகின்ற வளர்ச்சிகளை இலங்கையில் உள்ள கலாசாரத்துடன் ஒருங்கிணைத்து அந்த துறையிலான வளர்ச்சிகளை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது என்பது பற்றி மிதின் த சில்வா போன்றவர்கள் உரையாடுகிறார்கள். அவற்றை உள்வாங்கக்கூடிய அரசியல் தலைமைத்துவம் எமக்கு இருக்கவில்லை. இருந்ததோ பழமைவாத தலைமைகளாகும். தற்போது எம்மெதிரில் இருப்பது உருவாகி வருகின்ற இந்த மாற்றங்களை நன்றாக உள்வாங்கி எமது நாட்டை வேகமான மாற்றத்திற்கு இலக்காக்குவதாகும். இங்கு குழுமியுள்ள ஆயிரக்கணக்கான பொறியிலாளர்களாகிய நீங்கள் இந்த பணியில் முன்னணிவகித்து செயற்பொறுப்பினை ஈடேற்றவேண்டுமென நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டைக் கைவிட்டுச்சென்ற புத்திஜீவிகள், தொழில்வாண்மையாளர்கள் பெருந்தொகையானோர் இருக்கிறார்கள். அவர்களின் அறிவும் அனுபவமும் இந்த தாய்நாட்டுக்கு அவசியமாகி உள்ளது. இந்த மாபெரும் மனிதக் கூட்டத்தினாலேயே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இலக்கியம், கலை ஆகிய துறைகளிலும் எமக்கு மாற்றம் அவசியமாகும். வெறுமனே அரசாங்க மாற்றம், ஆட்களின் மாற்றமல்ல. மறுமலரச்சி யுகமொன்று எமக்கு அவசியமாகும். முழுமையான முறைமையுமே சீரழிந்த ஒரு நாட்டை எளிதில் நிமிர்த்திவைக்க முடியாது. ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றமொன்று அவசியமாகும். அதற்காக ஒரு நாடு தங்கியிருப்பது தொழில்நுட்பவியலாளர்கள், பொறியியலாளர்கள் ஆகிய உங்களின் கைகளிலாகும். அதில் முக்கிய இடம் வகிப்பவர்கள் நீங்களே. அதனால் உங்களின் பங்களிப்பு, இடையீடு இந்த மாற்றித்தின்போது அத்தியாவசியமானதாகும். அதற்காக முன்வருமாறு உங்களை அழைக்கிறோம்.

Show More

NPP இன் மற்றுமொரு அடிப்படை உரிமைகள் மனு

(-Colombo, May 28, 2024-) உள்ளூரதிகாரசபை ஆளுகைப் பிரதேசங்களுக்காக ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்படுவதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியால் அடிப்படை உரிமைகள் மனுவொன்று இன்று (28) பிற்பகல் 2.30 இற்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இத்தருணத்திற்காக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல, கொழும்பு மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான அசித்த நிரோஷணவை உள்ளிட்ட குழுவினர் கலந்துகொள்வர்.

(-Colombo, May 28, 2024-)

உள்ளூரதிகாரசபை ஆளுகைப் பிரதேசங்களுக்காக ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்படுவதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியால் அடிப்படை உரிமைகள் மனுவொன்று இன்று (28) பிற்பகல் 2.30 இற்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இத்தருணத்திற்காக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல, கொழும்பு மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான அசித்த நிரோஷணவை உள்ளிட்ட குழுவினர் கலந்துகொள்வர்.

Show More

“ஆட்சியாளர்களின் வாழ்க்கையையும் பிரஜைகளின் வாழ்க்கையையும் சமமானதாகக் கருதுகின்ற அரசாங்கமொன்றையே தேசிய மக்கள் சக்தி உருவாக்கும்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.05.25-) சனாதிபதி தேர்தல் முறைப்படி நடாத்தப்படவேண்டும். எனினும் சனாதிபதி தேர்தலை நடத்தாமல் மேலும் ஐந்து வருடங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கொடுக்கப்பட வேண்டுமென ரங்கே பண்டார கூறியிருந்தார். இலங்கையில் அவ்வாறு செய்வதற்கு இனிமேலும் இடமில்லை என நான் ரங்கே பண்டாரவிற்கு வலியுறுத்திக் கூறுகிறேன். அதைப்போலவே வேறு எந்த வேட்பாளரையும் போட்டியிட இடமளிக்காமல் ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரம் இடமளிக்குமாறு வஜிர அபேவர்தன கூறுகிறார். அதாவது தேர்தலில் ரணிலால் வெற்றிபெற […]

(-தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.05.25-)

Gahanu-Api-Eka-Mitata-Vavuniya

சனாதிபதி தேர்தல் முறைப்படி நடாத்தப்படவேண்டும். எனினும் சனாதிபதி தேர்தலை நடத்தாமல் மேலும் ஐந்து வருடங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கொடுக்கப்பட வேண்டுமென ரங்கே பண்டார கூறியிருந்தார். இலங்கையில் அவ்வாறு செய்வதற்கு இனிமேலும் இடமில்லை என நான் ரங்கே பண்டாரவிற்கு வலியுறுத்திக் கூறுகிறேன். அதைப்போலவே வேறு எந்த வேட்பாளரையும் போட்டியிட இடமளிக்காமல் ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரம் இடமளிக்குமாறு வஜிர அபேவர்தன கூறுகிறார். அதாவது தேர்தலில் ரணிலால் வெற்றிபெற முடியாதென்பதை அவர்கள் அறிவார்கள். அதைப்போலவே சஜித் பிரேமதாசவின் கூட்டங்களில் கோமாளிகள் இருப்பதுபோல் உணரப்படுகின்றது. இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலும் தற்போது தேசிய மக்கள் சக்தியை மையப்படுத்தியதாக நிலவுகின்றது. இதற்கு முன்னர் பொறுப்பினை ஈடேற்ற, நன்றிக்கடன் செலுத்த எனக்கூறி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களித்த பெரும்பாலானோர் இங்கு குழுமி இருக்கிறார்கள். இதுவரை ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்த பெருந்தொகையானோர் எம்முடன் இணைந்துள்ளதாலேயே தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறுகின்றது. இதற்கு முன்னர் பாரியளவில் அரசியல்மீது அக்கறை செலுத்தாதவர்களும் வேறு கட்சிகளுக்கு வாக்களித்தவர்களும் ஏன் எம்மைச் சுற்றிக் குழுமி இருக்கிறார்கள்?

பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்கவே எவரும் மிகவும் அதிகமாக முயற்சி செய்கிறார்கள். எனினும் தற்போது பாடசாலைக் கல்வியை சீரழித்து, ரியுஷன் கல்விக்காக பாரிய சுமையை தாங்கிக்கொள்ள வேண்டியநிலை அவர்களுக்கு எற்பட்டுள்ளது. பிள்ளை கல்வி கற்பது தற்போது வீட்டுக்கு சுமையாக மாற்றப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு சரியான கல்வியை பெற்றுக்கொடுப்பது பெற்றோருக்கு பாரிய சுமையாக விளங்குகின்றது. அந்த சுமையிலிருந்து உங்களை விடுவித்து அரசாங்கத்தின் பொறுப்பாக மாற்றுவோமென நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். நாட்டை மீட்டெடுத்திட வேண்டுமாயின் முன்னேற்றமடைந்த மனித வளம் அவசியம். இந்த நாட்டை சீராக்க வேண்டுமானால் அறிவும் பண்பும் நிறைந்த பிள்ளைகள் தலைமுறையொன்று எமக்குத் தேவை. அதனால் இற்றைவரை அரசாங்கங்கள் ஈடேற்றியிராத மிகப்பெரிய செயற்பொறுப்பினை நாங்கள் எற்றுக்கொள்கிறோம். அடுத்ததாக பிள்ளைகளுக்கு நல்ல தொழில் தேவை. உண்மையைக் கூறுவதானால் தேவைப்படுவது நல்ல தொழிலல்ல: நல்ல வருமான வழிவகையாகும். எனினும் பெற்றோர்களையும் வளர்ந்த சூழலையும் கைவிட்டு எப்படியாவது வெளிநாட்டுக்குச் செல்லவே தற்போது இளைஞர்கள் முயற்சி செய்கிறார்கள். அதனால் பெற்றோர்கள் நிர்க்கதிநிலையில் இருக்கிறார்கள். சிறந்த வருமான வழியைத் தேடிக்கொள்வதற்கான முறையான வாய்ப்பு கிடையாது. அவர்கள் கொழும்பில் கொங்கிறீட் கலவைசெய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றபோது போதைப்பொருட்களுக்கு அடிமையாகிறார்கள். தற்போது ஊர்கள்தோறும் போதைப்பொருட்கள் வியாபித்து விட்டன. அவற்றிலிருந்து பிள்ளைகளை மீட்டெடுத்து பெற்றோர்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை நிர்மாணித்துக் கொடுக்கின்ற பொறுப்பினை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

Gahanu-Api-Eka-Mitata-Vavuniya

அடுத்ததாக எமது மிகப்பெரிய எதிர்பார்ப்பு வீடு, வாசலை அமைத்துக்கொள்வதே. நனையாமல் இருப்பதற்காக கூரையொன்றை அமைத்துக்கொள்வோம் என்றே முன்னர் கூறினார்கள். ஆனால் இன்றளவில் பல தலைமுறையினர் வசிப்பதோ முழு வாழ்நாளிலும் மல்லுக்கட்டினாலும் அரைவாசி அமைத்துக்கொண்ட வீட்டில் தான். அதனால் இந்த நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நனையாமல், நல்ல காற்றோட்டம் நிலவுகின்ற வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கான பொறுப்பினை எங்கள் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அத்துடன் இன்றளவில் சனத்தொகையில் நூற்றுக்கு நாற்பத்தெட்டு வீதமானோர் தொற்றா நோய்களுக்கு இரையாகி இருக்கிறார்கள். அவர்களை அவற்றிலிருந்து மீட்டெத்து ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். இந்த பேரழிவிலிருந்து மக்களை விடுவித்துக்கொள்கின்ற சாதகமான சுகாதார பழக்கவழக்கங்கள், சிறந்த உணவுவேளையொன்றை வழங்குதல், தரமான மருந்துகளை வழங்குதல் மற்றும் சுகாதார ஆராய்ச்சிகளை முறைப்படி மேற்கொள்ளல் அரசாங்கத்தின் பொதுவான பொறுப்பாக ஏற்றுக்கொள்வோம். சிசுவை வயிற்றில் சுமந்துள்ள தாய் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்றைய நிலைமையாகும். அதனால் பிள்ளையும் தாயும் இருவருமே நோயாளியாகி இருக்கிறார்கள். இதனால் பிரஜைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுவேளையொன்றை வழங்கி, ஆரோக்கியமான வாழ்க்கையின் முதலாவது அவசியப்பாட்டினை நிறைவுசெய்வோம். தற்போது எழுபத்தைந்து வயதாகின்ற திருவாளர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அதே வயதுடைய எமது ஊரிலுள்ள தகப்பனதும் நிலைமை சமமானதா? அரசாங்கங்களுக்கு வாக்குகளை அளித்த எமது ஊரிலுள்ளவர்கள் குறைந்த காலம் வசித்தும் வாக்குகளைப் பெற்றவர்கள் நீண்டகாலம் உயிர்வாழ்கின்றதுமான சுகாதார முறைமையே இருக்கின்றது. இந்த நிலைமையை முற்றாகவே மாற்றியமைத்து நாட்டு ஆட்சியாளர்களின் வாழ்க்கையையும் பிரஜைகளின் வாழ்க்கையையும் சமமானதாக கவனிக்கின்ற அரசாங்கமொன்றை தேசிய மக்கள் சக்தி நிறுவும்.

நீண்ட ஆயுள் பற்றி நாங்கள் கூறினாலும் நாட்டு மக்கள் மருந்துகள் இன்றி, சரியாக ஆப்பரேஷன் செய்துகொள்ள முடியாமல், தரமற்ற மருந்துகள் காரணமாக மடிகின்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாக எமது ஊர்களில் வசிக்கிறார்கள். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, அவர்களுக்கான வருமான வழிவகை. போதிய அளவிலான வீடு, ஆரோக்கியமான வாழ்க்கையைக் கழிப்பதை உறுதிசெய்கின்ற கொள்கைகளையும் இலக்குகளையும் கொண்ட வேலைத்திட்டமொன்றை நாங்கள் அமுலாக்குவோம்.

Gahanu-Api-Eka-Mitata-Vavuniya

இந்த கிராமங்களில் வசிக்கின்ற கமக்காரர்கள் தற்போது சிறுபோகத்தில் பயிர்செய்து பெரும்போகத்தில் கடன் செலுத்தியே வசித்து வருகிறார்கள். பிள்ளையின் திருமண வைபவத்தை கொண்டாடுவதாயின், ஒரு துண்டு காணியை விற்பனை செய்யவோ அல்லது டிராக்டெர், பைசிக்கிள், முச்சக்கரவண்டியை அடகுவைக்க நேரிடுகின்றது. இதனால் விவசாயத்தை முன்னேற்றுவதை எமது பொருளாதார வேலைத்திட்டத்தின் அத்திவாரமாக அமைத்துக்கொள்வோம். அது ஒரு வருமான வழிவகையாக மாத்திரமன்றி நாட்டுக்கு உணவு உற்பத்தியை செய்வதற்கான அத்திவாரமாகவும் அமையும். ஆனால் தற்போது பொன்னாங்கண்ணி, கங்குங் கீரைகூட வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படுகின்றது. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படுகின்ற முட்டையை சாப்பிடவேண்டிய நிலையேற்படுமென இந்நாட்டு மக்கள் எப்போதாவது நினைத்திருந்தார்களா? எம்மிடமிருந்த விதையின வளங்களை முற்றாகவே நாசமாக்கி இறக்குமதிசெய்த விதையினங்களில் விவசாயத்தை தங்கிநிற்க வைத்துள்ளார்கள். எமக்கு இருந்த விதையின உற்பத்திகளை நாசமாக்கிய பின்னர் சந்தையிலிருந்து வாங்குகின்ற விதை நாற்றுகளிலிருந்து மீண்டும் விதைகளைப் பெற இயலாது. அந்த விதைகள் முளைக்க மாட்டாது. முன்பு நவதெலிஹேனவில் இயற்கையாக வளர்ந்த தும்பைக்கு தற்போது என்ன நேர்ந்துள்ளது? பல பாகற்காய் வகைகள், மிளகாய் வகைகள், பறங்கிக்காய் வகைகள். வெள்ளரிக்காய் வகைகள் என எம்மிடம் இருந்த விதையினங்களும் எமது சூழலில் இருந்த உயிர்ப்பன்வகைமையும் முழுமையாகவே அழிக்கப்பட்டன. பழைய விதையினங்களை மீண்டும் கண்டுபிடித்து விருத்திசெய்து மீளவும் மேம்படுத்துவதற்காக பலவற்றை சாதிக்கவேண்டியுள்ளது.

சிறுபோகத்திலும் பெரும்போகத்திலும் மழையை நம்பி பயிரிடுகின்ற விவசாயத்தை மாற்றியமைத்து நீர்ப்பாசனத்தினால் பேணிவரப்படுகின்ற விவசாயமொன்றை திட்டமிட்டு அமுலாக்கவேண்டும். அதைப்போலவே விவசாயத்துடன் எமது கால்நடைவளம் பின்னிப்பிணைந்திருந்தது. விவசாயத்தையும் கிராமிய பாலுற்பத்தியையும் மீண்டும் சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்கின்ற வேலைத்திட்டமொன்று எமக்கு இருக்கின்றது. அதைப்போலவே கிராமிய மக்களுக்கு தொழில் வாய்ப்புகளைத் தருகின்ற முதலீடுகளை இந்த பிரதேசங்களுக்கும் அழைப்பிக்க வேண்டும். அதற்காக தொழில்கள் மற்றும் போதியளவிலான வருமானத்தை பெற்றுக்கொடுத்து சிறந்த மன நிம்மதியை உறுதிப்படுத்துவது எமது ஆட்சியின் அடிப்படை நோக்கமொன்றாக அமைகின்றது. தற்போது எந்தளவு தலையிடிகளால் மண்டைகள் நிரம்பி இருக்கின்றன.? இவ்விதமான பிரச்சினைகளால் நிரம்பியுள்ளவர்கள் பயணமொன்றை மேற்கொள்ளும்வேளையில் தாம் இறங்கிய பஸ் வண்டியிலேயே மோதி இறக்கின்ற பல தருணங்கள் பதிவாகி இருக்கின்றன. எனினும் நாங்கள் களிப்படைவதற்காக மகிழ்ச்சியடைவதற்காக மாத்திரமன்றி மதரீதியான யாத்திரைகளை மேற்கொள்ள வாய்ப்பு நிலவுகின்ற வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோம். எங்களுக்கு தற்போது வாழ்க்கைக்கான உரிமை கிடைத்திராவிட்டால் எமது பிள்ளைகளுக்கேனும் அத்தகைய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும்.

Gahanu-Api-Eka-Mitata-Vavuniya

அதற்காக நாங்கள் முதலில் எங்கள் அரசாங்கமொன்றை அதிகாரத்திற்கு கொண்டுவரவேண்டும். பொதுமக்களுக்கு நன்மை, நிம்மதி, முன்னேற்றத்தை பெற்றுத்தருகின்ற தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கமொன்றை நிறுவுவோம். ஊர்களுக்கு வந்து அரிசி பங்கிட்டு. மீண்டும் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவே ஆட்சியாளர்கள் முனைகிறார்கள். ஒரு மாதத்திற்கு அரிசி பங்கிட வரவுசெலவில் 550 கோடி செலவிட்டாலும் 650 கோடியை அதற்காக செலவிடுகிறார்கள். மறுபுறத்தில் சீனி வரி மோசடி 1500 கோடி என்பது மாதமொன்றுக்கு அரிசி பங்கிட அறுநூற்றி ஐம்பது கோடி செலவாகின்றதென எடுத்துக்கொண்டால் சீனி வரி மோசடி மூலமாக சூறையாடிய பணத்திலிருந்து ஒரு குடும்பத்திற்கு இருபத்தைந்து கிலோ அரிசி வீதம் கொடுக்க முடியும். பிணைமுறி மோசடியும் அதுபோன்றதே. பொருட்களை பங்கிடுதல் தொடர்பில் நீங்கள் ஏமாற வேண்டாமென நாங்கள் மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். காணிகளுக்கு உறுதிகளை வழங்குகிறார்களாம். “அஸ்வெசும” பணத்தொகையை அதிகரிக்கப் போகிறார்களாம். இவ்விதமாக “அஸ்வெசும” எதிர்வரும் திசெம்பர் 31 வரை மாத்திரமே செலுத்தப்படும். அத்திகதியாகும்போது பொதுத் தேர்தலும் முடிந்திருக்கும்: அஸ்வெசுமவும் முடிந்திருக்கும்: ரணில் விக்கிரமசிங்கவும் இல்லை. ரணில் 1977 இல் இருந்து பாராளுமன்றத்தில் இருக்கிறார். மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையாகவே தீர்வுகளை வழங்கியிருந்தால் இந்த நாட்டுக்கு இந்த கதி நேர்ந்திருக்கமாட்டாது. அதனால் இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறோம். நாட்டைக் கட்டியெழுப்பும்வரை அவசியமான மக்களுக்கு மானியம் வழங்குவோம். எமது அரசாங்கத்தின் முதலாவது பொறுப்பு உணவு, சுகாதாரம், கல்வியாக அமையும். ஒவ்வொரு பிரஜைக்கும் உணவு கிடைக்கின்ற, அவசியமான சுகாதார வசதிகள் வழங்கப்படுகின்ற அத்துடன் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குகின்ற வேலைத்திட்டத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இது ஒரு வறிய பி்ச்சையேந்துகின்ற நாடாக விளங்கவேண்டியதில்லை. மக்கள் அவ்விதமாக துன்பப்படுகின்ற நாடாக அமையவேண்டியதில்லை. அது இயற்கை வளங்கள் அனைத்தும் நிறைந்த ரத்னதுவீபம் ஆகும். இத்தகைய ரத்னதுவீபத்தில் மக்கள் உணவின்றி மடிகிறார்கள். மருந்து இல்லாமல் மடிகிறார்கள். சரியான வீடு இன்றி மக்கள் அல்லற்படுகிறார்கள். நாங்களும் நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைவரும் வாழக்கூடிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவோம். இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் மக்களை பிளவுபடுத்தி பாரிய யுத்தமொன்றை உருவாக்கினார்கள். வடக்கிலும் தெற்கிலும் அரசியல்வாதிகள் தமது அதிகாரத்திற்காக யுத்தத்தை உருவாக்கினார்கள். பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கக்கூடியவகையில் 1981 அபிவிருத்தி சபை தேர்தலை சீர்குலைத்திட நடவடிக்கை எடுத்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் காடையர் கும்பலை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்சென்று நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள். வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக நூலகதிற்கு தீ மூட்டுதல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாழ் மக்கள் அந்த நூலகத்துடன் இணைந்து பல நூல்களை வாசித்தறிந்தார்கள். நானறிந்த நூலகங்கள் மத்தியில் பாதணிகளை கழற்றிவைத்துவிட்டு உட்பிரவேசிக்கின்ற நூலகம் யாழ்ப்பாண நூலகம் மாத்திரமே. மத வழிபாட்டுத் தலமொன்றுக்குச் செல்வதுபோல்தான் உட்பிரவேசிப்பார்கள். வடபகுதி மக்களுக்கும் யாழ் நூலகத்திற்கும் இடையில் அத்தகைய உறவே நிலவியது. எனினும் 1981 இல் ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட குழுவினருக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த நூலகத்திற்கு தீமூட்டினார்கள். தாம் அந்தளவுக்கு மதிப்பளித்த நூலகத்திற்கு தேர்தலுக்காக தீவைத்ததும் தமிழ் மக்களின் இதயங்கள் வெடித்தன.

Gahanu-Api-Eka-Mitata-Vavuniya

தெற்கின் அரசாங்கங்கள் தமது நூலகத்தை தீக்கிரையாக்கிய வேதனையில் இருந்து விடுபட முன்னராகவே 1983 “கறுப்பு ஜுலையை” உருவாக்கினார்கள். எமது கட்சியைத் தடைசெய்யவேண்டிய தேவை ஜே.ஆருக்கு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் மக்கள் விடுதலை முன்னணிமீது நம்பிக்கைவைத்து அதனைச் சுற்றி குழுமத் தொடங்கினார்கள். ஜே. ஆர். ஜயவர்தன அதனைக்கண்டு அச்சமடைந்தார். அன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சி ஜே. ஆர். ஜயவர்தனவின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலெனக் கருதி 1983 கறுப்பு ஜுலையைக் காரணங்காட்டி எமது கட்சியை தடைசெய்தார். ஜே. ஆர். ஜயவர்தன, ரணில் விக்கிரமசிங்க கொழும்பு நான்காம் குறுக்குத் தெருவினை தீக்கிரையாக்கி கறுப்பு ஜுலையை நிர்மாணித்தார். ஜே. ஆர். ஜயவர்தனவின் காடையர்கள் முழுநாட்டையும் தீப்பிழம்பாக மாற்றினார்கள். தமிழ் மக்களின் உடைமைகள், உயிர்களை கறுப்பு ஜுலை மூலமாக நாசமாக்கினார்கள். தற்போது தமிழ் “டயஸ்போறா” என இருக்கின்ற பலர் 1983 இல் நாட்டை விட்டுச் சென்றவர்களாவர். தெற்கில் தமிழ் மக்களின் சொத்துக்களைப்போன்றே தமிழ் மக்களின் உயிர்களை அழித்தமை மற்றும் விரட்டியத்தமை காரணமாக தனிநாடு ஒன்றை கட்டியெழுப்புகின்ற பிரபாகரனின் எண்ணக்கருவிற்கு பாரிய உந்துசக்தி கிடைத்தது. அதனூடாக பாரிய ஆயுதமேந்திய இயக்கமொன்று உருவாகியது. வடக்கிலும் தெற்கிலும் உயிர்களால் நட்டஈடு செலுத்தியவர்கள் சாதாரண தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். வடக்கின் தாய்மார்களின் பிள்ளைகள் எல்ரீரீஈ இல் இணைந்தார்கள். மேலே இருக்கின்ற ஆட்சியாளர்கள் யுத்தத்தை உருவாக்கி எமது ஊர்களை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளினார்கள். சிங்களப் பிள்ளைகளை யுத்தத்திற்கு அனுப்பிவைத்தார்கள்.

மீண்டும் மோதல்கள் ஏற்படாத சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற தேசத்தை உருவாக்குவதே எமது தலையாய நோக்கம். எமது தலைமுறையினர் யுத்தம் புரிந்தாலும் எமது பிள்ளைகள் யுத்தத்தில் ஈடுபட இடமளிக்க முடியாது. சிங்கள அம்மா, அப்பாவைப்போன்றே தமிழ் அம்மா, அப்பாவிற்றகும் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி இல்லாமல் போனமை, விவாகம் இல்லாமல் போனமை, மருந்துகள் இல்லாமல் போனமை போன்றே மனநிம்மதி இல்லாமல் போனமை தொடர்பில் பிரச்சினை நிலவுகின்றது. அதனால் எமது தேவை பிளவுபடுவதை விடுத்து ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதாகும். மீண்டும் பிளவுபடாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பொறுப்பு தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. அதனால் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுகிறோம்.

Gahanu-Api-Eka-Mitata-Vavuniya
Gahanu-Api-Eka-Mitata-Vavuniya
Show More

ஊடக அறிவித்தல்

(-Colombo, May 21, 2024-) பயங்கரமான ஹெலிகொப்டர் விபத்தில் கவலைக்கிடமாக உயிரிழந்த மாண்புமிகு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் இலங்கை மக்கள் என்றவகையிலும் நாங்கள் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். கவலைக்கிடமான இத்தருணத்தில் இறந்த அனைவரதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நாங்கள் எமது அனுதாபத்தை பகிர்ந்து கொள்கிறோம். ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசியின் மறைவு ஈரானிய மக்கள் […]

(-Colombo, May 21, 2024-)

Iran-President-Death

பயங்கரமான ஹெலிகொப்டர் விபத்தில் கவலைக்கிடமாக உயிரிழந்த மாண்புமிகு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் இலங்கை மக்கள் என்றவகையிலும் நாங்கள் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். கவலைக்கிடமான இத்தருணத்தில் இறந்த அனைவரதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நாங்கள் எமது அனுதாபத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசியின் மறைவு ஈரானிய மக்கள் மற்றும் மத்தியகிழக்கு மக்களுக்கு மாத்திரமன்றி உலக மக்கள் அனைவருக்கும் நிவர்த்திசெய்ய இயலாத நட்டமாகும். இலங்கையை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளுடன் ஜனாதிபதி ரயிசி நட்புறவையும் ஆதிக்கவாதமற்ற உறவினையும் பலப்படுத்திக் கொள்வதற்காக அயராது உழைத்தார். ஈரானிய மக்களின் நிதியங்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர்மின் நிலையங்களை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதற்காக அவர் அண்மையில் மேற்கொண்ட இலங்கை விஜயமானது சர்வதேச ஒத்துழைப்பிற்கும் நிலைபெறுதகு அபிவிருத்திக்குமான அவரது மாற்றமில்லாத அர்ப்பணிப்பிற்கான தக்க சான்றாகும். அத்துடன் அதனையொத்த கருத்திட்டமொன்றை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதற்காக சென்ற அவருடைய இறுதிப்பயணமும் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர சுபிட்சத்திற்கான அவரது திடமான அர்ப்பணிப்பினை வலியுறுத்துகின்றது.

ஒத்துழைப்பு, அபிவிருத்தி மற்றும் நட்புறவினை விருத்தி செய்வதற்கான அவரது முன்மாதிரியானது ஈரானுக்கு உள்ளேயும் பொதுவில் மத்தியகிழக்கு பூராவிலும் இடையறாத அபிவிருத்தி மற்றும் உறுதிநிலையை உறுதிப்படுத்தி அவரது நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக ஈரானிய மக்களுக்கு நிச்சயமாக புத்துணர்ச்சி அளிக்குமென்பது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எமது நம்பிக்கையாகும்.

கவலைக்குரிய இத்தருணத்தில் ஈரானிய மக்களுக்கு நாங்கள் எமது தீவிரமான ஒத்துழைப்பினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.05.21

Iran-President-Death

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில், இன்று (21) பிற்பகல் ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் இலங்கையர் சார்பிலும் தேசிய மக்கள் சக்தியின் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க அவர்களும் இணைந்துகொண்டார்.

Iran-President-Death
Show More